நபியே! நீர் அல்லாஹ்வுக்கே பயப்படுவீராக. நிராகரிப்பவர்களுக்கும், வஞ்சகர்களுக்கும் (பயந்து அவர்களுக்கு) கீழ்ப்படியாதீர். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) அறிந்தவனாக,ஞானமுடையவனாக இருக்கிறான்.
IFT
நபியே! அல்லாஹ்வுக்கு அஞ்சும்! மேலும், நிராகரிப்பாளர்களுக்கும் நயவஞ்சகர்களுக்கும் கீழ்ப்படியாதீர். உண்மையில், அல்லாஹ்தான் நன்கு அறிந்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நபியே! நீர் அல்லாஹ்வை பயந்துகொள்வீராக! நிராகரிப்போருக்கும், (வேஷதாரிகளான) முனாஃபிக்குகளுக்கும் கீழ்ப்படியாதிருப்பீராக! நிச்சயமாக அல்லாஹ் (யாவையும்) நன்கறிகிறவனாக, தீர்க்கமான அறிவுடையவனாக இருக்கிறான்.
Saheeh International
O Prophet, fear Allah and do not obey the disbelievers and the hypocrites. Indeed, Allah is ever Knowing and Wise.
இன்னும் (நபியே!) உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதையே நீர் பின்பற்றுவீராக; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
உமது இறைவனால் உமக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டவற்றையே நீர் பின்பற்றுவீராக. நிச்சயமாக அல்லாஹ், நீங்கள் செய்பவற்றை நன்கறிபவனாகவே இருக்கிறான்.
IFT
உம் இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுகின்ற விஷயத்தை நீர் பின்பற்றும்! நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் அல்லாஹ் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், (நபியே!) உமதிரட்சகனிடமிருந்து உமக்கு (வஹீ மூலம்) அறிவிக்கப்படுவதையே நீர் பின்பற்றுவீராக! நிச்சயமாக அல்லாஹ், நீங்கள் செய்பவற்றை நன்குணர்பவனாக இருக்கிறான்.
Saheeh International
And follow that which is revealed to you from your Lord. Indeed Allah is ever, of what you do, Aware.
மேலும், நீர் அல்லாஹ்வின் மீது (அவனிடமே சகல பொறுப்பையும் ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கை வைப்பீராக! (உமது காரியங்களுக்குப்) பொறுப்பேற்றுக் கொள்கிறவனாக இருக்க அல்லாஹ்வே போதுமானவன்.
Saheeh International
And rely upon Allah; and sufficient is Allah as Disposer of affairs.
எந்த மனிதனுடைய அகத்திலும் அல்லாஹ் இரண்டு இருதயங்களை உண்டாக்கவில்லை - உங்கள் மனைவியரில் எவரையும் நீங்கள் லிஹார் (என் தாயின் முதுகைப் போன்று அதாவது தாய் போன்று இருக்கிறாள் என்று) கூறுவதனால் அவர்களை (அல்லாஹ் உண்மையான) உங்கள் தாயாக்கி விடமாட்டான், (அவ்வாறே) உங்களுடைய சுவீகாரப்பிள்ளைகளை உங்களுடைய புதல்வர்களாக ஆக்கிவிட மாட்டான். இவை யாவும் உங்களுடைய வாய்களால் சொல்லும் (வெறும்) வார்த்தைகளேயாகும், அல்லாஹ் உண்மையையே கூறுகிறான்; இன்னும் அவன் நேர்வழியையே காட்டுகிறான்.
அப்துல் ஹமீது பாகவி
எம்மனிதருடைய நெஞ்சிலும் இரண்டு உள்ளங்களை அல்லாஹ் அமைக்கவில்லை. (ஆகவே, இயற்கை முறைப்படி மனிதர்களுக்குள் ஏற்படும் சம்பந்தங்களே உண்மையான சம்பந்தமாகும். வாயால் கூறும் சம்பந்த முறைகள் எல்லாம் உண்மையாகாது. ஆகவே, நம்பிக்கையாளர்களே! நீங்கள் விவாகரத்தைக் கருதி) உங்கள் மனைவிகளில் எவரையும் நீங்கள் உங்கள் தாய் என்று கூறுவதனால் அல்லாஹ் அவர்களை உங்கள் (உண்மைத்) தாயாக்கிவிட மாட்டான். (அவ்வாறே உங்களுக்குப் பிறக்காத எவரையும் உங்கள் பிள்ளை என்றும்) நீங்கள் தத்தெடுத்துக் கொள்வதனால் அவர்களை உங்கள் (உண்மைச்) சந்ததிகளாக்கிவிட மாட்டான். இவை அனைத்தும் உங்கள் வாய்களால் கூறும் வெறும் வார்த்தைகளே (தவிர. உண்மையல்ல). அல்லாஹ் உண்மையையே கூறி, அவன் உங்களுக்கு நேரான வழியை அறிவிக்கிறான்.
IFT
அல்லாஹ் எந்த மனிதனுள்ளும் இரு இதயங்களை அமைத்திடவில்லை, நீங்கள் “ளிஹார்”* செய்கின்ற உங்கள் மனைவிகளை உங்களுடைய அன்னையராய் அவன் ஆக்கவு மில்லை. மேலும், அவன் உங்களுடைய வளர்ப்பு மகன்களை உங்களின் சொந்த மகன்களாய் ஆக்கவுமில்லை. இவை நீங்களே உங்கள் வாய்களிலிருந்து வெளிப்படுத்தும் வெறும் வார்த்தைகளாகும். ஆனால், அல்லாஹ் சத்தியத்(தின் அடிப்படையிலான)தைக் கூறுகின்றான். மேலும்; அவனே நேரிய வழியின் பக்கம் வழி காட்டுகின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எம்மனிதனுக்கும் அவனுடைய உட்புறத்தில் இரண்டு இதயங்களை அல்லாஹ் அமைக்கவில்லை, இன்னும், உங்கள் மனைவியரை_அவர்களிலிருந்து (தன் மனைவியைத் தன் தாய் போன்றவள் என்று கூறி) உங்களுடைய தாய்மார்களுக்கு ஒப்பாகக் கூறுகிறவர்களை_ உங்களுடைய (உண்மைத்) தாய்மார்களாகவும் அவன் ஆக்கவில்லை. (அவ்வாறே) உங்களுடைய வளர்ப்புப் புதல்வர்களாகவும் அவன் ஆக்கவில்லை. இவை (யாவும்), உங்கள் வாய்களால் கூறும் உங்கள் வார்த்தைகளே (தவிர உண்மையல்ல.) மேலும், அல்லாஹ் உண்மையைக் கூறுகிறான், அவனே (நேர்) வழியையும் காட்டுகிறான்.
Saheeh International
Allah has not made for a man two hearts in his interior. And He has not made your wives whom you declare unlawful your mothers. And He has not made your claimed [i.e., adopted] sons your [true] sons. That is [merely] your saying by your mouths, but Allah says the truth, and He guides to the [right] way.
(எனவே) நீங்கள் (எடுத்து வளர்த்த) அவர்களை அவர்களின் தந்தைய(ரின் பெய)ர் களைச் சொல்லி (இன்னாரின் பிள்ளையென) அழையுங்கள் - அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும்; ஆனால் அவர்களுடைய தந்தைய(ரின் பெய)ர்களை நீங்கள் அறியவில்லையாயின், அவர்கள் உங்களுக்கு சன்மார்க்க சகோதரர்களாகவும், உங்களுடைய நண்பர்களாகவும் இருக்கின்றனர்; (முன்னர்) இது பற்றி நீங்கள் தவறு செய்திருந்தால், உங்கள் மீது குற்றமில்லை; ஆனால், உங்களுடைய இருதயங்கள் வேண்டுமென்றே கூறினால் (உங்கள் மீது குற்றமாகும்); அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, நீங்கள் (வளர்த்த) எவர்களையும் அவர்களுடைய (உண்மையான) தந்தைகளின் பெயர்களைக் கூறி (அன்னாரின் மகன் என்றே) அழையுங்கள். அதுதான் அல்லாஹ்விடத்தில் நீதமாக இருக்கிறது. அவர்களின் தந்தைகளை நீங்கள் அறியாவிட்டால், அவர்கள் உங்கள் மார்க்க சகோதரர்களாகவும் உங்கள் மார்க்க நண்பர்களாகவும் இருக்கின்றனர். (ஆகவே, அவர்களுடைய வயதுக்குத்தக்க முறையில் அவர்களை சகோதரர் என்றோ அல்லது நண்பரென்றோ அழையுங்கள். இவ்விஷயத்தில் இதற்கு முன்னர்) நீங்கள் ஏதும் தவறிழைத்திருந்தால் அதைப் பற்றி உங்கள் மீது குற்றமில்லை. (எனினும், இதன் பின்னர்) வேண்டுமென்றே உங்கள் மனமார கூறினாலே தவிர (அதுதான் உங்கள் மீது குற்றமாகும்). அல்லாஹ் மிக மன்னிப்பவனாக, மகா கருணை உடையவனாக இருக்கிறான்.
IFT
வளர்ப்பு மகன்களை அவர்களின் சொந்தத் தந்தையுடன் சேர்த்து அழையுங்கள். இது அல்லாஹ்விடம் மிக்க நீதமானதாகும். ஆனால் அவர்களுடைய தந்தையர் யார் என்று நீங்கள் அறியவில்லையாயின், அவர்கள் உங்களுடைய மார்க்கம் சார்ந்த சகோதரர்களாகவும் நண்பர்களாகவும் இருக்கின்றார்கள். தெரியாமல் நீங்கள் ஏதேனும் பேசிவிட்டால், அதற்காக உங்கள் மீது எவ்விதக் குற்றமும் இல்லை. ஆயினும், மனப்பூர்வமாக நாடி நீங்கள் கூறினால் அது நிச்சயம் குற்றமாகும். அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும் கருணையாளனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, நீங்கள் (வளர்த்த) அவர்களை, அவர்களுடைய தந்தைகளுக்கே (அவர்களின் பெயர்களைக் கூறியே) அழையுங்கள், அதுதான் அல்லாஹ்விடத்தில் மிக நீதமாகும், ஆனால், அவர்களின் தந்தைகளை நீங்கள் அறியவில்லையாயின், அப்பொழுது மார்க்கத்தில் உங்களுடைய சகோதரர்களாகவும், உங்கள் சிநேகிதர்களாகவும் இருக்கின்றனர், (இதற்கு முன்னர்) எதில் நீங்கள் தவறுசெய்தீர்களோ (அதைப் பற்றி) உங்கள் மீது எவ்வித குற்றமுமில்லை, எனினும், உங்கள் உள்ளங்கள் வேண்டுமென்று எண்ணுவதே (குற்றமாகும்), மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மிகக்கிருபையுடையவனாக இருக்கிறான்.
Saheeh International
Call them by [the names of] their fathers; it is more just in the sight of Allah. But if you do not know their fathers - then they are [still] your brothers in religion and those entrusted to you. And there is no blame upon you for that in which you have erred but [only for] what your hearts intended. And ever is Allah Forgiving and Merciful.
இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார்; இன்னும், அவருடைய மனைவியர் அவர்களுடைய தாய்மார்களாக இருக்கின்றனர். (ஒரு முஃமினின் சொத்தை அடைவதற்கு) மற்ற முஃமின்களை விடவும், (தீனுக்காக நாடு துறந்த) முஹாஜிர்களை விடவும் சொந்த பந்துக்களே சிலரைவிட சிலர் நெருங்கிய (பாத்தியதையுடைய)வர்களாவார்கள்; இது தான் அல்லாஹ்வின் வேதத்திலுள்ளது; என்றாலும், நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு நன்மை செய்ய நாடினால் (முறைப்படி செய்யலாம்) இது வேதத்தில் எழுதப்பட்டுள்ளதாகும்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட (நம் தூதரான) நபிதான் மிக்க பிரதானமானவர். அவருடைய மனைவிகளோ அந்நம்பிக்கையாளர்களுக்குத் தாய்மார்கள் ஆவார்கள். (நம்பிக்கை கொண்ட ஒருவருடைய சொத்தை அடைய) மற்ற நம்பிக்கையாளர்களை விடவும், ஹிஜ்ரத்துச் செய்தவர்களைவிடவும், (நம்பிக்கையாளர்களான) அவருடைய சொந்த உறவினர்கள்தான் அல்லாஹ்வுடைய இவ்வேதத்திலுள்ளபடி உரிமையுடையவர்களாக ஆவார்கள். (ஆகவே, அவர்களுக்கே அவர்களுடைய பங்கிற்கேற்ப பொருளைப்பங்கிட்டுக் கொடுக்க வேண்டும்.) எனினும், உங்கள் நண்பர்களில் எவருக்கும் நீங்கள் (ஏதும் கொடுத்து) நன்றி செய்யக்கருதினால் (நீங்கள் ஏதும் கொடுக்கலாம்.) இவ்வாறே வேதத்தில் எழுதப்பட்டுள்ளது.
IFT
திண்ணமாக, நம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உயிர்களைவிட நபிதான் முன்னுரிமை பெற்றவராவார். மேலும், நபியின் மனைவியர் அவர்களுக்கு அன்னையராவர். ஆயினும், அல்லாஹ்வின் வேதத்தின்படி ஏனைய பொது முஸ்லிம்களை விடவும், ஹிஜ்ரத்* செய்து வந்தவர்களை விடவும் இரத்தபந்த உறவினர்கள்தாம் ஒருவர் மற்றவருக்கு உதவி புரிவதில் அதிக உரிமையுடையவர்கள் ஆவர். ஆயினும், உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் ஏதேனும் நன்மை (செய்ய விரும்பினால்) செய்துகொள்ளலாம். இந்த விதி இறைவேதத்தில் எழுதப்பட்டுள்ளது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசிகளுக்கு, அவர்களுடைய உயிர்களைவிட இந்த நபி மிக முன்னுரிமைக்குரியவராவார்; இன்னும், அவருடைய மனைவியர்கள் அவர்களுடைய தாய்மார்களாவார்கள்; மேலும், விசுவாசிகளை விடவும், ஹிஜ்ரத் செய்தவர்களை விடவும் சொந்தபந்துக்களே அவர்களில் சிலர் சிலரைவிட அல்லாஹ்வுடைய வேதத்திலுள்ள பிரகாரம் (ஒரு முஸ்லிமுடைய சொத்தையடைய) மிக உரியவர்களாகவர்; (என்றாலும்) உங்கள் நண்பர்களுக்கு ஏதேனும் ஒரு நன்மையைச் செய்ய நாடினால் தவிர (அவர்களுக்கு உங்கள் விருப்பப்படி செய்ய உங்களுக்கு அனுமதியுண்டு). இது வேதத்தில் எழுதப்பட்டதாக இருக்கிறது.
Saheeh International
The Prophet is more worthy of the believers than themselves, and his wives are [in the position of] their mothers. And those of [blood] relationship are more entitled [to inheritance] in the decree of Allah than the [other] believers and the emigrants, except that you may do to your close associates a kindness [through bequest]. That was in the Book inscribed.
(நபியே! நம் கட்டளைகளை எடுத்துக் கூறுமாறு) நபிமார்(கள் அனைவர்)களிடமும், (சிறப்பாக) உம்மிடமும்; நூஹு, இப்ராஹீம், மூஸா, மர்யமுடைய குமாரர் ஈஸா ஆகியோரிடமும் வாக்குறுதி வாங்கிய போது, மிக்க உறுதியான வாக்குறுதியையே அவர்களிடம் நாம் வாங்கினோம்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! நம் தூதை எடுத்துரைக்கும்படி பொதுவாக) நபிமார்களிடமும் (சிறப்பாக) உம்மிடமும், நூஹ், இப்ராஹீம், மூஸா, மர்யமுடைய மகன் ஈஸாவிடமும் வாக்குறுதி வாங்கியதை நினைவு கூர்வீராக, மிக்க உறுதியான வாக்குறுதியையே இவர்களிடமும் நாம் எடுத்திருக்கிறோம்.
IFT
மேலும் (நபியே!) எல்லா நபிமார்களிடமிருந்தும் என்ன வாக்குறுதியை நாம் வாங்கினோமோ அதனை நீர் நினைவு கூரும்: உம்மிடமிருந்தும், மேலும் நூஹ், இப்ராஹீம், மூஸா மற்றும் மர்யத்தின் குமாரர் ஈஸா ஆகியோரிடமிருந்தும் (நாம் வாக்குறுதி வாங்கினோம்). அனைவரிடமிருந்தும் நாம் வலு வான வாக்குறுதி வாங்கியிருக்கின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நபிமார்களிடமிருந்தும்_உம்மிடமிருந்தும், நூஹிடமிருந்தும் இன்னும், இப்றாஹீம், மூஸா, மர்யமுடைய மகன் ஈஸா ஆகியோரிடமிருந்தும் அவர்களின் உறுதிமொழியையே நாம் எடுத்த சமயத்தில்_அவர்களிடமிருந்து மிக்க உறுதியான உறுதிமொழியையே நாம் எடுத்தோம் (என்பதை இவர்களுக்கு நினைவுபடுத்துவீராக! ஏனெனில்.)
Saheeh International
And [mention, O Muhammad], when We took from the prophets their covenant and from you and from Noah and Abraham and Moses and Jesus, the son of Mary; and We took from them a solemn covenant
எனவே உண்மையாளர்களாகிய (அத்தூதர்களிடம்) அவர்கள் (எடுத்துக் கூறிய தூதின்) உண்மையை பற்றி அல்லாஹ் கேட்பான்; (அவர்களை நிராகரித்த) காஃபிர்களுக்கு அல்லாஹ் நோவினை தரும் வேதனையைச் சித்தம் செய்திருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, உண்மை சொல்லும் (தூதர்களாகிய) அவர்களிடம், அவர்கள் கூறிய (தூதின்) உண்மைகளைப் பற்றி (அல்லாஹ்) அவர்களையும் கேள்வி (கணக்குக்) கேட்பான். (அவர்களை) நிராகரித்தவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையை அவன் தயார்படுத்தி வைத்திருக்கிறான்.
IFT
உண்மையாளர்களிடம் அவர்களின் உண்மை குறித்து (அவர்களின் இறைவன்) விசாரணை செய்ய வேண்டும் என்பதற்காக! மேலும், நிராகரிப்பாளர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையை அவன் தயார் செய்தே வைத்திருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(தூதர்களான) உண்மையாளர்களிடம், அவர்களுடைய (தூதின்) உண்மையைப் பற்றி அவன் கேட்பதற்காக (இவ்வாறு உறுதி மொழி எடுத்தான்), நிராகரித்தோர்க்குத் துன்புறுத்தும் வேதனையை அவன் தயார் செய்தும் வைத்திருக்கிறான்.
Saheeh International
That He may question the truthful about their truth. And He has prepared for the disbelievers a painful punishment.
முஃமின்களே! உங்கள் மீதும் அல்லாஹ் புரிந்திருக்கும் அருட் கொடையை நினைத்துப் பாருங்கள்; உங்களிடம் (எதிரிகளின்) படைகள் வந்த போது (புயல்) காற்றையும், நீங்கள் (கண்களால்) பார்க்கவியலா (வானவர்களின்) படைகளையும் அவர்கள் மீது நாம் ஏவினோம்; மேலும், நீங்கள் செய்வதை அல்லாஹ் உற்று நோக்குபவனாக இருக்கிறான்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடைகளை நினைத்துப் பாருங்கள். உங்கள்மீது (எதிரிகளின்) படைகள் (அணியணியாக) வந்த சமயத்தில் (புயல்) காற்றையும் உங்கள் கண்ணுக்குப் புலப்படாத படைகளையும் அவர்கள் மீது நாம் ஏவினோம். (அச்சமயம்) நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் உற்று நோக்குபவனாகவே இருந்தான்.
