(மூஸா திரும்பியதும் தம் சகோதரரிடம்) “ஹாரூனே! இவர்கள் வழி கெடுகிறார்கள் என்று நீங்கள் கண்ட போது (அவர்களுக்கு போதனை செய்து திருத்துவதில் நின்றும்) உங்களைத் தடை செய்தது யாது? என்று கேட்டார்.
இன்னும், நாம் மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிக்கும் வேதத்தை நிச்சயமாக நாம் கொடுத்தோம்; (அது) பயபக்தியுடையவர்களுக்கு ஓர் ஒளியாகவும், நினைவூட்டும் நற்போதனையாகவும் இருந்தது.
(இவ்வாறே) மத்யன் வாசிகளும் (முற்பட்டனர்); இன்னும் மூஸாவையும் பொய்ப்பிக்கவே முற்பட்டனர் -எனினும் நான் காஃபிர்களுக்கு அவகாசம் கொடுத்துப் பின்னர் அவர்களை நான் பிடித்துக் கொண்டேன்; என் தண்டனை எப்படியிருந்தது? (என்பதை கவனிப்பீராக!)
قَالَகூறினார்رَبُّஇறைவன்السَّمٰوٰتِவானங்கள்وَالْاَرْضِஇன்னும் பூமிوَمَا بَيْنَهُمَاؕஇன்னும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின்اِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்مُّوْقِنِيْنَஉறுதிகொள்பவர்களாக
கால ரBப்Bபுஸ் ஸமாவாதி வல் அர்ளி வமா Bபய்னஹுமா இன் குன்தும் மூகினீன்
அதற்கு (மூஸா) “நீங்கள் உறுதி கொண்டவர்களாக இருப்பின், வானங்களுக்கும், பூமிக்கும் இவ்விரண்டுக்குமிடையே உள்ளவற்றுக்கும் இறைவனே (அகிலத்தாரின் இறைவன் ஆவான்)” என்று கூறினார்.
قَالَஅவர் கூறினார்رَبُّஇறைவன்الْمَشْرِقِகிழக்கு திசைوَالْمَغْرِبِஇன்னும் மேற்கு திசைوَمَا بَيْنَهُمَا ؕஇன்னும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின்اِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்تَعْقِلُوْنَசிந்தித்துபுரிபவர்களாக
கால ரBப்Bபுல் மஷ்ரிகி வல் மக்ரிBபி வமா Bபய்ன ஹுமா இன் குன்தும் தஃகிலூன்
(அதற்கு மூஸா) “நீங்கள் உணர்ந்து கொள்பவர்களாக இருப்பீர்களாயின், அவனே கிழக்கிற்கும், மேற்கிற்கும், இன்னும் இவ்விரண்டிற்குமிடையே இருப்பவற்றிற்கும் இறைவன் ஆவான்” எனக் கூறினார்.
ஆகவே சூனியக்காரர்கள் வந்தவுடன், அவர்கள் ஃபிர்அவ்னை நோக்கி, “திண்ணமாக - நாங்கள் - (மூஸாவை) வென்று விட்டால், நிச்சயமாக எங்களுக்கு (அதற்குரிய) வெகுமதி கிடைக்குமல்லவா ?” என்று கேட்டார்கள்.
மேலும், “நீர் என் அடியார்களை அழைத்துக் கொண்டு, இரவோடு இரவாகச் சென்று விடும்; நிச்சயமாக நீங்கள் பின் தொடரப்படுவீர்கள்” என்று நாம் மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம்.
உம் கைத்தடியினால் இந்தக் கடலை நீர் அடியும்” என்று மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம். (அவ்வாறு அடித்ததும் கடல்) பிளந்தது; (பிளவுண்ட) ஒவ்வொரு பகுதியும் பெரும் மலை போன்று ஆகிவிட்டது.
