வானங்களையும், பூமியையும் இவையிரண்டிற்கும் இடையே உள்ளவற்றையும் உண்மையையும், ஒரு குறிப்பிட்ட தவணையையும் கொண்டல்லாமல் நாம் படைக்கவில்லை; ஆனால் நிராகரிப்பவர்களோ, தங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்டதைப் புறக்கணிப்பவர்களாக இருக்கிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றையும் தக்க காரணமும், (அவற்றுக்குக்) குறிப்பிட்ட தவணையுமின்றி நாம் படைக்கவில்லை. எவர்கள் (அல்லாஹ்வை) நிராகரிக்கிறார்களோ அவர்கள், தங்களுக்குப் பயமுறுத்தி எச்சரிக்கை செய்யப்பட்டதை மறுக்கின்றனர்.
IFT
நாம் வானங்களையும் பூமியையும் அவற்றிற்கிடையே உள்ள அனைத்தையும் சத்தியத்திற்கேற்பவும் ஒரு குறிப்பிட்ட கால நிர்ணயத்துடனும் படைத்திருக்கின்றோம். ஆனால், இந்த நிராகரிப்பாளர்கள், அவர்களுக்கு எந்த உண்மை குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளதோ, அதனைப் புறக்கணிக்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வானங்களையும் பூமியையும் அவை இரண்டிற்கு மத்தியில் உள்ளவைகளையும், உண்மையைக்கொண்டும், குறிப்பிடப்பட்ட தவணையையும் கொண்டே தவிர நாம் படைக்கவில்லை, மேலும், (அல்லாஹ்வை) நிராகரிக்கின்றார்களே அத்தகையோர், அவர்கள் தங்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டதைவிட்டும் புறக்கணிக்கின்றவர்களாக இருக்கின்றனர்.
Saheeh International
We did not create the heavens and earth and what is between them except in truth and [for] a specified term. But those who disbelieve, from that of which they are warned, are turning away.
குல் அர'அய்தும் மா தத்'ஊன மின் தூனில் லாஹி அரூனீ மாதா கலகூ மினல் அர்ளி அம் லஹும் ஷிர்குன் Fபிஸ் ஸமாவாதி ஈதூனீ Bபி கிதாBபிம் மின் கBப்லி ஹாதா அவ் அதாரதிம் மின் 'இல்மின் இன் குன்தும் ஸாதிகீன்
முஹம்மது ஜான்
“நீங்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை கவனித்தீர்களா? பூமியிலுள்ள எதை அவை படைத்துள்ளன; அல்லது அவற்றுக்கு வானங்களில் ஏதாவது பங்கு உண்டா? என்பதை எனக்குக் காண்பியுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இதற்கு, முன்னேயுள்ள ஒரு வேதத்தையோ அல்லது (முன்னோர்களின்) அறிவு ஞானங்களில் மிஞ்சிய ஏதேனும் பகுதியையோ (உங்கள் கூற்றுக்கு ஆதாரமாக) என்னிடம் கொண்டு வாருங்கள்!” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (நபியே! அவர்களை நோக்கி) நீர் கூறுவீராக: ‘‘அல்லாஹ்வை தவிர்த்து நீங்கள் (இறைவனென) எவற்றை அழைக்கிறீர்களோ அவற்றை நீங்கள் கவனித்தீர்களா? அவை பூமியில் எதைத்தான் படைத்திருக்கின்றன? அதை நீங்கள் எனக்குக் காண்பியுங்கள் அல்லது வானங்களில் (அவற்றின் ஆட்சியிலோ அல்லது அவற்றை படைத்ததிலோ) அவற்றுக்குப் பங்குண்டா? நீங்கள் உண்மை சொல்பவர்களாயிருந்தால், இதற்கு (ஆதாரமாக) முன்னுள்ள ஒரு வேதத்தை, அல்லது (இது சம்பந்தமான) ஞானமுடையவர்களின் ஒரு வாக்கியத்தைக் கொண்டு வாருங்கள்.
IFT
(நபியே! இவர்களிடம்) கூறும்: இறைவனை விட்டுவிட்டு எவற்றை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவை எப்படிப்பட்டவை என்று நீங்கள் எப்போதாவது கண்களைத் திறந்து பார்த்ததுண்டா? சற்று எனக்குக் காண்பித்துத் தாருங்கள். அவர்கள் பூமியில் எதையாவது படைத்திருக்கின்றார்களா? அல்லது வானங்களைப் படைத்து நிர்வகிப்பதில் அவர்களுக்கு ஏதேனும் பங்கு இருக்கிறதா? நீங்கள் உண்மையாளர்களாய் இருந்தால், இதற்கு முன் வந்த ஏதேனும் வேதமோ அல்லது எஞ்சியுள்ள ஏதேனும் ஞானமோ (இந்தக் கொள்கைகளுக்கு ஆதாரமாக) உங்களிடம் இருப்பின் அவற்றை என்னிடம் கொண்டு வாருங்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆகவே நபியே! அவர்களிடம்,) நீர் கூறுவீராக; அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைக்கின்றவற்றை நீங்கள் பார்த்தீர்களா? பூமியிலிருந்து எதனை அவர்கள் படைத்திருக்கிறார்கள்? அல்லது வானங்களின் படைப்பில் அவர்களுக்குக் கூட்டு உண்டா? என்பதை நீங்கள் எனக்குக் காண்பியுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இதற்கு (ஆதாரமாக) முன்னுள்ள யாதொரு வேதத்தையோ, அல்லது (முன்னோர்களில் யாரிடமிருந்தாவது கிடைக்கப்பெற்ற) அடிச் சுவட்டிலிருந்து (எஞ்சியிருக்கும்) அறிவு ஆதாரத்தையோ கொண்டுவாருங்கள்.
Saheeh International
Say, [O Muhammad], "Have you considered that which you invoke besides Allah? Show me what they have created of the earth; or did they have partnership in [creation of] the heavens? Bring me a scripture [revealed] before this or a [remaining] trace of knowledge, if you should be truthful."
கியாம நாள்வரை (அழைத்தாலும்) தனக்கு பதில் கொடுக்க மாட்டாத - அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களைவிட வழி கெட்டவர்கள் யார்? தங்களை அழைப்பதையே அவர்கள் அறியமுடியாது.
அப்துல் ஹமீது பாகவி
மறுமை நாள் வரை (அழைத்தபோதிலும்) அவை இவர்களுக்கு பதில் கொடுக்காது. ஆகவே, அல்லாஹ் அல்லாதவற்றை அழைப்பவர்களைவிட மிக வழிகெட்டவர்கள் யார்? தங்களை இவர்கள் அழைப்பதையுமே அவை அறியாது.
IFT
பிறகு இப்படிப்பட்ட மனிதனைவிட அதிகம் வழிதவறியவன் யார் இருக்க முடியும்? அவன் அல்லாஹ்வை விடுத்து, மறுமைநாள் வரை தனக்கு பதிலளிக்க இயலாதவர்களை அழைக்கின்றான். அதுமட்டுமல்ல, அழைப்பவர்கள் தங்களை அழைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் அவர்கள் அறியாதவர்களாய் இருக்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அல்லாஹ்வை விடுத்து மறுமை நாள் வரை (அழைத்த போதிலும்) தனக்கு பதில் கொடுக்காதவர்களை அழைப்பவனைவிட மிக வழி கெட்டவன் யார்? அவர்களோ, இவர்களுடைய அழைப்பைப் பற்றி மறந்தவர்களாக உள்ளனர்.
Saheeh International
And who is more astray than he who invokes besides Allah those who will not respond to him until the Day of Resurrection [i.e., never], and they, of their invocation, are unaware.
அன்றியும் மனிதர் ஒன்று கூட்டப்படும் (அந்நாளில்) இவர்கள் அவர்களுடைய பகைவர்களாக இருப்பர்; அவர்கள் தங்களை வழிபட்டுக் கொண்டு இருந்ததையும் நிராகரித்து (மறுத்து) விடுவர்.
அப்துல் ஹமீது பாகவி
தவிர, மனிதர்களை (உயிர்கொடுத்து) எழுப்பப்படும் சமயத்தில், அவை இவர்களுக்கு எதிரிகளாகி, இவர்கள் (தங்களை) வணங்கிக் கொண்டிருந்தார்கள் என்பதையும் (அவை) நிராகரித்துவிடும்.
IFT
மேலும், மனிதர்கள் அனைவரும் ஒன்று திரட்டப்படும்போது தங்களை அழைத்தவர்களுக்கு அவர்கள் பகைவர்களாயும் ஆகிவிடுவார்கள்; மேலும், அவர்களின் வழிபாட்டை நிராகரிப்பவர்களாயும் இருப்பார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், மனிதர்கள் (மறுமை நாளுக்காக) ஒன்று திரட்டப்பட்டால், (வணங்கப்பட்டவர்களான) அவர்கள் இவர்களுக்கு விரோதிகளாக இருப்பர். இவர்கள் (தங்களை) வணங்கிக் கொண்டிருந்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவர்.
Saheeh International
And when the people are gathered [that Day], they [who were invoked] will be enemies to them, and they will be deniers of their worship.
மேலும், நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால் தங்களிடம் வந்த அந்த உண்மையை நிராகரித்து விட்டார்களே அவர்கள், “இது தெளிவான சூனியமே!” என்றும் கூறுகிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நம் தெளிவான வசனங்கள் இவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், தங்களிடம் வந்த அந்தச் சத்திய வசனங்களை நிராகரித்துவிட்டு, அவற்றைத் தெளிவான சூனியமென்றும் கூறுகின்றனர்.
IFT
நம்முடைய தெளிவான வசனங்கள் இம்மக்களிடம் ஓதிக்காட்டப்பட்டு, சத்தியம் இவர்கள் முன் வந்துவிட்டபோது இந்நிராகரிப்பாளர்கள் சத்தியத்தைக் குறித்து “இது வெளிப்படையான சூனியம்” என்று கூறுகின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், நம்முடைய வசனங்கள் தெளிவானவையாக அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால், சத்திய(வேத)த்தை நிராகரித்து விட்டார்களே அத்தகையோர்_அவ்வுண்மையானது, அவர்களிடம் வந்தபோது இது தெளிவான சூனியமாகும் என்று கூறினார்கள்.
Saheeh International
And when Our verses are recited to them as clear evidences, those who disbelieve say of the truth when it has come to them, "This is obvious magic."
அல்லது, “இதனை அவர் இட்டுக்கட்டிக் கொண்டார்” என்று அவர்கள் கூறுகின்றார்களா? நீர் கூறுவீராக: “நான் இதை இட்டுக் கட்டிக் கொண்டிருந்தால், (அல்லாஹ் அதற்காக தண்டிப்பானே; அப்போது) அல்லாஹ்விடமிருந்து எனக்கு ஏற்படும் எதையும் (தடுக்க) நீங்கள் சக்தி பெற மாட்டீர்கள். நீங்கள் இதைப் பற்றி என்னென்ன கூறுகிறீர்களோ, அதை அவன் நன்கறிகிறவன்; எனக்கும் உங்களுக்குமிடையே (அது பற்றி) அவனே போதுமான சாட்சியாக இருக்கின்றான்; அவன் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்” என்று (நபியே! நீர் கூறும்).
