111. ஸூரத்துல் லஹப்(ஜுவாலை)

மக்கீ, வசனங்கள்: 5

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
IFT
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
Saheeh International
تَبَّتْ یَدَاۤ اَبِیْ لَهَبٍ وَّتَبَّ ۟ؕ
تَبَّتْஅழியட்டும்يَدَاۤஇரு கரங்கள்اَبِىْ لَهَبٍஅபூலஹபின்وَّتَبَّؕ‏இன்னும் அவன் அழியட்டும்
தBப்Bபத் யதா அBபீ லஹBபி(ன்)வ்-வ தBப்Bப்
முஹம்மது ஜான்
அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக; அவனும் நாசமாகட்டும்.
அப்துல் ஹமீது பாகவி
அழியட்டும் அபூலஹபின் இரு கரங்கள்; அவனுமே அழியட்டும்!
IFT
அபூலஹபின் கைகள் முறிந்துவிட்டன. மேலும், அவன் நாசமாகி விட்டான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அபூலஹபின் இரு கைகள் நாசமடைக! அவனும் நாசமாவானாக!
Saheeh International
May the hands of Abū Lahab be ruined, and ruined is he.
مَاۤ اَغْنٰی عَنْهُ مَالُهٗ وَمَا كَسَبَ ۟ؕ
مَاۤ اَغْنٰىபலனளிக்கவில்லைعَنْهُஅவனுக்குمَالُهٗஅவனுடைய செல்வமும்وَمَاஇன்னும் எதுكَسَبَؕ‏அவன் சம்பாதித்தான்
மா அக்னா 'அன்ஹு மாலுஹூ வ ம கஸBப்
முஹம்மது ஜான்
அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
அவனுடைய பொருளும், அவன் சேகரித்து வைத்திருப்பவைகளும் அவனுக்கு ஒரு பயனுமளிக்காது.
IFT
அவனுடைய செல்வமும் அவன் சம்பாதித்தவையும் அவனுக்கு எந்தப் பலனையும் அளிக்கவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவனுடைய செல்வமும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயனளிக்கவில்லை.
Saheeh International
His wealth will not avail him or that which he gained.
سَیَصْلٰی نَارًا ذَاتَ لَهَبٍ ۟ۚۖ
سَيَصْلٰى(விரைவில்) பற்றி எரிவார்கள்نَارًاநெருப்பில்ذَاتَ لَهَبٍ ۖۚ‏ஜுவாலையுடைய
ஸ-யஸ்லா னாரன் தாத லஹBப்
முஹம்மது ஜான்
விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான்.
அப்துல் ஹமீது பாகவி
வெகு விரைவில் அவன் கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் நுழைவான்.
IFT
விரைவில் அவன் கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் போடப்படுவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மறுமையில் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் அவன் பிரவேசிப்பான்.
Saheeh International
He will [enter to] burn in a Fire of [blazing] flame
وَّامْرَاَتُهٗ ؕ حَمَّالَةَ الْحَطَبِ ۟ۚ
وَّامْرَاَ تُهٗ ؕஇன்னும் அவனுடைய மனைவிحَمَّالَةَசுமப்பவள்الْحَطَبِ‌ۚ‏விறகு சுள்ளிகளை
வம்ர-அதுஹூ ஹம்மா லதல்-ஹதBப்
முஹம்மது ஜான்
விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ,
அப்துல் ஹமீது பாகவி
விறகு சுமக்கும் அவனுடைய மனைவியோ,
IFT
அவனுடன் அவனுடைய மனைவியும் அவளோ (இங்கும் அங்கும்) புறம்பேசித் திரிபவள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியும்-அந்நரகில் நுழைவாள்).
Saheeh International
And his wife [as well] - the carrier of firewood.
فِیْ جِیْدِهَا حَبْلٌ مِّنْ مَّسَدٍ ۟۠
فِىْ جِيْدِهَاஅவளுடைய கழுத்தில்حَبْلٌகயிறுதான்مِّنْ مَّسَدٍ‏ஈச்சம் பாளையின்
Fபீ ஜீதிஹா ஹBப்லும் மிம்-மஸத்
முஹம்மது ஜான்
அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்).
அப்துல் ஹமீது பாகவி
அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங்கயிறுதான். (அதனால் சுருக்கிடப்பட்டு அவளும் அழிந்து விடுவாள்.)
IFT
அவளது கழுத்தில் முறுக்கேற்றப்பட்ட கயிறு இருக்கும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங்கயிறு தான் (இருக்கும், அதனால் அவளும் அழிவாள்).
Saheeh International
Around her neck is a rope of [twisted] fiber.