اِذْ قَالَஅந்த சமயத்தை நினைவு கூறினார்مُوْسٰىமூசாلِاَهْلِهٖۤதன்குடும்பத்தினருக்குاِنِّىْۤநிச்சயமாக நான்اٰنَسْتُநான் பார்த்தேன்نَارًاؕநெருப்பைسَاٰتِيْكُمْஉங்களுக்கு கொண்டு வருகிறேன்مِّنْهَاஅதிலிருந்துبِخَبَرٍஒரு செய்தியைاَوْஅல்லதுاٰتِيْكُمْஉங்களுக்கு கொண்டு வருகிறேன்بِشِهَابٍநெருப்பைقَبَسٍகொள்ளிக்கட்டைلَّعَلَّكُمْ تَصْطَلُوْنَநீங்கள் குளிர் காய்வதற்காக
இத் கால மூஸா லி அஹ்லிஹீ இன்னீ ஆனஸ்து னாரன் ஸ'ஆதீகும் மின்ஹா BபிகBபரின் அவ் ஆதீகும் BபிஷிஹாBபின் கBபஸில் ல'அல்லகும் தஸ்தலூன்
மூஸா தம் குடும்பத்தாரை நோக்கி: “நிச்சயமாக நான் நெருப்பைக் காண்கிறேன்; உங்களுக்கு நான் அதிலிருந்து (நாம் செல்ல வேண்டிய வழி பற்றிய) செய்தியைக் கொண்டு வருகிறேன், அல்லது நீங்கள் குளிர்காயும் பொருட்டு (உங்களுக்கு அதிலிருந்து) நெருப்புக் கங்கைக் கொண்டு வருகிறேன்” என்று கூறியதை (நபியே!) நினைவு கூர்வீராக!
وَاَ لْقِபோடுவீராக!عَصَاكَ ؕஉமது தடியைفَلَمَّا رَاٰهَاஅவர் அதை பார்த்த போதுتَهْتَزُّநெளிவதாகكَاَنَّهَاஅது போன்றுجَآنٌّபாம்பைوَّلّٰىதிரும்பினார்مُدْبِرًاபுறமுதுகிட்டுوَّلَمْ يُعَقِّبْ ؕஅவர் திரும்பவே இல்லைيٰمُوْسٰىமூஸாவே!لَا تَخَفْபயப்படாதீர்اِنِّىْநிச்சயமாக நான்لَا يَخَافُபயப்பட மாட்டார்கள்لَدَىَّஎன்னிடம்الْمُرْسَلُوْنَ ۖஇறைத்தூதர்கள்
வ அல்கி 'அஸாக்; Fபலம்ம்மா ர ஆஹா தஹ்தZஜ்Zஜு க அன்னஹா ஜான்னு(ன்)வ் வல்லா முத்Bபிர(ன்)வ் வ லம் யு'அக்கிBப்; யா மூஸா லா தகFப் இன்னீ லா யகாFபு லதய்யல் முர்ஸலூன்
“உம் கைத்தடியைக் கீழே எறியும்;” (அவ்வாறே அவர் அதை எறியவும்) அது பாம்புபோல் நெளிந்ததை அவர் கண்ட பொழுது, திரும்பிப் பார்க்காது (அதனை விட்டு) ஓடலானார்; “மூஸாவே! பயப்படாதீர்! நிச்சயமாக (என்) தூதர்கள் என்னிடத்தில் பயப்பட மாட்டார்கள்.”
நாம் மூஸாவின் தாயாருக்கு: “அவருக்கு (உன் குழந்தைக்குப்) பாலூட்டுவாயாக; அவர் மீது (ஏதும் ஆபத்து வரும் என்று) நீ பயப்படுவாயானால், அவரை ஆற்றில் எறிந்து விடு - அப்பால் (அவருக்காக) நீ பயப்படவும் வேண்டாம், துக்கப்படவும் வேண்டாம்; நிச்சயமாக நாம் அவரை உன்னிடம் மீள வைப்போம்; இன்னும், அவரை (நம்) தூதர்களில் ஒருவராக்கி வைப்போம்” என்று வஹீ அறிவித்தோம்.
வ அஸ்Bபஹ Fபு'ஆது உம்மி மூஸா Fபாரிகன் இன் காதத் லதுBப்தீ Bபிஹீ லவ் லா அர்ரBபத்னா 'அலா கல்Bபிஹா லிதகூன மினல் மு'மினீன்
மூஸாவின் தாயுடைய இருதயம் (துக்கத்தால்) வெறுமையாகி விட்டது; முஃமின்களில் நின்றுமுள்ளவளாய் இருப்பதற்காக நாம் அவள் உள்ளத்தை உறுதிப்படுத்தாது இருந்திருந்தால், அவள் (மூஸா ஆற்றில் விடப்பட்டதை) வெளிப்படுத்த முடுகியிருப்பாள்.
