இணைவைத்தல்
6:136   وَجَعَلُوْا لِلّٰهِ مِمَّا ذَرَاَ مِنَ الْحَـرْثِ وَالْاَنْعَامِ نَصِيْبًا فَقَالُوْا هٰذَا لِلّٰهِ بِزَعْمِهِمْ وَهٰذَا لِشُرَكَآٮِٕنَا‌ ۚ فَمَا كَانَ لِشُرَكَآٮِٕهِمْ فَلَا يَصِلُ اِلَى اللّٰهِ‌ ۚ وَمَا كَانَ لِلّٰهِ فَهُوَ يَصِلُ اِلٰى شُرَكَآٮِٕهِمْ‌ ؕ سَآءَ مَا يَحْكُمُوْنَ‏
6:136. அல்லாஹ் உண்டாக்கிய விளைச்சலிலிருந்தும், கால்நடைகளிலிருந்தும் அல்லாஹ்வுக்கென ஒரு பாகத்தை அவர்கள் ஏற்படுத்தினார்கள்; இன்னும், அவர்களின் எண்ணப்படி இது அல்லாஹ்வுக்கு என்றும், இது எங்களுடைய இணைத்தெய்வங்களுக்கு என்றும் சொல்கிறார்கள். அவர்களுடைய தெய்வங்களுக்கு என இருந்த (பாகத்திலிருந்து) எதுவும் அல்லாஹ்வின்பால் சேர்வதில்லை. அல்லாஹ்வுக்குரிய (பங்கானது) அவர்களின் தெய்வங்களுக்குச் சேரும் என்ற அவர்களின் (இத்)தீர்ப்பானது மிகவும் கெட்டதாகும்.
6:137   وَكَذٰلِكَ زَيَّنَ لِكَثِيْرٍ مِّنَ الْمُشْرِكِيْنَ قَـتْلَ اَوْلَادِهِمْ شُرَكَآؤُهُمْ لِيُرْدُوْهُمْ وَلِيَلْبِسُوْا عَلَيْهِمْ دِيْنَهُمْ‌ ۚ وَلَوْ شَآءَ اللّٰهُ مَا فَعَلُوْهُ ‌ؕ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُوْنَ‏
6:137. இவ்வாறே, இணைவைப்போரில் பெரும்பாலோருக்கு, அவர்களுடைய குழந்தைகளைக் கொலை செய்வதை அவர்களுடைய தெய்வங்கள் அழகாக்கிவைத்துள்ளன; (இணைவைப்பவர்களான) அவர்களை அழிப்பதற்காகவும் அவர்களுடைய மார்க்கத்தைக் குழப்பமாக்குவதற்காகவுமே (இவ்வாறு அழகாக்கிவைத்தன). அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இதைச் செய்திருக்கமாட்டார்கள்; எனவே, (நபியே!) நீர் அவர்களையும், அவர்களுடைய பொய்யான கூற்றுகளையும் விட்டு விலகிவிடுவீராக!
7:195   اَلَهُمْ اَرْجُلٌ يَّمْشُوْنَ بِهَآ اَمْ لَهُمْ اَيْدٍ يَّبْطِشُوْنَ بِهَآ اَمْ لَهُمْ اَعْيُنٌ يُّبْصِرُوْنَ بِهَآ اَمْ لَهُمْ اٰذَانٌ يَّسْمَعُوْنَ بِهَا‌ ؕ قُلِ ادْعُوْا شُرَكَآءَكُمْ ثُمَّ كِيْدُوْنِ فَلَا تُنْظِرُوْنِ‏
7:195. அவர்களுக்கு நடக்கக்கூடிய கால்கள் உண்டா? அல்லது அவர்களுக்குப் பிடிப்பதற்குரிய கைகள் உண்டா? அல்லது அவர்களுக்குப் பார்க்கக்கூடிய கண்கள் உண்டா? அல்லது அவர்களுக்குக் கேட்கக்கூடிய காதுகள் உண்டா? (நபியே!) நீர் கூறும்: "நீங்கள் உங்கள் தெய்வங்களை (எல்லாம்) அழைத்து, எனக்கு(த் தீங்கு செய்திட) சூழ்ச்சி செய்யுங்கள்; (இதில்) எனக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்காதீர்கள்" என்று.
