இதயம்
2:10 فِىْ قُلُوْبِهِمْ مَّرَضٌۙ فَزَادَهُمُ اللّٰهُ مَرَضًا ۚ وَّلَهُمْ عَذَابٌ اَلِيْمٌۙۢ بِمَا كَانُوْا يَكْذِبُوْنَ
2:10. அவர்களுடைய இதயங்களில் ஒரு நோயுள்ளது; அல்லாஹ் (அந்த) நோயை அவர்களுக்கு இன்னும் அதிகமாக்கிவிட்டான்; மேலும், அவர்கள் பொய் சொல்லும் காரணத்தினால் அவர்களுக்குத் துன்பந்தரும் வேதனையுமுண்டு.
2:74 ثُمَّ قَسَتْ قُلُوْبُكُمْ مِّنْۢ بَعْدِ ذٰلِكَ فَهِىَ كَالْحِجَارَةِ اَوْ اَشَدُّ قَسْوَةً ؕ وَاِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْاَنْهٰرُؕ وَاِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَآءُؕ وَاِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللّٰهِؕ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ
2:74. இதன் பின்னரும் உங்கள் இதயங்கள் இறுகிவிட்டன; அவை கற்பாறையைப் போல் ஆயின; அல்லது, (அதை விடவும்) அதிகக் கடினமாயின; (ஏனெனில்,) திடமாகக் கற்பாறைகள் சிலவற்றிலிருந்து ஆறுகள் ஒலித்தோடுவதுண்டு; இன்னும், சில பிளவுபட்டுத் திடமாக அவற்றிலிருந்து தண்ணீர் வெளிப்படக்கூடியதுமுண்டு; இன்னும், திடமாக அல்லாஹ்வின் மீதுள்ள அச்சத்தால் சில (கற்பாறைகள்) உருண்டு விழக்கூடியவையும் உண்டு; மேலும், அல்லாஹ் நீங்கள் செய்து வருவது பற்றிக் கவனிக்காமல் இல்லை.
2:87 وَ لَقَدْ اٰتَيْنَا مُوْسَى الْكِتٰبَ وَقَفَّيْنَا مِنْۢ بَعْدِهٖ بِالرُّسُلِ وَاٰتَيْنَا عِيْسَى ابْنَ مَرْيَمَ الْبَيِّنٰتِ وَاَيَّدْنٰهُ بِرُوْحِ الْقُدُسِؕ اَفَكُلَّمَا جَآءَكُمْ رَسُوْلٌۢ بِمَا لَا تَهْوٰٓى اَنْفُسُكُمُ اسْتَكْبَرْتُمْۚ فَفَرِيْقًا كَذَّبْتُمْ وَفَرِيْقًا تَقْتُلُوْنَ
2:87. மேலும், நாம் மூஸாவுக்கு நிச்சயமாக வேதத்தைக் கொடுத்தோம்; அவருக்குப் பின் தொடர்ச்சியாகத் தூதர்களை நாம் அனுப்பினோம்; இன்னும், மர்யமின் குமாரர் ஈஸாவுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்து, ரூஹுல் குதுஸ் (என்னும் தூய ஆத்மாவான ஜிப்ரீல்) மூலம் அவரை நாம் பலப்படுத்தினோம்; உங்கள் மனம் விரும்பாததை (நம்) தூதர் உங்களிடம் கொண்டு வந்தபோதெல்லாம், நீங்கள் கர்வம் கொள்ளவில்லையா? சிலரை நீங்கள் பொய்ப்பித்தீர்கள்; சிலரைக் கொன்றீர்கள்.
2:88 وَقَالُوْا قُلُوْبُنَا غُلْفٌؕ بَل لَّعَنَهُمُ اللّٰهُ بِكُفْرِهِمْ فَقَلِيْلًا مَّا يُؤْمِنُوْنَ
2:88. இன்னும், அவர்கள் (யூதர்கள்) "எங்களுடைய இதயங்கள் திரையிடப்பட்டுள்ளன" என்று கூறுகிறார்கள்; ஆனால், அவர்களுடைய நிராகரிப்பின் காரணத்தால், அல்லாஹ் அவர்களைச் சபித்துவிட்டான்; ஆகவே, அவர்கள் சொற்பமாகவே நம்பிக்கை கொள்வார்கள்.
2:93 وَاِذْ اَخَذْنَا مِيْثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَکُمُ الطُّوْرَ ؕ خُذُوْا مَآ اٰتَيْنٰکُمْ بِقُوَّةٍ وَّاسْمَعُوْا ؕ قَالُوْا سَمِعْنَا وَعَصَيْنَا وَاُشْرِبُوْا فِىْ قُلُوْبِهِمُ الْعِجْلَ بِکُفْرِهِمْ ؕ قُلْ بِئْسَمَا يَاْمُرُکُمْ بِهٖۤ اِيْمَانُكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ
2:93. தூர் மலையை உங்கள் மேல் உயர்த்தி நாம் உங்களுக்குக் கொடுத்த (தவ்ராத்)தை உறுதியுடன் பற்றிக்கொள்ளுங்கள்; (அதற்குச்) செவிச்சாயுங்கள் என்று உங்களிடம் நாம் வாக்குறுதி வாங்கினோம்; (அதற்கு அவர்கள்) "நாங்கள் செவியேற்றோம்; மேலும் (அதற்கு) மாறு செய்தோம்" என்று கூறினார்கள்; மேலும், அவர்கள் நிராகரித்த காரணத்தினால் அவர்களுடைய இதயங்களில் காளைக்கன்றி(ன் அன்பி)னை அவர்கள் புகட்டப்பட்டிருந்தார்கள்; "நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், உங்களுடைய நம்பிக்கை எதை கட்டளையிடுகிறதோ அது மிகவும் கெட்டது" என்று (நபியே!) நீர் கூறும்.
2:118 وَقَالَ الَّذِيْنَ لَا يَعْلَمُوْنَ لَوْلَا يُكَلِّمُنَا اللّٰهُ اَوْ تَاْتِيْنَآ اٰيَةٌ ؕ كَذٰلِكَ قَالَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ مِّثْلَ قَوْلِهِمْؕ تَشَابَهَتْ قُلُوْبُهُمْؕ قَدْ بَيَّنَّا الْاٰيٰتِ لِقَوْمٍ يُّوْقِنُوْنَ
2:118. இன்னும், அறியாதவர்கள் கூறுகிறார்கள்: "அல்லாஹ் ஏன் நம்மிடம் பேசவில்லை? மேலும், நமக்கு ஏன் அத்தாட்சி வரவில்லை?" என்று. இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் இப்படியே - இவர்களின் சொற்களைப் போலவே - தான் கூறினார்கள்; இவர்களின் இதயங்கள் (அவர்களுடைய இதயங்களுக்கு) ஒப்பாகி விட்டன; உறுதியுடைய மக்களுக்கு (நம்) அத்தாட்சிகளை நாம் நிச்சயமாகத் தெளிவாய் விவரித்துள்ளோம்.
2:197 اَلْحَجُّ اَشْهُرٌ مَّعْلُوْمٰتٌ ۚ فَمَنْ فَرَضَ فِيْهِنَّ الْحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوْقَۙ وَلَا جِدَالَ فِى الْحَجِّ ؕ وَمَا تَفْعَلُوْا مِنْ خَيْرٍ يَّعْلَمْهُ اللّٰهُ ؕؔ وَتَزَوَّدُوْا فَاِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوٰى وَاتَّقُوْنِ يٰٓاُولِى الْاَلْبَابِ
2:197. ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை (தம்மீது) கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜி(ன் காலத்தி)ல் உடலுறவு கொள்ளுதல், கெட்டவார்த்தைகள் பேசுதல், சச்சரவு செய்தல் கூடாது; நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அதனை அல்லாஹ் அறிந்தவனாக இருக்கிறான்; மேலும், (ஹஜ்ஜுக்குத் தேவையானவற்றை) சித்தப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகச்சிறந்தது இறையச்சமே ஆகும்; எனவே அறிவுடையோரே! என்னையே பயந்துகொள்ளுங்கள்.
2:225 لَا يُؤَاخِذُكُمُ اللّٰهُ بِاللَّغْوِ فِىْٓ اَيْمَانِكُمْ وَلٰـكِنْ يُّؤَاخِذُكُمْ بِمَا كَسَبَتْ قُلُوْبُكُمْؕ وَاللّٰهُ غَفُوْرٌ حَلِيْمٌ
2:225. உங்களுடைய சத்தியங்களில் வீணானவற்றிற்காக அல்லாஹ் உங்களை(க் குற்றம்) பிடிக்க மாட்டான்; ஆனால், உங்களுடைய இதயங்கள் (வேண்டுமென்றே) சம்பாதித்துக்கொண்டதைப் பற்றி உங்களை(க் குற்றம்) பிடிப்பான்; இன்னும், அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க பொறுமை உடையோனுமாகவும் இருக்கின்றான்.
2:260 وَاِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّ اَرِنِىْ كَيْفَ تُحْىِ الْمَوْتٰى ؕ قَالَ اَوَلَمْ تُؤْمِنْؕ قَالَ بَلٰى وَلٰـكِنْ لِّيَطْمَٮِٕنَّ قَلْبِىْؕ قَالَ فَخُذْ اَرْبَعَةً مِّنَ الطَّيْرِ فَصُرْهُنَّ اِلَيْكَ ثُمَّ اجْعَلْ عَلٰى كُلِّ جَبَلٍ مِّنْهُنَّ جُزْءًا ثُمَّ ادْعُهُنَّ يَاْتِيْنَكَ سَعْيًا ؕ وَاعْلَمْ اَنَّ اللّٰهَ عَزِيْزٌ حَكِيْمٌ
2:260. இன்னும், இப்ராஹீம்: "என் இறைவா! இறந்தவர்களை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காண்பிப்பாயாக!" என வேண்டியபோது, அவன் "நீர் (இதை) நம்பவில்லையா?" எனக் கேட்டான்; "அவ்வாறல்ல! (நான் நம்புகிறேன்); ஆனால், என் இதயம் அமைதி பெறுவதற்காக (இவ்வாறு கேட்கிறேன்)" எனக் கூறினார்: "(அப்படியாயின்,) பறவைகளிலிருந்து நான்கைப் பிடித்து, அவற்றைத் துண்டு துண்டாக வெட்டி உம்மிடம் வைத்துக்கொள்ளும்; பின்னர், அவற்றின் ஒவ்வொரு பாகத்தையும் மலையின் மீது வைத்துவிடும்; பின், அவற்றைக் கூப்பிடும்; அவை உம்மிடம் வேகமாய் வரும்; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், ஞானம் மிக்கவன் என்பதை அறிந்து கொள்ளும்" என்று (அல்லாஹ்) கூறினான்.
2:283 وَاِنْ كُنْتُمْ عَلٰى سَفَرٍ وَّلَمْ تَجِدُوْا كَاتِبًا فَرِهٰنٌ مَّقْبُوْضَةٌ ؕ فَاِنْ اَمِنَ بَعْضُكُمْ بَعْضًا فَلْيُؤَدِّ الَّذِى اؤْتُمِنَ اَمَانَـتَهٗ وَلْيَتَّقِ اللّٰهَ رَبَّهٗؕ وَلَا تَكْتُمُوا الشَّهَادَةَ ؕ وَمَنْ يَّكْتُمْهَا فَاِنَّهٗۤ اٰثِمٌ قَلْبُهٗؕ وَ اللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ عَلِيْمٌ
2:283. இன்னும், நீங்கள் பயணத்திலிருந்து, (அச்சமயம்) எழுதுபவனை நீங்கள் பெற்றுக் கொள்ளாவிட்டால், (கடன் பத்திரத்திற்குப் பதிலாக கடன் கொடுத்தவன்) அடமானப் பொருளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்; உங்களில் ஒருவர் மற்றவரை நம்பினால் (இவ்வாறு ஒரு பொருளைக் காப்பாக வைத்தால்,) நம்பப்பட்டவன் தன்னிடமுள்ள அமானிதத்தை (ஒழுங்காக) நிறைவேற்றட்டும்; அவன் தன் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளட்டும்; அன்றியும், நீங்கள் சாட்சியத்தை மறைக்க வேண்டாம் - எவன் ஒருவன் அதை மறைக்கின்றானோ நிச்சயமாக அவனுடைய இதயம் பாவத்திற்குள்ளாகிறது - இன்னும், நீங்கள் செய்வதையெல்லாம் அல்லாஹ் நன்கறிவான்.
3:7 هُوَ الَّذِىْۤ اَنْزَلَ عَلَيْكَ الْكِتٰبَ مِنْهُ اٰيٰتٌ مُّحْكَمٰتٌ هُنَّ اُمُّ الْكِتٰبِ وَاُخَرُ مُتَشٰبِهٰتٌؕ فَاَمَّا الَّذِيْنَ فِىْ قُلُوْبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُوْنَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَآءَ الْفِتْنَةِ وَابْتِغَآءَ تَاْوِيْلِهٖۚؔ وَمَا يَعْلَمُ تَاْوِيْلَهٗۤ اِلَّا اللّٰهُ ؔۘ وَ الرّٰسِخُوْنَ فِى الْعِلْمِ يَقُوْلُوْنَ اٰمَنَّا بِهٖۙ كُلٌّ مِّنْ عِنْدِ رَبِّنَا ۚ وَمَا يَذَّكَّرُ اِلَّاۤ اُولُوا الْاَلْبَابِ
3:7. அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான்; இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன; இவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும்; மற்றவை பல பொருட்களைக் கொண்டவையாகும்; ஆகவே, எவர்களுடைய உள்ளங்களில் சறுக்குதல் இருக்கிறதோ, அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவும், அதனில் (தாம் விரும்பும்) விளக்கத்தைத் தேடுவதற்காகவும் அதிலிருந்து பல பொருட்கள் கொண்டவைகளையே பின்பற்றுகின்றனர்; அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள்: கல்வியில் உறுதிப்பாடு உடையவர்களோ (அதன் கருத்து, தங்களுக்கு பூரணமாக விளங்காவிடினும்,) "இதனையும் நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம்; (இவ்விருவகை வசனங்கள்) ஒவ்வொன்றும் எங்கள் இறைவனிடமிருந்து உள்ளவைதாம்!" என்று அவர்கள் கூறுவார்கள்; அறிவுடையோரைத் தவிர (மற்றவர்கள் இதைக்கொண்டு) உபதேசம் பெறமாட்டார்கள்.
3:8 رَبَّنَا لَا تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ اِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً ۚ اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ
3:8. "எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர்வழி காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) சறுகிவிடுமாறு செய்துவிடாதே! இன்னும், நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு அருளை வழங்குவாயாக! நிச்சயமாக நீயே பெருங்கொடையாளியாவாய்!" (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்).