இன்னும் மூஸாவின் சகோதரியிடம்: “அவரை நீ பின் தொடர்ந்து செல்” என்றும் (தாய்) கூறினாள். (அவ்வாறே சென்று ஃபிர்அவ்னின்) ஆட்கள் காண முடியாதபடி அவள் தூரத்திலிருந்து அவரை கவனித்து வந்தாள்.
وَدَخَلَஇன்னும் நுழைந்தார்الْمَدِيْنَةَநகரத்தில்عَلٰى حِيْنِநேரத்தில்غَفْلَةٍகவனமற்று இருந்தمِّنْ اَهْلِهَاஅதன் வாசிகள்فَوَجَدَகண்டார்فِيْهَاஅதில்رَجُلَيْنِஇருவரைيَقْتَتِلٰنِ அவ்விருவரும் சண்டை செய்தனர்هٰذَاஇவர்مِنْ شِيْعَتِهٖஅவருடைய பிரிவை சேர்ந்தவர்وَهٰذَاஇன்னும் இவர்مِنْ عَدُوِّهٖۚஅவருடைய எதிரிகளில் உள்ளவர்فَاسْتَغَاثَهُஅவரிடம் உதவி கேட்டான்الَّذِىْ مِنْ شِيْعَتِهٖஇவருடைய பிரிவைச் சேர்ந்தவன்عَلَى الَّذِىْ مِنْ عَدُوِّهٖۙதனது எதிரிகளில் உள்ளவனுக்கு எதிராகفَوَكَزَهٗ مُوْسٰىமூஸா அவனை குத்து விட்டார்فَقَضٰىகதையை முடித்து விட்டார்عَلَيْهِ அவனுடையقَالَகூறினார்هٰذَاஇதுمِنْ عَمَلِசெயலில் உள்ளதுالشَّيْطٰنِ ؕஷைத்தானின்اِنَّهٗநிச்சயமாக அவன்عَدُوٌّஎதிரி ஆவான்مُّضِلٌّவழி கெடுக்கின்றவன்مُّبِيْنٌதெளிவான
வ தகலல் மதீனத 'அலா ஹீனீ கFப்லதிம் மின் அஹ்லிஹா Fபவஜத Fபீஹா ரஜு லய்னி யக்ததிலானி ஹாதா மின் ஷீ'அதிஹீ வ ஹாத மின் 'அதுவ்விஹீ Fபஸ்தகாதஹுல் லதீ மின் ஷீ'அதிஹீ 'அலல் லதீ மின் 'அதுவ்விஹீ FபவகZஜஹூ மூஸா Fபகளா 'அலய்ஹி கால ஹாத மின் 'அமலிஷ் ஷய்தானி இன்னஹூ 'அதுவ்வும்ம் முளில்லும் முBபீன்
(ஒரு நாள் மூஸா) மக்கள் அயர்ந்து (தூக்கத்தில் பராமுகமாக) இருந்த போது, நகரத்தில் நுழைந்தார்; அங்கு இரண்டு மனிதர்கள் சண்டையிட்டுக் கொண்டியிருந்ததைக் கண்டார்; ஒருவன் அவர் கூட்டத்தைச் சேர்ந்தவன்; மற்றொருவன் அவர் பகைவன் கூட்டத்தைச் சேர்ந்தவன்; பகைவனுக்கெதிராக உதவி செய்யுமாறு அவர் கூட்டத்தான் கோரினான் - மூஸா அ(ப் பகை)வனை ஒரு குத்துக் குத்தினார்; அவனை முடித்தார்; (இதைக் கண்ட மூஸா): “இது ஷைத்தானுடைய வேலை; நிச்சயமாக அவன் வழி கெடுக்கக்கூடிய பகிரங்கமான விரோதியாவான்” என்று கூறினார்.
மேலும், (தமக்கு என்ன நடக்குமோ என்று மறுநாள்) காலையில் பயத்துடன் கவனித்துக் கொண்டு நகரத்தில் இருந்தபோது, முன் தினம் அவரிடம் உதவி கோரியவன் (மீண்டும்) அவரை (உதவிக்காக) கூச்சலிட்டு அழைத்தான் அதற்கு, மூஸா: “நிச்சயமாக நீ பகிரங்கமான கலகக்காரனாக இருக்கின்றாய்” என்று அவனிடம் கூறினார்.
