27. ஸூரத்துந் நம்லி(எறும்புகள்)

மக்கீ, வசனங்கள்: 93

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
IFT
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
Saheeh International
طٰسٓ ۫ تِلْكَ اٰیٰتُ الْقُرْاٰنِ وَكِتَابٍ مُّبِیْنٍ ۟ۙ
طٰسٓ‌தா, சீன்.تِلْكَஇவைاٰيٰتُவசனங்கள்الْقُرْاٰنِஇந்த குர்ஆனுடையوَكِتَابٍஇன்னும் வேதத்தின்مُّبِيْنٍۙ‏தெளிவான
தா-ஸீன்; தில்க ஆயாதுல் குர்ஆனி வ கிதாBபிம் முBபீன்
முஹம்மது ஜான்
தா, ஸீன். இவை குர்ஆனுடைய தெளிவான வேதத்துடைய - வசனங்களாகும்.
அப்துல் ஹமீது பாகவி
தா ஸீன். இவை இந்தத் திருகுர்ஆனின், தெளிவான வேதத்தின் (சில) வசனங்களாகும்.
IFT
தாஸீன். இவை குர்ஆன் மற்றும் தெளிவான வேதத்தின் வசனங்களாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தா ஸீன் - இவை குர் ஆனுடைய - இன்னும் தெளிவான வேதத்தினுடைய – வசனங்களாகும்.
Saheeh International
Ṭa, Seen. These are the verses of the Qur’an [i.e., recitation] and a clear Book
هُدًی وَّبُشْرٰی لِلْمُؤْمِنِیْنَ ۟ۙ
هُدًىநேர்வழியாகவும்وَّبُشْرٰىநற்செய்தியாகவும்لِلْمُؤْمِنِيْنَۙ‏நம்பிக்கையாளர்களுக்கு
ஹுத(ன்)வ் வ Bபுஷ்ரா லில் மு'மினீன்
முஹம்மது ஜான்
(இது) முஃமின்களுக்கு நேர்வழி காட்டியாகவும், நன்மாராயமாகவும் இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கை கொண்டவர்களுக்கு (இது) ஒரு நேர்வழியாகவும், நற்செய்தியாகவும் இருக்கிறது.
IFT
இந்த வேதம் நம்பிக்கையாளர்களுக்கு வழிகாட்டியும் நற்செய்தியுமாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டோருக்கு ஒரு நேர்வழியாகவும், நன்மாராயமாகவும் இருக்கிறது.
Saheeh International
As guidance and good tidings for the believers
الَّذِیْنَ یُقِیْمُوْنَ الصَّلٰوةَ وَیُؤْتُوْنَ الزَّكٰوةَ وَهُمْ بِالْاٰخِرَةِ هُمْ یُوْقِنُوْنَ ۟
الَّذِيْنَஎவர்கள்يُقِيْمُوْنَநிலை நிறுத்துவார்கள்الصَّلٰوةَதொழுகையைوَيُؤْتُوْنَஇன்னும் தருவார்கள்الزَّكٰوةَஸகாத்தைوَ هُمْஇன்னும் அவர்கள்بِالْاٰخِرَةِமறுமையைهُمْஅவர்கள்يُوْقِنُوْنَ‏நம்பிக்கை கொள்வார்கள்
அல்லதீன யுகீமூனஸ் ஸலாத வ யு'தூனZஜ் Zஜகாத வ ஹும் Bபில் ஆகிரதி ஹும் யூகினூன்
முஹம்மது ஜான்
(அவர்கள் எத்தகையோரென்றால்) அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; இன்னும், ஜகாத்தைக் கொடுப்பார்கள்; அன்றியும், அவர்கள் மறுமை வாழ்வின் மீது திட நம்பிக்கை கொள்வார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் தொழுகையைக் கடைப்பிடித் தொழுவார்கள், ஜகாத்தும் கொடுத்து வருவார்கள். மேலும், மறுமையையும் அவர்கள் உறுதியாக நம்புவார்கள்.
IFT
அவர்கள் எத்தகையவர்களெனில், தொழுகையை நிலை நாட்டுகின்றார்கள்; ஜகாத் கொடுக்கின்றார்கள். மேலும், மறுமையின் மீதும் அவர்கள் உறுதியான நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் எத்தகையோரென்றால், தொழுகையை நிறைவேற்றுவார்கள்; ஜகாத்தும் கொடுத்து வருவார்கள்; அன்றியும், மறுமையையும் அவர்கள் உறுதி கொள்வார்கள்.
Saheeh International
Who establish prayer and give zakah, and of the Hereafter they are certain [in faith].
اِنَّ الَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ زَیَّنَّا لَهُمْ اَعْمَالَهُمْ فَهُمْ یَعْمَهُوْنَ ۟ؕ
اِنَّநிச்சயமாகالَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்ளாதவர்கள்بِالْاٰخِرَةِமறுமையைزَيَّـنَّاநாம் அலங்கரித்து விட்டோம்لَهُمْஅவர்களுக்குاَعْمَالَهُمْஅவர்களுடைய செயல்களைفَهُمْஆகவே, அவர்கள்يَعْمَهُوْنَؕ‏தறிகெட்டு அலைகிறார்கள்
இன்னல் லதீன லா யு'மினூன Bபில் ஆகிரதி Zஜய்யன்னா லஹும் அஃமாலஹும் Fபஹும் யஃமஹூன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக எவர்கள் மறுமை வாழ்வில் நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுக்கு நாம் அவர்களுடைய செயல்களை அழகாக(த் தோன்றுமாறு) செய்தோம்; எனவே அவர்கள் தட்டழிந்து திரிகிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக எவர்கள் மறுமையை நம்பவில்லையோ அவர்களுக்கு (அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக) நாம் அவர்களுடைய (தீய) காரியங்களை அழகாக்கி விட்டோம். ஆகவே, அவர்கள் அதில் சீர்கெட்டு தட்டழிந்து திரிகின்றனர்.
IFT
உண்மை யாதெனில், யார் மறுமையை நம்புவதில்லையோ அவர்களுக்கு அவர்களின் தீயசெயல்களை நாம் அழகுபடுத்திக் காட்டினோம். எனவே, அவர்கள் தடுமாறித் திரிகின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக மறுமையைக் கொண்டு விசுவாசங்கொள்ளவில்லையே அத்தகையவர்கள் - (அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக) அவர்களுடைய செயல்களை நாம் அவர்களுக்கு அலங்கரித்துக் காண்பித்து விட்டோம், ஆகவே, அவர்கள் (அதில்) தட்டழிந்து திரிகின்றனர்.
Saheeh International
Indeed, for those who do not believe in the Hereafter, We have made pleasing to them their deeds, so they wander blindly.
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ لَهُمْ سُوْٓءُ الْعَذَابِ وَهُمْ فِی الْاٰخِرَةِ هُمُ الْاَخْسَرُوْنَ ۟
اُولٰٓٮِٕكَ الَّذِيْنَஅவர்கள்தான்لَهُمْஅவர்களுக்கு உண்டுسُوْٓءُகெட்டالْعَذَابِதண்டனைوَهُمْஅவர்கள்فِى الْاٰخِرَةِமறுமையில்هُمُஅவர்கள்தான்الْاَخْسَرُوْنَ‏நஷ்டவாளிகள்
உலா'இகல் லதீன லஹும் ஸூ'உல் 'அதாBபி வ ஹும் Fபில் ஆகிரதி ஹுமுல் அக்ஸரூன்
முஹம்மது ஜான்
அத்தகையவர்களுக்குத் தீய வேதனை உண்டு; மறுமை வாழ்வில் அவர்கள் பெரும் நஷ்டமடைபவர்களாக இருப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
இத்தகையவர்களுக்கு (அவர்கள் மரண காலத்தில்) தீய வேதனைதான் உண்டு. மறுமையிலோ அவர்கள்தான் பெரும் நஷ்டம் அடைந்தவர்களாக இருப்பார்கள்.
IFT
அவர்கள் எத்தகையவர்கள் எனில், அவர்களுக்கு மோசமான தண்டனை இருக்கின்றது; மேலும், மறுமையில் அவர்கள்தாம் அனைவரையும்விட அதிக இழப்புக்குரியவர்களாய் இருப்பார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் எத்தகையோரென்றால், (இம்மையில்) அவர்களுக்குத் தீய வேதனை உண்டு, இன்னும், அவர்கள் மறுமையில் - அவர்களே பெரும் நஷ்டமடைந்தவர்கள்.
Saheeh International
Those are the ones for whom there will be the worst of punishment, and in the Hereafter they are the greatest losers.
وَاِنَّكَ لَتُلَقَّی الْقُرْاٰنَ مِنْ لَّدُنْ حَكِیْمٍ عَلِیْمٍ ۟
وَاِنَّكَநிச்சயமாக நீர்لَـتُلَـقَّىநீர் பெற்றுக்கொள்கிறீர்الْقُرْاٰنَஇந்த குர்ஆனைمِنْ لَّدُنْ حَكِيْمٍமகா ஞானவானிடமிருந்துعَلِيْمٍ‏நன்கறிந்தவன்
வ இன்னக லதுலக்கல் குர்ஆன மில் லதுன் ஹகீமின் 'அலீம்
முஹம்மது ஜான்
(நபியே!) நிச்சயமாக மிக்க ஞானமுடைய (யாவற்றையும்) நன்கறிந்தவனிடமிருந்து இந்த குர்ஆன் உமக்குக் கொடுக்கப் பட்டுள்ளது.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நிச்சயமாக மிக்க ஞானமுடைய, (அனைத்தையும்) நன்கு அறிந்தவனிடம் இருந்தே இந்த குர்ஆன் உமக்குக் கொடுக்கப்படுகிறது.
IFT
மேலும், (நபியே!) நுண்ணறிவாளனும் நன்கு அறிந்தவனுமான இறைவனிடமிருந்து திண்ணமாக இந்தக் குர்ஆனை நீர் பெற்றுக் கொண்டிருக்கின்றீர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நிச்சயமாக தீர்க்கமான அறிவுடைய (யாவையும்) நன்கறிந்தவனிடமிருந்து நீர் இந்தக் குர் ஆனைக் கொடுக்கப்படுகிறீர்.
Saheeh International
And indeed, [O Muhammad], you receive the Qur’an from one Wise and Knowing.
اِذْ قَالَ مُوْسٰی لِاَهْلِهٖۤ اِنِّیْۤ اٰنَسْتُ نَارًا ؕ سَاٰتِیْكُمْ مِّنْهَا بِخَبَرٍ اَوْ اٰتِیْكُمْ بِشِهَابٍ قَبَسٍ لَّعَلَّكُمْ تَصْطَلُوْنَ ۟
اِذْ قَالَஅந்த சமயத்தை நினைவு கூறினார்مُوْسٰىமூசாلِاَهْلِهٖۤதன்குடும்பத்தினருக்குاِنِّىْۤநிச்சயமாக நான்اٰنَسْتُநான் பார்த்தேன்نَارًاؕநெருப்பைسَاٰتِيْكُمْஉங்களுக்கு கொண்டு வருகிறேன்مِّنْهَاஅதிலிருந்துبِخَبَرٍஒரு செய்தியைاَوْஅல்லதுاٰتِيْكُمْஉங்களுக்கு கொண்டு வருகிறேன்بِشِهَابٍநெருப்பைقَبَسٍகொள்ளிக்கட்டைلَّعَلَّكُمْ تَصْطَلُوْنَ‏நீங்கள் குளிர் காய்வதற்காக
இத் கால மூஸா லி அஹ்லிஹீ இன்னீ ஆனஸ்து னாரன் ஸ'ஆதீகும் மின்ஹா BபிகBபரின் அவ் ஆதீகும் BபிஷிஹாBபின் கBபஸில் ல'அல்லகும் தஸ்தலூன்
முஹம்மது ஜான்
மூஸா தம் குடும்பத்தாரை நோக்கி: “நிச்சயமாக நான் நெருப்பைக் காண்கிறேன்; உங்களுக்கு நான் அதிலிருந்து (நாம் செல்ல வேண்டிய வழி பற்றிய) செய்தியைக் கொண்டு வருகிறேன், அல்லது நீங்கள் குளிர்காயும் பொருட்டு (உங்களுக்கு அதிலிருந்து) நெருப்புக் கங்கைக் கொண்டு வருகிறேன்” என்று கூறியதை (நபியே!) நினைவு கூர்வீராக!
அப்துல் ஹமீது பாகவி
மூஸா (தூர் என்னும் மலையின் சமீபமாகச் சென்ற பொழுது) தன் குடும்பத்தினரை நோக்கி ‘‘ நிச்சயமாக நான் ஒரு நெருப்பைக் காண்கிறேன். (நீங்கள் இங்கு தாமதித்து இருங்கள்.) நான் சென்று (நம் வழியைப் பற்றி) ஒரு விஷயத்தை அதன் மூலம் அறிந்து வருகிறேன் அல்லது நீங்கள் குளிர் காய்வதற்கு ஓர் எரி கொள்ளியையேனும் கொண்டு வருவேன்'' என்று கூறி,
IFT
(அந்தச் சந்தர்ப்பத்தில் நடந்ததை இவர்களுக்கு நினைவூட்டுங்கள்) மூஸா தம் குடும்பத்தாரிடம் அப்பொழுது கூறினார்: “நான் ஒரு நெருப்பைக் காண்கின்றேன். நான் இப்பொழுதே அங்கிருந்து ஏதேனும் செய்தியை உங்களிடம் கொண்டு வருகின்றேன். அல்லது தீப்பந்தத்தை எடுத்துக்கொண்டு வருகின்றேன். நீங்கள் குளிர் காய்ந்து கொள்ளலாம்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மூஸா, தன் குடும்பத்தினரிடம், “நிச்சயமாக நான் ஒரு நெருப்பைக் காண்கிறேன், (சென்றடைய வேண்டிய வழிபற்றி ஏதேனும் ஒரு செய்தியை அங்கிருந்து உங்களுக்குக் கொண்டு வருகிறேன், அல்லது நீங்கள் குளிர்காய்வதற்கு ஒரு நெருப்புப் பந்தத்தை(யாவது) கொண்டு வருகிறேன்” என்று கூறியதை நபியே! நீர் நினைவு கூர்வீராக!
Saheeh International
[Mention] when Moses said to his family, "Indeed, I have perceived a fire. I will bring you from there information or will bring you a burning torch that you may warm yourselves."
فَلَمَّا جَآءَهَا نُوْدِیَ اَنْ بُوْرِكَ مَنْ فِی النَّارِ وَمَنْ حَوْلَهَا ؕ وَسُبْحٰنَ اللّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَ ۟
فَلَمَّا جَآءَهَاஅவர் அதனிடம் வந்த போதுنُوْدِىَஅழைக்கப்பட்டார்اَنْۢ بُوْرِكَபாக்கியம் அளிக்கப்பட்டதுمَنْ فِى النَّارِநெருப்பில் இருப்பவன்وَ مَنْ حَوْلَهَا ؕஇன்னும் அதை சுற்றி உள்ளவர்களும்وَسُبْحٰنَமிகப் பரிசுத்தமானவன்اللّٰهِஅல்லாஹ்رَبِّஇறைவன்الْعٰلَمِيْنَ‏அகிலங்களின்
Fபலம்மா ஜா'அஹா னூதிய அம் Bபூரிக மன் Fபின்ன்ன்னாரி வ மன் ஹவ்லஹா வ ஸுBப்ஹானல் லாஹி ரBப்Bபில் 'ஆலமீன்
முஹம்மது ஜான்
அவர் அதனிடம் வந்த போது: “நெருப்பில் இருப்பவர் மீதும், அதனைச் சூழ்ந்திருப்பவர் மீதும் பெரும் பாக்கியம் அளிக்கப் பெற்றுள்ளது; மேலும் அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் மிகவும் பரிசுத்தமானவன்” என்று அழைக்கப்பட்டார்.
அப்துல் ஹமீது பாகவி
அவர் அதன் சமீபமாக வந்த சமயத்தில் ‘‘ நெருப்பில் இருக்கின்ற (வான)வர் மீதும் அதன் சமீபமாக இருக்கின்றவர் (மூஸா) மீதும் பெரும் பாக்கியமளிக்கப்பட்டுள்ளது. மேலும், உலகத்தார் அனைவரின் இறைவனான அல்லாஹ் மிக்க பரிசுத்தமானவன்'' என்று சப்தமிட்டுக் கூறப்பட்டது.
IFT
அங்கு அவர் சென்றதும் ஓர் உருவிலி (அசரீரி) கேட்டது: “பாக்கியம் உள்ளவர்கள் ஆவர் இந்த நெருப்பில் உள்ளவரும் அதன் சுற்றுப்புறத்தில் இருப்பவர்களும்!” தூய்மையானவன் ஆவான்; அகிலத்தார் அனைவரையும் வளர்த்துப் பரிபாலிப்பவனாகிய அல்லாஹ்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனவே, அவர் அதனிடம் வந்த சமயத்தில், “நெருப்பில் இருப்பவர் மீதும் அதைச் சூழ இருப்பவர்(களான மலக்கு)கள் மீதும் பெரும் பாக்கியமளிக்கப்பட்டுள்ளது, மேலும், அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ் மிக்க பரிசுத்தமானவன்” என்று அழைக்கப்பட்டார்.
Saheeh International
But when he came to it, he was called, "Blessed is whoever is at the fire and whoever is around it. And exalted is Allah, Lord of the worlds.
یٰمُوْسٰۤی اِنَّهٗۤ اَنَا اللّٰهُ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟ۙ
يٰمُوْسٰۤىமூஸாவே!اِنَّـهٗۤநிச்சயமாகاَنَاநான்தான்اللّٰهُஅல்லாஹ்الْعَزِيْزُமிகைத்தவனானالْحَكِيْمُۙ‏மகா ஞானமுடையவனான
யா மூஸா இன்னஹூ அனல் லாஹுல் 'அZஜீZஜுல் ஹகீம்
முஹம்மது ஜான்
“மூஸாவே! நிச்சயமாக நானே அல்லாஹ்! (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்.
அப்துல் ஹமீது பாகவி
(மேலும்,) ‘‘ மூஸாவே! நிச்சயமாக நான்தான் அல்லாஹ். நான் அனைவரையும் மிகைத்தவன்; (அனைத்தையும் நன்கறிந்த) ஞானமுடையவன்.
IFT
“மூஸாவே! நான்தான் வலிமை மிக்கவனும் நுண்ணறிவாளனுமாகிய அல்லாஹ்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“மூஸாவே! நிச்சயமாக நான்தான் அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தோன், தீர்க்கமான அறிவுடையோன்”.
Saheeh International
O Moses, indeed it is I - Allah, the Exalted in Might, the Wise."
وَاَلْقِ عَصَاكَ ؕ فَلَمَّا رَاٰهَا تَهْتَزُّ كَاَنَّهَا جَآنٌّ وَّلّٰی مُدْبِرًا وَّلَمْ یُعَقِّبْ ؕ یٰمُوْسٰی لَا تَخَفْ ۫ اِنِّیْ لَا یَخَافُ لَدَیَّ الْمُرْسَلُوْنَ ۟ۗۖ
وَاَ لْقِபோடுவீராக!عَصَاكَ‌ ؕஉமது தடியைفَلَمَّا رَاٰهَاஅவர் அதை பார்த்த போதுتَهْتَزُّநெளிவதாகكَاَنَّهَاஅது போன்றுجَآنٌّபாம்பைوَّلّٰىதிரும்பினார்مُدْبِرًاபுறமுதுகிட்டுوَّلَمْ يُعَقِّبْ‌ ؕஅவர் திரும்பவே இல்லைيٰمُوْسٰىமூஸாவே!لَا تَخَفْபயப்படாதீர்اِنِّىْநிச்சயமாக நான்لَا يَخَافُபயப்பட மாட்டார்கள்لَدَىَّஎன்னிடம்الْمُرْسَلُوْنَ ۖ‏இறைத்தூதர்கள்
வ அல்கி 'அஸாக்; Fபலம்ம்மா ர ஆஹா தஹ்தZஜ்Zஜு க அன்னஹா ஜான்னு(ன்)வ் வல்லா முத்Bபிர(ன்)வ் வ லம் யு'அக்கிBப்; யா மூஸா லா தகFப் இன்னீ லா யகாFபு லதய்யல் முர்ஸலூன்
முஹம்மது ஜான்
“உம் கைத்தடியைக் கீழே எறியும்;” (அவ்வாறே அவர் அதை எறியவும்) அது பாம்புபோல் நெளிந்ததை அவர் கண்ட பொழுது, திரும்பிப் பார்க்காது (அதனை விட்டு) ஓடலானார்; “மூஸாவே! பயப்படாதீர்! நிச்சயமாக (என்) தூதர்கள் என்னிடத்தில் பயப்பட மாட்டார்கள்.”
அப்துல் ஹமீது பாகவி
(மூஸாவே!) உமது தடியை நீர் எறிவீராக'' (என்றும் கூறப்பட்டது. அவ்வாறு அவர் அதை எறியவே) அது ஒரு பாம்பைப் போல் (ஆகி) நெளிவதைக் கண்டு அவர் திரும்பியும் பார்க்காது அதை விட்டும் விலகிச் சென்றார். (ஆகவே, நாம் மூஸாவை நோக்கி) மூஸாவே! பயப்படாதீர். நிச்சயமாக என்னிடத்தில் தூதர்கள் பயப்படமாட்டார்கள்.
IFT
மேலும், உமது கைத்தடியைச் சற்று எறியும்!” உடனே அது (அந்தத் தடி) பாம்பு போல் அசைவதை மூஸா கண்டபோது பின்னோக்கி ஓடினார்; திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. “மூஸாவே அஞ்சாதீர்! திண்ணமாக, என் முன்னிலையில் தூதர்கள் அஞ்சுவதில்லை;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும் “நீர் உம்முடைய தடியைப் போடும்” (என்று கூறப்பட்டதும் அவர் அதைப் போட்டார்.) அது ஒரு மலைப்பாம்பைப்போல் மிகத்துரிதமாக நெளிந்து கொண்டிருக்க அதனைக் கண்டு, (பயந்து) அவர் திரும்பிப் பார்க்காது புறமுதுகிட்டுப் பின் சென்றார்; (அப்போது) மூஸாவே! நீர் பயப்படாதீர்!; நிச்சயமாக நான் (எத்தகையோனென்றால்) – தூதர்கள் என்னிடத்தில் பயப்படமாட்டார்கள்” என்று அவருக்குக் கூறப்பட்டது.
Saheeh International
And [he was told], "Throw down your staff." But when he saw it writhing as if it were a snake, he turned in flight and did not return. [Allah said], "O Moses, fear not. Indeed, in My presence the messengers do not fear.
اِلَّا مَنْ ظَلَمَ ثُمَّ بَدَّلَ حُسْنًا بَعْدَ سُوْٓءٍ فَاِنِّیْ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
اِلَّاதவிரمَنْ ظَلَمَதவறிழைத்தவரைثُمَّபிறகுبَدَّلَமாற்றி செய்தார்حُسْنًۢاஅழகிய செயலைبَعْدَபின்னர்سُوْٓءٍதீமைக்குفَاِنِّىْஏனெனில், நிச்சயமாக நான்غَفُوْرٌமகா மன்னிப்பாளன்رَّحِيْمٌ‏பெரும் கருணையாளன்
இல்லா மன் ளலம தும்ம Bபத்தல ஹுஸ்னம் Bபஃத ஸூ'இன் Fப இன்னீ கFபூருர் ரஹீம்
முஹம்மது ஜான்
ஆயினும், தீங்கிழைத்தவரைத் தவிர; அ(த்தகைய)வரும் (தாம் செய்த) தீமையை (உணர்ந்து அதை) நன்மையானதாக மாற்றிக் கொண்டால், நிச்சயமாக நான் மிக மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றேன்.
அப்துல் ஹமீது பாகவி
ஆயினும் தவறிழைத்தவரைத் தவிர. (எனினும்) அவரும் தன் குற்றத்தை (உணர்ந்து அதை மாற்றி) நன்மை செய்தால் நிச்சயமாக நான் (அவரையும்) மன்னித்துக் கருணை செய்வேன்.
IFT
ஏதேனும் தவறு செய்திருந்தாலே தவிர! பின்னர் தீமை செய்த பிறகு (தன் செயலை) அவர் நன்மையாக மாற்றிக் கொண்டால் திண்ணமாக நான் பெரும் மன்னிப்பாளனாகவும் கிருபையுள்ளவனாகவும் இருக்கின்றேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆயினும்) எவர் அநியாயம் செய்து பின்னர் தீமைக்குப் பின் (அதனை) நன்மையாக மாற்றிக்கொள்கிறாரோ, அவரைத்தவிர – அப்பொழுது நிச்சயமாக நான் மிக்க மன்னிக்கிறவன், மிகக் கிருபையுடையவன்.
Saheeh International
Otherwise, he who wrongs, then substitutes good after evil - indeed, I am Forgiving and Merciful.
وَاَدْخِلْ یَدَكَ فِیْ جَیْبِكَ تَخْرُجْ بَیْضَآءَ مِنْ غَیْرِ سُوْٓءٍ ۫ فِیْ تِسْعِ اٰیٰتٍ اِلٰی فِرْعَوْنَ وَقَوْمِهٖ ؕ اِنَّهُمْ كَانُوْا قَوْمًا فٰسِقِیْنَ ۟
وَاَدْخِلْநுழைப்பீராக!يَدَكَஉமது கரத்தைفِىْ جَيْبِكَஉமது சட்டைப் பையில்تَخْرُجْவெளிவரும்بَيْضَآءَவென்மையாக மின்னும்مِنْ غَيْرِ سُوْٓءٍ‌எவ்வித குறையுமின்றிفِىْ تِسْعِஒன்பதுاٰيٰتٍஅத்தாட்சிகளில்اِلٰى فِرْعَوْنَஃபிர்அவ்னுக்கும்وَقَوْمِهٖؕஅவனதுமக்களுக்கும்اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்كَانُوْاஇருக்கிறார்கள்قَوْمًاமக்களாகفٰسِقِيْنَ‏பாவிகளான
வ அத்கில் யதக Fபீ ஜய்Bபிக தக்ருஜ் Bபய்ளா'அ மின் கய்ரிஸூ'இன் Fபீதிஸ்'இ ஆயாதின் இலா Fபிர்'அவ்ன வ கவ்மிஹ்; இன்னஹும் கானூ கவ்மன் Fபாஸிகீன்
முஹம்மது ஜான்
“இன்னும் உம்முடைய கையை உமது (மார்பு பக்கமாக) சட்டைப் பையில் நுழைப்பீராக!” அது ஒளி மிக்கதாய் மாசற்ற வெண்மையாக வெளிவரும். (இவ்விரு அத்தாட்சிகளும்) ஃபிர்அவ்னுக்கும், அவனுடைய சமூகத்தாருக்கும் (நீர் காண்பிக்க வேண்டிய) ஒன்பது அத்தாட்சிகளில் உள்ளவையாகும்; நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் சமூகத்தாராக இருக்கின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
(மூஸாவே!) நீர் உமது கையை உமது சட்டைப்பைக்குள் புகுத்துவீராக. அது ஒரு மாசற்ற வெண்மையான (பிரகாசத்துடன்) வெளிவரும். (இவ்விரண்டும்) ஒன்பது அத்தாட்சிகளில் உள்ளவையாகும். (இவற்றுடன்) நீர் ஃபிர்அவ்னிடமும் அவனுடைய மக்களிடமும் செல்வீராக. நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் மக்களாக இருக்கின்றனர்'' (என்றும் கூறினோம்.)
IFT
மேலும், நீர் உமது கையை உமது (சட்டையின்) மார்புப் பகுதியில் நுழைப்பீராக! அது பிரகாசிக்கக் கூடியதாய் வெளிப்படும் எவ்விதக் கேடுமின்றி!” இவை (இந்த இரு சான்றுகளும்) ஃபிர்அவ்னிடமும் அவனுடைய சமூகத்தாரிடமும் (கொண்டு செல்வதற்குரிய) ஒன்பது சான்றுகளில் உள்ளவையாகும். அவர்கள் மிகவும் தீய நடத்தை உடைய மக்களாய் இருக்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(“மூஸாவே!) இன்னும் நீர் உமது கையை உம்முடைய சட்டைப்பைக்குள் நுழைப்பீராக! அது எவ்விதத் தீங்குமின்றி வெண்மையாக(ப் பிரகாசத்துடன்) வெளிவரும், (இவை இரண்டும்) ஃபிர் அவ்னிடமும், அவனுடைய சமூகத்தாரிடமும் (நீர் எடுத்துச் சென்று காண்பிப்பதற்குரிய) ஒன்பது அத்தாட்சிகளில் உள்ளவையாகும், நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் சமூகத்தவராக இருக்கின்றனர்” என்றும் கூறப்பட்டது!
Saheeh International
And put your hand into the opening of your garment [at the breast]; it will come out white without disease. [These are] among the nine signs [you will take] to Pharaoh and his people. Indeed, they have been a people defiantly disobedient."
فَلَمَّا جَآءَتْهُمْ اٰیٰتُنَا مُبْصِرَةً قَالُوْا هٰذَا سِحْرٌ مُّبِیْنٌ ۟ۚ
فَلَمَّا جَآءَتْهُمْஆக, அது அவர்களிடம் வந்தபோதுاٰيٰتُنَاநம் அத்தாட்சிகள்مُبْصِرَةًபார்க்கும்படியாகقَالُوْاகூறினர்هٰذَاஇதுسِحْرٌசூனியம்مُّبِيْنٌ‌ۚ‏தெளிவான
Fபலம்மா ஜா'அத் ஹும் ஆயாதுனா முBப்ஸிரதன் காலூ ஹாதா ஸிஹ்ரும் முBபீன்
முஹம்மது ஜான்
இவ்வாறு, நம்முடைய பிரகாசமான அத்தாட்சிகள் அவர்களிடம் வந்த போது, அவர்கள் “இது பகிரங்கமான சூனியமேயாகும்” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(மூஸாவுக்கு கொடுக்கப்பட்ட) பார்த்து புரிந்து கொள்ளும்படியான நம் அத்தாட்சிகள் அவர்களிடம் வரவே ‘‘ இது சந்தேகமற்ற சூனியம்தான்'' என்று அவர்கள் கூறினார்கள்.
IFT
ஆயினும், நம்முடைய மிகத் தெளிவான சான்றுகள் அம்மக்களின் முன் வந்தபோது இது அப்பட்டமான சூனியமாகும் என்று அவர்கள் கூறிவிட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நம்முடைய அத்தாட்சிகள் (மிகத்தெளிவாக) பார்க்கக்கூடியவையாக அவர்களிடம் வந்தபொழுது “இது தெளிவான சூனியம்தான்” என்று அவர்கள் கூறினார்கள்.
Saheeh International
But when there came to them Our visible signs, they said, "This is obvious magic."
وَجَحَدُوْا بِهَا وَاسْتَیْقَنَتْهَاۤ اَنْفُسُهُمْ ظُلْمًا وَّعُلُوًّا ؕ فَانْظُرْ كَیْفَ كَانَ عَاقِبَةُ الْمُفْسِدِیْنَ ۟۠
وَجَحَدُوْاஅவர்கள் மறுத்தனர்بِهَاஅவற்றைوَاسْتَيْقَنَـتْهَاۤஅவற்றை உறுதியாக நம்பினاَنْفُسُهُمْஅவர்களுடைய ஆன்மாக்களோظُلْمًاஅநியாயமாகوَّعُلُوًّا‌ ؕஇன்னும் பெருமையாகفَانْظُرْஆகவே நீர் கவனிப்பீராகكَيْفَ كَانَஎவ்வாறுஆகிவிட்டதுعَاقِبَةُமுடிவுالْمُفْسِدِيْنَ‏விஷமிகளின்
வ ஜஹதூ Bபிஹா வஸ்தய்கனத் ஹா அன்Fபுஸுஹும் ளுல்ம(ன்)வ்-வ 'உலுவ்வா; Fபன்ளுர் கய்Fப கான 'ஆகிBபதுல் முFப்ஸிதீன்
முஹம்மது ஜான்
அவர்களுடைய உள்ளங்கள் அவற்றை (உண்மையென) உறுதி கொண்ட போதிலும், அநியாயமாகவும், பெருமை கொண்டவர்களாகவும் அவர்கள் அவற்றை மறுத்தார்கள். ஆனால், இந்த விஷமிகளின் முடிவு என்ன வாயிற்று என்பதை நீர் கவனிப்பீராக.  