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) இதை நீர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டீர் என்று இவர்கள் கூறுகின்றனரா? (அவ்வாறாயின், நபியே!) கூறுவீராக: ‘‘இதை நான் பொய்யாகக் கற்பனை செய்துகொண்டால் (அதற்காக) அல்லாஹ் (என்னைத் தண்டிக்க மாட்டானா? அந்நேரத்தில் அல்லாஹ்)வுக்கு எதிரிடையாக நீங்கள் எனக்கு எதுவும் (உதவி) செய்ய சக்தியற்றவர்கள் (தானே!) இதைப் பற்றி (எனக்கு விரோதமாக) நீங்கள் என்னென்ன கூறுகிறீர்களோ, அவற்றை அவன் நன்கறிந்துமிருக்கிறான். ஆகவே, எனக்கும் உங்களுக்கும் மத்தியில் அவனே போதுமான சாட்சியாக இருக்கிறான். அவன்தான் மிக மன்னிப்பவன், மகா கருணையுடையவன் ஆவான்.
IFT
என்ன, இவர்கள் “இறைத்தூதர் இதனைச் சுயமாகப் புனைந்துள்ளார்!” என்று கூறுகின்றார்களா? இவர்களிடம் கூறும்: “இதனை நான் சுயமாகப் புனைந்து கூறுகிறேன் எனில், இறைவனின் பிடியிலிருந்து சிறிதும் என்னை உங்களால் காப்பாற்ற முடியாது! நீங்கள் இட்டுக்கட்டும் பேச்சுக்களை அவன் நன்கு அறிகின்றவனாக இருக்கின்றான். எனக்கும் உங்களுக்கும் இடையே சாட்சியம் அளிப்பதற்கு அவனே போதுமானவன். மேலும், அவன் பெரும் மன்னிப்பாளனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது, (நபியே! குர் ஆனாகிய) இதனை அவர் இட்டுக்கட்டிக் கொண்டார் என்று (உம்மைப்பற்றி) அவர்கள் கூறுகின்றனரா? (அவ்வாறாயின், நபியே!) நீர் கூறுவீராக: “இதனை நான் இட்டுகட்டியிருந்தால் (அதற்காக) அல்லாஹ்விடமிருந்து (உள்ள தண்டனையில்) எதையும் (தடுத்து என்னைக்காப்பாற்றிட) நீங்கள் சக்தி பெறமாட்டீர்கள், இதைப்பற்றி (எனக்கு விரோதமாகக்கூறி) எதில் நீங்கள் மூழ்கியிருக்கிறீர்களோ, அவைகளை அவன் நன்கு அறிவான்: (ஆகவே) எனக்கும், உங்களுக்கும் மத்தியில் சாட்சியாளனாக இருக்க அவனே இதற்குப் போதுமானவன், அவன் மிக்க மன்னிப்போன், பெரும்கிருபையுடையோன்.
Saheeh International
Or do they say, "He has invented it"? Say, "If I have invented it, you will not possess for me [the power of protection] from Allah at all. He is most knowing of that in which you are involved. Sufficient is He as Witness between me and you, and He is the Forgiving, the Merciful."
“(இறை) தூதர்களில் நாம் புதிதாக வந்தவனல்லன்; மேலும் என்னைப் பற்றியோ, உங்களைப் பற்றியோ, என்ன செய்யப்படும் என்பதை நான் அறியமாட்டேன், எனக்கு என்ன வஹீ அறிவிக்கப்படுகிறதோ அதைத் தவிர (வேறெதையும்) நான் பின்பற்றுவதில்லை; தெளிவாக அச்சமூட்டி எச்சரிப்பவனேயன்றி நான் வேறில்லை” என்று (நபியே!) நீர் கூறும்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! அவர்களை நோக்கி, மேலும்) கூறுவீராக: (இறைவன் அனுப்பிய) தூதர்களில் நான் புதிதாக வந்தவனல்ல. (எனக்கு முன்னர் தூதர்கள் பலர் வந்தே இருக்கின்றனர்.) மேலும், என்னைப் பற்றியோ அல்லது உங்களைப் பற்றியோ என்ன செய்யப்படும் என்பதையும் நான் அறியமாட்டேன். எனக்கு வஹ்யி மூலமாக அறிவிக்கப்பட்டவற்றை தவிர, (மற்ற எதையும்) நான் பின்பற்றுபவன் அல்ல. நான் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனே தவிர வேறில்லை.
IFT
இவர்களிடம் கூறும்: “இறைத்தூதர்களில் நான் ஒன்றும் புதுமையானவன் அல்லன். மேலும் (நாளை) எனக்கு என்ன நேரும் என்பதையும், உங்களுக்கு என்ன நேரும் என்பதையும் நான் அறியேன். என்னிடம் அனுப்பப்படும் வஹியைத்தான்* நான் பின்பற்றுகின்றேன். நான் வெளிப்படையாய் எச்சரிக்கை செய்பவனே அன்றி வேறல்லன்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! அவர்களிடம்) நீர் கூறுவீராக: “(அல்லாஹ் அனுப்பிய) தூதர்களில் நான் புதியவனாக இருக்கவில்லை, மேலும், என்னைக் கொண்டும், உங்களைக் கொண்டும் என்ன செய்யப்படும் என்பதையும் நான் அறியேன், எனக்கு வஹீ மூலமாக எதை அறிவிக்கப்படுகிறதோ அதைத் தவிர, (மற்றெதையும்) நான் பின்பற்றுவதில்லை, மேலும், நான் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனே தவிர வேறில்லை.”
Saheeh International
Say, "I am not something original among the messengers, nor do I know what will be done with me or with you. I only follow that which is revealed to me, and I am not but a clear warner."
قُلْகூறுவீராக!اَرَءَيْتُمْஅறிவியுங்கள்اِنْ كَانَஇது இருந்தால்مِنْ عِنْدِ اللّٰهِஅல்லாஹ்விடமிருந்துوَكَفَرْتُمْஇன்னும் நீங்கள் நிராகரித்து விட்டால்بِهٖஇதைوَشَهِدَஇன்னும் சாட்சியும் கூறினார்شَاهِدٌஒரு சாட்சியாளர்مِّنْۢ بَنِىْۤ اِسْرَآءِيْلَஇஸ்ரவேலர்களில் உள்ளعَلٰى مِثْلِهٖஇதுபோன்ற ஒன்றுக்குفَاٰمَنَஅவர் நம்பிக்கை கொண்டிருக்கوَاسْتَكْبَرْتُمْ ؕநீங்களோ பெருமை அடித்தீர்கள்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَا يَهْدِىநேர்வழி காட்ட மாட்டான்الْقَوْمَமக்களுக்குالظّٰلِمِيْنَஅநியாயக்கார(ர்கள்)
குல் அர'அய்தும் இன் கான மின் 'இன்தில் லாஹி வ கFபர்தும் Bபிஹீ வ ஷஹித ஷாஹிதும் மிம் Bபனீ இஸ்ரா'ஈல 'அலா மித்லிஹீ Fப ஆமன வஸ்தக் Bபர்தும் இன்னல் லாஹ லா யஹ்தில் கவ்மள் ளாலிமீன்
முஹம்மது ஜான்
“இது அல்லாஹ்விடமிருந்து வந்திருந்து இஸ்ராயீலின் மக்களில் ஒரு சாட்சியானவர் இது போன்றது (வர வேண்டியிருந்தது) என்பதில் சாட்சியங்கூறி ஈமான் கொண்டிருக்கும் போது இதனை நீங்கள் நிராகரித்து பெருமை அடித்துக் கொண்டால் (உங்கள் நிலை என்னவாகும் என்பதை) நீங்கள் கவனித்தீர்களா?” என்று நீர் கூறுவீராக! நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார சமூகத்திற்கு நேர்வழி காட்டமாட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) கூறுவீராக: ‘‘(யூதர்களே! இவ்வேதம்) அல்லாஹ்விடம் இருந்தே வந்திருக்க, அதை நீங்கள் நிராகரித்து விட்டீர்களே! (உங்கள் இனத்தைச் சார்ந்த) இஸ்ராயீலின் சந்ததிகளிலுள்ள ஒருவர், இதைப் போன்ற ஒரு வேதம் வர வேண்டியதிருக்கிறது என்று சாட்சியம் கூறி, அதை அவர் நம்பிக்கை கொண்டுமிருக்க, நீங்கள் பெருமைகொண்டு (இதை நிராகரித்து) விட்டால், (உங்கள் கதி) என்னவாகும் என்பதை கவனித்தீர்களா? நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்கார மக்களை நேரான வழியில் செலுத்த மாட்டான்.''
IFT
(நபியே இவர்களிடம்) கூறும்: “நீங்கள் எப்போதேனும் சிந்தித்துப் பார்த்ததுண்டா? இந்த வேதம் அல்லாஹ்விடமிருந்தே வந்ததாய் இருந்து, அதனை நீங்கள் நிராகரிக்கின்றீர்களெனில், (உங்கள் கதி என்னவாகும் என்று!) மேலும், இஸ்ராயீலின் வழித்தோன்றல்களிலிருந்து சான்றுபகர்பவர் ஒருவர் இதுபோன்ற வேதத்தின் மீது சான்று பகர்ந்துள்ளார். அவர் நம்பிக்கையும் கொண்டிருந்தார்; ஆனால், நீங்கள் உங்களின் ஆணவத்திலேயே உழன்று கொண்டு இருந்தீர்கள். இத்தகைய கொடுமைக்காரர்களுக்குத் திண்ணமாக அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நீர் கூறுவீராக நீங்கள் பார்த்தீர்களா? இ(வ்வேதமான)து அல்லாஹ்விடமிருந்து வந்ததாக இருந்து, இதை நீங்கள் நிராகரித்தும் விட்டவர்களாக இருக்கும் நிலையில் (இது உண்மையானது என) இஸ்ராயீலின் மக்களில் உள்ள சாட்சியாளர் இது போன்றதற்கு சாட்சியமும் கூறி (பின்னர் இதை) அவர் விசுவாசமும் கொண்டுள்ளார், (ஆனால், இதை ஏற்காது) நீங்கள் பெருமையும் அடித்துக் கொண்டீர்கள் (ஆகவே, உங்களை விட அநியாயக்காரர்கள் யார்?), நிச்சயமாக, அல்லாஹ் அநியாயக்கார சமூகத்தார்க்கு நேர்வழி காட்டமாட்டன்.
Saheeh International
Say, "Have you considered: if it [i.e., the Qur’an] was from Allah, and you disbelieved in it while a witness from the Children of Israel has testified to something similar and believed while you were arrogant...?" Indeed, Allah does not guide the wrongdoing people.