10:34   قُلْ هَلْ مِنْ شُرَكَآٮِٕكُمْ مَّنْ يَّبْدَؤُا الْخَـلْقَ ثُمَّ يُعِيْدُهٗ‌ ؕ قُلِ اللّٰهُ يَـبْدَؤُا الْخَـلْقَ ثُمَّ يُعِيْدُهٗ‌ؕ فَاَنّٰى تُؤْفَكُوْنَ‏
10:34. "உங்களுடைய கூட்டாளிகளில் முதன் முதலில் சிருஷ்டிகளைப் படைப்பவனும், பிறகு அவைகளை மீளவைப்பவனும் இருக்கின்றார்களா?" என்று (நபியே!) நீர் கேட்பீராக! "அல்லாஹ்தான் முதன் முதலில் சிருஷ்டிகளைப் படைக்கிறான்; பிறகு, அவைகளை மீளவைக்கிறான்; நீங்கள் எங்கே திருப்பப்படுகிறீர்கள்?" என்று கூறுவீராக!
10:35   قُلْ هَلْ مِنْ شُرَكَآٮِٕكُمْ مَّنْ يَّهْدِىْۤ اِلَى الْحَـقِّ‌ؕ قُلِ اللّٰهُ يَهْدِىْ لِلْحَقِّ‌ؕ اَفَمَنْ يَّهْدِىْۤ اِلَى الْحَقِّ اَحَقُّ اَنْ يُّتَّبَعَ اَمَّنْ لَّا يَهِدِّىْۤ اِلَّاۤ اَنْ يُّهْدٰى‌ۚ فَمَا لَكُمْ كَيْفَ تَحْكُمُوْنَ‏
10:35. "உங்களுடைய கூட்டாளிகளில் சத்தியத்தின் பால் வழிகாட்டுபவன் உண்டா?" என்று கேட்பீராக; அல்லாஹ்தான் சத்தியத்திற்கு வழிகாட்டுகிறான் என்று கூறுவீராக! சத்தியத்திற்கு வழிகாட்டுபவன் பின்பற்றப்படுவதற்கு தகுதியானவனா? அல்லது வழிகாட்டப்பட்டாலே அன்றி நேர்வழியடையமாட்டானே, அவன் பின்பற்றத் தகுதியானவனா? உங்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? எவ்வாறு தீர்ப்பளிக்கிறீர்கள்?
10:71   وَاتْلُ عَلَيْهِمْ نَبَاَ نُوْحٍ‌ۘ اِذْ قَالَ لِقَوْمِهٖ يٰقَوْمِ اِنْ كَانَ كَبُرَ عَلَيْكُمْ مَّقَامِىْ وَتَذْكِيْرِىْ بِاٰيٰتِ اللّٰهِ فَعَلَى اللّٰهِ تَوَكَّلْتُ فَاَجْمِعُوْۤا اَمْرَكُمْ وَشُرَكَآءَكُمْ ثُمَّ لَا يَكُنْ اَمْرُكُمْ عَلَيْكُمْ غُمَّةً ثُمَّ اقْضُوْۤا اِلَىَّ وَ لَا تُنْظِرُوْنِ‏
10:71. மேலும், (நபியே!) நீர் அவர்களுக்கு நூஹுடைய சரித்திரத்தை ஓதிக்காண்பிப்பீராக! அவர் தம் சமூகத்தாரை நோக்கி, "என் சமூகத்தாரே! நான் (உங்களிடையே) இருப்பதும் நான் (உங்களுக்கு) அல்லாஹ்வின் அத்தாட்சிகளை நினைவூட்டுவதும் உங்களுக்குப் பளுவாக இருக்குமானால் - நான் அல்லாஹ்வையே சார்ந்துள்ளேன்; உங்களுடைய காரியத்தையும் உங்களுடைய இணையாளர்களையும் ஒன்றுகூட்டி முடிவு செய்யுங்கள்; பின்னர், உங்களுடைய அக்காரியம் உங்களுக்கு மறைவாகவும் இருக்க வேண்டாம்; பின்னர், (எனக்கெதிராக நீங்கள் திட்டமிடுவதை) என்னில் நிறைவேற்றுங்கள்; இதில் நீங்கள் எனக்கு அவகாசம் தராதீர்கள்" என்று கூறினார்.