அப்துல் ஹமீது பாகவி
(அத்தாட்சிகளைக் கண்ட) அவர்களுடைய உள்ளங்கள் அவற்றை (உண்மையென) உறுதிகொண்ட போதிலும், கர்வம் கொண்டு அநியாயமாக அவற்றை அவர்கள் மறுத்தார்கள். ஆகவே, இந்த விஷமிகளின் முடிவு எவ்வாறாயிற்று என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக.
IFT
அவர்கள் முற்றிலும் அநியாயமான முறையிலும் ஆணவத்தினாலும்தான் அந்தச் சான்றுகளை மறுத்தார்கள். ஆனால், அவர்களுடைய உள்ளங்களோ அவற்றை ஏற்றுக்கொண்டிருந்தன. அந்தக் குழப்பவாதிகளின் முடிவு என்னவாயிற்று என்பதை இப்போது நீர் பார்த்துக் கொள்ளும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களுடைய இதயங்கள் அதனை (உண்மையென) உறுதிகொண்ட நிலையில் அநியாயமாகவும், அகம்பாவத்தாலும் அதனை அவர்கள் மறுத்தார்கள், ஆகவே, இந்த குழப்பவாதிகளின் முடிவு எப்படி இருந்தது என்பதை (நபியே!) நீர் (கவனித்துப்) பார்ப்பீராக!
Saheeh International
And they rejected them, while their [inner] selves were convinced thereof, out of injustice and haughtiness. So see how was the end of the corrupters.
وَلَقَدْ اٰتَیْنَا دَاوٗدَ وَسُلَیْمٰنَ عِلْمًا ۚ وَقَالَا الْحَمْدُ لِلّٰهِ الَّذِیْ فَضَّلَنَا عَلٰی كَثِیْرٍ مِّنْ عِبَادِهِ الْمُؤْمِنِیْنَ ۟
وَلَـقَدْதிட்டவட்டமாகاٰتَيْنَاநாம் தந்தோம்دَاوٗدَதாவூதுக்கும்وَ سُلَيْمٰنَசுலைமானுக்கும்عِلْمًا‌ ۚஅறிவைوَقَالَاஅவ்விருவரும் கூறினர்الْحَمْدُஎல்லாப் புகழும்لِلّٰهِஅல்லாஹ்விற்கேالَّذِىْஎவன்فَضَّلَنَاஎங்களை மேன்மைப்படுத்தினான்عَلٰى كَثِيْرٍபலரைப் பார்க்கிலும்مِّنْ عِبَادِهِதனது அடியார்களில்الْمُؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களான
வ லகத் ஆதய்னா தாவூத வ ஸுலய்மான 'இல்மா; வ காலல் ஹம்து லில் லாஹில் லதீ Fபள்ளலனா 'அலா கதீரிம் மின் 'இBபாதிஹில் மு'மினீன்
முஹம்மது ஜான்
தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் நிச்சயமாக நாம் கல்வி ஞானத்தைக் கொடுத்தோம்; அதற்கு அவ்விருவரும்: “புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது; அவன் தான், முஃமின்களான தன் நல்லடியார்களில் அநேகரைவிட நம்மை மேன்மையாக்கினான்” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் நிச்சயமாக நாம் (இம்மை மறுமையில் பயனளிக்கக்கூடிய) கல்வியைக் கொடுத்தோம். அதற்கு அவ்விருவரும், ‘‘ புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தமானவை. அவன்தான் நம்பிக்கை கொண்ட தன் நல்லடியார்களில் பலரைவிட எங்களை மேன்மையாக்கி வைத்தான்'' என்று கூறி (நன்றி செலுத்தி)னார்கள்.
IFT
(மற்றொரு புறம்) நாம் தாவூதுக்கும் ஸுலைமானுக்கும் ஞானத்தை வழங்கினோம். மேலும், அவ்விருவரும் கூறினார்கள்: “அல்லாஹ்வுக்கு நன்றி உரித்தாகட்டும்; அவனே, நம்பிக்கை கொண்ட தன் அடியார்கள் பலரைவிட எங்களுக்கு சிறப்பை வழங்கினான்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தாவூதுக்கும் ஸுலைமானுக்கும் நிச்சயமாக நாம் கல்வியைக் கொடுத்தோம், “விசுவாசங்கொண்ட தன்னுடைய (நல்ல) அடியார்களில் அநேகரைவிட எங்களை மேன்மையாக்கி வைத்தவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் உரியது” என்று அவ்விவரும் கூறி நன்றி செலுத்தினார்கள்.
Saheeh International
And We had certainly given to David and Solomon knowledge, and they said, "Praise [is due] to Allah, who has favored us over many of His believing servants."
وَوَرِثَ سُلَیْمٰنُ دَاوٗدَ وَقَالَ یٰۤاَیُّهَا النَّاسُ عُلِّمْنَا مَنْطِقَ الطَّیْرِ وَاُوْتِیْنَا مِنْ كُلِّ شَیْءٍ ؕ اِنَّ هٰذَا لَهُوَ الْفَضْلُ الْمُبِیْنُ ۟
وَوَرِثَவாரிசாக ஆனார்سُلَيْمٰنُசுலைமான்دَاوٗدَ‌தாவூதுக்குوَقَالَஇன்னும் , கூறினார்يٰۤاَيُّهَا النَّاسُமக்களே!عُلِّمْنَاநாங்கள் கற்பிக்கப்பட்டோம்مَنْطِقَபேச்சைالطَّيْرِபறவைகளின்وَاُوْتِيْنَاவழங்கப்பட்டோம்مِنْ كُلِّ شَىْءٍؕ‌எல்லாம்اِنَّநிச்சயமாகهٰذَا لَهُوَஇதுதான்الْفَضْلُமேன்மையாகும்الْمُبِيْنُ‏தெளிவான
வ வரித ஸுலய்மானு தாவூத வ கால யா அய்யுஹன் னாஸு 'உல்லிம்னா மன்திகத் தய்ரி வ ஊதீனா மின் குல்லி ஷய்'இன் இன்ன ஹாதா லஹுவல் Fபள்லுல் முBபீன்
முஹம்மது ஜான்
பின்னர், ஸுலைமான் தாவூதின் வாரிசானார்; அவர் கூறினார்: “மனிதர்களே! பறவைகளின் மொழி எங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது; மேலும், நாங்கள் எல்லா விதப் பொருள்களிலிருந்தும் (ஏராளமாக) அளிக்கப்பட்டுள்ளோம்; நிச்சயமாக இது தெளிவான அருள் கொடையாகும்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர் தாவூதுக்கு ஸுலைமான் வாரிசானார். (ஸுலைமான் மனிதர்களை நோக்கி) ‘‘ மனிதர்களே! எங்களுக்குப் பறவைகளின் மொழி கற்பிக்கப்பட்டிருக்கிறது. எங்களுக்கு (வேண்டிய) எல்லாப் பொருள்களும் (ஏராளமாகவே) கொடுக்கப்பட்டிருக்கின்றன. நிச்சயமாக இது (இறைவனின்) மிக்க தெளிவானதொரு அருளாகும்'' என்று கூறி(யும் நன்றி செலுத்தி)னார்.
IFT
பின்னர், ஸுலைமான் தாவூதின் வாரிசானார். அவர் கூறினார்: “மக்களே! எங்களுக்குப் பறவைகளின் பேச்சுகள் கற்றுத் தரப்பட்டுள்ளன. எல்லாவிதமான பொருள்களும் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. திண்ணமாக, இது (அல்லாஹ்வின்) வெளிப்படையான அருளாகும்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், ஸுலைமான், தாவூதுக்கு வாரிசாக ஆனார், இன்னும், “மனிதர்களே! பறவைகளின் மொழியை நாங்கள் கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளோம், இன்னும், (எங்களுக்கு வேண்டிய) ஒவ்வொரு பொருளிலிருந்தும் (ஏராளமாக) நாங்கள் கொடுக்கப்பட்டுள்ளோம், நிச்சயமாக இது - இதுதான் (அல்லாஹ்வின்) மிகத் தெளிவான பேரருளாகும்” என்று அவர் கூறி நன்றியும் செலுத்தினார்.
Saheeh International
And Solomon inherited David. He said, "O people, we have been taught the language of birds, and we have been given from all things. Indeed, this is evident bounty."
وَحُشِرَ لِسُلَیْمٰنَ جُنُوْدُهٗ مِنَ الْجِنِّ وَالْاِنْسِ وَالطَّیْرِ فَهُمْ یُوْزَعُوْنَ ۟
وَحُشِرَஒன்று திரட்டப்பட்டனلِسُلَيْمٰنَசுலைமானுக்குجُنُوْدُهٗஅவருடைய ராணுவங்கள்مِنَ الْجِنِّஜின்களிலிருந்துوَالْاِنْسِஇன்னும் மனிதர்கள்وَالطَّيْرِஇன்னும் பறவைகளில்فَهُمْஆகவே, அவர்கள்يُوْزَعُوْنَ‏நிறுத்தப்படுவார்கள்
வ ஹுஷிர ஸுலய்மான ஜுனூதுஹூ மினல் ஜின்னி வல் இன்ஸி வத்தய்ரி Fபஹும் யூZஜ'ஊன்
முஹம்மது ஜான்
மேலும் ஸுலைமானுக்கு ஜின்கள் மனிதர்கள் பறவைகள் ஆகியவற்றிலிருந்து அவரது படைகள் திரட்டப்பட்டு, அவை (தனித் தனியாகப்) பிரிக்கப்பட்டுள்ளன.
அப்துல் ஹமீது பாகவி
ஸுலைமானுடைய ராணுவம் ஜின்கள், மனிதர்கள், பறவைகள் ஆகியவற்றிலிருந்து திரட்டப்பட்டு அவை இனவாரியாகப் பிரிக்கப்பட்டு அணியணியாகப் புறப்பட்டன.
IFT
மேலும், ஸுலைமானுக்காக ஜின்கள், மனிதர்கள் மற்றும் பறவைகள் ஆகியவற்றின் படைகள் திரட்டப்பட்டிருந்தன. மேலும், அவை முறையான முழுமையான கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், ஸுலைமானுக்கு, ஜின்கள், மனிதர்கள், பறவைகள் முதலியவற்றிலிருந்து அவரது படைகள் அவர் முன் திரட்டப்பட்டது, பிறகு (அவர்களில் முன்னுள்ளவர்களுடன் அவர்களில் பின்னுள்ளவர்கள் சேர்ந்து கொள்வதற்காக) – அவர்கள் நிறுத்தி வைக்கப்பட்டனர்.
Saheeh International
And gathered for Solomon were his soldiers of the jinn and men and birds, and they were [marching] in rows
حَتّٰۤی اِذَاۤ اَتَوْا عَلٰی وَادِ النَّمْلِ ۙ قَالَتْ نَمْلَةٌ یّٰۤاَیُّهَا النَّمْلُ ادْخُلُوْا مَسٰكِنَكُمْ ۚ لَا یَحْطِمَنَّكُمْ سُلَیْمٰنُ وَجُنُوْدُهٗ ۙ وَهُمْ لَا یَشْعُرُوْنَ ۟
حَتّٰٓىஇறுதியாகاِذَاۤ اَتَوْاஅவர்கள் வந்த போதுعَلٰى وَادِஒரு பள்ளத்தாக்கில்النَّمْلِۙஎறும்புகளின்قَالَتْகூறியதுنَمْلَةٌஓர் எறும்புيّٰۤاَيُّهَا النَّمْلُஎறும்புகளே!ادْخُلُوْاநுழைந்து விடுங்கள்!مَسٰكِنَكُمْ‌ۚஉங்கள் பொந்துகளுக்குள்لَا يَحْطِمَنَّكُمْஉங்களை மிதித்து அழித்து விடவேண்டாம்سُلَيْمٰنُசுலைமானும்وَجُنُوْدُهٗۙஅவருடைய ராணுவங்களும்وَهُمْஅவர்களோلَا يَشْعُرُوْنَ‏உணர மாட்டார்கள்
ஹத்தா இதா அதவ் 'அலா வாதின் னம்லி காலத் னம்லது(ன்)ய் யா அய்யுஹன் னம்லுத் குலூ மஸாகினகும் லா யஹ்திமன்னகும் ஸுலய்மானு வ ஜுனூதுஹூ வ ஹும் லா யஷ்'உரூன்
முஹம்மது ஜான்
இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி:) “எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)“ என்று கூறிற்று.
அப்துல் ஹமீது பாகவி
அவை எறும்புகள் வசிக்கும் ஓர் ஓடையின் சமீபமாக வந்தபொழுது அதிலொரு பெண் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி) ‘‘எறும்புகளே! நீங்கள் உங்கள் வீடுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள். ஸுலைமானும் அவருடைய ராணுவமும் (நீங்கள் இருப்பதை) அறியாது உங்களை(த் தங்கள் கால்களால்) மிதித்துவிடாமல் இருக்கட்டும்'' என்று கூறியது.
IFT
(ஒருமுறை ஸுலைமான் அப்படைகளுடன் சென்று கொண்டிருந்தார்.) அவர்கள் அனைவரும் எறும்புகளின் பள்ளத்தாக்கிற்கு வந்தபோது ஓர் எறும்பு கூறியது: “எறும்புகளே! உங்களுடைய புற்றுகளில் நுழைந்து கொள்ளுங்கள். ஸுலைமானும் அவருடைய படையினரும் தெரியாமல் உங்களை மிதித்துவிடக்கூடாது.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இறுதியாக அவர்கள் எறும்புகள் வசிக்கும் ஓர் ஓடையின் சமீபமாக வந்தபொழுது (அவற்றில்) ஓர் எறும்பு (மற்ற எறும்புகளிடம்,) “எறும்புகளே நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள், ஸூலைமானும், அவருடைய படையினரும் உங்களைப்பற்றி உணராது, உங்களைத் திண்ணமாக மிதித்துவிட வேண்டாம்” என்று கூறியது.
Saheeh International
Until, when they came upon the valley of the ants, an ant said, "O ants, enter your dwellings that you not be crushed by Solomon and his soldiers while they perceive not."
فَتَبَسَّمَ ضَاحِكًا مِّنْ قَوْلِهَا وَقَالَ رَبِّ اَوْزِعْنِیْۤ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِیْۤ اَنْعَمْتَ عَلَیَّ وَعَلٰی وَالِدَیَّ وَاَنْ اَعْمَلَ صَالِحًا تَرْضٰىهُ وَاَدْخِلْنِیْ بِرَحْمَتِكَ فِیْ عِبَادِكَ الصّٰلِحِیْنَ ۟
فَتَبَسَّمَஆக, புன்முறுவல் பூத்தார்ضَاحِكًاஅவர் சிரித்தவராகمِّنْ قَوْلِهَاஅதன் பேச்சினால்وَقَالَஇன்னும் கூறினார்رَبِّஎன் இறைவா!اَوْزِعْنِىْۤஎனக்கு நீ அகத்தூண்டுதலை ஏற்படுத்து!اَنْ اَشْكُرَநான் நன்றி செலுத்துவதற்குنِعْمَتَكَஉன் அருளுக்குالَّتِىْۤஎதுاَنْعَمْتَநீ அருள்புரிந்தாய்عَلَىَّஎன் மீதும்وَعَلٰى وَالِدَىَّஎன் பெற்றோர் மீதும்وَاَنْ اَعْمَلَநான் செய்வதற்கும்صَالِحًـاநல்லதைتَرْضٰٮهُநீ மகிழ்ச்சியுறுகின்றوَاَدْخِلْنِىْஇன்னும் என்னைநுழைத்துவிடுبِرَحْمَتِكَஉன் கருணையால்فِىْ عِبَادِكَஉன் அடியார்களில்الصّٰلِحِيْنَ‏நல்லவர்கள்
FபதBபஸ்ஸம ளாஹிகம் மின் கவ்லிஹா வ கால ரBப்Bபி அவ்Zஜிஃனீ அன் அஷ்குர னிஃமத கல் லதீ அன்'அம்த 'அலய்ய வ 'அலா வாலிதய்ய வ அன் அஃமல ஸாலிஹன் தர்ளாஹு வ அத்கில்னீ Bபிரஹ்மதிக Fபீ 'இBபாதிகஸ் ஸாலிஹீன்
முஹம்மது ஜான்
அப்போது அதன் சொல்லைக் கேட்டு, அவர் புன்னகை கொண்டு சிரித்தார். இன்னும், “என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!” என்று பிரார்த்தித்தார்.
அப்துல் ஹமீது பாகவி
அதன் சொல்லைக் கேள்வியுற்று ஸுலைமான் சிரித்தவராக புன்னகைப் பூத்தார். மேலும், ‘‘ என் இறைவனே! நீ என் மீதும், என் தாய் தந்தை மீதும் புரிந்த உன் அருள்களுக்கு உனக்கு நான் நன்றி செலுத்த நீ எனக்கு அருள் புரிவாயாக! உனக்குத் திருப்தியளிக்கக்கூடிய நற்செயல்களையும் நான் செய்ய(க்கூடிய பாக்கியத்தை எனக்கு) அருள் புரிந்து, உன் கருணையைக் கொண்டு உன் நல்லடியார்களுடனும் என்னைச் சேர்த்து விடுவாயாக!'' என்று பிரார்த்தனை செய்தார்.
IFT
ஸுலைமான் அது சொல்வதைக் கேட்டு புன்னகை பூத்து சிரிக்கலானார். மேலும், கூறினார்: “என் இறைவா! என் மீதும் என் பெற்றோர் மீதும் நீ புரிந்த பேருதவிக்கு நான் நன்றி செலுத்திக் கொண்டிருப்பதற்காகவும் நீ திருப்திப்படுகின்ற நற்செயலை செய்து வருவதற்காகவும் என்னை நீ கட்டுப்படுத்தி வைப்பாயாக! மேலும், உன் அருளால் என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்து வைப்பாயாக!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அப்போது அதனுடைய சொல்லால் சிரித்தவராக அவர் புன்னகை புரிந்தார், “என் இரட்சகனே! நீ என் மீதும், என் தாய் தந்தையர் மீதும், புரிந்த உன்னுடைய அருள்களுக்கு (உனக்கு) நான் நன்றி செலுத்துவதற்கும், எதனை நீ பொருந்திக்கொள்வாயோ அத்தகைய நற்செயலையும் நான் செய்யக்கூடிய நற்பேறை (எனக்கு) அருள் புரிவாயாக! இன்னும், உன்னுடைய கிருபையைக் கொண்டு உன்னுடைய நல்லடியார்களின் கூட்டத்தில் என்னைப் பிரவேசிக்கச் செய்வாயாக!” என்று (பிரார்த்தனை செய்து) அவர் கூறினார்.
Saheeh International
So [Solomon] smiled, amused at her speech, and said, "My Lord, enable me to be grateful for Your favor which You have bestowed upon me and upon my parents and to do righteousness of which You approve. And admit me by Your mercy into [the ranks of] Your righteous servants."
وَتَفَقَّدَ الطَّیْرَ فَقَالَ مَا لِیَ لَاۤ اَرَی الْهُدْهُدَ ۖؗ اَمْ كَانَ مِنَ الْغَآىِٕبِیْنَ ۟
وَتَفَقَّدَஅவர் தேடினார்الطَّيْرَபறவைகளில்فَقَالَகூறினார்مَا لِىَஎனக்கென்னلَاۤ اَرَىநான் காணமுடியவில்லைالْهُدْهُدَ ۖ ஹூத்ஹூதைاَمْஅல்லதுكَانَஅது இருக்கிறதா?مِنَ الْغَآٮِٕبِيْنَ‏வராதவர்களில்
வ தFபக்கதத் தய்ர Fபகால மா லிய லா அரா அல் ஹுத்ஹுத, அம் கான மினல் கா'இBபீன்
முஹம்மது ஜான்
அவர் பறவைகளை(ப் பற்றியும்) பரிசீலனை செய்து: “நான் (இங்கே) ஹுத்ஹுத் (பறவையைக்) காணவில்லையே என்ன காரணம்? அல்லது அது மறைந்தவற்றில் நின்றும் ஆகி விட்டதோ?” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
அவர் பறவைகளைப் பரிசீலனை செய்தபொழுது ‘‘என்ன காரணம்? ‘ஹுத்ஹுத்' பறவையை நான் காணவில்லையே! (அது பறவைகளின் நெருக்கடியில்) மறைந்திருக்கிறதா? (அல்லது என் அனுமதியின்றி எங்கேனும் சென்றுவிட்டதா?)
IFT
(மற்றொரு சமயம்) ஸுலைமான் பறவைகளின் நிலைமைகளை ஆராய்ந்தார். பின்னர் கூறினார்: “என்ன விஷயம்? நான் ஹுத்ஹுத் மரங்கொத்தி பறவையைக் காணவில்லையே! அது எங்காவது காணாமல் போய்விட்டதா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் அவர், பறவைகளைக் கணக்கெடுக்கப் பார்வையிட்டார், “எனக்கு என்ன ஆயிற்று? (பறவைகளில்) “ஹுத்ஹுதை” நான் காணவில்லையே! அல்லது அது (வராமல்) மறைந்தவற்றில் ஆகிவிட்டதா?” என்று கூறினார்.
Saheeh International
And he took attendance of the birds and said, "Why do I not see the hoopoe - or is he among the absent?
لَاُعَذِّبَنَّهٗ عَذَابًا شَدِیْدًا اَوْ لَاَاَذْبَحَنَّهٗۤ اَوْ لَیَاْتِیَنِّیْ بِسُلْطٰنٍ مُّبِیْنٍ ۟
لَاُعَذِّبَـنَّهٗ عَذَابًاநிச்சயமாக நான் அதை தண்டிப்பேன்شَدِيْدًاகடுமையாகاَوْஅல்லதுلَا۟اَذْبَحَنَّهٗۤஅதை நிச்சயமாக நான் அறுத்து விடுவேன்اَوْஅல்லதுلَيَاْتِيَنِّىْஅது என்னிடம் கொண்டு வரவேண்டும்بِسُلْطٰنٍஆதாரத்தைمُّبِيْنٍ‏தெளிவான
ல-உ'அத்திBபன்னஹூ 'அதாBபன் ஷதீதன் அவ் ல அத்Bபஹன்னஹூ அவ் ல யா'தியன்னீ Bபிஸுல்தானிம் முBபீன்
முஹம்மது ஜான்
“நான் நிச்சயமாக அதைக் கடுமையான வேதனையைக் கொண்டு வேதனை செய்வேன்; அல்லது அதனை நிச்சயமாக அறுத்து விடுவேன்; அல்லது (வராததற்கு) அது என்னிடம் தெளிவான ஆதாரத்தைக் கொண்டு வர வேண்டும்” என்றும் கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
(அவ்வாறாயின்) நிச்சயமாக நான் அதைக் கடினமான வேதனை செய்வேன். அல்லது அதை அறுத்துவிடுவேன். அல்லது தக்க ஆதாரத்தை அது (என் முன்) கொண்டு வரவேண்டும்'' என்று கூறினார்.
IFT
நிச்சயம் அதனை நான் கடுமையாகத் தண்டிப்பேன் அல்லது அதனை அறுத்துவிடுவேன். இல்லாவிட்டால் பொருத்தமான காரணத்தை என்னிடம் அது சமர்ப்பிக்க வேண்டும்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக நான் அதனைக் கடினமான வேதனையாக வேதனை செய்வேன், அல்லது அதனை நிச்சயமாக நான் அறுத்துவிடுவேன், அல்லது அது வராததற்குத் தெளிவான ஆதாரத்தைத் திட்டமாக அது (என் முன்) கொண்டுவர வேண்டும்” என்று கூறினார்.
Saheeh International
I will surely punish him with a severe punishment or slaughter him unless he brings me clear authorization."
فَمَكَثَ غَیْرَ بَعِیْدٍ فَقَالَ اَحَطْتُّ بِمَا لَمْ تُحِطْ بِهٖ وَجِئْتُكَ مِنْ سَبَاٍۭ بِنَبَاٍ یَّقِیْنٍ ۟
فَمَكَثَஅவர் தாமதித்தார்غَيْرَ بَعِيْدٍசிறிது நேரம்தான்فَقَالَஆக, அது கூறியதுاَحَطْتُّஅறிந்துள்ளேன்بِمَا لَمْ تُحِطْ بِهٖஎதை/நீ்ர் அறியவில்லை/அதைوَ جِئْتُكَஉம்மிடம் கொண்டு வந்துள்ளேன்مِنْ سَبَاٍۢ‘சபா’ இனத்தாரிடமிருந்துبِنَبَاٍசெய்தியைيَّقِيْنٍ‏உறுதியான
Fபமகத கய்ர Bப'ஈதின் Fபகால அஹத்து Bபிமா லம் துஹித் Bபிஹீ வ ஜி'துக மின் ஸBபய்ம் BபினBப இ(ன்)ய்-யகீன்
முஹம்மது ஜான்
(இவ்வாறு கூறி) சிறிது நேரம் தாமதித்தார்; அதற்குள் (ஹுத்ஹுத் வந்து) கூறிற்று: “தாங்கள் அறியாத ஒரு விஷயத்தை நான் அறிந்து கொண்டேன். “ஸபா”விலிருந்து உம்மிடம் உறுதியான செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன்.”
அப்துல் ஹமீது பாகவி
(இவ்வாறு கூறி) அதிக நேரமாகவில்லை. (அதற்குள் ஹுத்ஹுத் பறவை அவர் முன் தோன்றி) ‘‘ நீர் அறியாத ஒரு விஷயத்தை நான் அறிந்து கொண்டு ‘ஸபா'வைப் பற்றி நிச்சயமான (உண்மைச்) செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன்.
IFT
அதிக தாமதமின்றி அது வந்து கூறியது: “தங்கள் அறிவுக்கு வராத சில செய்திகளை நான் பெற்றிருக்கின்றேன். நான் ஸபா பற்றி உறுதியான செய்தியைத் தங்களிடம் கொண்டு வந்திருக்கின்றேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இவ்வாறு கூறி) சிறிது நேரம் தாமதித்தார், (அதற்குள் ஹுத் ஹுத் வந்து) “நீங்கள் அறியாத ஒரு விஷயத்தை நான் அறிந்து கொண்டேன் ஸபஉவிலிருந்து உம்மிடம் உறுதியான செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன்” என்று அது கூறியது.
Saheeh International
But he [i.e., the hoopoe] stayed not long and said, "I have encompassed [in knowledge] that which you have not encompassed, and I have come to you from Sheba with certain news.
اِنِّیْ وَجَدْتُّ امْرَاَةً تَمْلِكُهُمْ وَاُوْتِیَتْ مِنْ كُلِّ شَیْءٍ وَّلَهَا عَرْشٌ عَظِیْمٌ ۟
اِنِّىْநிச்சயமாக நான்وَجَدْتُّகண்டேன்امْرَاَةًஒரு பெண்ணைتَمْلِكُهُمْஅவர்களை ஆட்சி செய்கின்றவளாகوَاُوْتِيَتْஅவள் வழங்கப்பட்டு இருக்கிறாள்مِنْ كُلِّ شَىْءٍஎல்லாம்وَّلَهَاஅவளுக்கு சொந்தமானعَرْشٌஅரச கட்டிலும்عَظِيْمٌ‏ஒரு பெரிய
இன்னீ வஜத்தும் ர அதன் தம்லிகுஹும் வ ஊதியத் மின் குல்லி ஷய்'இ(ன்)வ் வ லஹா 'அர்ஷுன் 'அளீம்
முஹம்மது ஜான்
“நிச்சயமாக அ(த் தேசத்த)வர்களை ஒரு பெண் ஆட்சி புரிவதை நான் கண்டேன்; இன்னும், அவளுக்கு (தேவையான) ஒவ்வொரு பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது; மகத்தான ஓர் அரியாசனமும் அவளுக்கு இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
மெய்யாகவே அந்நாட்டு மக்களை ஒரு பெண் ஆட்சி புரிவதை நான் கண்டேன். எல்லா வசதிகளும் அவள் பெற்றிருக்கிறாள். மகத்தானதொரு அரசகட்டிலும் அவளுக்கு இருக்கிறது.
IFT
அங்கு அம்மக்கள் மீது ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணைக் கண்டேன். அவளுக்கு எல்லாவிதமான பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், கம்பீரமான ஓர் அரியணையும் அவளுக்கு உள்ளது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அவர்களை (அங்கு) ஆட்சி செய்கின்ற ஒரு பெண்ணை நிச்சயமாக நான் கண்டேன், ஒவ்வொரு பொருளிலிருந்தும் அவள் கொடுக்கப்பட்டுள்ளாள், மகத்தான சிம்மாசனமும் அவளுக்கு இருக்கின்றது”
Saheeh International
Indeed, I found [there] a woman ruling them, and she has been given of all things, and she has a great throne.
وَجَدْتُّهَا وَقَوْمَهَا یَسْجُدُوْنَ لِلشَّمْسِ مِنْ دُوْنِ اللّٰهِ وَزَیَّنَ لَهُمُ الشَّیْطٰنُ اَعْمَالَهُمْ فَصَدَّهُمْ عَنِ السَّبِیْلِ فَهُمْ لَا یَهْتَدُوْنَ ۟ۙ
وَجَدْتُّهَاஅவளையும் கண்டேன்وَقَوْمَهَاஅவளுடைய மக்களையும்يَسْجُدُوْنَசிரம் பணிந்து வணங்குகின்றவர்களாகلِلشَّمْسِசூரியனுக்குمِنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிوَزَيَّنَஇன்னும் அலங்கரித்து விட்டான்لَهُمُஅவர்களுக்குالشَّيْطٰنُஷைத்தான்اَعْمَالَهُمْஅவர்களின் செயல்களைفَصَدَّஆகவே, அவன் தடுத்து விட்டான்هُمْஅவர்களைعَنِ السَّبِيْلِபாதையிலிருந்துفَهُمْஆகவே, அவர்கள்لَا يَهْتَدُوْنَۙ‏நேர்வழி பெறவில்லை
வஜத்துஹா வ கவ்மஹா யஸ்ஜுதூன லிஷ்ஷம்ஸி மின் தூனில் லாஹி வ Zஜய்யன லஹுமுஷ் ஷய்தானு அஃமாலஹும் Fபஸத்தஹும் 'அனிஸ் ஸBபீலி Fபஹும் லா யஹ்ததூன்
முஹம்மது ஜான்
“அவளும், அவளுடைய சமூகத்தார்களும் அல்லாஹ்வையன்றி, சூரியனுக்கு ஸுஜூது செய்வதை நான் கண்டேன்; அவர்களுடைய (இத்தவறான) செயல்களை அவர்களுக்கு ஷைத்தான் அழகாகக் காண்பித்து, அவர்களை நேரான வழியிலிருந்து தடுத்துள்ளான்; ஆகவே அவர்கள் நேர்வழி பெறவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
அவளும் அவளுடைய மக்களும் அல்லாஹ்வையன்றி சூரியனைச் சிரம் பணிந்து வணங்குவதை நான் கண்டேன். அவர்களுடைய இக்காரியத்தை ஷைத்தான் அவர்களுக்கு அழகாகக் காண்பித்து, அவர்களை நேரான பாதையிலிருந்து தடுத்து விட்டான். ஆதலால், அவர்கள் நேரான வழியை அடையவில்லை.
IFT
அவளும் அவளுடைய சமூகத்தார்களும் அல்லாஹ்வை விடுத்து சூரியனுக்கு சிரம் பணிவதையும் நான் கண்டேன்.” ஷைத்தான் அவர்களுடைய செயல்களை அவர்களுக்கு அழகாக்கிக் காண்பித்து, நேரிய பாதையில் செல்லவிடாமல் அவர்களைத் தடுத்துவிட்டான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அவளையும், அவளுடைய சமூகத்தாரையும் அல்லாஹ்வையன்றி சூரியனுக்குச் சிரம்பணிந்து வணங்குபவர்களாக நான் கண்டேன், அவர்களுடைய இக்காரியங்களை ஷைத்தான் அவர்களுக்கு அலங்காரமாகக் காண்பித்தும் விட்டான், எனவே, அவர்களை நேரான பாதையிலிருந்து அவன் தடுததுவிட்டான், ஆகவே, அவர்கள் நேர்வழி பெறவில்லை.
