“நீங்கள் அதில் நுழையுங்கள்; பிறகு நீங்கள் (அதன் வேதனையைச்) சகித்துக் கொள்ளுங்கள்; அல்லது சகித்துக் கொள்ளாதிருங்கள்; (இரண்டும்) உங்களுக்குச் சமமே; நிச்சயமாக நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றிற்காகத்தான் நீங்கள் கூலி கொடுக்கப்படுகிறீர்கள்.”
அப்துல் ஹமீது பாகவி
அதில் நுழைந்து விடுங்கள். (அதன் வேதனையைப் பொறுத்துச்) சகித்துக் கொண்டிருங்கள்; அல்லது சகிக்காதிருங்கள். (இரண்டும்) உங்களுக்குச் சமமே! (வேதனையில் ஓர் அணுவளவும் குறையாது.) நீங்கள் செய்தவற்றுக்குரிய கூலிதான் உங்களுக்குக் கொடுக்கப்படும்.
IFT
இப்போது அதனுள் நுழைந்து எரிந்து விடுங்கள். நீங்கள் சகித்துக்கொண்டாலும் சரி, சகிக்காவிட்டாலும் சரி. இரண்டும் உங்களுக்குச் சமம்தான். நீங்கள் எவ்வாறு செயல்பட்டீர்களோ அவ்வாறே உங்களுக்குக் கூலி கொடுக்கப்படுகின்றது.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“இதில் நீங்கள் நுழைந்து விடுங்கள், (இதன் வேதனையைச் சகித்துப்) பொறுமையாயிருங்கள், அல்லது பொறுமையாய் இல்லாதிருங்கள், (இரண்டும்) உங்களுக்குச் சமமே, (வேதனையில் ஓர் அணுவளவும் குறைக்கப் படமாட்டீர்கள்). நீங்கள் கூலி கொடுக்கப்படுவதெல்லாம் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றிற்குத்தான்” (என்று கூறப்படும்).
Saheeh International
[Enter to] burn therein; then be patient or impatient - it is all the same for you. You are only being recompensed [for] what you used to do."
அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு அளித்ததை அனுபவித்தவர்களாகயிருப்பார்கள் - அன்றியும், அவர்களுடைய இறைவன் நரக வேதனையிலிருந்து அவர்களைப் பாதுகாத்துக் கொண்டான்.
அப்துல் ஹமீது பாகவி
தங்கள் இறைவன் தங்களுக்கு அளித்திருப்பவற்றைப் பற்றியும், நரக வேதனையிலிருந்து தங்களைத் தங்கள் இறைவன் பாதுகாத்துக் கொண்டதைப் பற்றியும் மகிழ்ச்சி அடைந்தவர்களாக இருப்பார்கள்.
IFT
அவர்களுடைய அதிபதி அவர்களுக்கு அளிப்பவற்றிலிருந்து இன்பம் துய்த்துக் கொண்டிருப்பார்கள். மேலும், அவர்களுடைய இறைவன் அவர்களை நரக வேதனையிலிருந்து காப்பாற்றுவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தங்கள் இரட்சகன் தங்களுக்கு அளித்திருப்பவைகளை அனுபவித்தவர்களாக இருப்பர், மேலும், அவர்களின் இரட்சகன் அவர்களை நரக வேதனையிலிருந்து காத்துக் கொண்டான்.
Saheeh International
Enjoying what their Lord has given them, and their Lord protected them from the punishment of Hellfire.
كُلُوْاஉண்ணுங்கள்وَاشْرَبُوْاஇன்னும் பருகுங்கள்هَـنِٓـيـْئًا ۢமகிழ்ச்சியாகبِمَا كُنْـتُمْ تَعْمَلُوْنَۙநீங்கள் செய்துகொண்டிருந்த காரணத்தால்
குலூ வஷ்ரBபூ ஹனீ 'அம் Bபிமா குன்தும் தஃமலூன்
முஹம்மது ஜான்
(அவர்களுக்குக் கூறப்படும்:) “நீங்கள் (நன்மைகளைச்) செய்து கொண்டிருந்ததற்காக, (சுவர்க்கத்தில்) தாராளமாகப் புசியுங்கள், பருகுங்கள்.”