நிராகரிப்பவர்கள் ஈமான் கொண்டவர்களைப்பற்றி: “இது (குர்ஆன்) நல்லதாக இருந்தால், இவர்கள் எங்களைவிட அதன்பால் முந்தியிருக்க மாட்டார்கள்” என்று கூறினார்கள். மேலுமவர்கள் இதைக் கொண்டு நேர்வழி பெறாத போது “இது பண்டைக்காலக் கட்டுக் கதை” எனக் கூறுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நிராகரிப்பவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கி ‘‘இவ்வேதம் நன்மையானதாக இருந்தால் (அதை நம்பிக்கைகொள்ள இப்பாமர மக்கள்) எங்களைவிட முந்தியிருக்க மாட்டார்கள். (இதில் ஒரு நன்மையுமே இல்லை. ஆதலால்தான், அதை நாங்கள் நிராகரித்து விட்டோம்)'' என்றும் கூறுகின்றனர். அவர்கள் இ(வ்வுண்மையான வேதத்)தைப் பின்பற்றாத நிலைமையில், இது பழங்காலத்துப் பொய்யான கட்டுக்கதைகள்தான் என்றும் அவர்கள் கூறுவார்கள்.
IFT
இறைநிராகரிப்பாளர்கள் இறைநம்பிக்கையாளர்களைப் பற்றி கூறுகிறார்கள்: “இந்த வேதத்தை ஏற்றுக் கொள்வது ஒரு நற்செயலாக இருந்திருந்தால் இதனை ஏற்றுக் கொள்வதில் இவர்கள் நம்மை முந்தியிருக்க முடியாது.” இப்படியாக இதன் மூலம் இவர்கள் நேர்வழி பெறாதபோது “இதுவோ பழைய பொய்!” என்று திண்ணமாகக் கூறுவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிராகரிப்போர் விசுவாசிகளிடம்,: “இது நன்மையானதாக இருந்தால், இதனளவில் அவர்கள் எங்களை முந்தியிருக்கமாட்டர்கள், என்றும் கூறுகின்றனர், அவர்கள் இ(வ்வுண்மையான வேதத்)தைக் கொண்டு நேர்வழியும் பெறாத “இது பழைய பொய்யாகும்” என்று அவர்கள் கூறுவார்கள்.
Saheeh International
And those who disbelieve say of those who believe, "If it had [truly] been good, they would not have preceded us to it." And when they are not guided by it, they will say, "This is an ancient falsehood."
இதற்கு முன்னர் மூஸாவின் வேதம் ஒரு இமாமாகவும் (நேர்வழி காட்டியாகவும்) ரஹ்மத்தாகவும் இருந்தது; (குர்ஆனாகிய) இவ்வேதம் (முந்தைய வேதங்களை) மெய்யாக்குகிற அரபி மொழியிலுள்ளதாகும்; இது அநியாயம் செய்வோரை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், நன்மை செய்பவர்களுக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
இதற்கு முன்னர், மூஸாவுடைய வேதம் (மக்களுக்கு) வழிகாட்டியாகவும், அருளாகவும் இருந்தது. இதுவோ, (அதை) உண்மைப்படுத்தும் வேதமாகத் தெளிவான அரபி மொழியில் இருக்கிறது. இன்னும் அநியாயக்காரர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்துகொண்டும், நன்மை செய்பவர்களுக்கு நற்செய்தி கூறிக்கொண்டும் இருக்கிறது.
IFT
இதற்கு முன்பு மூஸாவின் வேதம் வழிகாட்டியாகவும் கருணையாகவும் வந்துவிட்டிருந்தது. இந்த வேதம் (அதனை) உண்மைப்படுத்தக்கூடியதாகவும், அரபிமொழியிலும் வந்துள்ளது; அக்கொடுமைக்காரர்களை எச்சரிக்கை செய்வதற்காகவும் நல்ல நடத்தையை மேற்கொள்கிறவர்களுக்கு நற்செய்தி அறிவிப்பதற்காகவும்தான்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இதற்கு முன் மூஸாவுடைய வேதம் வழி காட்டியாகவும் அருளாகவும் இருந்தது, (குர் ஆனாகிய) இது (அதனை) உண்மைப்படுத்துகிற அரபி மொழியிலான வேதமாகும், (இது) அநியாயம் செய்வோரை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும், நன்மை செய்வோருக்கு நன்மாராயமாகவும் இருக்கின்றது.
Saheeh International
And before it was the scripture of Moses to lead and as a mercy. And this is a confirming Book in an Arabic tongue to warn those who have wronged and as good tidings to the doers of good.
நிச்சயமாக எவர்கள் “எங்கள் இறைவன் அல்லாஹ்வே” என்று கூறி, பிறகு அதிலேயே நிலைத்து நிற்கிறார்களோ அவர்களுக்கு பயமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள், எங்கள் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறி (அவன் அருள்புரிந்த இவ்வேதத்தை நம்பிக்கை கொண்டு,) அதில் உறுதியாகவும் இருக்கிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக ஒரு பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
IFT
திண்ணமாக எவர்கள் “அல்லாஹ்தான் எங்கள் அதிபதி” என்று கூறினார்களோ பின்னர் அதில் அவர்கள் உறுதியாக நிலைத்து நிற்கின்றார்களோ அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக “எங்கள் இரட்சகன் அல்லாஹ்தான்” என்று கூறி (அதன்) பிறகு (அதில்) நிலைத்து இருக்கின்றார்களோ, அத்தகையோர்_அவர்களுக்கு (யாதொரு) பயமுமில்லை, அவர்கள் கவலையும் அடையமாட்டார்கள்.
Saheeh International
Indeed, those who have said, "Our Lord is Allah," and then remained on a right course - there will be no fear concerning them, nor will they grieve.
மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்; (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும்; அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பதுமாதங்களாகும். அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும்: “இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருள் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன்; அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன்” என்று கூறுவான்.
அப்துல் ஹமீது பாகவி
மனிதன் தன் தாய் தந்தைக்கு நன்றி செலுத்தும்படி நாம் அவனுக்கு நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய், சிரமத்துடனேயே அவனை (கர்ப்பத்தில்) சுமந்திருந்து சிரமத்துடனேயே பிரசவிக்கிறாள். அவள் கர்ப்பமானதிலிருந்து, இவன் பால்குடி மறக்கும் வரை, முப்பது மாதங்கள் (மிக்க சிரமத்துடன்) செல்கின்றன. இவன் வாலிபமாகி நாற்பது வயதையடைந்தால் ‘‘என் இறைவனே! நீ என் மீதும், என் தாய் தந்தை மீதும் புரிந்த அருளுக்காக உனக்கு நான் நன்றி செலுத்தி, உன் திருப்தியை அடையக்கூடிய நற்செயல்களைச் செய்யும்படி(யான நல்லறிவை) நீ எனக்குத் தந்தருள்வாயாக! எனக்கு உதவியாக இருக்கும்படி என் குடும்பத்தை சீர்திருத்திவை. நிச்சயமாக நான் உன்னையே நோக்கினேன். (உனக்கு) முற்றிலும் வழிபட்டவர்களில் நானும் ஒருவன்'' என்று கூறுவான்.
IFT
தன்னுடைய தாய் தந்தையிடம் நல்லவிதமாக நடந்துகொள்ள வேண்டுமென்று நாம் மனிதனுக்கு அறிவுறுத்தினோம். அவனுடைய அன்னை, அவனைச் சிரமத்துடனேயே கருவுற்று சுமந்திருந்தாள். சிரமப்பட்டுத்தான் அவனைப் பெற்றெடுத்தாள். மேலும், அவனைச் சுமந்திருப்பதற்கும் அவனுக்கு பால் குடிப்பை மறக்கடிப்பதற்கும் முப்பது மாதங்கள் ஆகின்றன. இறுதியில் அவன் தனது முழுபலத்தை அடைந்து அவனுக்கு நாற்பது வயது ஆகும்போது கூறுவான்: “என் அதிபதியே! நீ என் மீதும் என் தாய்தந்தையர் மீதும் பொழிந்த அருட்கொடைகளுக்காக (உனக்கு) நன்றி செலுத்துவதற்காகவும் உன் உவப்பைப் பெறும் வகையில் நற்செயலைச் செய்வதற்காகவும் எனக்கு நற்பேற்றினை அளிப்பாயாக! என் பிள்ளைகளையும் நல்லவர்களாக்கி எனக்கு ஆறுதல் அளிப்பாயாக! மேலும், நான் உன்னிடம் பாவமன்னிப்புக்கோரி மீளுகின்றேன். மேலும், கீழ்ப்படிந்து வாழும் அடியார்களில் (முஸ்லிம்களில்) சேர்ந்தவனாகவும் இருக்கின்றேன்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், தன்னுடைய பெற்றோர்க்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு நாம் உபதேசம் செய்தோம், அவனுடைய தாய், சிரமத்துடன் அவனைச் சுமந்திருந்து, சிரமத்துடன் அவனைப் பிரசவிக்கின்றாள், (அவன்) கர்ப்பத்தில் அவனைச் சுமப்பதும், அவனுக்குப் பால்குடி மறக்கச் செய்வதும் முப்பது மாதங்களாகும். முடிவாக இவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும். “என் இரட்சகனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த உன் அருளுக்காக உனக்கு நான் நன்றி செலுத்தி, நீ எதனைப் பொருந்திக் கொள்வாயோ அந்த நற்செயலைச் செய்யவும் (நல்லறிவை) நீ எனக்கு உதிக்கச் செய்வாயாக! எனக்காக என்னுடைய சந்ததியில் (உள்ளோரை) நீ சீர்திருத்தியும் வைப்பாயாக! நிச்சயமாக, நான் தவ்பா செய்து உன்பக்கம் திரும்பிவிட்டேன், நிச்சயமாக, நானோ (உனக்கு முற்றிலும் கீழ்ப்படிந்த முஸ்லிம்களில் (ஒருவனாகவும்) இருக்கிறேன்” என்று கூறுவான்.
Saheeh International
And We have enjoined upon man, to his parents, good treatment. His mother carried him with hardship and gave birth to him with hardship, and his gestation and weaning [period] is thirty months. [He grows] until, when he reaches maturity and reaches [the age of] forty years, he says, "My Lord, enable me to be grateful for Your favor which You have bestowed upon me and upon my parents and to work righteousness of which You will approve and make righteous for me my offspring. Indeed, I have repented to You, and indeed, I am of the Muslims."
சுவனவாசிகளான இ(த்தகைய)வர்கள் செய்தவற்றில் அழகான - நன்மையானவற்றை நாம் அங்கீகரித்துக் கொண்டு, இவர்களின் தீவினைகளைப் பொறுப்போம்; இவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதி உண்மையான வாக்குறுதியாகும்.
அப்துல் ஹமீது பாகவி
இத்தகையவர்கள் செய்த நன்மைகள் அனைத்தையும் நாம் அங்கீகரித்துக் கொண்டு, சொர்க்கவாசிகளான இவர்களின் பாவங்களையும் மன்னித்து விட்டு விடுவோம். இவர்களுக்கு அளிக்கப்பட்ட இவ்வாக்கு உண்மையான வாக்குறுதியாகும்.