Saheeh International
I found her and her people prostrating to the sun instead of Allah, and Satan has made their deeds pleasing to them and averted them from [His] way, so they are not guided,
اَلَّا یَسْجُدُوْا لِلّٰهِ الَّذِیْ یُخْرِجُ الْخَبْءَ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَیَعْلَمُ مَا تُخْفُوْنَ وَمَا تُعْلِنُوْنَ ۟
اَلَّا يَسْجُدُوْاஅவர்கள் சிரம் பணியாமல் இருப்பதற்காلِلّٰهِஅல்லாஹ்விற்குالَّذِىْஎவன்يُخْرِجُவெளிப்படுத்துகின்றான்الْخَبْءَமறைந்திருப்பவற்றைفِى السَّمٰوٰتِவானங்களிலும்وَالْاَرْضِபூமியிலும்وَيَعْلَمُஇன்னும் அறிகின்றான்مَا تُخْفُوْنَநீங்கள் மறைப்பதையும்وَمَا تُعْلِنُوْنَ‏நீங்கள் வெளிப்படுத்துவதையும்
அல்லா யஸ்ஜுதூ லில்லாஹில் லதீ யுக்ரிஜுல் கBப்'அ Fபிஸ் ஸமாவாதி வல் அர்ளி வ யஃலமு மா துக்Fபூன வமா துஃலினூன்
முஹம்மது ஜான்
“வானங்களிலும், பூமியிலும், மறைந்திருப்பவற்றை வெளியாக்குகிறவனும்; இன்னும் நீங்கள் மறைப்பதையும், நீங்கள் வெளியாக்குவதையும் அறிபவனுமாகிய அல்லாஹ்வுக்கு அவர்கள் ஸுஜூது செய்து வணங்க வேண்டாமா?
அப்துல் ஹமீது பாகவி
வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை வெளிப்படுத்தக்கூடிய, நீங்கள் மறைத்துக் கொள்வதையும் நீங்கள் வெளியாக்குவதையும் நன்கறியக் கூடிய அல்லாஹ்வுக்கு அவர்கள் சிரம் பணிந்து வணங்க வேண்டாமா?
IFT
இதனால் வானங்கள் மற்றும் பூமியில் மறைந்திருப்பவற்றை வெளிக்கொணர்பவனும், நீங்கள் மறைத்து வைப்பவற்றையும் வெளிப்படுத்துகின்றவற்றையும் நன்கறிபவனுமாகிய அல்லாஹ்வுக்கு சிரம் பணிய வேண்டும் எனும் நேர்வழியை அவர்கள் அடையாதவர்களாய் இருக்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“வானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பவற்றை வெளிக்கொணர்பவனும் நீங்கள் மறைத்துக் கொள்வதையும், நீங்கள் வெளியாக்குவதையும் நன்கறிபவனுமாகிய அல்லாஹ்வுக்கு அவர்கள் சிரம்பணியாமல் இருப்பதற்கு (ஷைத்தான் தடுத்துவிட்டதே) காரணமாகும்.
Saheeh International
[And] so they do not prostrate to Allah, who brings forth what is hidden within the heavens and the earth and knows what you conceal and what you declare -
اَللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِیْمِ ۟
اَللّٰهُஅல்லாஹ்لَاۤஅறவே இல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّاதவிரهُوَஅவனைرَبُّஅதிபதிالْعَرْشِஅர்ஷுடையالْعَظِيْمِ ۩‏மகத்தான
அல்லாஹு லா இலாஹ இல்லா ஹுவ ரBப்Bபுல் 'அர்ஷில் அளீம்
முஹம்மது ஜான்
“அல்லாஹ் - அவனையன்றி வணக்கத்திற்குரிய நாயன் (வேறு) இல்லை. (அவன்) மகத்தான அர்ஷுக்கு உரிய இறைவன்” (என்று ஹுது ஹுது கூறிற்று).
அப்துல் ஹமீது பாகவி
அந்த அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. அவன்தான் மகத்தான அர்ஷுடையவன்'' என்று கூறிற்று.
IFT
அல்லாஹ் ஒருவனைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியானவன் வேறு யாரும் இல்லை. அவனே மாபெரும் அர்ஷுக்கு* உரிமையாளன் ஆவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ்-அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய வேறு) நாயன் இல்லை, அவன்தான் மகத்தான அர்ஷுக்குரியவன்” (என்று ஹுத் ஹுது கூறிற்று)
Saheeh International
Allah - there is no deity except Him, Lord of the Great Throne."
قَالَ سَنَنْظُرُ اَصَدَقْتَ اَمْ كُنْتَ مِنَ الْكٰذِبِیْنَ ۟
قَالَஅவர் கூறினார்سَنَـنْظُرُஆராய்ந்துபார்ப்போம்اَصَدَقْتَநீ உண்மை கூறினாயா?اَمْஅல்லதுكُنْتَஆகிவிட்டாயா?مِنَ الْكٰذِبِيْنَ‏பொய்யர்களில்
கால ஸனன்ளுரு அஸதக்த அம் குன்த மினல் காதிBபீன்
முஹம்மது ஜான்
(அதற்கு ஸுலைமான்:) “நீ உண்மை கூறுகிறாயா அல்லது பொய்யர்களில் நீ இருக்கிறாயா என்பதை நாம் விரைவிலேயே கண்டு கொள்வோம்” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
(அதற்கு ஸுலைமான்) ‘‘ நீ உண்மை சொல்கிறாயா அல்லது பொய் சொல்கிறாயா? என்பதை அதிசீக்கிரத்தில் நாம் கண்டு கொள்வோம்.
IFT
ஸுலைமான் கூறினார்: “நீ உண்மை சொல்கிறாயா அல்லது பொய்யர்களோடு நீ சேர்ந்து விட்டாயா என்பதை இப் போதே நாம் பார்த்துவிடுகின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நீ உண்மை சொல்கிறாயா, அல்லது பொய்யர்களில் நீ இருக்கிறாயா? என்பதை நாம் காண்போம்” என்றும் ஸுலைமானாகிய அவர் கூறினார்.
Saheeh International
[Solomon] said, "We will see whether you were truthful or were of the liars.
اِذْهَبْ بِّكِتٰبِیْ هٰذَا فَاَلْقِهْ اِلَیْهِمْ ثُمَّ تَوَلَّ عَنْهُمْ فَانْظُرْ مَاذَا یَرْجِعُوْنَ ۟
اِذْهَبْஎடுத்துச் செல்!بِّكِتٰبِىْஎனது இந்தக் கடிதத்தைهٰذَاஇதைفَاَلْقِهْஅதைப் போடு!اِلَيْهِمْஅவர்கள் முன்ثُمَّபிறகுتَوَلَّவிலகி இரு!عَنْهُمْஅவர்களை விட்டுفَانْظُرْநீ பார்!مَاذَاஎன்னيَرْجِعُوْنَ‏அவர்கள் பதில் தருகிறார்கள்
இத்ஹBப் BபிகிதாBபீ ஹாத Fப அல்கிஹ் இலய்ஹிம் தும்ம்ம தவல்ல 'அன்ஹும் Fபன்ளுர் மாதா யர்ஜி'ஊன்
முஹம்மது ஜான்
“என்னுடைய இந்தக் கடிதத்தைக் கொண்டு செல்; அவர்களிடம் இதைப் போட்டு விடு; பின்னர் அவர்களை விட்டுப் பின் வாங்கி; அவர்கள் என்ன முடிவு செய்கிறார்கள் என்பதைக் கவனி” (என்று கூறினார்).
அப்துல் ஹமீது பாகவி
என் இக்கடிதத்தைக் கொண்டு போய் அவர்களின் முன் எறிந்துவிட்டு அவர்களை விட்டு விலகி (மறைவாக இருந்து கொண்டு) அவர்கள் என்ன முடிவுக்கு வருகிறார்கள் என்பதை நீ கவனித்துவா'' என்று கூறினார்.
IFT
என்னுடைய இந்தக் கடிதத்தை எடுத்துச் சென்று அவர்களிடம் போட்டுவிடு. பிறகு, அவர்களை விட்டு விலகி நின்று அவர்கள் என்ன பதில் நட வடிக்கையை எடுக்கப் போகின்றார்கள் என்பதை நீ கவனி!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“என்னுடைய இக்கடிதத்தைக் கொண்டு சென்று, அவர்கள்பால் போட்டுவிட்டுப் பின்னர் அவர்களை விட்டுப்பின்வாங்கி (இருந்து) அவர்கள் என்ன முடிவுக்கு வருகிறார்கள் என்பதை நீ கவனித்து வா” என்று கூறினார்.
Saheeh International
Take this letter of mine and deliver it to them. Then leave them and see what [answer] they will return."
قَالَتْ یٰۤاَیُّهَا الْمَلَؤُا اِنِّیْۤ اُلْقِیَ اِلَیَّ كِتٰبٌ كَرِیْمٌ ۟
قَالَتْஅவள் கூறினாள்يٰۤاَيُّهَا الْمَلَؤُاபிரமுகர்களே!اِنِّىْۤநிச்சயமாகاُلْقِىَஅனுப்பப்பட்டுள்ளதுاِلَىَّஎன்னிடம்كِتٰبٌஒரு கடிதம்كَرِيْمٌ‏கண்ணியமான
காலத் யா அய்யுஹல் மல'உ இன்னீ உல்கிய இலய்ய கிதாBபுன் கரீம்
முஹம்மது ஜான்
(அவ்வாறே ஹுது ஹுது செய்ததும் அரசி) சொன்னாள்: “பிரமுகர்களே! (மிக்க) கண்ணியமுள்ள ஒரு கடிதம் என்னிடம் போடப்பட்டுள்ளது.”
அப்துல் ஹமீது பாகவி
(அவ்வாறே அப்பறவை அவர்கள் முன் அக்கடிதத்தை எறியவே அதைக் கண்ணுற்ற அவ்வரசி தன் பிரதானிகளை நோக்கி) ‘‘ தலைவர்களே! மிக்க கண்ணியமுள்ள ஒரு கடிதம் என் முன் எறியப்பட்டிருக்கிறது.
IFT
அரசி கூறினாள்: “அரசவைப் பிரமுகர்களே! மிக முக்கியமான கடிதம் ஒன்று என்னிடம் போடப்பட்டிருக்கின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவ்வாறே அப்பறவை செய்தது, அக்கடிதத்தைப் பெற்ற அவ்வரசி) “பிரதானிகளே! மிக்க கண்ணியமுள்ள ஒரு கடிதம் என் முன் போடப்பட்டிருக்கின்றது” என்று அவள் கூறினாள்.
Saheeh International
She said, "O eminent ones, indeed, to me has been delivered a noble letter.
اِنَّهٗ مِنْ سُلَیْمٰنَ وَاِنَّهٗ بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ ۟ۙ
اِنَّهٗநிச்சயமாக அதுمِنْ سُلَيْمٰنَசுலைமானிடமிருந்துوَاِنَّهٗநிச்சயமாக செய்தியாவதுبِسْمِபெயரால்اللّٰهِஅல்லாஹ்வின்الرَّحْمٰنِபேரருளாளன்الرَّحِيْمِۙ‏பேரன்பாளன்
இன்னஹூ மின் ஸுலய்மான வ இன்னஹூ Bபிஸ்மில் லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
முஹம்மது ஜான்
நிச்சயமாக இது ஸுலைமானிடமிருந்து வந்துள்ளது; இன்னும் நிச்சயமாக இது: “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” என்று (துவங்கி) இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
மெய்யாகவே அது ஸுலைமானிடமிருந்து வந்துள்ளது. நிச்சயமாக அ(தன் ஆரம்பத்)தில் ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்' என்றெழுதி,
IFT
நிச்சயமாக அது ஸுலைமானிடமிருந்து வந்துள்ளது. மேலும், அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால் அது தொடங்கப்பட்டுள்ளது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“இது ஸுலைமானிடமிருந்து வந்துள்ளது, இன்னும், நிச்சயமாக அ(தன் ஆரம்பமான)து பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று” (எழுதப்பட்டு) இருக்கிறது.
Saheeh International
Indeed, it is from Solomon, and indeed, it is [i.e., reads]: 'In the name of Allah, the Entirely Merciful, the Especially Merciful,
اَلَّا تَعْلُوْا عَلَیَّ وَاْتُوْنِیْ مُسْلِمِیْنَ ۟۠
اَلَّا تَعْلُوْاநீங்கள் பெருமை காட்டாதீர்கள்!عَلَىَّஎன்னிடம்وَاْتُوْنِىْஎன்னிடம் வந்து விடுங்கள்!مُسْلِمِيْنَ‏பணிந்தவர்களாக
அல்லா தஃலூ 'அலய்ய வா தூனீ முஸ்லிமீன்
முஹம்மது ஜான்
“நீங்கள் என்னிடம் பெருமையடிக்காதீர்கள். (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டவர்களாக என்னிடம் வாருங்கள்” (என்றும் எழுதப்பட்டிருக்கிறது).  
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் (கர்வம் கொண்டு) என்னிடம் பெருமை பாராட்டாதீர்கள். (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டவர்களாக என்னிடம் வாருங்கள்'' (என்றும் எழுதப்பட்டிருக்கிறது) என்று கூறி
IFT
“எனக்கு எதிராக நீங்கள் ஆணவத்துடன் நடந்து கொள்ளாதீர்கள். மேலும், முஸ்லிம்களாய் பணிந்தவர்களாய் என்னிடம் வரவேண்டும்" எனும் வாசகம் அதில் உள்ளது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நீங்கள் என் மீது (எனக்கெதிராக) பெருமை பாராட்டாதீர்கள், (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களாக என்னிடம் வாருங்கள்” என்று(ம் எழுதப்பட்டு இருக்கின்றது (என அவள் கூறினாள்).
Saheeh International
Be not haughty with me but come to me in submission [as Muslims].'"
قَالَتْ یٰۤاَیُّهَا الْمَلَؤُا اَفْتُوْنِیْ فِیْۤ اَمْرِیْ ۚ مَا كُنْتُ قَاطِعَةً اَمْرًا حَتّٰی تَشْهَدُوْنِ ۟
قَالَتْஅவள் கூறினாள்يٰۤاَيُّهَا الْمَلَؤُاபிரமுகர்களே!اَفْتُوْنِىْநீங்கள் எனக்கு ஆலோசனை கூறுங்கள்فِىْۤ اَمْرِىْ‌ۚஎனது காரியத்தில்مَا كُنْتُநான் இல்லைقَاطِعَةًமுடிவு செய்பவளாகاَمْرًاஒரு காரியத்தைحَتّٰىவரைتَشْهَدُوْنِ‏நீங்கள் என்னிடம் ஆஜராகின்ற
காலத் யா அய்யுஹல் மல'உ அFப்தூனீ Fபீ அம்ரீ மா குன்து காதி'அதன் அம்ரன் ஹத்தா தஷ்ஹ்ஹதூன்
முஹம்மது ஜான்
எனவே பிரமுகர்களே! “என்னுடைய (இந்த) விஷயத்தில் ஆலோசனை கூறுவீர்களாக! நீங்கள் என்னிடம் நேரிடையாகக் கருத்துச் சொல்லாதவரை நான் எந்த காரியத்தையும் முடிவு செய்பவளல்ல” என்று கூறினாள்.
அப்துல் ஹமீது பாகவி
(தன் பிரதானிகளை நோக்கி) ‘‘ தலைவர்களே என் இவ்விஷயத்தில் நீங்கள் (உங்கள்) ஆலோசனைகளைக் கூறுங்கள். என் சமூகத்தில் நீங்கள் நேராக வந்து (அபிப்பிராயம்) கூறாதவரை நான் எவ்விஷயத்தையும் முடிவு செய்பவளல்ல'' என்று அவள் கூறினாள்.
IFT
(கடிதத்தைப் படித்துக் காட்டிவிட்டு) அரசி கூறினாள்: “சமுதாயத் தலைவர்களே! என்னுடைய இந்த விவகாரத்தில் எனக்கு ஆலோசனை வழங்குங்கள். நீங்கள் இல்லாமல் எந்த விவகாரத்தையும் நான் முடிவு செய்வதில்லை.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“பிரதானிகளே! என்னுடைய (இவ்) விஷயத்தில் நீங்கள் (உங்கள்) ஆலோசனையைக் கூறுவீர்களாக! எனக்கு நீங்கள் முன்னிலையாகி (அபிப்பிராயம்) கூறாதவரையில், நான் எவ்விஷயத்தையும் முடிவு செய்பவளல்ல” என்று அவள் கூறினாள்.
Saheeh International
She said, "O eminent ones, advise me in my affair. I would not decide a matter until you witness [for] me."
قَالُوْا نَحْنُ اُولُوْا قُوَّةٍ وَّاُولُوْا بَاْسٍ شَدِیْدٍ ۙ۬ وَّالْاَمْرُ اِلَیْكِ فَانْظُرِیْ مَاذَا تَاْمُرِیْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினர்نَحْنُநாங்கள்اُولُوْا قُوَّةٍபலமுடையவர்கள்وَّاُولُوْا بَاْسٍஇன்னும் வலிமை உடையவர்கள்شَدِيْدٍ ۙகடும்وَّالْاَمْرُஇன்னும் முடிவுاِلَيْكِஉன்னிடம்இருக்கிறதுفَانْظُرِىْஆகவே, நீ நன்கு யோசித்துக் கொள்!مَاذَا تَاْمُرِيْنَ‏நீ உத்தரவிடுவதை
காலூ னஹ்னு உலூ குவ்வதி(ன்)வ் வ உலூ Bபா'ஸின் ஷதீத்; வல் அம்ரு இலய்கி Fபன்ளுரீ மாதா தா'முரீன்
முஹம்மது ஜான்
“நாங்கள் பெரும் பலசாலிகளாகவும், கடினமாக போர் செய்யக்கூடியவர்களாகவும் இருக்கிறோம்; (ஆயினும்) முடிவு உங்களைப் பொறுத்தது, என்ன முடிவு எடுக்கிறீர்கள் என்பதை சிந்தித்துக் கொள்ளுங்கள்” என்று அவர்கள் சொன்னார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள் ‘‘ நாங்கள் பலவான்களாகவும், கடுமையாக போர் செய்யக் கூடியவர்களாகவும் இருக்கிறோம். (போர் செய்வதோ, சமாதானம் செய்வதோ அதுபற்றிய) கட்டளை உமது விருப்பத்தைப் பொறுத்திருக்கிறது. ஆகவே, நீர் உத்தரவு செய்வ(திலுள்ள சாதக பாதகத்)தை நன்கு கவனித்துப் பார்'' என்று கூறினார்கள்.
IFT
அவர்கள் பதிலளித்தார்கள்: “நாம் வல்லமை மிக்கவர்களாகவும் கடுமையாகப் போரிடக் கூடியவர்களாகவும் இருக்கின்றோம். இதற்கு மேல் இறுதி முடிவெடுப்பது உங்கள் பொறுப்பு. என்ன ஆணையிடுவது என்பதைத் தாங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்கள் “நாங்கள் பலசாலிகளாகவும், கடுமையாக போர் செய்யக் கூடியவர்களாகவும் இருக்கின்றோம், இன்னும், கட்டளையிடுவது உங்களிடமுள்ளது, ஆகவே, நீங்கள் எதைக் கட்டளையிடுகிறீர்கள் என்பதை நன்கு கவனித்துப் பாருங்கள்” என்று கூறினார்கள்.
Saheeh International
They said, "We are men of strength and of great military might, but the command is yours, so see what you will command."
قَالَتْ اِنَّ الْمُلُوْكَ اِذَا دَخَلُوْا قَرْیَةً اَفْسَدُوْهَا وَجَعَلُوْۤا اَعِزَّةَ اَهْلِهَاۤ اَذِلَّةً ۚ وَكَذٰلِكَ یَفْعَلُوْنَ ۟
قَالَتْஅவள் கூறினாள்اِنَّ الْمُلُوْكَநிச்சயமாகமன்னர்கள்اِذَا دَخَلُوْاநுழைந்து விட்டால்قَرْيَةًஓர் ஊருக்குள்اَفْسَدُوْهَاஅதை சின்னா பின்னப்படுத்தி விடுவார்கள்وَجَعَلُوْۤاஆக்கிவிடுவார்கள்اَعِزَّةَகண்ணியவான்களைاَهْلِهَاۤ اَذِلَّةً  ۚஅந்த ஊர் வாசிகளில் உள்ள/இழிவானவர்களாகوَكَذٰلِكَஅப்படித்தான்يَفْعَلُوْنَ‏செய்வார்கள்
காலத் இன்னல் முலூக இதா தகலூ கர்யதன் அFப்ஸதூஹா வ ஜ'அலூ அ'இZஜ்Zஜத அஹ்லிஹா அதில்லஹ்; வ கதாலிக யFப்'அலூன்
முஹம்மது ஜான்
அவள் கூறினாள்: “அரசர்கள் ஒரு நகரத்துள் (படையெடுத்து) நுழைவார்களானால், நிச்சயமாக அதனை அழித்து விடுகிறார்கள்; அதிலுள்ள கண்ணியமுள்ளவர்களை, சிறுமைப் படுத்தி விடுகிறார்கள்; அவ்வாறு தான் இவர்களும் செய்வார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவள் ‘‘அரசர்கள் ஒரு ஊரில் நுழைந்தால் நிச்சயமாக அதை அழித்துவிடுகின்றனர். மேலும், அங்குள்ள கண்ணியவான்களை கேவலப்பட்டவர்களாக ஆக்கிவிடுகின்றனர். (ஆகவே,) இவர்களும் இவ்வாறே செய்யக்கூடும்.
IFT
அரசி கூறினாள்: “அரசர்கள் ஏதேனும் ஒரு நாட்டில் புகுந்தால் அதனை அழித்துவிடுவார்கள். மேலும், அங்கு கண்ணியத்துடன் வாழ்பவர்களைக் கேவலப்படுத்தி விடுவார்கள். இதைத்தான் அவர்கள் செய்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வள்: “நிச்சயமாக அரசர்கள் எந்த ஒரு ஊரிலும் (படையெடுத்து) நுழைவார்களானால்- அதனைப் பாழ்படுத்தி விடுகின்றனர்; அன்றியும், அங்குள்ள கண்ணியவான்களை (இழிவுபடுத்தி) சிறுமையாளர்களாக ஆக்கிவிடுகின்றனர், இவர்களும் அவ்வாறே செய்வார்கள்” என்று கூறினாள்.
Saheeh International
She said, "Indeed kings - when they enter a city, they ruin it and render the honored of its people humbled. And thus do they do.
وَاِنِّیْ مُرْسِلَةٌ اِلَیْهِمْ بِهَدِیَّةٍ فَنٰظِرَةٌ بِمَ یَرْجِعُ الْمُرْسَلُوْنَ ۟
وَاِنِّىْநிச்சயமாக நான்مُرْسِلَةٌஅனுப்புகிறேன்اِلَيْهِمْஅவர்களிடம்بِهَدِيَّةٍஓர் அன்பளிப்பைفَنٰظِرَةٌۢபார்க்கிறேன்بِمَஎன்ன பதில்يَرْجِعُதிரும்ப கொண்டு வருகிறார்கள்الْمُرْسَلُوْنَ‏தூதர்கள்
வ இன்னீ முர்ஸிலதுன் இலய்ஹிம் Bபிஹதிய்யதின் Fபனாளிரதும் Bபிம யர்ஜி'உல் முர்ஸலூன்
முஹம்மது ஜான்
“ஆகவே, நிச்சயமாக நான் அவர்களுக்கு ஓர் அன்பளிப்பை அனுப்பி, (அதைக் கொண்டு செல்லும்) தூதர்கள் என்ன கொண்டு வருகிறார்கள் என்பதைப் பார்க்கப் போகிறேன்.”
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, நான் அவர்களிடம் (உயர்ந்த பொருள்களைக் கொண்ட) ஒரு காணிக்கையை அனுப்பி, (அதை எடுத்துச் செல்லும்) தூதர்கள் (அவரிடமிருந்து) என்ன பதில் கொண்டு வருகிறார்கள் என்பதை எதிர்பார்ப்பேன்'' என்று கூறினாள். (அவ்வாறே அனுப்பியும் வைத்தாள்.)
IFT
எனவே, அவர்களுக்கு நான் ஓர் அன்பளிப்பை அனுப்பப் போகின்றேன். பின்னர், என்னுடைய தூதுவர்கள் என்ன செய்தியைப் பெற்றுத் திரும்பி வருகின்றார்கள் என்பதைப் பார்க்கலாம்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், “நிச்சயமாக நான் அவர்களிடம் ஓர் அன்பளிப்பை அனுப்பி வைக்கக்கூடியவளாக இருக்கிறேன்; பின்னர், தூதர்கள் என்ன பதில் கொண்டு வருகிறார்கள் என்பதை நான் பார்க்கப் போகிறேன்” (என்றும் கூறினாள்)
Saheeh International
But indeed, I will send to them a gift and see with what [reply] the messengers will return."
فَلَمَّا جَآءَ سُلَیْمٰنَ قَالَ اَتُمِدُّوْنَنِ بِمَالٍ ؗ فَمَاۤ اٰتٰىنِ اللّٰهُ خَیْرٌ مِّمَّاۤ اٰتٰىكُمْ ۚ بَلْ اَنْتُمْ بِهَدِیَّتِكُمْ تَفْرَحُوْنَ ۟
فَلَمَّا جَآءَஅவர் வந்தபோதுسُلَيْمٰنَசுலைமானிடம்قَالَஅவர் கூறினார்اَتُمِدُّوْنَنِநீங்கள் எனக்கு தருகிறீர்களா?بِمَالٍசெல்வத்தைفَمَاۤ اٰتٰٮنَِۧஎனக்கு தந்திருப்பதுاللّٰهُஅல்லாஹ்خَيْرٌமிகச் சிறந்ததுمِّمَّاۤ اٰتٰٮكُمْ‌ۚஅவன் உங்களுக்கு தந்திருப்பதை விடبَلْமாறாகاَنْـتُمْநீங்கள்بِهَدِيَّتِكُمْஉங்கள் அன்பளிப்புகளைக் கொண்டுتَفْرَحُوْنَ‏பெருமிதம் அடைவீர்கள்
Fபலம்மா ஜா'அ ஸுலய்மான கால அதுமித்தூனனி Bபிமாலின் Fபமா ஆதானியல் லாஹு கய்ரும் மிம்ம்மா ஆதாகும் Bபல் அன்தும் Bபிஹதிய்-யதிகும் தFப்ரஹூன்
முஹம்மது ஜான்
அவ்வாறே (தூதர்கள்) ஸுலைமானிடம் வந்தபோது; அவர் சொன்னார்: “நீங்கள் எனக்குப் பொருளைக் கொண்டு உதவி செய்(ய நினைக்)கிறீர்களா? அல்லாஹ் எனக்குக் கொடுத்திருப்பது, உங்களுக்கு அவன் கொடுத்திருப்பதை விட மேலானதாகும்; எனினும், உங்கள் அன்பளிப்பைக் கொண்டு நீங்கள் தான் மகிழ்ச்சி அடைகிறீர்கள்!
அப்துல் ஹமீது பாகவி
அந்தத் தூதர் ஸுலைமானிடம் வரவே (ஸுலைமான் அவரை நோக்கி) ‘‘ நீங்கள் பொருளைக் கொண்டு எனக்கு உதவி செய்யக் கருதுகிறீர்களா? அல்லாஹ் எனக்குக் கொடுத்து இருப்பவை உங்களுக்குக் கொடுத்திருப்பவற்றை விட (அதிகமாகவும்) மேலானதாகவும் இருக்கின்றன. மாறாக, உங்கள் இக்காணிக்கையைக் கொண்டு நீங்களே சந்தோஷமடையுங்கள். (அது எனக்கு வேண்டியதில்லை) என்றும்,
IFT
அ(ரசியின் தூது)வர் ஸுலைமானிடம் வந்ததும் ஸுலைமான் கேட்டார்: “நீங்கள் பொருளால் எனக்கு உதவி புரிந் திட விரும்புகின்றீர்களா? அல்லாஹ் எனக்கு வழங்கியிருப்பது உங்களுக்கு வழங்கியிருப்பதைவிட எவ்வளவோ அதிகமாகும். எனவே, உங்கள் அன்பளிப்பைக் கொண்டு நீங்களே மகிழ்ந்திருங்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் ஸுலைமானிடம் வரவே, “நீங்கள் பொருளைக் கொண்டு எனக்கு உதவி செய்கின்றீர்களா? அல்லாஹ் எனக்குக் கொடுத்திருப்பவைகள் உங்களுக்குக் கொடுத்திருப்பவைகளை விட மிகச் சிறந்ததாகும், மாறாக உங்களுடைய அன்பளிப்பைக் கொண்டு நீங்களே சந்தோஷமடைவீர்கள்” என்று கூறினார்.
Saheeh International
So when they came to Solomon, he said, "Do you provide me with wealth? But what Allah has given me is better than what He has given you. Rather, it is you who rejoice in your gift.
اِرْجِعْ اِلَیْهِمْ فَلَنَاْتِیَنَّهُمْ بِجُنُوْدٍ لَّا قِبَلَ لَهُمْ بِهَا وَلَنُخْرِجَنَّهُمْ مِّنْهَاۤ اَذِلَّةً وَّهُمْ صٰغِرُوْنَ ۟
اِرْجِعْநீ திரும்பிப் போ!اِلَيْهِمْஅவர்களிடம்فَلَنَاْتِيَنَّهُمْநாம் அவர்களிடம் கொண்டு வருவோம்بِجُنُوْدٍஇராணுவங்களைلَّا قِبَلَஅறவே வலிமை இருக்காதுلَهُمْஅவர்களுக்குبِهَاஅவர்களை எதிர்க்கوَلَـنُخْرِجَنَّهُمْநிச்சயமாக அவர்களை நாம் வெளியேற்றுவோம்مِّنْهَاۤஅதிலிருந்துاَذِلَّةًஇழிவானவர்களாகوَّهُمْஅவர்கள்صٰغِرُوْنَ‏சிறுமைப்படுவார்கள்
இர்ஜிஃ இலய்ஹிம் Fபலனாதியன் னஹும் Bபிஜுனூதில் லா கிBபல லஹும் Bபிஹா வ லனுக்ரி ஜன்னஹும் மின்ஹா அதில்லத(ன்)வ் வ ஹும் ஸாகிரூன்
முஹம்மது ஜான்
“அவர்களிடமே திரும்பிச் செல்க; நிச்சயமாக நாம் அவர்களால் எதிர்க்க முடியாத (பலமுள்ள) ஒரு பெரும் படையைக் கொண்டு அவர்களிடம் வருவோம்; நாம் அவர்களைச் சிறுமைப் படுத்தி, அவ்வூரிலிருந்து வெளியேற்றிவிடுவோம், மேலும் அவர்கள் இழிந்தவர்களாவார்கள்” (என்று ஸுலைமான் கூறினார்).
அப்துல் ஹமீது பாகவி
(வந்தவர்களின் தலைவனை நோக்கி) நீ அவர்களிடம் திரும்பச் செல். அவர்களால் எதிர்க்க முடியாததொரு ராணுவத்துடன் நிச்சயமாக நாங்கள் அவர்களிடம் வருவோம். அவர்களை சிறுமைப்பட்டவர்களாக அவ்வூரிலிருந்து துரத்தி விடுவோம்'' என்று (கூறி அனுப்பிவிட்டு,)
IFT
(தூதரே!) உம்மை அனுப்பியவர்களிடம் நீர் திரும்பிச் செல்லும். அவர்களால் எதிர்த்து நிற்க முடியாத அளவுக்குப் பெரும் படைகளைத் திரட்டிக்கொண்டு அவர்களிடம் நாம் திண்ணமாக வரப்போகின்றோம். அவர்கள் கேவலப்பட்டுப் போகும் வகையில் அங்கிருந்து அவர்களை இழிவானவர்களாக வெளியேற்றி விடுவோம்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நீர் அவர்களிடம் திரும்பிச் செல்வீராக! நிச்சயமாக நாங்கள் படைகளுடன் அவர்களிடம் வருவோம், அவர்களுக்கு அதை எதிர்க்க பலம் இல்லை, இன்னும், அவர்கள் சிறுமையடைந்தவர்களாக இருக்கும் நிலையில் கேவலமானவர்களாக அ(வர்களின் நகரத்)திலிருந்து அவர்களை நிச்சயமாக வெளியேற்றிவிடுவோம்” (என்றும் கூறினார்)
Saheeh International
Return to them, for we will surely come to them with soldiers that they will be powerless to encounter, and we will surely expel them therefrom in humiliation, and they will be debased."