IFT
நம்பிக்கையாளர்களே! (அண்மையில்) அல்லாஹ் உங்களுக்குச் செய்திருக்கின்ற பேருதவியை நினைவுகூருங்கள்: எதிரிப்படையினர் உங்களைத் தாக்க வந்தபோது, நாம் அவர்கள் மீது ஒரு கடும் புயல்காற்றை ஏவினோம். உங்கள் கண்களுக்குத் தென்படாத படைகளையும் அனுப்பினோம். அப்போது நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றையெல்லாம் அல்லாஹ் பார்த்துக் கொண்டுதான் இருந்தான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டோரே! உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடையை நினைத்துப் பாருங்கள், உங்கள் மீது (எதிரிகளின்) படைகள் வந்த சமயத்தில் (புயற்) காற்றையும், நீங்கள் அதைப்பார்க்கவில்லையே அத்தகைய படைகளையும் அவர்கள் மீது நாம் அனுப்பி வைத்தோம், மேலும், நீங்கள் செய்பவகளை அல்லாஹ் பார்க்கக்கூடியவனாக இருக்கிறான்.
Saheeh International
O you who have believed, remember the favor of Allah upon you when armies came to [attack] you and We sent upon them a wind and armies [of angels] you did not see. And ever is Allah, of what you do, Seeing.
اِذْ جَآءُوْஅவர்கள் வந்த சமயத்தில்كُمْஉங்களிடம்مِّنْ فَوْقِكُمْஉங்களுக்கு மேல் புறத்திலிருந்(தும்)وَمِنْ اَسْفَلَகீழ்ப்புறத்திலிருந்தும்مِنْكُمْஉங்களுக்குوَاِذْஇன்னும் சமயத்தில்زَاغَتِசொருகினالْاَبْصَارُபார்வைகள்وَبَلَغَتِஇன்னும் எட்டினالْقُلُوْبُஉள்ளங்கள்الْحَـنَـاجِرَதொண்டைகளுக்குوَتَظُنُّوْنَநீங்கள் எண்ணினீர்கள்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுالظُّنُوْنَا ؕபல எண்ணங்களை
இத் ஜா'ஊகும் மின் Fபவ்கிகும் வ மின் அஸ்Fபல மின்கும் வ இத் Zஜாகதில் அBப்ஸாரு வ Bபலகதில் குலூBபுல் ஹனாஜிர வ தளுன்னூன Bபில்லாஹிள் ளுனூனா
முஹம்மது ஜான்
உங்களுக்கு மேலிருந்தும், உங்களுக்குக் கீழிருந்தும் அவர்கள் உங்களிடம் (படையெடுத்து) வந்த போது, (உங்களுடைய) இருதயங்கள் தொண்டை(க் குழி முடிச்சு)களை அடைந்து (நீங்கள் திணறி) அல்லாஹ்வைப் பற்றி பலவாறான எண்ணங்களை எண்ணிக் கொண்டிருந்த சமயம் (அல்லாஹ் உங்களுக்கு செய்த அருள்கொடையை) நினைவு கூறுங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
உங்களுக்கு மேற்புறமிருந்தும், கீழ்ப்புறமிருந்தும் (உங்களைச் சூழ்ந்து கொண்டு) அவர்கள் வந்த சமயத்தில் உங்கள் திறந்த கண்கள் திறந்தவாறே இருந்து உங்கள் உள்ளங்கள் உங்கள் தொண்டைக் குழிகளை அடைத்து (நீங்கள் திக்குமுக்காடி) அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் பலவாறு எண்ணிய சமயத்தையும் நீங்கள் நினைத்துப் பாருங்கள்.
IFT
பகைவர்கள் மேலிருந்தும், கீழிருந்தும் உங்கள் மீது படையெடுத்து வந்த நேரத்தில் உங்கள் கண்கள் பீதியினால் மருண்டுவிட்டன; இதயங்கள் தொண்டைகளை அடைத்துக் கொண்டன! மேலும், நீங்கள் அல்லாஹ்வைப் பற்றி விதவிதமான சந்தேகங்கள் கொள்ளத் தலைப்பட்டீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உங்களுக்கு மேற்புறமிருந்தும், உங்களுக்குக் கீழ் புறமிருந்தும் அவர்கள் (படையெடுத்து) உங்களிடம் வந்த சமயத்தில், இன்னும் (உங்களுடைய) பார்வைகள் (மாறிச்) சாய்ந்தும், (உங்களுடைய) இதயங்கள் உங்கள் தொண்டை(க்குழி)களை அடைந்துமிருந்த சமயத்தில் (உங்களை அல்லாஹ் பார்த்துக் கொண்டிருந்தான்.) மேலும், அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் (தவறாக) பலவாறான எண்ணங்களை எண்ணிய சமயத்தில் (அல்லாஹ் உங்களுக்குச் செய்த பேரருளை நீங்கள் நினைத்துப் பாருங்கள்.)
Saheeh International
[Remember] when they came at you from above you and from below you, and when eyes shifted [in fear], and hearts reached the throats, and you assumed about Allah [various] assumptions.
மேலும் (அச்சமயம் நயவஞ்சகர்கள்) முனாஃபிக்குகளும், எவர்களின் இருதயங்களில் நோயிருந்ததோ அவர்களும், “அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் நமக்கு ஏமாற்றத்தைத் தவிர (வேறு) எதையும் வாக்களிக்கவில்லை” என்று கூறிய சமயத்தையும் நினைவு கூறுங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்குச் சதி செய்வதற்காகவே (வெற்றி நமக்கே கிடைக்குமென்று) வாக்களித்தார்கள்'' என்று எவர்களுடைய உள்ளங்களில் நோயிருந்ததோ அவர்களும் மற்ற நயவஞ்சகர்களும் கூற முற்பட்டதையும் நினைத்துப் பாருங்கள்.
IFT
மேலும், அந்த நேரத்தை நினைவுகூருங்கள்: ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நம்மிடம் செய்திருந்த வாக்குறுதிகள் யாவும் ஏமாற்று வேலையே தவிர வேறொன்றும் இல்லை’ என்று நயவஞ்சகர்களும் மற்றும் எவர்களின் உள்ளங்களில் பிணி இருந்ததோ அவர்களும் வெளிப்படையாகக் கூறிக் கொண்டிருந்தார்கள்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (வேஷதாரிகளான) முனாஃபிக்குகளும், எவர்களின் இதயங்களில் நோயிருந்ததோ அவர்களும், “அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஏமாற்றத்தைத் தவிர (வேறு) எதையும் எமக்கு வாக்களிக்கவில்லை” என்று கூறியதையும்_ (நினைவு கூர்வீராக!)
Saheeh International
And [remember] when the hypocrites and those in whose hearts is disease said, "Allah and His Messenger did not promise us except delusion,"
மேலும், அவர்களில் ஒரு கூட்டத்தார் (மதீனாவாசிகளை நோக்கி) “யஸ்ரிப் வாசிகளே! (பகைவர்களை எதிர்த்து) உங்களால் உறுதியாக நிற்க முடியாது, ஆதலால் நீங்கள் திரும்பிச் சென்று விடுங்கள்” என்று கூறியபோது, அவர்களில் (மற்றும்) ஒரு பிரிவினர்: “நிச்சயமாக எங்களுடைய வீடுகள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்றன” என்று - அவை பாதுகாப்பற்றதாக இல்லாத நிலையிலும் - கூறி, (போர்க்களத்திலிருந்து சென்றுவிட) நபியிடம் அனுமதி கோரினார்கள் - இவர்கள் (போர்க்களத்திலிருந்து தப்பி) ஓடுவதைத் தவிர (வேறெதையும்) நாடவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களில் ஒரு கூட்டத்தினர் (மதீனாவாசிகளை நோக்கி) ‘‘யஸ்ரிப் வாசிகளே! (எதிரிகள் முன்) உங்களால் நிற்க முடியாது. ஆதலால், நீங்கள் திரும்பிச் சென்று விடுங்கள்'' என்று கூறியதையும், அவர்களில் மற்றொரு பிரிவினர் அவர்களுடைய வீடுகள் அபாயகரமான நிலைமையில் இல்லாமலிருந்தும் ‘‘ நிச்சயமாக எங்கள் வீடுகள் அபாயகரமான நிலைமையில் இருக்கின்றன'' என்று கூறி (யுத்த களத்திலிருந்து சென்றுவிட நம்) நபியிடம் அனுமதி கோரியதையும் நினைத்துப் பாருங்கள். இவர்கள் (யுத்தத்திலிருந்து) தப்பி ஓடிவிடுவதைத் தவிர (வேறொன்றையும்) விரும்பவில்லை.
IFT
அப்போது அவர்களில் ஒரு பிரிவினர் “யத்ரிப் வாசிகளே! இனி, நீங்கள் இங்கு தங்கியிருக்க உங்களுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. திரும்பிச் சென்றுவிடுங்கள்!” என்று கூறினார்கள்; மேலும், அவர்களில் மற்றொரு பிரிவினர் “எங்களுடைய வீடுகள் ஆபத்திற்குள்ளாகி இருக்கின்றன” என்று கூறி, நபியிடம் அனுமதி கோரிக் கொண்டிருந்தனர். ஆனால், அவை ஆபத்திற்குள்ளாகியிருக்கவில்லை. உண்மை யாதெனில், அவர்கள் (போர்க் களத்திலிருந்து) ஓடிவிடவே விரும்பினார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவர்களில் ஒரு கூட்டத்தினர், (மதீனா வாசிகளிடம்,) “யஸ்ரிப் வாசிகளே! (யுத்தகளத்தில்) உங்களுக்குத் தங்குதல் இல்லை, ஆதலால் நீங்கள் திரும்பிச் சென்றுவிடுங்கள்” என்று கூறியபோது, அவர்களில் (மற்றும்) ஒரு பிரிவினரோ, “நிச்சயமாக எங்களுடைய வீடுகள் பாதுகாப்பற்றவையாக இருக்கின்றன” என்று கூறி, அவை பாதுகாப்பற்றவையாக இல்லாமலிருந்தும், (அங்கிருந்து சென்றுவிட) நபியிடம் அனுமதி கோரினார்கள், (அங்கிருந்து) வெருண்டோடுவததைத் தவிர (வேறெதனையும்) அவர்கள் நாடவில்லை.
Saheeh International
And when a faction of them said, "O people of Yathrib, there is no stability for you [here], so return [home]." And a party of them asked permission of the Prophet, saying, "Indeed, our houses are exposed [i.e., unprotected]," while they were not exposed. They did not intend except to flee.
வ லவ் துகிலத் 'அலய்ஹிம் மின் அக்தாரிஹா தும்ம ஸு'இலுல் Fபித்னத ல ஆதவ்ஹா வமா தலBப்Bபதூ Bபிஹா இல்லா யஸீரா
முஹம்மது ஜான்
அதன் பல பாகங்களிலிருந்தும் அவர்கள் மீது படைகள் புகுத்தப்பட்டு, குழப்பம் செய்யும்படி அவர்களிடம் கேட்கப் பட்டிருக்குமானால், நிச்சயமாக அவர்கள் (அதை ஏற்று அவ்வாறே) செய்து இருப்பார்கள்; அதை (குழப்பத்தை) சிறிது நேரமே தவிர தாமதப் படுத்த மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
பல பாகங்களிலிருந்தும் அவர்கள் மீது படைகள் முன்னேறி வந்து (அச்சமயம்) குழப்பம் செய்யும்படி இவர்களைக் கோரியிருந்தால் (இந்த நயவஞ்சகர்கள்) குழப்பம் செய்தே தீருவார்கள். மேலும், (யுத்த களத்திலும்) வெகு சொற்ப நேரமே தவிர அவர்கள் நிலைத்திருக்கவும் மாட்டார்கள். (உடனே அங்கிருந்து ஓடிவிடுவார்கள்.)
IFT
நகரின் நாற்புறங்களிலிருந்தும் எதிரிகள் ஊடுருவி, பிறகு குழப்பம் விளைவிக்குமாறு இவர்கள் அழைக்கப்பட்டிருந்தால், அதற்கு இவர்கள் தயாராயிருந்திருப்பார்கள். குழப்பத்தில் பங்கு பெறுவதில் அவர்களுக்குத் தயக்கம் ஏற்பட்டிருக்காது, சிறிதளவே தவிர!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அதன் பல பாகங்களிலிருந்தும் அவர்கள் மீது (எதிரிப் படைகள்) புகுத்தப்பட்டு, பின்னர் குழப்பம் செய்யுமாறு அவர்களைக் கேட்கப்பட்டிருந்தால் அவர்கள் அதனைச் செய்திருப்பார்கள். சொற்பமேயன்றி அவர்கள் அதில் தங்கவுமாட்டார்கள்.
Saheeh International
And if they had been entered upon from all its [surrounding] regions and fitnah [i.e., disbelief] had been demanded of them, they would have done it and not hesitated over it except briefly.
வ லகத் கானூ 'ஆஹதுல் லாஹ மின் கBப்லு லா யுவல் லூனல் அத்Bபார்; வ கான 'அஹ்துல் லாஹி மஸ்'ஊலா
முஹம்மது ஜான்
எனினும், அவர்கள் (போரிலிருந்து) புறங்காட்டி ஓடுவதில்லை என்று அல்லாஹ்விடத்தில் இதற்கு முன்னர் நிச்சயமாக வாக்குறுதி செய்திருந்தார்கள்; ஆகவே, அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதி பற்றி (அவர்களிடம்) கேட்கப்படும்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் (யுத்தத்தில்) புறங்காட்டி ஓடுவதில்லை என்று அல்லாஹ்விடத்தில் இதற்கு முன்னர் நிச்சயமாக வாக்குறுதி செய்திருந்தார்கள். அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை (அவர்கள் மீறியதை)ப் பற்றி மறுமையில் கேட்கப்படுவார்கள்.
IFT
இதற்கு முன்னரோ ‘புறங்காட்டி ஓடமாட்டோம்’ என்று அல்லாஹ்விடம் இவர்கள் வாக்குறுதி தந்திருந்தார்கள். மேலும், அல்லாஹ்விடம் அளித்திருந்த வாக்குறுதி விசாரிக்கப்பட வேண்டியதாகவே இருக்கின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் (போரில்) புறமுதுகிட்டு ஓடுவதில்லை என்று அல்லாஹ்விடத்தில் இதற்கு முன்னர் திட்டமாக வாக்குறுதியும் செய்திருந்தார்கள், மேலும், அல்லாஹ்வின் வாக்குறுதி (மறுமையில்) விசாரிக்கப்படுவதாக உள்ளது.
Saheeh International
And they had already promised Allah before not to turn their backs [i.e., flee]. And ever is the promise to Allah [that about which one will be] questioned.
குல் ல(ன்)ய் யன்Fப'அகுமுல் Fபிராரு இன் Fபரர்தும் மினல் மவ்தி அவில் கத்லி வ இதல் லா துமத்த'ஊன இல்லா கலீலா
முஹம்மது ஜான்
“மரணத்தை விட்டோ அல்லது கொல்லப்படுவதை விட்டோ, நீங்கள் விரண்டு ஓடினீர்களாயின், அவ்வாறு விரண்டு ஓடுவது உங்களுக்கு யாதொரு பயனும் அளிக்காது - அது சமயம் வெகு சொற்பமேயன்றி (அதிக) சுகம் அனுபவிக்க மாட்டீர்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நீர் கூறுவீராக: ‘‘மரணத்தைவிட்டு அல்லது வெட்டுப்படுவதை விட்டு நீங்கள் வெருண்டோடிய போதிலும், உங்கள் ஓட்டம் உங்களுக்கு ஒரு பயனும் அளிக்காது. இச்சமயம் (நீங்கள் தப்பித்துக் கொண்ட போதிலும்) வெகு சொற்ப நாள்களன்றி (அதிக நாள்கள்) நீங்கள் சுகமனுபவிக்க மாட்டீர்கள்.''
IFT
(நபியே!) நீர் இவர்களிடம் கூறும்: “நீங்கள் மரணத்திலிருந்து அல்லது கொல்லப்படுவதிலிருந்து ஓடினால் அவ்வாறு ஓடுவது உங்களுக்கு எத்தகைய பலனையும் அளிக்காது. அதன் பின்னர் வாழ்க்கையின் இன்பத்தை அனுபவிக்க சிறிதளவு சந்தர்ப்பமே உங்களுக்குக் கிடைக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நீர் கூறுவீராக, “மரணத்தை விட்டோ அல்லது கொல்லப்படுவதை விட்டோ நீங்கள் வெருண்டோடுவீர்களாயின், அவ்வாறு வெருண்டோடுவது உங்களுக்கு யாதொரு பயனுமளிக்காது, மேலும், அது சமயம் வெகு சொற்பமேயன்றி நீங்கள் சுகம் கொடுக்கப்பட மாட்டீர்கள்!”
Saheeh International
Say, [O Muhammad], "Never will fleeing benefit you if you should flee from death or killing; and then [if you did], you would not be given enjoyment [of life] except for a little."
“அல்லாஹ் உங்களுக்குக் கெடுதியை நாடினால், அவனிடமிருந்து உங்களைப் பாதுகாப்பவர் யார்? அல்லது அவன் உங்களுக்கு ரஹ்மத்தை நாடினால் (அதை உங்களுக்குத் தடை செய்பவர் யார்?) அல்லாஹ்வையன்றி (வேறு யாரையும்) பாதுகாவலனாகவும், உதவியாளனாகவும் அவர்கள் காணமாட்டார்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! மேலும்) கூறுவீராக: ‘‘அல்லாஹ் உங்களுக்குத் தீங்கிழைக்க நாடினால் அவனிடமிருந்து உங்களைப் பாதுகாப்பவன் யார் அல்லது உங்களுக்கு அருள்புரிய நாடினால் அதை தடுப்பவன் யார்? அல்லாஹ்வை அன்றி அவர்கள் தங்களுக்கு உதவி செய்பவர்களையும் பாதுகாப்பவர்களையும் காணமாட்டார்கள்.
IFT
மேலும், இவர்களிடம் கேளும்: “அல்லாஹ் உங்களுக்குத் தீங்களிக்க நாடினால் அவனிடமிருந்து உங்களைக் காப்பாற்றுபவர் யார்? அவன் உங்கள் மீது கருணை பொழிய நாடினால் அவனுடைய கருணையைத் தடுக்க யாரால் முடியும்?” அல்லாஹ்வுக்கு எதிராக எந்த ஆதரவாளரையும் உதவியாளரையும் இவர்கள் காணமாட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! மேலும்) நீர் கூறுவீராக: ”அல்லாஹ்விடமிருந்து_அவன் உங்களுக்கு ஒரு தீங்கிழைக்க நாடினால்_ உங்களைப் பாதுகாப்பவர் யார்? அல்லது, அவன் அருள் புரிய நாடினால் (உங்களை விட்டு அதனை தடுத்துவிடுபவர் யார்?) அல்லாஹ்வையன்றி அவர்களுக்குப் பாதுகாவலரையும், உதவி செய்பவரையும் அவர்கள் காணமாட்டார்கள்.”
Saheeh International
Say, "Who is it that can protect you from Allah if He intends for you an ill or intends for you a mercy?" And they will not find for themselves besides Allah any protector or any helper.