3:103 وَاعْتَصِمُوْا بِحَبْلِ اللّٰهِ جَمِيْعًا وَّلَا تَفَرَّقُوْا وَاذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَيْكُمْ اِذْ كُنْتُمْ اَعْدَآءً فَاَ لَّفَ بَيْنَ قُلُوْبِكُمْ فَاَصْبَحْتُمْ بِنِعْمَتِهٖۤ اِخْوَانًا ۚ وَكُنْتُمْ عَلٰى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَاَنْقَذَكُمْ مِّنْهَا ؕ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمْ اٰيٰتِهٖ لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ
3:103. இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்: அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த அருட்கொடையை நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள்: உங்கள் இதயங்களுக்கிடையே அன்பை ஏற்படுத்தினான்; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக்குழியின் விளிம்பின் மீது இருந்தீர்கள்; அதிலிருந்தும் அவன் உங்களைக் காப்பாற்றினான்; நீங்கள் நேர்வழி பெறும் பொருட்டு, அல்லாஹ் இவ்வாறு தன் வசனங்களை உங்களுக்குத் தெளிவாக்குகின்றான்.
3:126 وَمَا جَعَلَهُ اللّٰهُ اِلَّا بُشْرٰى لَـكُمْ وَلِتَطْمَٮِٕنَّ قُلُوْبُكُمْ بِهٖؕ وَمَا النَّصْرُ اِلَّا مِنْ عِنْدِ اللّٰهِ الْعَزِيْزِ الْحَكِيْمِۙ
3:126. உங்களுக்கு ஒரு நற்செய்தியாகவும், உங்கள் இதயங்கள் இதன் மூலம் அமைதி பெறுவதற்காகவுமேயன்றி அல்லாஹ் அதை ஆக்கவில்லை; மிகைத்தவனும், ஞானமிக்கவனுமாகிய அல்லாஹ்விடத்திலல்லாமல் வேறு உதவி இல்லை.
3:151 سَنُلْقِىْ فِىْ قُلُوْبِ الَّذِيْنَ كَفَرُوا الرُّعْبَ بِمَاۤ اَشْرَكُوْا بِاللّٰهِ مَا لَمْ يُنَزِّلْ بِهٖ سُلْطٰنًا ۚ وَمَاْوٰٮهُمُ النَّارُؕ وَ بِئْسَ مَثْوَى الظّٰلِمِيْنَ
3:151. விரைவிலேயே நிராகரிப்பவர்களின் இதயங்களில் திகிலை உண்டாக்குவோம்; ஏனெனில், (அல்லாஹ்) எவ்விதமான ஆதாரமும் இறக்கிவைக்காமலிருக்க, அவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைத்தார்கள்; தவிர, அவர்கள் தங்குமிடம் நரகம்தான்; அக்கிரமக்காரர்கள் தங்குமிடம் மிகவும் கெட்டது.
3:154 ثُمَّ اَنْزَلَ عَلَيْكُمْ مِّنْۢ بَعْدِ الْغَمِّ اَمَنَةً نُّعَاسًا يَّغْشٰى طَآٮِٕفَةً مِّنْكُمْۙ وَطَآٮِٕفَةٌ قَدْ اَهَمَّتْهُمْ اَنْفُسُهُمْ يَظُنُّوْنَ بِاللّٰهِ غَيْرَ الْحَـقِّ ظَنَّ الْجَـاهِلِيَّةِؕ يَقُوْلُوْنَ هَلْ لَّنَا مِنَ الْاَمْرِ مِنْ شَىْءٍؕ قُلْ اِنَّ الْاَمْرَ كُلَّهٗ لِلّٰهِؕ يُخْفُوْنَ فِىْۤ اَنْفُسِهِمْ مَّا لَا يُبْدُوْنَ لَكَؕ يَقُوْلُوْنَ لَوْ كَانَ لَنَا مِنَ الْاَمْرِ شَىْءٌ مَّا قُتِلْنَا هٰهُنَا ؕ قُلْ لَّوْ كُنْتُمْ فِىْ بُيُوْتِكُمْ لَبَرَزَ الَّذِيْنَ كُتِبَ عَلَيْهِمُ الْقَتْلُ اِلٰى مَضَاجِعِهِمْۚ وَلِيَبْتَلِىَ اللّٰهُ مَا فِىْ صُدُوْرِكُمْ وَلِيُمَحِّصَ مَا فِىْ قُلُوْبِكُمْؕ وَاللّٰهُ عَلِيْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ
3:154. பிறகு, அத்துக்கத்திற்குப் பின் அவன் உங்களுக்கு அமைதி அளிப்பதற்காக, சிறு தூக்கத்தை இறக்கிவைத்தான்; உங்களில் ஒரு பிரிவினரை அது சூழ்ந்துகொண்டது; மற்றொரு கூட்டத்தினரோ - அவர்களுடைய மனங்கள் அவர்களுக்கு கவலையை உண்டு பண்ணிவிட்டன; அவர்கள் அறியாமைக்கால எண்ணம் போன்று, உண்மைக்கு மாறாக அல்லாஹ்வைப் பற்றி சந்தேகம் கொள்ளலாயினர்; (அதனால்,) அவர்கள் கூறினார்கள்: "இ(ப்போர்)க் காரியத்தில் நமக்கு சாதகமாக ஏதேனும் உண்டா?" (என்று, அதற்கு) "நிச்சயமாக இக்காரியம் முழுவதும் அல்லாஹ்வுக்கே உரியது" என்று (நபியே!) நீர் கூறுவீராக! அவர்கள் உம்மிடம் வெளிப்படையாகக் கூற முடியாத ஒன்றைத் தம் நெஞ்சங்களில் மறைத்துவைத்திருக்கின்றனர்; அவர்கள் (தமக்குள்) கூறிக்கொள்கிறார்கள்: "இக்காரியத்தில் நமக்கு ஏதேனும் சாதகமாக இருந்திருந்தால், நாம் இங்கு கொல்லப்பட்டு இருக்கமாட்டோம்!" "நீங்கள் உங்கள் வீடுகளில் இருந்திருந்தாலும், எவர் விஷயத்தில் கொல்லப்படுவது விதிக்கப்பட்டுவிட்டதோ அவர்கள் தாம் கொல்லப்படும் இடத்திற்கு வந்தே இருப்பார்கள்!" என்று (நபியே) நீர் கூறும்; (இவ்வாறு ஏற்பட்டது) உங்கள் நெஞ்சங்களிலுள்ளவற்றை அல்லாஹ் சோதிப்பதற்காகவும், உங்கள் இதயங்களில் உள்ளவற்றை (அகற்றிச்) சுத்தப்படுத்துவதற்காகவும் (ஆகும்); இன்னும், அல்லாஹ் உள்ளங்களில் உள்ளவற்றை அறிபவன்.
3:156 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَكُوْنُوْا كَالَّذِيْنَ كَفَرُوْا وَقَالُوْا لِاِخْوَانِهِمْ اِذَا ضَرَبُوْا فِى الْاَرْضِ اَوْ كَانُوْا غُزًّى لَّوْ كَانُوْا عِنْدَنَا مَا مَاتُوْا وَمَا قُتِلُوْا ۚ لِيَجْعَلَ اللّٰهُ ذٰ لِكَ حَسْرَةً فِىْ قُلُوْبِهِمْؕ وَاللّٰهُ يُحْىٖ وَيُمِيْتُؕ وَ اللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ
3:156. நம்பிக்கையாளர்களே! நீங்கள் நிராகரிப்போரைப் போன்று ஆகிவிடாதீர்கள்; பூமியில் பயணம் செய்தோ அல்லது போர் வீரர்களாகியோ (மரணித்துப்) போய்விட்ட தம் சகோதரர்களைப் பற்றி (அந்நிராகரிப்போர்) கூறுகின்றனர்: "அவர்கள் நம்முடனே இருந்திருந்தால் இறந்திருக்கவும் மாட்டார்கள்; கொல்லப்பட்டிருக்கவும் மாட்டார்கள்" என்று. ஆனால், அல்லாஹ் அவர்கள் மனதில் கவலையை உண்டாக்குவதற்காகவே (இவ்வாறு செய்கின்றான்). மேலும், அல்லாஹ்வே உயிர்ப்பிக்கிறான்; அவனே மரணிக்கச் செய்கிறான். இன்னும், அல்லாஹ் நீங்கள் செய்பவை அனைத்தையும் பார்ப்பவனாக இருக்கின்றான்.
3:159 فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللّٰهِ لِنْتَ لَهُمْۚ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيْظَ الْقَلْبِ لَانْفَضُّوْا مِنْ حَوْلِكَ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِى الْاَمْرِۚ فَاِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللّٰهِؕ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُتَوَكِّلِيْنَ
3:159. அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே, நீர் (முஹம்மதே!) அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்துகொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின உள்ளமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம்மைவிட்டும் ஓடிப்போயிருப்பார்கள்; எனவே, அவர்களின் (பிழைகளை) மன்னிப்பீராக! அவ்வாறே, அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக! மேலும், சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்வீராக! பின்னர், (அவை பற்றி) நீர் உறுதியான முடிவு செய்துவிட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! நிச்சயமாக அல்லாஹ், (தன்னையே) சார்ந்திருப்போரை நேசிக்கின்றான்.
3:167 وَلِيَعْلَمَ الَّذِيْنَ نَافَقُوْا ۖۚ وَقِيْلَ لَهُمْ تَعَالَوْا قَاتِلُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ اَوِ ادْفَعُوْا ۚ قَالُوْا لَوْ نَعْلَمُ قِتَالًا لَّا تَّبَعْنٰكُمْؕ هُمْ لِلْكُفْرِ يَوْمَٮِٕذٍ اَقْرَبُ مِنْهُمْ لِلْاِيْمَانِۚ يَقُوْلُوْنَ بِاَفْوَاهِهِمْ مَّا لَيْسَ فِىْ قُلُوْبِهِمْؕ وَاللّٰهُ اَعْلَمُ بِمَا يَكْتُمُوْنَۚ
3:167. இன்னும், நயவஞ்சகர்களைப் (பிரித்து) அறிவதற்கும்தான்; "வாருங்கள்! அல்லாஹ்வின் பாதையில் போர் புரியுங்கள் அல்லது (பகைவர்கள் அணுகாதவாறு) தடுங்கள்" என்று அவர்களிடம் கூறப்பட்டபோது, "நாங்கள் போரைப் பற்றி அறிந்திருந்தால் நிச்சயமாக நாங்கள் உங்களைப் பின்பற்றியிருப்போம்" என்று அவர்கள் கூறினார்கள்; அன்றைய தினம் அவர்கள் நம்பிக்கையைவிட நிராகரிப்பின் பக்கமே அதிகம் நெருங்கியிருந்தார்கள்; தம் உள்ளங்களில் இல்லாதவற்றைத் தம் வாய்களினால் கூறினார்கள்; அவர்கள் (தம் உள்ளங்களில்) மறைத்து வைப்பதையெல்லாம் அல்லாஹ் நன்கறிகிறான்.
4:63 اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ يَعْلَمُ اللّٰهُ مَا فِىْ قُلُوْبِهِمْ فَاَعْرِضْ عَنْهُمْ وَعِظْهُمْ وَقُلْ لَّهُمْ فِىْۤ اَنْفُسِهِمْ قَوْلًاۢ بَلِيْغًا
4:63. அத்தகையோர் - அவர்களின் உள்ளங்களில் இருப்பவற்றை அல்லாஹ் அறிவான்; ஆகவே, நீர் அவர்களை அலட்சியம் செய்வீராக! அவர்களுக்கு உபதேசம் செய்வீராக! மேலும், அவர்களின் மனங்களில் பதியும்படி தெளிவான வார்த்தைகளைக் கூறுவீராக!
5:13 فَبِمَا نَقْضِهِمْ مِّيْثَاقَهُمْ لَعَنّٰهُمْ وَجَعَلْنَا قُلُوْبَهُمْ قٰسِيَةً ۚ يُحَرِّفُوْنَ الْـكَلِمَ عَنْ مَّوَاضِعِهٖۙ وَنَسُوْا حَظًّا مِّمَّا ذُكِّرُوْا بِهٖۚ وَلَا تَزَالُ تَطَّلِعُ عَلٰى خَآٮِٕنَةٍ مِّنْهُمْ اِلَّا قَلِيْلًا مِّنْهُمْ فَاعْفُ عَنْهُمْ وَاصْفَحْ ؕ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُحْسِنِيْنَ
5:13. அப்பால், அவர்கள் தம் உடன்படிக்கையை முறித்துவிட்டதால் நாம் அவர்களைச் சபித்தோம்; அவர்களுடைய இதயங்களை இறுக்கமாக்கினோம்; (வேத) வசனங்களை அதற்குரிய (சரியான) இடங்களிலிருந்து அவர்கள் மாற்றுகிறார்கள்; எதனைக்கொண்டு அவர்கள் உபதேசிக்கப்பட்டனரோ, அதிலிருந்து (பெரும்) பகுதியை மறந்துவிட்டார்கள்; ஆகவே, அவர்களில் சிலரைத் தவிர அவர்களில் பெரும்பாலோரின் மோசடியைப் பற்றி (நபியே!) நீர் தவறாமல் கண்டுகொண்டே இருப்பீர்; எனவே, நீர் அவர்களை மன்னித்து, புறக்கணித்து விடுவீராக! நிச்சயமாக நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.
5:41 يٰۤـاَيُّهَا الرَّسُوْلُ لَا يَحْزُنْكَ الَّذِيْنَ يُسَارِعُوْنَ فِى الْكُفْرِ مِنَ الَّذِيْنَ قَالُوْۤا اٰمَنَّا بِاَ فْوَاهِهِمْ وَلَمْ تُؤْمِنْ قُلُوْبُهُمْ ۛۚ وَمِنَ الَّذِيْنَ هَادُوْا ۛۚ سَمّٰعُوْنَ لِلْكَذِبِ سَمّٰعُوْنَ لِقَوْمٍ اٰخَرِيْنَۙ لَمْ يَاْتُوْكَؕ يُحَرِّفُوْنَ الْـكَلِمَ مِنْۢ بَعْدِ مَوَاضِعِهٖۚ يَقُوْلُوْنَ اِنْ اُوْتِيْتُمْ هٰذَا فَخُذُوْهُ وَاِنْ لَّمْ تُؤْتَوْهُ فَاحْذَرُوْا ؕ وَمَنْ يُّرِدِ اللّٰهُ فِتْنَـتَهٗ فَلَنْ تَمْلِكَ لَهٗ مِنَ اللّٰهِ شَيْــٴًـــاؕ اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ لَمْ يُرِدِ اللّٰهُ اَنْ يُّطَهِّرَ قُلُوْبَهُمْ ؕ لَهُمْ فِىْ الدُّنْيَا خِزْىٌ ۚۖ وَّلَهُمْ فِىْ الْاٰخِرَةِ عَذَابٌ عَظِيْمٌ
5:41. (நம்முடைய) தூதரே! அவர்களது இதயங்கள் நம்பிக்கை கொள்ளாதிருக்க, தங்களது வாய்களினால், 'நம்பிக்கை கொண்டோம்!' என்று கூறியோர் குறித்தும், இன்னும் யூதர்களைக் குறித்தும், யார் நிராகரிப்பின் பக்கம் விரைந்து சென்று கொண்டிருக்கிறார்களோ அவர்களைக் குறித்தும் நீர் கவலை கொள்ளவேண்டாம்; அவர்கள் பொய்யானவற்றையே மிகுதம் கேட்கின்றவர்கள்; உம்மிடம் (இதுவரை) வராத மற்றொரு கூட்டத்தினருக்(கு உம் பேச்சுகளை அறிவிப்பதற்)காகவும் கேட்கின்றவர்கள்; மேலும், அவர்கள் (வேத)வசனங்களை அவற்றுக்கு உரிய இடங்களிலிருந்து மாற்றி "இ(ன்ன)து உங்களுக்குக் கொடுக்கப்பட்டால் அதை ஏற்றுக்கொள்ளுங்கள்; அது உங்களுக்கு கொடுக்கப்படாவிட்டால் (அதை) தவிர்த்துக்கொள்ளுங்கள்" என்று கூறுகிறார்கள்; மேலும், அல்லாஹ் எவரை வழிகேட்டிலாக்க நாடுகிறானோ, அவருக்காக அல்லாஹ்விடமிருந்து (எதையும் தடுக்க) நீர் ஒருபோதும் சக்திபெறமாட்டீர்; இத்தகையோருடைய இதயங்களைப் பரிசுத்தமாக்க அல்லாஹ் விரும்பவில்லை; இவர்களுக்கு இவ்வுலகிலே இழிவும், மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு.