IFT
இத்தகைய மனிதர்களிடமிருந்து அவர்களின் நல்ல செயல்களை நாம் ஏற்றுக் கொள்கிறோம். மேலும், அவர்களின் தீமைகளை நாம் பொறுத்துக் கொள்கின்றோம். அவர்களிடம் அளிக்கப்பட்ட உண்மையான வாக்குறுதியின்படி அவர்கள் சுவனவாசிகளுடன் சேர்ந்திருப்பார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் எத்தகயோரேன்றால்_சொர்க்க வாசிகளில் உள்ளவர்களாக இருக்க, அவர்கள் செய்தவற்றில் (உள்ள) மிக அழகானதை நாம் அங்கீகரித்துக் கொண்டு, அவர்களுடைய தீமைகளை விட்டும் புறக்கணித்து விடுவோம், அவர்கள் வாக்களிக்கப் பட்டிருந்தார்களே அத்தகையது உண்மையான வாக்குறுதியாகும்.
Saheeh International
Those are the ones from whom We will accept the best of what they did and overlook their misdeeds, [their being] among the companions of Paradise. [That is] the promise of truth which they had been promised.
ஆனால் (சன்மார்க்கத்தை தழுவுமாறு கூறிய) தன் பெற்றோரை நோக்கி; “சீச்சீ! உங்களுக்கு என்ன நேர்ந்தது! (மரணத்திற்குப் பின்) நான் உயிர்ப்பித்து எழுப்பப்படுவேன் என்று நீங்கள் என்னைப் பயமுறுத்துகிறீர்களா? திடமாக எனக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினர் சென்று விட்டனரே (அவர்கள் எழுப்பப்படவில்லையா)!” என்று கூறியவனைப் பாதுகாக்குமாறு அவ்விருவரும், (அல்லாஹ்விடம் பிரார்த்தித்து பிறகு அவனிடம்) “உனக்கென்ன கேடு! நீ ஈமான் கொள்வாயாக! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி மெய்யானது” என்று அல்லாஹ்விடம் காவல் தேடுகிறார்கள்; அதற்கவன் “இவையெல்லாம் முன்னுள்ளவர்களின் கட்டுக்கதைகளேயன்றி வேறில்லை” என்று கூறுகிறான்.
அப்துல் ஹமீது பாகவி
எவன் தன் தாய் தந்தையை நோக்கி (அவர்கள் மறுமையைப் பற்றிக் கூறிய அறிவுரைகளை மறுத்து) ‘‘சீச்சீ! உங்களுக்கென்ன நேர்ந்தது! (நான் இறந்தபின்) உயிர்ப்பிக்கப்படுவேன் என்று நீங்கள் என்னைப் பயமுறுத்துகிறீர்களா? எனக்கு முன்னர் எத்தனையோ கூட்டத்தார் சென்று விட்டனர். (அவர்களில் ஒருவருமே திரும்ப வராது இருக்க நான் மட்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவேனா?) என்று அவன் கூறுகிறான். அதற்கு அவ்விருவரும் (அவனை) பாதுகாக்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து (பின்னர் அவனை நோக்கி) ‘‘உனக்கென்ன கேடு! நீ அல்லாஹ்வை நம்பிக்கை கொள். நிச்சயமாக அவனுடைய வாக்குறுதி மெய்யானது'' என்று கூறுகிறார்கள். அதற்கவன், ‘‘இவையெல்லாம் முன்னுள்ளோரின் கட்டுக் கதைகளே தவிர வேறில்லை, (இதை நான் நம்பவே மாட்டேன்)'' என்று கூறுகிறான்.
IFT
ஒருவன் தன் தாய்தந்தையரிடம் இவ்வாறு கூறுகின்றான்: “சீ! என்னை நீங்கள் கஷ்டப்படுத்திவிட்டீர்கள். நான் இறந்த பின்னர் (மண்ணறையிலிருந்து) வெளிக் கொணரப்படுவேன் என்று என்னை அச்சுறுத்துகின்றீர்களா? எனக்கு முன்னர் ஏராளமான தலைமுறையினர் வாழ்ந்து சென்றுள்ளார்களே! (அவர்களில் எவரும் எழுந்து வரவில்லையே!)” தாய்தந்தையர் இருவரும் அல்லாஹ்வின் உதவியை வேண்டியவர்களாகக் கூறுகின்றார்கள்: “அட, துர்ப்பாக்கியமுடையவனே! ஏற்றுக்கொள்; அல்லாஹ்வின் வாக்கு உண்மையானது!” ஆனால், அவனோ “இவையெல்லாம் முற்காலத்துக் கட்டுக் கதைகள்” என்று கூறுகின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஒருவன் தன் பெற்றோரிடம் (அவர்கள் மறுமையைப் பற்றிக் கூறிய நன்மொழிகளை மறுத்து இகழ்ச்சிக்குரிய வார்த்தையான), “சீச்சீ! உங்களுக்குகென்ன நேர்ந்தது! நான் இறந்த பின் உயிர்பித்து வெளியாக்கப்படுவேன் என்று நீங்கள் இருவரும் என்னை பயமுறுத்துகிறீர்களா? திட்டமாக எனக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினர் சென்றுவிட்டனர், (அவர்களின் நிலை என்ன?)” என்று கூறுகிறான், (அவனது தீமையிலிருந்து காத்து) இரட்சிக்குமாறு அவ்விருவரும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து (பின்னர் அவனிடம்) “உனக்கென்ன கேடு? நீ (அல்லாஹ்வை விசுவாசிப்பாயாக! நிச்சயமாக, அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானது” (என்றும் கூறுகின்றார்கள்), அப்பொழுது, “இவைகளெல்லாம் முன்னோரின் கட்டுக் கதைகளேயன்றி வேறில்லை,” என்று அவன் கூறுகின்றான்.
Saheeh International
But one who says to his parents, "Uff to you; do you promise me that I will be brought forth [from the earth] when generations before me have already passed on [into oblivion]?" while they call to Allah for help [and to their son], "Woe to you! Believe! Indeed, the promise of Allah is truth." But he says, "This is not but legends of the former peoples" -
இத்தகையோரின் நிலையோ, இவர்களுக்கு முன்னே சென்று போன ஜின்கள் மனிதர்கள் கூட்டத்தினரில் (பாவம் செய்ததினால்) எவர்களுக்கு எதிராக (அல்லாஹ்வின்) வாக்கு மெய்யாக உறுதியாய் விடுகிறதோ, அது போன்றது தான்; நிச்சயமாக இவர்கள் நஷ்டவாளிகளாய் விட்டனர்.
அப்துல் ஹமீது பாகவி
இத்தகையவர்களின் கதியோ, இவர்களுக்கு முன் சென்றுபோன (பாவிகளான) மனித, ஜின்களிலுள்ள கூட்டத்தார்களைப்போல் (இவர்களும் அழிந்து) இவர்களின் மீதும் (அல்லாஹ்வுடைய வேதனை வந்திறங்கியே தீருமென்ற) வாக்குறுதி உண்மையாகிவிட்டது. நிச்சயமாக இவர்கள் நஷ்டமடைந்து விட்டார்கள்.
IFT
இத்தகைய மக்கள் மீது வேதனையின் தீர்ப்பு உறுதியாகிவிட்டது. இவர்களுக்கு முன் வாழ்ந்து சென்ற இத்தகைய தவறான நடத்தை கொண்ட ஜின் மற்றும் மனித இனத்தாருடன் இவர்களும் சேர்க்கப்படுவார்கள். ஐயமின்றி, இவர்கள் மாபெரும் நஷ்டத்திற்கு ஆளாகிவிட்டவர்களாய் இருக்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இவ்வாறு கூறும்) இத்தகையோர்_இவர்களுக்கு சென்று போன மனு, ஜின்களிலுள்ள சமூகத்தார்களில் (பாவம் செய்தால், அல்லாஹ்வுடைய வேதனை வந்திறங்கியே தீருமென்ற) இரட்சகனின் கூற்று அவர்களின் மீது உண்மையாகி விட்டது, நிச்சயமாக, அவர்கள் நஷ்டமடைந்தவர்களாகி விட்டனர்.
Saheeh International
Those are the ones upon whom the word [i.e., decree] has come into effect, [who will be] among nations which had passed on before them of jinn and men. Indeed, they [all] were losers.
وَلِكُلٍّஎல்லோருக்கும்دَرَجٰتٌதகுதிகள் உண்டுمِّمَّا عَمِلُوْا ۚஅவர்கள் செய்தவற்றின் அடிப்படையில்وَلِيُوَفِّيَهُمْஇன்னும் இறுதியாக அவன் அவர்களுக்கு முழு கூலி கொடுப்பான்اَعْمَالَهُمْஅவர்களுடைய செயல்களுக்குوَهُمْஇன்னும் அவர்கள்لَا يُظْلَمُوْنَஅநீதி இழைக்கப்பட மாட்டார்கள்
அன்றியும், ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்த செய்கைகளுக்குத் தகுந்த பதவிகள் (மறுமையில்) உண்டு - ஆகவே அவர்கள் தங்கள் செயலுக்குரிய கூலியைப் பூரணமாகப் பெறுவதற்காக, ஆகவே அவர்கள் (இதில்) அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்
அப்துல் ஹமீது பாகவி
இவர்களில் ஒவ்வொருவருக்கும் (நன்மையோ தீமையோ) அவர்கள் செயலுக்குத் தக்க பதவிகள் இருக்கின்றன. ஆகவே, அவர்கள் தங்கள் செயலுக்குரிய கூலியை முழுமையாகவே கொடுக்கப்படுவார்கள். (நன்மையைக் குறைத்தோ, பாவத்தை அதிகரித்தோ) இவர்களில் ஒருவருக்கும் (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டாது.
IFT
(இந்த இரு பிரிவினர்களில்) அவரவருடைய செயல்களுக்கேற்பவே அவரவருடைய நிலைகள் இருக்கும். மேலும், அல்லாஹ் அவர்களின் செயல்களுக்குரிய கூலியை அவர்களுக்கு முழுக்க முழுக்க அளித்திட வேண்டும் என்பதற்காகத்தான் (இவ்வாறு செய்கின்றான்). அவர்கள் மீது ஒருபோதும் கொடுமை இழைக்கப்படமாட்டாது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இவர்களில்) ஒவ்வொருவருக்கும் அவ(ரவ)ர்கள் செயலுக்குத் தக்க பதவிகளிறுக்கின்றன, அவர்களின் செயல்(களுக்குரிய கூலி)களை அவன் அவர்களுக்கு நிறைவு செய்வதற்காகவும், (பதவிகளை நல்குகிறான்,) அவர்கள் அநீதமிழைக்கப்படவும் மாட்டார்கள்.
Saheeh International
And for all there are degrees [of reward and punishment] for what they have done, and [it is] so that He may fully compensate them for their deeds, and they will not be wronged.
அன்றியும் (நரக) நெருப்பின் முன் நிராகரிப்பவர்கள் கொண்டுவரப்படும் நாளில், “உங்கள் உலக வாழ்க்கையின் போது உங்களுக்குக் கிடைத்திருந்த மணமான பொருட்களையெல்லாம், வீண் செலவு செய்து, (உலக) இன்பம் தேடினீர்கள், “ஆகவே நீங்கள் பூமியில் அநியாயமாகப் பெருமையடித்துக் கொண்டும், வரம்பு மீறி (வாழ்ந்து) கொண்டும் இருந்த காரணத்தால், இழிவு தரும் வேதனையை இன்று நீங்கள் கூலியாகக் கொடுக்கப்படுகிறீர்கள்” (என்று அவர்களுக்குக் கூறப்படும்).