உங்களில் (போருக்குச் செல்வோரைத்) தடை செய்வோரையும் தம் சகோதரர்களை நோக்கி, “நம்மிடம் வந்து விடுங்கள்” என்று கூறுபவர்களையும் அல்லாஹ் திட்டமாக அறிந்து இருக்கிறான். அன்றியும் அவர்கள் சொற்பமாகவே போர் புரிய வருகிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
உங்களில் (யுத்தத்திற்குச் செல்பவர்களைத்) தடை செய்பவர்களையும், தங்கள் சகோதரர்களை நோக்கி நீங்கள் ‘‘(யுத்தத்திற்குச் செல்லாது) நம்மிடம் வந்து விடுங்கள்'' என்று கூறுபவர்களையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தே இருக்கிறான். (அவர்களில்) சிலரைத் தவிர (பெரும்பாலானவர்கள்) யுத்தத்திற்கு வருவதில்லை.
IFT
உங்களில் எவர்கள் (போர்ப் பணிகளில்) இடையூறு விளைவிக்கின்றார்களோ அவர்களையும், மேலும், “எங்களிடம் வந்துவிடுங்கள்” என்று தங்களின் சகோதரர்களிடம் கூறுகின்ற வர்களையும் அல்லாஹ் நன்கறிவான். மேலும், அவர்கள் போரில் பங்கு கொண்டாலும், பெயரளவுக்குத்தான் பங்கு பெறுவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உங்களில் (போர்செய்யச் செல்வோரைத்) தடை செய்வோரையும், தங்கள் சகோதரர்களிடம், “நீங்கள் நம்மிடம் வந்துவிடுங்கள்” என்று கூறுவோரையும் நிச்சயமாக அல்லாஹ் அறிவான், மேலும், (அவர்களில்) சொற்பமானவர்களன்றி (பெரும்பாலோர்) யுத்தத்திற்கு வரமாட்டார்கள்.
Saheeh International
Already Allah knows the hinderers among you and those [hypocrites] who say to their brothers, "Come to us," and do not go to battle, except for a few,
(அவர்கள்) உங்கள் மீது உலோபத்தனத்தைக் கைக்கொள்கின்றனர். ஆனால் (பகைவர்கள் பற்றி) பயம் ஏற்படும் சமயத்தில், மரணத்தறுவாயில் மயங்கிக்கிடப்பவர்போல், அவர்களுடைய கண்கள் சுழன்று சுழன்று, அவர்கள் உம்மைப் பார்த்துக் கொண்டிருப்பதை நீர் காண்பீர்; ஆனால் அந்தப் பயம் நீங்கி விட்டாலோ, (போர்க் களத்தில் எதிரிகள் விட்டுச் சென்ற) செல்வப் பொருள்மீது பேராசை கொண்டவர்களாய், கூரிய நாவு கொண்டு (கடுஞ் சொற்களால்) உங்களைக் கடிந்து பேசுவார்கள்; இத்தகையோர் (உண்மையாக) ஈமான் கொள்ளவில்லை; ஆகவே, அவர்களுடைய (நற்) செயல்களையும் அல்லாஹ் பாழாக்கி விட்டான். இது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதேயாகும்.
அப்துல் ஹமீது பாகவி
(அவர்கள்) உங்கள் விஷயத்தில் கஞ்சத்தனத்தைக் கைக்கொண்டிருக்கின்றனர். (நபியே!) ஒரு பயம் சம்பவிக்கும் சமயத்தில், மரண தருவாயில் மயங்கிக் கிடப்பவர்களைப்போல் அவர்கள் கண்கள் சுழன்று சுழன்று உங்களைப் பார்த்த வண்ணமாய் இருப்பதை நீர் காண்பீர். அந்த பயம் நீங்கி (நம்பிக்கையாளர்களுக்கு வெற்றி ஏற்பட்டு) விட்டாலோ, கொடிய வார்த்தைகளைக் கொண்டு உங்களைக் குற்றங்குறைகள் கூறி (யுத்தத்தில் கிடைத்த) பொருள்கள் மீது பேராசை கொண்டு விழுகின்றனர். இவர்கள் உண்மையான நம்பிக்கையாளர்கள் அல்ல. ஆதலால், அவர்கள் செய்திருந்த (நற்)காரியங்கள் அனைத்தையும் அல்லாஹ் அழித்து விட்டான். இது அல்லாஹ்வுக்கு மிக்க எளிதாகவே இருக்கிறது.
IFT
உங்களுக்கு உதவுவதில் அவர்கள் கடும் கஞ்சத்தனம் உள்ளவர்களாய் இருப்பார்கள். ஆபத்தான நேரம் வந்து விட்டாலோ, மரணத்தருவாயில் இருப்பவனுக்கு மயக்கம் வருவது போன்று கண்களைச் சுழற்றியவாறு உம் பக்கம் பார்ப்பார்கள். ஆனால், ஆபத்து நீங்கிவிட்டாலோ, இதே மக்கள் ஆதாயங்களின் மீது பேராசை கொண்டவர்களாய் (கத்தரிக்கோலைப் போன்று) கூர்மையான நாவுகளோடு உங்களை வரவேற்க வந்துவிடுகின்றார்கள். இத்தகையவர்கள் அறவே நம்பிக்கை கொள்ளவில்லை. எனவே, அல்லாஹ் இவர்களுடைய செயல்கள் அனைத்தையும் வீணாக்கிவிட்டான். மேலும், இவ்வாறு செய்வது அல்லாஹ்வைப் பொறுத்து மிகவும் எளிதானதாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(போர்க்களத்தில் கிடைத்த பொருட்களில் அவர்கள்) உங்கள் மீது கஞ்சத்தனமாக இருக்கின்றனர், அப்பொழுது, (எதிரிகளைப் பற்றி) பயம் வந்துவிட்டால், மரணத்தினால் மயக்கப்பட்டவரைப் போன்று அவர்கள் கண்கள் சுழல்கின்ற நிலையில், அவர்கள் உம்மைப் பார்த்த வண்ணமாயிருப்பதை நீர் காண்பீர். அபயம் நீங்கி (விசுவாசிகளுக்கு வெற்றி ஏற்பட்டு) விட்டாலோ நன்மையின் மீது (யுத்தத்தில் கிடைத்த பொருட்கள் மீது) பேராசைக் கொண்டு கூறிய நாவுகளால் (கொடிய வார்த்தைகளைக் கூறி) உங்களை(க் கடிந்து) இம்சிக்கின்றனர். இத்தகையோர் (உண்மையாக) விசுவாசங்கொள்ளவில்லை, ஆகவே, அவர்களின் (நற்)செயல்களை அல்லாஹ் அழித்துவிட்டான். இது அல்லாஹ்வுக்கு மிக எளிதாக இருக்கிறது.
Saheeh International
Indisposed toward you. And when fear comes, you see them looking at you, their eyes revolving like one being overcome by death. But when fear departs, they lash you with sharp tongues, indisposed toward [any] good. Those have not believed, so Allah has rendered their deeds worthless, and ever is that, for Allah, easy.
அந்த (எதிர்ப்புப்) படைகள் இன்னும் போகவில்லை என்று அவர்கள் எண்ணுகிறார்கள்; அ(வ் எதிர்ப்பு)ப் படைகள் (மீண்டும்) வருமானால் அவர்கள் (கிராமப்புறங்களுக்கு) ஓடிச் சென்று காட்டரபிகளிடம் (மறைவாக) உங்களைப் பற்றியுள்ள செய்திகளை விசாரித்துக் கொண்டிருப்பார்கள் - ஆயினும் அவர்கள் (அவ்வாறு போகாது) உங்களுடன் இருந்திருந்தாலும் ஒரு சிறிதேயன்றி (அதிகம்) போரிட மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(முற்றுகையிட்டிருந்த எதிரிகளின் ராணுவங்கள் முற்றுகையை எடுத்துக் கொண்டுசென்று விட்டபோதிலும்) அந்த ராணுவம் (இன்னும்) போகவில்லை என்றே இவர்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். அந்த ராணுவங்கள் திரும்ப வந்துவிட்டாலோ ஒரு கிராமத்திற்குச் சென்று (ஓடி ஒளிந்து) மறைவாயிருந்து கொண்டு (நீங்கள் வெற்றி பெறுகிறீர்களோ தோல்வியுறுகிறீர்களோ என்ற) உங்களைப் பற்றிய செய்தியை விசாரித்துக் கொண்டிருப்பார்கள். (அவ்வாறு செல்லாது) அவர்கள் உங்களுடன் தங்கி இருந்தாலும், ஒரு சொற்ப நேரமே தவிர (அதிக நேரம்) போர் புரிய மாட்டார்கள்.
IFT
இவர்கள் கருதிக் கொண்டிருக்கின்றார்கள்; தாக்க வந்த கூட்டத்தார் இன்னும் திரும்பிச் செல்லவில்லை என்று! அவர்கள் மீண்டும் தாக்க வந்துவிட்டாலோ, அப்போது எங்கேனும் (பாலைவனத்தில்) நாட்டுப்புற அரபிகளுடன் சேர்ந்து உட்கார்ந்துவிட வேண்டும். மேலும், அங்கிருந்தவாறு உம்முடைய நிலைமையைக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என அவர்கள் ஆசைப்படுகின்றார்கள். ஒரு வேளை இவர்கள் உங்கள் மத்தியில் இருந்தாலும் போரில் குறைவாகவே பங்கு பெறுவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(எதிர்ப்பு) அணியினர் (இன்னும்) போகவில்லை என்றே இவர்கள் எண்ணுவார்கள், (அந்த எதிர்ப்பு) அணியினர் (திரும்ப) வந்துவிட்டால் கிராமப்புறங்களில் அவர்கள் நிச்சயமாக வெளியேறிச்சென்று, உங்களைப் பற்றிய செய்திகளைக் கேட்டு விசாரித்துக் கொண்டிருக்க வேண்டுமே என்று விரும்புவார்கள், அவர்கள் உங்களுடன் இருந்திருப்பினும் சொற்பமேயன்றி (அதிகமாக) அவர்கள் யுத்தம் புரிய மாட்டார்கள்.
Saheeh International
They think the companies have not [yet] withdrawn. And if the companies should come [again], they would wish they were in the desert among the bedouins, inquiring [from afar] about your news. And if they should be among you, they would not fight except for a little.
அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் உறுதியாக நம்புகிறார்களோ, அவர்கள் பின்பற்றி நடக்கவேண்டிய அழகான உதாரணம் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடமே இருக்கிறது. அவர்கள் (அவரைப் பின்பற்றி நடந்து) அல்லாஹ்வை அதிகமாக நினைவு செய்து கொண்டிருப்பார்கள்.
IFT
உண்மை யாதெனில், உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருந்தது உங்களில் அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்புகின்றவராகவும், அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூருபவராகவும் இருக்கின்ற ஒவ்வொருவர்க்கும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(உங்களில்) அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வையும் அதிகமாக நினைவு கூர்பவராக இருப்பவருக்கு, அல்லாஹ்வின் தூதரில் திட்டமாக உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது.
Saheeh International
There has certainly been for you in the Messenger of Allah an excellent pattern for anyone whose hope is in Allah and the Last Day and [who] remembers Allah often.
அன்றியும், முஃமின்கள் எதிரிகளின் கூட்டுப் படைகளைக் கண்டபோது, “இது தான், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எங்களுக்கு வாக்களித்தது; அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையே உரைத்தார்கள்” என்று கூறினார்கள். இன்னும் அது அவர்களுடைய ஈமானையும், (இறைவனுக்கு) முற்றிலும் வழிபடுவதையும் அதிகப்படுத்தாமல் இல்லை.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்கள் (எதிரியின்) ராணுவங்களைக் கண்ட பொழுது ‘‘(இதுதான்) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்கு வாக்களித்தது. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையையே கூறினார்கள்'' என்று சொன்னார்கள். தவிர (இவை அனைத்தும்) அவர்களுடைய நம்பிக்கையையும் ஏற்று கீழ்ப்படிவதையும் தவிர வேறொன்றையும் அவர்களுக்கு அதிகப்படுத்திவிடவில்லை.
IFT
மேலும், உண்மையான நம்பிக்கையாளர்கள் (நிலை இவ்வாறு இருந்தது: அதாவது) தாக்க வந்த கூட்டத்தாரை அவர்கள் பார்த்ததுமே உரக்கக் கூறினார்கள்: “அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நம்மிடம் வாக்களித்தது இதுதான்.” அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் வாக்கு முற்றிலும் உண்மையாக இருந்தது. இந்நிகழ்ச்சி நம்பிக்கையையும் அடிபணிதலையும் அவர்களுக்கு இன்னும் அதிகப்படுத்திவிட்டது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், விசுவாசிகள் (எதிர்ப்பு) அணியினரைக் கண்டபொழுது, “இது, அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் நமக்கு வாக்களித்ததாகும். அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் உண்மையையே கூறினார்கள்” என்று கூறினார்கள், அவர்களுடைய விசுவாசத்தையும், வழிப்படுதலையும் தவிர (வேறெதையும்) அவர்களுக்கு அது அதிகப்படுத்திடவில்லை.
Saheeh International
And when the believers saw the companies, they said, "This is what Allah and His Messenger had promised us, and Allah and His Messenger spoke the truth." And it increased them only in faith and acceptance.
முஃமின்களில் நின்றுமுள்ள மனிதர்கள் அல்லாஹ்விடம் அவர்கள் செய்துள்ள வாக்குறுதியில் உண்மையாக நடந்து கொண்டார்கள்; அவர்களில் சிலர் (ஷஹீதாக வேண்டும் என்ற) தம் இலட்சியத்தையும் அடைந்தார்கள்; வேறு சிலர் (ஆர்வத்துடன் அதை) எதிர் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் - (எந்த நிலைமையிலும்) அவர்கள் தங்கள் வாக்குறுதியிலிருந்து சிறிதும் மாறுபடவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களில் ஆண்கள் பலர் இருக்கின்றனர். இவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை உண்மையாக்கி வைத்தார்கள். அவர்களில் பலர் (இறந்து ‘ஷஹாதத்' என்னும்) தங்கள் இலட்சியத்தை அடைந்து விட்டனர். வேறு சிலர் (மரணிக்கவில்லை என்றாலும் அதை அடைய ஆவலுடன்) எதிர்பார்த்தே இருக்கின்றனர். (என்ன நேரிட்டாலும் அவர்கள் தங்கள் வாக்குறுதியிலிருந்து) ஒரு சிறிதும் மாறுபட்டுவிடவே இல்லை.
IFT
நம்பிக்கையாளரில் இத்தகையவர்களும் இருக்கின்றனர்: அல்லாஹ்விடம் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை அவர்கள் மெய்ப்படுத்திக் காட்டிவிட்டிருக்கிறார்கள்; அவர்களில் சிலர் தமது நேர்ச்சையை நிறைவேற்றி விட்டார்கள்; இன்னும் சிலர் அதற்கான நேரத்தை எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றார்கள் அவர்கள் (தம்முடைய நடத்தையில்) எவ்வித மாற்றத்தையும் செய்யவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசிகளில் சில ஆடவர்கள் இருக்கின்றனர், எதன் மீது அவர்கள் அல்லாஹ்விடம் வாக்குறுதி செய்தார்களோ அதை உண்மையாக்கி வைத்தார்கள், ஆகவே, அவர்களில் தங்கள் இலட்சியத்தை (வீரமரணத்தை) அடைந்துவிட்டவரும் இருக்கின்றனர், அவர்களில் (அதற்காக) எதிர்ப்பார்ப்பவரும் இருக்கின்றனர், (தங்கள் வாக்குறுதியில்) அவர்கள் மாறிவிடவே இல்லை.
Saheeh International
Among the believers are men true to what they promised Allah. Among them is he who has fulfilled his vow [to the death], and among them is he who awaits [his chance]. And they did not alter [the terms of their commitment] by any alteration -
உண்மையாளர்களுக்கு அவர்களின் உண்மைக்குரிய கூலியை அல்லாஹ் திடமாக அளிப்பான்; அவன் நாடினால் முனாஃபிக்குகளை வேதனையும் செய்வான், அல்லது அவர்களை மன்னிப்பான் - நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.
அப்துல் ஹமீது பாகவி
உண்மையுடன் நடந்துகொண்ட (இ)வர்களுக்கு அவர்களின் உண்மைக்குத் தக்க கூலியை அல்லாஹ் கொடுத்தே தீருவான். எனினும், நயவஞ்சகர்களை அவன் நாடினால் வேதனை செய்வான். (அவன் நாடினால் அவர்களையும் மன்னிப்புக் கோரும்படிச் செய்து) அவர்களை மன்னித்து விடுவான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மகா கருணையுடையவனாக இருக்கிறான்.
IFT
(இதுவெல்லலாம் நிகழ்ந்தது) எதற்காகவெனில், அல்லாஹ் வாய்மையாளர்களுக்கு அவர்களுடைய வாய்மைக்கான கூலியை வழங்குவதற்காகவும் மேலும், நயவஞ்சகர்களுக்கு நாடினால் அவன் தண்டனை அளிப்பதற்காகவும், நாடினால் அவர்களுடைய பாவமன்னிப்புக் கோரிக்கையை அவன் ஏற்றுக்கொள்வதற்காகவும்தான்! நிச்சயமாக அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும், கிருபை மிக்கவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உண்மையாளர்களுக்கு அவர்களின் உண்மையின் காரணத்தால், அல்லாஹ் (நற்)கூலி வழங்குவதற்காகவும், அவன் நாடினால் முனாஃபிக்குகளை (வேஷதாரிகளை) வேதனை செய்வதற்காகவும், அல்லது அவர்களின் தவ்பாவை அங்கீகரிப்பதற்காகவும் (அடியார்களை இவ்வாறு சோதிக்கிறான்), நிச்சயமாக அல்லாஹ், மிக்க மன்னிப்பவனாக மிகக்கிருபையுடையவனாக இருக்கிறான்.
Saheeh International
That Allah may reward the truthful for their truth and punish the hypocrites if He wills or accept their repentance. Indeed, Allah is ever Forgiving and Merciful.
நிராகரிப்பவர்களை தங்களுடைய கோபத்தில் (மூழ்கிக்கிடக்குமாறே அல்லாஹ் அவர்களைத் திருப்பிவிட்டான்; (ஆதலால் இந்தப் போரில்) அவர்கள் ஒரு நன்மையையும் அடையவில்லை, மேலும் போரில் முஃமின்களுக்கு அல்லாஹ் போதுமானவன், மேலும் அல்லாஹ் பேராற்றலுடையவன்; (யாவரையும்) மிகைத்தவன்.
அப்துல் ஹமீது பாகவி
நிராகரிப்பவர்களை அவர்களின் கோபத்தில் மூழ்கியவாறே அல்லாஹ் அவர்களைத் தடுத்து விட்டான். (இப்போரில்) அவர்கள் ஒரு நன்மையும் அடையவில்லை. (எல்லா விதங்களிலும் நஷ்டமே அடைந்தார்கள். இந்தப் போரில் நம்பிக்கையாளர்களை அல்லாஹ்வே பாதுகாத்துக் கொண்டான்.) இந்தப் போரில் நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ்வே போதுமானவனாக இருந்தான். அல்லாஹ் (அனைவரையும் விட) மிக்க பலவானாகவும், மிகைத்தவனாகவும் இருக்கிறான்.