அப்துல் ஹமீது பாகவி
(அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் செய்த நன்மைகளின் காரணமாக (இதில் உள்ளவற்றை) மிக்க தாராளமாகப் புசித்துக் கொண்டும், பருகிக் கொண்டும் இருங்கள்'' (என்றும் கூறப்படும்).
IFT
(அவர்களிடம் கூறப்படும்:) “உண்ணுங்கள், பருகுங்கள் மகிழ்வோடு; நீங்கள் செய்து கொண்டிருந்த நற்செயல்களுக்குரிய வெகுமதியாக!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவர்களிடம் உலகில் நன்மைகளிலிருந்து) “நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்காக மகிழ்ச்சியுடன் உண்ணுங்கள் இன்னும் பருகுங்கள்” (என்றும் கூறப்படும்).
Saheeh International
[They will be told], "Eat and drink in satisfaction for what you used to do."
مُتَّكِـــِٕيْنَசாய்ந்தவர்களாக இருப்பார்கள்عَلٰى سُرُرٍகட்டில்களில்مَّصْفُوْفَةٍ ۚவரிசையாக வைக்கப்பட்ட தலையணைகளில்وَزَوَّجْنٰهُمْஅவர்களுக்கு நாம் மணமுடித்துவைப்போம்بِحُوْرٍ عِيْنٍகண்ணழகிகளான கருவிழிகளுடைய பெண்களை
அணி அணியாகப் போடப்பட்ட மஞ்சங்களின் மீது சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள்; மேலும், நாம் அவர்களுக்கு, நீண்ட கண்களையுடைய (ஹூருல் ஈன்களை) மணம் முடித்து வைப்போம்.
அப்துல் ஹமீது பாகவி
வரிசையாகப் போடப்பட்ட கட்டில்களின் மீது சாய்ந்(து படுத்)தவர்களாக இருப்பர். நாம் அவர்களுக்கு (‘ஹூருல்ஈன்' என்னும்) கண்ணழகிக(ளாகிய கன்னி)களை திருமணம் செய்து வைப்போம்.
IFT
எதிரெதிரே விரித்து வைக்கப்பட்டிருக்கும் கட்டில்களில் மெத்தைகள் வைத்து அவர்கள் அமர்ந்திருப்பார்கள். அழகிய கண்களைக் கொண்ட மங்கையரை அவர்களுக்கு மணமுடித்துக் கொடுப்போம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அணியணியாகப் போடப்பட்ட கட்டில்களி(ல் உள்ள மஞ்சங்களி)ன் மீது சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள், நாம் அவர்களுக்கு (ஹூருல் ஈன் என்னும்) கண்ணழகி(களாகிய கன்னிகை)களை மணமுடித்து வைப்போம்.
Saheeh International
They will be reclining on thrones lined up, and We will marry them to fair women with large, [beautiful] eyes.
எவர்கள் ஈமான் கொண்டு, அவர்களுடைய சந்ததியாரும் ஈமானில் அவர்களைப் பின் தொடர்கிறார்களோ, அவர்களுடைய அந்த சந்ததியினரை அவர்களுடன் (சுவனத்தில் ஒன்று) சேர்த்து விடுவோம். (இதனால்) அவர்களுடைய செயல்களில் எந்த ஒன்றையும், நாம் அவர்களுக்குக் குறைத்து விட மாட்டோம் - ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதித்த செயல்களுக்குப் பிணையாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
எந்த நம்பிக்கையாளர்களின் சந்ததிகள், தங்கள் பெற்றோர்களைப் பின்பற்றி நம்பிக்கை கொள்கிறார்களோ (அந்தச் சந்ததிகளின் நன்மைகள் குறைவாக இருந்தும் அவர்களின் பெற்றோர்கள் திருப்தியடையும் பொருட்டு) அவர்களுடைய சந்ததிகளையும் அவர்களுடன் (சொர்க்கத்தில்) சேர்த்துவிடுவோம். இதனால் அவர்களுடைய பெற்றோர்களின் நன்மைகளில் எதையும் நாம் குறைத்துவிட மாட்டோம். ஒவ்வொரு மனிதனும், தான் செய்த செயலுக்குப் பிணையாக இருக்கிறான்.