அப்துல் ஹமீது பாகவி
நிராகரிப்பவர்களை நரகத்தின்முன் கொண்டுவரப்படும் நாளில் (அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் உலகத்தில் வாழ்ந்திருந்த காலத்தில், நீங்கள் பெற்றிருந்த நல்லவற்றை எல்லாம், (நன்மையான காரியங்களில் உபயோகிக்காது) உங்கள் சுகபோகங்களிலேயே உபயோகித்து இன்பமனுபவித்து விட்டீர்கள். ஆகவே, நீங்கள் பூமியில் நியாயமின்றிப் பெருமையடித்துக்கொண்டும், பாவம் செய்துகொண்டும் இருந்ததன் காரணமாக, இழிவு தரும் வேதனையே இன்றைய தினம் உங்களுக்குக் கூலியாகக் கொடுக்கப்படும்'' (என்று கூறப்படும்).
IFT
பின்னர் இந்த இறைநிராகரிப்பாளர்கள் நரகத்தின் முன் கொண்டு வந்து நிறுத்தப்படும்போது அவர்களிடம் கூறப்படும்; நீங்கள் உங்கள் (பங்கில் உள்ள) அருட்கொடைகளை உங்கள் உலக வாழ்க்கையிலேயே முடித்துக் கொண்டீர்கள். அவற்றால் பயன் அடைந்துவிட்டீர்கள். நீங்கள் பூமியில் எவ்வித நியாயமுமின்றி பெருமையடித்துக் கொண்டிருந்ததற்கும், பாவம் செய்து கொண்டிருந்ததற்கும் பகரமாக இன்று உங்களுக்கு இழிவுமிக்க வேதனை கூலியாகத் தரப்படும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும், நிராகரிப்போர் நரகத்தின் முன் கொண்டுவரப்படும் நாளில் (அவர்களிடம்), “உங்களுடைய நல்லவைகளை உங்களுடைய உலக வாழ்க்கையில் நீங்கள் போக்கிவிட்டீர்கள், அவற்றைக் கொண்டு இன்பமனுவித்தும் விட்டீர்கள், அதுவே, நீங்கள் பூமியில் நியாயமின்றிப் பெருமையடித்துக் கொண்டிருந்த காரணத்தாலும், இன்னும், பாவம் செய்துகொண்டிருந்த காரணத்தாலும் இழிவு தரும் வேதனையை இன்றையத் தினம் நீங்கள் கூலியாகக் கொடுக்கப்படுவீர்கள் (என்று கூறப்படும்).
Saheeh International
And the Day those who disbelieved are exposed to the Fire [it will be said], "You exhausted your pleasures during your worldly life and enjoyed them, so this Day you will be awarded the punishment of [extreme] humiliation because you were arrogant upon the earth without right and because you were defiantly disobedient."
மேலும் “ஆது” (சமூகத்தாரின்) சகோதரர் (ஹூத்) திடமாகவே, அவருக்கு முன்னரும், அவருக்குப் பின்னரும் எச்சரிக்கை செய்பவர்கள் (இறை தூதர்கள்) வந்திருக்கிறார்கள் - (அவர்) தம் சமூகத்தாரை, “அல்லாஹ்வையன்றி (வேறு எதனையும்) நீங்கள் வணங்காதீர்கள் - நிச்சயமாக ஒரு கடுமையான நாளின் வேதனை உங்களுக்கு வரும் என்று நான் பயப்படுகிறேன்” என்று மணல் குன்றுகளிலிருந்து அச்சமூட்டி எச்சரிக்கை செய்ததை (நபியே!) நீர் நினைவு கூர்வீராக.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நீர் (ஹூத் நபியாகிய) ‘ஆது' உடைய சகோதரரை நினைவு கூறுவீராக. அவருக்கு முன்னும், பின்னும் தூதர்கள் பலர் (அவர்களிடம்) வந்திருக்கின்றனர். (அவர்) தன் மக்களை ‘அஹ்காஃப்' என்ற (மணற்பாங்கான) இடத்தில் (சந்தித்து), ‘‘அல்லாஹ்வைத் தவிர (மற்றெவரையும்) நீங்கள் வணங்காதீர்கள். நிச்சயமாக மகத்தான நாளின் வேதனை உங்கள் மீது இறங்கி விடுமென்று நான் பயப்படுகிறேன்'' என்று அச்சமூட்டி எச்சரித்தார்.
IFT
ஆத் சமூகத்தாரின் சகோதரர் (ஹூத் நபியுடைய) செய்தியை இவர்களுக்கு எடுத்துக் கூறும். அப்போது அவர் அஹ்காஃப் எனும் பகுதியில் தன் சமூகத்தாருக்கு இவ்வாறு எச்சரிக்கை செய்திருந்தார் எச்சரிக்கை செய்பவர்கள் அவருக்கு முன்பும் வாழ்ந்திருக்கிறார்கள். அவருக்குப் பிறகும் வந்து கொண்டிருந்தார்கள் அதாவது, “நீங்கள் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அடிபணியாதீர்கள். உங்கள் விஷயத்தில் மிகப் பயங்கரமான ஒரு நாளின் வேதனைக்கு நான் அஞ்சுகின்றேன்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நீர் (ஹூத் நபியாகிய)” ஆது” உடைய சகோதரரை நினைவு கூர்வீராக! அவர் மணல் குன்றுகளில் (குடி) இருந்த தன் சமூகத்தாரை எச்சரிக்கை செய்த போது, அவருக்கு முன்னும், அவருக்குப் பின்னும் எச்சரிக்கை செய்வோர் திட்டமாக வந்து சென்று விட்டனர், (அவர் தன் சமூகத்தாரிடம்)” அல்லாஹ்வையன்றி (வேறெதனையும்) நீங்கள் வணங்காதீர்கள், நிச்சயமாக மகத்தான நாளின் வேதனையை உங்கள் மீது நான் பயப்படுகிறேன்” (என்றார்).
Saheeh International
And mention, [O Muhammad], the brother of ʿAad, when he warned his people in [the region of] al-Ahqaf - and warners had already passed on before him and after him - [saying], "Do not worship except Allah. Indeed, I fear for you the punishment of a terrible day."
قَالُـوْۤاஅவர்கள் கூறினர்اَجِئْتَـنَاநீர் எங்களிடம் வந்தீரா?لِتَاْفِكَنَاஎங்களை திருப்புவதற்காகعَنْ اٰلِهَـتِنَا ۚஎங்கள் தெய்வங்களை விட்டுفَاْتِنَا بِمَا تَعِدُنَاۤஎங்களுக்கு நீர் எச்சரிக்கை செய்வதை எங்களிடம் கொண்டு வருவீராக!اِنْ كُنْتَநீர் இருந்தால்مِنَ الصّٰدِقِيْنَஉண்மையாளர்களில்
அதற்கு அவர்கள்: “எங்களுடைய தெய்வங்களை விட்டும் எங்களைத் திருப்பி விட நீர் எங்களிடம் வந்தீரா? நீர் உண்மையாளராக இருந்தால், நீர் எதைக் கொண்டு எங்களை பயமுறுத்துகிறீரோ அ(வ் வேதனையான)தைக் கொண்டு வாரும்” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள், ‘‘எங்கள் தெய்வங்களை விட்டும் எங்களைத் திருப்பிவிடவா நீர் எங்களிடம் வந்தீர்? நீர் மெய்யாகவே உண்மை சொல்பவராக இருந்தால், நீர் எங்களைப் பயமுறுத்தும் வேதனையை நம்மிடம் கொண்டு வருவீராக'' என்று கூறினார்கள்.
IFT
அப்போது அவர்கள் கூறினார்கள்: “எங்களை எங்கள் கடவுள்களை விட்டு திசை திருப்பவா நீர் வந்திருக்கின்றீர்? சரி! நீர் உண்மையாளர் எனில், எங்களை எந்த வேதனையைக் கூறி அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றீரோ அந்த வேதனையைக் கொண்டு வாரும்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்கள் “எங்களுடைய (வணக்கத்திற்குரிய) தெய்வங்களை விட்டு, எங்களைத் திருப்பிவிட நீர் எங்களிடம் வந்தீரா? நீர் உண்மையாளர்களில் இருந்தால், நீர் எங்களுக்கு எதைக் கொண்டுவாக்களித்தீரோ அ(வ்வேதனையான)தை நம்மிடம் கொண்டு வாரும்” என்று கூறினார்கள்.
Saheeh International
They said, "Have you come to delude us away from our gods? Then bring us what you promise us, if you should be of the truthful."
அதற்கவர்: “(அது எப்பொழுது வரும் என்ற) ஞானம் நிச்சயமாக அல்லாஹ்விடம் தான் இருக்கிறது; மேலும், நான் எதைக் கொண்டு உங்களிடம் அனுப்பப்பட்டிருக்கிறேனோ அதையே நான் உங்களுக்குச் சேர்ப்பித்து, எடுத்துரைக்கின்றேன் - எனினும் நான் உங்களை அறிவில்லாத சமூகத்தாராகவே காண்கிறேன்” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர், (அவர்களை நோக்கி ‘‘உங்களுக்கு வேதனை எப்பொழுது அனுப்பப்படும் என்ற) ஞானம் எல்லாம் அல்லாஹ்விடம்தான் இருக்கிறது. எவ்விஷயத்தை உங்களுக்கு அறிவிக்க நான் அனுப்பப்பட்டேனோ, அதையே நான் உங்களுக்கு எடுத்துரைக்கிறேன். ஆயினும், நீங்கள் அறிவில்லாத மக்கள் என்று நான் எண்ணுகிறேன்'' என்று கூறினார்.
IFT
அவர் கூறினார்: “இது பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது. நான் எந்தத் தூதோடு அனுப்பப்பட்டிருக்கின்றேனோ அதனை மட்டுமே உங்களுக்கு எடுத்துரைக்கின்றேன். ஆனால், அறியாமையில் மூழ்கியிருக்கும் சமுதாயமாக நான் உங்களைக் காண்கிறேன்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்கள் (“வேதனை எப்பொழுது என்ற) அறிவு எல்லாம் அல்லாஹ்விடமே இருக்கின்றது, அன்றியும், எதனைக்கொண்டு நான் அனுப்பப்பட்டேனோ அதனையே நான் உங்களுக்கு எத்திவைக்கிறேன், என்றாலும் உங்களை நான் அறிவில்லாத சமூகத்தவராகவே காணுகிறேன்” என்றார்.
Saheeh International
He said, "Knowledge [of its time] is only with Allah, and I convey to you that with which I was sent; but I see you [to be] a people behaving ignorantly."