பின்னர், மூஸா தம்மிருவருக்கும் பகைவனாக இருந்தவனைப் பிடிக்க, நாடியபோது, அவர் இனத்தான் (தன்னையே அவர் பிடிக்க) வருகிறார் என்று எண்ணி) “மூஸாவே! நேற்று ஒரு மனிதனை நீர் கொலை செய்தது போல், என்னையும் கொலை செய்ய நாடுகிறீரா? இப்பூமியில் அக்கிரமம் செய்பவராகவே இருக்க நீர் நாடுகிறீர். மேலும், இணக்கம் ஏற்படுத்துவோரில் (ஒருவராக) இருக்க நீர் நாடவில்லை” என்று கூறினான்.
وَجَآءَஇன்னும் வந்தார்رَجُلٌஓர் ஆடவர்مِّنْ اَقْصَاஇறுதியிலிருந்துالْمَدِيْنَةِநகரத்தின்يَسْعٰىவிரைந்தவராகقَالَகூறினார்يٰمُوْسٰٓىமூஸாவே!اِنَّநிச்சயமாகالْمَلَاَபிரமுகர்கள்يَاْتَمِرُوْنَஆலோசிக்கின்றனர்بِكَஉமக்காகلِيَـقْتُلُوْكَஅவர்கள் உம்மைக் கொல்வதற்குفَاخْرُجْஆகவே, நீர் வெளியேறிவிடும்!اِنِّىْநிச்சயமாக நான்لَـكَஉமக்குمِنَ النّٰصِحِيْنَநன்மையை நாடுபவர்களில் ஒருவன்
வ ஜா'அ ரஜுலும் மின் அக்ஸல் மதீனதி யஸ்'ஆ கால யா மூஸா இன்னல் மல அ யா தமிரூன Bபிக லியக்துலூக Fபக்ருஜ் இன்னீ லக மினன் னாஸிஹீன்
பின்னர், நகரத்தின் ஒரு கோடியிலிருந்து (நன்) மனிதர் ஒருவர் ஓடி வந்து, “மூஸாவே! நிச்சயமாக (இந்நகர்ப்) பிரமுகர்கள் ஒன்று கூடி உம்மைக் கொன்று விட வேண்டுமென ஆலோசனை செய்கிறார்கள்; ஆகவே நீர் (இங்கிருந்து) வெளியேறி விடுவீராக! நிச்சயமாக நாம் உம் நன்மையை நாடுபவர்களில் ஒருவனாவேன்” என்று கூறினார்.
(சிறிது நேரத்திற்குப்) பிறகு அவ்விரு பெண்களில் ஒருவர் நாணத்துடன் நடந்து மூஸாவின் முன் வந்து; “எங்களுக்காக நீங்கள் தண்ணீர் புகட்டியதற்கான கூலியை உங்களுக்கு வழங்குவதற்காக எங்கள் தந்தை உங்களை அழைக்கிறார்” என்று கூறினார்; இவ்வாறாக மூஸா அவரிடம் வந்தபோது தம் வரலாற்றை எடுத்துச் சொன்னார்; அதற்கவர்; “பயப்படாதீர்! அக்கிரமக்கார சமூகத்தாரை விட்டும் நீர் தப்பித்துவிட்டீர்” என்று கூறினார்.
கால இன்னீ உரீது அன் உன்கிஹக இஹ்தBப் னதய்ய ஹாதய்னி 'அலா அன் தா'ஜுரனீ தமானிய ஹிஜஜ்; Fப இன் அத்மம்த 'அஷ்ரன் Fபமின் 'இன்திக வமா உரீது அன் அஷுக்க 'அலய்க்; ஸதஜிதுனீ இன் ஷா'அல் லாஹு மினஸ் ஸாலிஹீன்
(அப்போது அவர் மூஸாவிடம்) கூறினார்: “நீர் எனக்கு எட்டு ஆண்டுகள் வேலை செய்யவேண்டும் என்ற நிபந்தனையின் மீது, என்னுடைய இவ்விரு பெண்களில் ஒருவரை உமக்கு மணமுடித்துக் கொடுக்க நிச்சயமாக நான் நாடுகிறேன் - ஆயினும், நீர் பத்து (ஆண்டுகள்) பூர்த்தி செய்தால், அது உம் விருப்பம்; நான் உமக்கு சிரமத்தை கொடுக்க விரும்பவில்லை. இன்ஷா அல்லாஹ், என்னை நல்லவர்களில் உள்ளவராக காண்பீர்.”