قَالَ یٰۤاَیُّهَا الْمَلَؤُا اَیُّكُمْ یَاْتِیْنِیْ بِعَرْشِهَا قَبْلَ اَنْ یَّاْتُوْنِیْ مُسْلِمِیْنَ ۟
قَالَஅவர் கூறினார்يٰۤاَيُّهَا الْمَلَؤُاபிரமுகர்களே!اَيُّكُمْஉங்களில் யார்يَاْتِيْنِىْஎன்னிடம் கொண்டு வருவார்بِعَرْشِهَاஅவளுடைய அரச கட்டிலைقَبْلَமுன்னர்اَنْ يَّاْتُوْنِىْஅவர்கள் என்னிடம் வருவதற்குمُسْلِمِيْنَ‏பணிந்தவர்களாக
கால யா அய்யுஹல் மல'உ அய்யுகும் யா'தீனீ Bபி'அர்ஷிஹா கBப்ல அய் யா'தூனீ முஸ்லிமீன்
முஹம்மது ஜான்
“பிரமுகர்களே! அவர்கள் என்னிடம் வழிபட்டவர்களாக வருமுன், உங்களில் யார் அவளுடைய அரியாசனத்தை என்னிடம் கொண்டுவருபவர்?” என்று (ஸுலைமான் அவர்களிடம்) கேட்டார்.
அப்துல் ஹமீது பாகவி
(ஸுலைமான் தன் மந்திரிகளை நோக்கி) ‘‘ சான்றோர்களே! அவர்கள் கட்டுப்பட்டவர்களாக என்னிடம் வந்து சேருவதற்கு முன்னதாகவே அவளுடைய அரச கட்டிலை என்னிடம் கொண்டு வருபவர் உங்களில் யார்?'' என்று கேட்டார்.
IFT
ஸுலைமான் கேட்டார்: “அவையோரே! அவர்கள் கீழ்ப் படிந்தவர்களாய் என்னிடம் வருமுன் அவளுடைய அரியணையை உங்களில் யார் என்னிடம் கொண்டு வரமுடியும்?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“பிரதானிகளே! அவர்கள் முஸ்லிம்களாக என்னிடம் வந்து சேர்வதற்கு முன்னதாகவே உங்களில் யார் அவருடைய சிம்மாசனத்தை என்னிடம் கொண்டு வருபவர்” என்று (ஸுலைமானாகிய) அவர் கேட்டார்.
Saheeh International
[Solomon] said, "O assembly [of jinn], which of you will bring me her throne before they come to me in submission?"
قَالَ عِفْرِیْتٌ مِّنَ الْجِنِّ اَنَا اٰتِیْكَ بِهٖ قَبْلَ اَنْ تَقُوْمَ مِنْ مَّقَامِكَ ۚ وَاِنِّیْ عَلَیْهِ لَقَوِیٌّ اَمِیْنٌ ۟
قَالَகூறியதுعِفْرِيْتٌசாதுர்யமான ஒன்றுمِّنَ الْجِنِّஜின்களில்اَنَاநான்اٰتِيْكَஉம்மிடம் கொண்டு வருவேன்بِهٖஅதைقَبْلَமுன்னர்اَنْ تَقُوْمَநீர் எழுவதற்குمِنْ مَّقَامِكَ‌ۚஉமது இடத்திலிருந்துوَاِنِّىْநிச்சயமாக நான்عَلَيْهِஅதற்குلَـقَوِىٌّஆற்றல் உள்ளவன்اَمِيْنٌ‏நம்பிக்கைக்குரியவன்
கால 'இFப்ரீதும் மினல் ஜின்னி அன ஆதீக Bபிஹீ கBப்ல அன் தகூம மிம் மகாமிக வ இன்னீ 'அலய்ஹி லகவிய்யுன் அமீன்
முஹம்மது ஜான்
ஜின்களில் (பலம் பொருந்திய ஓர்) இஃப்ரீத் கூறிற்று; நீங்கள் உங்கள் இடத்திலிருந்து எழுந்திருப்பதற்கு முன் அதை நான் உங்களிடம் கொண்டு வந்து விடுவேன்; நிச்சயமாக நான் அதற்கு சக்தியுள்ளவனாகவும், நம்பிக்கைக்கு உரியவனாகவும் இருக்கிறேன்.”
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு ஜின்களிலுள்ள ‘இஃப்ரீத்' (என்னும் ஒரு வீரன்) ‘‘ நீர் இந்தச் சபையை முடித்துக்கொண்டு எழுந்திருப்பதற்கு முன்னதாகவே அதை நான் உம்மிடம் கொண்டு வந்துவிடுவேன். நிச்சயமாக நான் இவ்வாறு செய்ய மிக்க சக்தியும் நம்பிக்கையும் உடையவன்'' என்று கூறினான்.
IFT
பலம் பொருந்திய ஒரு ஜின் கூறியது: “நீங்கள் உங்களுடைய இடத்தைவிட்டு எழுவதற்கு முன் அதை நான் உங்களிடம் கொண்டு வந்துவிடுகின்றேன். நான் அதற்கு வலிமை பெற்றவனாகவும், நம்பிக்கைக்குரியவனாகவும் இருக்கின்றேன்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதற்கு ஜின்களிலுள்ள இஃப்ரீத் (-என்ற மிகப்பலம் பெற்ற ஜின்) “நீங்கள் உங்கள் இடத்திலிருந்து எழுந்திருப்பதற்கு முன் அதனை நான் உங்களிடம் கொண்டு வந்துவிடுவேன், நிச்சயமாக நான் இதற்கு மிக்க சக்தியுடையவன், மிக்க நம்பிக்கையும் உடையவன்” என்று கூறியது.
Saheeh International
A powerful one from among the jinn said, "I will bring it to you before you rise from your place, and indeed, I am for this [task] strong and trustworthy."
قَالَ الَّذِیْ عِنْدَهٗ عِلْمٌ مِّنَ الْكِتٰبِ اَنَا اٰتِیْكَ بِهٖ قَبْلَ اَنْ یَّرْتَدَّ اِلَیْكَ طَرْفُكَ ؕ فَلَمَّا رَاٰهُ مُسْتَقِرًّا عِنْدَهٗ قَالَ هٰذَا مِنْ فَضْلِ رَبِّیْ ۖ۫ لِیَبْلُوَنِیْۤ ءَاَشْكُرُ اَمْ اَكْفُرُ ؕ وَمَنْ شَكَرَ فَاِنَّمَا یَشْكُرُ لِنَفْسِهٖ ۚ وَمَنْ كَفَرَ فَاِنَّ رَبِّیْ غَنِیٌّ كَرِیْمٌ ۟
قَالَஒருவர் கூறினார்الَّذِىْஎவர்عِنْدَهٗதன்னிடம்عِلْمٌஞானம்مِّنَ الْـكِتٰبِவேதத்தின்اَنَاநான்اٰتِيْكَஉம்மிடம் கொண்டு வருவேன்بِهٖஅதைقَبْلَமுன்னர்اَنْ يَّرْتَدَّதிரும்புவதற்குاِلَيْكَஉன் பக்கம்طَرْفُكَ‌ؕஉமது பார்வைفَلَمَّا رَاٰهُஅவர் பார்த்த போதுمُسْتَقِرًّاநிலையாகி விட்டதாகعِنْدَهٗதன்னிடம்قَالَகூறினார்هٰذَا مِنْ فَضْلِஇது/அருளாகும்رَبِّىْ‌ۖஎன் இறைவனின்لِيَبْلُوَنِىْٓஅவன் என்னை சோதிப்பதற்காகءَاَشْكُرُநான் நன்றி செலுத்துகிறேனா?اَمْஅல்லதுاَكْفُرُ‌ؕநன்றி கெடுகிறேனா?وَمَنْயார்شَكَرَநன்றிசெலுத்துகிறாரோفَاِنَّمَا يَشْكُرُஅவர் நன்றி செலுத்துவதெல்லாம்لِنَفْسِهٖ‌ۚஅவருக்குத்தான்وَمَنْயார்كَفَرَநிராகரிப்பாரோفَاِنَّஏனெனில்رَبِّىْஎன் இறைவன்غَنِىٌّமுற்றிலும் தேவை அற்றவன்كَرِيْمٌ‏பெரும் தயாளன்
காலல் லதீ இன்தஹூ 'இல்மும் மினல் கிதாBபி அன ஆதீக Bபிஹீ கBப்ல அய் யர்தத்த இலய்க தர்Fபுக்; Fபலம்மா ர ஆஹு முஸ்தகிர்ரன் 'இன்தஹூ கால ஹாதா மின் Fபள்லி ரBப்Bபீ லி யBப்லுவனீ 'அ-அஷ்குரு அம் அக்Fபுரு வ மன் ஷகர Fப இன்னமா யஷ்குரு லினFப்ஸிஹீ வ மன் கFபர Fப இன்ன ரBப்Bபீ கனிய்யுன் கரீம்
முஹம்மது ஜான்
இறைவேதத்தின் ஞானத்தைப் பெற்றிருந்த ஒருவர்: “உங்களுடைய கண்ணை மூடித்திறப்பதற்குள், அதை உங்களிடம் கொண்டு வந்து விடுகிறேன்” என்று கூறினார்; (அவர் சொன்னவாறே) அது தம்மிடம் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டதும்: “இது என்னுடைய இறைவனின் அருட் கொடையாகும் நான் நன்றியறிதலுடன் இருக்கின்றேனா, அல்லது மாறு செய்கிறேனா என்று (இறைவன்) என்னைச் சோதிப்பதற்காகவும்; எவன் ஒருவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகின்றானோ அவன் நன்றி செலுத்துவது அவனுக்கே (நன்மை)யாவும்; மேலும், எவன் (நன்றி மறந்து) மாறு செய்கிறானோ (அது அவனுக்கே இழப்பாகும்; ஏனெனில்) என் இறைவன், (எவரிடத்தும்) தேவைப் படாதவனாகவும், மிகவும் கண்ணியம் மிக்கவனாகவும் இருக்கின்றான்” என்று (ஸுலைமான்) கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
(எனினும், அவர்களில்) வேத ஞானம் பெற்ற ஒருவர் (இருந்தார். அவர் ஸுலைமான் நபியை நோக்கி) “உமது பார்வை உம்மிடம் திரும்புவதற்கு முன் அதை நான் உம்மிடம் கொண்டு வந்துவிடுவேன்'' என்று கூறினார். (அவ்வாறே கொண்டு வந்து சேர்த்தார்.) அது தன் முன் (கொண்டு வந்து வைக்கப்பட்டு) இருப்பதை (ஸுலைமான்) கண்டதும், ‘‘ இது நான் அவனுக்கு நன்றி செலுத்துகின்றேனா இல்லையா என்று என்னைச் சோதிப்பதற்காக என் இறைவன் எனக்குப் புரிந்த பேரருளாகும். எவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகிறானோ அவன் தனக்கே நன்மை செய்து கொள்கிறான். எவன் நன்றியை நிராகரிக்கிறானோ (அதனால் என் இறைவனுக்கு ஒரு நஷ்டமுமில்லை.) நிச்சயமாக என் இறைவன் (எவருடைய) தேவையற்றவனும், மிக்க கண்ணியமானவனும் ஆவான்'' என்று கூறி (தன் வேலைக்காரர்களை நோக்கி,)
IFT
அவர்களுள் ஓரளவு வேத அறிவைப் பெற்றிருந்த ஒருவர் “நீங்கள் கண்மூடித் திறப்பதற்குள் அதை உங்களிடம் நான் கொண்டு வந்து விடுகின்றேன்” என்று கூறினார். அவ்வாறே அவ்வரியணை தம்மிடத்தில் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டதுமே ஸுலைமான் (உரக்கக்) கூறினார்: “இது என் இறைவனின் அருட்கொடையாகும்; நான் நன்றி செலுத்துகின்றேனா, நன்றி கொல்கின்றேனா என என்னை அவன் சோதிப்பதற்காக! மேலும், யாரேனும் நன்றி செலுத்தினால் அவருடைய நன்றி அவருக்கே நன்மை தரும். தவிர, யாரேனும் நன்றி கொன்றால் திண்ணமாக, என்னுடைய இறைவன் தேவைகள் அற்றவனாகவும், பெரும் கண்ணியமிக்கவனாகவும் இருக்கின்றான்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(எனினும்,) வேதத்திலிருந்து அறிவைத் தன்னிடம் கொண்டிருந்தவரான ஒருவர் “உம்முடைய பார்வை உம் பக்கம் திரும்புமுன் (கண் இமைப்பதற்குள்) அதனை நான் உம்மிடம் கொண்டு வந்துவிடுவேன்” என்று கூறினார், (அவ்வாறே கொண்டுவரப்பட்டு), அது தம் முன் நிலைபெற்றிருப்பதை (ஸுலைமானாகிய) அவர் கண்டபோது, “இது என் இரட்சகனின் பேரருளில் உள்ளதாகும், நான் அவனுக்கு நன்றி செலுத்துகின்றேனா, அல்லது நன்றி கெட்டவனாக இருக்கிறேனா? என்று என்னைச் சோதிப்பதற்காக (இவ்வாறு வழங்கியுள்ளான்.) மேலும், எவர் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துகிறாரோ அவர் நன்றி செலுத்துவதெல்லாம் (அதன் பலன்) அவருக்கே. இன்னும், எவர் (நன்றி செய்யாது) நிராகரிக்கிறாரோ (அது அவருக்கே கேடாகும், காரணம்) நிச்சயமாக என் இரட்சகன் (எவரிடமிருந்தும்) தேவையற்றவன், கண்ணியமுள்ளவன்” என்று கூறினார்.
Saheeh International
Said one who had knowledge from the Scripture, "I will bring it to you before your glance returns to you." And when [Solomon] saw it placed before him, he said, "This is from the favor of my Lord to test me whether I will be grateful or ungrateful. And whoever is grateful - his gratitude is only for [the benefit of] himself. And whoever is ungrateful - then indeed, my Lord is Free of need and Generous."
قَالَ نَكِّرُوْا لَهَا عَرْشَهَا نَنْظُرْ اَتَهْتَدِیْۤ اَمْ تَكُوْنُ مِنَ الَّذِیْنَ لَا یَهْتَدُوْنَ ۟
قَالَஅவர் கூறினார்نَكِّرُوْاநீங்கள் மாற்றி விடுங்கள்لَهَاஅவளுக்குعَرْشَهَاஅவளுடைய அரச கட்டிலைنَـنْظُرْநாம் பார்ப்போம்اَتَهْتَدِىْۤஅவள் அறிந்து கொள்கிறாளா?اَمْஅல்லதுتَكُوْنُஅவள் ஆகிவிடுகிறாளா?مِنَ الَّذِيْنَ لَا يَهْتَدُوْنَ‏அறியாதவர்களில்
கால னக்கிரூ லஹா 'அர்ஷஹா னன்ளுர் அதஹ்ததீ அம் தகூனு மினல் லதீன லா யஹ்ததூன்
முஹம்மது ஜான்
(இன்னும் அவர்) கூறினார்: “(அவள் கண்டு அறிந்து கொள்ள முடியாதபடி) அவளுடைய அரியாசன(த்தின் கோல)த்தை மாற்றி விடுங்கள்; அவள் அதை அறிந்து கொள்கிறாளா, அல்லது அறிந்து கொள்ள முடியாதவர்களில் ஒருத்தியாக இருக்கிறாளா என்பதை நாம் கவனிப்போம்.”
அப்துல் ஹமீது பாகவி
‘‘அவளுடைய அரச கட்டிலை அவளுக்கு மாற்றி (அமைத்து) விடுங்கள். அவள் அதை(த் தனக்குரியதுதான் என்று) அறிந்து கொள்கிறாளா அல்லது அறிந்துகொள்ள முடியாதவளாகி விடுகிறாளா?'' என்று பார்ப்போம் எனக் கூறினார்.
IFT
ஸுலைமான் கூறினார்: “அரசியின் அரியணையை அடையாளம் காண முடியாத வகையில் அவள்முன் வைத்து விடுங்கள். உண்மை நிலையைத் தெரிந்து கொள்கின்றாளா, அல்லது சரியான வழியை அறிந்து கொள்ளாதவர்களுள் ஒருத்தியாய் இருக்கின்றாளா என்று நாம் பார்த்துவிடுவோம்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அவளுடைய சிம்மாசனத்தை (அதன் அமைப்பை) மாற்றி விடுங்கள், அவள் (அதனை பற்றி) அறிந்து கொள்கிறாளா? அல்லது அறிந்துகொள்ள முடியாதவர்களில் (ஒருத்தியாக) இருக்கிறாளா? என்று பார்ப்போம்” என்று (ஸுலைமானாகிய) அவர் கூறினார்.
Saheeh International
He said, "Disguise for her her throne; we will see whether she will be guided [to truth] or will be of those who is not guided."
فَلَمَّا جَآءَتْ قِیْلَ اَهٰكَذَا عَرْشُكِ ؕ قَالَتْ كَاَنَّهٗ هُوَ ۚ وَاُوْتِیْنَا الْعِلْمَ مِنْ قَبْلِهَا وَكُنَّا مُسْلِمِیْنَ ۟
فَلَمَّا جَآءَتْஅவள் வந்தபோது,قِيْلَகேட்கப்பட்டதுاَهٰكَذَاஇது போன்றாعَرْشُكِ‌ؕஉனது அரச கட்டில்قَالَتْஅவள் கூறினாள்كَاَنَّهٗஅதைப் போன்றுதான்هُوَ‌ۚஇதுوَاُوْتِيْنَاநாம் கொடுக்கப்பட்டோம்الْعِلْمَஅறிவுمِنْ قَبْلِهَاஇவளுக்கு முன்னரேوَ كُنَّاஇன்னும் இருக்கிறோம்مُسْلِمِيْنَ‏முஸ்லிம்களாக
Fபலம்மா ஜா'அத் கீல அஹாகத 'அர்ஷுகி காலத் க'அன்னஹூ ஹூ; வ ஊதீனல் 'இல்ம மின் கBப்லிஹா வ குன்னா முஸ்லிமீன்
முஹம்மது ஜான்
ஆகவே, அவள் வந்த பொழுது, “உன்னுடைய அரியாசனம் இது போன்றதா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவள்: “நிச்சயமாக இது அதைப் போலவே இருக்கிறது” என்று கூறினாள்; இந்தப் பெண்மணிக்கு முன்பே நாங்கள் ஞானம் கொடுக்கப்பட்டு விட்டோம், நாங்கள் முஸ்லிம்களாகவும் இருக்கிறோம் (என்று ஸுலைமான் கூறினார்).
அப்துல் ஹமீது பாகவி
அவள் வந்து சேரவே (அவளை நோக்கி) ‘‘ உனது அரச கட்டில் இவ்வாறுதானா இருக்கும்?'' என்று கேட்கப்பட்டதற்கு அவள் ‘‘ இது முற்றிலும் அதைப் போலவே இருக்கிறது. இதற்கு முன்னதாகவே (உமது மேன்மையைப் பற்றிய) விஷயம் எங்களுக்கு அறிவிக்கப்பட்டு விட்டது. நாங்கள் முற்றிலும் கட்டுப்பட்டே வந்திருக்கிறோம்'' என்றாள்.
IFT
அரசி வருகை தந்ததும் ‘உம்முடைய அரியணை இப்படித்தான் உள்ளதா?’ என்று அவளிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவள் கூறினாள்: “இதுவோ, அதைப் போலவே இருக்கின்றது. நாங்கள் முன்பே அறிந்திருந்தோம். சிரம் தாழ்த்தி கீழ்ப்படிந்தவர்களாய் இருந்தோம் (அல்லது முஸ்லிம்களாகி விட்டிருந்தோம்.)”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவள் வந்த பொழுது (அவளிடம்,) “உன்னுடைய சிம்மாசனம் இவ்வாறுதானா?” என்று கேட்கப்பட்டது, அ(தற்க)வள் “நிச்சயமாக இது அதைப்போலவே இருக்கின்றது” என்று கூறினாள், இதற்கு முன்னதாகவே (உங்களைப்பற்றிய) அறிவை நாம் கொடுக்கப்பட்டிருந்தோம், நாங்கள் முற்றிலும் (அல்லாஹ்வுக்கு) கீழ்ப்படிந்தவர்களாகவும் இருக்கிறோம்” (என்று ஸுலைமான் கூறினார்).
Saheeh International
So when she arrived, it was said [to her], "Is your throne like this?" She said, "[It is] as though it was it." [Solomon said], "And we were given knowledge before her, and we have been Muslims [in submission to Allah].
وَصَدَّهَا مَا كَانَتْ تَّعْبُدُ مِنْ دُوْنِ اللّٰهِ ؕ اِنَّهَا كَانَتْ مِنْ قَوْمٍ كٰفِرِیْنَ ۟
وَصَدَّهَاஅவளைத் தடுத்து விட்டதுمَاஎதுكَانَتْஇருந்தாள்تَّعْبُدُஅவள் வணங்கிக் கொண்டுمِنْ دُوْنِ اللّٰهِ‌ؕஅல்லாஹ்வையன்றிاِنَّهَاநிச்சயமாக, அவள்كَانَتْஇருந்தாள்مِنْ قَوْمٍமக்களில்كٰفِرِيْنَ‏நிராகரிக்கின்ற
வ ஸத்தஹா மா கானத் தஃBபுது மின் தூனில் லாஹி இன்னஹா கானத் மின் கவ்மின் காFபிரீன்
முஹம்மது ஜான்
அல்லாஹ்வையன்றி (மற்றவர்களை) அவள் வணங்கிக் கொண்டிருந்ததுதான் அவளைத் தடுத்துக் கொண்டிருந்தது நிச்சயமாக அவள் காஃபிர்களின் சமூகத்திலுள்ளவளாக இருந்தாள்.
அப்துல் ஹமீது பாகவி
இதுவரை (நம்பிக்கை கொள்ளாது) அவளைத் தடுத்துக் கொண்டிருந்ததெல்லாம் அல்லாஹ்வை அன்றி அவள் வணங்கிக் கொண்டிருந்த (பொய்யான) தெய்வங்கள்தான். ஏனென்றால், நிச்சயமாக அவள் அல்லாஹ்வை நிராகரிக்கும் மக்களில் உள்ளவளாக இருந்தாள்.
IFT
அல்லாஹ்வை விட்டுவிட்டு அவள் எந்த தெய்வங்களை வணங்கிக் கொண்டிருந்தாளோ அந்த வணக்கம்தான் (நம்பிக்கை கொள்ளவிடாமல்) அவளைத் தடுத்துவிட்டிருந்தது. ஏனெனில், அவள் நிராகரிக்கக்கூடிய ஒரு சமூகத்தைச் சேர்ந்தவளாய் இருந்தாள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ்வையன்றி அவள் (மற்றவைகளை) வணங்கிக் கொண்டிருந்தது அவளை (விசுவாசங்கொள்வதிலிருந்து) தடுத்துவிட்டது, (ஏனென்றால்,) நிச்சயமாக அவள் (அல்லாஹ்வை) நிராகரிப்பவர்களின் சமூகத்தாரில் உள்ளவளாக இருந்தாள்.
Saheeh International
And that which she was worshipping other than Allah had averted her [from submission to Him]. Indeed, she was from a disbelieving people."
قِیْلَ لَهَا ادْخُلِی الصَّرْحَ ۚ فَلَمَّا رَاَتْهُ حَسِبَتْهُ لُجَّةً وَّكَشَفَتْ عَنْ سَاقَیْهَا ؕ قَالَ اِنَّهٗ صَرْحٌ مُّمَرَّدٌ مِّنْ قَوَارِیْرَ ؕ۬ قَالَتْ رَبِّ اِنِّیْ ظَلَمْتُ نَفْسِیْ وَاَسْلَمْتُ مَعَ سُلَیْمٰنَ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَ ۟۠
قِيْلَகூறப்பட்டதுلَهَاஅவளுக்குادْخُلِىநீ நுழை!الصَّرْحَ‌ ۚமாளிகையில்فَلَمَّا رَاَتْهُஅவள் அதைப் பார்த்த போதுحَسِبَـتْهُஅவள் அதை கருதினாள்لُـجَّةًஅலை அடிக்கும் நீராகوَّكَشَفَتْஅகற்றினாள்عَنْ سَاقَيْهَا ؕதன் இரு கெண்டைக் கால்களை விட்டும்قَالَகூறினார்اِنَّهٗநிச்சயமாக இதுصَرْحٌமாளிகைمُّمَرَّدٌசமப்படுத்தப்பட்டதுمِّنْ قَوَارِيْرَ ۙகண்ணாடிகளால்‌قَالَتْஅவள் கூறினாள்رَبِّஎன் இறைவா!اِنِّىْநிச்சயமாக நான்ظَلَمْتُஅநீதி செய்து கொண்டேன்نَـفْسِىْஎனக்கேوَ اَسْلَمْتُநானும் முஸ்லிமாகி விட்டேன்مَعَ سُلَيْمٰنَசுலைமானுடன்لِلّٰهِஅல்லாஹ்விற்குرَبِّஇறைவனானالْعٰلَمِيْنَ‏அகிலங்களின்
கீல லஹத் குலிஸ் ஸர்ஹ Fபலம்மா ர அத் ஹு ஹஸிBபத் ஹு லுஜ்ஜத(ன்)வ் வ கஷFபத் 'அன் ஸாகய்ஹா; கால இன்னஹூ ஸர்ஹும் முமர்ரதும் மின் கவாரீர்; காலத் ரBப்Bபி இன்னீ ளலம்து னFப்ஸீ வ அஸ்லம்து ம'அ ஸுலய்மான லில்லாஹி ரBப்Bபில் 'ஆலமீன்
முஹம்மது ஜான்
அவளிடம்: “இந்த மாளிகையில் பிரவேசிப்பீராக!” என்று சொல்லப்பட்டது; அப்போது அவள் (அம் மாளிகையின் தரையைப் பார்த்து) அதைத் தண்ணீர்த் தடாகம் என்று எண்ணிவிட்டாள்; எனவே (தன் ஆடை நனைந்து போகாமலிருக்க அதைத்) தன் இரு கெண்டைக் கால்களுக்கும் மேல் உயர்த்தினாள்; (இதைக் கண்ணுற்ற ஸுலைமான்), “அது நிச்சயமாகப் பளிங்குகளால் பளபளப்பாகக் கட்டப்பட்ட மாளிகைதான்!” என்று கூறினார். (அதற்கு அவள்) “இறைவனே! நிச்சயமாக, எனக்கு நானே அநியாயம் செய்து கொண்டேன்; அகிலங்களுக்கெல்லாம் இறைவனான அல்லாஹ்வுக்கு, ஸுலைமானுடன் நானும் முற்றிலும் வழிபட்டு) முஸ்லிமாகிறேன்” எனக் கூறினாள்.  
அப்துல் ஹமீது பாகவி
பின்னர் ‘‘ இம்மாளிகையில் நுழை'' என்று அவளுக்குக் கூறப்பட்டது. அவள் அதைக் கண்டு (அதன் தரையில் பதிக்கப்பட்டிருந்த பளிங்கு கற்களை) தண்ணீர் என்று எண்ணி ஆடையை (அது நனைந்து போகாதிருக்க) இரு கெண்டைக்கால்களில் இருந்து உயர்த்தினாள். அதற்கு (ஸுலைமான்) ‘‘ நிச்சயமாக அது (தண்ணீரல்ல) பளிங்கு கற்கள் பதிக்கப்பட்ட மாளிகைதான்'' என்று கூறினார். அதற்கவள் ‘‘ என் இறைவனே! நிச்சயமாக நானே எனக்குத் தீங்கிழைத்துக் கொண்டிருந்தேன். உலகத்தாரின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு ஸுலைமானுடன் நானும் முற்றிலும் கட்டுப்படுகிறேன்'' என்று கூறினாள்.
IFT
“மாளிகையினுள் நுழைவீராக!” என்று அவளிடம் கூறப்பட்டது. அதனைப் பார்த்தபோது தண்ணீர்த் தடாகம் என்று கருதிக் கொண்டாள். (இறங்குவதற்காகத்) தன் உடையை கெண்டைக்கால்களுக்கு மேல் உயர்த்தினாள். ஸுலைமான் கூறினார்: “இது பளபளக்கும் கண்ணாடி மாளிகையின் தரையாகும்!” அதற்கு அவள் கூறினாள்: “என் இறைவனே! (இன்று வரை) எனக்கு நானே கொடுமை புரிந்து கொண்டிருந்தேன். இனி நான் ஸுலைமானுடன் சேர்ந்து அகிலமனைத்தின் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கு அடிபணிந்து வாழ ஏற்றுக் கொள்கின்றேன்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(பின்னர்) அவளிடம், “இம்மாளிகையில் பிரவேசிப்பாயாக!” எனக் கூறப்பட்டது, அவள் அதைப்பார்த்தபோது தண்ணீர் தடாகம் என்றெண்ணிவிட்டாள்; (நனைந்து போகாதிருக்க தன் ஆடையை) தனது, இரு கெண்டைக்கால்களுக்கு மேல் உயர்த்தினாள்; (இதைக் கண்ட ஸுலைமான், “அது, தண்ணீரல்ல! நிச்சயமாக இது பளிங்குகளால் பளபளப்பாக்கப்பட்ட மாளிகை” என்று கூறினார். அ(தற்க)வள், என் இரட்சகனே! நிச்சயமாக நான் எனக்கே அநியாயம் செய்து விட்டேன்; அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கு, ஸுலைமானுடன் நானும் முற்றிலும் கீழ்ப்படிந்து (இஸ்லாமாகி) விட்டேன்” என்று கூறினாள்.
Saheeh International
She was told, "Enter the palace." But when she saw it, she thought it was a body of water and uncovered her shins [to wade through]. He said, "Indeed, it is a palace [whose floor is] made smooth with glass." She said, "My Lord, indeed I have wronged myself, and I submit with Solomon to Allah, Lord of the worlds."
وَلَقَدْ اَرْسَلْنَاۤ اِلٰی ثَمُوْدَ اَخَاهُمْ صٰلِحًا اَنِ اعْبُدُوا اللّٰهَ فَاِذَا هُمْ فَرِیْقٰنِ یَخْتَصِمُوْنَ ۟
وَلَقَدْதிட்டவட்டமாகاَرْسَلْنَاۤநாம் அனுப்பினோம்اِلٰى ثَمُوْدَஸமூது (மக்களு)க்குاَخَاசகோதரர்هُمْஅவருடையصٰلِحًاஸாலிஹைاَنِ اعْبُدُوْاநீங்கள்வணங்குங்கள்اللّٰهَஅல்லாஹ்வைفَاِذَا هُمْஆனால், அவர்கள் அப்போதுفَرِيْقٰنِஇரண்டு பிரிவுகளாகيَخْتَصِمُوْنَ‏தங்களுக்குள் தர்க்கித்துக் கொள்கின்றனர்
வ லகத் அர்ஸல்னா இலா தமூத அகாஹும் ஸாலிஹன் அனிஃBபுதுல் லாஹ Fப இதா ஹும் Fபரீகானி யக்தஸிமூன்
முஹம்மது ஜான்
தவிர, நாம் நிச்சயமாக ஸமூது சமூகத்தாரிடம், அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை: “நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள்” (என்று போதிக்குமாறு) அனுப்பினோம்; ஆனால் அவர்கள் இரு பிரிவினராகப் பிரிந்து தம்மிடையே சச்சரவு செய்து கொள்ளலானார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நாம் ஸமூது என்னும் மக்களிடம் அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை அனுப்பி வைத்தோம். அவர், (அவர்களை நோக்கி) ‘‘ நீங்கள் அல்லாஹ் ஒருவனை வணங்குங்கள்'' என்று கூறினார். அச்சமயம் அவர்கள் இரு பிரிவினர்களாகி(த் தங்களுக்குள்) தர்க்கம் செய்துகொண்டார்கள்.