5:113 قَالُوْا نُرِيْدُ اَنْ نَّاْكُلَ مِنْهَا وَتَطْمَٮِٕنَّ قُلُوْبُنَا وَنَـعْلَمَ اَنْ قَدْ صَدَقْتَـنَا وَنَكُوْنَ عَلَيْهَا مِنَ الشّٰهِدِيْنَ
5:113. அதற்கவர்கள், "நாங்கள் அதிலிருந்து புசித்து எங்கள் இதயங்கள் அமைதி பெறவும், நிச்சயமாக நீங்கள் எங்களுக்கு உண்மையையே கூறினீர்கள் என்பதை அறிந்துகொள்ளவும், இன்னும் நாங்கள் அதைப்பற்றி சாட்சி கூறக்கூடியவர்களாகவும் இருக்க விரும்புகின்றோம்" என்று கூறினார்கள்.
6:25 وَمِنْهُمْ مَّنْ يَّسْتَمِعُ اِلَيْكَ ۚ وَجَعَلْنَا عَلٰى قُلُوْبِهِمْ اَكِنَّةً اَنْ يَّفْقَهُوْهُ وَفِىْۤ اٰذَانِهِمْ وَقْرًا ؕ وَاِنْ يَّرَوْا كُلَّ اٰيَةٍ لَّا يُؤْمِنُوْا بِهَا ؕ حَتّٰۤى اِذَا جَآءُوْكَ يُجَادِلُوْنَكَ يَقُوْلُ الَّذِيْنَ كَفَرُوْۤا اِنْ هٰذَاۤ اِلَّاۤ اَسَاطِيْرُ الْاَوَّلِيْنَ
6:25. அவர்களில் சிலர் உம் பேச்சைக் கேட்பது போல் பாவனை செய்கின்றனர்; நாம் அவர்களுடைய உள்ளங்களில் அதை விளங்கிக் கொள்ளாது இருக்குமாறு திரைகளையும், இன்னும் அவர்கள் காதுகளில் செவிட்டுத் தன்மையையும் ஏற்படுத்தினோம்; இன்னும், அவர்கள் எல்லா அத்தாட்சிகளைப் பார்த்தாலும் அவற்றை நம்பமாட்டார்கள்; இன்னும், இவர்கள் உம்மிடம் வந்தால் உம்மோடு வாதாடுவார்கள்; "இவையெல்லாம் முன்னோர்களின் கட்டுக் கதைகளேயன்றி வேறில்லை" என்று இந்த நிராகரிப்போர் கூறுவார்கள்.
6:46 قُلْ اَرَءَيْتُمْ اِنْ اَخَذَ اللّٰهُ سَمْعَكُمْ وَ اَبْصَارَكُمْ وَخَتَمَ عَلٰى قُلُوْبِكُمْ مَّنْ اِلٰـهٌ غَيْرُ اللّٰهِ يَاْتِيْكُمْ بِهؕ اُنْظُرْ كَيْفَ نُصَرِّفُ الْاٰيٰتِ ثُمَّ هُمْ يَصْدِفُوْنَ
6:46. 'அல்லாஹ் உங்களுடைய செவிப்புலன்களையும், பார்வைகளையும் எடுத்துவிட்டு, உங்கள் இதயங்களின் மீது முத்திரையிட்டு விட்டால்-அதை உங்களுக்கு அல்லாஹ்வையன்றி வேறு எந்த இறைவன் கொண்டுவருவான்? என்று நீங்கள் (சிந்தித்துப்) பார்த்தீர்களா?" என்று (நபியே!) நீர் கேட்பீராக! (நம்) அத்தாட்சிகளை நாம் எவ்வாறு விவரிக்கின்றோம் என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக! (இவ்வாறு இருந்தும்) பின்னர் அவர்கள் புறக்கணிக்கின்றனர்.
6:106 اِتَّبِعْ مَاۤ اُوْحِىَ اِلَيْكَ مِنْ رَّبِّكَۚ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَۚ وَاَعْرِضْ عَنِ الْمُشْرِكِيْنَ
6:106. (நபியே!) உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதையே நீர் பின்பற்றுவீராக! அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) இறைவன் வேறில்லை; இணைவைப்போரை நீர் புறக்கணித்துவிடும்.
7:100 اَوَلَمْ يَهْدِ لِلَّذِيْنَ يَرِثُوْنَ الْاَرْضَ مِنْۢ بَعْدِ اَهْلِهَاۤ اَنْ لَّوْ نَشَآءُ اَصَبْنٰهُمْ بِذُنُوْبِهِمْ ۚ وَنَطْبَعُ عَلٰى قُلُوْبِهِمْ فَهُمْ لَا يَسْمَعُوْنَ
7:100. பூமியை - அதில் (முன்னர்) இருந்தவர்களுக்குப் பின் - வாரிசாக்கிக் கொண்டவர்களுக்கு நாம் நாடினால், இவர்களுடைய பாவங்களின் காரணத்தால் இவர்களையும் (அவ்வாறே) நாம் பிடிப்போம் என்பதும், இவர்கள் செவியுறாதவாறு இவர்களின் இதயங்கள் மீது நாம் முத்திரையிட்டு விடுவோம் என்பதும் தெளிவாகவில்லையா?
7:101 تِلْكَ الْقُرٰى نَقُصُّ عَلَيْكَ مِنْ اَنْۢبَآٮِٕهَا ۚ وَلَقَدْ جَآءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَيِّنٰتِ ۚ فَمَا كَانُوْا لِيُؤْمِنُوْا بِمَا كَذَّبُوْا مِنْ قَبْلُ ؕ كَذٰلِكَ يَطْبَعُ اللّٰهُ عَلٰى قُلُوْبِ الْكٰفِرِيْنَ
7:101. (நபியே!) இந்த ஊர்கள் - அவற்றின் செய்திகளிலிருந்து நாம் உமக்குக் கூறுகிறோம்; நிச்சயமாக அவர்களின் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டுவந்தார்கள்; எனினும், அவர்கள் முன்னால் பொய்யாக்கிக் கொண்டிருந்த காரணத்தினால் நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை; இவ்வாறே அல்லாஹ் நிராகரிப்பவர்களின் இதயங்கள் மீது முத்திரையிட்டுவிடுகிறான்.
7:179 وَلَـقَدْ ذَرَاْنَا لِجَـهَنَّمَ كَثِيْرًا مِّنَ الْجِنِّ وَالْاِنْسِ ۖ لَهُمْ قُلُوْبٌ لَّا يَفْقَهُوْنَ بِهَا وَلَهُمْ اَعْيُنٌ لَّا يُبْصِرُوْنَ بِهَا وَلَهُمْ اٰذَانٌ لَّا يَسْمَعُوْنَ بِهَا ؕ اُولٰۤٮِٕكَ كَالْاَنْعَامِ بَلْ هُمْ اَضَلُّ ؕ اُولٰۤٮِٕكَ هُمُ الْغٰفِلُوْنَ
7:179. நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்றே படைத்துள்ளோம்; அவர்களுக்கு இதயங்கள் இருக்கின்றன; ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் விளங்கிக் கொள்ளமாட்டார்கள்; அவர்களுக்குக் கண்கள் உண்டு; ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்க்கமாட்டார்கள்; அவர்களுக்குக் காதுகள் உண்டு; ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனையைக்) கேட்கமாட்டார்கள் - இத்தகையோர் கால்நடைகளைப் போன்றவர்கள்; இல்லை! அவற்றைவிடவும் வழிகேடர்கள்; இவர்கள்தாம் (நம் வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள்.
8:2 اِنَّمَا الْمُؤْمِنُوْنَ الَّذِيْنَ اِذَا ذُكِرَ اللّٰهُ وَجِلَتْ قُلُوْبُهُمْ وَاِذَا تُلِيَتْ عَلَيْهِمْ اٰيٰتُهٗ زَادَتْهُمْ اِيْمَانًا وَّعَلٰى رَبِّهِمْ يَتَوَكَّلُوْنَ ۖ ۚ
8:2. நம்பிக்கையாளர்கள் யார் என்றால் அல்லாஹ்வைப் பற்றி (அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இதயங்கள் பயந்து நடுங்கிவிடும்; அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால், அவை அவர்களுக்கு ஈமானை (நம்பிக்கையை) அதிகப்படுத்தும்; மேலும், தங்களுடைய இறைவனையே அவர்கள் சார்ந்திருப்பார்கள்.
8:10 وَمَا جَعَلَهُ اللّٰهُ اِلَّا بُشْرٰى وَلِتَطْمَٮِٕنَّ بِهٖ قُلُوْبُكُمْۚ وَمَا النَّصْرُ اِلَّا مِنْ عِنْدِ اللّٰهِؕ اِنَّ اللّٰهَ عَزِيْزٌ حَكِيْمٌ
8:10. உங்கள் இதயங்கள் திருப்தியடைவதற்காகவும், ஒரு நன்மாராயமாகவும் இதை (இந்த வெற்றியை) அல்லாஹ் ஆக்கினான்; அல்லாஹ்விடமிருந்தே தவிர உதவி இல்லை; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
8:11 اِذْ يُغَشِّيْكُمُ النُّعَاسَ اَمَنَةً مِّنْهُ وَيُنَزِّلُ عَلَيْكُمْ مِّنَ السَّمَآءِ مَآءً لِّيُطَهِّرَكُمْ بِهٖ وَيُذْهِبَ عَنْكُمْ رِجْزَ الشَّيْطٰنِ وَلِيَرْبِطَ عَلٰى قُلُوْبِكُمْ وَيُثَبِّتَ بِهِ الْاَقْدَامَؕ
8:11. (நினைவு கூருங்கள்): நீங்கள் அமைதியடைவதற்காக அவன் சிறியதொரு நித்திரை உங்களைப் பொதிந்துகொள்ளுமாறு செய்தான்; இன்னும், உங்களை அதன் மூலம் தூய்மைப்படுத்துவதற்காகவும், ஷைத்தானின் அசுத்தத்தை (தீய எண்ணத்தை) உங்களை விட்டு நீக்குவதற்காகவும், உங்கள் இதயங்களைப் பலப்படுத்தி அதைக் கொண்டு (உங்களுடைய) பாதங்களை உறுதிப்படுத்துவதற்காகவும், அவன் உங்கள் மீது வானிலிருந்து மழை பொழியச் செய்தான்.
8:12 اِذْ يُوْحِىْ رَبُّكَ اِلَى الْمَلٰۤٮِٕكَةِ اَنِّىْ مَعَكُمْ فَثَبِّتُوا الَّذِيْنَ اٰمَنُوْا ؕ سَاُلْقِىْ فِىْ قُلُوْبِ الَّذِيْنَ كَفَرُوا الرُّعْبَ فَاضْرِبُوْا فَوْقَ الْاَعْنَاقِ وَاضْرِبُوْا مِنْهُمْ كُلَّ بَنَانٍؕ
8:12. (நபியே!) உம் இறைவன் வானவர்களை நோக்கி: "நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன்; ஆகவே, நீங்கள் நம்பிக்கையாளர்களை உறுதிப்படுத்துங்கள்; நிராகரிப்போரின் இதயங்களில் விரைவில் நான் திகிலை உண்டாக்குவேன்; நீங்கள் (அவர்களுடைய) பிடரிகளின் மீது வெட்டுங்கள்; அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள்" என்று ('வஹீ' மூலம்) அறிவித்ததை நினைவுகூரும்.
8:24 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اسْتَجِيْبُوْا لِلّٰهِ وَلِلرَّسُوْلِ اِذَا دَعَاكُمْ لِمَا يُحْيِيْكُمْۚ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ يَحُوْلُ بَيْنَ الْمَرْءِ وَقَلْبِهٖ وَاَنَّهٗۤ اِلَيْهِ تُحْشَرُوْنَ
8:24. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் - உங்களுக்கு வாழ்வளிக்கும் காரியத்தின்பால் உங்களை அவர் அழைத்தால் - நீங்கள் பதிலளியுங்கள்; இன்னும், நிச்சயமாக அல்லாஹ் மனிதனுக்கும் அவன் இதயத்திற்குமிடையேயும் சூழ்ந்து இருக்கிறான் என்பதையும், அவனிடத்திலேயே நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்.
8:63 وَاَلَّفَ بَيْنَ قُلُوْبِهِمْؕ لَوْ اَنْفَقْتَ مَا فِى الْاَرْضِ جَمِيْعًا مَّاۤ اَلَّفْتَ بَيْنَ قُلُوْبِهِمْ وَلٰـكِنَّ اللّٰهَ اَلَّفَ بَيْنَهُمْؕ اِنَّهٗ عَزِيْزٌ حَكِيْمٌ
8:63. மேலும், (நம்பிக்கையாளர்களாகிய) அவர்கள் உள்ளங்களுக்கிடையில் பிணைப்பை உண்டாக்கினான்; பூமியிலுள்ள (செல்வங்கள்) அனைத்தையும் நீர் செலவு செய்தபோதிலும், அவர்கள் உள்ளங்களுக்கிடையே அத்தகைய பிணைப்பை உண்டாக்கியிருக்க முடியாது; ஆனால், நிச்சயமாக அல்லாஹ் அவர்களிடையே பிணைப்பை ஏற்படுத்தியுள்ளான்; நிச்சயமாக அவன் மிகைத்தவனாகவும், ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.