IFT
எவர்கள் இறைநம்பிக்கை கொண்டார்களோ, அவர்களையும், இறைநம்பிக்கையில் ஓரளவாவது அவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றிய அவர்களின் வழித்தோன்றல்களையும் நாம் (சுவனத்தில்) ஒன்று சேர்த்து வைப்போம். மேலும், அவர்களின் செயல்களில் எந்த இழப்பையும் அவர்களுக்கு நாம் ஏற்படுத்தமாட்டோம். ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதித்தவற்றுக்குப் பணயமாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் விசுவாசங்கொண்டார்களே அத்தகையோர், அவர்களுடைய சந்ததிகளும் விசுவாசத்தின் மூலம் அவர்களை பின்பற்றினார்கள், (அத்தகைய அந்தச் சந்ததியினரின் படித்தரங்கள் குறைவாக இருப்பினும் அவர்களின் பெற்றோர்கள் இருக்கும் உயர் பதவிக்கு) அவர்களுடன் (சுவனபதியில்) அவர்களின் சந்ததியினரை சேர்த்து விடுவோம், (இதனால்) அவர்களுடைய (பெற்றோர்களின் நன்மையான) செயல்களில் எதனையும் அவர்களுக்கு நாம் குறைத்து விடமாட்டோம், ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதித்ததைக் கொண்டு பிணையாக்கபட்டிருக்கின்றான்.
Saheeh International
And those who believed and whose descendants followed them in faith - We will join with them their descendants, and We will not deprive them of anything of their deeds. Every person, for what he earned, is retained.
وَاَمْدَدْنٰهُمْநாம் இவர்களுக்கு கொடுத்துக் கொண்டே இருப்போம்بِفَاكِهَةٍபழங்களை(யும்)وَّلَحْمٍமாமிசங்களையும்مِّمَّا يَشْتَهُوْنَஅவர்கள் விரும்புகின்றவற்றின்
அங்கே அவர்கள் ஒருவர் மற்றவரிடமிருந்து மதுக்கிண்ணத்தைப் பாய்ந்து பாய்ந்து வாங்கிக் கொண்டிருப்பார்கள். அங்கு வீணான பேச்சும் இருக்காது; தீய நடத்தையும் இருக்காது.
வ யதூFபு 'அலய்ஹிம் கில்மானுல் லஹும் க அன்னஹும் லு'லு'உம் மக்னூன்
முஹம்மது ஜான்
அவர்களுக்கு(ப் பணி விடைக்கு) உள்ள சிறுவர்கள், அவர்களைச் சுற்றிக் கொண்டே இருப்பார்கள்; அவர்கள் பதித்த ஆணி முத்துகளைப் போல் (இருப்பார்கள்).
அப்துல் ஹமீது பாகவி
அவர்களைச் சுற்றி (அவர்களுக்குப் பணி செய்ய எந்நேரமும்) சிறுவர்கள் பலர் சுற்றி வருவார்கள். அவர்கள் பதிந்த முத்துக்களைப் போல் (பிரகாசமாக) இருப்பார்கள்.
IFT
அவர்களுக்குப் பணிவிடை செய்வதற்கென்று நியமிக்கப்பட்ட சிறுவர்கள் அவர்களுக்குச் சேவைபுரிய ஓடியாடிக் கொண்டிருப்பார்கள். அந்தச் சிறுவர்கள் மறைத்து வைக்கப்பட்ட முத்துக்களைப் போல் அழகாய் இருப்பார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவர்களுக்குரிய (பணிபுரியும்) சிறுவர்கள் அவர்களைச் சுற்றிகொண்டே இருப்பார்கள், அவர்கள் (சிப்பிகளில்) மறைத்து வைக்கப்பட்ட (கைபடாத) முத்துக்களைப் போல் (பிரகாசமான தோற்றமளிப்பவர்களாக) இருப்பர்.