IFT
மேலும், நாம் ஸமூத் சமூகத்தாரிடம் அவர்களின் சகோதரர் ஸாலிஹை “அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள்” (என்னும் செய்தியுடன் தூதராக) அனுப்பினோம். அப்போது அவர்கள் இரு குழுவினராய்ப் பிரிந்து தர்க்கம் புரியத் தொடங்கிவிட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நிச்சயமாக நாம் ஸமூது (கூட்டத்தார்)பால் அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை அனுப்பிவைத்தோம், அவர், (அவர்களிடம்) “நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள்” (என்று கூறினார்) அது சமயம் அவர்கள் இரு பிரிவினராகப் பிரிந்து (தங்களுக்குள்) தர்க்கம் செய்து கொள்ளலாயினர்.
Saheeh International
And We had certainly sent to Thamūd their brother Ṣalih, [saying], "Worship Allah," and at once they were two parties conflicting.
قَالَ یٰقَوْمِ لِمَ تَسْتَعْجِلُوْنَ بِالسَّیِّئَةِ قَبْلَ الْحَسَنَةِ ۚ لَوْلَا تَسْتَغْفِرُوْنَ اللّٰهَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ ۟
قَالَஅவர் கூறினார்يٰقَوْمِஎன் மக்களே!لِمَ تَسْتَعْجِلُوْنَஏன் அவசரப்படுகிறீர்கள்?بِالسَّيِّئَةِதீமையைقَبْلَ الْحَسَنَةِ‌ۚநன்மைக்குமுன்னதாகلَوْلَا تَسْتَغْفِرُوْنَநீங்கள் பாவமன்னிப்புத் தேடமாட்டீர்களா?اللّٰهَஅல்லாஹ்விடம்لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ‏நீங்கள் கருணை காட்டப்படுவீர்கள்
கால யா கவ்மி லிம தஸ்தஃஜிலூன Bபிஸ்ஸய்யி'அதி கBப்லல் ஹஸனதி லவ் லா தஸ் தக்Fபிரூனல் லாஹ ல'அல்லகும் துர்ஹமூன்
முஹம்மது ஜான்
(அப்போது அவர்:) “என்னுடைய சமூகத்தாரே! நன்மைக்கு முன்னால், தீமைக்காக நீங்கள் ஏன் அவசரப்படுகிறீர்கள், நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு அல்லாஹ்விடம் தவ்பா (செய்து மன்னிப்புக்) கேட்கமாட்டீர்களா?” எனக் கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
(அதற்கு ஸாலிஹ்) ‘‘ என் மக்களே! நீங்கள் ஏன் அவசரப்பட்டு நன்மைக்கு முன்னதாகவே தண்டனையைத் தேடிக்கொள்கிறீர்கள்? அல்லாஹ்விடத்தில் நீங்கள் மன்னிப்புக் கோர வேண்டாமா? நீங்கள் கருணை செய்யப்படுவீர்களே!'' என்று கூறினார்.
IFT
ஸாலிஹ் கூறினார்: “என் சமூகத்தினரே! நன்மை வருமுன் தீமைக்காக ஏன் அவசரப்படுகின்றீர்கள்? நீங்கள் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரக்கூடாதா? உங்கள் மீது கருணை பொழியப்படக்கூடுமே!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“என்னுடைய சமூகத்தாரே! நன்மைக்கு முன்னதாகத் தீமையைக் கொண்டு நீங்கள் ஏன் அவசரப்படுகிறீர்கள்? நீங்கள் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோர வேண்டாமா? (அதன் மூலம்) நீங்கள் கிருபை செய்யப்பபடுவீர்கள்” என்று (ஸாலிஹாகிய) அவர் கூறினார்.
Saheeh International
He said, "O my people, why are you impatient for evil before [i.e., instead of] good? Why do you not seek forgiveness of Allah that you may receive mercy?"
قَالُوا اطَّیَّرْنَا بِكَ وَبِمَنْ مَّعَكَ ؕ قَالَ طٰٓىِٕرُكُمْ عِنْدَ اللّٰهِ بَلْ اَنْتُمْ قَوْمٌ تُفْتَنُوْنَ ۟
قَالُواஅவர்கள் கூறினர்اطَّيَّرْنَاநாங்கள் துற்சகுணம் அடைந்தோம்بِكَஉம்மாலும்وَبِمَنْ مَّعَكَ‌ ؕஇன்னும் உம்முடன் உள்ளவர்களாலும்قَالَஅவர் கூறினார்طٰٓٮِٕرُكُمْமாறாக உங்கள் துன்பத்தின் காரணம்عِنْدَ اللّٰهِ‌அல்லாஹ்விடம்தான் இருக்கிறதுبَلْமாறாகاَنْـتُمْநீங்கள்قَوْمٌமக்கள்تُفْتَـنُوْنَ‏சோதிக்கப்படுகின்ற
காலுத் தய்யர்னா Bபிக வ Bபிமம் ம'அக்; கால தா'இருகும் 'இன்தல் லாஹி Bபல் அன்தும் கவ்முன் துFப்தனூன்
முஹம்மது ஜான்
அதற்கவர்கள்: “உம்மையும், உம்முடன் இருப்பவர்களையும் நாங்கள் துர்ச்சகுணமாகக் காண்கிறோம்” என்று சொன்னார்கள்; அவர் கூறினார்: “உங்கள் துர்ச்சகுணம் அல்லாஹ்விடம் இருக்கிறது; எனினும், நீங்கள் சோதனைக்குள்ளாக்கப்படும் சமூகத்தாராக இருக்கிறீர்கள்.”
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள் ‘‘ உம்மையும் உம்முடன் இருப்பவர்களையும் நாங்கள் அபசகுணமாக எண்ணுகிறோம்'' என்று கூறினார்கள். அதற்கவர் ‘‘ அல்லாஹ்விடமிருந்துதான் உங்கள் துர்ச்சகுனம் வந்தது. நீங்கள் (அதிசீக்கிரத்தில் அல்லாஹ்வுடைய) சோதனைக்குள்ளாக வேண்டிய மக்கள்'' என்று கூறினார்.
IFT
அதற்கவர்கள், “நாங்கள் உம்மையும் உம்முடன் இருப்பவர்களையும் துர்ச் சகுனமாகக் கருதுகின்றோம்” என்றார்கள். ஸாலிஹ் பதிலளித்தார்: “உங்களின் (நல்ல, கெட்ட) சகுனம் பற்றிய விஷயம் அல்லாஹ்விடம் உள்ளது. உண்மை யாதெனில், நீங்கள் சோதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்கள், “உம்மையும், உம்முடன் இருப்பவர்களையும் நாங்கள் துர்ச்சகுனமாகக் கருதுகிறோம்” என்று கூறினார்கள், அதற்கவர், “உங்கள் துர்ச்சகுனம் (அதன் காரணம்) அல்லாஹ்விடம் இருக்கிறது, மாறாக, நீங்கள் (அல்லாஹ்வினால்) சோதனைக்குள்ளாக்கப்படும் சமூகத்தாராக இருக்கின்றீர்கள்” என்று கூறினார்.
Saheeh International
They said, "We consider you a bad omen, you and those with you." He said, "Your omen [i.e., fate] is with Allah. Rather, you are a people being tested."
وَكَانَ فِی الْمَدِیْنَةِ تِسْعَةُ رَهْطٍ یُّفْسِدُوْنَ فِی الْاَرْضِ وَلَا یُصْلِحُوْنَ ۟
وَكَانَஇருந்தனர்فِى الْمَدِيْنَةِஅப்பட்டணத்தில்تِسْعَةُஒன்பதுرَهْطٍபேர்يُّفْسِدُوْنَஅவர்கள் குழப்பம் செய்தனர்فِى الْاَرْضِபூமியில்وَلَا يُصْلِحُوْنَ‏சீர்திருத்தம் செய்யவில்லை
வ கான Fபில் மதீனதி திஸ்'அது ரஹ்தி(ன்)ய் யுFப்ஸிதூன Fபில் அர்ளி வலா யுஸ்லிஹூன்
முஹம்மது ஜான்
இன்னும், அந்நகரில் ஒன்பது மனிதர்கள் இருந்தார்கள்; அவர்கள் நன்மை எதுவும் செய்யாது பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிகிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவ்வூரில் (விஷமிகளுக்குத் தலைவர்களாக) ஒன்பது மனிதர்கள் இருந்தார்கள். அவர்கள் நன்மை செய்யாது அவ்வூரிலும் (மற்ற சுற்றுப்புறங்களிலும்) விஷமம் செய்து கொண்டே திரிந்தார்கள்.
IFT
அந்நகரில் ஒன்பது கலகத் தலைவர்கள் இருந்தனர். அவர்கள் நாட்டில் குழப்பத்தைப் பரப்பிக்கொண்டும், மேலும், எவ்விதச் சீர்திருத்தத்தை செய்யாமலும் இருந்தனர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஸாலிஹ் நபி வாழ்ந்து வந்த) அந்நகரில், ஒன்பது மனிதர்கள் இருந்தார்கள், அவர்கள் பூமியில் குழப்பம் செய்பவர்களாக, மற்றும் சீர்திருத்தம் செய்யாதவர்களாக இருந்தனர்.
Saheeh International
And there were in the city nine family heads causing corruption in the land and not amending [its affairs].
قَالُوْا تَقَاسَمُوْا بِاللّٰهِ لَنُبَیِّتَنَّهٗ وَاَهْلَهٗ ثُمَّ لَنَقُوْلَنَّ لِوَلِیِّهٖ مَا شَهِدْنَا مَهْلِكَ اَهْلِهٖ وَاِنَّا لَصٰدِقُوْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினர்تَقَاسَمُوْاதங்களுக்குள் சத்தியம் செய்தனர்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுلَـنُبَيِّتَـنَّهٗநிச்சயமாக நாங்கள் அவரை கொன்று விடுவோம்وَ اَهْلَهٗஅவருடைய குடும்பத்தையும்ثُمَّ لَـنَقُوْلَنَّபிறகு கூறுவோம்لِوَلِيِّهٖஅவருடைய பொறுப்பாளருக்குمَا شَهِدْنَاநாம்ஆஜராகவில்லைمَهْلِكَ اَهْلِهٖஅவ(ரும் அவ)ரது குடும்பம் கொல்லப்பட்ட இடத்திற்குوَاِنَّا لَصٰدِقُوْنَ‏நாங்கள் உண்மையாளர்கள்
காலூ தகாஸமூ Bபில்லாஹி லனுBபய்யிதன்னஹூ வ அஹ்லஹூ தும்மா லனகூலன லிவலிய் யிஹீ மா ஷஹித்னா மஹ்லிக அஹ்லிஹீ வ இன்னா லஸாதிகூன்
முஹம்மது ஜான்
அவர்கள்: “நாம் அவரையும் (ஸாலிஹையும்), அவருடைய குடும்பத்தாரையும் இரவோடிரவாக திட்டமாக அழித்து விடுவோம்; (இதனை யாரிடமும் சொல்வதில்லை) என்று நாம் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கொள்வோமாக!” பிறகு அவருடைய வாரிஸ்தாரிடம் (அவர்கள் பழிக்குப்பழி வாங்க வந்தால்) “உங்கள் குடும்பத்தார் அழிக்கப்பட்டதை நாங்கள் காணவேயில்லை; நிச்சயமாக நாங்கள் உண்மையாளர்கள்” என்று திட்டமாகக் கூறிவிடலாம் (எனச் சதி செய்தார்கள்).
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் ஸாலிஹையும் அவருடைய குடும்பத்தையும் இரவோடு இரவாக நாம் அழித்து விடுவோம். (இதை ஒருவரிடமும் கூறுவதில்லை என்று) நாம் நமக்குள்ளாக அல்லாஹ் மீது சத்தியம் செய்துகொண்டு அவருடைய சொந்தக்காரர்களிடம், ‘‘ அவர் வெட்டுப்பட்ட இடத்திற்கு நாங்கள் வரவேயில்லை. நிச்சயமாக நாங்கள் உண்மையே சொல்லுகிறோம்'' என்று நாம் கூறிவிடலாம் என்று கூறிக் கொண்டார்கள்.
IFT
அவர்கள் தமக்கிடையே கூறினார்கள்: “நீங்கள் இறைவன் மீது சத்தியம் செய்து சபதம் எடுத்துக் கொள்ளுங்கள் நாம் ஸாலிஹ் மீதும் அவருடைய குடும்பத்தார் மீதும் இரவில் தாக்குதல் நடத்துவோம் என்று! பிறகு அவருடைய பாதுகாவலரிடம் கூறிவிடுவோம் ஸாலிஹுடைய குடும்பம் கொல்லப்பட்ட சமயத்தில் நாங்கள் அங்கு இருக்கவில்லை. நாங்கள் உண்மைதான் கூறுகின்றோம்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(குழப்பக்காரர்களான அவர்கள்) நிச்சயமாக (ஸாலிஹ் நபியாகிய) அவரையும், அவருடைய குடும்பத்தினரையும் நாம் இரவோடு இரவாக அழித்துவிடுவோம் என்று நீங்கள் அல்லாஹ்வைக் கொண்டு சத்தியம் செய்து கொள்ளுங்கள், பின்னர் அவர் குடும்பத்தினர் அழிக்கப்பட்ட இடத்திற்கு நாங்கள் வரவேயில்லை, நிச்சயமாக நாங்கள் உண்மையே சொல்கிறோம் என்று அவருடைய பாதுகாப்பாளரிடம் திட்டமாகக் கூறிக்கொள்வோம்” என்று (இவர்களுக்குள்) கூறினார்கள்.
Saheeh International
They said, "Take a mutual oath by Allah that we will kill him by night, he and his family. Then we will say to his executor, 'We did not witness the destruction of his family, and indeed, we are truthful.'"
وَمَكَرُوْا مَكْرًا وَّمَكَرْنَا مَكْرًا وَّهُمْ لَا یَشْعُرُوْنَ ۟
وَمَكَرُوْا مَكْرًاஅவர்கள் ஒரு சூழ்ச்சி செய்தனர்وَّمَكَرْنَا مَكْرًاநாம் ஒரு சூழ்ச்சி செய்தோம்وَّهُمْஅவர்கள்لَا يَشْعُرُوْنَ‏உணர மாட்டார்கள்
வ மகரூ மக்ர(ன்)வ் வ மகர்னா மக்ர(ன்)வ் வ ஹும் லா யஷ்'உரூன்
முஹம்மது ஜான்
(இவ்வாறு) அவர்கள் சூழ்ச்சி செய்தார்கள்; ஆனால் அவர்கள் அறியாதவாறு நாமும் சூழ்ச்சி செய்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
(இவ்வாறு) அவர்கள் ஒரு சூழ்ச்சி செய்தார்கள். நாமும் ஒரு சூழ்ச்சி செய்தோம். அவர்கள் அதை உணர்ந்துகொள்ள முடியவில்லை.
IFT
அவர்கள் செய்தது இந்த சூழ்ச்சிதான்! பிறகு, அவர்கள் அறியாத வகையில் நாம் வேறொரு சூழ்ச்சியைச் செய்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், (இதுபோன்றே) அவர்கள் ஒரு சூழ்ச்சி செய்தார்கள், நாமும் நம் தண்டனையைக் கொண்டு அவர்களின் சூழ்ச்சியை முறியடிக்க சூழ்ச்சி செய்தோம், அவர்களோ (அதனை) உணர்ந்து கொள்ளவில்லை.
Saheeh International
And they planned a plan, and We planned a plan, while they perceived not.
فَانْظُرْ كَیْفَ كَانَ عَاقِبَةُ مَكْرِهِمْ ۙ اَنَّا دَمَّرْنٰهُمْ وَقَوْمَهُمْ اَجْمَعِیْنَ ۟
فَانْظُرْநீர் பார்ப்பீராக!كَيْفَஎப்படி என்றுكَانَஆகியதுعَاقِبَةُமுடிவுمَكْرِهِمْۙஅவர்கள் சூழ்ச்சியின்اَنَّاநிச்சயமாக நாம்دَمَّرْنٰهُمْஅவர்களை அழித்து விட்டோம்وَقَوْمَهُمْஅவர்களின் மக்கள்اَجْمَعِيْنَ‏அனைவரையும்
Fபன்ளுர் கய்Fப கான 'ஆகிBபது மக்ரிஹிம் அன்னா தம்மர் னாஹும் வ கவ்மஹும் அஜ்ம'ஈன்
முஹம்மது ஜான்
ஆகவே, அவர்களுடைய சூழ்ச்சியின் முடிவு என்ன ஆயிற்று என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக! (முடிவு) அவர்களையும், அவர்களுடைய சமூகத்தார் எல்லோரையும் நாம் அழித்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, அவர்களுடைய சூழ்ச்சியின் முடிவு எவ்வாறு ஆயிற்று என்பதை (நபியே!) நீர் கவனித்துப் பார்ப்பீராக. நிச்சயமாக நாம் அவர்களையும் அவர்களுடைய மக்கள் அனைவரையும் அழித்துவிட்டோம்.
IFT
அவர்களுடைய சூழ்ச்சியின் கதி என்னவாயிற்று என்பதைப் பார்த்துக் கொள்ளும். அவர்களையும் அவர்களுடைய சமுதாய மக்கள் அனைவரையும் நாம் அழித்துவிட்டோம்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, அவர்களுடைய சூழ்ச்சியின் முடிவு எப்படி இருந்தது என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக! நிச்சயமாக அவர்களையும், அவர்களுடைய சமூகத்தார் அனைவரையும் அடியோடு நாம் அழித்துவிட்டோம்.
Saheeh International
Then look how was the outcome of their plan - that We destroyed them and their people, all.
فَتِلْكَ بُیُوْتُهُمْ خَاوِیَةً بِمَا ظَلَمُوْا ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً لِّقَوْمٍ یَّعْلَمُوْنَ ۟
فَتِلْكَஇதோبُيُوْتُهُمْஅவர்களது வீடுகள்خَاوِيَةً ۢவெறுமையாக இருக்கின்றனبِمَا ظَلَمُوْا‌ ؕஅவர்கள் தீமை செய்ததால்اِنَّநிச்சயமாகفِىْ ذٰ لِكَஇதில் இருக்கிறதுلَاٰيَةًஓர் அத்தாட்சிلِّـقَوْمٍமக்களுக்குيَّعْلَمُوْنَ‏அறிகின்ற
Fபதில்க Bபுயூதுஹும் கா வியதம் Bபிமா ளலமூ; இன்ன Fபீ தாலிக ல ஆயதல் லிகவ் மி(ன்)ய்-யஃலமூன்
முஹம்மது ஜான்
ஆகவே, அவர்கள் அநியாயம் செய்து வந்த காரணத்தால் (அதோ அழிந்து போன) அவர்களுடைய வீடுகள் அதோ பாழடைந்து கிடக்கின்றன; நிச்சயமாக இதிலே, அறியக் கூடிய சமூகத்தாருக்கு அத்தாட்சி இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் செய்து கொண்டிருந்த அநியாயங்களின் காரணமாக (அழிந்து போன) அவர்களுடைய வீடுகள் இதோ பாழடைந்து கிடக்கின்றன. அறியக்கூடிய மக்களுக்கு நிச்சயமாக இதில் ஒரு (நல்ல) படிப்பினை இருக்கிறது.
IFT
அவர்கள் செய்த கொடுமையின் காரணமாக! அதோ! அவர்களுடைய இல்லங்கள் வெறுமையாய்க் கிடக்கின்றன. திண்ணமாக, அறியக்கூடிய மக்களுக்கு இதில் (படிப்பினை மிக்க) சான்று இருக்கின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, அவர்கள் செய்துகொண்டிருந்த அநியாயங்களின் காரணமாக அவர்களுடைய அந்த வீடுகள் குடியிருப்பற்றுக் கிடக்கின்றன, அறியக்கூடிய சமூகத்தார்க்கு நிச்சயமாக இதில் ஒரு படிப்பினை இருக்கின்றது.
Saheeh International
So those are their houses, desolate because of the wrong they had done. Indeed in that is a sign for people who know.
وَاَنْجَیْنَا الَّذِیْنَ اٰمَنُوْا وَكَانُوْا یَتَّقُوْنَ ۟
وَاَنْجَيْنَاநாம் பாதுகாத்தோம்الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கை கொண்டவர்களைوَكَانُوْا يَتَّقُوْنَ‏அவர்கள் அஞ்சிக் கொண்டிருந்தனர்
வ அன்ஜய்னல் லதீன ஆமனூ வ கானூ யத்தகூன்
முஹம்மது ஜான்
மேலும், ஈமான் கொண்டு, (அல்லாஹ்விடம்) பயபக்தியுடையவர்களாக இருந்தவர்களை நாம் காப்பாற்றினோம்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டு (அல்லாஹ்வுக்குப்) பயந்து கொண்டிருந்தார்களோ, அவர்களை நாம் பாதுகாத்துக் கொண்டோம்.
IFT
மேலும், எவர்கள் நம்பிக்கை கொண்டு மாறு செய்வதை விட்டு விலகியும் இருந்தார்களோ அவர்களை நாம் காப்பாற்றிக் கொண்டோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டு (அல்லாஹ்வுக்குப்) பயந்தும் கொண்டிருந்தார்களே அத்தகையவர்களை நாமே காப்பாற்றினோம்.
Saheeh International
And We saved those who believed and used to fear Allah.
وَلُوْطًا اِذْ قَالَ لِقَوْمِهٖۤ اَتَاْتُوْنَ الْفَاحِشَةَ وَاَنْتُمْ تُبْصِرُوْنَ ۟
وَلُوْطًاஇன்னும் லூத்தையும்اِذْகூறிய சமயத்தைقَالَநினைவு கூறுவீராக!لِقَوْمِهٖۤஅவர் தம் மக்களுக்குاَتَاْتُوْنَநீங்கள் செய்கிறீர்களா?الْـفَاحِشَةَமகா அசிங்கமானوَاَنْـتُمْநீங்கள்تُبْصِرُوْنَ‏அறியத்தான் செய்கிறீர்கள்
வ லூதன் இத் கால லிகவ்மிஹீ அதாதூனல் Fபா ஹிஷத வ அன்தும் துBப்ஸிரூன்
முஹம்மது ஜான்
லூத்தையும் (நினைவு கூர்வீராக!) அவர் தம் சமூகத்தாரிடம்; “நீங்கள் பார்த்துக் கொண்டே மானக்கேடான செயலைச் செய்கின்றீர்களா?” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
லூத்தையும் (நாம் நம் தூதராக அனுப்பிவைத்தோம்). அவர் தன் மக்களை நோக்கி (மறைவு திரையின்றி) ‘‘ மக்கள் முன்பாகவே நீங்கள் மானக்கேடான காரியங்களைச் செய்கிறீர்களா!
IFT
மேலும், லூத்தை நாம் அனுப்பினோம். அவர்தம் சமூகத்தாரிடம் கூறியதை நினைவுகூருங்கள்: “நீங்கள் கண்களால் பார்த்துக் கொண்டே ஒழுக்கக் கேடான செயல்களைச் செய்கின்றீர்களா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
லூத்தையும் - (நாம் நம்முடைய தூதராக அனுப்பி வைத்ததை நினைவு கூர்வீராக!) அவர் தன் ஜனங்களிடம், “நீங்கள் (உங்களில் சிலர் சிலரைப்) பார்த்தவர்களாக இருக்க, மானக்கேடான செயலைச் செய்கின்றீர்களா,” என்று அவர் கூறியபோது-
Saheeh International
And [mention] Lot, when he said to his people, "Do you commit immorality while you are seeing?
اَىِٕنَّكُمْ لَتَاْتُوْنَ الرِّجَالَ شَهْوَةً مِّنْ دُوْنِ النِّسَآءِ ؕ بَلْ اَنْتُمْ قَوْمٌ تَجْهَلُوْنَ ۟
اَٮِٕنَّكُمْ?/நீங்கள்لَـتَاْتُوْنَதீர்க்கிறீர்கள்الرِّجَالَஆண்களிடமாشَهْوَةًஇச்சையைمِّنْ دُوْنِஅன்றிالنِّسَآءِ‌ؕபெண்கள்بَلْமாறாகاَنْـتُمْநீங்கள்قَوْمٌமக்கள்تَجْهَلُوْنَ‏நீங்கள் அறிய மாட்டீர்கள்
அ'இன்னகும் லதாதூனர் ரிஜால ஷஹ்வதம் மின் தூனின் னிஸா'; Bபல் அன்தும் கவ்முன் தஜ்ஹலூன்
முஹம்மது ஜான்
“நீங்கள் பெண்களை விட்டு விட்டு, மோகங் கொண்டவர்களாக ஆண்களை நெருங்குகிறீர்களா? நீங்கள் முற்றிலும் அறிவில்லாத மக்களாக இருக்கிறீர்கள்” (என்றும் கூறினார்).
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் பெண்களைவிட்டு ஆண்களிடம் மோகங்கொண்டு வருகிறீர்களே! எனினும் நீங்கள் முற்றிலும் அறிவீனமான மக்களாக இருக்கிறீர்கள்'' என்று கூறினார்.
IFT
என்ன, பெண்களை விட்டுவிட்டு காம உணர்வைத் தீர்ப்பதற்காக ஆண்களையா தேடி அலைகின்றீர்கள்? உண்மையில் நீங்கள் மிகவும் அறிவீனமான செயல்புரியும் மக்கள் ஆவீர்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக நீங்கள் பெண்களை தவிர்த்து(விட்டு) ஆண்களிடம் மோகங்கொண்டு வருகின்றீர்களா? மாறாக நீங்கள் முற்றிலும் அறிவில்லாதக் கூட்டத்தினராக இருக்கிறீர்கள்” (என்று கூறினார்.)
Saheeh International
Do you indeed approach men with desire instead of women? Rather, you are a people behaving ignorantly."
فَمَا كَانَ جَوَابَ قَوْمِهٖۤ اِلَّاۤ اَنْ قَالُوْۤا اَخْرِجُوْۤا اٰلَ لُوْطٍ مِّنْ قَرْیَتِكُمْ ۚ اِنَّهُمْ اُنَاسٌ یَّتَطَهَّرُوْنَ ۟
فَمَا كَانَஇருக்கவில்லைجَوَابَபதிலோقَوْمِهٖۤஅவருடைய மக்களின்اِلَّاۤதவிரاَنْ قَالُـوْۤاகூறுவதாகவேاَخْرِجُوْۤاவெளியேற்றுங்கள்اٰلَகுடும்பத்தாரைلُوْطٍலூத்துடையمِّنْ قَرْيَتِكُمْ‌ۚஉங்கள் ஊரிலிருந்துاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்اُنَاسٌஅந்த மக்கள்يَّتَطَهَّرُوْنَ‏அசூசைப்படுகிறார்கள்
Fபமா கான ஜவாBப கவ்மிஹீ இல்லா அன் காலூ அக்ரிஜூ ஆலா லூதிம் மின் கர்யதிகும் இன்னஹும் உனாஸு(ன்)ய் யததஹ்ஹரூன்
முஹம்மது ஜான்
அதற்கவருடைய சமுதாயத்தவர் (தம் இனத்தாரிடம்) “லூத்துடைய குடும்பத்தாரை உங்கள் ஊரைவிட்டு நீங்கள் வெளியேற்றி விடுங்கள். நிச்சயமாக அவர்கள் மிகவும் பரிசுத்தமான மனிதர்களே!” என்று (பரிகாசமாகக்) கூறினார்களே தவிர வேறொரு பதிலும் அவர்களிடமில்லை.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள் (தங்கள் மக்களை நோக்கி) ‘‘ லூத்துடைய குடும்பத்தை உங்கள் ஊரை விட்டும் நீங்கள் ஓட்டிவிடுங்கள். நிச்சயமாக அவர்கள் மிகப் பரிசுத்தமான மனிதர்கள் (போல் பேசுகின்றனர்)'' என்று (பரிகாசமாகக்) கூறியதுதான் அவருடைய மக்களின் பதிலாக இருந்தது.
IFT
ஆயினும், அவருடைய சமூகத்தார் இதைத் தவிர வேறு எந்த பதிலையும் கூறவில்லை; அது இதுதான்: “வெளியேற்றுங்கள் லூத்துடைய குடும்பத்தாரை, உங்களுடைய ஊரைவிட்டு! இவர்கள் பெரிய பரிசுத்தவான்கள்!” (என்று எள்ளினர்).
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“லூத்துடைய குடும்பத்தை உங்கள் ஊரைவிட்டு நீங்கள் வெளியேற்றிவிடுங்கள், நிச்சயமாக அவர்கள் மிகப் பரிசுத்தமான மனிதர்கள் என்று (பரிகாசமாக) அவர்கள் கூறியதைத்தவிர, (வேறெதுவும்) அவருடைய சமூகத்தாரின் பதிலாக இருந்ததில்லை.
Saheeh International
But the answer of his people was not except that they said, "Expel the family of Lot from your city. Indeed, they are people who keep themselves pure."
فَاَنْجَیْنٰهُ وَاَهْلَهٗۤ اِلَّا امْرَاَتَهٗ ؗ قَدَّرْنٰهَا مِنَ الْغٰبِرِیْنَ ۟
فَاَنْجَيْنٰهُஎனவே, நாம் அவரை(யும்) பாதுகாத்தோம்وَ اَهْلَهٗۤஅவருடைய குடும்பத்தையும்اِلَّاதவிரامْرَاَتَهٗஅவருடைய மனைவியைقَدَّرْنٰهَاஅவளை முடிவு செய்தோம்مِنَ الْغٰبِرِيْنَ‏மிஞ்சியவர்களில்
Fப அன்ஜய்னாஹு வ அஹ்லஹூ இல்லம் ர அதஹூ கத்தர்னாஹா மினல் காBபிரீன்
முஹம்மது ஜான்
ஆனால், நாம் அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் பாதுகாத்துக் கொண்டோம்; அவருடைய மனைவியைத் தவிர (ஈமான் கொள்ளாமல்) பின்தங்கி (அழிந்து) விட்டவர்களில் ஒருத்தியாக அவளை தீர்மானித்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் நாம் பாதுகாத்துக் கொண்டோம். எனினும், அவருடைய மனைவியைத் தவிர. ஏனென்றால், அவள் (அந்தப் பாவிகளுடன்) தங்கிவிட வேண்டுமென்று (ஏற்கனவே) தீர்மானித்து விட்டோம்.
IFT
இறுதியில், லூத்தையும் அவருடைய குடும்பத்தாரையும் நாம் காப்பாற்றிக் கொண்டோம்; அவருடைய மனைவியைத் தவிர! அவள் பின்தங்கியவளாகிவிட வேண்டுமென நாம் முடிவு செய்துவிட்டிருந்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, அவருடைய மனைவியைத் தவிர அவரையும், அவருடைய குடும்பத்தினரையும் நாம் காப்பாற்றிக்கொண்டோம்; அவளை (வேதனை செய்யப்படுபவர்களோடு) தங்கிவிடுபவர்களில் உள்ளவளாக நாம் நிர்ணயித்துவிட்டோம்.
Saheeh International
So We saved him and his family, except for his wife; We destined her to be of those who remained behind.
وَاَمْطَرْنَا عَلَیْهِمْ مَّطَرًا ۚ فَسَآءَ مَطَرُ الْمُنْذَرِیْنَ ۟۠
وَاَمْطَرْنَاபொழிவித்தோம்عَلَيْهِمْஅவர்கள் மீதுمَّطَرًا‌ۚமழைفَسَآءَமிகக் கெட்டதாகும்مَطَرُஅந்த மழைالْمُنْذَرِيْنَ‏எச்சரிக்கப்பட்டவர்களின்
வ அம்தர்னா 'அலய்ஹிம்ம் மதரன் Fபஸா'அ மதருல் முன்தரீன்
முஹம்மது ஜான்
இன்னும், நாம் அவர்கள் மீது (கல்) மழை பொழியச் செய்தோம்; எனவே, எச்சரிக்கப்பட்ட அவர்கள் மீது பெய்த அம்மழை மிகவும் கெட்டது.  
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, அவர்கள் மீது கல்மழையை நாம் பொழிந்தோம். பயமுறுத்தப்பட்ட அவர்கள் மீது (பொழியப்பட்ட) கல்மழை மகா கெட்டது.
IFT
மேலும், பொழியச் செய்தோம் அம்மக்களின மீது ஒரு மழையை! எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த மக்களுக்கு அது மிகவும் கெட்ட மழையாய் இருந்தது!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே. அவர்கள் மீது (கல்)மாரியை நாம் பொழியச்செய்தோம், எச்சரிக்கப்பட்டவர்களின் (கல்)மாரி மிகக் கெட்டது.