IFT
அல்லாஹ் நிராகரிப்பாளர்களைத் திருப்பிவிட்டான். அவர்கள் எந்தப் பயனும் அடையாமல் தம் மன எரிச்சலுடனே அப்படியே திரும்பிவிட்டனர். நம்பிக்கையாளர்களின் சார்பில் போரிடுவதற்கு அல்லாஹ்வே போதுமாகிவிட்டான். அல்லாஹ் பேராற்றலுடையவனாகவும் யாவற்றையும் மிகைத்தவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நிராகரித்து விட்டார்களே அத்தகையோரை_அவர்களுடைய கடுங்கோபத்தில் அல்லாஹ் திருப்பி விட்டான், (இந்த யுத்தத்தில்) அவர்கள் யாதொரு நன்மையை(யும்) அடையவில்லை, (அகழ்) யுத்தத்தில் விசுவாசிகளுக்கு (வெற்றியளிக்க) அல்லாஹ் போதுமானவனாக இருந்தான், மேலும், அல்லாஹ் (யாவரையும் விட) மிக்க பலமிக்கவனாக (யாவரையும்) மிகைத்தவனாக இருக்கின்றான்.
Saheeh International
And Allah repelled those who disbelieved, in their rage, not having obtained any good. And sufficient was Allah for the believers in battle, and ever is Allah Powerful and Exalted in Might.
இன்னும், வேதக்காரர்களிலிருந்தும் (பகைவர்களுக்கு) உதவி புரிந்தார்களே அவர்களை (அல்லாஹ்) அவர்களுடைய கோட்டைகளிலிருந்து கீழே இறக்கி, அவர்களின் இருதயங்களில் திகிலைப் போட்டுவிட்டான்; (அவர்களில்) ஒரு பிரிவாரை நீங்கள் கொன்று விட்டீர்கள்; இன்னும் ஒரு பிரிவாரைச் சிறைப்பிடித்தீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களே! உங்கள்) எதிரிகளுக்கு உதவி செய்த வேதக்காரர்(களாகிய யூதர்)களை அவர்களுடைய அரண்மனைகளிலிருந்து இறங்கவைத்து அவர்களுடைய உள்ளங்களில் (திடுக்கத்தையும்) நடுக்கத்தையும் போட்டுவிட்டான். ஆகவே, அவர்களில் ஒரு தொகையினரை நீங்கள் வெட்டி விட்டீர்கள்; மற்றொரு தொகையினரை நீங்கள் சிறை பிடித்தீர்கள்.
IFT
மேலும், வேதம் வழங்கப்பட்டவர்களில் எவர்கள் இவ்வாறு தாக்க வந்த படையினர்க்கு உதவினார்களோ அவர்களை அல்லாஹ், அவர்களுடைய கோட்டைகளிலிருந்து இறக்கிக் கொண்டு வந்தான். மேலும், அவர்களுடைய உள்ளங்களில் திகிலை ஏற்படுத்தினான். நீங்கள் (இன்று அவர்களில்) ஒரு பிரிவினரை கொன்றுகொண்டும் மற்றொரு பிரிவினரைக் கைது செய்துகொண்டும் இருக்கிறீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் வேதக்காரர்களிலிருந்து, அ(ப்பகை)வர்களுக்கு உதவி செய்தார்களே அவர்களை, அவர்களுடைய கோட்டையிலிருந்து (அல்லாஹ்) இறக்கிவிட்டான், அவர்களுடைய இதயங்களில் கடும் பயத்தையும் போட்டு விட்டான், (ஆகவே) ஒரு சாராரை நீங்கள் கொன்று விட்டீர்கள், (மற்றும்) ஒரு சாராரை நீங்கள் சிறைபிடித்தும் கொண்டீர்கள்.
Saheeh International
And He brought down those who supported them among the People of the Scripture from their fortresses and cast terror into their hearts [so that] a party [i.e., their men] you killed, and you took captive a party [i.e., the women and children].
இன்னும், அவன் உங்களை அவர்களுடைய நிலங்களுக்கும், அவர்களுடைய வீடுகளுக்கும், அவர்களுடைய பொருள்களுக்கும், (இது வரையில்) நீங்கள் மிதித்திராத நிலப்பரப்புக்கும் வாரிசுகளாக ஆக்கி விட்டான்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களுடைய பூமிகளையும், அவர்களுடைய வீடுகளையும், அவர்களுடைய பொருள்களையும் (இதுவரை) நீங்கள் கால் வைக்காத அவர்களுடைய மற்ற பூமிகளையும் (அல்லாஹ்) உங்களுக்கு சொந்த மாக்கித் தந்தான். அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக்க ஆற்றலுடையவனாக இருக்கிறான்.
IFT
மேலும், அவன் அவர்களுடைய நிலத்திற்கும், அவர்களுடைய இல்லங்களுக்கும், அவர்களுடைய பொருள்களுக்கும் உங்களை வாரிசுகளாக்கினான்; நீங்கள் கால் வைத்திருக்காத பூமியையும் உங்களுக்கு வழங்கினான். அல்லாஹ் அனைத்தின் மீதும் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், (அல்லாஹ்வாகிய) அவன் அவர்களுடைய பூமி, மற்றும் அவர்களுடைய வீடுகள் மற்றும் அவர்களுடைய செல்வங்கள் இன்னும் (இதுவரையில்) நீங்கள் மிதித்திராத (அவர்களுடைய மற்ற) பூமி ஆகியவற்றிற்கு உங்களை வாரிசாக்கினான், மேலும் அல்லாஹ், ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவனாக இருக்கிறான்.
Saheeh International
And He caused you to inherit their land and their homes and their properties and a land which you have not trodden. And ever is Allah, over all things, competent.
நபியே! உம்முடைய மனைவிகளிடம்: “நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும், இதன் அலங்காரத்தையும் நாடுவீர்களானால், வாருங்கள்! நான் உங்களுக்கு வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து அழகிய முறையில் உங்களை விடுதலை செய்கிறேன்.
அப்துல் ஹமீது பாகவி
நபியே! உமது மனைவிகளை நோக்கி கூறுவீராக: ‘‘ நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும் அதன் அலங்காரத்தையும் மட்டுமே விரும்புவீர்களாயின், வாருங்கள்! உங்களுக்கு ஏதும் கொடுத்து நல்ல முறையில் (தலாக் கொடுத்து) உங்களை நீக்கி விடுகிறேன்.
IFT
நபியே! நீர் உம்முடைய மனைவிமார்களிடம் கூறிவிடும்: “நீங்கள் உலகவாழ்வையும், அதன் அழகையும் விரும்புகிறீர்கள் என்றால், வாருங்கள்! நான் ஏதேனும் சிலவற்றைக் கொடுத்து அழகிய முறையில் உங்களை அனுப்பிவிடுகின்றேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நபியே! உம்முடைய மனைவியருக்கு நீர் கூறுவீராக “நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும் அதன் அலங்காரத்தையும் நாடுபவர்களாக நீங்கள் இருந்தால், வாருங்கள்! உங்களுக்கு (வாழ்க்கைகுரியதைக் கொடுத்து) சுகத்தை அளிக்கிறேன், அழகிய விடுவித்தலாக (விவாக பந்தத்தை) விடுவித்தும் விடுகிறேன்.”
Saheeh International
O Prophet, say to your wives, "If you should desire the worldly life and its adornment, then come, I will provide for you and give you a gracious release.
வ இன் குன்துன்ன துரித்னல் லாஹ வ ரஸூலஹூ வத் தாரல் ஆகிரத Fப இன்னல் லாஹ அ'அத்த லில் முஹ்ஸினாதி மின் குன்ன அஜ்ஜ்ரன் 'அளீமா
முஹம்மது ஜான்
“ஆனால், நீங்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும், மறுமையின் வீட்டையும் விரும்புவீர்களானால், அப்பொழுது உங்களில் நன்மையாளர்களுக்காக அல்லாஹ் மகத்தான நற்கூலி நிச்சயமாக சித்தம் செய்திருக்கிறான்” என்றும் கூறுவீராக!
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், மறுமை வாழ்க்கையையும் விரும்புவீர்களாயின் நிச்சயமாக அல்லாஹ் உங்களிலுள்ள நன்மை செய்பவர்களுக்கு மகத்தான (நற்)கூலியை தயார்படுத்தி வைத்திருக்கிறான்.
IFT
ஆனால், நீங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும், மறுஉலகையும் நாடுகிறீர்களென்றால் (அறிந்து கொள்ளுங்கள்) உங்களில் நற்செயல் புரிபவர்களுக்கு அல்லாஹ் மகத்தான கூலியை தயார் செய்து வைத்துள்ளான்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அன்றியும் நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும். இறுதி வீட்டையும் நாடுபவர்களாக நீங்கள் இருந்தால், அப்பொழுது நிச்சயமாக அல்லாஹ் உங்களில் (இத்தகைய) நன்மையுடையோருக்கு மகத்தான கூலியை தயார் செய்து வைத்திருக்கிறான்.”
Saheeh International
But if you should desire Allah and His Messenger and the home of the Hereafter - then indeed, Allah has prepared for the doers of good among you a great reward."
நபியுடைய மனைவிகளே! உங்களில் எவரேனும் பகிரங்கமான மானக்கேடு செய்வாராயின், அவருக்கு வேதனை இரட்டிக்கப்படும்; இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபமேயாகும்!
அப்துல் ஹமீது பாகவி
நபியுடைய மனைவிகளே! உங்களில் எவரேனும் பகிரங்கமான ஒரு மானக் கேடான காரியத்தைச் செய்வாராயின் அதற்குரிய தண்டனை அவருக்கு இரு மடங்காக அதிகரிக்கப்படும். இது அல்லாஹ்விற்கு மிக்க சுலபமாக இருக்கிறது.
IFT
நபியின் மனைவியரே! உங்களில் எவரேனும் வெளிப்படையான, மானக்கேடான செயலைச் செய்தால் அவருக்கு இருமடங்கு வேதனை அளிக்கப்படும். இது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதான காரியமாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நபியுடைய மனைவியரே! உங்களில் எவர் பகிரங்கமான மானக்கேடான ஒரு காரியத்தைச் செய்வாரோ, அவருக்கு இரு மடங்காக வேதனை இரட்டிப்பாக்கப்படும். இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபமானதாகவே இருக்கிறது.
Saheeh International
O wives of the Prophet, whoever of you should commit a clear immorality - for her the punishment would be doubled two fold, and ever is that, for Allah, easy.
وَمَنْயார்يَّقْنُتْபணிந்து நடப்பாரோمِنْكُنَّஉங்களில்لِلّٰهِஅல்லாஹ்வுக்கு(ம்)وَرَسُوْلِهٖஅவனது தூதருக்கும்وَتَعْمَلْஇன்னும் செய்வாரோصَالِحًـاநன்மையைنُّؤْتِهَـآஅவருக்கு நாம் கொடுப்போம்اَجْرَهَاஅவரது கூலியைمَرَّتَيْنِۙஇருமுறைوَاَعْتَدْنَا لَهَاஇன்னும் அவருக்கு ஏற்படுத்தி வைத்திருக்கின்றோம்رِزْقًاஉணவைكَرِيْمًاகண்ணியமான
அன்றியும் உங்களில் எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிபட்டு, நல்ல அமல் செய்கிறாரோ, அவருக்கு நாம் நற்கூலியை இருமுறை வழங்குவோம்; இன்னும் அவருக்கு கண்ணியமான உணவையும் சித்தம் செய்திருக்கிறோம்.
அப்துல் ஹமீது பாகவி
உங்களில் எவரேனும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு நற்செயல்களைச் செய்தால், அதற்குரிய கூலியை அவருக்கு நாம் இரு மடங்காகத் தருவோம். மேலும், மிக்க கண்ணியமான வாழ்க்கையையும் அவருக்கு நாம் தயார்படுத்தி வைத்திருக்கிறோம்.
IFT
மேலும், உங்களில் எவரேனும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து வாழ்ந்தால், மேலும், நற்செயல் புரிந்தால், அவர்களுக்கு நாம் இருமடங்கு கூலி வழங்குவோம். மேலும், நாம் அவர்களுக்காக கண்ணியமான நற்பாக்கியங்களை ஏற்பாடு செய்து வைத்துள்ளோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும், உங்களில் எவர் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து, நற்கருமங்களையும் செய்கிறாரோ, அவருக்குரிய (நற்)கூலியை அவருக்கு நாம் இரு முறை தருவோம், இன்னும் அவருக்கு (சுவனத்தில்) மிக்க கண்ணியமான உணவை நாம் தயார் படுத்தி வைத்திருக்கின்றோம்.
Saheeh International
And whoever of you devoutly obeys Allah and His Messenger and does righteousness - We will give her her reward twice; and We have prepared for her a noble provision.
நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல; நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால், (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நபியுடைய மனைவிகளே! நீங்கள் மற்ற (சாதாரண) பெண்களைப் போன்றவர்களல்ல. நீங்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வுக்குப் பயப்பட்டவர்களாயின் (அந்நியருடன் பேசும் சமயத்தில்) நளினமாகப் பேசாதீர்கள். ஏனென்றால் (பாவ) நோய் இருக்கும் உள்ளத்தையுடையவர் (தவறான) விருப்பங்களைக் கொள்ளக்கூடும். ஆகவே, நீங்கள் (எதைக் கூறிய போதிலும்) யதார்த்தவாதிகளைப்போல் (கண்டிப்பாகப்) பேசிவிடுங்கள்.
IFT
நபியின் மனைவியரே! நீங்கள் ஏனைய சாதாரணப் பெண்களைப் போன்றவர்களல்லர். நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சக்கூடியவர்களாயிருந்தால், மென்மையாகப் பேசாதீர்கள். ஏனெனில், உள்ளத்தில் கெட்ட எண்ணத்தைக் கொண்டிருக்கும் யாரேனும் ஒருவன் சபலம் கொள்ளக்கூடும்! ஆகவே, தெளிவாய் நேர்த்தியாய்ப் பேசுங்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நபியுடைய மனைவியரே! நீங்கள் (இதர) பெண்களில் எந்த ஒருவரைப் போன்றவர்களுமல்லர், நீங்கள் (அல்லாஹ்வுக்கு) பயந்து கொண்டவர்களானால் (அந்நியருடன்) பேச்சில் நீங்கள் நளினம் காட்டாதீர்கள், ஏனென்றால், எவனுடைய இதயத்தில் (பாவ) நோய் இருக்கின்றதோ அத்தகையவன் (தவறான விருப்பங்களில்) ஆசை கொள்வான், மேலும், நீங்கள் (நேர்மையான) பேச்சையே பேசிவிடுங்கள்.
Saheeh International
O wives of the Prophet, you are not like anyone among women. If you fear Allah, then do not be soft in speech [to men], lest he in whose heart is disease should covet, but speak with appropriate speech.
(நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; (நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியுடைய மனைவிகளே!) நீங்கள் உங்கள் (வீடுகளில் இருந்து வெளிச் சென்று திரியாது) வீடுகளுக்குள்ளாகவே தங்கி இருங்கள். முன்னிருந்த அறியாத மக்கள் (தங்களை அலங்கரித்துக் கொண்டு வெளியில் சென்று) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்களும் திரியாதீர்கள். தொழுகையை நிலைநிறுத்துங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு நடங்கள். (நபியுடைய) வீட்டுடையார்களே! உங்களை விட்டு எல்லா அசுத்தங்களையும் நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் விரும்புகிறான்.
IFT
மேலும், உங்களுடைய வீடுகளில் தங்கியிருங்கள். முந்தைய அஞ்ஞானக் காலத்தைப் போன்று ஒப்பனையையும் ஒய்யாரத்தையும் காட்டிக்கொண்டு திரியாதீர்கள். தொழுகையை நிலைநாட்டுங்கள்; ஜகாத்தைக் கொடுங்கள். மேலும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். நபியினுடைய குடும்பத்தினராகிய உங்களிலிருந்து தூய்மையின்மையை அகற்றி உங்களை முழுமையாகத் தூய்மைப்படுத்த வேண்டும் என்றுதான் அல்லாஹ் நாடுகின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், (நபியுடைய மனைவியரே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள். முந்தைய அறியாமைக் காலத்தில் (பெண்கள் மறைக்க வேண்டியதை மறைக்காது) வெளிப்படுத்தியதைப் போன்று வெளிப்படுத்தித் திரியாதீர்கள், மேலும், தொழுகையை நிறைவேற்றுங்கள், ஜகாத்தையும் கொடு(த்து வாரு)ங்கள், அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள், (நபியுடைய) வீட்டினரே! அல்லாஹ் நாடுவதெல்லாம் உங்களை விட்டும் (சகல) அசுத்தத்தைப் போக்கி உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவதையும்தான்.
Saheeh International
And abide in your houses and do not display yourselves as [was] the display of the former times of ignorance. And establish prayer and give zakah and obey Allah and His Messenger. Allah intends only to remove from you the impurity [of sin], O people of the [Prophet's] household, and to purify you with [extensive] purification.
மேலும் உங்களுடைய வீடுகளில் ஓதப்படுகின்றனவே அல்லாஹ்வின் வசனங்கள் (அவற்றையும்) ஞான விஷயங்களையும் (ஹிக்மத்) நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் (உங்கள் உள்ளங்களிலுள்ளவை பற்றி) சூட்சுமமாகத் தெரிந்தவன்; (உங்கள் செயல்கள் பற்றி) நன்கறிந்தவன்.
அப்துல் ஹமீது பாகவி
உங்கள் வீடுகளில் ஓதப்படுகின்ற அல்லாஹ்வுடைய வசனங்களையும், ஞானவாக்கியங்க(ளான ஹதீஸ்க)ளையும் ஞாபகத்தில் வையுங்கள். (அவற்றைக் கொண்டு நல்லுணர்ச்சி பெறுங்கள்.) நிச்சயமாக அல்லாஹ் கிருபையுடையவனாக, நன்கறிந்தவனாக இருக்கிறான்.
IFT
உங்களுடைய வீடுகளில் ஓதப்படுகின்ற இறைவசனங்களையும், விவேகமான விஷயங்களையும் நினைவில் வையுங்கள்; திண்ணமாக, அல்லாஹ் நுண்மையானவனாகவும் யாவும் அறிந்தவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், உங்கள் வீடுகளில் ஓதப்படுகின்ற அல்லாஹ்வின் வசனங்களையும், ஹிக்மத் (எனும் சுன்னத்தை)தையும் நினைவு கூறுங்கள், (அவற்றின் மூலம் உபதேசம் அடையுங்கள்) நிச்சயமாக அல்லாஹ் நுட்பமானவனாக (யாவையும்) நன்கறிந்தோனாக இருக்கிறான்.
Saheeh International
And remember what is recited in your houses of the verses of Allah and wisdom. Indeed, Allah is ever Subtle and Aware.
நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; (அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் - ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக முஸ்லிம் ஆண்களும் பெண்களும், நம்பிக்கையுடைய ஆண்களும் பெண்களும், (இறைவனுக்கும் அவனுடைய தூதருக்கும்) கீழ்ப்படியும் ஆண்களும் பெண்களும், உண்மையே கூறும் ஆண்களும் பெண்களும், பொறுமையுள்ள ஆண்களும் பெண்களும், (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடக்கும் ஆண்களும் பெண்களும், தானம் செய்யும் ஆண்களும் பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும் பெண்களும், கற்புள்ள ஆண்களும் பெண்களும், அல்லாஹ்வுடைய திருப்பெயரை அதிகமாக நினைவுகூரும் ஆண்களும் பெண்களும் ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார்படுத்தி வைத்திருக்கிறான்.