8:70 يٰۤـاَيُّهَا النَّبِىُّ قُلْ لِّمَنْ فِىْۤ اَيْدِيْكُمْ مِّنَ الْاَسْرٰٓىۙ اِنْ يَّعْلَمِ اللّٰهُ فِىْ قُلُوْبِكُمْ خَيْرًا يُّؤْتِكُمْ خَيْرًا مِّمَّاۤ اُخِذَ مِنْكُمْ وَيَغْفِرْ لَـكُمْؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ
8:70. நபியே! உங்கள் வசத்தில் இருக்கும் கைதிகளை நோக்கிக் கூறுவீராக! "உங்களுடைய உள்ளங்களில் ஏதாவது ஒரு நன்மை இருப்பதை அல்லாஹ் அறிந்தால், உங்களிடமிருந்து (ஈட்டுத் தொகையாக) எடுத்துக்கொள்ளப்பட்டதை விட (இவ்வுலகத்தில்) மேலானது உங்களுக்கு அவன் கொடுப்பான்; உங்களை அவன் மன்னிப்பான்; அல்லாஹ் மன்னிப்போனாகவும், கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்."
9:8 كَيْفَ وَاِنْ يَّظْهَرُوْا عَلَيْكُمْ لَا يَرْقُبُوْا فِيْكُمْ اِلًّا وَّلَا ذِمَّةً ؕ يُرْضُوْنَـكُمْ بِاَفْوَاهِهِمْ وَتَاْبٰى قُلُوْبُهُمْۚ وَاَكْثَرُهُمْ فٰسِقُوْنَۚ
9:8. (எனினும், அவர்களுடன்) எப்படி (உடன்படிக்கை இருக்க முடியும்?) உங்கள் மீது அவர்கள் வெற்றி கொண்டால் உங்களிடையே உள்ள உறவின் முறையையும், (உங்களிடையே இருக்கும்) உடன்படிக்கையையும் அவர்கள் பொருட்படுத்துவதேயில்லை; அவர்கள் தம் வாய் (மொழி)களைக் கொண்டு(தான்) உங்களைத் திருப்திப்படுத்துகிறார்கள்; ஆனால், அவர்களின் உள்ளங்கள் (அதனை) மறுக்கின்றன; அவர்களில் பெரும்பாலோர் பாவிகளாக இருக்கின்றனர்.
9:15 وَيُذْهِبْ غَيْظَ قُلُوْبِهِمْ ؕ وَ يَتُوْبُ اللّٰهُ عَلٰى مَنْ يَّشَآءُ ؕ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ
9:15. அவர்களுடைய இதயங்களின் கோபத்தைப் போக்கிவிடுவான்; தான் நாடியவரின் மன்னிப்புக் கோருதலை ஏற்றுக்கொள்கிறான்; அல்லாஹ் (எல்லாம்) அறிந்தவனாகவும், (பூரண) ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
9:45 اِنَّمَا يَسْتَاْذِنُكَ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَارْتَابَتْ قُلُوْبُهُمْ فَهُمْ فِىْ رَيْبِهِمْ يَتَرَدَّدُوْنَ
9:45. (போரில் கலந்து கொள்ளாதிருக்க) உம்மிடம் அனுமதி கேட்பவர்கள் எல்லாம் அல்லாஹ்வின் மீதும், இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொள்ளாதவர்கள்தாம்; அவர்களுடைய இதயங்கள் சந்தேகத்தில் ஆழ்ந்துவிட்டன; ஆகவே, அவர்கள் தம் சந்தேகத்திலேயே தடுமாறிக்கொண்டிருக்கின்றனர்.
9:60 اِنَّمَا الصَّدَقٰتُ لِلْفُقَرَآءِ وَالْمَسٰكِيْنِ وَالْعٰمِلِيْنَ عَلَيْهَا وَالْمُؤَلَّـفَةِ قُلُوْبُهُمْ وَفِى الرِّقَابِ وَالْغٰرِمِيْنَ وَفِىْ سَبِيْلِ اللّٰهِ وَابْنِ السَّبِيْلِؕ فَرِيْضَةً مِّنَ اللّٰهِؕ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ
9:60. (ஜகாத் என்னும்) தானங்கள் - வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும், அதற்காக (வசூல் செய்வது, கணக்கிடுவது போன்ற வேலைகளில்) உழைப்பவர்களுக்கும், எவர்களுடைய இதயங்கள் (இஸ்லாத்தின்பால்) ஈர்க்கப்படுகின்றனவோ அவர்களுக்கும், (அடிமைகளை) விடுதலை செய்வதற்கும், கடன்பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், வழிப்போக்கருக்கும் உரியவை; (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும்; அல்லாஹ் (யாவையும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன்.
9:64 يَحْذَرُ الْمُنٰفِقُوْنَ اَنْ تُنَزَّلَ عَلَيْهِمْ سُوْرَةٌ تُنَبِّئُهُمْ بِمَا فِىْ قُلُوْبِهِمْ ؕ قُلِ اسْتَهْزِءُوْا ۚ اِنَّ اللّٰهَ مُخْرِجٌ مَّا تَحْذَرُوْنَ
9:64. நயவஞ்சகர்கள் தம் உள்ளங்களில் மறைத்து வைத்திருப்பவற்றை நம்பிக்கையாளர்களான அவர்களுக்கு அறிவிக்கின்ற ஓர் அத்தியாயம் அவர்கள்மீது இறக்கிவைக்கப்படுவதை அஞ்சுகிறார்கள்: (நபியே!) நீர் கூறும்: "நீங்கள் பரிகாசம் செய்துகொண்டே இருங்கள்; நீங்கள் அஞ்சிக் கொண்டிருப்பதை நிச்சயமாக அல்லாஹ் வெளிப்படுத்துபவனாகவே இருக்கின்றான்."
9:77 فَاَعْقَبَهُمْ نِفَاقًا فِىْ قُلُوْبِهِمْ اِلٰى يَوْمِ يَلْقَوْنَهٗ بِمَاۤ اَخْلَفُوا اللّٰهَ مَا وَعَدُوْهُ وَبِمَا كَانُوْا يَكْذِبُوْنَ
9:77. எனவே, அல்லாஹ்வுக்கு அவனுக்கு வாக்களித்ததில் அவர்கள் மாறுசெய்ததாலும், அவர்கள் பொய் சொல்லிக்கொண்டே இருந்ததினாலும், அவன் அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைத் தொடரச் செய்துவிட்டான்.
9:87 رَضُوْا بِاَنْ يَّكُوْنُوْا مَعَ الْخَوَالِفِ وَطُبِعَ عَلٰى قُلُوْبِهِمْ فَهُمْ لَا يَفْقَهُوْنَ
9:87. (போரில் கலந்துகொள்ள முடியாப் பெண்கள் மற்றும் முதியவர்களைப் போல்) பின்தங்கியவர்களுடன் தாங்களும் இருந்துவிடுவதை அவர்கள் பொருந்திக்கொண்டனர்; அவர்களுடைய இதயங்கள் மீது முத்திரையிடப்பட்டுவிட்டது; ஆகவே, (இதன் இழிவை) அவர்கள் விளங்கிக் கொள்ளமாட்டார்கள்.
9:93 اِنَّمَا السَّبِيْلُ عَلَى الَّذِيْنَ يَسْتَاْذِنُوْنَكَ وَهُمْ اَغْنِيَآءُۚ رَضُوْا بِاَنْ يَّكُوْنُوْا مَعَ الْخَـوَالِفِۙ وَطَبَعَ اللّٰهُ عَلٰى قُلُوْبِهِمْ فَهُمْ لَا يَعْلَمُوْنَ
9:93. குற்றம் பிடிக்கப்பட வேண்டியவர்கள் (யாரெனில், தாம்) செல்வந்தர்களாக இருந்தும், (போருக்குச் செல்லாதிருக்க) உம்மிடம் அனுமதி கோரி, பின்தங்கி இருப்பவர்களுடன் தாங்களும் இருந்துவிட பொருந்திக்கொண்டார்களே அவர்கள்தாம்; அவர்களுடைய இதயங்கள் மீது அல்லாஹ் முத்திரையிட்டுவிட்டான்; ஆகவே, அவர்கள் (இதன் இழிவை) அறியமாட்டார்கள்.
9:110 لَا يَزَالُ بُنْيَانُهُمُ الَّذِىْ بَنَوْا رِيْبَةً فِىْ قُلُوْبِهِمْ اِلَّاۤ اَنْ تَقَطَّعَ قُلُوْبُهُمْؕ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ
9:110. அவர்கள் எழுப்பிய அவர்களுடைய கட்டடம் அவர்களுடைய இதயங்களில் ஒரு வடுவாக இருந்துகொண்டே இருக்கும்; அவர்களின் உள்ளங்கள் துண்டுதுண்டாக ஆகும்வரை (அதாவது, மரணிக்கும்வரை). அல்லாஹ் நன்கறிந்தவன், ஞானமிக்கவன்.
9:117 لَـقَدْ تَّابَ اللّٰهُ عَلَى النَّبِىِّ وَالْمُهٰجِرِيْنَ وَالْاَنْصَارِ الَّذِيْنَ اتَّبَعُوْهُ فِىْ سَاعَةِ الْعُسْرَةِ مِنْۢ بَعْدِ مَا كَادَ يَزِيْغُ قُلُوْبُ فَرِيْقٍ مِّنْهُمْ ثُمَّ تَابَ عَلَيْهِمْؕ اِنَّهٗ بِهِمْ رَءُوْفٌ رَّحِيْمٌۙ
9:117. நிச்சயமாக அல்லாஹ் நபியையும், முஹாஜிர்களையும், அன்சாரிகளையும் மன்னித்தான்; அவர்களில் ஒரு பிரிவினருடைய இதயங்கள் சறுகிவிடுவதற்கு நெருங்கிய பின்னர், கஷ்டமான காலத்தில் (நமது நபியாகிய) அவரை அவர்கள் பின்பற்றினர்; பின்னரும், அவர்களை மன்னித்(து அருள் புரிந்)தான்; நிச்சயமாக அவன் அவர்கள் மீது மிக்க கருணையும், கிருபையும் உடையவனாக இருக்கின்றான்.
9:125 وَاَمَّا الَّذِيْنَ فِىْ قُلُوْبِهِمْ مَّرَضٌ فَزَادَتْهُمْ رِجْسًا اِلٰى رِجْسِهِمْ وَمَاتُوْا وَهُمْ كٰفِرُوْنَ
9:125. ஆனால், எவர்களுடைய உள்ளங்களில் நோய் இருக்கிறதோ, அவர்களுடைய (உள்ளங்களிலுள்ள) அசுத்தத்துடன் மேலும் அசுத்தத்தையே (அது) அவர்களுக்கு அதிகப்படுத்திவிட்டது; அவர்கள் நிராகரிப்பவர்களாக இருக்கும் நிலையில் மரணிப்பார்கள்.
9:127 وَاِذَا مَاۤ اُنْزِلَتْ سُوْرَةٌ نَّظَرَ بَعْضُهُمْ اِلٰى بَعْضٍؕ هَلْ يَرٰٮكُمْ مِّنْ اَحَدٍ ثُمَّ انْصَرَفُوْا ؕ صَرَفَ اللّٰهُ قُلُوْبَهُمْ بِاَنَّهُمْ قَوْمٌ لَّا يَفْقَهُوْنَ
9:127. இன்னும், ஓர் (புதிய) அத்தியாயம் இறக்கப்பட்டால் - அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி: "உங்களை யாராவது பார்த்துவிட்டார்களோ?" என்று கேட்டுக்கொண்டே திரும்பி(ப் போய்) விடுகின்றனர்; நிச்சயமாக அவர்கள் (சத்தியத்தை) விளங்கிக்கொள்ளாத கூட்டத்தினராக இருக்கின்ற காரணத்தால், அல்லாஹ் அவர்களுடைய இதயங்களைத் திருப்பிவிட்டான்.
10:74 ثُمَّ بَعَثْنَا مِنْۢ بَعْدِهٖ رُسُلًا اِلٰى قَوْمِهِمْ فَجَآءُوْهُمْ بِالْبَيِّنٰتِ فَمَا كَانُوْا لِيُؤْمِنُوْا بِمَا كَذَّبُوْا بِهٖ مِنْ قَبْلُ ؕ كَذٰلِكَ نَطْبَعُ عَلٰى قُلُوْبِ الْمُعْتَدِيْنَ
10:74. அவருக்குப் பின், தூதர்களை அவர்களுடைய சமூகத்தினருக்கு நாம் அனுப்பிவைத்தோம்; அவர்களும் தெளிவான அத்தாட்சிகளை அ(ச்சமூகத்த)வர்களிடம் கொண்டுவந்தார்கள்; எனினும், முன்னர் இருந்தவர்கள் எதைப் பொய்யெனக் கூறிக்கொண்டிருந்தார்களோ, (அந்த உண்மையை) இவர்களும் நம்பவில்லை; வரம்பு மீறுபவர்களின் இதயங்கள் மீது இவ்வாறே நாம் முத்திரையிடுகிறோம்.
10:88 وَقَالَ مُوْسٰى رَبَّنَاۤ اِنَّكَ اٰتَيْتَ فِرْعَوْنَ وَمَلَاَهٗ زِيْنَةً وَّاَمْوَالًا فِى الْحَيٰوةِ الدُّنْيَا ۙ رَبَّنَا لِيُضِلُّوْا عَنْ سَبِيْلِكَۚ رَبَّنَا اطْمِسْ عَلٰٓى اَمْوَالِهِمْ وَاشْدُدْ عَلٰى قُلُوْبِهِمْ فَلَا يُؤْمِنُوْا حَتّٰى يَرَوُا الْعَذَابَ الْاَ لِيْمَ
10:88. இன்னும், "எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ ஃபிர்அவ்னுக்கும், அவனுடைய பிரமுகர்களுக்கும் இவ்வுலக வாழ்க்கையில் அலங்காரத்தையும், செல்வங்களையும் கொடுத்திருக்கிறாய்; எங்கள் இறைவனே! (அவற்றைக் கொண்டு) அவர்கள் உன் பாதையைவிட்டும் (மக்களை) வழிக்கெடுப்பதற்காகவே (சோதனையாய் நீ கொடுத்திருக்கிறாய்); எங்கள் இறைவனே! அவர்களுடைய செல்வங்களை அழித்து, அவர்களுடைய இதயங்களையும் கடினமாக்கிவிடுவாயாக! நோவினைதரும் வேதனையை அவர்கள் பார்க்காத வரையில், அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்" என்று மூஸா கூறினார்.
13:28 اَلَّذِيْنَ اٰمَنُوْا وَتَطْمَٮِٕنُّ قُلُوْبُهُمْ بِذِكْرِ اللّٰهِ ؕ اَلَا بِذِكْرِ اللّٰهِ تَطْمَٮِٕنُّ الْقُلُوْبُ ؕ
13:28. (நேர்வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள்; மேலும், அல்லாஹ்வை நினைவுகூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன. அல்லாஹ்வை நினைவுகூர்வது கொண்டுதான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்துகொள்க!