(அதற்கு மூஸா) கூறினார்: “இதுவே எனக்கும் உங்களுக்குமிடையே (ஒப்பந்தமாகும்), இவ்விரு தவணைகளில் நான் எதை நிறைவேற்றினாலும் என் மீது குற்றமில்லை - நாம் பேசிக் கொள்வதற்கு அல்லாஹ்வே சாட்சியாக இருக்கிறான்.
ஆகவே மூஸா (தம்) தவணையை முடித்துக்கொண்டு, தம் குடும்பத்துடன் பயணம் செய்து கொண்டிருந்த போது; “தூர்” (மலையின்) பக்கத்தில் ஒரு நெருப்பைக் கண்டார்; அவர் தம் குடும்பத்தாரிடம் “நீங்கள் (இங்கு சிறிது) தங்குங்கள்; நிச்சயமாக, நான் ஒரு நெருப்பைக் காண்கின்றேன். நான் உங்களுக்கு அதிலிருந்து ஒரு செய்தியையோ, அல்லது நீங்கள் குளிர் காயும் பொருட்டு, ஒரு நெருப்புக் கங்கையோ கொண்டு வருகிறேன்” என்று கூறினார்.
அவர் நெருப்பின் அருகே வந்த போது, (அங்குள்ள) பாக்கியம் பெற்ற அப் பள்ளத்தாக்கிலுள்ள ஓடையின் வலப்பக்கத்தில் (ஒரு) மரத்திலிருந்து: “மூஸாவே! நிச்சயமாக நானே அகிலத்தாருக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்!” என்று கூப்பிடப்பட்டார்.
“உம் கைத்தடியைக் கீழே எறியும்” என்றும் (கட்டளையிடப்பட்டார். அவ்வாறு எறிந்ததும்) அது பாம்பைப் போன்று நெளிவதைக் கண்டு, அவர் திரும்பிப் பார்க்காமல் பின் வாங்கி ஓடினார்; (அப்பொழுது): “மூஸாவே! முன்னோக்கி வாரும்! இன்னும், அஞ்சாதீர்; நீர் அடைக்கலம் பெற்றவர்களில் உள்ளவர்.”
ஆகவே, மூஸா அவர்களிடம் நம்முடைய தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது, அவர்கள்: “இது இட்டுக் கட்டப்பட்ட சூனியமே அன்றி வேறில்லை; இன்னும் நம்முடைய முன்னோர்களான நம் மூதாதையர்களிடத்திலும் இதைக் கேள்விப்பட்டதில்லை” என்று கூறினார்கள்.
வ கால மூஸா ரBப்Bபீ அஃலமு Bபிமன் ஜா'அ Bபில்ஹுதா மின் 'இன்திஹீ வ மன் தகூனு லஹூ 'ஆகிBபதுத் தாரி இன்னஹூ லா யுFப்லிஹுள் ளாலிமூன்
(அப்போது மூஸா) கூறினார்: “அவனிடமிருந்து நேர்வழியுடன் வருபவர் யாரென்றும்; இறுதி(யாக சுவன) வீடு யாருக்காக உள்ளது என்பதையும் என் இறைவன் நன்கறிவான். நிச்சயமாக அக்கிரமம் செய்வோர் வெற்றி பெற மாட்டார்கள்.”