IFT
ஆண்கள் மற்றும் பெண்களில் எவர்கள் முஸ்லிம்களாகவும், நம்பிக்கையாளர்களாகவும், கீழ்ப்படிபவர்களாகவும், வாய்மையாளர்களாகவும், பொறுமையுடையோராகவும், அல்லாஹ்வின் முன்னிலையில் பணிபவர்களாகவும், தானதர்மம் செய்பவர்களாகவும், நோன்பு நோற்பவர்களாகவும், தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாப்பவர்களாகவும் இன்னும் அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூருபவர்களாகவும் இருக்கின்றார்களோ, திண்ணமாக, அவர்களுக்காக அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார் செய்து வைத்துள்ளான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், முஸ்லிம்களான பெண்களும், விசுவாசிகளான ஆண்களும், விசுவாசிகளான பெண்களும், (அல்லாஹ்வுக்கு) வழிபாடு செய்பவர்களான ஆண்களும், வழிபாடு செய்பவர்களான பெண்களும், உண்மையே கூறுபவர்களான ஆண்களும், உண்மையே கூறுபவர்களான பெண்களும், பொறுமையாளர்களான ஆண்களும், பொறுமையாளர்களான பெண்களும், உள்ளச்சத்தோடு (அல்லாஹ்வை) பயந்து நடக்கும் ஆண்களும், உள்ளச்சத்தோடு (அல்லாஹ்வை) பயந்து நடக்கும் பெண்களும், தானம் செய்பவர்களான ஆண்களும், தானம் செய்பவர்களான பெண்களும், நோன்பு நோற்பவர்களான ஆண்களும், நோன்பு நோற்பவர்களான பெண்களும், தங்கள் மர்மஸ்தானங்களைக் காத்துக் கொள்பவர்களான ஆண்களும், (மர்மஸ்தானங்களைக்) காத்து கொள்பவர்களான பெண்களும், அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூறுபவர்களான ஆண்களும், (அல்லாஹ்வை அதிகமாக) நினைவு கூறுபவர்களான பெண்களும்_(ஆகிய) இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான (நற்)கூலியையும் தயார் செய்து வைத்திருக்கிறான்.
Saheeh International
Indeed, the Muslim men and Muslim women, the believing men and believing women, the obedient men and obedient women, the truthful men and truthful women, the patient men and patient women, the humble men and humble women, the charitable men and charitable women, the fasting men and fasting women, the men who guard their private parts and the women who do so, and the men who remember Allah often and the women who do so - for them Allah has prepared forgiveness and a great reward.
மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு விஷயத்தைப் பற்றிக் கட்டளையிட்ட பின்னர், அவ்விஷயத்தில் (அதை விட்டு) வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு நம்பிக்கையாளரான எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமையில்லை. (இவ்விஷயத்தில்) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால், நிச்சயமாக அவர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்.
IFT
அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஏதேனும் ஒரு விவகாரத்தில் தீர்ப்பளித்துவிட்டால், பிறகு அந்த விவகாரத்தில் சுயமாகத் தீர்ப்பளிக்கும் அதிகாரம் இறைநம்பிக்கை கொண்டுள்ள எந்த ஆணுக்கும், இறை நம்பிக்கை கொண்டுள்ள எந்தப் பெண்ணுக்கும் கிடையாது. மேலும், எவன் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்கின்றானோ, அவன் வெளிப்படையான வழிகேட்டில் வீழ்ந்துவிட்டான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் யாதொரு காரியத்தை முடிவெடுத்துவிட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் சுயமாக வேறு அபிப்பிராயம் கொள்பவதற்கு, விசுவாசியான எந்த ஆணுக்கும், எந்தப் பெண்ணுக்கும் உரிமையில்லை. (அதில்) அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் எவர் மாறு செய்கிறாரோ அவர், பகிரங்கமான வழிகேடாக திட்டமாக வழிகெட்டுவிட்டார்.
Saheeh International
It is not for a believing man or a believing woman, when Allah and His Messenger have decided a matter, that they should [thereafter] have any choice about their affair. And whoever disobeys Allah and His Messenger has certainly strayed into clear error.
(நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்: “அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்” என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அல்லாஹ்வும், நீரும் எவருக்கு அருள் புரிந்திருந்தீர்களோ அவரை நோக்கி ‘‘ நீ அல்லாஹ்வுக்குப் பயந்து உன் மனைவியை (நீக்காது) உன்னிடமே நிறுத்திக் கொள்'' என்று கூறிய சமயத்தில், நீர் மனிதர்களுக்குப் பயந்து அல்லாஹ் வெளியாக்க இருப்பதை உமது உள்ளத்தில் மறைத்தீர். நீர் பயப்படத் தகுதி உடையவன் அல்லாஹ்தான் (மனிதர்கள் அல்ல.) ‘ஜைது' (என்பவர் மனம் மாறி, தன் மனைவியைத்) தலாக்கு கூறிவிட்ட பின்னர் நாம் அப்பெண்ணை உமக்கு திருமணம் செய்து வைத்தோம். ஏனென்றால், நம்பிக்கையாளர்களால் (தத்தெடுத்து) வளர்க்கப்பட்டவர்கள் தங்கள் மனைவிகளைத் தலாக்குக் கூறிவிட்டால், அவர்களை வளர்த்தவர்கள் அப்பெண்களை திருமணம் செய்து கொள்வதில் ஒரு தடையும் இருக்கக் கூடாது என்பதற்காக இது நடைபெற்றே தீரவேண்டிய அல்லாஹ்வுடைய கட்டளை ஆகும்.
IFT
மேலும் (நபியே!) அந்த சந்தர்ப்பத்தை நினைத்துப் பாரும்; எவர் மீது அல்லாஹ்வும் நீரும் உபகாரம் செய்திருந்தீர்களோ, அவரிடம் நீர் கூறிக்கொண்டிருந்தீர்: “உம்முடைய மனைவியைக் கைவிட்டு விடாதே! மேலும், அல்லாஹ்வுக்கு அஞ்சு” நீர் (அந்நேரத்தில்) அல்லாஹ் வெளிப்படுத்த நாடியிருந்த விஷயத்தை உம்முடைய உள்ளத்தில் மறைத்து வைத்துக்கொண்டிருந்தீர். மேலும், நீர் மனிதர்களுக்கு அஞ்சிக் கொண்டிருந்தீர். ஆனால், அல்லாஹ்தான் நீர் அஞ்சுவதற்கு அதிகத் தகுதியுடையவன்! ஸைத் அவளுடைய விஷயத்தில் தம் நோக்கத்தை நிறைவேற்றிய பிறகு (விவாகரத்து செய்யப்பட்ட) அவளை உமக்கு நாம் மணமுடித்து வைத்தோம் நம்பிக்கையாளர்களின் வளர்ப்பு மகன்கள் தம்முடைய மனைவிமார் விஷயத்தில் தம் தேவையை நிறைவேற்றி விடும்போது (விவாகரத்தான) அப்பெண்களின் விவகாரத்தில் நம்பிக்கையாளர்க்கு எவ்வித இடையூறும் இருக்கக்கூடாது என்பதற்காக! மேலும், அல்லாஹ்வின் கட்டளையோ செயல்படுத்தப்பட வேண்டிய தாகவே இருந்தது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ் எவருக்கு (நேர் வழி காட்டுவதன் மூலம்) அருள் புரிந்து, நீரும் எவருக்கு (அடிமைத்தனத்திலிருந்து உரிமை விடுவதன் மூலம்) உபகாரம் செய்தீரோ அவரிடத்தில் “(ஜைனபு ஆகிய) உம்முடைய மனைவியை (விவாக பந்தத்திலிருந்து நீக்காது) உம்மிடமே (மனைவியாக) நிறுத்திக் கொள்ளும், இன்னும் அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளும்” என்று நீர் கூறிய சமயத்தில்_(நடந்த இச்சம்பவத்தை நினைவு கூர்வீராக) அல்லாஹ் வெளியாக்க இருந்ததை நீர் உம் மனதில் மறைந்திருந்தீர். மேலும், மனிதர்களுக்கு நீர் பயப்படுகிறீர், இன்னும் அல்லாஹ்_அவன்தான் நீர் பயப்படுவதற்கு மிக உரியவன் (மனிதர்களல்ல). ஜைது (என்பவர்) ஜைனபைத் திருமணம் செய்து தாம்பத்திய வாழ்க்கை எனும் தன்) தேவையை அவளிடமிருந்து நிறைவேற்றிவிட்டபோது, நாம் அவளை உமக்குத் திருமணம் செய்து வைத்தோம், ஏனென்றால், விசுவாசிகளால் வளர்க்கப் பட்டவர்கள் தங்கள் தேவையை (அப்பெண்களான) அவர்களிடம் பூர்த்தி செய்துகொண்டு (அவர்களைத் தலாக்குக் கூறி)விட்டால், (அவர்களை வளர்த்த) விசுவாசிகள், (அவ்வாறு தலாக் கூறப்பட்ட) அப்பெண்களை திருமணம் செய்து கொள்வதில் யாதொரு குற்றமிருக்கக்கூடாது என்பதற்காக (உமக்கு, உமது வளர்ப்பு மகனால் விவாகரத்துச் செய்யப்பட்ட ஜைனபை திருமணம் செய்துவைத்தோம்.) மேலும், அல்லாஹ்வுடைய கட்டளை (இவ்வாறு) நடைபெற்றுத்தீர வேண்டியதாக இருந்தது.
Saheeh International
And [remember, O Muhammad], when you said to the one on whom Allah bestowed favor and you bestowed favor, "Keep your wife and fear Allah," while you concealed within yourself that which Allah is to disclose. And you feared the people, while Allah has more right that you fear Him. So when Zayd had no longer any need for her, We married her to you in order that there not be upon the believers any discomfort [i.e., guilt] concerning the wives of their claimed [i.e., adopted] sons when they no longer have need of them. And ever is the command [i.e., decree] of Allah accomplished.
நபியின் மீது அல்லாஹ் விதியாக்கியதை அவர் நிறைவேற்றுவதில் எந்தக் குற்றமும் இல்லை; இதற்கு முன் சென்று போன (நபிமா)ர்களுக்கு ஏற்பட்டிருந்த அல்லாஹ்வின் வழி இதுவேயாகும் - இன்னும் அல்லாஹ்வின் கட்டளை தீர்மானிக்கப்பட்ட விதியாகும்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ் தனக்கு சட்டமாக்கிய ஒரு காரியத்தை நிறைவேற்றுவது நபி மீது குற்றமாகாது. இதற்கு முன் உள்ளவர்களுக்கு (நபிமார்களுக்கு) அல்லாஹ் ஏற்படுத்திய வழியும் இதுவே. அல்லாஹ்வுடைய கட்டளைகள் முன்னதாகவே நிர்ணயிக்கப்பட்டு விடுகின்றன.
IFT
அல்லாஹ் எந்த ஒரு பணியை நபிக்காக நிர்ணயித்துள்ளானோ அந்தப் பணியை ஆற்றுவதில் நபியின் மீது எந்தத் தடையும் இல்லை. முன்பு சென்ற நபிமார்களின் விவகாரத்திலும் இதுதான் அல்லாஹ்வுடைய நியதியாய் இருந்திருக்கின்றது. மேலும், அல்லாஹ்வுடைய கட்டளை திட்டவட்டமாக முடிவு செய்யப்பட்ட தீர்ப்பாய் இருக்கின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஜைனபை மணமுடிக்கும் விஷயத்தில்) நபியின் மீது அல்லாஹ் அவருக்காக விதியாக்கியதில் எவ்வித குற்றமும் இல்லை, இதற்கு முன் சென்றுவிட்டவர்(களாகிய நபிமார்)களுக்கு (அல்லாஹ் ஏற்படுத்திய) வழியும் இதுவே; இன்னும் அல்லாஹ்வுடைய கட்டளை தீர்மானிக்கப்பட்ட முடிவாக இருக்கின்றது.
Saheeh International
There is not to be upon the Prophet any discomfort concerning that which Allah has imposed upon him. [This is] the established way of Allah with those [prophets] who have passed on before. And ever is the command of Allah a destiny decreed.
(இறை தூதர்களாகிய) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை எடுத்துக் கூறுவார்கள்; அவர்கள் அவனுக்கே பயப்படுவார்கள்; அல்லாஹ்வையன்றி வேறு யாருக்கும் அவர்கள் பயப்படமாட்டார்கள்; ஆகவே, கேள்வி கணக்குக் கேட்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் அல்லாஹ்வுடைய கட்டளைகளை எடுத்துரைத்தே தீருவார்கள்; அவ(ன் ஒருவ)னுக்கே பயப்படுவார்கள்; அல்லாஹ்வைத் தவிர மற்றெவருக்கும் பயப்பட மாட்டார்கள். (ஆகவே, நபியே! நீர் மற்றெவருக்கும் பயப்பட வேண்டாம். (இதைப் பற்றி அவர்களிடம்) கேள்வி கணக்குக் கேட்பதற்கு அல்லாஹ் (ஒருவனே) போதுமானவன்.
IFT
(இது அல்லாஹ்வின் நியதியாகும்; இந்த மக்களுக்காக) அவர்களோ அல்லாஹ்வின் தூதுச்செய்திகளை சேர்ப்பிக்கின்றார்கள். அவனுக்கே அஞ்சுகின்றார்கள். மேலும், ஓரிறைவனைத் தவிர வேறு எவருக்கும் அவர்கள் அஞ்சுவதில்லை. மேலும், கணக்கு வாங்கிட அல்லாஹ் போதுமானவன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(முன் சென்றுவிட்ட) அவர்கள் எத்தகயோரென்றால் அல்லாஹ்வுடைய (இத்தகைய) தூதுச் செய்திகளை (மக்களுக்குக் கூடுதல் குறைவின்றி) எத்திவைப்பார்கள், இன்னும் அவர்கள் அவ(ன் ஒருவ)னுக்கே பயப்படுவார்கள், அல்லாஹ்வைத் தவிர மற்றெவருக்கும் அவர்கள் பயப்படமாட்டார்கள், கணக்குக் கேட்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.
Saheeh International
[Allah praises] those who convey the messages of Allah and fear Him and do not fear anyone but Allah. And sufficient is Allah as Accountant.
முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை; ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்.
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களே!) உங்களிலுள்ள ஆண்களில் ஒருவருக்கும் முஹம்மது (நபி அவர்கள்) தந்தையாக இருக்கவில்லை. (ஆகவே, அவர் ஜைதுக்கு எவ்வாறு தந்தையாவார்?) எனினும், அவர் அல்லாஹ்வுடைய தூதராகவும், நபிமார்களுக்கு (இறுதி) முத்திரையாகவும் (இறுதி நபியாகவும்) இருக்கிறார். (ஆகவே, அவருக்குப் பின்னர் ஒரு தூதரையும் அனுப்பமாட்டான்.) அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கிறான்.
IFT
(மக்களே!) முஹம்மத் உங்களுடைய ஆண்களில் எவருக்கும் தந்தையல்லர். ஆனால், அவர் அல்லாஹ்வின் தூதராகவும், இறுதிநபியாகவும் இருக்கின்றார். அல்லாஹ் ஒவ்வொன்றையும் அறிந்தவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உங்களுடைய ஆண்களில் எவருக்கும் முஹம்மது தகப்பனாக இருக்கவில்லை, எனினும் அல்லாஹ்வுடைய தூதராகவும், நபிமார்களுக்கு(க் கடைசி) முத்திரையாகவும், (இறுதி நபியாகவும்) இருக்கிறார், அன்றியும், அல்லாஹ் ஒவ்வொரு பொருளைப் பற்றியும் நன்கறிந்தோனாக இருக்கிறான்.
Saheeh International
Muhammad is not the father of [any] one of your men, but [he is] the Messenger of Allah and seal [i.e., last] of the prophets. And ever is Allah, of all things, Knowing.
உங்களை இருளிலிருந்து வெளியேற்றி ஒளியின் பால் கொண்டுவருவதற்காக உங்கள் மீது அருள்புரிகிறவன் அவனே; இன்னும் அவனுடைய மலக்குகளும் அவ்வாறே (பிரார்த்திக்கின்றனர்;) மேலும், அவன் முஃமின்களிடம் மிக்க இரக்கமுடையவனாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
அவன்தான் உங்களை(ப் பலவகைப் பாவ) இருள்களில் இருந்து வெளிப்படுத்தி பிரகாசத்தின் பக்கம் கொண்டுவந்து உங்கள் மீது அருள் புரிந்திருக்கிறான். அவனுடைய வானவர்களும் உங்களுக்காகப் பிரார்த்திக்கிறார்கள். அல்லாஹ், நம்பிக்கையாளர்(களாகிய உங்)கள் மீது மிக்க மகா கருணையுடையவனாக இருக்கிறான்.
IFT
அவனுடைய வானவர்களும் உங்கள் மீது கருணை புரியும்படி இறைஞ்சுகின்றார்கள்; அவன் உங்களை இருள்களிலிருந்து வெளியேற்றி, ஒளியின் பக்கம் கொண்டுவருவதற்காக! அவன் நம்பிக்கையாளர்கள் மீது பெருங்கருணை பொழிபவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் எத்தகையவனென்றால், உங்கள் மீது அவன் அருள் புரிகின்றான், இன்னும் அவனது மலக்குகளும் (உங்களுக்காக பாவ மன்னிப்புக் கேட்கிறார்கள்), காரணம், இருள்களிலிருந்து ஒளியின்பால் உங்களை அவன் வெளியேற்றுவதற்காக மேலும், அல்லாஹ் விசுவாசி(களாகிய உங்)கள் மீது மிக்க கிருபையுடையோனாக இருக்கிறான்.
Saheeh International
It is He who confers blessing upon you, and His angels [ask Him to do so] that He may bring you out from darknesses into the light. And ever is He, to the believers, Merciful.
تَحِيَّتُهُمْஅவர்களது முகமன்يَوْمَ يَلْقَوْنَهٗஅவனை அவர்கள் சந்திக்கின்ற நாளில்سَلٰمٌ ۖۚஸலாம்وَاَعَدَّஇன்னும் ஏற்படுத்தி வைத்திருக்கின்றான்لَهُمْஅவர்களுக்குاَجْرًاகூலியைكَرِيْمًاகண்ணியமான
அவனை அவர்கள் சந்திக்கும் நாளில் “ஸலாமுன்” (உங்களுக்குச் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)” என்பதுவே (அவர்களுக்குக் கிடைக்கும்) சோபனமாகும், மேலும் அவர்களுக்காக கண்ணியமான (நற்) கூலியையும் அவன் சித்தப்படுத்தியிருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்கள்) அவனைச் சந்திக்கும் நாளில் (உங்களுக்கு) ‘‘ஈடேற்றம் உண்டாவதாக'' என்று ஆசீர்வதிப்பான். அவர்களுக்காக மிக்க கண்ணியமான கூலியையும் அவன் தயார்படுத்தி வைத்திருக்கிறான்.
IFT
அவர்கள், அவனைச் சந்திக்கும் நாளில் ஸலாம் சாந்தி உண்டாகட்டும் என்று வாழ்த்துக் கூறி வரவேற்கப்படுவார்கள். மேலும், அல்லாஹ் அவர்களுக்காக கண்ணியமான கூலியை தயார் செய்து வைத்துள்ளான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவனை அவர்கள் சந்திக்கும் நாளில், அவர்களுக்குரிய காணிக்கை “(உங்களுக்குச்) சாந்தி உண்டாவதாக” என்பதாகும், மேலும், அவர்களுக்காக கண்ணியமான கூலியையும் அவன் தயாராக்கி வைத்திருக்கிறான்.