15:12 كَذٰلِكَ نَسْلُكُهٗ فِىْ قُلُوْبِ الْمُجْرِمِيْنَۙ
15:12. இவ்வாறே, நாம் குற்றவாளிகளின் உள்ளங்களில் இதைப் புகுத்திவிடுகிறோம்.
16:22 اِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌ ۚ فَالَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ قُلُوْبُهُمْ مُّنْكِرَةٌ وَّهُمْ مُّسْتَكْبِرُوْنَ
16:22. உங்களுடைய இறைவன் ஒரே இறைவன்தான்; எனவே, எவர்கள் மறுமையை நம்பவில்லையோ, அவர்களுடைய நெஞ்சங்கள் (இவ்வுண்மையை) நிராகரிப்பவையாக இருக்கின்றன; மேலும், அவர்கள் (ஆணவம் கொண்டு) பெருமையடிப்பவர்களாக இருக்கிறார்கள்.
16:108 اُولٰۤٮِٕكَ الَّذِيْنَ طَبَعَ اللّٰهُ عَلٰى قُلُوْبِهِمْ وَسَمْعِهِمْ وَاَبْصَارِهِمْۚ وَاُولٰۤٮِٕكَ هُمُ الْغٰفِلُوْنَ
16:108. அத்தகையோருடைய இதயங்கள், செவிப்புலன், பார்வைகள் (ஆகியவற்றின்) மீது அல்லாஹ் முத்திரையிட்டுவிட்டான்; இவர்கள்தாம் (தம் இறுதி பற்றி) அலட்சியமாக இருப்பவர்கள்.
17:46 وَّجَعَلْنَا عَلٰى قُلُوْبِهِمْ اَكِنَّةً اَنْ يَّفْقَهُوْهُ وَفِىْۤ اٰذَانِهِمْ وَقْرًا ؕ وَاِذَا ذَكَرْتَ رَبَّكَ فِى الْقُرْاٰنِ وَحْدَهٗ وَلَّوْا عَلٰٓى اَدْبَارِهِمْ نُفُوْرًا
17:46. இன்னும், அவர்கள் அதனை விளங்கிக்கொள்வதைவிட்டும் அவர்களுடைய இதயங்களின் மீது மூடிகளையும், அவர்களுடைய காதுகளின் மீது செவிட்டுத்தனத்தையும் நாம் அமைத்துவிடுகிறோம்; இன்னும், குர்ஆனில் உம்முடைய இறைவன் ஒருவனைமட்டும் நீர் குறிப்பிடும்போது, அவர்கள் வெறுப்படைந்து தம் பின்புறங்களில் (திரும்பி வெருண்டவர்களாகப்) பின்வாங்கிவிடுகிறார்கள்.
18:14 وَّرَبَطْنَا عَلٰى قُلُوْبِهِمْ اِذْ قَامُوْا فَقَالُوْا رَبُّنَا رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ لَنْ نَّدْعُوَا۟مِنْ دُوْنِهٖۤ اِلٰهًـا لَّـقَدْ قُلْنَاۤ اِذًا شَطَطًا
18:14. அவர்கள் (கொடுமைக்கார அரசன் முன்னிலையில்) எழுந்துநின்று, "வானங்களுக்கும் பூமிக்கும் இறைவனாகிய அவனே, எங்களுடைய இறைவன்; எக்காலத்தும் அவனையன்றி வேறு எவரையும் தெய்வமென்று அழைக்கமாட்டோம்; (அப்படிச் செய்தால் நிராகரிப்பில் கொண்டு சேர்க்கும்;) வரம்புமீறிய வார்த்தையை நாங்கள் சொன்னவர்கள் ஆவோம்" என்று அவர்கள் உறுதியாகக் கூறியநிலையில் அவர்கள் இதயங்களை நாம் வலுப்படுத்தினோம்.
18:28 وَاصْبِرْ نَـفْسَكَ مَعَ الَّذِيْنَ يَدْعُوْنَ رَبَّهُمْ بِالْغَدٰوةِ وَالْعَشِىِّ يُرِيْدُوْنَ وَجْهَهٗ وَلَا تَعْدُ عَيْنٰكَ عَنْهُمْ ۚ تُرِيْدُ زِيْنَةَ الْحَيٰوةِ الدُّنْيَا ۚ وَ لَا تُطِعْ مَنْ اَغْفَلْنَا قَلْبَهٗ عَنْ ذِكْرِنَا وَاتَّبَعَ هَوٰٮهُ وَكَانَ اَمْرُهٗ فُرُطًا
18:28. இன்னும், (நபியே!) எவர்கள் தம் இறைவனுடைய திருப்பொருத்தத்தை நாடியவர்களாகக் காலையிலும், மாலையிலும் அவனைப் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறார்களோ, அவர்களுடன் நீரும் பொறுமையை மேற்கொண்டிருப்பீராக! இன்னும், உலக வாழ்க்கையின் அலங்காரத்தை நாடி அ(த்தகைய)வர்களை விட்டும் உம் இருகண்களையும் திருப்பிவிடாதீர்! இன்னும், எவனுடைய இதயத்தை நம்மை நினைவு கூர்வதிலிருந்து நாம் திருப்பிவிட்டோமோ அவனுக்கு நீர் கீழ்ப்படியாதீர்; ஏனெனில், அவன் தன் இச்சையைப் பின்பற்றியதனால் அவனுடைய காரியம் வரம்புமீறியதாகிவிட்டது.
18:57 وَمَنْ اَظْلَمُ مِمَّنْ ذُكِّرَ بِاٰيٰتِ رَبِّهٖ فَاَعْرَضَ عَنْهَا وَنَسِىَ مَا قَدَّمَتْ يَدٰهُ ؕ اِنَّا جَعَلْنَا عَلٰى قُلُوْبِهِمْ اَكِنَّةً اَنْ يَّفْقَهُوْهُ وَفِىْۤ اٰذَانِهِمْ وَقْرًا ؕ وَاِنْ تَدْعُهُمْ اِلَى الْهُدٰى فَلَنْ يَّهْتَدُوْۤا اِذًا اَبَدًا
18:57. எவன் தன் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு உபதேசிக்கப்பட்டும், அவற்றைப் புறக்கணித்துத் தன்னிரு கரங்களும் முற்படுத்திய (தீமையான)வற்றை மறந்துவிடுகிறானோ, அவனைவிடப் பெரிய அக்கிரமக்காரன் எவன் இருக்கிறான்? நிச்சயமாக நாம் அவர்களுடைய இதயங்களின் மீது, இதை விளங்கிக்கொள்ளாதவாறு திரைகளையும், அவர்களுடைய செவிகளில் செவிட்டுத்தனத்தையும் ஏற்படுத்தியிருக்கிறோம்; ஆதலால், நீர் அவர்களை நேர்வழியின்பால் அழைத்தாலும், அவர்கள் ஒருபோதும் நேர்வழி அடையமாட்டார்கள்.
21:3 لَاهِيَةً قُلُوْبُهُمْ ؕ وَاَسَرُّوا النَّجْوَىۖ الَّذِيْنَ ظَلَمُوْا ۖ هَلْ هٰذَاۤ اِلَّا بَشَرٌ مِّثْلُكُمْ ۚ اَفَتَاْتُوْنَ السِّحْرَ وَاَنْتُمْ تُبْصِرُوْنَ
21:3. அவர்களுடைய உள்ளங்கள் அலட்சியமாக இருக்கின்றன; இன்னும், இத்தகைய அநியாயக்காரர்கள் தம்மிடையே இரகசியமாக, "இவர் உங்களைப்போன்ற ஒரு மனிதரே அன்றி வேறில்லை; நீங்கள் நன்கு பார்த்துக்கொண்டே (அவருடைய) சூனியத்தின்பால் வருகிறீர்களா?" என்று கூறிக் கொள்கின்றனர்.
22:32 ذٰلِكَ وَمَنْ يُّعَظِّمْ شَعَآٮِٕرَ اللّٰهِ فَاِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوْبِ
22:32. இதுதான் (இறைவன் வகுத்ததாகும்): எவர் அல்லாஹ்வின் சின்னங்களை மேன்மைப்படுத்துகிறாரோ, நிச்சயமாக அது இதயங்களில் உள்ள இறையச்சத்தின் வெளிப்பாடாகும்.
22:35 الَّذِيْنَ اِذَا ذُكِرَ اللّٰهُ وَجِلَتْ قُلُوْبُهُمْ وَالصّٰبِرِيْنَ عَلٰى مَاۤ اَصَابَهُمْ وَالْمُقِيْمِى الصَّلٰوةِ ۙ وَمِمَّا رَزَقْنٰهُمْ يُنْفِقُوْنَ
22:35. அவர்கள் எத்தகையோர் என்றால் 'அல்லாஹ்' என்று (அவனது திருநாமம்) கூறப்பட்டால் அவர்களுடைய இதயங்கள் அச்சத்தால் நடுங்கும்; அன்றியும், தங்களுக்கு ஏற்படும் துன்பங்களைச் சகித்துக் கொள்வோராகவும், தொழுகையைக் கடைப்பிடிப்போராகவும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நமது பாதையில்) செலவு செய்வோராகவும் இருப்பார்கள்.
22:46 اَفَلَمْ يَسِيْرُوْا فِى الْاَرْضِ فَتَكُوْنَ لَهُمْ قُلُوْبٌ يَّعْقِلُوْنَ بِهَاۤ اَوْ اٰذَانٌ يَّسْمَعُوْنَ بِهَا ۚ فَاِنَّهَا لَا تَعْمَى الْاَبْصَارُ وَلٰـكِنْ تَعْمَى الْـقُلُوْبُ الَّتِىْ فِى الصُّدُوْرِ
22:46. அவர்கள் பூமியில் பயணம் செய்து (இவற்றைப்) பார்க்கவில்லையா? (அவ்வாறு பார்த்திருந்தால்) அவர்களுக்கு விளங்கிக்கொள்ளக்கூடிய உள்ளங்களும், (நல்லவற்றைச்) செவியேற்கும் காதுகளும் உண்டாகியிருக்கும்; நிச்சயமாக (புறக்) கண்கள் குருடாகவில்லை; எனினும், நெஞ்சுக்குள்ளே இருக்கும் இதயங்கள் (அகக் கண்கள்)தாம் குருடாகின்றன.
22:53 لِّيَجْعَلَ مَا يُلْقِى الشَّيْطٰنُ فِتْـنَةً لِّـلَّذِيْنَ فِىْ قُلُوْبِهِمْ مَّرَضٌ وَّالْقَاسِيَةِ قُلُوْبُهُمْ ۚ وَ اِنَّ الظّٰلِمِيْنَ لَفِىْ شِقَاقٍۭ بَعِيْدٍۙ
22:53. ஷைத்தான் (மனங்களில்) எறியும் குழப்பத்தை, தங்களுடைய இதயங்களில் நோய் இருக்கிறதே அவர்களுக்கும், தங்களுடைய இதயங்கள் கடினமாக இருக்கின்றனவே அவர்களுக்கும் ஒரு சோதனையாக ஆக்குவதற்கே (அவ்வாறு செய்தான்); அன்றியும், நிச்சயமாக அநியாயம் செய்பவர்கள், தூரமான பிளவிலேயே திடமாக இருக்கிறார்கள்.
22:54 وَّلِيَـعْلَمَ الَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ اَنَّهُ الْحَـقُّ مِنْ رَّبِّكَ فَيُؤْمِنُوْا بِهٖ فَـتُخْبِتَ لَهٗ قُلُوْبُهُمْ ؕ وَاِنَّ اللّٰهَ لَهَادِ الَّذِيْنَ اٰمَنُوْۤا اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ
22:54. (ஆனால்) எவர்களுக்குக் கல்வி அளிக்கப்பட்டிருக்கின்றதோ அவர்கள், நிச்சயமாக இ(வ்வேதமான)து உம்முடைய இறைவனிடமிருந்துள்ள உண்மை என்று அறிந்து, அதன்மீது நம்பிக்கை கொள்வதற்காகவும், (அதன் பயனாக) அவர்களுடைய இதயங்கள் அவனுக்குப் பணிவதற்காகவும் (இவ்வாறு செய்கிறான்). மேலும், திடமாக அல்லாஹ் நம்பிக்கை கொண்டவர்களை நேரான வழியில் செலுத்துபவனாக இருக்கின்றான்.
23:60 وَالَّذِيْنَ يُؤْتُوْنَ مَاۤ اٰتَوْا وَّ قُلُوْبُهُمْ وَجِلَةٌ اَنَّهُمْ اِلٰى رَبِّهِمْ رٰجِعُوْنَ ۙ
23:60. இன்னும், எவர்கள் தம் இறைவனிடம் தாங்கள் திரும்பிச் செல்லவேண்டியவர்கள் என்று அவர்களுடைய இதயங்கள் பயந்தவையாக இருக்கும் நிலையில், (நாம் கொடுத்ததிலிருந்து நமது பாதையில்) தங்களால் இயன்றவரை கொடுக்கிறார்களோ அவர்களும் -
23:63 بَلْ قُلُوْبُهُمْ فِىْ غَمْرَةٍ مِّنْ هٰذَا وَلَهُمْ اَعْمَالٌ مِّنْ دُوْنِ ذٰلِكَ هُمْ لَهَا عٰمِلُوْنَ
23:63. ஆனால், அவர்களுடைய இதயங்கள் இதைக் குறித்து அறியாமையிலேயே (ஆழ்ந்து) கிடக்கின்றன; இன்னும், அவர்களுக்கு இதுவன்றி (வேறு தீய) காரியங்களும் உண்டு; அதனை அவர்கள் செய்துவருகிறார்கள்.
24:37 رِجَالٌ ۙ لَّا تُلْهِيْهِمْ تِجَارَةٌ وَّلَا بَيْعٌ عَنْ ذِكْرِ اللّٰهِ وَاِقَامِ الصَّلٰوةِ وَ اِيْتَآءِ الزَّكٰوةِ ۙ يَخَافُوْنَ يَوْمًا تَتَقَلَّبُ فِيْهِ الْقُلُوْبُ وَالْاَبْصَارُ ۙ
24:37. (அவ்வாறு துதி செய்யும்) மனிதர்களை அல்லாஹ்வை தியானிப்பதை விட்டும், தொழுகையை (முறையாக) நிறைவேற்றுவதை விட்டும், ஜகாத் கொடுப்பதை விட்டும் அவர்களுடைய வாணிபமோ, கொடுக்கல் வாங்கலோ பராமுகமாக்க மாட்டா; இதயங்களும், பார்வைகளும் கலங்கித் தடுமாற்றமடையுமே அந்த (இறுதி) நாளை அவர்கள் அஞ்சுவார்கள்.