وَقَالَகூறினான்فِرْعَوْنُஃபிர்அவ்ன்يٰۤـاَيُّهَا الْمَلَاُபிரமுகர்களே!مَا عَلِمْتُநான் அறியமாட்டேன்لَـكُمْஉங்களுக்கு (இருப்பதை)مِّنْ اِلٰهٍஒரு கடவுள்غَيْرِىْ ۚஎன்னை அன்றிفَاَوْقِدْஆகவே, நெருப்பூட்டுلِىْஎனக்காகيٰهَامٰنُஹாமானே!عَلَى الطِّيْنِகுழைத்தகளிமண்ணைفَاجْعَلْஉருவாக்குلِّىْஎனக்காகصَرْحًاமுகடுள்ள ஓர் உயரமான கோபுரத்தைلَّعَلِّىْۤ اَطَّلِعُநான் தேடிப்பார்க்க வேண்டும்اِلٰٓى اِلٰهِகடவுளைمُوْسٰى ۙமூஸாவின்وَاِنِّىْஇன்னும் நிச்சயமாக நான்لَاَظُنُّهٗஅவரை கருதுகிறேன்مِنَ الْـكٰذِبِيْنَபொய்யர்களில் (ஒருவராக)
வ கால Fபிர்'அவ்னு யா அய்யுஹல் மல-உ மா 'அலிம்து லகும் மின் இலாஹின் கய்ரீ Fப அவ்கித் லீ யா ஹாமானு 'அலத்தீனி Fபஜ்'அல் லீ ஸர்ஹல் ல'அல்லீ அத்தலி'உ இலா இலாஹி மூஸா வ இன்னீ ல அளுன்னுஹூ மினல் காதிBபீன்
இன்னும் ஃபிர்அவ்ன் சொன்னான்: “பிரமுகர்களே! என்னைத்தவிர உங்களுக்கு வேறெரு நாயன் இருக்கின்றான் என்பதாக நான் அறியவில்லை. ஆதலின், ஹாமானே! களிமண் மீது எனக்காகத் தீயைமூட்டி (செங்கற்கள் செய்து) பிறகு எனக்காக ஓர் (உயரமான) மாளிகையைக் கட்டுவாயாக! (அதன் மேல் ஏறி) நான் மூஸாவின் இறைவனைப் பார்க்க வேண்டும் - மேலும் நிச்சயமாக நான் இவரை பொய்யர்களில் நின்றுமுள்ளவர்” என்றே கருதுகின்றேன்.
இன்னும், முந்தைய தலைமுறையார்களை நாம் அழித்தபின் திடனாக மூஸாவுக்கு(த் தவ்ராத்) வேதத்தைக் கொடுத்தோம் - மனிதர் (சிந்தித்து) உபதேசம் பெறும் பொருட்டு அவர்களுக்கு ஞானப்பிரகாசங்களாகவும், நேர்வழி காட்டியாகவும் அருட் கொடையாகவும் (அது இருந்தது).
மேலும், நாம் மூஸாவுக்குக் கட்டளைகளைக் கடமையாக்கிய சமயம் நீர் (தூர் மலைக்கு) மேற்குத் திசையில் இருக்கவில்லை; (அந்நிகழ்வைப்) பார்ப்பவர்களில் ஒருவராகவும் நீர் இருக்கவில்லை.
وَمَا كُنْتَநீர் இருக்கவில்லைبِجَانِبِஅருகில்الطُّوْرِமலைக்குاِذْ نَادَيْنَاநாம் அழைத்தபோதுوَلٰـكِنْஎனினும்رَّحْمَةًஅருளினால்مِّنْ رَّبِّكَஉமது இறைவனின்لِتُنْذِرَஏனெனில், நீர் எச்சரிக்க வேண்டும்قَوْمًاஒரு மக்களைمَّاۤ اَتٰٮهُمْஅவர்களிடம் வரவில்லைمِّنْ نَّذِيْرٍஎச்சரிப்பாளர் எவரும்مِّنْ قَبْلِكَஉமக்கு முன்னர்لَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَஅவர்கள் நல்லுணர்வு பெறுவதற்காக
வமா குன்த BபிஜானிBபித் தூரி இத் னாதய்னா வ லாகிர் ரஹ்மதம் மிர் ரBப்Bபிக லிதுன்திர கவ்மம் மா அதாஹும் மின் னதீரிம் மின் கBப்லிக ல'அல்லஹும் யததக்கரூன்
இன்னும் நாம் (மூஸாவை) அழைத்தபோது, நீர் தூர் மலையின் பக்கத்தில் இருக்கவுமில்லை; எனினும் எந்த மக்களுக்கு, உமக்கு முன்னால் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் அனுப்பப்படவில்லையோ, அவர்கள் நல்லுபதேசம் பெறும் பொருட்டு அவர்களை அச்சமூட்டி எச்சரிப்பதற்காக உமக்கு உம் இறைவனிடமிருந்து அருட்கொடையாக (இவைக் கூறப்படுகிறது).