Saheeh International
There will circulate among them [servant] boys [especially] for them, as if they were pearls well-protected.
இன்னா குன்னா மின் கBப்லு னத்'ஊஹு இன்னஹூ ஹுவல் Bபர்ருர் ரஹீம்
முஹம்மது ஜான்
“நிச்சயமாக நாம் முன்னே (உலகில்) அவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தோம்; நிச்சயமாக அவனே மிக்க நன்மை செய்பவன்; பெருங்கிருபையுடையவன்.”
அப்துல் ஹமீது பாகவி
இதற்கு முன்னர் (வேதனையிலிருந்து நம்மை காக்கும்படி) மெய்யாகவே நாம் அவனிடம் பிரார்த்தனை செய்துகொண்டு இருந்தோம். மெய்யாகவே அவன்தான் நன்மை செய்பவன், பேரன்புடையவன் ஆவான்'' என்று கூறுவார்கள்.
IFT
திண்ணமாக, நாங்கள் முந்தைய வாழ்க்கையில் அவனிடமே இறைஞ்சிக்கொண்டிருந்தோம். அவன் உண்மையில் பேருபகாரியும் கருணையாளனும் ஆவான்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக (இதற்கு) முன்னர் (வேதனையிலிருந்து எங்களைக் காக்குமாறு) நாங்கள் அவனை (பிரார்த்தனை செய்து) அழைத்துக் கொண்டிருந்தோம், நிச்சயமாக, அவனே மிகக் கூடுதலாக உபகாரம் செய்பவன், மிகக்கிருபையுடையவன்” (என்றும் கூறுவார்கள்).
Saheeh International
Indeed, we used to supplicate Him before. Indeed, it is He who is the Beneficent, the Merciful."
எனவே, (நபியே! நீர் மக்களுக்கு நல்லுபதேசத்தால்) நினைவுறுத்திக் கொண்டிருப்பீராக! உம்முடைய இறைவனின் அருளால், நீர் குறிகாரரும் அல்லர்; பைத்தியக்காரருமல்லர்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) (நிராகரிப்பவர்களுக்கு வேதனையை) ஞாபகமூட்டிக் கொண்டே இருப்பீராக. உமது இறைவனின் அருளால் நீர் குறி சொல்பவருமல்ல; பைத்தியக்காரருமல்ல.
IFT
(நபியே!) நீர் அறிவுரை வழங்கிய வண்ணம் இருப்பீராக! உம் இறைவனின் அருளால் நீர் சூனியக்காரருமல்லர்; பைத்தியக்காரரும் அல்லர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, (நபியே! அல்லாஹ்வின் தூதை எத்திவைத்து, அவன் இறக்கிவைத்த குர் ஆனின் மூலம்) அவர்களுக்கு நினைவுபடுத்துவீராக! உமது இரட்சகனின் அருளால் நீர் குறிகாரரல்லர், பைத்திக்காரருமல்லர்.
Saheeh International
So remind, [O Muhammad], for you are not, by the favor of your Lord, a soothsayer or a madman.
அல்லது அவர்கள் (உம்மைப் பற்றி, “அவர்) புலவர்; அவருக்குக் காலத்தின் துன்பத்தைக் கொண்டு நாங்கள் வழி பார்த்துக் இருக்கிறோம்” என்று கூறுகிறார்களா?
அப்துல் ஹமீது பாகவி
(உம்மைப் பற்றி) அவர்கள் (நீர்) ஒரு கவிஞர்தான் என்று கூறுகின்றனரா? (இக்கூற்றுக்குத் தண்டனையாக அவர்கள் மீது சம்பவிக்கக்கூடிய சோதனையின்) காலச்சக்கரத்தை எதிர்பார்த்திருப்போம்.
IFT
“இவர் ஒரு கவிஞர்; இவர் விஷயத்தில் சுழற்சியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம்” என்று இவர்கள் கூறுகின்றார்களா, என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது_(உம்மைப்பற்றி, ”அவர்) ஒரு கவிஞர் தாம், அவருக்கு (இறப்பெனும்) காலச்சூழலை நாம் எதிர்பார்த்திருப்போம்” என்று அவர்கள் கூறுகின்றனரா?