24:50 اَفِىْ قُلُوْبِهِمْ مَّرَضٌ اَمِ ارْتَابُوْۤا اَمْ يَخَافُوْنَ اَنْ يَّحِيْفَ اللّٰهُ عَلَيْهِمْ وَرَسُوْلُهٗؕ بَلْ اُولٰٓٮِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ
24:50. அவர்களுடைய இதயங்களில் நோய் இருக்கிறதா? அல்லது (அவரைப் பற்றி) அவர்கள் சந்தேகப்படுகிறார்களா? அல்லது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தங்களுக்கு அநியாயம் செய்வார்கள் என்று அஞ்சுகிறார்களா? அல்ல! அவர்களே அநியாயக்காரர்கள்.
26:89 اِلَّا مَنْ اَتَى اللّٰهَ بِقَلْبٍ سَلِيْمٍؕ
26:89. "தூய இதயத்தை அல்லாஹ்விடம் கொண்டு வருபவரைத் தவிர." (அவர் கண்ணியம் அடைவார்.)
26:194 عَلٰى قَلْبِكَ لِتَكُوْنَ مِنَ الْمُنْذِرِيْنَۙ
26:194. (நபியே!) அச்சமூட்டி எச்சரிப்பவராக நீர் இருப்பதற்காக உம் இதயத்தின் மீது (இவ்வேதத்தை இறக்கினார்).
26:200 كَذٰلِكَ سَلَكْنٰهُ فِىْ قُلُوْبِ الْمُجْرِمِيْنَؕ
26:200. இவ்வாறே, நாம் குற்றவாளிகளின் இதயங்களிலும் இதனைப் புகுத்துகிறோம்.
28:10 وَاَصْبَحَ فُؤَادُ اُمِّ مُوْسٰى فٰرِغًا ؕ اِنْ كَادَتْ لَـتُبْدِىْ بِهٖ لَوْلَاۤ اَنْ رَّبَطْنَا عَلٰى قَلْبِهَا لِتَكُوْنَ مِنَ الْمُؤْمِنِيْنَ
28:10. மூஸாவுடைய தாயின் இதயம் (துக்கத்தால்) வெறுமையாகிவிட்டது; நம்பிக்கையாளர்களில் உள்ளவளாக இருப்பதற்காக நாம் அவள் உள்ளத்தை உறுதிப்படுத்தாது இருந்திருந்தால், அவள் (அதனை மூஸா ஆற்றில் விடப்பட்டதை) வெளிப்படுத்த முனைந்திருப்பாள்.
29:10 وَمِنَ النَّاسِ مَنْ يَّقُوْلُ اٰمَنَّا بِاللّٰهِ فَاِذَاۤ اُوْذِىَ فِى اللّٰهِ جَعَلَ فِتْنَةَ النَّاسِ كَعَذَابِ اللّٰهِؕ وَلَٮِٕنْ جَآءَ نَـصْرٌ مِّنْ رَّبِّكَ لَيَـقُوْلُنَّ اِنَّا كُنَّا مَعَكُمْؕ اَوَلَـيْسَ اللّٰهُ بِاَعْلَمَ بِمَا فِىْ صُدُوْرِ الْعٰلَمِيْنَ
29:10. மேலும், மனிதர்களில் சிலர் "நாங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம்" என்று சொல்கிறார்கள்; எனினும், அவர்களுக்கு அல்லாஹ்வின் பாதையில் துன்பம் உண்டானால், மனிதர்களால் ஏற்படும் அந்த இம்சையை அல்லாஹ்வின் வேதனைபோல் கருதி (உம்மை விட்டும் நீங்க முனைந்து) விடுகிறார்கள். ஆனால், உம் இறைவனிடத்திலிருந்து உதவி வந்தால் "நிச்சயமாக நாங்கள் உங்களுடனேதான் இருந்தோம்" என்று கூறுகிறார்கள். அல்லாஹ் அகிலத்தாரின் இதயங்களில் இருப்பவற்றை நன்கறிபவனாக இல்லையா?
30:59 كَذٰلِكَ يَطْبَعُ اللّٰهُ عَلٰى قُلُوْبِ الَّذِيْنَ لَا يَعْلَمُوْنَ
30:59. அவ்வாறே, அறிவில்லாதவர்களின் இதயங்களின் மீது அல்லாஹ் முத்திரையிடுகிறான்.
33:4 مَا جَعَلَ اللّٰهُ لِرَجُلٍ مِّنْ قَلْبَيْنِ فِىْ جَوْفِهٖ ۚ وَمَا جَعَلَ اَزْوَاجَكُمُ الّٰٓـئِْ تُظٰهِرُوْنَ مِنْهُنَّ اُمَّهٰتِكُمْ ۚ وَمَا جَعَلَ اَدْعِيَآءَكُمْ اَبْنَآءَكُمْ ؕ ذٰ لِكُمْ قَوْلُـكُمْ بِاَ فْوَاهِكُمْ ؕ وَاللّٰهُ يَقُوْلُ الْحَقَّ وَهُوَ يَهْدِى السَّبِيْلَ
33:4. எந்த மனிதனுடைய அகத்திலும் அல்லாஹ் இரண்டு இதயங்களை உண்டாக்கவில்லை; உங்கள் மனைவியரில் எவரையும் (தன் மனைவியைத் தன் தாய் போன்றவள் என்று கூறி) நீங்கள் உங்களுடைய தாய்மார்களுக்கு ஒப்பாகக் கூறுவதனால் - உங்களுடைய தாய்களாக அவன் ஆக்கவில்லை; (அவ்வாறே) உங்களுடைய வளர்ப்புப் பிள்ளைகளை உங்களுடைய புதல்வர்களாக ஆக்கவில்லை; இவை யாவும் உங்களுடைய வாய்களால் சொல்லும் (வெறும்) வார்த்தையாகும்; அல்லாஹ் உண்மையையே கூறுகிறான்; இன்னும், அவன் நேர்வழியையே காட்டுகிறான்.
33:5 اُدْعُوْهُمْ لِاٰبَآٮِٕهِمْ هُوَ اَقْسَطُ عِنْدَ اللّٰهِ ۚ فَاِنْ لَّمْ تَعْلَمُوْۤا اٰبَآءَهُمْ فَاِخْوَانُكُمْ فِى الدِّيْنِ وَمَوَالِيْكُمْؕ وَ لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ فِيْمَاۤ اَخْطَاْ تُمْ بِهٖۙ وَلٰكِنْ مَّا تَعَمَّدَتْ قُلُوْبُكُمْ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا
33:5. எனவே, நீங்கள் எடுத்து வளர்த்த அவர்களை அவர்களின் தந்தையரின் பெயர்களைச் சொல்லி இன்னாரின் பிள்ளையென அழையுங்கள்: அதுவே, அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும்: ஆனால், அவர்களுடைய தந்தையரின் பெயர்களை நீங்கள் அறியவில்லையாயின் அவர்கள் மார்க்கத்தில் உங்களுடைய சகோதரர்களாகவும், உங்களுடைய நண்பர்களாகவும் இருக்கின்றனர்: முன்னர் இது பற்றி நீங்கள் தவறு செய்திருந்தால், உங்கள்மீது குற்றமில்லை; ஆனால், உங்களுடைய உள்ளங்கள் வேண்டுமென்றே செய்கின்ற ஒன்றுதான் (உங்கள்மீது குற்றமாகும்); அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
33:10 اِذْ جَآءُوْكُمْ مِّنْ فَوْقِكُمْ وَمِنْ اَسْفَلَ مِنْكُمْ وَاِذْ زَاغَتِ الْاَبْصَارُ وَبَلَغَتِ الْقُلُوْبُ الْحَـنَـاجِرَ وَتَظُنُّوْنَ بِاللّٰهِ الظُّنُوْنَا ؕ
33:10. உங்களுக்கு மேலிருந்தும், உங்களுக்குக் கீழிருந்தும் அவர்கள் உங்களிடம் (படையெடுத்து) வந்தபோது, (உங்களுடைய) பார்வைகள் சாய்ந்து, (உங்களுடைய) இதயங்கள் தொண்டைக் குழி (முடிச்சு)களை அடைந்து (நீங்கள் திணறி) அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் பலவாறான எண்ணங்களை எண்ணிக்கொண்டிருந்த சமயம் (அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருட்கொடையை) நினைவு கூருங்கள்.
33:12 وَاِذْ يَقُوْلُ الْمُنٰفِقُوْنَ وَالَّذِيْنَ فِىْ قُلُوْبِهِمْ مَّرَضٌ مَّا وَعَدَنَا اللّٰهُ وَرَسُوْلُهٗۤ اِلَّا غُرُوْرًا
33:12. மேலும் (அச்சமயம்) நயவஞ்சகர்களும், எவர்களின் இதயங்களில் நோயிருந்ததோ அவர்களும் - "அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்கு ஏமாற்றத்தைத் தவிர (வேறு) எதையும் வாக்களிக்கவில்லை" என்று கூறிய சமயத்தையும் நினைவுகூருங்கள்.
33:26 وَاَنْزَلَ الَّذِيْنَ ظَاهَرُوْهُمْ مِّنْ اَهْلِ الْكِتٰبِ مِنْ صَيَاصِيْهِمْ وَقَذَفَ فِىْ قُلُوْبِهِمُ الرُّعْبَ فَرِيْقًا تَقْتُلُوْنَ وَتَاْسِرُوْنَ فَرِيْقًا ۚ
33:26. இன்னும், வேதக்காரர்களிலிருந்தும் (பகைவர்களுக்கு) உதவிபுரிந்தார்களே அவர்களை (அல்லாஹ்) அவர்களுடைய கோட்டைகளிலிருந்து கீழே இறக்கி, அவர்களின் இதயங்களில் திகிலைப் போட்டுவிட்டான்: (அவர்களில்) ஒரு பிரிவாரை நீங்கள் கொன்றுவிட்டீர்கள்; இன்னும், ஒரு பிரிவாரைச் சிறைப்பிடித்தீர்கள்.
33:32 يٰنِسَآءَ النَّبِىِّ لَسْتُنَّ كَاَحَدٍ مِّنَ النِّسَآءِ اِنِ اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَـطْمَعَ الَّذِىْ فِىْ قَلْبِهٖ مَرَضٌ وَّقُلْنَ قَوْلًا مَّعْرُوْفًا ۚ
33:32. நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல; நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள்; ஏனென்றால், எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ அ(த்தகைய)வன் சபலம் கொள்வான்; இன்னும், நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள்.
33:51 تُرْجِىْ مَنْ تَشَآءُ مِنْهُنَّ وَتُـــْٔوِىْۤ اِلَيْكَ مَنْ تَشَآءُ ؕ وَمَنِ ابْتَغَيْتَ مِمَّنْ عَزَلْتَ فَلَا جُنَاحَ عَلَيْكَ ؕ ذٰ لِكَ اَدْنٰٓى اَنْ تَقَرَّ اَعْيُنُهُنَّ وَلَا يَحْزَنَّ وَيَرْضَيْنَ بِمَاۤ اٰتَيْتَهُنَّ كُلُّهُنَّ ؕ وَاللّٰهُ يَعْلَمُ مَا فِىْ قُلُوْبِكُمْ ؕ وَكَانَ اللّٰهُ عَلِيْمًا حَلِيْمًا
33:51. அவர்களில் நீர் விரும்பியவரை ஒதுக்கி வைக்கலாம்; நீர் விரும்பியவரை உம்முடன் தங்க வைக்கலாம்; நீர் ஒதுக்கிவைத்தவர்களில் எவரையேனும் நீர் (மீண்டும் சேர்த்துக் கொள்ள) நாடினால் (இதில்) உம்மீது குற்றமில்லை; அவர்களுடைய கண்கள் குளிர்ச்சியடையும் பொருட்டும், அவர்கள் விசனப்படாமல் இருப்பதற்கும், அவர்கள் ஒவ்வொருவரும் நீர் அவர்களுக்குக் கொடுப்பதைக்கொண்டு திருப்தி அடைவதற்காகவும் இது சுலபமான வழியாகும்; மேலும், அல்லாஹ் உங்கள் உள்ளங்களில் இருப்பதை நன்கறிகிறான்; இன்னும், அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்; மிக்க பொறுமையாளன்.
33:60 لَٮِٕنْ لَّمْ يَنْتَهِ الْمُنٰفِقُوْنَ وَ الَّذِيْنَ فِى قُلُوْبِهِمْ مَّرَضٌ وَّالْمُرْجِفُوْنَ فِى الْمَدِيْنَةِ لَـنُغْرِيَـنَّكَ بِهِمْ ثُمَّ لَا يُجَاوِرُوْنَكَ فِيْهَاۤ اِلَّا قَلِيْلًا ۛۚ ۖ
33:60. நயவஞ்சகர்களும், தங்கள் இதயங்களில் நோய் உள்ளவர்களும், மதீனாவில் பொய்ப்பிரச்சாரம் செய்து கொண்டிருப்பவர்களும் (தம் தீச் செயல்களிலிருந்து) விலகிக்கொள்ளவில்லையானால், அவர்களுக்கு எதிராக நாம் உம்மை நிச்சயமாகச் சாட்டுவோம்; பிறகு, அவர்கள் வெகு சொற்ப (கால)மேயன்றி அங்கு உமது அண்டை அயலார்களாக வசித்திருக்கமாட்டார்கள்.
34:23 وَلَا تَنْفَعُ الشَّفَاعَةُ عِنْدَهٗۤ اِلَّا لِمَنْ اَذِنَ لَهٗ ؕ حَتّٰٓى اِذَا فُزِّعَ عَنْ قُلُوْبِهِمْ قَالُوْا مَاذَا ۙ قَالَ رَبُّكُمْ ؕ قَالُوا الْحَـقَّ ۚ وَهُوَ الْعَلِىُّ الْكَبِيْرُ
34:23. அன்றியும், அவன் எவருக்கு அனுமதி கொடுக்கிறானோ அவருக்குத் தவிர, அவனிடத்தில் எந்தப் பரிந்துரையும் பயனளிக்காது; எனவே, (நியாய விசாரணைக்கு நிற்கும்) அவர்களின் இதயங்களிலிருந்து திடுக்கம் நீக்கப்படுமானால், "உங்கள் இறைவன் என்ன கூறினான்?" என்று கேட்பார்கள்; "உண்மையானதையே! மேலும், அவனே மிக உயர்ந்தவன்; மிகப் பெரியவன்" என்று கூறுவார்கள்.
39:22 اَفَمَنْ شَرَحَ اللّٰهُ صَدْرَهٗ لِلْاِسْلَامِ فَهُوَ عَلٰى نُوْرٍ مِّنْ رَّبِّهٖؕ فَوَيْلٌ لِّلْقٰسِيَةِ قُلُوْبُهُمْ مِّنْ ذِكْرِ اللّٰهِؕ اُولٰٓٮِٕكَ فِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ
39:22. அல்லாஹ் எவருடைய இதயத்தை இஸ்லாத்திற்காக விசாலமாக்குகிறானோ, அவர் தம் இறைவனின் ஒளியில் இருக்கிறார்; (ஆனால்,) அல்லாஹ்வுடைய நினைவைவிட்டும் விலகி எவர்களுடைய இதயங்கள் கடினமாகி விட்டனவோ, அவர்களுக்குக் கேடுதான்; இத்தகையோர் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கிறார்கள்.