16:27   ثُمَّ يَوْمَ الْقِيٰمَةِ يُخْزِيْهِمْ وَيَقُوْلُ اَيْنَ شُرَكَآءِىَ الَّذِيْنَ كُنْتُمْ تُشَآقُّوْنَ فِيْهِمْ‌ؕ قَالَ الَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ اِنَّ الْخِزْىَ الْيَوْمَ وَالسُّوْۤءَ عَلَى الْكٰفِرِيْنَۙ‏
16:27. பின்னர், மறுமைநாளில் அவன் அவர்களை இழிவுபடுத்துவான்: "எவர்களை நீங்கள் எனக்கு இணையா(ன தெய்வங்களா)க்கி, அவர்களைப் பற்றி (நம்பிக்கையாளர்களிடம்) தர்க்கம் செய்து கொண்டிருந்தீர்களோ, அவர்கள் எங்கே?" என (அவர்களிடம்) கேட்பான்; எவர்களுக்கு அறிவு கொடுக்கப்பட்டதோ அவர்கள் "நிச்சயமாக இன்று இழிவும் வேதனையும் நிராகரிப்போரின் மீதுதான்" என்று கூறுவார்கள்.
18:52   وَيَوْمَ يَقُوْلُ نَادُوْا شُرَكَآءِىَ الَّذِيْنَ زَعَمْتُمْ فَدَعَوْهُمْ فَلَمْ يَسْتَجِيْبُوْا لَهُمْ وَجَعَلْنَا بَيْنَهُمْ مَّوْبِقًا‏
18:52. "எனக்கு இணையானவர்களென எவர்களை நீங்கள் எண்ணிக்கொண்டிருந்தீர்களோ அவர்களை நீங்கள் அழையுங்கள்" என்று அவன் கூறக்கூடிய நாளில் இவர்கள் அவர்களை அழைப்பார்கள்; ஆனால், அவர்கள் இவர்களுக்குப் பதிலளிக்கமாட்டார்கள்; இன்னும், அவர்களுக்கிடையே அழிவிடத்தை நாம் ஏற்படுத்துவோம்.
28:64   وَقِيْلَ ادْعُوْا شُرَكَآءَكُمْ فَدَعَوْهُمْ فَلَمْ يَسْتَجِيْبُوْا لَهُمْ وَرَاَوُا الْعَذَابَ‌ۚ لَوْ اَنَّهُمْ كَانُوْا يَهْتَدُوْنَ‏
28:64. "உங்கள் இணை(த் தெய்வங்)களை அழையுங்கள்" என்று (அவர்களுக்குச்) சொல்லப்படும்: அவைகளை இவர்கள் அழைப்பார்கள், ஆனால் அவைகள் இவர்களுக்குப் பதிலளிக்கமாட்டா; மேலும், அவர்கள் வேதனையைக் காண்பார்கள்; அவர்கள் நேர்வழியில் சென்றிருந்தால் (இந்நிலைக்கு ஆளாகியிருக்கமாட்டார்கள்).