Saheeh International
Their greeting the Day they meet Him will be, "Peace." And He has prepared for them a noble reward.
وَبَشِّرِநற்செய்தி கூறுவீராகالْمُؤْمِنِيْنَநம்பிக்கையாளர்களுக்குبِاَنَّநிச்சயமாகلَهُمْஅவர்களுக்குمِّنَ اللّٰهِஅல்லாஹ்விடம்فَضْلًاஅருள்كَبِيْرًاமிகப் பெரிய
அன்றியும் காஃபிர்களுக்கும், முனாஃபிக்குகளுக்கும் நீர் வழிப்படாதீர்; அவர்கள் (தரும்) துன்பத்தை(ப் புறக்கணித்து) விடுவீராக; அல்லாஹ்வின் மீதே முற்றிலும் உறுதிகொண்டு (அவனையே சார்ந்து) இருப்பீராக! அல்லாஹ்வே போதுமான பாதுகாவலனாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
நிராகரிப்பவர்களுக்கும் நயவஞ்சகர்களுக்கும் நீர் கீழ்ப்படியாதீர். அவர்களால் (உமக்கு) ஏற்படும் துன்பங்களை புறக்கணித்து விடுவீராக. (உம்முடைய எல்லா காரியங்களின்) பொறுப்பை அல்லாஹ்விடமே ஒப்படைத்து விடுவீராக. அல்லாஹ்வே (உமக்குப்) பொறுப்பேற்கப் போதுமானவன்.
IFT
நிராகரிப்பாளர்களுக்கும் நயவஞ்சகர்களுக்கும் ஒருபோதும் நீர் பணிந்துவிடாதீர். அவர்களுடைய துன்புறுத்தலைக் கொஞ்சமும் பொருட்படுத்தாதீர். மேலும், அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருப்பீராக! (மனிதன் தன்னுடைய) விவகாரங்களை ஒப்படைப்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நிராகரிப்போருக்கும், (வேஷதாரிகளான) முனாஃபிக்குகளுக்கும் நீர் கீழ்படியாதீர், அவர்கள் (இழைக்கும்) துன்பங்களையும் நீர் (புறக்கணித்து) விட்டுவிடுவீராக! (உம்முடைய சகல காரியங்களையும் அவனிடமே ஒப்படைத்து முழுமையாக) அல்லாஹ்வின் மீது நம்பிக்கையும் வைப்பீராக! பொறுப்பேற்கிறவனாக இருக்க அல்லாஹ்வே (உமக்குப்) போதுமானவன்.
Saheeh International
And do not obey the disbelievers and the hypocrites and disregard their annoyance, and rely upon Allah. And sufficient is Allah as Disposer of affairs.
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤاநம்பிக்கையாளர்களேاِذَا نَكَحْتُمُநீங்கள் திருமணம் முடித்தால்الْمُؤْمِنٰتِநம்பிக்கைகொண்ட பெண்களைثُمَّபிறகுطَلَّقْتُمُوْهُنَّஅவர்களை நீங்கள் விவாகரத்து செய்துவிட்டால்مِنْ قَبْلِமுன்னர்اَنْ تَمَسُّوْநீங்கள் உறவு வைப்பதற்குهُنَّஅவர்களுடன்فَمَا لَـكُمْஉங்களுக்கு இல்லைعَلَيْهِنَّஅவர்கள் மீதுمِنْ عِدَّةٍஎவ்வித இத்தாவும்تَعْتَدُّوْنَهَا ۚநீங்கள் அதைக் கணக்கிட வேண்டியفَمَتِّعُوْசெல்வத்தை கொடுங்கள்!هُنَّஅவர்களுக்குوَسَرِّحُوْஇன்னும் விடுவித்து விடுங்கள்هُنَّஅவர்களைسَرَاحًاவிடுவித்தல்جَمِيْلًاஅழகிய முறையில்
ஈமான் கொண்டவர்களே! முஃமினான பெண்களை நீங்கள் மணந்து, பிறகு நீங்கள் அவர்களை தொடுவதற்கு முன்னமேயே “தலாக்” செய்து விட்டீர்களானால், அவர்கள் விஷயத்தில் நீங்கள் கணக்கிடக் கூடிய (இத்தத்)தவணை ஒன்றும் உங்களுக்கு இல்லை - ஆகவே அவர்களுக்குத் (தக்கதாக) ஏதேனும் கொடுத்து அழகான முறையில் அவர்களை விடுவித்து விடுங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! நீங்கள் நம்பிக்கை கொண்ட பெண்களை திருமணம் செய்து அவர்களை நீங்கள் தொடுவதற்கு முன்னதாகவே ‘தலாக்' கூறி (அவர்களை நீக்கி) விட்டால் (தலாக்குக் கூறப்பட்ட பெண்கள் இத்தா இருக்கவேண்டிய) கணக்கின்படி இத்தா இருக்கும்படி அவர்களை வற்புறுத்த உங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை. (அதாவது: அவர்கள் இத்தா இருக்க வேண்டியதில்லை.) நீங்கள் அவர்களுக்கு ஏதும் (பொருள்) கொடுத்து அழகான முறையில் (மண வாழ்க்கையில் இருந்து) அவர்களை நீக்கிவிடுங்கள்.
IFT
நம்பிக்கை கொண்டவர்களே! இறைநம்பிக்கை கொண்ட பெண்களை நீங்கள் திருமணம் செய்து பின்னர் அவர்களைத் தொடுவதற்கு முன்பாக விவாகரத்துச் செய்து விட்டால், நிறைவேற்றுமாறு நீங்கள் கோரக்கூடிய வகையில் உங்களுக்காக அவர்கள் மீது ‘இத்தா’ எதுவும் இல்லை. எனவே, அவர்களுக்குக் கொஞ்சம் பொருள்களைக் கொடுத்து நல்ல முறையில் அவர்களை அனுப்பி வைத்துவிடுங்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டோரே! நீங்கள் விசுவாசங்கொண்ட பெண்களைத் திருமணம் செய்து, பிறகு அவர்களை நீங்கள் தீண்டுவதற்கு முன் தலாக் கூறி விட்டால், (மற்ற விவாகரத்து செய்யப்பட்ட பெண்களுக்காக) நீங்கள் எதைக் கணக்கிடுவீர்களோ அத்தகைய எந்த “இத்தா”வும் அவர்களின் மீது (நிர்ணயிக்க) உங்களுக்கு (உரிமை) இல்லை. எனவே, நீங்கள் அவர்களுக்கு ஏதும் (பொருள்) கொடுத்து அழகான முறையில் (விவாக பந்தத்திலிருந்து) அவர்களை விடுவித்தும் விடுங்கள்.
Saheeh International
O you who have believed, when you marry believing women and then divorce them before you have touched them [i.e., consummated the marriage], then there is not for you any waiting period to count concerning them. So provide for them and give them a gracious release.
நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் - இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்); அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்); இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்); மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.
அப்துல் ஹமீது பாகவி
நபியே! நிச்சயமாக நீர் மஹர் கொடுத்து திருமணம் செய்து கொண்ட பெண்களையும், அல்லாஹ் உமக்கு (யுத்தத்தில்) கொடுத்தவர்களில் உமது வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களையும் நாம் உமக்கு ஆகுமாக்கி வைத்திருக்கிறோம். உமது தந்தையின் சகோதரர்களின் மகள்கள், உமது அத்தையின் மகள்கள், உமது தாய்மாமனின் மகள்கள், உமது தாயின் சகோதரியுடைய மகள்கள் ஆகிய இவர்களில் எவர்கள் (மக்காவை விட்டு) உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களையும் (நீர் திருமணம் செய்துகொள்ள நாம் உமக்கு ஆகுமாக்கி வைத்திருக்கிறோம். மேலும்) நம்பிக்கை கொண்ட ஒரு பெண், தன்னை (மஹரின்றியே) நபிக்கு அர்ப்பணம் செய்து நபியும் அவளை திருமணம் செய்துகொள்ள விரும்பினால், அவளையும் உமக்கு ஆகுமாக்கி வைத்திருக்கிறோம். (நபியே!) இது சொந்தமாக உமக்கு (நாம் அளிக்கும்) விசேஷ சுதந்திரமாகும்; மற்ற நம்பிக்கையாளர்களுக்கல்ல. (மற்ற நம்பிக்கையாளர்களே!) அவர்கள் மனைவிகள் விஷயத்திலும், அவர்களுடைய வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட பெண்கள் விஷயத்திலும் (மஹர் கொடுத்தே திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்றும், நான்குக்கு அதிகமான பெண்களை திருமணம் செய்துகொள்ளக் கூடாதென்றும்) நாம் அவர்கள் மீது சட்டமாக்கி இருக்கும் கட்டளையை நன்கறிவோம். (அதை அவர்கள் நிறைவேற்றியே தீர வேண்டும்.) உமக்கு அத்தகைய நிர்ப்பந்தம் ஏற்படாமல் இருப்பதற்காக (அக்கடமையிலிருந்து) உமக்கு விதி விலக்குச் செய்தோம். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மகா கருணையுடையவனாக இருக்கிறான்.
IFT
நபியே! நீர் மஹர் கொடுத்துவிட்ட உம்முடைய மனைவியரையும் அல்லாஹ்வினால் வழங்கப்பட்டு உமது கைவசத்தில் வந்துள்ள அடிமைப் பெண்களையும், மற்றும் உம்மோடு ஹிஜ்ரத்* செய்த பெண்களாகிய உம் தந்தையின் சகோதரர்களின் மகள்கள், உம் தந்தையின் சகோதரிகளின் மகள்கள், உம் தாயின் சகோதரர்களின் மகள்கள், உம் தாயின் சகோதரிகளின் மகள்கள் ஆகியோரையும் திண்ணமாக, நாம் உமக்கு ஆகுமாக்கியிருக்கின்றோம். மேலும், இறைநம்பிக்கை கொண்ட பெண்ணையும் அவள் தன்னைத் தானே நபிக்காக அன்பளிப்பாய் வழங்கி, நபியும் அவளைத் திருமணம் செய்திட விரும்பும் பட்சத்தில் (உமக்கு ஆகுமாக்கியிருக்கின்றோம்). இந்தச் சலுகை உமக்கு மட்டுமே உரியதாகும்; பிற நம்பிக்கையாளர்களுக்கு இல்லை! ஏனைய நம்பிக்கையாளர்கள் மீது அவர்களுடைய மனைவிகள் மற்றும் அடிமைப் பெண்களின் விஷயத்தில் என்னென்ன வரையறைகளை நாம் விதித்திருக்கின்றோம் என்பதை நாம் அறிவோம். (இவ்வரையறைகளிலிருந்து உமக்கு நாம் விலக்களித்திருப்பது) உமக்கு எந்தச் சிரமமும் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான்! மேலும், அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும் கிருபையாளனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நபியே! எவர்களின் மஹர்களை நீர் கொடுத்து விட்டீரோ அத்தகைய உம்முடைய மனைவியரையும், அல்லாஹ் உமக்கு (யுத்தத்தில்) அளித்து உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், (மக்காவை விட்டு) உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களே அத்தகைய உம் தந்தையின் சகோதரரின் புதல்வியரையும், உம் தந்தையின் சகோதரிகளுடைய புதல்வியரையும், உமது தாய் மாமனின் புதல்வியரையும், உம் தாயின் சகோதரிகளுடைய புதல்வியரையும் மஹர் கொடுத்து நீர் திருமணம் செய்து கொள்ள) நிச்சயமாக நாம் உமக்கு ஆகுமாக்கி வைத்திருக்கின்றோம், மேலும், விசுவாசங்கொண்ட ஒரு பெண், தன்னை (மஹரின்றியே) நபிக்கு அர்ப்பணம் செய்து, நபியும் அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், (அவளையும் மணக்க உமக்கு அனுமதி அளித்தோம்.) நபியே! இது மற்ற விசுவாசிகளுக்கன்றி உமக்கு மட்டும் பிரத்தியேகமாக உள்ளதாகும், (மற்ற விசுவாசிகள்) அவர்கள் மனைவியரிலும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவற்றிலும், நாம் அவர்கள் மீது விதித்திருக்கும் கட்டளையை நாம் நன்கறிவோம், உமக்கு (அனுமதிக்கப்பட்ட பெண்களைத் திருமணம் செய்து கொண்ட விஷயத்தில்) எவ்வித சங்கடமும் எற்படாமலிப்பதற்காக (அக்கடமையிலிருந்து உமக்கு விதி விலக்குச் செய்தோம்.) மேலும், அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவனாக, மிக்க கிருபையுடையவனாக இருக்கிறான்.
Saheeh International
O Prophet, indeed We have made lawful to you your wives to whom you have given their due compensation and those your right hand possesses from what Allah has returned to you [of captives] and the daughters of your paternal uncles and the daughters of your paternal aunts and the daughters of your maternal uncles and the daughters of your maternal aunts who emigrated with you and a believing woman if she gives herself to the Prophet [and] if the Prophet wishes to marry her; [this is] only for you, excluding the [other] believers. We certainly know what We have made obligatory upon them concerning their wives and those their right hands possess, [but this is for you] in order that there will be upon you no discomfort [i.e., difficulty]. And ever is Allah Forgiving and Merciful.
அவர்களில் நீர் விரும்பிய வரை ஒதுக்கி வைக்கலாம். நீர் விரும்பியவரை உம்முடன் தங்கவைக்கலாம், நீர் ஒதுக்கி வைத்தவர்களில் நீர் நாடியவரை உம்முடன் சேர்த்துக் கொள்ளலாம். (இதில்) உம்மீது குற்றமில்லை; அவர்களுடைய கண்கள் குளிர்ச்சியடையும் பொருட்டும், அவர்கள் விசனப்படாமல் இருப்பதற்கும் அவர்கள் ஒவ்வொருவரும் நீர் அவர்களுக்கு கொடுப்பதைக் கொண்டு திருப்தி அடைவதற்காகவும், இது சுலபமான வழியாகும். மேலும், அல்லாஹ் உங்கள் உள்ளங்களில் இருப்பதை நன்கறிகிறான்; இன்னும் அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்; மிக்க பொறுமையாளன்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) உமது மனைவிகளில் நீர் விரும்பியவர்களை (விரும்பிய காலம் வரை) விலக்கி வைக்கலாம்; நீர் விரும்பியவர்களை (விரும்பிய காலம் வரை) உம்முடன் இருக்க வைக்கலாம். நீர் விலக்கியவர்களில் நீர் விரும்பியவர்களை உம்முடன் சேர்த்துக் கொள்ளலாம். (இவற்றைப் பற்றி) உம் மீது ஒரு குற்றமுமில்லை. அவர்களுடைய கண்கள் குளிர்ந்திருப்பதற்கும் நீர் அவர்களுக்குக் கொடுத்தவற்றைப் பற்றி அவர்கள் அனைவருமே திருப்தியடைந்து கவலைப்படாதிருப்பதற்கும் இது மிக்க சுலபமான வழியாக இருக்கிறது. உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கறிவான். அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவனாக, பொறுமையுடையவனாக இருக்கிறான்.
IFT
உம்முடைய மனைவியரில் உம்முடைய விருப்பப்படி சிலரை உம்மைவிட்டுத் தனிமைப்படுத்தி வைப்பதற்கும், நீர் விரும்புகின்றபடி வேறு சிலரை உம்முடன் வைத்துக் கொள்வதற்கும், நீர் தனிமைப்படுத்தி வைத்தவர்களில் எவரையாவது நீர் அழைத்துக் கொள்வதற்கும் அனுமதி இருக்கிறது, (இந்த விவகாரத்தில்) உம் மீது எத்தகைய தவறுமில்லை. இதனால் இவர்கள் கண் குளிர்ந்தும் வருத்தமற்றும் இருப்பார்கள் என்பதையும், மேலும், எதனை நீர் அவர்களுக்கு அளித்தாலும் அதனைக் குறித்து அவர்கள் அனைவரும் திருப்தி கொள்வார்கள் என்பதையும் அதிகம் எதிர்பார்க்கலாம். உங்களுடைய உள்ளங்களில் இருப்பவற்றை அல்லாஹ் நன்கறிவான். மேலும், அல்லாஹ் யாவும் அறிந்தவனாகவும், சகிப்புத்தன்மையுடையவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! உம்முடைய மனைவியராகிய) அவர்களில், நீர் விரும்பியவரை ஒதுக்கி வைக்கலாம், நீர் விரும்பியவரை உம்முடன் தங்கவும் வைக்கலாம், நீர் ஒதுக்கியவர்களில், நீர் எவரையேனும் (மீண்டும்) நாடினால் உம்மீது குற்றமில்லை. அது, அவர்களுடைய கண்கள் குளிர்சியடைவதற்கும், அவர்கள் கவலைபடாமலிருப்பதற்கும், நீர் அவர்களனைவருக்கும் எதைக் கொடுத்தீரோ அதைக் கொண்டு திருப்தியடைவதற்கும் மிக்க நெருக்கமானதாகும், இன்னும், உங்களுடைய உள்ளங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கு அறிவான், மேலும், அல்லாஹ் (யாவையும்) நன்கறிந்தவனாக, சகித்துக் கொள்பவனாக இருக்கிறான்.
Saheeh International
You, [O Muhammad], may put aside whom you will of them or take to yourself whom you will. And any that you desire of those [wives] from whom you had [temporarily] separated - there is no blame upon you [in returning her]. That is more suitable that they should be content and not grieve and that they should be satisfied with what you have given them - all of them. And Allah knows what is in your hearts. And ever is Allah Knowing and Forbearing.
லா யஹில்லு லகன் னிஸா'உ மிம் Bபஃது வ லா அன் தBபத்தல Bபிஹின்ன மின் அZஜ்வாஜி(ன்)வ் வ லவ் அஃஜBபக ஹுஸ்னுஹுன்ன இல்லா மா மலகத் யமீனுக்க்; வ கானல் லாஹு 'அலா குல்லி ஷய்'இர் ரகீBபா
முஹம்மது ஜான்
இவர்களுக்குப் பின்னால் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் தவிர இதர பெண்கள் உமக்கு ஹலால் ஆகமாட்டார்கள்; இன்னும் இவர்களுடைய இடத்தில் வேறு மனைவியரை மாற்றிக் கொள்வதும்; அவர்களுடைய அழகு உம்மைக் கவர்ந்த போதிலும் சரியே - ஹலால் இல்லை - மேலும், அல்லாஹ் அனைத்துப் பொருள்களையும் கண்காணிப்பவன்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! இப்போதிருக்கும் உமது மனைவிகளுக்குப்) பின்னர், வேறு பெண்கள் (அவர்களை நீங்கள் திருமணம் செய்துகொள்ள) உமக்கு ஆகுமாக மாட்டார்கள். மேலும், ஒரு பெண்ணின் அழகு உம்மை கவர்ந்தபோதிலும் உமது மனைவிகளில் எவரையும் நீக்கி, அதற்குப் பதிலாக அவளை எடுத்துக் கொள்வதும் உமக்கு ஆகுமாகாது. ஆயினும், உமது வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட பெண் அவ்வாறல்ல. (அவள் உமக்கு ஆகுமானவளே!) அல்லாஹ் அனைத்தையும் கவனித்தவனாகவே இருக்கிறான்.