39:23 اَللّٰهُ نَزَّلَ اَحْسَنَ الْحَدِيْثِ كِتٰبًا مُّتَشَابِهًا مَّثَانِىَ ۖ تَقْشَعِرُّ مِنْهُ جُلُوْدُ الَّذِيْنَ يَخْشَوْنَ رَبَّهُمْۚ ثُمَّ تَلِيْنُ جُلُوْدُهُمْ وَقُلُوْبُهُمْ اِلٰى ذِكْرِ اللّٰهِ ؕ ذٰ لِكَ هُدَى اللّٰهِ يَهْدِىْ بِهٖ مَنْ يَّشَآءُ ؕ وَمَنْ يُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ هَادٍ
39:23. அல்லாஹ் மிக அழகான செய்தியை வேதமாக இறக்கினான்; (இவை முரண்பாடில்லாமல்) ஒன்றுக்கொன்று ஒப்பானதாகவும், (மனதில் பதியுமாறு) திரும்பத் திரும்பக் கூறப்படுவதாகவும் இருக்கின்றன; தங்கள் இறைவனுக்கு எவர்கள் அஞ்சுகிறார்களோ அவர்களுடைய தோல்(களின் உரோமக்கால்)கள் (இவற்றைக் கேட்கும்போது) சிலிர்த்துவிடுகின்றன; பிறகு, அவர்களுடைய தோல்களும், இதயங்களும் அல்லாஹ்வின் தியானத்தில் இளகுகின்றன; இதுவே, அல்லாஹ்வின் நேர்வழியாகும்; இதன் மூலம்தான் நாடியவர்களை அவன் நேர்வழியில் செலுத்துகிறான்; ஆனால், எவனை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ அவனை நேர்வழியில் நடத்துவோர் எவருமில்லை.
39:45 وَاِذَا ذُكِرَ اللّٰهُ وَحْدَهُ اشْمَاَزَّتْ قُلُوْبُ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ ۚ وَاِذَا ذُكِرَ الَّذِيْنَ مِنْ دُوْنِهٖۤ اِذَا هُمْ يَسْتَبْشِرُوْنَ
39:45. மேலும், அல்லாஹ்(வின் பெயர்) மட்டும் தனித்தவனாகக் கூறப்பட்டால், மறுமையை நம்பிக்கை கொள்ளாதவர்களின் இதயங்கள் சுருங்கிவிடுகின்றன; மேலும், அவனை அன்றி மற்றவர்(களின் பெயர்)கள் கூறப்பட்டால், உடனே அவர்கள் பெரிதும் மகிழ்வடைகிறார்கள்.
40:18 وَاَنْذِرْهُمْ يَوْمَ الْاٰزِفَةِ اِذِ الْقُلُوْبُ لَدَى الْحَـنَاجِرِ كٰظِمِيْنَ ؕ مَا لِلظّٰلِمِيْنَ مِنْ حَمِيْمٍ وَّلَا شَفِيْعٍ يُّطَاعُ ؕ
40:18. (நபியே!) அண்மையில் வரும் (கியாம) நாளைப் பற்றி அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! இதயங்கள் விசனத்தால் நிரம்பி தொண்டைக்குழிகளுக்கு வரும் (அவ்) வேளையில், அநியாயக்காரர்களுக்கு (இரக்கப்படும்) உற்ற நண்பனோ, ஏற்றுக்கொள்ளப்படும் சிபாரிசு செய்பவனோ இருக்கமாட்டான்.
40:35 اۨلَّذِيْنَ يُجَادِلُوْنَ فِىْۤ اٰيٰتِ اللّٰهِ بِغَيْرِ سُلْطٰنٍ اَتٰٮهُمْ ؕ كَبُـرَ مَقْتًا عِنْدَ اللّٰهِ وَعِنْدَ الَّذِيْنَ اٰمَنُوْا ؕ كَذٰلِكَ يَطْبَعُ اللّٰهُ عَلٰى كُلِّ قَلْبِ مُتَكَبِّرٍ جَبَّارٍ
40:35. "அவர்கள் எத்தகையோரென்றால் (இறைவனிடமிருந்து) தங்களுக்கு வந்த-யாதோர் ஆதாரமுமின்றி, அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றி தர்க்கம் செய்கின்றார்கள்; அது, அல்லாஹ்விடத்திலும் நம்பிக்கை கொண்டவர்களிடத்திலும் கோபத்தால் பெரிதாகிவிட்டது; இவ்வாறே, பெருமையடித்து ஆணவம்கொள்ளும் ஒவ்வொரு இதயத்தின் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டுவிடுகிறான்" (என்றும் அவர் கூறினார்).
41:5 وَقَالُوْا قُلُوْبُنَا فِىْۤ اَكِنَّةٍ مِّمَّا تَدْعُوْنَاۤ اِلَيْهِ وَفِىْۤ اٰذَانِنَا وَقْرٌ وَّمِنْۢ بَيْنِنَا وَبَيْنِكَ حِجَابٌ فَاعْمَلْ اِنَّنَا عٰمِلُوْنَ
41:5. மேலும் அவர்கள்: "நீர் எதன் பக்கம் எங்களை அழைக்கின்றீரோ அதனைவிட்டும் எங்கள் இதயங்கள் உறையினுள் இருக்கின்றன; எங்கள் காதுகளில் மந்தம் இருக்கின்றது; எங்களுக்கிடையிலும், உமக்கிடையிலும் திரை இருக்கிறது; ஆகவே, நீர் (உம் வேலையைச்) செய்து கொண்டிரும்! நிச்சயமாக நாங்கள் (எங்கள் வேலையைச்) செய்துகொண்டிருப்பவர்கள்" என்று கூறினர்.
42:24 اَمْ يَقُوْلُوْنَ افْتَـرٰى عَلَى اللّٰهِ كَذِبًا ۚ فَاِنْ يَّشَاِ اللّٰهُ يَخْتِمْ عَلٰى قَلْبِكَ ؕ وَيَمْحُ اللّٰهُ الْبَاطِلَ وَيُحِقُّ الْحَقَّ بِكَلِمٰتِهٖۤ ؕ اِنَّهٗ عَلِيْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ
42:24. அல்லது (உம்மைப் பற்றி) அவர்கள்: "அவர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டிக் கூறுகிறார்" என்று சொல்கிறார்களா? அல்லாஹ் நாடினால், அவன் உம் இதயத்தின் மீது முத்திரையிட்டிருப்பான்; அன்றியும், அல்லாஹ் பொய்யை அழித்து, தன் வசனங்களைக்கொண்டு உண்மையை உறுதிப்படுத்துகிறான்; நிச்சயமாக நெஞ்சங்களிலிருப்பதை அவன் மிக அறிந்தவன்.
45:23 اَفَرَءَيْتَ مَنِ اتَّخَذَ اِلٰهَهٗ هَوٰٮهُ وَاَضَلَّهُ اللّٰهُ عَلٰى عِلْمٍ وَّخَتَمَ عَلٰى سَمْعِهٖ وَقَلْبِهٖ وَجَعَلَ عَلٰى بَصَرِهٖ غِشٰوَةً ؕ فَمَنْ يَّهْدِيْهِ مِنْۢ بَعْدِ اللّٰهِ ؕ اَفَلَا تَذَكَّرُوْنَ
45:23. (நபியே!) எவன் தன்னுடைய மனோ இச்சையைத் தன்னுடைய தெய்வமாக ஆக்கிக்கொண்டானோ, அவனை நீர் பார்த்தீரா? மேலும், அறிந்தே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டு அவனுடைய காதுகள் மீதும், இதயத்தின் மீதும் முத்திரையிட்டு - இன்னும், அவனுடைய பார்வை மீதும் திரையை அமைத்துவிட்டான்; எனவே, அல்லாஹ்வுக்குப் பிறகு அவனுக்கு நேர்வழி காண்பிப்பவர் யார்? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?
47:16 وَمِنْهُمْ مَّنْ يَّسْتَمِعُ اِلَيْكَۚ حَتّٰٓى اِذَا خَرَجُوْا مِنْ عِنْدِكَ قَالُوْا لِلَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ مَاذَا قَالَ اٰنِفًا اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ طَبَعَ اللّٰهُ عَلٰى قُلُوْبِهِمْ وَ اتَّبَعُوْۤا اَهْوَآءَهُمْ
47:16. இன்னும், அவர்களில் உம்மைச் செவிமடுப்பவர்களும் இருக்கின்றனர்; ஆனால், அவர்கள் உம்மைவிட்டும் வெளியேறியதும், (நம்பிக்கையாளர்களான இவ்வேத) ஞானம் அருளப்பட்டவர்களிடம், "அவர் சற்றுமுன் என்ன கூறினார்?" என்று (பரிகாசமாகக்) கேட்கின்றனர். இத்தகையோர் - இவர்களின் இதயங்களின் மீது அல்லாஹ் முத்திரையிட்டுவிட்டான்; மேலும், இவர்கள் தங்கள் மனோ இச்சைகளையே பின்பற்றுகின்றனர்.
47:20 وَيَقُوْلُ الَّذِيْنَ اٰمَنُوْا لَوْلَا نُزِّلَتْ سُوْرَةٌ ۚ فَاِذَاۤ اُنْزِلَتْ سُوْرَةٌ مُّحْكَمَةٌ وَّذُكِرَ فِيْهَا الْقِتَالُۙ رَاَيْتَ الَّذِيْنَ فِىْ قُلُوْبِهِمْ مَّرَضٌ يَّنْظُرُوْنَ اِلَيْكَ نَظَرَ الْمَغْشِىِّ عَلَيْهِ مِنَ الْمَوْتِؕ فَاَوْلٰى لَهُمْۚ
47:20. இன்னும், நம்பிக்கை கொண்டவர்கள் கூறுகிறார்கள்: "(புனிதப் போர் பற்றி) ஓர் அத்தியாயம் இறக்கிவைக்கப்பட வேண்டாமா?" என்று; ஆனால், உறுதிவாய்ந்த ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டு அதில் போர் புரியுமாறு கூறப்பட்டால், எவர்களுடைய இதயங்களில் (நயவஞ்சக) நோய் இருக்கிறதோ அவர்கள், மரண(பய)த்தினால் மயக்கம் ஏற்பட்டவன் நோக்குவது போல் உம்மை நோக்குவதை நீர் காண்பீர்! ஆகவே, இத்தகையவர்களுக்குக் கேடுதான்.
48:4 هُوَ الَّذِىْۤ اَنْزَلَ السَّكِيْنَةَ فِىْ قُلُوْبِ الْمُؤْمِنِيْنَ لِيَزْدَادُوْۤا اِيْمَانًا مَّعَ اِيْمَانِهِمْ ؕ وَلِلّٰهِ جُنُوْدُ السَّمٰوٰتِ وَالْاَرْضِؕ وَكَانَ اللّٰهُ عَلِيْمًا حَكِيْمًا ۙ
48:4. நம்பிக்கையாளர்களின் இதயங்களில் அவர்களுடைய நம்பிக்கையுடன் (மேலும்) நம்பிக்கையை அதிகரித்துக்கொள்வதற்காக அவன்தான் அமைதியை இறக்கிவைத்தான்; அன்றியும், வானங்களிலும் பூமியிலுமுள்ள படைகள் (எல்லாம்) அல்லாஹ்வுக்கே சொந்தம்; மேலும், அல்லாஹ் நன்கறிந்தவன், ஞானம் மிக்கோன்.
48:11 سَيَـقُوْلُ لَكَ الْمُخَلَّفُوْنَ مِنَ الْاَعْرَابِ شَغَلَـتْنَاۤ اَمْوَالُـنَا وَاَهْلُوْنَا فَاسْتَغْفِرْ لَـنَا ۚ يَقُوْلُوْنَ بِاَلْسِنَتِهِمْ مَّا لَـيْسَ فِىْ قُلُوْبِهِمْؕ قُلْ فَمَنْ يَّمْلِكُ لَـكُمْ مِّنَ اللّٰهِ شَيْـٴًــــا اِنْ اَرَادَ بِكُمْ ضَرًّا اَوْ اَرَادَ بِكُمْ نَفْعًا ؕ بَلْ كَانَ اللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرًا
48:11. (நபியே! போருக்கு உம்முடன் சேர்ந்து வராமல்) பின் தங்கிவிட்ட நாட்டுப்புறத்து அரபிகள்: "எங்களுடைய சொத்துகளும், எங்கள் குடும்பத்தார்களும் (உங்களுடன் வராது) எங்களை அலுவல்கள் உள்ளவர்களாக்கிவிட்டன; எனவே, நீர் எங்களுக்காக மன்னிப்புக்கோருவீராக!" என்று கூறுவர். அவர்கள் தங்கள் இதயங்களில் இல்லாததைத் தம் நாவுகளினால் கூறுகிறார்கள். "அல்லாஹ் உங்களுக்கு ஒரு கெடுதியை நாடினாலும், அல்லது அவன் உங்களுக்கு ஒரு நன்மையை நாடினாலும், அதில் எதையும் அவனுக்கெதிராக உங்களுக்கு (த்தடுக்கக் கூடிய) அதிகாரம் பெற்றவர் யார்? அப்படியல்ல! அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்குணர்ந்தவனாக இருக்கிறான்" எனக் கூறும்.
48:12 بَلْ ظَنَـنْـتُمْ اَنْ لَّنْ يَّـنْقَلِبَ الرَّسُوْلُ وَالْمُؤْمِنُوْنَ اِلٰٓى اَهْلِيْهِمْ اَبَدًا وَّزُيِّنَ ذٰ لِكَ فِىْ قُلُوْبِكُمْ وَظَنَنْتُمْ ظَنَّ السَّوْءِ ۖۚ وَكُنْـتُمْ قَوْمًا ۢ بُوْرًا
48:12. (நீங்கள் கூறுவதுபோல்) அல்ல; (அல்லாஹ்வின்) தூதரும், நம்பிக்கையாளர்களும் தங்கள் குடும்பத்தாரிடம் ஒருபோதும் திரும்பமாட்டார்கள் என்று நீங்கள் நிச்சயமாக எண்ணிக் கொண்டிருந்தீர்கள்; இதுவே, உங்கள் இதயங்களில் அழகாக்கப்பட்டது: ஆதலால், நீங்கள் ஒரு கெட்ட எண்ணத்தை எண்ணிக்கொண்டிருந்தீர்கள்; அதனால், நீங்கள் அழிந்துவிடும் சமூகத்தினராகி விட்டீர்கள்.
