109. ஸூரத்துல் காஃபிரூன்(காஃபிர்கள்)

மக்கீ, வசனங்கள்: 6

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
IFT
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
Saheeh International
قُلْ یٰۤاَیُّهَا الْكٰفِرُوْنَ ۟ۙ
قُلْகூறுவீராகيٰۤاَيُّهَا الْكٰفِرُوْنَۙ‏நிராகரிப்பாளர்களே
குல் யா-அய்யுஹல் காFபிரூன்
முஹம்மது ஜான்
(நபியே!) நீர் சொல்வீராக: காஃபிர்களே!
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! நிராகரிக்கும் மக்களை நோக்கி) கூறுவீராக: நிராகரிப்பவர்களே!
IFT
கூறிவிடுவீராக! “ஓ! நிராகரிப்பாளர்களே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நீர் கூறுவீராக! நிராகரிப்போரே!
Saheeh International
Say, "O disbelievers,
لَاۤ اَعْبُدُ مَا تَعْبُدُوْنَ ۟ۙ
لَاۤ اَعْبُدُநான் வணங்க மாட்டேன்مَاஎவற்றைتَعْبُدُوْنَۙ‏நீங்கள் வணங்குகின்றீர்கள்
லா அஃBபுது மா த்'அBபுதூன்
முஹம்மது ஜான்
நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.
IFT
நீங்கள் எவற்றை வணங்குகிறீர்களோ அவற்றை நான் வணங்குவதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.
Saheeh International
I do not worship what you worship.
وَلَاۤ اَنْتُمْ عٰبِدُوْنَ مَاۤ اَعْبُدُ ۟ۚ
وَلَاۤ اَنْـتُمْஇன்னும் நீங்கள் இல்லைعٰبِدُوْنَவணங்குபவர்களாகمَاۤஎவனைاَعْبُدُ‌ ۚ‏நான் வணங்குகின்றேன்
வ லா அன்தும் 'ஆBபிதூன மா அஃBபுத்
முஹம்மது ஜான்
இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.
அப்துல் ஹமீது பாகவி
நான் வணங்குபவனை நீங்கள் வணங்கவில்லை.
IFT
நான் யாரை வணங்குகின்றேனோ அவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நான் வணங்குகிற (ஒரு)வனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.
Saheeh International
Nor are you worshippers of what I worship.
وَلَاۤ اَنَا عَابِدٌ مَّا عَبَدْتُّمْ ۟ۙ
وَلَاۤ اَنَاஇன்னும் நான் இல்லைعَابِدٌவணங்குபவனாகمَّاஎவற்றைعَبَدْتُّمْۙ‏நீங்கள் வணங்கினீர்கள்
வ லா அன 'அBபிதும் மா 'அBபத்தும்
முஹம்மது ஜான்
அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.
அப்துல் ஹமீது பாகவி
(அவ்வாறே) இனியும் நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவன் அல்லன்.
IFT
மேலும், நீங்கள் வணங்கியவற்றை நான் வணங்குபவன் அல்லன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனுமல்லன்
Saheeh International
Nor will I be a worshipper of what you worship.
وَلَاۤ اَنْتُمْ عٰبِدُوْنَ مَاۤ اَعْبُدُ ۟ؕ
وَ لَاۤ اَنْـتُمْஇன்னும் நீங்கள் இல்லைعٰبِدُوْنَவணங்குபவர்களாகمَاۤஎவனைاَعْبُدُ ؕ‏நான் வணங்குகின்றேன்
வ லா அன்தும் 'ஆBபிதூன மா அஃBபுத்
முஹம்மது ஜான்
மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.
அப்துல் ஹமீது பாகவி
நான் வணங்குபவனை இனி நீங்களும் வணங்குபவர்கள் அல்லர்.
IFT
நான் யாரை வணங்குகின்றேனோ அவனை நீங்கள் வணங்குகின்றவர்கள் அல்லர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும் நான் வணங்குபவனை நீங்களும் வணங்குபவர்களல்லர்.
Saheeh International
Nor will you be worshippers of what I worship.
لَكُمْ دِیْنُكُمْ وَلِیَ دِیْنِ ۟۠
لَـكُمْஉங்களுக்குدِيْنُكُمْஉங்கள் கூலிوَلِىَஇன்னும் எனக்குدِيْنِ‏என் கூலி
லகும் தீனுகும் வ லிய தீன்.
முஹம்மது ஜான்
உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.”
அப்துல் ஹமீது பாகவி
உங்கள் (செயலுக்குரிய) கூலி உங்களுக்கும்; என் (செயலுக்குரிய) கூலி எனக்கும் (கிடைக்கும்).
IFT
உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உங்களுக்கு உங்களது மார்க்கம் எனக்கு என்னுடைய மார்க்கம்.
Saheeh International
For you is your religion, and for me is my religion."