Saheeh International
Or do they say [of you], "A poet for whom we await a misfortune of time"?
“நீங்களும் வழி பார்த்திருங்கள் - நிச்சயமாக நானும் உங்களுடன் வழி பார்க்கிறேன்” என்று (நபியே!) நீர் கூறும்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே (அவர்களை நோக்கி, அதை) ‘‘நீங்களும் எதிர்பார்த்திருங்கள். (என்ன நடக்கிறது என்பதை) நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர்பார்த்திருக்கிறேன்'' என்று கூறுவீராக.
IFT
இவர்களிடம் நீர் கூறும்: “சரி, எதிர்பாருங்கள். நானும் உங்களுடன் எதிர்பார்க்கிறேன்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆகவே, அவர்களிடம் “அதனை) நீங்கள் எதிர்பார்த்திருங்கள், (என்ன நடக்கிறதென்பதை நிச்சயமாக நான் உங்களுடன் எதிர்பார்ப்பவர்களிலுள்ளவன்” என்று கூறுவீராக!
Saheeh International
Say, "Wait, for indeed I am, with you, among the waiters."
அல்லது, அவர்களுடைய புத்திகள் தாம் அவர்களை இவ்வா(றெல்லாம் பேசுமா)று ஏவுகின்றனவா? அல்லது அவர்கள் வரம்பு மீறிய சமூகத்தாரா?
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! உம்மை குறிகாரர் என்றும், பைத்தியக்காரர் என்றும் கூறும்படி) அவர்களுடைய அறிவுதான் அவர்களைத் தூண்டுகிறதா? அல்லது (இயற்கையாகவே) அவர்கள் விஷமிகள்தானா?
IFT
இவர்களின் அறிவுதான் இவ்வாறெல்லாம் இவர்களைப் பேசத் தூண்டுகிறதா? அல்லது உண்மையில் இவர்கள் பகைமையில் வரம்புமீறிச் செல்கின்ற மக்களாய் இருக்கின்றார்களா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அல்லது (நபியே! உம்மை பற்றி கவிஞர், பைத்தியக்காரர், குறிகாரர் என்றெல்லாம் கூறுமாறு) அவர்களுடைய அறிவுகள்தான் இவ்வாறு அவர்களை ஏவுகின்றனவா? அல்லது அவர்கள் வரம்புமீறிய கூட்டத்தினரா?”
Saheeh International
Or do their minds command them to [say] this, or are they a transgressing people?
அல்லது, இ(வ்வேதத்)தை நீர் இட்டுக் கட்டினீர் என்று அவர்கள் கூறுகின்றனரா? அல்ல. அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லது (நம் நபியாகிய) இவர் பொய்யாகவே அதைக் கற்பனை செய்து கொண்டாரென்று அவர்கள் கூறுகின்றனரா? மாறாக (மனமுரண்டாகவே) இதை அவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை.
IFT
அல்லது, “இந்த மனிதர் இந்தக் குர்ஆனை சுயமாகப் புனைந்திருக்கின்றார்” என்று இவர்கள் கூறுகின்றார்களா? உண்மை யாதெனில், இவர்கள் நம்பிக்கை கொள்ள விரும்பவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது, “அவர் அதனைக் கற்பனை செய்து கொண்டார்” என்று அவர்கள் கூறுகின்றனரா? இல்லை! அவர்கள் விசுவாசங்கொள்ள மாட்டார்கள்.
Saheeh International
Or do they say, "He has made it up"? Rather, they do not believe.