فَلَمَّا رَاَوْهُஅவர்கள் அதை பார்த்த போதுعَارِضًاஅடர்த்தியான கார் மேகமாகمُّسْتَقْبِلَமுன்னோக்கி வரக்கூடிய(து)اَوْدِيَتِهِمْ ۙதங்களது பள்ளத்தாக்கைقَالُوْاகூறினார்கள்هٰذَاஇதுعَارِضٌஅடர்த்தியான கார்மேகமாகும்مُّمْطِرُنَا ؕநமக்கு மழை பொழிவிக்கும்بَلْ هُوَமாறாக இதுمَاஎதைاسْتَعْجَلْتُمْநீங்கள் அவசரமாகத் தேடினீர்கள்بِهٖ ۚஅதைرِيْحٌ(இது) ஒரு காற்றாகும்فِيْهَاஇதில் உள்ளதுعَذَابٌதண்டனைاَ لِيْمٌۙவலி தரக்கூடிய(து)
ஆனால் அவர்களோ (அவர்களுக்கு அனுப்பப்பட்ட வேதனை) அவர்கள் இருந்த பள்ளத்தாக்குகளை நோக்கி மேகமாக வருவதைக் கண்டதும், “இது நமக்கு மழையைப் பொழியும் மேகமாகும்” எனக் கூறினார்கள்; “அப்படியல்ல, இது நீங்கள் (எதற்காக) அவசரப்பட்டீர்களோ அதுதான்; (இது கொடுங்)காற்று - இதில் நோவினை செய்யும் வேதனை இருக்கிறது:
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், (வேதனைக்கு அறிகுறியாக வந்த) மேகம் அவர்கள் இருந்த பள்ளத்தாக்குகளை நோக்கி வருவதை அவர்கள் காணவே, ‘‘இது எங்களுக்கு மழை பெய்ய வரும் மேகம்தான்'' என்று கூறினார்கள். (அதற்கு அவர்களை நோக்கி) ‘‘அல்ல! இது நீங்கள் அவசரப்பட்ட வேதனைதான் என்றும், இது ஒரு காற்று; இதில் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது'' (என்றும் கூறப்பட்டது).
IFT
பின்னர், அந்த வேதனை தாங்கள் வசித்த பள்ளத்தாக்குகளை நோக்கி வந்து கொண்டிருப்பதை அவர்கள் கண்டபோது கூறலாயினர். “இது நமக்கு மழையைப் பொழிவிக்கக்கூடிய மேகமாகும்” “இல்லை! மாறாக, நீங்கள் எதற்காக அவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ அதுதான் இது! இது புயல்காற்று; இதில் துன்புறுத்தும் வேதனை வந்து கொண்டிருக்கின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், அதனை தம்முடைய பள்ளத் தாக்குகளை முன்னோக்கி வருகின்ற மேகமாக அவர்கள் கண்டபோது, இது எங்களுக்கு பெய்யவரும் மேகம்தான் என்று கூறினார்கள், (அதற்கு அவர்களிடம்) அப்படியல்ல! இது நீங்கள் எதற்காக அவரசரப்பட்டீர்களோ அதுதான், (இது ஒரு) கொடுங்காற்று, இதில் துன்புறுத்தும் வேதனை இருக்கின்றது” (என்றும்).
Saheeh International
And when they saw it as a cloud approaching their valleys, they said, "This is a cloud bringing us rain!" Rather, it is that for which you were impatient: a wind, within it a painful punishment,
“அது தன் இறைவனின் கட்டளையினால் எல்லாப் பொருட்களையும் அழித்துவிடும்” (என்று கூறப்பட்டது). பொழுது விடிந்த போது, (அழிக்கப்பட்ட அவர்களுடைய) வீடுகளைத் தவிர (வேறு) எதுவும் காணப்படவில்லை - இவ்வாறே குற்றம் செய்யும் சமூகத்திற்கு நாம் கூலி கொடுக்கிறோம்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, அது தன் இறைவனின் கட்டளைப்படி எல்லாவற்றையும் அழித்து விட்டது. அவர்கள் இருந்த வீடுகளைத் தவிர, (அனைவரும் அழிந்து ஒருவருமே) காணப்படாமல் ஆகிவிட்டார்கள். இவ்வாறே குற்றம் செய்யும் மக்களுக்கு நாம் கூலி கொடுக்கிறோம்.
IFT
தன் இறைவனின் கட்டளையால் ஒவ்வொன்றையும் இது அழித்துவிடும்.” இறுதியில் அவர்களின் நிலைமை என்னவாயிற்று எனில், அவர்கள் வசித்த இல்லங்களைத் தவிர வேறு எதுவும் அங்கு தென்படவில்லை. இவ்வாறே, குற்றம்புரியும் மக்களுக்கு நாம் கூலி கொடுக்கின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அது தன் இரட்சகனின் கட்டளைப்படி சகல பொருட்களையும் அழித்து விடும் (என்றும் ஹூத் கூறினார். அவர்கள் வசித்திருந்து அழிந்த) அவர்களுடைய குடியிருப்புகளைத் தவிர வேறென்றும் காணப்படாதாவாறு காலையில் அவர்கள் (அழிவிற்குள்) ஆகி விட்டனர், இவ்வாறே குற்றவாளிகளான கூட்டத்தினருக்கு கூலி கொடுக்கின்றோம்.
Saheeh International
Destroying everything by command of its Lord. And they became so that nothing was seen [of them] except their dwellings. Thus do We recompense the criminal people.
وَلَقَدْதிட்டவட்டமாகمَكَّنّٰهُمْஅவர்களுக்கு நாம் வசதியளித்தோம்فِيْمَاۤஎதில்اِنْ مَّكَّنّٰكُمْஉங்களுக்கு நாம் வசதியளிக்கவில்லை(யோ)فِيْهِஅதில்وَجَعَلْنَاஇன்னும் ஏற்படுத்தினோம்لَهُمْஅவர்களுக்குسَمْعًاசெவியை(யும்)وَّاَبْصَارًاபார்வைகளையும்وَّاَفْـِٕدَةً ۖஉள்ளங்களையும்فَمَاۤ اَغْنٰىதடுக்கவில்லைعَنْهُمْஅவர்களை விட்டும்سَمْعُهُمْஅவர்களின் செவி(யும்)وَلَاۤ اَبْصَارُபார்வைகளும்هُمْஅவர்களின்وَلَاۤ اَفْـِٕدَتُهُمْஅவர்களின் உள்ளங்களும்مِّنْ شَىْءٍஎதையும்اِذْ كَانُوْاஅவர்கள் இருந்தபோதுيَجْحَدُوْنَۙமறுப்பவர்களாகبِاٰيٰتِஅத்தாட்சிகளைاللّٰهِஅல்லாஹ்வின்وَحَاقَஇன்னும் சூழ்ந்து கொண்டதுبِهِمْஅவர்களைمَّاஎதுكَانُوْاஇருந்தார்கள்بِهٖஅதைيَسْتَهْزِءُوْنَபரிகாசம் செய்பவர்களாக
வ லகத் மக்கன்னாஹும் Fபீமா இம் மக்கன்னாகும் Fபீஹி வஜ்'அல்னா லஹும் ஸம்'அ(ன்)வ் வ அBப்ஸார(ன்)வ் வ அFப்'இததன் Fபமா அக்னா 'அன்ஹும் ஸம்'உஹும் வ லா அBப்ஸாருஹும் வ லா அFப்'இததுஹும் மின் ஷய்'இன் இத் கானூ யஜ்ஹதூன Bபி ஆயாதில் லாஹி வ ஹாக Bபிஹிம் மா கானூ Bபிஹீ யஸ்தஹ்Zஜி'ஊன்
முஹம்மது ஜான்
உங்களுக்கு (மக்காவாசிகளுக்கு) இங்கு எதில் வசதிகள் செய்து கொடுக்காதிருந்தோமோ அவ்வசதிகளையெல்லாம் நாம் அவர்களுக்குத் திடமாகச் செய்து கொடுத்திருந்தோம். மேலும் அவர்களுக்கும் செவிப் புலனையும் பார்வைகளையும் இருதயங்களையும் நாம் கொடுத்திருந்தோம்; ஆயினும் அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்துக் கொண்டிருந்த போது, அவர்களுடைய செவிப் புலனும், பார்வைகளும் இருதயங்களும் அவர்களுக்கு யாதோர் பயனுமளிக்கவில்லை - எ(வ்வே)தனைப் பற்றி அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ, அதுவே அவர்களைச் சூழ்ந்து கொண்டது.
அப்துல் ஹமீது பாகவி
உங்களுக்குச் செய்து கொடுக்காத வசதிகளையெல்லாம் நிச்சயமாக நாம் அவர்களுக்குச் செய்து கொடுத்திருந்தோம். மேலும் நாம் அவர்களுக்குச் செவியையும் (கொடுத்தோம்.) கண்களையும் (கொடுத்தோம். சிந்திக்கக்கூடிய) உள்ளத்தையும் கொடுத்தோம். ஆயினும், அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரித்ததன் காரணமாக அவர்களுடைய செவிகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய உள்ளங்களும் அவர்களுக்கு ஒரு பயனுமளிக்கவில்லை. அவர்கள் பரிகாசம் செய்துகொண்டிருந்த தண்டனை அவர்களைச் சூழ்ந்துகொண்டது.
IFT
உங்களுக்கு நாம் தந்திடாத சிலவற்றை அவர்களுக்கு வழங்கி இருந்தோம். அவர்களுக்கு நாம், காதுகளையும், கண்களையும், இதயத்தையும் கொடுத்திருந்தோம். ஆனால், அவர்களின் காதுகளும், கண்களும் இதயமும் எந்தப் பயனையும் அவர்களுக்கு அளிக்கவில்லை. ஏனெனில், அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்துக் கொண்டிருந்தார்கள்! எதனை அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ அதுவே அவர்களைச் சுற்றி வளைத்துக் கொண்டது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், உங்களுக்கு எதில் நாம் வசதி செய்து கொடுக்கவில்லையோ அதில் அவர்களுக்குத் திட்டமாக நாம் வசதி செய்து கொடுத்திருந்தோம், மேலும், அவர்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும் நாம் ஆக்கினோம், ஆயினும் அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரித்துக் கொண்டிருந்தவர்களாக இருந்த சமயத்தில் அவர்களுடைய செவிப்புலனும், அவர்களுடைய பார்வைகளும், அவர்களுடைய இதயங்களும் அவர்களுக்கு யாதொரு பயனுமளிக்கவில்லை, எதனை பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ அது அவர்களைச் சூழ்ந்தும் கொண்டது.
Saheeh International
And We had certainly established them in such as We have not established you, and We made for them hearing and vision and hearts [i.e., intellect]. But their hearing and vision and hearts availed them not from anything [of the punishment] when they were [continually] rejecting the signs of Allah; and they were enveloped by what they used to ridicule.