Saheeh International
And We rained upon them a rain [of stones], and evil was the rain of those who were warned.
قُلِ الْحَمْدُ لِلّٰهِ وَسَلٰمٌ عَلٰی عِبَادِهِ الَّذِیْنَ اصْطَفٰی ؕ ءٰٓاللّٰهُ خَیْرٌ اَمَّا یُشْرِكُوْنَ ۟
قُلِகூறுவீராகالْحَمْدُஎல்லாப் புகழும்لِلّٰهِஅல்லாஹ்விற்கேوَسَلٰمٌஇன்னும் ஸலாம்عَلٰى عِبَادِهِஅவனுடைய அடியார்களுக்குالَّذِيْنَஎவர்கள்اصْطَفٰىؕஅவன் தேர்ந்தெடுத்தான்ءٰۤللّٰهُ?/அல்லாஹ்خَيْرٌசிறந்தவையாاَمَّا يُشْرِكُوْنَؕ‏அல்லது அவர்கள் இணைவைப்பவையா?
குலில் ஹம்து லில்லாஹி வ ஸலாமுன் 'அலா 'இBபாதிஹில் லதீனஸ் தFபா; ஆல்லாஹு கய்ருன் அம்ம்மா யுஷ்ரிகூன்
முஹம்மது ஜான்
(நபியே!) நீர் கூறுவீராக: “எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும் அவன் தேர்ந்தெடுத்துக் கொண்ட அவனுடைய அடியார்கள் மீது ஸலாம் உண்டாவதாக! அல்லாஹ் மேலானவனா? அல்லது அவர்கள் (அவனுக்கு) இணையாக்குபவை (மேலானவை)யா?”  
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (நபியே!) கூறுவீராக! புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே. தன் அடியார்களில் அவன் தேர்ந்தெடுத்துக் கொண்டவர்களின் மீது ‘ஸலாம்' உண்டாவதாக, அல்லாஹ் மேலானவனா அல்லது அவர்கள் அவனுக்கு இணையாக்குகின்றவை மேலானவையா?''
IFT
(நபியே!) நீர் கூறும்: “புகழ் அல்லாஹ்வுக்கே உரியது! மேலும், சாந்தி உண்டாகுக, அவன் தேர்ந்தெடுத்த அவனுடைய அடியார்கள் மீது!” (இவர்களிடம் கேளும்:) “அல்லாஹ் மேலானவனா அல்லது அவனுடன் இந்த மக்கள் இணைவைத்துக் கொண்டிருக்கும் தெய்வங்கள் மேலானவையா?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆகவே நபியே!) “புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது! இன்னும், அவன் தேர்ந்தெடுத்தோரான அவனுடைய அடியார்கள் மீது சாந்தி உண்டாவதாக” என்று கூறுவீராக! அல்லாஹ் மேலானவனா, அல்லது அவர்கள் (அவனுக்கு) இணையாக்குகின்றவைகளா?
Saheeh International
Say, [O Muhammad], "Praise be to Allah, and peace upon His servants whom He has chosen. Is Allah better or what they associate with Him?"
اَمَّنْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَاَنْزَلَ لَكُمْ مِّنَ السَّمَآءِ مَآءً ۚ فَاَنْۢبَتْنَا بِهٖ حَدَآىِٕقَ ذَاتَ بَهْجَةٍ ۚ مَا كَانَ لَكُمْ اَنْ تُنْۢبِتُوْا شَجَرَهَا ؕ ءَاِلٰهٌ مَّعَ اللّٰهِ ؕ بَلْ هُمْ قَوْمٌ یَّعْدِلُوْنَ ۟ؕ
اَمَّنْ?/எவன்خَلَقَபடைத்தான்السَّمٰوٰتِவானங்களையும்وَالْاَرْضَபூமியையும்وَاَنْزَلَஇன்னும் அவன் இறக்கினான்لَـكُمْஉங்களுக்குمِّنَ السَّمَآءِமேகத்திலிருந்துمَآءً‌ ۚமழையைفَاَنْۢبَتْنَاநாம் முளைக்க வைத்தோம்بِهٖஅதன்மூலம்حَدَآٮِٕقَதோட்டங்களைذَاتَ بَهْجَةٍ‌ ۚஅழகிய காட்சியுடையمَا كَانَமுடியாதுلَـكُمْஉங்களால்اَنْ تُـنْۢبِتُوْاநீங்கள் முளைக்க வைக்கشَجَرَهَا ؕஅதன் மரங்களைءَاِلٰـهٌ(வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?!مَّعَ اللّٰهِ‌ ؕஅல்லாஹ்வுடன்بَلْமாறாகهُمْஅவர்கள்قَوْمٌமக்கள்يَّعْدِلُوْنَ ؕ‏இணைவைக்கின்றனர்
அம்மன் கலகஸ் ஸமாவாதி வல் அர்ள வ அன்Zஜல லகும் மினஸ் ஸமா'இ மா'அன் Fப அன்Bபத்னா Bபிஹீ ஹதா'இக தாத Bபஹ்ஜஹ்; மா கான லகும் அன் துன்Bபிதூ ஷஜரஹா; 'அ-இலாஹுன் ம'அல்லாஹ்; Bபல் ஹும் கவ்மு(ன்)ய் யஃதிலூன்
முஹம்மது ஜான்
அன்றியும், வானங்களையும் பூமியையும் படைத்து, உங்களுக்கு வானத்திலிருந்து மழையை இறக்கி வைப்பவன் யார்? பின்னர் அதைக் கொண்டு செழிப்பான தோட்டங்களை நாம் முளைக்கச் செய்கிறோம். அதன் மரங்களை முளைக்கச் செய்வது உங்களால் முடியாது. (அவ்வாறிருக்க) அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! ஆயினும் அவர்கள் (தம் கற்பனை தெய்வங்களை அல்லாஹ்வுக்கு) சமமாக்கும் மக்களாகவே இருக்கிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
வானங்களையும் பூமியையும் படைத்து, மேகத்தில் இருந்து உங்களுக்காக மழை பொழியச் செய்பவன் யார்? நாமே அதைக் கொண்டு கண்ணைக் கவரும் அழகான தோட்டங்களையும் உற்பத்தி செய்கிறோம். (நம் உதவியின்றி) அதன் மரங்களை முளைக்கவைக்க உங்களால் முடியாது. ஆகவே, அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு கடவுள் இருக்கிறானா? (இவ்வாறிருந்தும்) இவர்கள் (தங்கள் கற்பனை தெய்வங்களை அல்லாஹ்வுக்குச்) சமமாக்குகின்றனர்.
IFT
வானங்களையும், பூமியையும் படைத்தவனும் மேலும், உங்களுக்காக வானத்திலிருந்து மழையைப் பொழிய வைத்தவனும் பிறகு, அதன் மூலம் அழகான தோட்டங்களை வளரச் செய்தவனும் யார்? அவற்றின் மரங்களை முளைக்கச் செய்வதற்கு உங்களால் இயலாதிருந்ததே! அல்லாஹ்வுடன் வேறேதாவது கடவுளும் (இப்பணிகளில் பங்கு கொண்டு) இருக்கின்றாரா? (இல்லை!) மாறாக, இதே மக்கள்தாம் நேரிய வழியிலிருந்து பிறழ்ந்து சென்று கொண்டிருக்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(உங்களுடைய தெய்வங்கள் சிறந்தவையா?) அல்லது வானங்களையும், பூமியையும் படைத்து வானத்திலிருந்து உங்களுக்காக தண்ணீரை (மழையை)யும் இறக்கி வைத்தவ(ன் சிறந்தவ)னா? (பின்னர்) நாமே அதனைக் கொண்டு செழிப்பான தோட்டங்களை முளைக்கச் செய்கிறோம்; (நாம் மழையை இறக்காவிட்டால்) அதன் மரங்களை முளைக்கச் செய்யவே உங்களால் முடியாது; ஆகவே, அல்லாஹ்வுடன் வேறு வணக்கத்திற்குரியவன் இருக்கின்றானா? இல்லை; இவர்கள் (தங்கள் தெய்வங்களாக கற்பனை செய்தவற்றை அல்லாஹ்வுக்கு) சமமாக்குகின்ற கூட்டத்தினராக இருக்கின்றனர்.
Saheeh International
[More precisely], is He [not best] who created the heavens and the earth and sent down for you rain from the sky, causing to grow thereby gardens of joyful beauty which you could not [otherwise] have grown the trees thereof? Is there a deity with Allah? [No], but they are a people who ascribe equals [to Him].
اَمَّنْ جَعَلَ الْاَرْضَ قَرَارًا وَّجَعَلَ خِلٰلَهَاۤ اَنْهٰرًا وَّجَعَلَ لَهَا رَوَاسِیَ وَجَعَلَ بَیْنَ الْبَحْرَیْنِ حَاجِزًا ؕ ءَاِلٰهٌ مَّعَ اللّٰهِ ؕ بَلْ اَكْثَرُهُمْ لَا یَعْلَمُوْنَ ۟ؕ
اَمَّنْ?/எவன்جَعَلَஆக்கினான்الْاَرْضَபூமியைقَرَارًاநிலையானதாகوَّجَعَلَஇன்னும் ஏற்படுத்தினான்خِلٰلَهَاۤஅதற்கிடையில்اَنْهٰرًاஆறுகளைوَّجَعَلَஇன்னும் படைத்தான்لَهَاஅதற்காகرَوَاسِىَபெரும் மலைகளைوَجَعَلَஇன்னும் அமைத்தான்بَيْنَஇடையில்الْبَحْرَيْنِஇரு கடல்களுக்குحَاجِزًا‌ ؕதடுப்பைءَاِلٰـهٌ(வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?!مَّعَ اللّٰهِ‌ ؕஅல்லாஹ்வுடன்بَلْ اَكْثَرُهُمْமாறாக/அதிகமானவர்கள்/அவர்களில்لَا يَعْلَمُوْنَ ؕ‏அறியமாட்டார்கள்
அம்மன்ன் ஜ'அலல் அர்ள கரார(ன்)வ் வ ஜ'அல கிலாலஹா அன்ஹார(ன்)வ் வ ஜ'அல லஹா ரவாஸிய வ ஜ'அல Bபய்னல் Bபஹ்ரய்னி ஹாஜிZஜா; 'அ-இலாஹுன் ம'அல்லாஹ்; Bபல் அக்தருஹும் லா யஃலமூன்
முஹம்மது ஜான்
இந்தப் பூமியை வசிக்கத் தக்க இடமாக ஆக்கியவனும், அதனிடையே ஆறுகளை உண்டாக்கியவனும்; அதற்காக (அதன் மீது அசையா) மலைகளை உண்டாக்கியவனும் இரு கடல்களுக்கிடையே தடுப்பை உண்டாக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
பூமியை ஓர் உறுதியான தங்குமிடமாக அமைத்து, அதன் மத்தியில் ஆறுகளையும் அ(தை உறுதிப்படுத்துவ)தற்கு மலைகளையும் அமைத்தவன் யார்? இரு கடல்களுக்கிடையில் தடுப்பை ஏற்படுத்தியவன் யார்? (இவற்றைச் செய்த) அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு கடவுள் இருக்கிறானா? (இல்லவே இல்லை.) அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிந்து கொள்வதில்லை.
IFT
மேலும், பூமியைத் தங்குமிடமாக்கியவனும் அதனிடையே ஆறுகளை ஓடச் செய்தவனும் அதற்கு (மலைகளெனும்) முளைகளை அமைத்தவனும், மேலும், இரு கடல்களின் ஜலசந்திகளுக்கிடையில் தடுப்பை ஏற்படுத்தியவனும் யார்? அல்லாஹ்வுடன் வேறேதாவது கடவுளும் (இப்பணிகளில் பங்கு கொண்டு) இருக்கின்றாரா? இல்லவே இல்லை! மாறாக, இவர்களில் பெரும்பாலோர் அறிவற்றவர்களாய் இருக்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(உங்களுடைய தெய்வங்கள் சிறந்தவையா?) அல்லது பூமியை உறுதியானதாக்கி அதனிடையே ஆறுகளையும் உண்டாக்கி, அதற்காக (அதன் மீது) கனமான மலைகளையும் அமைத்து, இரு கடல்களுக்கிடையில் தடுப்பையும் ஏற்படுத்தியவ(ன் சிறந்தவ)னா? (இவைகளைச் செய்த) அல்லாஹ்வுடன் வேறு வணக்கத்திற்குரியவன் இருக்கின்றனா? இல்லை! அவர்களில் பெரும்பாலோர் இதுபற்றி அறியமாட்டார்கள்.
Saheeh International
Is He [not best] who made the earth a stable ground and placed within it rivers and made for it firmly set mountains and placed between the two seas a barrier? Is there a deity with Allah? [No], but most of them do not know.
اَمَّنْ یُّجِیْبُ الْمُضْطَرَّ اِذَا دَعَاهُ وَیَكْشِفُ السُّوْٓءَ وَیَجْعَلُكُمْ خُلَفَآءَ الْاَرْضِ ؕ ءَاِلٰهٌ مَّعَ اللّٰهِ ؕ قَلِیْلًا مَّا تَذَكَّرُوْنَ ۟ؕ
اَمَّنْஅல்லது/எவன்يُّجِيْبُபதிலளிப்பான்الْمُضْطَرَّசிரமத்தில் இருப்பவருக்குاِذَا دَعَاهُஅவர் அவனை அழைக்கும்போதுوَيَكْشِفُமேலும், நீக்குகின்றான்السُّوْٓءَதுன்பத்தைوَيَجْعَلُكُمْஇன்னும் உங்களை ஆக்குகின்றான்خُلَفَآءَபிரதிநிதிகளாகالْاَرْضِ‌ ؕஇப்பூமியின்ءَاِلٰـهٌ(வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?!مَّعَ اللّٰهِ ؕஅல்லாஹ்வுடன்قَلِيْلًا مَّاமிகக் குறைவாகவேتَذَكَّرُوْنَ ؕ‏நீங்கள் நல்லுணர்வு பெறுகிறீர்கள்
அம்ம(ன்)ய்-யுஜீBபுல் முள் தர்ர இதா த'ஆஹு வ யக்ஷிFபுஸ் ஸூ'அ வ யஜ்'அலுகும் குல Fபா'அல் அர்ளி 'அ-இலாஹுன் ம'அல்லாஹ் கலீலன் மா ததக் கரூன்
முஹம்மது ஜான்
கஷ்டத்திற்குள்ளானவன் அவனை அழைத்தால் அவனுக்கு பதில் கொடுத்து, அவன் துன்பத்தை நீக்குபவனும், உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (இல்லை) எனினும் (இவையெல்லாம் பற்றி) நீங்கள் சிந்தித்துப் பார்ப்பது மிகக் குறைவே யாகும்.
அப்துல் ஹமீது பாகவி
(சிரமத்தில் சிக்கித்) துடிதுடித்துக் கொண்டிருப்பவர்கள் அபயமிட்டழைத்தால் அவர்களுக்குப் பதில் கூறி, அவர்களுடைய சிரமங்களை நீக்குபவன் யார்? பூமியில் உங்களை பிரதிநிதிகளாக ஆக்கி வைத்தவன் யார்? (இத்தகைய) அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு கடவுள் இருக்கிறானா? (இல்லவே இல்லை.) உங்களில் நல்லுணர்ச்சி பெறுபவர்கள் வெகு சொற்பமே.
IFT
துயரங்களுக்கு ஆளானவர் இறைஞ்சும்போது அவருடைய இறைஞ்சுதலைக் கேட்டு பதிலளிப்பவன் யார்? மேலும், அவருடைய துயரத்தைக் களைபவன் யார்? மேலும், உங்களைப் பூமியில் பிரதிநிதிகளாய் ஆக்குகிறவன் யார்? அல்லாஹ்வுடன் வேறு எந்த ஒரு கடவுளேனும் (இப்பணிகளைச் செய்யக்கூடியதாய்) உள்ளதா? நீங்கள் மிகக் குறைவாகவே சிந்திக்கின்றீர்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(உங்களுடைய தெய்வங்கள் சிறந்தவையா?) அல்லது கடுந்துன்பதிற்குள்ளாக்கப் பட்டவனுக்கு அவனை இவன் அழைத்தல், (அவனுக்குப்) பதிலளித்து, மேலும், (அவனுடைய) அத்துன்பத்தை நீக்கி, பூமியில் உங்களை(த் தன்னுடைய) பிரதிநிதிகளாகவும் ஆக்கியவ(ன் சிறந்தவ)னா? (இத்தகைய) அல்லாஹ்வுடன், வேறு வணக்கத்திற்குரியவன் இருக்கின்றானா? (இல்லை!) நீங்கள் சிந்திப்பது மிகக் குறைவாகும்.
Saheeh International
Is He [not best] who responds to the desperate one when he calls upon Him and removes evil and makes you inheritors of the earth? Is there a deity with Allah? Little do you remember.
اَمَّنْ یَّهْدِیْكُمْ فِیْ ظُلُمٰتِ الْبَرِّ وَالْبَحْرِ وَمَنْ یُّرْسِلُ الرِّیٰحَ بُشْرًاۢ بَیْنَ یَدَیْ رَحْمَتِهٖ ؕ ءَاِلٰهٌ مَّعَ اللّٰهِ ؕ تَعٰلَی اللّٰهُ عَمَّا یُشْرِكُوْنَ ۟ؕ
اَمَّنْ?/எவன்يَّهْدِيْكُمْஉங்களுக்கு வழிகாட்டுகிறான்فِىْ ظُلُمٰتِஇருள்களில்الْبَرِّதரையின்وَ الْبَحْرِமற்றும் கடலின்وَمَنْஇன்னும் எவன்يُّرْسِلُஅனுப்புகிறானோالرِّيٰحَகாற்றுகளைبُشْرًۢاசுபச் செய்தியாகبَيْنَ يَدَىْமுன்னர்رَحْمَتِهٖؕதனது அருளுக்குءَاِلٰـهٌ(வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?!مَّعَ اللّٰهِ‌ؕஅல்லாஹ்வுடன்تَعٰلَىமிக்க உயர்ந்தவன்اللّٰهُஅல்லாஹ்عَمَّا يُشْرِكُوْنَؕ‏அவர்கள் இணைவைப்பவற்றை விட்டு
அம்ம(ன்)ய்-யஹ்தீகும் Fபீ ளுலுமாதில் Bபர்ரி வல் Bபஹ்ரி வ ம(ன்)ய் யுர்ஸிலு ரியாஹ Bபுஷ்ரன் Bபய்ன யதய் ரஹ்மதிஹ்; 'அ-இலாஹுன் ம'அல்லாஹ்; த'ஆலல் லாஹு 'அம்மா யுஷ்ரிகூன்
முஹம்மது ஜான்
கரையிலும் கடலிலுமுள்ள இருள்களில் உங்களை நேரான வழியில் செலுத்துபவன் யார்? மேலும், தன்னுடைய “ரஹ்மத்” என்னும் அருள் மாரிக்கு முன்னே நன்மாராயம் (கூறுவன) ஆக காற்றுகளை அனுப்பி வைப்பவன் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? - அவர்கள் இணை வைப்பவற்றைவிட அல்லாஹ் மிகவும் உயர்வானவன்.
அப்துல் ஹமீது பாகவி
கடலிலோ அல்லது கரையிலோ இருள்களில் (சிக்கிய) உங்களுக்கு வழி காண்பிப்பவன் யார்? அவனுடைய அருள் மழைக்கு முன்னதாக (குளிர்ந்த) காற்றுகளை நற்செய்தியாக அனுப்பிவைப்பவன் யார்? அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு கடவுள் இருக்கிறானா? (இல்லவே இல்லை.) அவர்கள் இணை வைப்பதை விட்டு அவன் மிக்க உயர்ந்தவன்.
IFT
தரை மற்றும் கடலின் இருள்களில் உங்களுக்கு வழிகாட்டுபவன் யார்? மேலும், தன்னுடைய அருளுக்கு முன்னர் காற்றை நற்செய்தியாக அனுப்புகின்றவன் யார்? அல்லாஹ்வுடன் வேறு எந்தக் கடவுளேனும் (இப்பணியைச் செய்துகொண்டு) இருக்கின்றதா? அல்லாஹ் மிக உயர்ந்தவனும் மேலானவனும் ஆவான்; இவர்கள் செய்கின்ற இணைவைப்புச் செயல்களை விட்டு!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(உங்களுடைய தெய்வங்கள் சிறந்தவையா?) அல்லது கரையிலும், கடலிலும் உள்ள இருள்களில் உங்களுக்கு நேர்வழி காண்பித்து. (மழையெனும்) அவனுடைய அருள் மாரிக்கு முன்னதாகக் காற்றுகளையும் நன்மாராயமாக அனுப்பி வைப்பவ(ன் சிறந்தவ)னா? (இத்தகுதிகளுடைய) அல்லாஹ்வுடன் வேறு வணக்கதிற்குரியவன் இருக்கின்றானா? (இல்லை!) அவர்கள் இணை வைப்பவைகளை விட்டும் அல்லாஹ் மிக்க உயர்ந்தவன்.
Saheeh International
Is He [not best] who guides you through the darknesses of the land and sea and who sends the winds as good tidings before His mercy? Is there a deity with Allah? High is Allah above whatever they associate with Him.
اَمَّنْ یَّبْدَؤُا الْخَلْقَ ثُمَّ یُعِیْدُهٗ وَمَنْ یَّرْزُقُكُمْ مِّنَ السَّمَآءِ وَالْاَرْضِ ؕ ءَاِلٰهٌ مَّعَ اللّٰهِ ؕ قُلْ هَاتُوْا بُرْهَانَكُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
اَمَّنْ?/எவன்يَّبْدَؤُاமுதலில் உருவாக்குகின்றான்الْخَـلْقَபடைப்புகளைثُمَّபிறகுيُعِيْدُهٗஅவற்றை மீண்டும் உருவாக்குகின்றான்وَمَنْஇன்னும் எவன்يَّرْزُقُكُمْஉங்களுக்கு உணவளிக்கின்றான்مِّنَ السَّمَآءِமேகத்திலிருந்தும்وَالْاَرْضِ‌ؕஇன்னும் பூமியிலிருந்தும்ءَاِلٰـهٌஒரு கடவுளா?!مَّعَ اللّٰهِ‌ؕஅல்லாஹ்வுடன்قُلْகூறுவீராகهَاتُوْاகொண்டு வாருங்கள்بُرْهَانَكُمْஉங்கள் ஆதாரத்தைاِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்صٰدِقِيْنَ‏உண்மையாளர்களாக
அம்ம(ன்)ய் யBப்த'உல் கல்க தும்ம யு'ஈதுஹூ வ ம(ன்)ய்-யர்Zஜுகுகும் மினஸ் ஸமா'இ வல் அர்ள்; 'அ-இலாஹுன் ம'அல்லஹ்; குல் ஹாதூ Bபுர்ஹானகும் இன் குன்தும் ஸாதிகீன்
முஹம்மது ஜான்
முதன் முதலில் படைப்பைத் துவங்குபவனும், பின்னர் அதனை மீண்டும் உண்டாக்கி வைப்பவனும் யார்? வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு ஆகாரம் அளிப்பவன் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (நபியே!) நீர் கூறுவீராக: “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், உங்களுடைய ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள்.”
அப்துல் ஹமீது பாகவி
ஆரம்பத்தில் படைப்புகளை உற்பத்தி செய்தவன் யார்? (அவ்வாறே பின்னும்) பின்னும் உற்பத்தி செய்து கொண்டிருப்பவன் யார்? மேகத்தில் இருந்து (மழையை இறக்கியும்) பூமியில் இருந்து (தானியங்களை முளைக்கச் செய்தும்) உங்களுக்கு உணவளிப்பவன் யார்? அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு கடவுள் இருக்கிறானா? ‘‘ நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் (இதற்கு) உங்கள் அத்தாட்சிகளைக் கொண்டுவாருங்கள்'' என்று (நபியே!) கூறுவீராக.
IFT
முதன் முறையாய்ப் படைக்கின்றவனும் பிறகு, மீண்டும் படைக்கப் போகின்றவனும் யார்? மேலும், வானம் மற்றும் பூமியிலிருந்து உங்களுக்கு உணவளிப்பவன் யார்? அல்லாஹ்வுடன் வேறு எந்த ஒரு கடவுளேனும் (இப்பணியில் பங்கு கொண்டு) உள்ளதா? கூறுவீராக: “கொண்டு வாருங்கள் உங்கள் அத்தாட்சியை, நீங்கள் உண்மையாளர்களாய் இருப்பின்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(உங்களுடைய தெய்வங்கள் சிறந்தவையா?) அல்லது ஆரம்பத்தில் (யாதொரு முன்மாதிரியும் இன்றியே) படைப்பைத்துவங்கி, பின்னர் அதனை மீட்டுபவனும் வானத்திலிருந்தும், பூமியிலிருந்து உங்களுக்கு உணவளிப்பவ(ன் சிறந்தவ)னா? அல்லாஹ்வுடன், வேறு வணக்கத்திற்குரியவன் இருக்கின்றானா? “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், (இதற்கு) உங்களுடைய அத்தாட்சியைக் கொண்டுவாருங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
Saheeh International
Is He [not best] who begins creation and then repeats it and who provides for you from the heaven and earth? Is there a deity with Allah? Say, "Produce your proof, if you should be truthful."
قُلْ لَّا یَعْلَمُ مَنْ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ الْغَیْبَ اِلَّا اللّٰهُ ؕ وَمَا یَشْعُرُوْنَ اَیَّانَ یُبْعَثُوْنَ ۟
قُلْகூறுவீராகلَّا يَعْلَمُஅறியமாட்டார்مَنْஎவரும்فِى السَّمٰوٰتِவானங்களிலும்وَالْاَرْضِஇன்னும் பூமியிலும்الْغَيْبَமறைவானவற்றைاِلَّاதவிரاللّٰهُ‌ؕஅல்லாஹ்வைوَمَا يَشْعُرُوْنَஇன்னும் உணரமாட்டார்கள்اَيَّانَஎப்போதுيُبْعَثُوْنَ‏தாங்கள் எழுப்பப்படுவோம் என்பதை
குல் லா யஃலமு மன் Fபிஸ் ஸம்மாவாதி வல் அர்ளில் கய்Bப இல்லல் லாஹ்; வமா யஷ்'உரூன அய்யான யுBப்'அதூன்
முஹம்மது ஜான்
(இன்னும்) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வைத் தவிர்த்து, வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார்; இன்னும்: (மரித்தோர் இறுதியில்) எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்.”
அப்துல் ஹமீது பாகவி
(மேலும்) நீர் கூறுவீராக! ‘‘ வானங்களிலோ பூமியிலோ மறைந்திருப்பவற்றை அல்லாஹ்வைத் தவிர மற்றெவரும் அறிய மாட்டார். (மரணித்தவர்கள்) எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பதையும் இவர்கள் அறிய மாட்டார்கள்.
IFT
இவர்களிடம் கூறும்: “அல்லாஹ்வைத் தவிர வானங்களிலும் பூமியிலும் உள்ள எவரும் மறைவான உண்மைகளை அறியமாட்டார். மேலும், (உங்களுடைய கடவுளர்களான) அவர்கள் எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பதைக்கூட அறிவதில்லையே!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ்வைத் தவிர வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்கள் (எவரும்) மறைந்திருப்பவைகளை அறியமாட்டார்கள், மேலும், அவர்கள் எப்பொழுது (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் உணர மாட்டார்கள்” என்று (நபியே) நீர் கூறுவீராக!
Saheeh International
Say, "None in the heavens and earth knows the unseen except Allah, and they do not perceive when they will be resurrected."
بَلِ ادّٰرَكَ عِلْمُهُمْ فِی الْاٰخِرَةِ ۫ بَلْ هُمْ فِیْ شَكٍّ مِّنْهَا ۫ؗ بَلْ هُمْ مِّنْهَا عَمُوْنَ ۟۠
بَلِ ادّٰرَكَஅல்லது மறைந்து விட்டதா?عِلْمُهُمْஅவர்களது அறிவுفِى الْاٰخِرَةِ‌மறுமை விஷயத்தில்بَلْமாறாகهُمْஅவர்கள்فِىْ شَكٍّசந்தேகத்தில் இருக்கின்றனர்مِّنْهَا அதில்بَلْமாறாகهُمْஅவர்கள்مِّنْهَاஅதில்عَمُوْنَ‏குருடர்கள் ஆவர்
Bபலித் தாரக 'இல்முஹும் Fபில் ஆகிரஹ்; Bபல் ஹும் Fபீ ஷக்கின் மின்ஹா Bபல் ஹும் மின்ஹா 'அமூன்
முஹம்மது ஜான்
ஆனால் மறுமையைப் பற்றிய அவர்களுடைய அறிவோ மிகக் கீழ்நிலையிலே உள்ளது; அவர்கள் அதில் (பின்னும்) சந்தேகத்திலேயே இருக்கின்றனர்; அது மட்டுமா? அதைப்பற்றி அவர்கள் குருடர்களாகவே இருக்கின்றனர்.  
அப்துல் ஹமீது பாகவி
எனினும், மறுமையைப் பற்றிய இவர்களுடைய ஞானம் முற்றிலும் சூனியமாகி விட்டது. மாறாக, (அவ்விஷயத்தில்) அவர்கள் பெரும் சந்தேகத்தில்தான் இருக்கின்றனர். அதுமட்டுமா? அவர்கள் (அறிந்திருந்தும்) அதைப் புரியாத குருடர்களாகி விட்டனர்.
IFT
உண்மை யாதெனில், மறுமையைப் பற்றிய அறிவு இம் மக்களை விட்டு மறைந்தே போய்விட்டது. இல்லை, இவர்கள் அதைப் பற்றிய சந்தேகத்தில் உழல்கின்றார்கள்! இன்னும் சொல்வதானால், மறுமையைப் பற்றி இவர்கள் குருடர்களாயிருக்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனினும், மறுமையைப் பற்றிய இவர்களுடைய அறிவோ (களைப்புற்றுக் கீழ் நிலைய அடைந்து) முடிவுபெற்றுவிட்டது, மாறாக அதுபற்றி இவர்கள் (பெரும்) சந்தேகத்தில் இருக்கின்றனர், இல்லை! அதைப்பற்றி இவர்கள் குருடர்களாகவே இருக்கிறார்கள்.
Saheeh International
Rather, their knowledge is arrested concerning the Hereafter. Rather, they are in doubt about it. Rather, they are, concerning it, blind.
وَقَالَ الَّذِیْنَ كَفَرُوْۤا ءَاِذَا كُنَّا تُرٰبًا وَّاٰبَآؤُنَاۤ اَىِٕنَّا لَمُخْرَجُوْنَ ۟
وَقَالَஇன்னும் கூறினர்الَّذِيْنَ كَفَرُوْۤاநிராகரித்தவர்கள்ءَاِذَا كُنَّاநாங்கள் மாறிவிட்டாலும்تُرٰبًاமண்ணாகوَّاٰبَآؤُنَاۤஎங்கள் மூதாதைகளும்اَٮِٕنَّا لَمُخْرَجُوْنَ‏நிச்சயமாக நாங்கள் வெளியேற்றப்படுவோமா?
வ காலல் லதீன கFபரூ 'அ-இதா குன்னா துராBப(ன்)வ் வ ஆBபா'உனா அ'இன்னா லமுக்ரஜூன்
முஹம்மது ஜான்
மேலும், நிராகரிப்பவர்கள் கூறுகிறார்கள்: “நாங்களும் எங்கள் மூதாதையரும் (மரித்து) மண்ணாகிப் போன பின்னர், மீண்டும் வெளியே கொண்டு வரப்படுவோமா?
அப்துல் ஹமீது பாகவி
‘‘ (மரணித்து) உக்கி மண்ணாகிப் போனதன் பின்னர் நாங்களும், எங்கள் மூதாதைகளும் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவோமா?'' என்று இந்நிராகரிப்பவர்கள் கேட்கின்றனர்.