فَلْيَاْتُوْا بِحَدِيْثٍ مِّثْلِهٖۤஇது போன்ற ஒரு பேச்சை அவர்கள் கொண்டு வரட்டும்!اِنْ كَانُوْا صٰدِقِيْنَؕஇவர்கள் உண்மையாளர்களாக இருந்தால்
Fபல்யாதூ Bபிஹதீதிம் மித்லிஹீ இன் கானூ ஸாதிகீன்
முஹம்மது ஜான்
ஆகவே, (இவ்வாறெல்லாம் கூறும்) அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால், இ(வ்வேதத்)தைப் போன்ற ஒரு செய்தியை அவர்கள் கொண்டு வரட்டும்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! இதை நீர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டீரென்று கூறுவதில்) அவர்கள் உண்மை சொல்பவர்களாயிருந்தால் (அவர்களும் கற்பனை செய்து கொண்டு) இதைப்போன்ற ஒரு வாக்கியத்தைக்கொண்டு வரவும்.
IFT
இவர்கள் உண்மையானவர்களாய் இருந்தால், இதே போன்ற மகத்துவமிக்க ஒரு வாக்கை இவர்கள் இயற்றிக்கொண்டு வரட்டும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனவே, (நபியே! இவ்வாறு கூறுவதில்) அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால், இதைப்போன்ற செய்தியை அவர்கள் கொண்டு வரட்டும்.
Saheeh International
Then let them produce a statement like it, if they should be truthful.
اَمْ لَهُمْஅவர்களுக்கு ?سُلَّمٌஓர் ஏணிيَّسْتَمِعُوْنَசெவியுறுகின்றனராفِيْهِ ۚஅதில்فَلْيَاْتِவரட்டும்مُسْتَمِعُهُمْஅவர்களில் செவியுற்றவர்بِسُلْطٰنٍ مُّبِيْنٍؕதெளிவான ஓர் ஆதாரத்தைக் கொண்டு
அல்லது, அவர்களுக்கு ஏணி இருந்து அதன் மூலம் (வானத்தின் இரகசியங்களை) கேட்டு வருகின்றார்களா? அவ்வாறாயின், அவர்களில் கேட்டு வந்தவர் செவியேற்றதைத் தெளிவான ஆதாரத்துடன் கொண்டு வரட்டும்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லது இவர்களுக்கு (வானத்தில் ஏறக்கூடிய) ஏணி இருந்து, அதில் (ஏறிச் சென்று, அங்கு நடைபெறும் பேச்சுகளைக்) கேட்டு வருகின்றனரா? அவ்வாறாயின், (அவற்றை) கேட்டு வந்தவர் (அதற்குத்) தெளிவான ஓர் ஆதாரத்தைக் கொண்டுவரவும்.
IFT
அல்லது இவர்களிடம் ஏணி ஏதும் இருந்து அதில் ஏறிச்சென்று (மேலுலகின் செய்திகளை) இவர்கள் ஒட்டுக்கேட்டு வருகின்றார்களா, என்ன? இவர்களில் எவரேனும் அப்படிக் கேட்டிருந்தால் அவர் ஏதேனும் தெளிவான அத்தாட்சியைக் கொண்டு வரட்டும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது, இவர்களுக்கு (வானத்தில் ஏறிச்செல்ல) ஏணி இருந்து, அதில் (ஏறி அங்கு பேசப்படுபவற்றைச்) செவிமடுக்கிறார்களா? அவ்வாறாயின், அவர்களில் கேட்டு வந்தவர் தெளிவான ஒரு சான்றைக் கொண்டு வரட்டும்.
Saheeh International
Or have they a stairway [into the heaven] upon which they listen? Then let their listener produce a clear authority [i.e., proof].
வானத்திலிருந்து ஒரு துண்டு விழுவதை அவர்கள் கண்டார்களானால், அதை அடர்த்தியான மேகம் என்று அவர்கள் கூறிவிடுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
வானம் இடிந்து அதிலிருந்த ஒரு துண்டு விழுவதை இவர்கள் கண்ணால் கண்டபோதிலும் (அது வானமல்ல;) மேகம்தான் என்றும், ஆனால் அது உறைந்து இறுகிவிட்டதென்றும் கூறுவார்கள்.