28:74   وَيَوْمَ يُنَادِيْهِمْ فَيَـقُوْلُ اَيْنَ شُرَكَآءِىَ الَّذِيْنَ كُنْتُمْ تَزْعُمُوْنَ‏
28:74. இன்னும், அவன் (அல்லாஹ்) அவர்களை அழைக்கும் நாளில்: "எனக்கு இணையானவர்கள் என்று நீங்கள் எண்ணியிருந்தீர்களே அவர்கள் எங்கே?" என்று கேட்பான்.
30:13   وَلَمْ يَكُنْ لَّهُمْ مِّنْ شُرَكَآٮِٕهِمْ شُفَعٰٓؤُا وَكَانُوْا بِشُرَكَآٮِٕهِمْ كٰفِرِيْنَ‏
30:13. இன்னும், அவர்களுடைய இணையாளர்களிலிருந்து பரிந்துரைப்பவர்கள் எவரும் (மறுமையில்) அவர்களுக்கு இருக்கமாட்டார்கள்; மேலும், அவர்கள் தாங்கள் இணையாக்கியவர்களை நிராகரிப்போராகிவிடுவார்கள்.
35:14   اِنْ تَدْعُوْهُمْ لَا يَسْمَعُوْا دُعَآءَكُمْ‌ ۚ وَلَوْ سَمِعُوْا مَا اسْتَجَابُوْا لَـكُمْ ؕ وَيَوْمَ الْقِيٰمَةِ يَكْفُرُوْنَ بِشِرْكِكُمْ ؕ وَلَا يُـنَـبِّـئُكَ مِثْلُ خَبِيْرٍ‏
35:14. நீங்கள் அவர்களைப் பிரார்த்தித்து அழைத்தாலும் அவர்கள் உங்கள் பிரார்த்தனையை (அழைப்பை)ச் செவியேற்கமாட்டார்கள்; செவியேற்றாலும் கூட உங்களுக்குப் பதில் அளிக்கமாட்டார்கள்; மறுமைநாளில் நீங்கள் இணைவைத்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவார்கள்; யாவற்றையும் நன்கு அறிபவனைப் போன்று (அவர்கள்) எவருமே உமக்கு அறிவிக்க மாட்டார்.
35:40   قُلْ اَرَءَيْتُمْ شُرَكَآءَكُمُ الَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ؕ اَرُوْنِىْ مَاذَا خَلَقُوْا مِنَ الْاَرْضِ اَمْ لَهُمْ شِرْكٌ فِى السَّمٰوٰتِ‌ ۚ اَمْ اٰتَيْنٰهُمْ كِتٰبًا فَهُمْ عَلٰى بَيِّنَتٍ مِّنْهُ ۚ بَلْ اِنْ يَّعِدُ الظّٰلِمُوْنَ بَعْضُهُمْ بَعْضًا اِلَّا غُرُوْرًا‏
35:40. "அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்தித்து அழைக்கும் உங்கள் இணையாளர்களை நீங்கள் கவனித்தீர்களா? 'அவர்கள் பூமியில் எதைப் படைத்திருக்கின்றனர்?' என்பதை எனக்குக் காண்பியுங்கள்; அல்லது, வானங்களி(ன் படைப்பி)ல் அவர்களுக்கு ஏதேனும் கூட்டுண்டா?" என்று (நபியே!) நீர் கேட்பீராக! "அல்லது அவர்கள் அதிலிருந்து தெளிவான ஆதாரத்தின் மீது இருக்கக்கூடிய ஏதேனும் ஒரு வேதத்தை நாம் அவர்களுக்கு அளித்திருக்கிறோமா? எதுவுமில்லை! அநியாயக்காரர்கள், அவர்களில் சிலர் சிலருக்கு வாக்களிப்பதெல்லாம் ஏமாற்றேயன்றி வேறில்லை."