IFT
மேலும், இந்நிராகரிப்போர் கூறுகின்றார்கள்: “நாங்களும் எங்களுடைய மூதாதையர்களும் மண்ணாகிப் போய்விட்டால் நாங்கள் உண்மையிலேயே மண்ணறைகளிலிருந்து எழுப்பப்படுவோமா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நாங்களும், எங்களுடைய மூதாதையர்களும் மண்ணாகிவிட்டால் நிச்சயமாக (மீண்டும் உயிர் பெற்று பூமியிலிருந்து) நாங்கள் வெளியேற்றப்படுவோர்களா?” என்று நிராகரிப்போர் கூறுகின்றனர்.
Saheeh International
And those who disbelieve say, "When we have become dust as well as our forefathers, will we indeed be brought out [of the graves]?
لَقَدْ وُعِدْنَا هٰذَا نَحْنُ وَاٰبَآؤُنَا مِنْ قَبْلُ ۙ اِنْ هٰذَاۤ اِلَّاۤ اَسَاطِیْرُ الْاَوَّلِیْنَ ۟
لَـقَدْதிட்டவட்டமாகوُعِدْنَاநாங்கள் வாக்களிக்கப்பட்டோம்هٰذَاஇதைنَحْنُநாங்களும்وَاٰبَآؤُنَاஎங்கள் மூதாதைகளும்مِنْ قَبْلُۙஇதற்கு முன்னர்اِنْ هٰذَاۤஇது (வேறு) இல்லைاِلَّاۤஅன்றிاَسَاطِيْرُகட்டுக் கதைகள்الْاَوَّلِيْنَ‏முன்னோர்களின்
லகத் வு'இத்னா ஹாதா னஹ்னு வ ஆBபா'உனா மின் கBப்லு இன் ஹாதா இல்லா அஸாதீருல் அவ்வலீன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக, இ(ந்த அச்சுறுத்தலான)து எங்களுக்கும் எங்களுக்கு முன் சென்று போன எங்கள் மூதாதையருக்கும் வாக்களிக்கப்பட்டே வருகிறது; இது முன்னோர்களின் கட்டுக்கதைகளேயன்றி வேறில்லை” (என்றுங் கூறுகின்றனர்).
அப்துல் ஹமீது பாகவி
‘‘ நாங்களும் இதற்கு முன்னர் இருந்த எங்கள் மூதாதைகளும் இவ்வாறே பயமுறுத்தப்பட்டோம். இது முன்னுள்ளோரின் கட்டுக்கதைகளே தவிர வேறில்லை'' (என்றும் கூறுகின்றனர்.)
IFT
இந்த விஷயங்கள் பற்றி எங்களுக்கு (அதிகம்) எச்சரிக்கப்பட்டுள்ளது; முன்னர் எங்கள் மூதாதையர்களும் எச்சரிக்கப்பட்டிருக்கின்றனர். உண்மையில் இவை முன்னோர்களின் காலத்திலிருந்து கேள்விப்பட்டு வருகின்ற வெறும் கட்டுக்கதைகளே தவிர வேறில்லை!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக இதுபற்றி நாங்களும், இதற்கு முன்னர் எங்கள் மூதாதையர்களும் வாக்களிக்கப்பட்டிருந்தோம், இது முன்னுள்ளோரின் கட்டுக்கதைகளே தவிர (வேறு) இல்லை” (என்றும் கூறுகின்றனர்).
Saheeh International
We have been promised this, we and our forefathers, before. This is not but legends of the former peoples."
قُلْ سِیْرُوْا فِی الْاَرْضِ فَانْظُرُوْا كَیْفَ كَانَ عَاقِبَةُ الْمُجْرِمِیْنَ ۟
قُلْகூறுவீராக!سِيْرُوْاசெல்வீர்களாக!فِى الْاَرْضِபூமியில்فَانْظُرُوْاபார்ப்பீர்களாக!كَيْفَஎப்படி என்றுكَانَஇருந்ததுعَاقِبَةُமுடிவுالْمُجْرِمِيْنَ‏குற்றவாளிகளின்
குல் ஸீரூ Fபில் அர்ளி Fபன்ளுரூ கய்Fப கான 'ஆகிBபதுல் முஜ்ரிமீன்
முஹம்மது ஜான்
“பூமியில் பிரயாணம் செய்து, குற்றவாளிகளின் முடிவு என்னவாயிற்று என்று பாருங்கள்” என்று (அவர்களிடம் நபியே!) நீர் கூறுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே ‘‘ பூமியில் சுற்றித் திரிந்து (உங்களைப் போன்று இருந்த) குற்றவாளிகளின் முடிவு எவ்வாறாயிற்று என்பதைக் கவனித்துப் பாருங்கள்'' (என்று நபியே!) கூறுவீராக.
IFT
கூறுவீராக: “சற்று பூமியில் சுற்றித் திரிந்து குற்றவாளிகளின் கதி என்னவாயிற்று என்பதைப் பாருங்கள்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆகவே,) “பூமியில் பிரயாணம் செய்து குற்றவாளிகளின் முடிவு எப்படி இருந்தது என்பதை (கவனித்து)ப் பாருங்கள் என்று (நபியே!) நீர் கூறுவீராக!”
Saheeh International
Say, [O Muhammad], "Proceed [i.e., travel] through the land and observe how was the end of the criminals."
وَلَا تَحْزَنْ عَلَیْهِمْ وَلَا تَكُنْ فِیْ ضَیْقٍ مِّمَّا یَمْكُرُوْنَ ۟
وَلَا تَحْزَنْஇன்னும் நீர் துக்கப்படாதீர்!عَلَيْهِمْஅவர்கள் மீதுوَلَا تَكُنْஇன்னும் நீர் ஆகிவிடாதீர்!فِىْ ضَيْقٍநெருக்கடியில்مِّمَّا يَمْكُرُوْنَ‏அவர்கள் சூழ்ச்சி செய்கின்ற காரணத்தால்
வ லா தஹ்Zஜன் 'அலய்ஹிம் வலா தகுன் Fபீ ளய்கின் மிம்மா யம்குரூன்
முஹம்மது ஜான்
அவர்களுக்காக நீர் கவலைப்படாதீர்; மேலும், அவர்கள் செய்யும் சூழ்ச்சியைப் பற்றியும் நீர் சங்கடத்தில் ஆக வேண்டாம்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அவர்களைப் பற்றி நீர் கவலை கொள்ளாதீர். அவர்களுடைய சூழ்ச்சிகளைப் பற்றியும் நீர் மனமொடிந்து விடாதீர்.
IFT
(நபியே!) இவர்களின் நிலை குறித்து வருந்தாதீர். இவர்கள் செய்யும் சூழ்ச்சிகளால் நீர் மனக்கஷ்டமும் அடையாதீர்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நபியே!) அவர்களுக்காக நீர் கவலை கொள்ளாதீர், அவர்கள் செய்யும் சூழ்ச்சி பற்றி நீர் நெருக்கடியில் ஆகிவிடவும் வேண்டாம்.
Saheeh International
And grieve not over them or be in distress from what they conspire.
وَیَقُوْلُوْنَ مَتٰی هٰذَا الْوَعْدُ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
وَيَقُوْلُوْنَஇன்னும் அவர்கள் கூறுகின்றனர்مَتٰىஎப்போதுهٰذَاஇந்தالْوَعْدُவாக்குاِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்صٰدِقِيْنَ‏உண்மையாளர்களாக
வ யகூலூன மதா ஹாதல் வஃது இன் குன்தும் ஸாதிகீன்
முஹம்மது ஜான்
இன்னும்: “நீங்கள் உண்மை கூறுபவர்களாக இருந்தால் (வேதனை பற்றிய) இந்த வாக்குறுதி எப்பொழுது (நிறைவேறும்?)” என்றும் அவர்கள் கேட்கிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களை நோக்கி) ‘‘ மெய்யாகவே நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் நீங்கள் பயமுறுத்தும் வேதனை எப்பொழுது வரும்?'' என்று (நிராகரிப்பாளர்கள்) கேட்கிறார்கள்.
IFT
இவர்கள் கேட்கின்றனர்: “நீங்கள் உண்மையாளர்களாயின் இந்த எச்சரிக்கை எப்போது நிறைவேறும்?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், (வேதனை வருமென்று) இந்த வாக்கு எப்பொழுது வரும்?” என்று அவர்கள் கேட்கின்றார்கள்.
Saheeh International
And they say, "When is [the fulfillment of] this promise, if you should be truthful?"
قُلْ عَسٰۤی اَنْ یَّكُوْنَ رَدِفَ لَكُمْ بَعْضُ الَّذِیْ تَسْتَعْجِلُوْنَ ۟
قُلْகூறுவீராகعَسٰٓى اَنْ يَّكُوْنَவரக்கூடும்رَدِفَசமீபமாகلَـكُمْஉங்களுக்குبَعْضُசிலالَّذِىْஎவைتَسْتَعْجِلُوْنَ‏அவசரப்படுகின்றீர்கள்
குல் 'அஸா அ(ன்)ய்-யகூன ரதிFப லகும் Bபஃளுல் லதீ தஸ்தஃஜிலூன்
முஹம்மது ஜான்
“நீங்கள் அவசரப்படுபவற்றில் சில இப்பொழுதே உங்களுக்கு வந்து சேரக்கூடும்” என்று (நபியே!) நீர் கூறிவிடுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு (நபியே!) கூறுவீராக: ‘‘ நீங்கள் அவசரப்படுபவற்றில் சில இப்பொழுதே உங்களைப் பின் தொடரவும் கூடும்.''
IFT
நீர் கூறும்: “எந்த ஒரு தண்டனைக்காக நீங்கள் அவசரப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்களோ அதன் ஒரு பகுதி உங்களுக்கு நெருக்கமாக வந்து விட்டிருந்தாலும் அதில் வியப்பொன்றுமில்லை!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு) ”நீங்கள் அவசரப்படுகின்றீர்களே அத்தகையவை சில (இப்பொழுதே) உங்களை வந்தடையக் கூடும் என்று (நபியே!) நீர் கூறுவீராக!
Saheeh International
Say, "Perhaps it is close behind you [i.e., very near] - some of that for which you are impatient.
وَاِنَّ رَبَّكَ لَذُوْ فَضْلٍ عَلَی النَّاسِ وَلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا یَشْكُرُوْنَ ۟
وَاِنَّநிச்சயமாகرَبَّكَஉமது இறைவன்لَذُوْ فَضْلٍஅருளுடையவன்عَلَى النَّاسِமக்கள் மீதுوَلٰكِنَّஎனினும்اَكْثَرَஅதிகமானவர்கள்هُمْஅவர்களில்لَا يَشْكُرُوْنَ‏நன்றி அறிய மாட்டார்கள்
வ இன்ன ரBப்Bபக லதூ Fபள்லின் 'அலன் னாஸி வ லாகின்ன அக்தரஹும் லா யஷ்குரூன்
முஹம்மது ஜான்
இன்னும் நிச்சயமாக உம் இறைவன் மனிதர்கள் மீது மிக்க கிருபையுடையவனாகவே இருக்கின்றான்; ஆனால் அவர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.
அப்துல் ஹமீது பாகவி
ஆயினும், நிச்சயமாக உமது இறைவன் மனிதர்கள் மீது மிக்க அருளையுடையவனாக இருக்கிறான். (ஆதலால், தண்டனையை இதுவரை தாமதப்படுத்தி இருக்கிறான்.) எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதற்கு) நன்றி செலுத்துவதில்லை.
IFT
உண்மையில் உம் அதிபதி மக்களின் மீது பெரிதும் அருள் புரிபவனாக இருக்கின்றான். ஆயினும், மக்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், நிச்சயமாக உமதிரட்சகன் மனிதர்களின் மீது பேரருளுடையவன், எனினும் அவர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.
Saheeh International
And indeed, your Lord is the possessor of bounty for the people, but most of them are not grateful."
وَاِنَّ رَبَّكَ لَیَعْلَمُ مَا تُكِنُّ صُدُوْرُهُمْ وَمَا یُعْلِنُوْنَ ۟
وَاِنَّநிச்சயமாகرَبَّكَஉமது இறைவன்لَيَـعْلَمُநன்கறிவான்مَاஎவற்றைتُكِنُّமறைக்கின்றனصُدُوْرُஉள்ளங்கள்هُمْஅவர்களதுوَمَاஇன்னும் எவற்றைيُعْلِنُوْنَ‏வெளிப்படுத்துகின்றனர்
வ இன்ன ரBப்Bபக ல யஃலமு மா துகின்னு ஸுதூருஹும் வமா யுஃலினூன்
முஹம்மது ஜான்
மேலும்: அவர்களின் இருதயங்கள் மறைத்து வைத்திருப்பதையும், அவர்கள் வெளிப்படுத்துவதையும் நிச்சயமாக உம் இறைவன் நன்கறிவான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நிச்சயமாக உமது இறைவன் அவர்கள் தங்கள் உள்ளங்களில் மறைத்திருப்பதையும், (அதற்கு மாறாக) அவர்கள் வெளிப்படுத்துவதையும் நன்கறிவான்.
IFT
அவர்களுடைய நெஞ்சங்கள் மறைத்திருக்கின்றவற்றையும் அவை வெளிப்படுத்துகின்றவற்றையும் திண்ணமாக, உம் இறைவன் நன்கறிகின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், (நபியே!) நிச்சயமாக உமதிரட்சகன், அவர்களுடைய நெஞ்சங்கள் மறைத்துவைத்திருகின்றதையும், (அதற்கு மாறாக) அவர்கள் வெளிப்படுத்துகின்றதையும், நன்கறிவான்.
Saheeh International
And indeed, your Lord knows what their breasts conceal and what they declare.
وَمَا مِنْ غَآىِٕبَةٍ فِی السَّمَآءِ وَالْاَرْضِ اِلَّا فِیْ كِتٰبٍ مُّبِیْنٍ ۟
وَمَاஇல்லைمِنْ غَآٮِٕبَةٍமறைந்த எதுவும்فِى السَّمَآءِவானத்திலும்وَالْاَرْضِஇன்னும் பூமியிலும்اِلَّاதவிரفِىْ كِتٰبٍபதிவேட்டில்مُّبِيْنٍ‏தெளிவான
வமா மின் கா'இBபதின் Fபிஸ் ஸமா'இ வல் அர்ளி இல்லா Fபீ கிதாBபின் முBபீன்
முஹம்மது ஜான்
வானத்திலும், பூமியிலும் மறைந்துள்ளவற்றில் நின்றும் எதுவும் (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) தெளிவான குறிப்பேட்டில் பதிவு செய்யப்படாமல் இல்லை.
அப்துல் ஹமீது பாகவி
வானத்திலோ பூமியிலோ மறைவாக இருக்கும் எதுவுமே (‘லவ்ஹுல் மஹ்ஃபூள்' என்னும்) அவனுடைய தெளிவான குறிப்புப் புத்தகத்தில் பதியப்படாமலில்லை.
IFT
வானத்திலும் பூமியிலும் மறைந்துள்ள எந்த ஒரு பொருளும் ஒரு தெளிவான பதிவேட்டில் எழுதப்படாமல் இல்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வானத்தில் மற்றும் பூமியில் மறைவாக இருப்பதிலிருந்து எதுவும், (“லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும் அவனுடைய) தெளிவான புத்தகத்தில் இருந்தே தவிர இல்லை.
Saheeh International
And there is nothing concealed within the heaven and the earth except that it is in a clear Register.
اِنَّ هٰذَا الْقُرْاٰنَ یَقُصُّ عَلٰی بَنِیْۤ اِسْرَآءِیْلَ اَكْثَرَ الَّذِیْ هُمْ فِیْهِ یَخْتَلِفُوْنَ ۟
اِنَّநிச்சயமாகهٰذَاஇந்தالْقُرْاٰنَகுர்ஆன்يَقُصُّவிவரிக்கிறதுعَلٰىமீதுبَنِىْۤ اِسْرَآءِيْلَஇஸ்ரவேலர்கள்اَكْثَرَபல விஷயங்களைالَّذِىْஎவைهُمْஅவர்கள்فِيْهِஅதில்يَخْتَلِفُوْنَ‏முரண்படுகின்றனர்
இன்ன ஹாதல் குர்ஆன யகுஸ்ஸு 'அலா Bபனீ இஸ்ரா'ஈல அக்தரல் லதீ ஹும் Fபீஹி யக்தலிFபூன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக இந்த குர்ஆன் பனூ இஸ்ராயீல்களுக்கு அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருந்ததில் பெரும்பாலானதை விவரித்துக் கூறுகிறது.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக இந்த குர்ஆன், இஸ்ராயீலின் சந்ததிகள் எவ்விஷயத்தில் தர்க்கித்துக் கொண்டிருக்கிறார்களோ அவற்றில் பெரும்பாலானவற்றை அவர்களுக்கு விவரித்துக் கூறுகிறது.
IFT
உண்மை இதுவே: இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ள பெரும்பாலான விஷயங்களின் உண்மை நிலையை அவர்களுக்கு இந்தக் குர்ஆன் எடுத்துரைக்கின்றது!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக இந்தக் குர்ஆன், இஸ்ராயீலின் மக்களுக்கு எதில் அவர்கள் வேறுபட்டு(த் தர்கித்து)க் கொண்டிருக்கிறார்களோ அதில் பெரும்பாலானவற்றை விவரித்துக் கூறுகிறது.
Saheeh International
Indeed, this Qur’an relates to the Children of Israel most of that over which they disagree.
وَاِنَّهٗ لَهُدًی وَّرَحْمَةٌ لِّلْمُؤْمِنِیْنَ ۟
وَاِنَّهٗநிச்சயமாக இதுلَهُدًىநேர்வழியும்وَّرَحْمَةٌகருணையும்لِّلْمُؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களுக்கு
வ இன்னஹூ லஹுத(ன்)வ் வ ரஹ்மதுல் லில்மு'மினீன்
முஹம்மது ஜான்
மேலும்: நிச்சயமாக இது முஃமின்களுக்கு நேர்வழியாகவும், ரஹ்மத்தாக (நல்லருளாக)வும் இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, அவர்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டார்களோ அவர்களுக்கு இது நேர்வழிகாட்டியாகவும் அருளாகவும் இருக்கிறது.
IFT
மேலும், அது இறைநம்பிக்கையாளர்களுக்கு நேர்வழி காட்டியாகவும், கருணையாகவும் இருக்கின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் நிச்சயமாக இ(ந்தக்குர் ஆனான)து, விசுவாசங்கொண்டோர்களுக்கு நேர்வழியாகவும், அருளாகவும் இருக்கின்றது.
Saheeh International
And indeed, it is guidance and mercy for the believers.
اِنَّ رَبَّكَ یَقْضِیْ بَیْنَهُمْ بِحُكْمِهٖ ۚ وَهُوَ الْعَزِیْزُ الْعَلِیْمُ ۟ۙۚ
اِنَّநிச்சயமாகرَبَّكَஉமது இறைவன்يَقْضِىْதீர்ப்பளிப்பான்بَيْنَهُمْஅவர்களுக்கு மத்தியில்بِحُكْمِهٖ‌ۚதனது சட்டத்தின் படிوَهُوَஅவன்தான்الْعَزِيْزُமிகைத்தவன்الْعَلِيْمُ ۙ‌ۚ‏நன்கறிந்தவன்
இன்ன ரBப்Bபக யக்ளீ Bபய்னஹும் Bபிஹுக்மிஹ்; வ ஹுவல் 'அZஜீZஜுல் 'அலீம்
முஹம்மது ஜான்
நிச்சயமாக உம் இறைவன் (இறுதியில்) தன் கட்டளையைக் கொண்டு அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான் - மேலும், அவன்தான் மிகைத்தவன்; நன்கறிந்தவன்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக உமது இறைவன் தன் உத்தரவைக் கொண்டு (இந்த குர்ஆன் மூலம்) அவர்களுக்கிடையில் (ஏற்பட்ட விவகாரங்களைப் பற்றி) தீர்ப்பளிக்கிறான். அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் (அனைத்தையும்) அறிந்தவனும் ஆவான்.
IFT
(இதேபோன்று) திண்ணமாக, உம் இறைவன் இந்த மக்களிடையேயும் தன்னுடைய கட்டளையால் தீர்ப்பு வழங்குவான். அவன் யாவற்றையும் மிகைத்தவனாகவும், நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக உமதிரட்சகன், தன் தீர்ப்பைக் கொண்டு அவர்களுக்கிடையில் (மறுமையில்) தீர்ப்பளிப்பான், அவன்தான் (யாவரையும்) மிகைத்தவன் (யாவற்றையும்) நன்கறிகிறவன்.
Saheeh International
Indeed, your Lord will judge between them by His [wise] judgement. And He is the Exalted in Might, the Knowing.
فَتَوَكَّلْ عَلَی اللّٰهِ ؕ اِنَّكَ عَلَی الْحَقِّ الْمُبِیْنِ ۟
فَتَوَكَّلْஆகவே, நம்பிக்கை வைப்பீராக!عَلَىமீதுاللّٰهِ‌ؕஅல்லாஹ்வின்اِنَّكَநிச்சயமாக நீர்عَلَىமீதுالْحَـقِّசத்தியத்தின்الْمُبِيْنِ‏தெளிவான
Fபதவக்கல் 'அலல் லாஹி இன்னக 'அலல் ஹக்கில் முBபீன்
முஹம்மது ஜான்
எனவே, (நபியே!) அல்லாஹ்வின் மீதே (முற்றிலும்) நம்பிக்கை வைப்பீராக நிச்சயமாக நீர் தெளிவான உண்மையின் மீது இருக்கின்றீர்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (நபியே!) நீர் அல்லாஹ்வையே நம்புவீராக. நிச்சயமாக நீர் தெளிவான உண்மையின் மீதே இருக்கிறீர்.
IFT
எனவே (நபியே!) அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருப் பீராக! திண்ணமாக, நீர் தெளிவான உண்மையில் இருக்கின்றீர்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே (நபியே! உமது காரியங்களை அவனிடமே ஒப்படைத்து முழுமையாக) அல்லாஹ்வின் மீது நீர் நம்பிக்கை வைப்பீராக! நிச்சயமாக நீர் தெளிவான உண்மையின் மீது இருக்கின்றீர்.
Saheeh International
So rely upon Allah; indeed, you are upon the clear truth.
اِنَّكَ لَا تُسْمِعُ الْمَوْتٰی وَلَا تُسْمِعُ الصُّمَّ الدُّعَآءَ اِذَا وَلَّوْا مُدْبِرِیْنَ ۟
اِنَّكَநிச்சயமாக நீர்لَا تُسْمِعُநீர் செவியுறச் செய்யமுடியாதுالْمَوْتٰىமரணித்தவர்களைوَلَا تُسْمِعُஇன்னும் நீர் செவியுறச் செய்ய முடியாதுالصُّمَّசெவிடர்களுக்கும்الدُّعَآءَஅழைப்பைاِذَا وَلَّوْا مُدْبِرِيْنَ‏அவர்கள் புறமுதுகிட்டவர்களாக திரும்பினால்
இன்னக லா துஸ்மி'உல் மவ்தா வலா துஸ்மி'உஸ் ஸும்மத் து'ஆ இதா வல்லவ் முத்Bபிரீன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக நீர் மரித்தோரைக் கேட்கும் படிச் செய்ய முடியாது; - அவ்வாறே செவிடர்களையும் - அவர்கள் புறங்காட்டித் திரும்பி விடும்போது - (உம்) அழைப்பைக் கேட்கும் படிச் செய்ய முடியாது.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) மரணித்தவர்களை கேட்கவைக்க நிச்சயமாக உம்மால் முடியாது. (அவ்வாறே உமக்குப்) புறங்காட்டிச் செல்லும் செவிடர்களை, (நீர்) அழைக்கும் (உமது) சப்தத்தைக் கேட்க வைக்கவும் உம்மால் முடியாது.
IFT
இறந்தவர்களை உம்மால் கேட்கச் செய்ய முடியாது. புறங்காட்டியோடும் செவிடர்களுக்கும் (உம்முடைய) அழைப்பை எடுத்துரைக்க முடியாது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நிச்சயமாக நீர் மரணித்தோரைச் செவியேற்கச் செய்யமாட்டீர், (அது உம்மால் முடியாது) மேலும் செவிடர்களுக்கும்_ அவர்கள் புறங்காட்டியவர்களாக திரும்பிச்சென்றால் (உம்முடைய) அழைப்பை நீர் செவியேற்கச் செய்யமாட்டீர்.
Saheeh International
Indeed, you will not make the dead hear, nor will you make the deaf hear the call when they have turned their backs retreating.
وَمَاۤ اَنْتَ بِهٰدِی الْعُمْیِ عَنْ ضَلٰلَتِهِمْ ؕ اِنْ تُسْمِعُ اِلَّا مَنْ یُّؤْمِنُ بِاٰیٰتِنَا فَهُمْ مُّسْلِمُوْنَ ۟
وَمَاۤ اَنْتَநீர் முடியாதுبِهٰدِىநேர்வழிபடுத்தالْعُمْىِகுருடர்களைعَنْ ضَلٰلَتِهِمْ‌ؕஅவர்களின் வழிகேட்டிலிருந்துاِنْ تُسْمِعُநீர் செவியுறச் செய்ய முடியாதுاِلَّاதவிரمَنْஎவர்يُّؤْمِنُநம்பிக்கை கொள்வார்بِاٰيٰتِنَاநமது வசனங்களைفَهُمْஅவர்கள்தான்مُّسْلِمُوْنَ‏முற்றிலும் பணிந்து நடப்பவர்கள்
வ மா அன்த Bபிஹாதில் 'உம்யி 'அன் ளலாலதிஹிம் இன் துஸ்மி'உ இல்லா மய் யு'மினு Bபி ஆயாதினா Fபஹும் முஸ்லிமூன்
முஹம்மது ஜான்
இன்னும்: நீர் குருடர்களையும் அவர்களுடைய வழிகேட்டிலிருந்து (அகற்றி) நேர் வழியில் செலுத்த முடியாது - எவர்கள் நம் வசனங்களை நம்புகிறார்களோ அவர்களைத் தான் (அவற்றைக்) கேட்கும்படி நீர் செய்ய முடியும்; ஏனெனில் அவர்கள் (அவற்றை) முற்றிலும் ஏற்றுக்கொள்வர்.
அப்துல் ஹமீது பாகவி
குருடர்களை, அவர்களுடைய வழிகேட்டிலிருந்து நேரான வழிக்குக் கொண்டுவரவும் உம்மால் முடியாது. எவர்கள் நம் வசனங்களை நம்பிக்கை கொண்டு முற்றிலும் நமக்கு பணிந்து நடக்கிறார்களோ அவர்களைத் தவிர மற்றவர்களுக்கு நீர் (நம் வசனங்களைக்) கேட்க வைக்க முடியாது.
IFT
குருடர்களை வழிகேட்டிலிருந்து மீட்டு நேர்வழியில் சேர்த்திடவும் உம்மால் முடியாது! எவர்கள் நம்முடைய வசனங்கள் மீது நம்பிக்கை கொள்கின்றார்களோ, மேலும், கீழ்ப்படிபவர்களாயும் விளங்குகின்றார்களோ அவர்களையே உம்மால் செவியேற்கச் செய்ய முடியும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
குருடர்களுக்கு_ அவர்களுடைய வழிகேட்டை விட்டும் (நீக்கி) நேர்வழி காட்டுபவராகவும் நீர் இல்லை, நம்முடைய வசனங்களைக் கொண்டு விசுவாசம் கொள்கிறவரைத்தவிர (வேறெவரையும்) நீர் (அவற்றைச்) செவியுறச் செய்ய முடியாது. அவர்கள் (முற்றிலும்) கீழ்படிந்து நடப்பவர்கள்.
Saheeh International
And you cannot guide the blind away from their error. You will only make hear those who believe in Our verses so they are Muslims [i.e., submitting to Allah].
وَاِذَا وَقَعَ الْقَوْلُ عَلَیْهِمْ اَخْرَجْنَا لَهُمْ دَآبَّةً مِّنَ الْاَرْضِ تُكَلِّمُهُمْ ۙ اَنَّ النَّاسَ كَانُوْا بِاٰیٰتِنَا لَا یُوْقِنُوْنَ ۟۠
وَ اِذَا وَقَعَநிகழ்ந்து விட்டால்الْقَوْلُவாக்குعَلَيْهِمْஅவர்கள் மீதுاَخْرَجْنَاநாம் வெளிப்படுத்துவோம்لَهُمْஅவர்களுக்குدَآبَّةًஒரு மிருகத்தைمِّنَ الْاَرْضِபூமியிலிருந்துتُكَلِّمُهُمْۙஅது பேசும்/அவர்களிடம்اَنَّ النَّاسَநிச்சயமாக மக்கள்كَانُوْاஇருந்தனர்بِاٰيٰتِنَاநமது அத்தாட்சிகளைக் கொண்டுلَا يُوْقِنُوْنَ‏உறுதி கொள்ளாதவர்களாக
வ இதா வக'அல் கவ்லு 'அலய்ஹிம் அக்ரஜ்னா லஹும் தாBப்Bபதன் மினல் அர்ளி துகல் லிமுஹும் அன்னன் னாஸ கானூ Bபி ஆயாதினா லா யூகினூன்
முஹம்மது ஜான்
அவர்கள் மீது (வேதனையுடைய) வாக்கு நெருங்கும் போது, அவர்களுக்காக ஒரு பிராணியை பூமியிலிருந்து நாம் வெளியாக்குவோம்; அது, நிச்சயமாக மனிதர்கள் (யார், யார்) நம் வசனங்களின் மீது உறுதி கொள்ளவில்லையென்று அவர்களுக்குச் சொல்லிக் காண்பிக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
இறுதிநாள் அவர்களை நெருங்கிய சமயத்தில், அவர்களுக்காகப் பூமியிலிருந்து ஒரு கால்நடையை நாம் வெளிப்படுத்துவோம். அது எந்தெந்த மனிதர்கள் நம் வசனங்களை நம்பிக்கை கொள்ளவில்லை என்பதை அவர்களுக்குச் சொல்லிக் காண்பிக்கும்.
IFT
மேலும், அவர்கள் மீது நம்முடைய ஆணை நிறைவேறும் நேரம் வந்துவிட்டால் நாம் அவர்களுக்கு பூமியிலிருந்து ஒரு மிருகத்தை வெளிப்படுத்துவோம். மக்கள் நம்முடைய வசனங்கள் மீது உறுதியான நம்பிக்கை கொள்ளாமலிருந்தார்கள் என்று அது அவர்களிடம் எடுத்துக்கூறும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இறுதி நாளைப் பற்றி நம்முடைய) கூற்று அவர்கள் மீது நிகழ்ந்தும் விட்டால், அவர்களுக்காகப் பூமியிலிருந்து ஒரு பிராணியை நாம் வெளிப்படுத்துவோம், நிச்சயமாக மனிதர்கள், நம்முடைய வசனங்களை உறுதி கொள்ளாதர்வர்களாக இருந்தார்கள் என்று அது அவர்களிடம் (தெளிவாகப்) பேசும்.
Saheeh International
And when the word [i.e., decree] befalls them, We will bring forth for them a creature from the earth speaking to them, [saying] that the people were, of Our verses, not certain [in faith].
وَیَوْمَ نَحْشُرُ مِنْ كُلِّ اُمَّةٍ فَوْجًا مِّمَّنْ یُّكَذِّبُ بِاٰیٰتِنَا فَهُمْ یُوْزَعُوْنَ ۟
وَ يَوْمَநாளில்نَحْشُرُநாம்எழுப்புகின்றோம்مِنْ كُلِّ اُمَّةٍஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும்فَوْجًاகூட்டத்தைمِّمَّنْ يُّكَذِّبُபொய்ப்பிக்கின்றவர்களின்بِاٰيٰتِنَاநமது அத்தாட்சிகளைفَهُمْஆகவே, அவர்கள்يُوْزَعُوْنَ‏தடுத்து நிறுத்தப்படுவார்கள்
வ யவ்ம னஹ்ஷுரு மின் குல்லி உம்மதின் Fபவ்ஜன் மிம்ம(ன்)ய் யுகத்திBபு Bபி ஆயாதினா Fபஹும் யூZஜ'ஊன்
முஹம்மது ஜான்
(அவர்களிலுள்ள) ஒவ்வொரு சமுதாயத்தாரிலும் நம் வசனங்களைப் பொய்ப்பித்தவர்களை(ப் பிரித்து) ஒரு படையாக நாம் சேகரிக்கும் நாளை (நபியே! நீர் நினைவூட்டுவீராக).