وَلَقَدْதிட்டவட்டமாகاَهْلَكْنَاநாம் அழித்தோம்مَا حَوْلَـكُمْஉங்களை சுற்றி உள்ளவற்றைمِّنَ الْقُرٰىஊர்களில்وَصَرَّفْنَاஇன்னும் நாம் விவரித்தோம்الْاٰيٰتِஅத்தாட்சிகளைلَعَلَّهُمْ يَرْجِعُوْنَஅவர்கள் திரும்புவதற்காக
அன்றியும், உங்களைச் சுற்றி இருந்த ஊ(ரா)ர்களையும் திடமாக நாம் அழித்திருக்கிறோம், அவர்கள் (நேர்வழிக்கு) மீளும் பொருட்டு நாம் (அவர்களுக்குப்) பல அத்தாட்சிகளைத் திருப்பித் திருப்பிக் காண்பித்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
உங்களைச் சூழ்ந்து (வசித்து) இருந்த ஊரார்களையும் நிச்சயமாக நாம் அழித்து விட்டோம். அவர்கள் (பாவத்திலிருந்து விலகி நம்மிடம்) திரும்பி வரும் பொருட்டுப் பல அத்தாட்சிகளை (ஒன்றன் பின் ஒன்றாக) நாம் காண்பித்து வந்தோம். (எனினும், அவற்றை அவர்கள் பொருட்படுத்தவே இல்லை. ஆதலால், நாம் அவர்களை அழித்துவிட்டோம்.)
IFT
உங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல ஊர்களை நாம் அழித்திருக்கின்றோம். நாம் நம்முடைய வசனங்களை பல தடவை அருளி அவர்களுக்கு விதவிதமாக விளக்கினோம்; அவர்கள் திரும்பிவிடக்கூடும் என்பதற்காக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஊர்களில் உங்களைச் சுற்றியுள்ளவைகளையும் நிச்சயமாக நாம் அழித்து விட்டோம், அவர்கள் (பாவத்திலிருந்து) திரும்புவதற்காக அத்தாட்சிகளை நாம் திரும்பத் திரும்பக் காண்பித்தோம்.
Saheeh International
And We have already destroyed what surrounds you of [those] cities, and We have diversified the signs [or verses] that perhaps they might return [from disbelief].
فَلَوْلَا نَصَرَهُمُ(அவர்கள்) இவர்களுக்கு உதவி செய்திருக்க வேண்டாமா?الَّذِيْنَஎவர்களைاتَّخَذُوْاஎடுத்துக் கொண்டார்கள்مِنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிقُرْبَانًاவழிபாட்டுக்காகاٰلِهَةً ؕதெய்வங்களாகبَلْமாறாகضَلُّوْاஅவர்கள் மறைந்து விட்டனர்عَنْهُمْۚஇவர்களை விட்டுوَذٰلِكَஇதுاِفْكُهُمْஇவர்களின்பொய்(யும்)وَمَاஇன்னும் எதைكَانُوْاஇருந்தார்களோيَفْتَرُوْنَஇட்டுக் கட்டுபவர்களாக
Fபலவ் லா னஸரஹுமுல் லதீனத் தகதூ மின் தூனில் லாஹி குர்Bபானன் ஆலிஹதம் Bபல் ளல்லூ 'அன்ஹும்' வ தாலிக இFப்குஹும் வமா கானூ யFப்தரூன்
முஹம்மது ஜான்
(அல்லாஹ்விடம் தங்களை) நெருங்க வைக்கும் தெய்வங்களென்று அல்லாஹ் அல்லாதவற்றை இவர்கள் எடுத்துக் கொண்டார்களே, அவர்கள் ஏன் இவர்களுக்கு உதவி புரியவில்லை? ஆனால், அவர்கள் இவர்களை விட்டும் மறைந்து விட்டனர் - அவர்களே இவர்கள் பொய்யாகக் கூறியவையும், இட்டுக் கட்டியவையுமாகும்.
அப்துல் ஹமீது பாகவி
(அல்லாஹ்வுக்குத்) தங்களைச் சமீபமாக்கி வைக்கக்கூடிய தெய்வங்கள் என்று அல்லாஹ் அல்லாதவற்றை இவர்கள் எடுத்துக் கொண்டார்களே, அவையேனும் இவர்களுக்கு உதவி செய்திருக்க வேண்டாமா? ஆனால், அவையெல்லாம் இவர்களை விட்டும் மறைந்து விட்டன. இவையெல்லாம் அவர்கள் கற்பனை செய்துகொண்டு பொய்யாகக் கூறியவைதான் (என்று தெளிவாகி விட்டது).
IFT
அல்லாஹ்வை விடுத்து, இவர்கள் யாரை அல்லாஹ்வின் பக்கம் நெருங்குவதற்கான காரணமாகக் கருதிக்கொண்டு தமது கடவுளராக ஏற்படுத்திக் கொண்டார்களோ அவர்கள் இவர்களுக்கு ஏன் உதவி செய்யவில்லை? உண்மையாதெனில், அவர்கள் இவர்களைவிட்டுக் காணாமல் போய்விட்டார்கள்! இதுவே, இவர்களின் பொய்யும் இவர்கள் இட்டுக்கட்டிய கொள்கையின் விளைவுமாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(தங்களை அல்லாஹ்வுக்கு) சமீபமாக்கி வைக்ககூடிய (வணக்கத்திற்குரிய) தெய்வங்களென்று அல்லாஹ் அல்லாதவற்றை இவர்கள் எடுத்துக் கொண்டார்களே அத்தகையவர்கள் இவர்களுக்கு உதவி செய்திருக்க வேண்டாமா? இல்லை, அவர்களெல்லாம் இவர்களை விட்டு மறைந்து விட்டனர், இது, அவர்கள் பொய்யாகக் கூறியதும், அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்தார்களே அதுவுமாகும் (என்று தெளிவாகிவிட்டது).
Saheeh International
Then why did those they took besides Allah as deities by which to approach [Him] not aid them? But they had strayed [i.e., departed] from them. And that was their falsehood and what they were inventing.
மேலும் (நபியே!) நாம் உம்மிடம் இந்த குர்ஆனை செவியுறும் பொருட்டு ஜின்களில் சிலரை திருப்பியதும், அவர்கள் அங்கு வந்த போது, “மௌனமாக இருங்கள்” என்று (மற்றவர்களுக்குச்) சொன்னார்கள்; (ஓதுதல்) முடிந்ததும் தம் இனத்தாரிடம் சென்று அவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்தனர்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) இந்த குர்ஆனைக் கேட்கும் பொருட்டு, ஜின்களில் சிலரை நாம் உம்மிடம் வருமாறு செய்து, அவர்கள் வந்த சமயத்தில் (அவர்கள் தங்கள் மக்களை நோக்கி) ‘‘நீங்கள் வாய் பொத்தி (இதைக் கேட்டுக்கொண்டு) இருங்கள்'' என்று கூறினார்கள். (இது) ஓதி முடிவு பெறவே, தங்கள் இனத்தார்களிடம் சென்று அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய முற்பட்டனர்.
IFT
(பின்வரும் நிகழ்ச்சியும் நினைவுகூரத்தக்கதாகும்:) ஒருபோது நாம் ஜின்களின் ஒரு குழுவினரை உம் பக்கம் கொண்டு வந்தோம்; அவை குர்ஆனைச் செவியுற வேண்டும் என்பதற்காக. (நீர் குர்ஆனை ஓதிக் கொண்டிருந்த) அந்த இடத்திற்கு அவை வந்து சேர்ந்தபோது தங்களுக்குள் பேசிக் கொண்டன: “மௌனமாய் இருங்கள்!” பின்னர் அது ஓதி முடிக்கப்பட்டபோது அந்த ஜின்கள் தம் கூட்டத்தாரிடம் எச்சரிக்கை செய்யக்கூடியவர்களாய்த் திரும்பிச் சென்றனர்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) ஜின்களில் சிலரை இந்தக் குர் ஆனை அவர்கள் செவியேற்பதற்காக உம்மிடம் நாம் திருப்பியதையும் (நினைவு கூர்வீராக!) பின்னர் அவர்கள் அங்கு வந்தடைந்து (சிலர் சிலரிடம்) “நீங்கள் வாய் பொத்தி இருங்கள்” என்று கூறினார்கள், பிறகு அது முடிக்கப்பட்டபோது, தங்கள் கூட்டத்தாரிடம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகத் திரும்பினர்.
Saheeh International
And [mention, O Muhammad], when We directed to you a few of the jinn, listening to the Qur’an. And when they attended it, they said, "Listen attentively." And when it was concluded, they went back to their people as warners.
(ஜின்கள்) கூறினார்கள்: “எங்களுடைய சமூகத்தார்களே! நிச்சயமாக நாங்கள் ஒரு வேதத்தைச் செவிமடுத்தோம், அது மூஸாவுக்குப் பின்னர் இறக்கப்பட்டிருக்கின்றது, அது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மை படுத்துகிறது. அது உண்மையின் பக்கமும், நேரான மார்க்கத்தின் பாலும் (யாவருக்கும்) “வழி” காட்டுகின்றது.
அப்துல் ஹமீது பாகவி
(அவர்களை நோக்கி) ‘‘எங்கள் இனத்தார்களே! நிச்சயமாக நாங்கள் ஒரு வேதத்தைச் செவியுற்றோம். அது மூஸாவுக்குப் பின்னர் அருளப்பட்டிருக்கிறது. அது, தனக்கு முன்னுள்ள வேதங்களையும் உண்மைப்படுத்துகிறது. அது சத்தியத்திலும், நேரான வழியிலும் செலுத்துகிறது.
IFT
சென்று கூறினர்: “எங்களின் சமூகத்தாரே! நாங்கள் மூஸாவுக்குப் பின் இறக்கியருளப்பட்டிருக்கும் ஒரு வேதத்தைச் செவியுற்றோம். அது தனக்கு முன்பு வந்திருந்த வேதங்களை மெய்ப்படுத்தக்கூடியதாக இருக்கிறது. சத்தியத்தின் பக்கமும் நேரிய மார்க்கத்தின் பக்கமும் அது வழிகாட்டுகின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவர்களிடம்,) “எங்களுடைய கூட்டத்தார்களே! நிச்சயமாக நாங்கள் ஒரு வேதத்தைச் செயவியுற்றோம், (அது) தனக்கு முன்னுள்ளதை (வேதங்களை) உண்மைப்படுத்துகின்ற நிலையில் மூஸாவுக்குப் பின் (அது) இறக்கப்பட்டுள்ளது, அது சத்தியத்தின் (உண்மை மார்க்கத்தின்) பாலும், நேரான வழியின் பாலும் வழி காட்டுகிறது” என்று கூறினார்கள்.
Saheeh International
They said, "O our people, indeed we have heard a [recited] Book revealed after Moses confirming what was before it which guides to the truth and to a straight path.
யா கவ்மனா அஜீBபூ தா'இயல் லாஹி வ ஆமினூ Bபிஹீ யக்Fபிர் லகும் மின் துனூBபிகும் வ யுஜிர்கும் மின் 'அதாBபின் அலீம்
முஹம்மது ஜான்
“எங்கள் சமூகத்தாரே! உங்களை அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவருக்கு பதிலளித்து (அவர் கூறுவதை ஏற்று) அவர் மீது ஈமான் கொள்ளுங்கள். அவன் உங்கள் பாவங்களிலிருந்து உங்களுக்கு மன்னிப்பளிப்பான், நோவினை தரும் வேதனையிலிருந்து உங்களைப் பாதுகாப்பான்.
அப்துல் ஹமீது பாகவி
எங்கள் இனத்தார்களே! அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவர்களுக்குப் பதில் கூறி, அவரை நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் பாவங்களை (அல்லாஹ்) மன்னித்தும் விடுவான். துன்புறுத்தும் வேதனையிலிருந்து உங்களை காப்பாற்றுவான்.