IFT
வானத்தின் துண்டுகள் கீழே வீழ்வதை இவர்கள் பார்த்தாலும், “இவை அடர்த்தியாய் வந்து கொண்டிருக்கும் மேகங்கள்” என்றுதான் கூறுவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், வானத்திலிருந்து (இடிந்து) துண்டுகள் விழுவதை அவர்கள் (கண்ணால்) காண்பார்களானால், (அது வானமல்ல,) அது அடர்த்தியான மேகம்தான்” என்று கூறுவார்கள்.
Saheeh International
And if they were to see a fragment from the sky falling, they would say, "[It is merely] clouds heaped up."
فَذَرْهُمْஆகவே, அவர்களை விட்டுவிடுவீராக!حَتّٰىவரைيُلٰقُوْاஅவர்கள் சந்திக்கின்றيَوْمَهُمُஅவர்களுடைய நாள்الَّذِىْஎதுفِيْهِஅதில்يُصْعَقُوْنَۙஅழிந்துவிடுகின்ற
அன்றியும், அநியாயம் செய்து கொண்டு இருந்தவர்களுக்கு நிச்சயமாக மற்றொரு வேதனையும் (இம்மையில்) உண்டு எனினும் அவர்களில் பெரும்பாலோர் இதை அறிய மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக இவ்வக்கிரமக்காரர்களுக்கு (மறுமையின்) வேதனைக்கு முன்னால் (இம்மையிலும்) வேதனை இருக்கிறது. எனினும் அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிந்துகொள்ள மாட்டார்கள்.
IFT
மேலும், அந்த நாள் வருவதற்கு முன்பும் கூட கொடுமைக்காரர்களுக்கு ஒரு வேதனை இருக்கின்றது. ஆனால், அவர்களில் பெரும்பாலோர் அறிவதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும், நிச்சயமாக அநியாயம் செய்துகொண்டிருந்தோர்க்கு (மறுமையின் வேதனையாகிய) அதுமட்டுமின்றி (இம்மையில்) மற்றொரு வேதனையுமிருக்கின்றது, எனினும், அவர்களில் பெரும்பாலோர் (இதனை) அறிந்துகொள்ளமாட்டார்கள்.
Saheeh International
And indeed, for those who have wronged is a punishment before that, but most of them do not know.
எனவே (நபியே!) உம்முடைய இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக; நிச்சயமாக நீர் நம் கண்காணிப்பில் இருக்கின்றீர்; மேலும் நீங்கள் எழுந்திருக்கும் சமயத்தில் உம் இறைவனின் புகழைக் கூறித் தஸ்பீஹு செய்வீராக,
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) உமது இறைவனின் தீர்ப்பைப் பொறுமையாக எதிர்பார்த்திருப்பீராக. நிச்சயமாக நீர் நம் கண்களுக்கு முன்பாகவே இருக்கிறீர். (ஆகவே, அவர்கள் உம்மைத் தங்கள் விருப்பப்படி துன்புறுத்த முடியாது.) ஆயினும், நீர் (நித்திரையிலிருந்து) எழுந்த நேரத்தில் உமது இறைவனின் புகழைக்கூறித் துதி செய்வீராக!
IFT
(நபியே!) உம் அதிபதியின் தீர்ப்பு வரும்வரை பொறுமையாய் இருப்பீராக! நீர் எம் கண்காணிப்பில் இருக்கின்றீர். நீர் எழும்போது உம் இறைவனைப் புகழ்வதுடன் அவனைத் துதிப்பீராக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நபியே!) உமதிரட்சகனின் தீர்ப்பை (எதிர்பார்த்துப்) பொருத்திருப்பீராக! நிச்சயமாக நீர் நம் கண்களுக்கு முன்பாகவே இருக்கின்றீர், (ஆகவே, அவர்கள் உமக்கு எவ்வித இடையூறும் செய்து விட முடியாது.) மேலும் (நீர் நித்திரையிலிருந்து) எழுந்த நேரத்தில் உமதிரட்சகனின் புகழைக்கொண்டு துதி செய்து கொண்டிருப்பீராக!
Saheeh International
And be patient, [O Muhammad], for the decision of your Lord, for indeed, you are in Our eyes [i.e., sight]. And exalt [Allah] with praise of your Lord when you arise