Fபலம்மா ஜா'அஹுமுல் ஹக்கு மின் 'இன்தினா காலூ லவ் லா ஊதிய மித்ல மா ஊதியா மூஸா; அவலம் யக்Fபுரூ Bபிமா ஊதிய மூஸா மின் கBப்லு காலூ ஸிஹ்ரானி தளாஹரா வ காலூ இன்னா Bபிகுல்லின் காFபிரூன்
எனினும் (இப்பொழுது) நம்மிடமிருந்து சத்திய(மார்க்க)ம் அவர்களிடம் வந்த போது, “மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டது போன்று இவருக்கு ஏன் கொடுக்கப்படவில்லை” என்று கேட்கிறார்கள்; இதற்கு முன்னர், மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டதையும் அவர்(களின் மூதாதையர்)கள் நிராகரிக்க வில்லையா? இன்னும் அவர்கள் கூறுகிறார்கள்: (திருக் குர்ஆனும், தவ்ராத்தும்) “ஒன்றையொன்று உறுதிப்படுத்தும் இரண்டு சூனிய(மந்திர)ங்களே!” என்று; இன்னும் அவர்கள் கூறுகிறார்கள்: “நிச்சயமாக நாங்கள் (இவை) அனைத்தையும் நிராகரிக்கிறோம்” என்று.
இன்ன காரூன கான மின் கவ்மி மூஸா FபBபகா 'அலய்ஹிம் வ ஆதய்னாஹு மினல் குனூZஜி மா இன்ன மFபாதி ஹஹூ லதனூ'உ Bபில்'உஸ்Bபதி உலில் குவ்வதி இத் கால லஹூ கவ்முஹூ லா தFப்ரஹ் இன்னல் லாஹா லா யுஹிBப்Bபுல் Fபரிஹீன்
நிச்சயமாக, காரூன் மூஸாவின் சமூகத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; எனினும் அவர்கள் மீது அவன் அட்டூழியம் செய்தான்; அவனுக்கு நாம் ஏராளமான பொக்கிஷங்களைக் கொடுத்திருந்தோம் - நிச்சயமாக அவற்றின் சாவிகள் பலமுள்ள ஒரு கூட்டத்தாருக்கும் பளுவாக இருந்தன; அப்பொழுது அவனுடைய கூட்டத்தார் அவனிடம்: “நீ (இதனால் பெருமைகொண்டு) ஆணவம் கொள்ளாதே! அல்லாஹ், நிச்சயமாக (அவ்வாறு) ஆணவம் கொள்பவர்களை நேசிக்கமாட்டான்” என்று கூறினார்கள்.
இன்னும் ஃகாரூனையும், ஃபிர்அவ்னையும், ஹாமானையும் (அழித்தோம்); திடனாக, அவர்களிடம் மூஸா தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தார்; எனினும், (அவற்றை நிராகரித்து) அவர்கள் பூமியில் பெருமையடித்து நின்றார்கள். ஆனால் அவர்கள் (அழிவிலிருந்து) தப்பித்தார்களில்லை.
وَلَقَدْதிட்டவட்டமாகاٰتَيْنَاநாம் கொடுத்தோம்مُوْسَىமூஸாவிற்குالْكِتٰبَவேதத்தைفَلَا تَكُنْஆகவே, நீர் இருக்க வேண்டாம்فِىْ مِرْيَةٍசந்தேகத்தில்مِّنْ لِّقَآٮِٕهٖஅவரை சந்திப்பதில்وَجَعَلْنٰهُஇன்னும் அதை ஆக்கினோம்هُدًىநேர்வழியாகلِّبَنِىْۤ اِسْرَآءِيْلَۚஇஸ்ரவேலர்களுக்கு
நிச்சயமாக நாம் மூஸாவுக்கு (அவ்) வேதத்தைக் கொடுத்தோம். எனவே, அவர் அதைப் பெற்றதைப்பற்றி சந்தேகப்படாதீர்; நாம் இதனை இஸ்ராயீலின் சந்ததிக்கு வழிகாட்டியாகவும் ஆக்கினோம்.
(நபியே! நம் கட்டளைகளை எடுத்துக் கூறுமாறு) நபிமார்(கள் அனைவர்)களிடமும், (சிறப்பாக) உம்மிடமும்; நூஹு, இப்ராஹீம், மூஸா, மர்யமுடைய குமாரர் ஈஸா ஆகியோரிடமும் வாக்குறுதி வாங்கிய போது, மிக்க உறுதியான வாக்குறுதியையே அவர்களிடம் நாம் வாங்கினோம்.