(நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.
எனவே, (வேதனை வரும்போது) ஓர் ஊர் (மக்கள்) நம்பிக்கைக் கொண்டு, அதனுடைய நம்பிக்கை அதற்குப் பயனளித்ததாக இருக்கக் கூடாதா? (அவ்வாறு எந்த ஊரும் இருக்கவில்லை!) யூனுஸின் சமுதாயத்தாரைத் தவிர; அவர்கள் நம்பிக்கை கொண்டபோது, இவ்வுலக வாழ்வில் இழிவுபடுத்தும் வேதனையை அவர்களைவிட்டும் நாம் அகற்றினோம்; சிறிதுகாலம் சுகம் அனுபவிக்க செய்தோம்.
வ தன் னூனி இத் தஹBப முகாளிBபன் Fப ளன்னா அல் லன் னக்திர 'அலய்ஹி Fபனாதா Fபிள் ளுலுமாதி அல் லா இலாஹ இல்லா அன்த ஸுBப்ஹானக இன்னீ குன்து மினள் ளாலிமீன்
இன்னும் (நினைவு கூர்வீராக:) துன்னூன் (யூனுஸ் தம் சமூகத்தவரை விட்டும்) கோபமாக வெளியேறிய போது, (பாவிகள் சமூகத்தை விட்டும் வெளியேறி விட்ட படியால்) அவரை நாம் நெருக்கடியில் ஆக்கமாட்டோம் என்று எண்ணிக் கொண்டார்; எனவே அவர் (மீன் வயிற்றின்) ஆழ்ந்த இருளிலிருந்து “உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்” என்று பிரார்த்தித்தார்.