அப்துல் ஹமீது பாகவி
ஒவ்வொரு சமுதாயத்திலும் நமது வசனங்களைப் பொய்ப்பித்தவர்களை (தனித்தனி) கூட்டமாக (பிரித்து) நாம் (அவர்களை) ஒன்றுதிரட்டும் நாளை (நபியே! நீர் அவர்களுக்கு) ஞாபகமூட்டுவீராக. ஆகவே, அவர்கள் (அப்போது விசாரனைக்காக) நிறுத்தி வைக்கப்படுவார்கள்.
IFT
மேலும், சற்று சிந்தித்துப் பாருங்கள்; அந்நாளில் ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் எவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யெனக் கூறிக் கொண்டிருந்தார்களோ அவர்களை படைபடையாகத் திரட்டிக் கொண்டு வருவோம். பிறகு, அவர்கள் (வகை மற்றும் தகுதியைப் பொறுத்துப் பல படித்தரங்களில்) முறைப்படுத்தப்படுவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஒவ்வொரு சமுதாயத்திலிருந்து நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தவர்களை, ஒரு படையாக நாம் ஒன்று திரட்டும் நாளை (நபியே நீர் நினைவு கூர்வீராக!) பின்னர் (மஹ்ஷர் மைதானத்தின் பால் செல்லும்போது அவர்களில் முன்னுள்ளவர்களுடன் அவர்களில் பின்னுள்ளவர்கள் சேர்ந்து கொள்வதற்காக) அவர்கள் நிறுத்திவைக்கப்படுவர்.
Saheeh International
And [warn of] the Day when We will gather from every nation a company of those who deny Our signs, and they will be [driven] in rows
حَتّٰۤی اِذَا جَآءُوْ قَالَ اَكَذَّبْتُمْ بِاٰیٰتِیْ وَلَمْ تُحِیْطُوْا بِهَا عِلْمًا اَمَّاذَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
حَتّٰٓىஇறுதியாகاِذَا جَآءُوْஅவர்கள் வந்து விடும்போதுقَالَஅவன் கூறுவான்اَكَذَّبْتُمْநீங்கள்பொய்ப்பித்தீர்களா?بِاٰيٰتِىْஎனதுஅத்தாட்சிகளைوَلَمْ تُحِيْطُوْا بِهَا عِلْمًاநீங்கள் முழுமையாக அறியாமல் இருக்க/அவற்றைاَمَّاذَا?/அல்லது/என்னكُنْتُمْ تَعْمَلُوْنَ‏நீங்கள் செய்து கொண்டு இருந்தீர்கள்?
ஹத்தா இதா ஜா'ஊ கால அகத்தBப்தும் Bபி ஆயாதீ வ லம் துஹீதூ Bபிஹா 'இல்மன் அம்மாதா குன்தும் தஃமலூன்
முஹம்மது ஜான்
அவர்கள் யாவரும் வந்ததும்: “நீங்கள் என் வசனங்களைச் சூழ்ந்தறியாத நிலையில் அவற்றைப் பொய்ப்பித்துக் கொண்டிருந்தீர்களா? நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?” என்று கேட்பான்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் அனைவரும் (தங்கள் இறைவனிடம்) வரும் சமயத்தில் (இறைவன் அவர்களை நோக்கி) ‘‘ நீங்கள் என் வசனங்களை நன்கறிந்து கொள்வதற்கு முன்னதாகவே அதைப் பொய்யாக்கி விட்டீர்களா? (அவ்வாறில்லையாயின்) பின்னர் என்னதான் நீங்கள் செய்து கொண்டிருந்தீர்கள்?'' என்று கேட்பான்.
IFT
இவ்வாறாக, அவர்கள் அனைவரும் வந்துவிடும்போது (இறைவன் அவர்களிடம்) வினவுவான்: “என்னுடைய சான்றுகளை நீங்கள் முழுமையாக அறிந்து கொள்ளாத நிலையில் அவற்றைப் பொய்யென்று கூறினீர்களா? இல்லை எனில், நீங்கள் வேறு என்னதான் செய்து கொண்டிருந்தீர்கள்?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
முடிவாக_அவர்கள் (யாவரும் தங்கள் இரட்சகனிடம்) வந்து விடுவார்களானால், (அவர்களிடம்) “நீங்கள் என்னுடைய வசனங்களை_அவற்றை முழுமையாக நீங்கள் அறிந்து கொள்ளாமல் இருந்தும் பொய்யாக்கிக் கொண்டிருந்தீர்களா? அல்லது என்னதான் நீங்கள் செய்துகொண்டிருந்தீர்கள்?” என்று (அல்லாஹ்வாகிய) அவன் கேட்பான்.
Saheeh International
Until, when they arrive [at the place of Judgement], He will say, "Did you deny My signs while you encompassed them not in knowledge, or what [was it that] you were doing?"
وَوَقَعَ الْقَوْلُ عَلَیْهِمْ بِمَا ظَلَمُوْا فَهُمْ لَا یَنْطِقُوْنَ ۟
وَوَقَعَநிகழ்ந்து விட்டதுالْقَوْلُகூற்றுعَلَيْهِمْஅவர்கள் மீதுبِمَا ظَلَمُوْاஅவர்களின் தீமைகளால்فَهُمْஆகவே, அவர்கள்لَا يَنْطِقُوْنَ‏பேசமாட்டார்கள்
வ வக'அல் கவ்லு 'அலய்ஹிம் Bபிமா ளலமூ Fபஹும் லா யன்திகூன்
முஹம்மது ஜான்
அன்றியும், அவர்கள் செய்து வந்த அக்கிரமத்தின் காரணத்தினால் அவர்கள் மீது (வேதனை பற்றிய) வாக்கு ஏற்பட்டு விட்டது; ஆகவே, அவர்கள் பேசமாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் செய்த அநியாயத்தின் காரணமாக அவர்கள் மீது (வேதனையின்) கட்டளை உறுதியாகிவிடும். அச்சமயம் அவர்களால் பேசவும் முடியாது.
IFT
மேலும், அவர்கள் கொடுமை செய்த காரணத்தினால் வேதனை பற்றிய கட்டளை அவர்கள் மீது நிறைவேற்றப்படும். அப்போது, அவர்களால் எதுவும் பேச முடியாது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவர்கள் அநியாயம் செய்து கொண்டிருந்ததன் காரணமாக அவர்கள் மீது (தண்டனையைப் பற்றிய) கூற்று ஏற்பட்டுவிட்டது, ஆகவே அவர்கள் பேசமாட்டார்கள்.
Saheeh International
And the decree will befall them for the wrong they did, and they will not [be able to] speak.
اَلَمْ یَرَوْا اَنَّا جَعَلْنَا الَّیْلَ لِیَسْكُنُوْا فِیْهِ وَالنَّهَارَ مُبْصِرًا ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یُّؤْمِنُوْنَ ۟
اَلَمْ يَرَوْاஅவர்கள் பார்க்கவில்லையா?اَنَّاநிச்சயமாக நாம்جَعَلْنَاநாம் அமைத்தோம்الَّيْلَஇரவைلِيَسْكُنُوْاஅவர்கள் ஓய்வு பெறுவதற்காக(வும்)فِيْهِஅதில்وَالنَّهَارَஇன்னும் பகலைمُبْصِرًا ؕவெளிச்சமாகவும்اِنَّநிச்சயமாகفِىْ ذٰ لِكَஇதில்لَاٰيٰتٍபல அத்தாட்சிகள்لِّـقَوْمٍமக்களுக்குيُّؤْمِنُوْنَ‏நம்பிக்கை கொள்கின்றனர்
அலம் யரவ் அன்னா ஜ'அல்னல் லய்ல லி யஸ்குனூ Fபீஹி வன்னஹார முBப்ஸிரா; இன்ன Fபீ தாலிக ல ஆயாதில் லிகவ் மி(ன்)ய்-யு'மினூன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக நாமே இரவை அதில் அவர்கள் ஓய்ந்திருப்பதற்காகவும், பகலை (அவர்களுக்கு) வெளிச்சமாகவும் ஆக்கினோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நாம்தான் அவர்கள் சுகமடைவதற்கு இரவையும் (அனைத்தையும்) நன்கு பார்ப்பதற்குப் பகலையும் உண்டு பண்ணினோம் என்பதை அவர்கள் (கவனித்துப்) பார்க்கவில்லையா? நிச்சயமாக இதில் நம்பிக்கை கொண்ட மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
IFT
இரவை அவர்களுக்கு நிம்மதி அளிக்கக் கூடியதாகவும், பகலைப் பிரகாசிக்கக் கூடியதாகவும் ஆக்கியிருப்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? இறைநம்பிக்கை கொண்ட சமூகத்தினர்க்கு இவற்றில் அநேக சான்றுகள் இருந்தன!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நாம் இரவை, அதில் அவர்கள் அமைதி பெறுவதற்காகவும், பகலை (யாவற்றையும்) நன்கு பார்ப்பதற்காகவும் நாமே ஆக்கினோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நிச்சயமாக இதில் விசுவாசங்கொண்ட சமூகத்தார்க்குப் பல அத்ததாட்சிகள் இருக்கின்றன.
Saheeh International
Do they not see that We made the night that they may rest therein and the day giving sight? Indeed in that are signs for a people who believe.
وَیَوْمَ یُنْفَخُ فِی الصُّوْرِ فَفَزِعَ مَنْ فِی السَّمٰوٰتِ وَمَنْ فِی الْاَرْضِ اِلَّا مَنْ شَآءَ اللّٰهُ ؕ وَكُلٌّ اَتَوْهُ دٰخِرِیْنَ ۟
وَيَوْمَநாளில்يُنْفَخُஊதப்படும்فِىْ الصُّوْرِ‘சூர்’ல்فَفَزِعَதிடுக்கிடுவார்(கள்)مَنْ فِىْ السَّمٰوٰتِவானங்களில் உள்ளவர்களும்وَمَنْ فِى الْاَرْضِபூமியில் உள்ளவர்களும்اِلَّاதவிரمَنْ شَآءَஎவர்களை நாடினான்اللّٰهُ‌ؕஅல்லாஹ்وَكُلٌّஎல்லோரும்اَتَوْهُஅவனிடம் வருவார்கள்دٰخِرِيْنَ‏பணிந்தவர்களாக
வ யவ்ம யுன்Fபகு Fபிஸ் ஸூரி FபFபZஜி'அ மன் Fபிஸ் ஸமாவாதி வ மன் Fபில் அர்ளி இல்லா மன் ஷா'அல் லாஹ்; வ குல்லுன் அதவ்ஹு தாகிரீன்
முஹம்மது ஜான்
இன்னும் ஸூர் (எக்காளம்) ஊதப்படும் நாளை (நபியே! நீர் நினைவூட்டுவீராக; அந்நாளில்) அல்லாஹ் நாடியவர்களைத் தவிர, வானங்களில் இருப்பவர்களும், பூமியில் இருப்பவர்களும் திகிலடைந்து விடுவார்கள்; அவ்வனைவரும் பணிந்தவர்களாக அவனிடம் வருவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
சூர் (எக்காளம்) ஊதப்படும் நாளில் அல்லாஹ் அருள் புரிந்தவர்களைத் தவிர, வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைவருமே திடுக்கிட்டு, நடுங்கித் தலை குனிந்தவர்களாக அவனிடம் வந்து சேருவார்கள்.
IFT
மேலும், அந்நாளில் எக்காளம் ஊதப்படும். அப்போது, வானங்களிலும், பூமியிலுமுள்ள அனைவரும் பெரும் திகில் அடைவார்கள். அந்த திகிலில் இருந்து எவர்களை அல்லாஹ் காப்பாற்ற நாடுவானோ அவர்களைத் தவிர! மேலும், அனைவரும் அடங்கி ஒடுங்கியவர்களாக அவன் திருமுன் வருவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
‌‍ஸுர் (குழல்) ஊதப்படும் நாளில், அல்லாஹ்(காப்பாற்ற) நாடியவர்களைத் தவிர வானங்களிலுள்ளவர்களும், பூமியிலுள்ளவர்களும் திடுக்கிட்டு விடுவார்கள், ஒவ்வொருவரும் பணிந்தவர்களாக அவனிடம் வந்து விடுவர்.
Saheeh International
And [warn of] the Day the Horn will be blown, and whoever is in the heavens and whoever is on the earth will be terrified except whom Allah wills. And all will come to Him humbled.
وَتَرَی الْجِبَالَ تَحْسَبُهَا جَامِدَةً وَّهِیَ تَمُرُّ مَرَّ السَّحَابِ ؕ صُنْعَ اللّٰهِ الَّذِیْۤ اَتْقَنَ كُلَّ شَیْءٍ ؕ اِنَّهٗ خَبِیْرٌ بِمَا تَفْعَلُوْنَ ۟
وَتَرَىபார்ப்பீர்الْجِبَالَமலைகளைتَحْسَبُهَاஅவற்றை நீர் கருதுவீர்جَامِدَةًஉறுதியாக நிற்பதாகوَّهِىَஅவையோتَمُرُّசெல்கின்றனمَرَّசெல்வதைப் போன்றுالسَّحَابِ‌ؕமேகங்கள்صُنْعَசெயலாகும்اللّٰهِஅல்லாஹ்வின்الَّذِىْۤஎவன்اَتْقَنَசெம்மையாகச் செய்தான்كُلَّ شَىْءٍ‌ؕஎல்லாவற்றையும்اِنَّهٗநிச்சயமாக அவன்خَبِيْرٌۢஆழ்ந்தறிபவன்بِمَا تَفْعَلُوْنَ‏நீங்கள் செய்பவற்றை
வ தரல் ஜிBபால தஹ்ஸBபுஹா ஜாமிதத(ன்)வ் வ ஹிய தமுர்ரு மர்ரஸ் ஸஹாBப்; ஸுன்'அல் லாஹில் லதீ அத்கன குல்ல ஷய்'; இன்னஹூ கBபீருன் Bபிமா தFப்'அலூன்
முஹம்மது ஜான்
இன்னும் நீர் மலைகளைப் பார்த்து அவை மிகவும் உறுதியாக இருப்பதாக எண்ணுகிறீர்; (எனினும் அந்நாளில்) அவை மேகங்களைப் போல் பறந்தோடும்; ஒவ்வொரு பொருளையும் உறுதியாக்கிய அல்லாஹ்வின் செயல்திறனாலேயே (அவ்வாறு நிகழும்.) நிச்சயமாக, அவன் நீங்கள் செய்வதை நன்கு அறிபவன்.
அப்துல் ஹமீது பாகவி
நீர் காணும் மலைகளை அவை வெகு உறுதியாக இருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறீர். (எனினும், அந்நாளில்) அவை மேகத்தைப் போல் (ஆகாயத்தில்) பறந்தோடும். ஒவ்வொரு பொருளையும் (படைத்து) அதன் இயற்கை அமைப்பின் மீது உறுதிப்படுத்திய அல்லாஹ்வுடைய கட்டளையால் (அவ்வாறு நடைபெறும்). நிச்சயமாக அவன் நீங்கள் செய்து கொண்டிருக்கும் அனைத்தையும் நன்கறிபவன் ஆவான்.
IFT
(இன்று) நீர் மலைகளைப் பார்க்கும்போது அவை நன்கு நிலைகொண்டிருப்பதாகக் கருதுகின்றீர். ஆனால் (அன்றைய நாளில்) அவை மேகங்களைப் போன்று பறந்தோடிக் கொண்டிருக்கும்! ஒவ்வொரு பொருளையும் நுண்ணறிவினால் செம்மைப்படுத்திய அல்லாஹ்வுடைய பேராற்றலின் விந்தை இது! நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என்பதை திண்ணமாக அவன் நன்கறிந்தவன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும் நீர் மலைகளை_அவைகளைத்திடமானவையாக (அசையாததாக) நீர் எண்ணுகிறீர்_(எனினும் அந்நாளின்போது) அவை மேகம் நகர்வது போல் நகர்வதை நீர் காண்பீர், ஒவ்வொரு பொருளையும் (படைத்து,) உறுதியாக ஒழுங்குபடுத்திய, அல்லாஹ்வுடைய (கலைத்திறன் நிறைந்த) செயலாக (அவ்வாறு நடைபெறும்) நிச்சயமாக அவன், நீங்கள் செய்துகொண்டிருபவற்றை நன்கு உணர்பவன்.
Saheeh International
And you see the mountains, thinking them motionless, while they will pass as the passing of clouds. [It is] the work of Allah, who perfected all things. Indeed, He is Aware of that which you do.
مَنْ جَآءَ بِالْحَسَنَةِ فَلَهٗ خَیْرٌ مِّنْهَا ۚ وَهُمْ مِّنْ فَزَعٍ یَّوْمَىِٕذٍ اٰمِنُوْنَ ۟
مَنْயார்جَآءَவருவரோبِالْحَسَنَةِநன்மையைக் கொண்டுفَلَهٗஅவருக்கு உண்டுخَيْرٌசிறந்ததுمِّنْهَا‌ۚஅதன் காரணமாகوَهُمْஅவர்கள்مِّنْ فَزَعٍதிடுக்கத்திலிருந்துيَّوْمَٮِٕذٍஅந்நாளில்اٰمِنُوْنَ‏பாதுகாப்புப் பெறுவார்கள்
மன் ஜா'அ Bபில் ஹஸனதி Fபலஹூ கய்ருன் மின்ஹா வ ஹும் மின் FபZஜ'இ(ன்)ய் யவ்ம'இதின் ஆமினூன்
முஹம்மது ஜான்
(அந்நாளில்) எவர் நன்மையைக் கொண்டு வருகிறாரோ, அவருக்கு அதைவிட மேலானது உண்டு - மேலும் அவர்கள் அந்நாளின் திடுக்கத்தை விட்டும் அச்சந் தீர்ந்து இருப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
எவரேனும் ஒரு நன்மையைச் செய்தால், அதற்கு(ரிய கூலியைவிட) மேலானதே அவர்களுக்குக் கிடைக்கிறது. மேலும், அந்நாளின் திடுக்கத்திலிருந்தும் அவர்கள் அச்சமற்று விடுகிறார்கள்.
IFT
எவர் நன்மையைக் கொண்டு வருகின்றாரோ அவருக்கு அதைவிடச் சிறந்த பிரதிபலன் கிடைக்கும். அத்தகையவர்கள் அந்நாளின் திகிலில் இருந்து பாதுகாக்கப்பட்டிருப்பார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எவர் ஒரு நன்மையைக் கொண்டு வந்தாரோ, அதைவிட மிகச் சிறந்த (கூலியான)து அவருக்கு உண்டு, மேலும், (அவ்வாறு செய்யும்) அவர்கள் அந்நாளின் திடுக்கத்திலிருந்து அச்சமற்றவர்கள்.
Saheeh International
Whoever comes [at Judgement] with a good deed will have better than it, and they, from the terror of that Day, will be safe.
وَمَنْ جَآءَ بِالسَّیِّئَةِ فَكُبَّتْ وُجُوْهُهُمْ فِی النَّارِ ؕ هَلْ تُجْزَوْنَ اِلَّا مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
وَمَنْஇன்னும் யார்جَآءَவருவாரோبِالسَّيِّئَةِதீமையைக் கொண்டுفَكُبَّتْதள்ளப்படும்وُجُوْهُهُمْஅவர்களுடைய முகங்கள்فِى النَّارِؕநரகத்தில்هَلْ تُجْزَوْنَகூலி கொடுக்கப்படுவீர்களா?اِلَّاதவிரمَا كُنْتُمْஎதற்கு நீங்கள் இருந்தீர்கள்تَعْمَلُوْنَ‏செய்கிறீர்கள்
வ மன் ஜா'அ Bபிஸ்ஸய் யி'அதி FபகுBப்Bபத் வுஜூஹுஹும் Fபின் னாரி ஹல் துஜ்Zஜவ்ன இல்லா மா குன்தும் தஃமலூன்
முஹம்மது ஜான்
இன்னும்: எவர் தீமையைக் கொண்டு வருகிறாரோ அவர்களுடைய முகங்கள் குப்புற (நரக) நெருப்பில் தள்ளப்படும்; “நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு அன்றி (வேறு) நீங்கள் கூலி கொடுக்கப்படுவீர்களா?” (என்று கூறப்படும்.)
அப்துல் ஹமீது பாகவி
எவரேனும் ஒரு பாவம் செய்தால், அவர்கள் நரகத்தில் முகங்குப்புறத் தள்ளப்பட்டு ‘‘நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கே தவிர (வேறு எதற்கும்) உங்களுக்குக் கூலி கொடுக்கப்படுமா?'' (என்று கேட்கப்படும்.)
IFT
ஆனால், எவர்கள் தீமையைக் கொண்டு வருகின்றார்களோ அவர்கள் அனைவரும் முகங்குப்புற நெருப்பில் வீசி எறியப்படுவார்கள். நீங்கள் இதைத் தவிர ஏதேனும் கூலி பெறுவீர்களா என்ன செய்த வினைக்கு ஏற்பவே அனுபவிப்பதைத் தவிர?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், எவர் ஒரு தீமையைக்கொண்டு வந்தாரோ, அவர்களுடைய முகங்கள் நரகத்தில் குப்புறத்தள்ளப்படும், நீங்கள் செய்து கொண்டிருந்தவைகளுக்கன்றி (வேறு எதற்கும்) கூலி கொடுக்க்கப்படுகிறீர்களா? (என்று கேட்கப்படுவர்.)
Saheeh International
And whoever comes with an evil deed - their faces will be overturned into the Fire, [and it will be said], "Are you recompensed except for what you used to do?"
اِنَّمَاۤ اُمِرْتُ اَنْ اَعْبُدَ رَبَّ هٰذِهِ الْبَلْدَةِ الَّذِیْ حَرَّمَهَا وَلَهٗ كُلُّ شَیْءٍ ؗ وَّاُمِرْتُ اَنْ اَكُوْنَ مِنَ الْمُسْلِمِیْنَ ۟ۙ
اِنَّمَاۤ اُمِرْتُநான் கட்டளையிடப்பட்டதெல்லாம்اَنْ اَعْبُدَவணங்குவதற்குத்தான்رَبَّஇறைவனைهٰذِهِ الْبَلْدَةِஇந்த ஊரின்الَّذِىْ حَرَّمَهَاஎவன்/புனிதப்படுத்தியுள்ளான்/அதைوَلَهٗஅவனுக்குத்தான்كُلُّஎல்லாشَىْءٍ‌பொருள்களும்وَّاُمِرْتُஇன்னும் , நான் கட்டளை இடப்பட்டுள்ளேன்اَنْ اَكُوْنَநான் ஆகவேண்டும் என்றுمِنَ الْمُسْلِمِيْنَۙ‏முஸ்லிம்களில்
இன்னமா உமிர்து அன் அஃBபுத ரBப்Bப ஹாதிஹில் Bபல்ததில் லதீ ஹர்ரமஹா வ லஹூ குல்லு ஷய்'இ(ன்)வ் வ உமிர்து அன் அகூன மினல் முஸ்லிமீன்
முஹம்மது ஜான்
“இந்த ஊரை எவன் கண்ணியப் படுத்தியுள்ளானோ அந்த இறைவனை வணங்குமாறு நான் கட்டளையிடப் பட்டுள்ளேன். எல்லாப் பொருட்களும் அவனுக்கே உரியன; அன்றியும் அவனுக்கே முற்றிலும் வழிபட்டவானக இருக்கும்படியும் நான் ஏவப்பட்டுள்ளேன்” (என்று நபியே! நீர் கூறுவீராக).
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! நீர் கூறுவீராக!) இந்த (மக்கா) நகரத்தின் அதிபதியாகிய இறைவன் ஒருவனையே வணங்குமாறு நான் ஏவப்பட்டு உள்ளேன். அவன்தான் இதை மிக்க கண்ணியப்படுத்தியுள்ளான் எல்லாப் பொருள்களும் அவனுக்கு உரியனவே! மேலும், அவனுக்கே முற்றிலும் வழிபட்டவர்களில் நான் இருக்கும்படி நான் ஏவப்பட்டுள்ளேன்.
IFT
(நபியே! இவர்களிடம் கூறும்:) “எனக்கு இவ்வாறுதான் கட்டளை இடப்பட்டுள்ளது: இந்த (மக்கமா) நகரின் அதிபதிக்கு கீழ்ப்படியுங்கள்; அவனே அதை சங்கை மிக்கதாக ஆக்கினான். மேலும், ஒவ்வொரு பொருளுக்கும் அவனே உரிமையாளனாய் இருக்கின்றான். மேலும், நான் அடிபணிந்தவனாக (முஸ்லிமாக) விளங்க வேண்டும் என்றும்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நான் கட்டளையிடப்பட்டதெல்லாம் (மக்காவாகிய) இந்த ஊரின் இரட்சகனை நான் வணங்குவதைத்தான்; அவன் எத்தகையவனென்றால், இதை அவன் புனிதமாக்கிவைத்துள்ளான்; ஒவ்வொரு பொருளும் அவனுக்கே உரியது! இன்னும், அவனுக்கே முற்றிலும் கீழ்படிந்தவர்களில் உள்ளவனாக (முஸ்லிமாக) இருக்குமாறும் நான் ஏவப்பட்டுள்ளேன்” (என்று நபியே! நீர் கூறுவீராக!)
Saheeh International
[Say, O Muhammad], "I have only been commanded to worship the Lord of this city, who made it sacred and to whom [belongs] all things. And I am commanded to be of the Muslims [i.e., those who submit to Allah].
وَاَنْ اَتْلُوَا الْقُرْاٰنَ ۚ فَمَنِ اهْتَدٰی فَاِنَّمَا یَهْتَدِیْ لِنَفْسِهٖ ۚ وَمَنْ ضَلَّ فَقُلْ اِنَّمَاۤ اَنَا مِنَ الْمُنْذِرِیْنَ ۟
وَاَنْ اَتْلُوَاஇன்னும் நான் ஓதுவதற்குالْقُرْاٰنَ‌ۚகுர்ஆனைفَمَنِஆகவே, யார்اهْتَدٰىநேர்வழி பெறுகிறாரோفَاِنَّمَا يَهْتَدِىْநிச்சயமாக அவர் நேர்வழி பெறுவதெல்லாம்لِنَفْسِهٖ‌ۚஅவரது நன்மைக்காகத்தான்وَمَنْயார்ضَلَّவழி கெடுகின்றானோفَقُلْகூறுவீராக!اِنَّمَاۤ اَنَاநான் எல்லாம்مِنَ الْمُنْذِرِيْنَ‏எச்சரிப்பவர்களில் உள்ளவன்தான்
வ அன் அத்லுவல் குர்ஆன Fபமனிஹ் ததா Fப இன்னமா யஹ்ததீ லினFப்ஸிஹீ வ மன் ளல்ல Fபகுல் இன்னமா அன மினல் முன்திரீன்
முஹம்மது ஜான்
இன்னும்: குர்ஆனை ஓதி வரவும் (நான் ஏவப்பட்டுள்ளேன்); ஆகவே எவர் நேர்வழியை அடைகிறாரோ - அவர் நேர்வழியடைவது அவர் நன்மைக்கேயாகும்; அன்றியும் எவர் வழி கெடுகிறாரோ (அவருக்குக்) கூறுவீராக: “நிச்சயமாக நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்தான்.“
அப்துல் ஹமீது பாகவி
மேலும், திரு குர்ஆனை நான் (அனைவருக்கும்) ஓதிக் காண்பிக்குமாறும் (ஏவப்பட்டுள்ளேன்). (அதைக் கொண்டு) எவன் நேரான வழியை அடைகிறானோ அவன் தன் சுய நன்மைக்காகவே நேரான வழியில் செல்கிறான். எவரேனும் (இதிலிருந்து விலகித்) தவறான வழியில் சென்றால் (நபியே! நீர் அதைப் பற்றிக் கவலைப்படாதீர்.) ‘‘ நிச்சயமாக நான் அச்சமூட்டி எச்சரிப்பவர்களில் ஒருவன்தான் (நிர்ப்பந்திப்பவனல்ல)'' என்று கூறுவீராக.
IFT
இந்தக் குர்ஆனை ஓதிக் காண்பிக்க வேண்டும் என்றும் கட்டளையிடப்பட்டுள்ளேன்.” எவர் நேர்வழியை மேற்கொள்கின்றாரோ அவர் தம்முடைய நன்மைக்காகவே நேர்வழியை மேற்கொள்கின்றார். மேலும், எவன் வழிபிறழ்ந்து போகின்றானோ அவனிடம் கூறிவிடுவீராக: “நான் எச்சரிக்கை செய்யக்கூடியவனாய் மட்டுமே இருக்கின்றேன்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அன்றியும், குர் ஆனை நான் ஓதிக்கொண்டிருக்குமாறும் (ஏவப்பட்டுள்ளேன். அதனைக் கொண்டு) எவர் நேர் வழியை அடைகின்றாரோ அவர் நேர்வழியடைவதெல்லாம் அவருக்கே (தன் சுய நன்மைக்ககாகவே) ஆகும், இன்னும் எவர் (இதிலிருந்து) வழி தவறி விடுகிறாரோ நிச்சயமாக நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களில் உள்ளவனே” என்று கூறுவீராக!
Saheeh International
And to recite the Qur’an." And whoever is guided is only guided for [the benefit of] himself; and whoever strays - say, "I am only [one] of the warners."
وَقُلِ الْحَمْدُ لِلّٰهِ سَیُرِیْكُمْ اٰیٰتِهٖ فَتَعْرِفُوْنَهَا ؕ وَمَا رَبُّكَ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ ۟۠
وَقُلِகூறுவீராகالْحَمْدُஎல்லாப் புகழும்لِلّٰهِஅல்லாஹ்விற்கேسَيُرِيْكُمْஉங்களுக்கு காண்பிப்பான்اٰيٰتِهٖதனது அத்தாட்சிகளைفَتَعْرِفُوْنَهَا‌ ؕஅச்சமயம் நீங்கள் அறிந்து கொள்வீர்கள் / அவற்றைوَمَاஇல்லைرَبُّكَஉமது இறைவன்بِغَافِلٍகவனிக்காதவனாகعَمَّا تَعْمَلُوْنَ‏நீங்கள் செய்பவற்றை
வ குலில் ஹம்து லில்லாஹி ஸ யுரீகும் ஆயாதிஹீ Fப தஃரிFபூனஹா; வமா ரBப்Bபுக BபிகாFபிலின் 'அம்மா தஃமலூன்
முஹம்மது ஜான்
இன்னும் கூறுவீராக: “எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவன் சீக்கிரத்தில் உங்களுக்குத் தன் அத்தாட்சிகளைக் காண்பிப்பான்; அப்போது அவற்றை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்” மேலும் உம்முடைய இறைவன் நீங்கள் செய்வதை விட்டும் பராமுகமாக இல்லை.
அப்துல் ஹமீது பாகவி
புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. (மறுமை வருவதற்குரிய) தன் அத்தாட்சிகளை அதி சீக்கிரத்தில் அவன் உங்களுக்குக் காண்பிப்பான். அச்சமயம், அவற்றை நீங்கள் (உண்மையென) அறிந்து கொள்வீர்கள். (தற்சமயம்) நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதைப் பற்றி (நபியே!) உமது இறைவன் பராமுகமாயில்லை'' என்று கூறுவீராக.
IFT
மேலும், (இம்மக்களிடம்) கூறுவீராக: “எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அதிவிரைவில் தன்னுடைய சான்றுகளை அவன் உங்களுக்குக் காண்பிப்பான். அப்போது அவற்றை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.” மேலும், உம்முடைய இறைவன் நீங்கள் செய்பவற்றைக் கவனிக்காமல் இல்லை!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், “புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது, தன்னுடைய அத்தாட்சிகளை அடுத்து அவன் உங்களுக்குக் காண்பிப்பான், அது சமயம் அவைகளை நீங்கள் (உண்மையென) அறிந்து கொள்வீர்கள், என்று (நபியே!) நீர் கூறுவீராக! மேலும், நீங்கள் செய்துகொண்டிருப்பவற்றைப் பற்றி (நபியே!) உமதிரட்சகன் பராமுகமானவனாக இல்லை.
Saheeh International
And say, "[All] praise is [due] to Allah. He will show you His signs, and you will recognize them. And your Lord is not unaware of what you do."