IFT
இதற்குப் பின்னர், வேறு பெண்கள் உமக்கு ஆகுமானவர்களல்லர். மேலும், இம்மனைவியருக்குப் பகரமாக நீர் வேறு மனைவியரை ஏற்படுத்திக் கொள்வதற்கும் அனுமதியில்லை. அவர்களின் அழகு உமக்கு மிகவும் பிடித்தமானதாயினும் சரியே! ஆயினும் உமக்கு அடிமைப் பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அல்லாஹ் யாவற்றையும் கண்காணிப்பவனாயிருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! இதற்குப்) பின்னர், உம்வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களைத் தவிர (நீர் திருமணம் செய்து கொள்ள) வேறு பெண்கள் உமக்கு ஆகுமாகமாட்டர்கள், இன்னும், அவர்களுடைய (இடத்தில் வேறு பெண்களின்) அழகு உம்மை கவர்ந்த போதிலும் அவர்களை, (உம்முடைய மனைவியராக) இவர்களைக் கொண்டு நீர் மாற்றிக் கொள்வதும் உமக்கு (அனுமதி) இல்லை, அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் கண்காணிக்கிறவனாக இருக்கிறான்.
Saheeh International
Not lawful to you, [O Muhammad], are [any additional] women after [this], nor [is it] for you to exchange them for [other] wives, even if their beauty were to please you, except what your right hand possesses. And ever is Allah, over all things, an Observer.
முஃமின்களே! (உங்களுடைய நபி) உங்களை உணவு அருந்த அழைத்தாலன்றியும், அது சமையலாவதை எதிர்பார்த்தும் (முன்னதாகவே) நபியுடைய வீடுகளில் பிரவேசிக்காதீர்கள்; ஆனால், நீங்கள் அழைக்கப்பட்டீர்களானால் (அங்கே) பிரவேசியுங்கள்; அன்றியும் நீங்கள் உணவருந்தி விட்டால் (உடன்) கலைந்து போய் விடுங்கள்; பேச்சுகளில் மனங்கொண்டவர்களாக (அங்கேயே) அமர்ந்து விடாதீர்கள்; நிச்சயமாக இது நபியை நோவினை செய்வதாகும்; இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுவார்; ஆனால் உண்மையைக் கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை; நபியுடைய மனைவிகளிடம் ஏதாவது ஒரு பொருளை (அவசியப்பட்டுக்) கேட்டால், திரைக்கு அப்பாலிருந்தே அவர்களைக் கேளுங்கள். அதுவே உங்கள் இருதயங்களையும் அவர்கள் இருதயங்களையும் தூய்மையாக்கி வைக்கும்; அல்லாஹ்வின் தூதரை நோவினை செய்வது உங்களுக்கு தகுமானதல்ல; அன்றியும் அவருடைய மனைவிகளை அவருக்குப் பின்னர் நீங்கள் மணப்பது ஒருபோதும் கூடாது; நிச்சயமாக இது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் (பாவ) காரியமாகும்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! (உங்களை உங்கள் நபி விருந்துக்காக அழைத்திருந்த போதிலும்) அனுமதியின்றி நபியின் வீட்டினுள் செல்லாதீர்கள்.அது தயாராவதை எதிர்பார்த்துத் தாமதித்து இருக்கக்கூடிய விதத்தில் முன்னதாகவும் சென்று விடாதீர்கள். (விருந்து தயாரானதன் பின்னர்) நீங்கள் அழைக்கப்பட்டால்தான் உள்ளே செல்லவும். மேலும், நீங்கள் உணவைப் புசித்து விட்டால் உடனே வெளியேறி விடுங்கள். (அங்கிருந்து கொண்டே வீண்) பேச்சுக்களை ஆரம்பித்துவிட வேண்டாம். (அவ்வாறு செய்தால்) நிச்சயமாக இது நபிக்கு பெரும் வருத்தத்தையளிக்கும். (இதை) உங்களிடம் (கூற) அவர் வெட்கப்படலாம். எனினும், உண்மையைச் சொல்ல அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். நபியுடைய மனைவிகளிடம் ஒரு பொருளை நீங்கள் கேட்(கும்படி நேரிட்)டால், (நீங்கள்) திரை மறைவிலிருந்து கொண்டே அவர்களிடம் கேளுங்கள். இது உங்கள் உள்ளங்களையும், அவர்கள் உள்ளங்களையும் பரிசுத்தமாக்கி வைக்கும். அல்லாஹ்வுடைய தூதரை நீங்கள் துன்புறுத்துவது உங்களுக்குத் தகுமான தல்ல. மேலும், அவருடைய மனைவிகளை அவருக்குப் பின்னர் ஒரு காலத்திலும் நீங்கள் திருமணம் செய்து கொள்வதும் கூடாது. நிச்சயமாக இது அல்லாஹ்விடத்தில் மிக்க கடுமையான (பாவமான) காரியமாகும்.
IFT
நம்பிக்கை கொண்டவர்களே! நபியின் இல்லங்களில் அனுமதியின்றி நுழையாதீர்கள்; உணவு தயாராகும் நேரத்தை எதிர்பார்த்துக்கொண்டும் இருக்காதீர்கள். ஆனால், நீங்கள் உணவு உண்பதற்கு அழைக்கப்பட்டால் அவசியம் செல்லுங்கள்; சாப்பிட்டு முடிந்ததும் பிரிந்து சென்றுவிடுங்கள். பேசிக் கொண்டிருப்பதில் ஈடுபட்டு விடாதீர்கள்; உங்களுடைய இச்செயல் நபிக்கு வேதனை அளிக்கின்றது. ஆயினும், வெட்கத்தின் காரணத்தால் உங்களிடம் அவர் எதுவும் சொல்வதில்லை. ஆனால், அல்லாஹ்வோ சத்தியத்தைக் கூற வெட்கப்படுவதில்லை. நபியின் மனைவியரிடம் நீங்கள் ஏதேனும் கேட்க வேண்டுமென்றால், திரைக்குப் பின்னாலிருந்து கேளுங்கள். உங்களுடையவும், அவர்களுடையவும் உள்ளங்களின் தூய்மைக்கு இதுவே ஏற்ற முறையாகும். அல்லாஹ்வுடைய தூதருக்குத் தொல்லை கொடுப்பது உங்களுக்கு ஆகுமானதல்ல. அவருக்குப் பின்னர் அவருடைய மனைவியரை நீங்கள் திருமணம் முடிப்பதும் ஒருபோதும் ஆகுமானதன்று. அவ்வாறு செய்வது அல்லாஹ்விடம் திண்ணமாக, பெரும் பாவமாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டோரே! உணவின்பால் (அதை உண்ண) உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டாலே தவிர, அது தயாராவதை எதிர்பார்த்திராதவர்களாக (முன்னதாகவே) நபியுடைய வீடுகளில் பிரவேசிக்காதீர்கள். எனினும் நீங்கள் அழைக்கப்பட்டால், அப்பொழுது பிரவேசியுங்கள், பின்னர் நீங்கள் உணவைப் புசித்துவிட்டால், (அங்கிருந்து கொண்டே) பேசுவதில் விருப்பம் கொண்டவர்களாகவும் ஆகிவிடாது கலைந்து சென்று விடுங்கள், நிச்சயமாக இது நபியை நோவினை செய்வதாக இருந்தது, ஆகவே, (இதனை) உங்களிடம் (கூற) அவர் வெட்கப்படுகிறார், உண்மையைச் சொல்ல அல்லாஹ் வெட்கப்படவுமாட்டான், மேலும், (நபியுடைய மனைவியராக) அவர்களிடம் யாதொரு பொருளை நீங்கள் கேட்(க நேரிட்)டால், நீங்கள் திரைக்கு அப்பால் இருந்து கொண்டே அவர்களிடம் கேளுங்கள், அ(வ்வாறு செய்வ)து உங்கள் உள்ளங்களுக்கும், அவர்கள் உள்ளங்களுக்கும் மிகப் பரிசுத்தமானதாகும், மேலும், அல்லாஹ்வுடைய தூதருக்கு நீங்கள் தொல்லை கொடுப்பது உங்களுக்குத் தகுமானதன்று, அவருடைய மனைவியரை அவருக்குப் பின்னர் நீங்கள் திருமணம் செய்து கொள்வதும் ஒரு காலத்திலும் கூடாது, நிச்சயமாக அது அல்லாஹ்விடத்தில் (பாவத்தால்) மிக்க மகத்தானதாக இருக்கிறது.
Saheeh International
O you who have believed, do not enter the houses of the Prophet except when you are permitted for a meal, without awaiting its readiness. But when you are invited, then enter; and when you have eaten, disperse without seeking to remain for conversation. Indeed, that [behavior] was troubling the Prophet, and he is shy of [dismissing] you. But Allah is not shy of the truth. And when you ask [his wives] for something, ask them from behind a partition. That is purer for your hearts and their hearts. And it is not [conceivable or lawful] for you to harm the Messenger of Allah or to marry his wives after him, ever. Indeed, that would be in the sight of Allah an enormity.
நீங்கள் ஒரு விஷயத்தை வெளிப்படுத்தினாலும், அல்லது அதை நீங்கள் மறைத்து வைத்தாலும், நிச்சயமாக அல்லாஹ் எல்லா விஷயங்களையும் அறிபவனாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் எவ்விஷயத்தை வெளியிட்டபோதிலும் அல்லது மறைத்துக் கொண்ட போதிலும் நிச்சயமாக அல்லாஹ் எல்லா விஷயங்களையுமே நன்கறிபவனாக இருக்கிறான்.
IFT
நீங்கள் எதையேனும் வெளிப்படுத்தினாலும் அல்லது அதனை மறைத்தாலும், திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொன்றையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஒரு விஷயத்தை நீங்கள் வெளிப்படுத்தினாலும், அல்லது அதனை மறைத்துக் கொண்டாலும் அப்பொழுது நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளைப் பற்றியும் நன்கு அறிகிறவனாக இருக்கிறான்.
Saheeh International
Whether you reveal a thing or conceal it, indeed Allah is ever, of all things, Knowing.
لَا جُنَاحَகுற்றம் இல்லைعَلَيْهِنَّஅவர்கள் மீதுفِىْۤ اٰبَآٮِٕهِنَّதங்கள் தந்தைமார்கள் விஷயத்தில்وَلَاۤ اَبْنَآٮِٕهِنَّஇன்னும் தங்கள் ஆண் பிள்ளைகள்وَلَاۤ اِخْوَانِهِنَّஇன்னும் தங்கள் சகோதரர்கள்وَلَاۤ اَبْنَآءِஇன்னும் ஆண் பிள்ளைகள்اِخْوَانِهِنَّதங்கள் சகோதரர்களின்وَلَاۤ اَبْنَآءِஇன்னும் ஆண் பிள்ளைகள்اَخَوٰتِهِنَّதங்கள் சகோதரிகளின்وَلَا نِسَآٮِٕهِنَّஇன்னும் தங்கள் பெண்கள்وَلَا مَا مَلَـكَتْஇன்னும் சொந்தமாக்கியவர்கள்اَيْمَانُهُنَّ ۚதங்கள் வலக்கரங்கள்وَاتَّقِيْنَபயந்து கொள்ளுங்கள்!اللّٰهَ ؕஅல்லாஹ்வைاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்كَانَஇருக்கின்றான்عَلٰى كُلِّ شَىْءٍஎல்லாவற்றையும்شَهِيْدًاநன்கு பார்த்தவனாக
லா ஜுனாஹ 'அலய்ஹின்ன Fபீ ஆBபா'இஹின்ன வ லா அBப்னா'இஹின்ன வ லா இக்வானிஹின்ன்ன வ லா அBப்னா'இ இக்வானிஹின்ன வ லா அBப்னா'இ அகவாதிஹின்ன வலா னிஸா'இ ஹின்ன வலா மா மலகத் அய்மானுஹுன்ன்; வத்தகீனல் லாஹ்; இன்னல் லாஹ கான 'அலா குல்லி ஷய்'இன் ஷஹீதா
முஹம்மது ஜான்
(நபியின் மனைவிமார்களாகிய) அவர்கள், தங்களுடைய தந்தையர் முன்பும், தங்கள் ஆண் மக்கள் முன்பும் தங்கள் சகோதரர்கள் முன்பும், தங்கள் சகோதரர்களின் ஆண்மக்கள் முன்பும், தங்கள் சகோதரிகளின் ஆண்மக்கள் முன்பும், அவர்களின் பெண்கள் முன்பும்; அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் முன்பும் (வருவது) அவர்கள் மீது குற்றமாகாது; எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள்; (நபியின் மனைவிமார்களே!) நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றுக்கும் சாட்சியாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
நபியுடைய மனைவிகள் தங்கள் தந்தைகள் முன்பாகவும், தங்கள் மகன்கள் முன்பாகவும், தங்கள் சகோதரர்கள் முன்பாகவும், தங்கள் சகோதரர்களின் மகன்கள் முன்பாகவும், தங்கள் சகோதரிகளின் மகன்கள் முன்பாகவும், தங்கள் (போன்ற நம்பிக்கையாளர்களான) பெண்கள் முன்பாகவும், தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்கள் முன்பாகவும் (வருவதில்) அவர்கள் மீது ஒரு குற்றமுமில்லை. (இவர்களைத் தவிர மற்றவர்கள் முன்பாக வருவதைப் பற்றி நபியுடைய மனைவிகளே!) நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் பார்த்தவனாகவே இருக்கிறான்.
IFT
நபியின் மனைவியர் மீது இவ்விஷயத்தில் எந்தக் குற்றமும் இல்லை; அவர்களின் தந்தைகள், அவர்களின் மகன்கள், அவர்களின் சகோதரர்கள், அவர்களின் சகோதரர்களின் மகன்கள், அவர்களுடைய சகோதரிகளின் மகன்கள், அவர்களுடன் நட்பு கொண்டுள்ள பெண்கள் மற்றும் அவர்களுடைய வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் ஆகியோர் அவர்களுடைய இல்லங்களுக்கு வரலாம். (பெண்களே!) அல்லாஹ்வின் கட்டளைகளை மீறுவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள். அல்லாஹ் ஒவ்வொன்றின் மீதும் நேரடிப் பார்வை வைத்திருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியுடைய மனைவியர்) தங்களுடைய தந்தைகள் (முன்பாகவும்), தங்கள் ஆண்மக்கள் (முன்பாகவும்), தங்கள் சகோதரர்கள் (முன்பாகவும்), தங்கள் சகோதரர்களின் புதல்வர்கள் (முன்பாகவும்), தங்கள் சகோதரிகளின் புதல்வர்கள் (முன்பாகவும்), தங்கள் பெண்கள் (முன்பாகவும்), தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களி(ன் முன்பாக வருவதி)லும் அவர்களின் மீது குற்றமில்லை. மேலும், நீங்கள் அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள், நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியாளனாக இருக்கிறான்.
Saheeh International
There is no blame upon them [i.e., women] concerning their fathers or their sons or their brothers or their brothers' sons or their sisters' sons or their women or those their right hands possess [i.e., slaves]. And fear Allah. Indeed Allah is ever, over all things, Witness.
இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய வானவர்களும் நபியின் மீது ஸலவாத்துச் சொல்கின்றார்கள். ஆகவே, நம்பிக்கையாளர்களே! நீங்களும் அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லி ஸலாமும் கூறிக் கொண்டிருங்கள்.
IFT
அல்லாஹ்வும் அவனுடைய வானவர்களும் நபியின் மீது ஸலவாத் எனும் நல்வாழ்த்துக்களை அனுப்புகின்றார்கள். நம்பிக்கை கொண்டவர்களே! நீங்களும் அவர் மீது ஸலவாத்தும் ஸலாமும் சொல்லுங்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அல்லாஹ்வும், அவனுடைய மலக்குகளும் நபியின் மீது ஸலவாத்து (அருள், பிரார்த்தனை)ச் செய்கிறார்கள், (ஆகவே) விசுவாசிகளே! நீங்கள் அவர் மீது ஸலாவத்துச் சொல்லுங்கள், ஸலாமும் கூறுங்கள்.
Saheeh International
Indeed, Allah confers blessing upon the Prophet, and His angels [ask Him to do so]. O you who have believed, ask [Allah to confer] blessing upon him and ask [Allah to grant him] peace.
எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நோவினை செய்கிறார்களோ, அவர்களை நிச்சயமாக அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் சபிக்கின்றான்; மேலும், அவர்களுக்கு இழிவுதரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் துன்புறுத்துகிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் சபிக்கிறான். இழிவு தரும் வேதனையையும் அவர்களுக்காக தயார்படுத்தி வைத்திருக்கிறான்.
IFT
எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் தொல்லை கொடுக்கின்றார்களோ அவர்களை இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ் சபிக்கின்றான். மேலும், இழிவுபடுத்தும் வேதனையையும் அவர்களுக்காகத் தயார் செய்து வைத்திருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக, அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் துன்புறுத்துகிறார்களே அத்தகையோர்_அவர்களை அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் சபித்து விட்டான். இழிவு தரும் வேதனையையும் அவர்களுக்கு தயார் செய்து வைத்திருக்கிறான்.
Saheeh International
Indeed, those who abuse Allah and His Messenger - Allah has cursed them in this world and the Hereafter and prepared for them a humiliating punishment.
ஈமான் கொண்ட ஆண்களையும், ஈமான் கொண்ட பெண்களையும் செய்யாத (எதையும் செய்ததாகக்) கூறி எவர் நோவினை செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக அவதூறையும், வெளிப்படையான பாவத்தையுமே சுமந்து கொள்கிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் நம்பிக்கை கொண்ட ஆண்களையும் பெண்களையும் அவர்கள் செய்யாத குற்றத்தை(ச் செய்ததாக)க் கூறித் துன்புறுத்துகிறார்களோ அவர்கள், நிச்சயமாக (பெரும்) அவதூற்றையும் பகிரங்கமான பாவத்தையுமே சுமந்து கொள்கின்றனர்.
IFT
மேலும், நம்பிக்கை கொண்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அவர்கள் குற்றம் புரியாதிருக்கவே எவர்கள் துன்பம் அளிக்கின்றார்களோ, அவர்கள் ஒரு மாபெரும் அவதூறையும் வெளிப்படையான பாவத்தின் விளைவையும் தம்மீது சுமந்துகொள்கிறார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், விசுவாசங்கொண்ட ஆண்களையும், விசுவாசங்கொண்ட பெண்களையும் அவர்கள் செய்யாத (குற்றத்)தை(ச் செய்ததாக)க் கூறி துன்புறுத்துகிறார்களே அத்தகையவர்கள், நிச்சயமாக(ப் பெரும்) அவதூறையும் பகிரங்கமான பாவத்தையும் சுமந்து கொண்டனர்.
Saheeh International
And those who harm believing men and believing women for [something] other than what they have earned [i.e., deserved] have certainly borne upon themselves a slander and manifest sin.
நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக; அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.
அப்துல் ஹமீது பாகவி
நபியே! நீர் உமது மனைவிகளுக்கும், உமது மகள்களுக்கும், நம்பிக்கையாளர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முந்தானைகளை (தங்கள் முகங்களில் போட்டு) இறக்கிக் கொள்ளும்படி நீர் கூறுவீராக. அதனால், அவர்கள் கண்ணியமானவர்கள் என அறியப்பட்டு, எவருடைய துன்பத்திற்கும் அவர்கள் உள்ளாகாதிருப்பதற்கு இதுசுலபமான வழியாகும். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மகா கருணையாளனாக இருக்கிறான்.