40:12   ذٰ لِكُمْ بِاَنَّهٗۤ اِذَا دُعِىَ اللّٰهُ وَحْدَهٗ كَفَرْتُمْ ۚ وَاِنْ يُّشْرَكْ بِهٖ تُؤْمِنُوْا ؕ فَالْحُكْمُ لِلّٰهِ الْعَلِىِّ الْكَبِيْرِ‏
40:12. (பதில் கூறப்படும்:) "அதற்குக் காரணம் அல்லாஹ் ஒருவனே (வணக்கத்திற்குரியவன்; எனவே, அவனையே வணங்குங்கள்) என்று அழைக்கப்பட்டபோது, நீங்கள் நிராகரித்தீர்கள், ஆனால், அவனுக்கு (எதையும்) இணையாக்கப்பட்டபோது, (அதன் மீது) நீங்கள் நம்பிக்கை கொண்டீர்கள்; ஆகவே, இத்தீர்ப்பு மிக்க மேலானவனும், மிக்க பெரியவனுமான அல்லாஹ்வுக்கே உரியது."
41:47   اِلَيْهِ يُرَدُّ عِلْمُ السَّاعَةِ‌ؕ وَمَا تَخْرُجُ مِنْ ثَمَرٰتٍ مِّنْ اَكْمَامِهَا وَمَا تَحْمِلُ مِنْ اُنْثٰى وَلَا تَضَعُ اِلَّا بِعِلْمِهٖ‌ؕ وَيَوْمَ يُنَادِيْهِمْ اَيْنَ شُرَكَآءِىْۙ قَالُـوْۤا اٰذَنّٰكَۙ مَا مِنَّا مِنْ شَهِيْدٍ‌ۚ‏
41:47. மறுமைநாள் பற்றிய ஞானம் அவன் பக்கமே திருப்பப்படும்; இன்னும், அவன் அறியாமல் பழங்களில் எதுவும் அவற்றின் பாளைகளிலிருந்து வெளிப்படுவதில்லை; (அவன் அறியாது) எந்தப் பெண்ணும் கருக்கொள்வதுமில்லை; பிரசவிப்பதும் இல்லை; (இறுதித் தீர்ப்புக்கான) அந்நாளில் அவன் "எனக்கு இணையாக்கப்பட்டவை எங்கே?" என்று அவர்களிடம் கேட்பான்; அப்போது அவர்கள் "எங்களில் எவருமே (அவ்வாறு) சாட்சி கூறுபவர் இல்லை என்று நாங்கள் உனக்கு அறிவித்து விடுகிறோம்" என்று கூறுவார்கள்.
46:4   قُلْ اَرَءَيْتُمْ مَّا تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ اَرُوْنِىْ مَاذَا خَلَقُوْا مِنَ الْاَرْضِ اَمْ لَهُمْ شِرْكٌ فِى السَّمٰوٰتِ‌ؕ اِیْتُوْنِىْ بِكِتٰبٍ مِّنْ قَبْلِ هٰذَاۤ اَوْ اَثٰرَةٍ مِّنْ عِلْمٍ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏
46:4. நீங்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை கவனித்தீர்களா? பூமியிலுள்ள எதை அவை படைத்துள்ளன? அல்லது அவற்றுக்கு வானங்களில் ஏதாவது பங்கு உண்டா? என்பதை எனக்குக் காண்பியுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இதற்கு முன்னேயுள்ள ஒரு வேதத்தையோ அல்லது (முன்னோர்களின்) அறிவில் மிஞ்சிய ஏதேனும் பகுதியையோ (உங்கள் கூற்றுக்கு ஆதாரமாக) என்னிடம் கொண்டு வாருங்கள்!" என்று (நபியே!) நீர் கூறுவீராக!
68:41   اَمْ لَهُمْ شُرَكَآءُ ۛۚ فَلْيَاْتُوْا بِشُرَكَآٮِٕهِمْ اِنْ كَانُوْا صٰدِقِيْنَ‏
68:41. அல்லது, (பொறுப்பேற்க) அவர்களுக்கு இணைவைக்கும் கூட்டாளிகள்தாம் இருக்கின்றார்களா? அவ்வாறாயின், அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களுடைய கூட்டாளிகளைக் கொண்டு வரட்டும்.