IFT
எங்கள் சமூகத்தாரே! அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். மேலும், அவர்மீது நம்பிக்கை கொள்ளுங்கள். அல்லாஹ் உங்கள் பாவங்களை மன்னிப்பான். மேலும், துன்புறுத்தும் வேதனையிலிருந்து உங்களைக் காப்பாற்றுவான்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“எங்களுடைய சமூகத்தாரே! அல்லாஹ்வின் அழைப்பாளருக்கு நீங்கள் பதில் கூறுங்கள், மேலும், அவரை விசுவாசியுங்கள், (அதன் பொருட்டு) உங்களுடைய பாவங்களை உங்களுக்கு அவன் (அல்லாஹ்) மன்னித்து விடுவான், துன்புறுத்தும் வேதனையிலிருந்தும் உங்களை அவன் காத்துக்கொள்வான்” (என்றும்).
Saheeh International
O our people, respond to the Caller [i.e., Messenger] of Allah and believe in him; He [i.e., Allah] will forgive for you your sins and protect you from a painful punishment.
“ஆனால், எவர் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவருக்கு பதிலளிக்க வில்லையோ, அவர் பூமியில் (அல்லாஹ்வை) இயலாமல் ஆக்க முடியாது; அவனையன்றி அவரை பாதுகாப்போர் எவருமில்லை, அ(த்தகைய)வர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கின்றார்கள்.”
அப்துல் ஹமீது பாகவி
எவன் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவர்களுக்குப் பதில் கூறவில்லையோ (அவனை நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பான். தண்டனையில் இருந்து தப்ப) அவன் பூமியில் எங்கு ஓடியபோதிலும் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாது. பாதுகாப்பவர் அல்லாஹ்வைத் தவிர அவனுக்கு ஒருவருமில்லை. (அவனைப் புறக்கணிக்கும்) இவர்கள் பகிரங்கமான வழி கேட்டில்தான் இருப்பர்'' என்றார்கள்.
IFT
இன்னும், யார் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவருடைய சொல்லை ஏற்றுக் கொள்ளவில்லையோ அவர் பூமியில் (அல்லாஹ்வை) தோல்வியுறச் செய்திட எந்த வலிமையும் பெற்றிருக்கவில்லை. அல்லாஹ்விடமிருந்து அவரைப் பாதுகாக்கக் கூடிய எந்த ஆதரவாளர்களும் அவருக்கு இல்லை. இப்படிப்பட்டவர்கள் வெளிப்படையான வழிகேட்டில் கிடப்பவர்களாவர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“எவர் அல்லாஹ்வின் அழைப்பாளருக்கு பதில் கூறவில்லையோ அவர் பூமியில் (அல்லாஹ்வை) இயலாமல் ஆக்கி விடுபவரல்லர், (அல்லாஹ்வாகிய) அவனையன்றி, அவருக்கு உதவியாளர்களுமில்லை, அ(த்தகைய)வர்கள் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கிறார்கள்” (என்றும் ஜின்கள் கூறினார்கள்).
Saheeh International
But he who does not respond to the Caller of Allah will not cause failure [to Him] upon earth, and he will not have besides Him any protectors. Those are in manifest error."
வானங்களையும், பூமியையும் படைத்து அவற்றின் படைப்பால் எவ்வித சோர்வுமின்றி இருக்கின்றானே அல்லாஹ் அவன் நிச்சயமாக மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றலுடையவன்; ஆம்! நிச்சயமாக அவன் எல்லாப் பொருள்கள் மீதும் பேராற்றலுடையவன் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா?
அப்துல் ஹமீது பாகவி
வானங்களையும், பூமியையும் எவ்வித சிரமமின்றி படைத்த அல்லாஹ், மரணித்தவர்களை உயிர்ப்பிக்க நிச்சயமாக ஆற்றல் உடையவன்தான் என்பதை அவர்கள் கவனிக்க வேண்டாமா? ஆம், நிச்சயமாக அவன் சகலவற்றிற்கும் ஆற்றலுடையவன்.
IFT
இந்த வானங்களையும் பூமியையும் படைத்தவனும் அவற்றைப் படைப்பதனால் களைப்புறாதவனுமாகிய அல்லாஹ், இறந்தவர்களை உயிர்ப்பித்து எழுப்புவதற்கு திண்ணமாக ஆற்றலுள்ளவன் என்பது இவர்களுக்குப் புலப்படவில்லையா? ஆம்! புலப்படுகிறது. திண்ணமாக, அவன் எல்லாவற்றின் மீதும் ஆற்றல் கொண்டவனாயிருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைத்து, இன்னும், அவைகளைப் படைத்ததால் சோர்வடையவில்லையே அத்தகைய அல்லாஹ் மரணித்தோரை உயிர்ப்பிக்க ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? ஆம்! நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.
Saheeh International
Do they not see that Allah, who created the heavens and earth and did not fail in their creation, is able to give life to the dead? Yes. Indeed, He is over all things competent.
மேலும், நிராகரிப்பவர்கள் (நரக) நெருப்பின் முன் கொண்டுவரப்படும் நாளில் (அவர்களிடம்) “இது உண்மையல்லவா?” (என்று கேட்கப்படும்;) அதற்கவர்கள், “எங்கள் இறைவன் மீது சத்தியமாக, உண்மைதான்” என்று கூறுவார்கள். “நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததற்காக இவ்வேதனையை அனுபவியுங்கள்” என்று அவன் கூறுவான்.
அப்துல் ஹமீது பாகவி
நிராகரிப்பவர்களை நரகத்தின்முன் கொண்டுவரப்படும் நாளில் (அவர்களை நோக்கி,) ‘‘இது உண்மையல்லவா? (என்று கேட்கப்படும்.) அதற்கு அவர்கள் ஏனில்லை! ‘‘எங்கள் இறைவன் மீது சத்தியமாக! உண்மைதான்'' என்று கூறுவார்கள். (அதற்கவர்களை நோக்கி) ‘‘நீங்கள் இதை நிராகரித்ததன் காரணமாக இதன் வேதனையை அனுபவித்துக் கொண்டிருங்கள்'' என்று கூறுவான்.
IFT
மேலும், இந்நிராகரிப்பாளர்கள் நரகத்தின் முன்னால் கொண்டு வரப்படும் நாளில், அவர்களிடம் வினவப்படும்: “இது சத்தியம் இல்லையா?” அவர்கள் கூறுவார்கள்: “ஆம்! எங்கள் இறைவன்மீது ஆணையாக! இது உண்மையில், சத்தியம்தான்.” அல்லாஹ் கூறுவான்: “சரி! நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததற்குப் பதிலாக இப்போது வேதனையைச் சுவையுங்கள்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நிராகரிப்போரை நரகத்தின் முன் கொண்டு வரப்படும் நாளில் (அவர்களிடம்,) “இது உண்மையானதாக இல்லையா?” (என்று கேட்கப்படும்) அ(தற்க)வர்கள் “எங்களிரட்சகன் மீது சத்தியமாக! ஆம், (உண்மைதான்)” என்று கூறுவார்கள். (அதற்கவர்களிடம்) ”நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததன் காரணமாக (இதன்) வேதனையை நீங்கள் சுவைத்துக் கொண்டிருங்கள்” என்று (அல்லாஹ்) கூறுவான்.
Saheeh International
And the Day those who disbelieved are exposed to the Fire [it will be said], "Is this not the truth?" They will say, "Yes, by our Lord." He will say, "Then taste the punishment for what you used to deny."
“(நபியே!) நம் தூதர்களில் திடசித்தமுடையவர்கள் பொறுமையாக இருந்தது போல், நீரும் பொறுமையுடன் இருப்பீராக! இவர்களுக்காக (வேதனையை வரவழைக்க) அவசரப்படாதீர்! இவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை இவர்கள் பார்க்கும் நாளில், அவர்கள் (இப்பூமியில்) ஒரு நாளில் ஒரு நாழிகைக்கு மேல் இருக்கவில்லை (என்று எண்ணுவார்கள். இது) தெளிவாக அறிவிக்க வேண்டியதே! எனவே, வரம்பு மீறியவர்கள் தவிர (வேறு எவரும்) அழிக்கப்படுவார்களா?
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நம் தூதர்களிலுள்ள உறுதியுடைய வீரர்கள் (சிரமங்களைச்) சகித்துக் கொண்டிருந்தபடியே நீரும் சகித்துக்கொண்டு பொறுமையாக இருப்பீராக. அவர்களுக்கு (வேதனையை) நீர் அவசரப்பட வேண்டாம். அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை அவர்கள் காணும் நாளில் (இப்புவியில்) பகலின் ஒரு நாழிகையே தவிர (அதற்கு அதிகமாக)த் தங்கியிருக்கவில்லை என்று அவர்கள் எண்ணுவார்கள். (இதை) அவர்களுக்கு (நீர்) அறிவிக்க வேண்டும். ஆகவே, பாவம் செய்த மக்களைத் தவிர (மற்றெவரும்) அழிக்கப்படுவார்களா? (இல்லவே இல்லை.)
IFT
எனவே (நபியே!) நீரும் பொறுமையைக் கடைப்பிடிப்பீராக; மனஉறுதிமிக்க இறைத்தூதர்கள் கடைப்பிடித்த பொறுமையைப் போன்று! இவர்களின் விவகாரத்தில் அவசரப்படாதீர். இவர்களுக்கு எது பற்றி அச்சுறுத்தப்படுகின்றதோ அதை இவர்கள் கண்கூடாகப் பார்க்கும் நாளில் இவர்களுக்குப் புரிந்துவிடும்; ஒரு நாழிகையே அன்றி அதிகமாக உலகில் அவர்கள் தங்கியிருக்கவில்லை என்பது! செய்தி எடுத்துச்சொல்லப்பட்டு விட்டது; கீழ்ப்படியாத மக்களைத் தவிர வேறெவரேனும் இனி அழிவுக்குள்ளாக்கப்படுவார்களா, என்ன!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! நம்முடைய) தூதர்களிலுள்ள உறுதிமிக்கவர்கள், (கஷ்டங்களை) பொறுத்துக் கொண்டிருந்த பிரகாரமே, நீரும் பொறுமையாக இருப்பீராக! (நிராகரித்த) அவர்களுக்காக (வேதனையை) நீர் அவசரப்பட வேண்டாம், அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை அவர்கள் காணும் நாளில், (இப்புவியில்) ஒரு பகலில் ஒரு நாழிகையேயன்றி (அதிகமாகத்) தாம் தங்காதவர்களைப் போன்றிருப்பார்கள் (இது உம்மால் அவர்களுக்கு) எத்திவைக்கப்பட வேண்டியதாகும், ஆகவே, பாவம் செய்த கூட்டத்தினரைத் தவிர (மற்றெவரும்) அழிக்கப்படுவார்களா?
Saheeh International
So be patient, [O Muhammad], as were those of determination among the messengers and do not be impatient for them. It will be - on the Day they see that which they are promised - as though they had not remained [in the world] except an hour of a day. [This is] notification. And will [any] be destroyed except the defiantly disobedient people?