IFT
நபியே! உம்முடைய மனைவிகள், உம்முடைய புதல்விகள் மற்றும் நம்பிக்கையாளர்களின் மனைவியர் ஆகியோரிடம் கூறும்: அவர்கள் தங்களுடைய துப்பட்டிகளின் முந்தானையைத் தங்களின் மீது தொங்கவிட்டுக் கொள்ளட்டும். அவர்களை அறிந்து கொள்வதற்கும், அவர்கள் தொல்லைக்கு ஆளாகாமலிருப்பதற்கும் இதுவே மிகவும் ஏற்ற முறையாகும். அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும், கிருபை மிக்கவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நபியே! உம்முடைய மனைவியருக்கும், உங்கள் புதல்விகளுக்கும், விசுவாசிகளின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முந்தானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு நீர் கூறுவீராக! அதனால் அவர்கள் (சுதந்திரமானவர்கள் என) அறியப்படுவதற்கு இது மிக நெருக்கமானதாகும், அப்போது அவர்கள் (பிறரால்) நோவினை செய்யப்படமாட்டார்கள், இன்னும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக மிகக்கிருபையுடையவனாக இருக்கிறான்.
Saheeh International
O Prophet, tell your wives and your daughters and the women of the believers to bring down over themselves [part] of their outer garments. That is more suitable that they will be known and not be abused. And ever is Allah Forgiving and Merciful.
முனாஃபிக்குகளும், தங்கள் இதயங்களில் நோய் உள்ளவர்களும், மதீனாவில் பொய்ப்பிரச்சாரம் செய்து கொண்டிருப்பவர்களும் (தம் தீச்செயல்களிலிருந்து) விலகிக் கொள்ளவில்லையானால், அவர்களுக்கு எதிராக (நடவடிக்கைகள் எடுப்பதை) உம்மிடம் நிச்சயமாக சாட்டுவோம். பிறகு அவர்கள் வெகு சொற்ப(கால)மேயன்றி அங்கு உமது அண்டை அயலார்களாக (வசித்திருக்க) மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நயவஞ்சகர்களும், உள்ளத்தில் (பாவ) நோயுள்ளவர்களும், மதீனாவில் பொய்ப் பிரச்சாரம் செய்கிறவர்களும் (இனியும் தங்கள் விஷமத்திலிருந்து) விலகிக்கொள்ளாவிடில் நிச்சயமாக நாம் உம்மையே அவர்கள் மீது ஏவிவிட்டு விடுவோம். பின்னர், அதில் உமக்கு அருகில் வெகு சொற்ப நாள்களே தவிர அவர்கள் வசித்திருக்க முடியாது.
IFT
நயவஞ்சகர்களும், எவர்களின் உள்ளங்களில் பிணி படிந்துள்ளதோ அவர்களும் மற்றும் மதீனாவில் கொந்தளிப்பை உருவாக்கும் வதந்திகளைப் பரப்பக்கூடியவர்களும் (தங்களின் செயல்களிலிருந்து) விலகிக் கொள்ளாவிடில் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு உம்மை வீறுகொண்டு எழச்செய்வோம். பிறகு, அவர்களால் இந்நகரத்தில் சொற்பகாலமே உம்முடன் வசிக்க முடியும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! வேஷதாரிகளான) முனாஃபிக்குகளும், எவர்களுடைய இதயத்தில் (பாவ)நோய் உள்ளதோ அத்தகையோரும், மதீனாவில் பொய்யான விஷயங்களை மக்களுக்கு மத்தியில் பரப்பக்கூடியவர்களும், (தங்களின் இச்செயலிலிருந்து) விலகிக் கொள்ளாவிடில், நிச்சயமாக நாம் உம்மை அவர்களின் மீது சாட்டிவிடுவோம், பின்னர், வெகு சொற்பமே தவிர (மதீனாவாகிய) அதில் உம் அண்டை வீட்டினராக அவர்கள் வசித்திருக்கமாட்டார்கள்.
Saheeh International
If the hypocrites and those in whose hearts is disease and those who spread rumors in al-Madīnah do not cease, We will surely incite you against them; then they will not remain your neighbors therein except for a little,
مَّلْـعُوْنِيْنَ ۛۚஅவர்கள் சபிக்கப்பட்டவர்கள்اَيْنَمَا ثُقِفُوْۤاஅவர்கள் எங்கு காணப்பட்டாலும்اُخِذُوْاஅவர்கள் சிறை பிடிக்கப்பட வேண்டும்وَقُتِّلُوْا تَقْتِيْلًاஇன்னும் முற்றிலும் கொல்லப்படவேண்டும்
மல்'ஊனீன அய்னமா துகிFபூ உகிதூ வ குத்திலூ தக்தீலா
முஹம்மது ஜான்
அ(த்தகைய தீய)வர்கள் சபிக்கப் பட்டவர்களாவார்கள்; அவர்கள் எங்கே காணப்பட்டாலும் பிடிக்கப்படுவார்கள்; இன்னும் கொன்றொழிக்கப்படுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் சபிக்கப்பட்டு விட்டனர். ஆகவே, அவர்கள் எங்கு காணப்பட்ட போதிலும் (சிறை) பிடிக்கப்பட்டும், வெட்டி அழிக்கப்பட்டும் விடுவார்கள்.
IFT
(எல்லாத் திசைகளிலிருந்தும்) அவர்கள் சரமாரியாய் சபிக்கப்படுவார்கள்; காணுமிடமெல்லாம் அவர்கள் பிடிக்கப்படுவார்கள். மேலும், மோசமான முறையில் கொல்லப்படுவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
சபிக்கப்பட்டவர்களாக (அவர்கள் இருப்பர், ஆகவே) அவர்கள் எங்கு காணப்பட்ட போதிலும் பிடிக்கப்படுவார்கள், இன்னும் கொன்றொழிக்கப்படுவார்கள்.
Saheeh International
Accursed wherever they are found, [being] seized and massacred completely.
அல்லாஹ் ஏற்படுத்திய வழி - இதற்கு முன் சென்றவர்களுக்கும் இதுவே தான்; அல்லாஹ்வின் (அவ்)வழியில் எவ்வித மாற்றத்தையும் நீர் காணமாட்டீர்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ் ஏற்படுத்திய வழி இதற்கு முன் சென்றவர்களுக்கும் இதுதான். ஆகவே, (நபியே!) அல்லாஹ்வுடைய வழியில் எவ்வித மாறுதலையும் நீர் காணமாட்டீர்.
IFT
இது அல்லாஹ்வின் நியதியாகும். இத்தகையவர்களின் விவகாரத்தில் இந்நியதி முன்பிருந்தே கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது! மேலும், அல்லாஹ்வுடைய நியதியில் நீர் எவ்வித மாற்றத்தையும் காணமாட்டீர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இதற்கு முன் சென்றுவிட்டார்களே அத்தகையோரில் அல்லாஹ்வின் வழிமுறை (இது) தான், ஆகவே, (நபியே!) நீர் அல்லாஹ்வுடைய வழிமுறையில் யாதொரு மாறுதலையும் காணவே மாட்டீர்.
Saheeh International
[This is] the established way of Allah with those who passed on before; and you will not find in the way of Allah any change.
(நியாயத் தீர்ப்புக்குரிய) அவ்வேளையை பற்றி மக்கள் உம்மைக் கேட்கின்றனர்: “அதைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது” என்று நீர் கூறுவீராக; அதை நீர் அறிவீரா? அது சமீபத்திலும் வந்து விடலாம்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) இறுதிநாளைப் பற்றி (அது எப்பொழுது வரும்? என) மனிதர்கள் உம்மிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘ (அது எப்பொழுது வருமென்ற) அதன் ஞானம் அல்லாஹ்விடம் (மட்டும்)தான் இருக்கிறது. நீர் அறிவீரா? அது சமீபத்திலும் வந்துவிடக்கூடும்.''
IFT
மறுமைநாள் எப்போது வரும் என்று மக்கள் உம்மிடம் கேட்கின்றார்கள். நீர் கூறும்: “அதைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது.” உமக்குத் தெரியுமா என்ன? அந்நாள் நெருங்கி வந்திருக்கலாம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) மறுமை நாளைப்பற்றி (“அது எப்பொழுது” என்று) உம்மிடம் மனிதர்கள் கேட்கின்றனர், (அதற்கு) நீர் கூறும், (“அது எப்பொழுது என்ற) அதன் அறிவெல்லாம் அல்லாஹ்விடம் (மட்டும்)தான் இருக்கின்றது, மேலும், மறுமை நாள் சமீபத்தில் வந்து விடக்கூடும் என உமக்கு எது அறிவித்துக் கொடுக்கும்?
Saheeh International
People ask you concerning the Hour. Say, "Knowledge of it is only with Allah. And what may make you perceive? Perhaps the Hour is near."
நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், “ஆ, கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே; இத்தூதருக்கும் நாங்கள் கட்டுப்பட்டிருக்க வேண்டுமே!” என்று கூறுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நரகத்தில் அவர்களுடைய முகங்களை புரட்டிப் புரட்டிப் பொசுக்கும் நாளில் ‘‘எங்கள் கேடே! நாங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்திருக்க வேண்டுமே!'' என்று கதறுவார்கள்.
IFT
எந்நாளில் அவர்களுடைய முகங்கள் நெருப்பில் புரட்டி எடுக்கப்படுமோ அந்நாளில் அவர்கள் கூறுவார்கள்: “அந்தோ! நாங்கள் அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் கீழ்ப்படிந்து வாழ்ந்தோமில்லையே!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களுடைய முகங்கள் (நரக) நெருப்பில் புரட்டப்படும் நாளில், “நாங்கள் அல்லாஹ்வுக்கு வழிபட்டிருக்க வேண்டுமே! (அவனுடைய) தூதருக்கும் கீழ்ப்படிந்திருக்க வேண்டுமே” என்று கூறுவார்கள்.
Saheeh International
The Day their faces will be turned about in the Fire, they will say, "How we wish we had obeyed Allah and obeyed the Messenger."
“எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள்” என்றும் அவர்கள் கூறுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
மேலும் ‘‘எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் கீழ்ப்படிந்தோம். நாங்கள் தப்பான வழியில் செல்லும்படி அவர்கள் செய்து விட்டார்கள்.
IFT
மேலும், கூறுவார்கள்: “எங்கள் இறைவனே! நாங்கள் எங்களுடைய தலைவர்களுக்கும், பெரியோர்களுக்கும் கீழ்ப்படிந்தோம். அவர்கள் எங்களை நேரிய வழியிலிருந்து பிறழச் செய்துவிட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், “எங்கள் இரட்சகனே! நிச்சயமாக நாங்கள் எங்களுடைய தலைவர்களுக்கும் எங்கள் பெரியோர்களுக்கும் கீழ்ப்படிந்தோம், ஆகவே, அவர்கள் எங்களை வழி தவறச்செய்து விட்டார்கள்.”
Saheeh International
And they will say, "Our Lord, indeed we obeyed our masters and our dignitaries, and they led us astray from the [right] way.
ஈமான் கொண்டவர்களே! மூஸாவை(ப் பற்றி அவதூறு கூறி) நோவினை செய்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்; ஆனால் அவர்கள் கூறியதை விட்டு அல்லாஹ் அவரைப் பரிசுத்தமானவராக்கி விட்டான்; மேலும் அவர் அல்லாஹ்விடத்தில் கண்ணிய மிக்கவராகவே இருந்தார்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! மூஸாவை(ப் பற்றி பொய்யாக அவதூறு கூறி அவரை)த்துன்புறுத்திய மக்களைப் போல் நீங்களும் ஆகிவிட வேண்டாம். அவர்கள் கூறிய அவதூற்றிலிருந்து மூஸாவை அல்லாஹ் பரிசுத்தமாக்கி விட்டான். அவர் அல்லாஹ்விடத்தில் மிக்க கண்ணியமானவராகவே இருந்தார்.
IFT
நம்பிக்கை கொண்டவர்களே! மூஸாவுக்கு தொல்லை அளித்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். அவர்கள் இட்டுக் கட்டிக் கூறிய விஷயங்களிலிருந்து அல்லாஹ் அவரை விடுவித்து விட்டான். மேலும், அல்லாஹ்விடத்தில் அவர் கண்ணியத்துக்குரியவராய் இருந்தார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டோரே! மூஸாவை நோவினை செய்தார்களே அவர்களைப் போல் நீங்கள் ஆகிவிடவேண்டாம், பின்னர், அவர்கள் கூறியதிலிருந்து அல்லாஹ் அவரை நீக்கி விட்டான், மேலும், அவர் அல்லாஹ்விடத்தில் பெரும் தகுதியுடையவராக இருந்தார்.
Saheeh International
O you who have believed, be not like those who abused Moses; then Allah cleared him of what they said. And he, in the sight of Allah, was distinguished.
(அவ்வாறு செய்வீர்களாயின்) அவன் உங்களுடைய காரியங்களை உங்களுக்குச் சீராக்கி வைப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான்; அன்றியும் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் எவர் கீழ்ப்படிகின்றாரோ, அவர் மகத்தான வெற்றி கொண்டு விட்டார்.
அப்துல் ஹமீது பாகவி
அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார்.
IFT
அல்லாஹ் உங்களுடைய செயல்களைச் சீர்திருத்திவிடுவான்; மேலும், உங்களுடைய குற்றங்களை மன்னிக்கவும் செய்வான். எவன் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிகின்றானோ, அவன் மகத்தான வெற்றி அடைந்துவிட்டான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவ்வாறு நீங்கள் செய்தால்) அவன் உங்களுடைய செயல்களை உங்களுக்குச் சீர் படுத்தி வைப்பான், உங்களுடைய குற்றங்களையும் மன்னிப்பான், மேலும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப் படிகின்றாரோ அப்போது அவர், திட்டமாக மகத்தான வெற்றியாக வெற்றியடைந்து விட்டார்.
Saheeh International
He will [then] amend for you your deeds and forgive you your sins. And whoever obeys Allah and His Messenger has certainly attained a great attainment.
நிச்சயமாக வானங்களையும், பூமியையும், மலைகளையும் (நம் கட்டளைகளான) அமானிதத்தை சுமந்து கொள்ளுமாறு எடுத்துக் காட்டினோம்; ஆனால் அதைச் சுமந்து கொள்ள மறுத்தன;அதைப் பற்றி அவை அஞ்சின;ஆனால் மனிதன் அதைச் சுமந்தான்;நிச்சயமாக மனிதன் (தனக்குத்தானே) அநியாயம் செய்பவனாகவும், அறிவிலியாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக ‘‘(நம்) பொறுப்பைச் சுமந்து கொள்வீர்களா?'' என்று நாம் வானங்கள், பூமி, மலைகள் ஆகியவற்றிடம் நாம் வினவினோம். அதற்கு அவை அதைப் பற்றிப் பயந்து, அதைச் சுமந்து கொள்ளாது விலகிவிட்டன. அத்தகைய பொறுப்பைத்தான் மனிதன் சுமந்துகொண்டான். (ஆகவே) நிச்சயமாக அவன் அறியாதவனாக தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொண்டவனாக இருக்கிறான்.
IFT
நாம் இந்த அமானிதத்தை வானங்கள், பூமி மற்றும் மலைகள் ஆகியவற்றின் முன்பாக வைத்தபோது அவை அதனை ஏற்கத் தயாராகவில்லை. மேலும், அதனைக் கண்டு அஞ்சின. ஆனால், மனிதன் அதனை ஏற்றுக்கொண்டான். திண்ணமாக, அவன் பெரிதும் அநீதி இழைப்பவனாகவும் அறியாதவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நாம் அமானித்தை வானங்கள், பூமி மலைகள் ஆகியவற்றின் மீது (அதைச் சுமந்து கொள்ளுமாறு) எடுத்துக் காட்டினோம், அப்போது அதைச் சுமந்து கொள்வதிலிருந்து அவை விலகிக் கொண்டன, இன்னும், அ(தைச் சுமப்ப)திலிருந்து அவை பயந்தன. (ஆனால்) மனிதனோ அதனைச் சுமந்து கொண்டான், நிச்சயமாக அவன் (அமானிதத்தை நிறைவேற்றும் விஷயத்தில்) பெரும் அநியாயக்காரனாக (அதன் கடமையை) அறியாதவனாக இருக்கின்றான்.
Saheeh International
Indeed, We offered the Trust to the heavens and the earth and the mountains, and they declined to bear it and feared it; but man [undertook to] bear it. Indeed, he was unjust and ignorant.
எனவே, (இவ்வமானிதத்தை மாறு செய்யும்) முனாஃபிக்கான ஆண்களையும், முனாஃபிக்கான பெண்களையும்; முஷ்ரிக்கான ஆண்களையும், முஷ்ரிக்கான பெண்களையும் நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வான்; (ஆனால் இவ்வமானிதத்தை மதித்து நடக்கும்) முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் (அவர்கள் தவ்பாவை ஏற்று) மன்னிக்கின்றான். அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.
அப்துல் ஹமீது பாகவி
(அத்தகைய பொறுப்பை ஏற்றுக்கொண்டு, அதற்கு மாறாக நடக்கும்) நயவஞ்சக ஆண்களையும் பெண்களையும், இணைவைத்து வணங்கும் ஆண்களையும் பெண்களையும் அல்லாஹ் வேதனை செய்வான். (அந்த பொறுப்பை மதித்து நடக்கும்) நம்பிக்கையாளர்களாகிய ஆண்களையும் பெண்களையும் (அவர்களுடைய) தவறிலிருந்து (அருளின் பக்கம்) அல்லாஹ் திருப்பிவிடுவான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக கருணை உடையவனாக இருக்கிறான்.
IFT
ஏனெனில், (இந்த அமானிதம் எனும் பொறுப்பை அவன் ஏற்றுக்கொண்டான். அதன் தவிர்க்க முடியாத விளைவு இதுதான்:) நயவஞ்சகம் கொண்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும், இணைவைக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அல்லாஹ் தண்டனை அளிக்க வேண்டும். மேலும், இறைநம்பிக்கை கொண்ட ஆண்கள் மற்றும் பெண்களின் பாவமன்னிப்புக் கோரிக்கையை அவன் ஏற்றுக்கொள்ள வேண்டும். அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும், கிருபையாளனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அத்தகைய அமானிதத்தை ஏற்றுக்கொண்டு அதற்கு மாறாக நடக்கும்) முனாஃபிக்கான (வேஷதாரிகளான) ஆண்களையும், முனாஃபிக்கான பெண்களையும், இணை வைத்துக் கொண்டிருக்கும் ஆண்களையும், இணை வைத்துக் கொண்டிருக்கும் பெண்களையும் அல்லாஹ் வேதனை செய்வதற்காகவும், (அந்த அமானிதத்தை ஏற்றபின் மதித்து நடக்கும்) விசுவாசிகளான ஆண்களையும், விசுவாசிகளான பெண்களையும் அவர்களுடைய தவ்பாவை ஏற்று மன்னிப்பதற்காகவும் (இவ்வாறு எடுத்துக்காட்டினான்). மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மிகக் கிருபையுடையவனாக இருக்கின்றான்.
Saheeh International
[It was] so that Allah may punish the hypocrite men and hypocrite women and the men and women who associate others with Him and that Allah may accept repentance from the believing men and believing women. And ever is Allah Forgiving and Merciful.