49:3 اِنَّ الَّذِيْنَ يَغُضُّوْنَ اَصْوَاتَهُمْ عِنْدَ رَسُوْلِ اللّٰهِ اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ امْتَحَنَ اللّٰهُ قُلُوْبَهُمْ لِلتَّقْوٰىؕ لَهُمْ مَّغْفِرَةٌ وَّاَجْرٌ عَظِيْمٌ
49:3. நிச்சயமாக, எவர்கள் அல்லாஹ்வுடைய தூதரின் முன்பு, தங்களுடைய சப்தங்களைத் தாழ்த்திக்கொள்கிறார்களோ அ(த்தகைய)வர்களின் இதயங்களை அல்லாஹ், (தன்னை) அஞ்சுவதற்காகச் சோதனை செய்கிறான்; அவர்களுக்கு மன்னிப்பும், மகத்தான கூலியும் உண்டு.
49:7 وَاعْلَمُوْۤا اَنَّ فِيْكُمْ رَسُوْلَ اللّٰهِؕ لَوْ يُطِيْعُكُمْ فِىْ كَثِيْرٍ مِّنَ الْاَمْرِ لَعَنِتُّمْ وَ لٰـكِنَّ اللّٰهَ حَبَّبَ اِلَيْكُمُ الْاِيْمَانَ وَزَيَّنَهٗ فِىْ قُلُوْبِكُمْ وَكَرَّهَ اِلَيْكُمُ الْكُفْرَ وَالْفُسُوْقَ وَالْعِصْيَانَؕ اُولٰٓٮِٕكَ هُمُ الرّٰشِدُوْنَۙ
49:7. அறிந்துகொள்ளுங்கள்! நிச்சயமாக உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார்: அநேக காரியங்களில் அவர் உங்களுக்குக் கீழ்ப்படிந்தால், திடமாக நீங்கள்தாம் கஷ்டத்திற்குள்ளாவீர்கள்; எனினும், அல்லாஹ் நம்பிக்கையை உங்களுக்குப் பிரியமுடையதாக்கி உங்கள் இதயங்களில் அதனை அழகாக்கியும் வைத்தான்; அன்றியும், நிராகரிப்பையும் பாவத்தையும், மாறுசெய்வதையும் உங்களுக்கு வெறுப்பாகவும் ஆக்கினான்; இத்தகையவர்கள்தாம் நேர்வழியில் நடப்பவர்கள்.
49:14 قَالَتِ الْاَعْرَابُ اٰمَنَّا ؕ قُلْ لَّمْ تُؤْمِنُوْا وَلٰـكِنْ قُوْلُوْۤا اَسْلَمْنَا وَلَمَّا يَدْخُلِ الْاِيْمَانُ فِىْ قُلُوْبِكُمْ ۚ وَاِنْ تُطِيْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ لَا يَلِتْكُمْ مِّنْ اَعْمَالِكُمْ شَيْـٴًــــا ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ
49:14. "நாங்களும் நம்பிக்கை கொண்டோம்" என்று (நபியே! உம்மிடம்) நாட்டுப்புறத்து அரபிகள் கூறுகிறார்கள்: "நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை; எனினும், 'நாங்கள் வழிப்பட்டோம்' (இஸ்லாத்தைத் தழுவினோம்) என்று (வேண்டுமானால்) கூறுங்கள்" (என நபியே! அவர்களிடம்) கூறுவீராக! "ஏனெனில், உங்களுடைய இதயங்களில் (உண்மையான) நம்பிக்கை நுழையவே இல்லை; மேலும், நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிவீர்களாயின் அவன் உங்களுடைய (நற்)செயல்களில், எதையும் உங்களுக்குக் குறைக்க மாட்டான்; நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்."
50:33 مَنْ خَشِىَ الرَّحْمٰنَ بِالْغَيْبِ وَجَآءَ بِقَلْبٍ مُّنِيْبِۙ
50:33. எவர் மறைவிலும் அளவற்ற அருளாளனை அஞ்சி (அவனையே) முற்றிலும் நோக்கிய இதயத்துடன் வந்தாரோ (அவருக்கு இது வாக்களிக்கப்பட்டிருக்கிறது).
50:37 اِنَّ فِىْ ذٰلِكَ لَذِكْرٰى لِمَنْ كَانَ لَهٗ قَلْبٌ اَوْ اَلْقَى السَّمْعَ وَهُوَ شَهِيْدٌ
50:37. எவருக்கு (நல்ல) இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவி தாழ்த்திக் கேட்கிறாரோ அ(த்தகைய)வருக்கு நிச்சயமாக இதில் நினைவுறுத்தல் (படிப்பினை) இருக்கிறது.
57:16 اَلَمْ يَاْنِ لِلَّذِيْنَ اٰمَنُوْۤا اَنْ تَخْشَعَ قُلُوْبُهُمْ لِذِكْرِ اللّٰهِ وَمَا نَزَلَ مِنَ الْحَـقِّۙ وَلَا يَكُوْنُوْا كَالَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلُ فَطَالَ عَلَيْهِمُ الْاَمَدُ فَقَسَتْ قُلُوْبُهُمْؕ وَكَثِيْرٌ مِّنْهُمْ فٰسِقُوْنَ
57:16. நம்பிக்கை கொண்டவர்களுக்கு, அவர்களுடைய இதயங்கள் அல்லாஹ்வையும், இறங்கியுள்ள உண்மையான (வேதத்)தையும் நினைத்தால் அஞ்சி நடுங்கும் நேரம் வரவில்லையா? மேலும், அவர்கள் - முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களைப்போல் ஆகி விடவேண்டாம்; (ஏனெனில்,) அவர்கள்மீது நீண்ட காலம் சென்றபின், அவர்களுடைய இதயங்கள் கடினமாகிவிட்டன; அன்றியும், அவர்களில் பெரும்பாலோர் பாவிகளாக ஆகிவிட்டனர்.
58:22 لَا تَجِدُ قَوْمًا يُّؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ يُوَآدُّوْنَ مَنْ حَآدَّ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَلَوْ كَانُوْۤا اٰبَآءَهُمْ اَوْ اَبْنَآءَهُمْ اَوْ اِخْوَانَهُمْ اَوْ عَشِيْرَتَهُمْؕ اُولٰٓٮِٕكَ كَتَبَ فِىْ قُلُوْبِهِمُ الْاِيْمَانَ وَاَيَّدَهُمْ بِرُوْحٍ مِّنْهُ ؕ وَيُدْخِلُهُمْ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا ؕ رَضِىَ اللّٰهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ ؕ اُولٰٓٮِٕكَ حِزْبُ اللّٰهِ ؕ اَلَاۤ اِنَّ حِزْبَ اللّٰهِ هُمُ الْمُفْلِحُوْنَ
58:22. அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பும் சமூகத்தினர், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக்கொண்டவர்களை நேசிப்பவர்களாக (நபியே!) நீர் காணமாட்டீர்; அவர்கள் தங்கள் பெற்றோராயினும் தங்கள் புதல்வர்களாயினும் தங்கள் சகோதரர்களாயினும் தங்கள் குடும்பத்தினராயினும் சரியே; (ஏனெனில்,) அத்தகையவர்களின் இதயங்களில், (அல்லாஹ்) நம்பிக்கையை எழுதி(ப் பதித்து) விட்டான்; மேலும், அவன் தன்னிடமிருந்து (அருள் என்னும்) ஆன்மாவைக்கொண்டு பலப்படுத்தியிருக்கிறான்; சுவர்க்கச் சோலைகளில் அவர்களைப் பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டு இருக்கும்: அவற்றில் அவர்கள் நிரந்தரமாக(த் தங்கி) இருப்பவர்கள்; அல்லாஹ் அவர்களைப் பொருந்திக்கொண்டான்; அவர்களும் அவனைப் பொருந்திக்கொண்டார்கள்; அவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர்; அறிந்து கொள்க! நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர்தாம் வெற்றி பெறுபவர்கள்.
59:2 هُوَ الَّذِىْۤ اَخْرَجَ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ اَهْلِ الْكِتٰبِ مِنْ دِيَارِهِمْ لِاَوَّلِ الْحَشْرِؔؕ مَا ظَنَنْـتُمْ اَنْ يَّخْرُجُوْا وَظَنُّوْۤا اَنَّهُمْ مَّانِعَتُهُمْ حُصُوْنُهُمْ مِّنَ اللّٰهِ فَاَتٰٮهُمُ اللّٰهُ مِنْ حَيْثُ لَمْ يَحْتَسِبُوْا وَقَذَفَ فِىْ قُلُوْبِهِمُ الرُّعْبَ يُخْرِبُوْنَ بُيُوْتَهُمْ بِاَيْدِيْهِمْ وَاَيْدِى الْمُؤْمِنِيْنَ فَاعْتَبِـرُوْا يٰۤاُولِى الْاَبْصَارِ
59:2. வேதத்தை உடையோரில் எவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்தனரோ, அவர்களை அவர்களுடைய வீடுகளிலிருந்து (மதீனாவிலிருந்து சிரியா தேசத்தின்பால்) முதல் வெளியேற்றத்தில் வெளியேற்றியவன் அவனே; எனினும், அவர்கள் வெளியேறுவார்கள் என்று நீங்கள் நினைக்கவில்லை; அவர்களும் தங்களுடைய கோட்டைகள் நிச்சயமாக அல்லாஹ்வை விட்டும் தங்களைத் தடுத்துக்கொள்பவை என்று நினைத்தார்கள்; ஆனால், அவர்கள் எண்ணியிராத புறத்திலிருந்து அவர்கள்பால் அல்லாஹ் (வேதனையைக் கொண்டு) வந்து அவர்களுடைய இதயங்களில் பீதியையும் போட்டான்; அன்றியும், அவர்கள் தம் கைகளாலும் நம்பிக்கையாளர்களின் கைகளாலும் தம் வீடுகளை பாழ்படுத்திக் கொண்டனர்; எனவே, அகப் பார்வையுடையோரே! நீங்கள் (இதிலிருந்து) படிப்பினை பெறுவீர்களாக!
59:10 وَالَّذِيْنَ جَآءُوْ مِنْۢ بَعْدِهِمْ يَقُوْلُوْنَ رَبَّنَا اغْفِرْ لَـنَا وَلِاِخْوَانِنَا الَّذِيْنَ سَبَقُوْنَا بِالْاِيْمَانِ وَلَا تَجْعَلْ فِىْ قُلُوْبِنَا غِلًّا لِّلَّذِيْنَ اٰمَنُوْا رَبَّنَاۤ اِنَّكَ رَءُوْفٌ رَّحِيْمٌ
59:10. அவர்களுக்குப் பின் குடியேறியவர்களுக்கும் (இதில் பங்குண்டு); அவர்கள், "எங்கள் இறைவனே! எங்களுக்கும், நம்பிக்கை கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக! அன்றியும், நம்பிக்கை கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் வெறுப்பை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்" என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர்.
59:14 لَا يُقَاتِلُوْنَكُمْ جَمِيْعًا اِلَّا فِىْ قُرًى مُّحَصَّنَةٍ اَوْ مِنْ وَّرَآءِ جُدُرٍؕ بَاْسُهُمْ بَيْنَهُمْ شَدِيْدٌ ؕ تَحْسَبُهُمْ جَمِيْعًا وَّقُلُوْبُهُمْ شَتّٰىؕ ذٰلِكَ بِاَنَّهُمْ قَوْمٌ لَّا يَعْقِلُوْنَۚ
59:14. கோட்டைகளால் அரண் செய்யப்பட்ட ஊர்களிலோ அல்லது மதில்களுக்கு அப்பால் இருந்துகொண்டோ அல்லாமல், அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து உங்களுடன் போரிடமாட்டார்கள்; அவர்களுக்குள்ளேயே அவர்களுடைய போர் மிகக் கடுமையானது; (இந்நிலையில்) அவர்கள் யாவரும் ஒன்றுபட்டிருப்பதாக நீர் எண்ணுகிறீர்; (ஆனால்,) அவர்களுடைய இதயங்கள் சிதறிக் கிடக்கின்றன; இதற்குக் காரணம்: மெய்யாகவே அவர்கள் அறிவற்ற சமூகத்தார் என்பதுதான்.
61:5 وَاِذْ قَالَ مُوْسٰى لِقَوْمِهٖ يٰقَوْمِ لِمَ تُؤْذُوْنَنِىْ وَقَدْ تَّعْلَمُوْنَ اَنِّىْ رَسُوْلُ اللّٰهِ اِلَيْكُمْؕ فَلَمَّا زَاغُوْۤا اَزَاغَ اللّٰهُ قُلُوْبَهُمْؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْفٰسِقِيْنَ
61:5. மேலும், மூஸா தம் சமூகத்தாரிடம்: "என் சமூகத்தாரே! நிச்சயமாக நான், உங்களிடம் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதன் என்பதை நீங்கள் திடமாக அறிந்துகொண்டே, ஏன் என்னைத் துன்புறுத்துகிறீர்கள்?" என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவுகூர்வீராக!); ஆகவே, அவர்கள் (நேர்வழியிலிருந்து) சறுகிய பொழுது, அல்லாஹ் அவர்களுடைய இதயங்களை (நேர்வழியிலிருந்து) சறுகச் செய்தான்; அன்றியும், பாவம் செய்வோரான சமூகத்தாரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்தமாட்டான்.
63:3 ذٰلِكَ بِاَنَّهُمْ اٰمَنُوْا ثُمَّ كَفَرُوْا فَطُبِعَ عَلٰى قُلُوْبِهِمْ فَهُمْ لَا يَفْقَهُوْنَ
63:3. இது, நிச்சயமாக இவர்கள் நம்பிக்கை கொண்டு, பின் நிராகரித்து விட்டதனாலேயாகும்; ஆகவே, இவர்களின் இதயங்கள் மீது முத்திரையிடப்பட்டுவிட்டது; எனவே, அவர்கள் விளங்கிக்கொள்ளமாட்டார்கள்.
64:11 مَاۤ اَصَابَ مِنْ مُّصِيْبَةٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِؕ وَمَنْ يُّؤْمِنْۢ بِاللّٰهِ يَهْدِ قَلْبَهٗؕ وَاللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ
64:11. எந்தத் துன்பமும் அல்லாஹ்வின் அனுமதி கொண்டேயல்லாமல் ஏற்படுவதில்லை; மேலும், எவர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவருடைய இதயத்தை அவன் நேர்வழியில் செலுத்துகிறான்; அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன்.
66:4 اِنْ تَتُوْبَاۤ اِلَى اللّٰهِ فَقَدْ صَغَتْ قُلُوْبُكُمَاۚ وَاِنْ تَظٰهَرَا عَلَيْهِ فَاِنَّ اللّٰهَ هُوَ مَوْلٰٮهُ وَجِبْرِيْلُ وَصَالِحُ الْمُؤْمِنِيْنَۚ وَالْمَلٰٓٮِٕكَةُ بَعْدَ ذٰلِكَ ظَهِيْرٌ
66:4. நீங்கள் இருவரும் - இதற்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருவீர்களாயின் (அது உங்களுக்கு நலமாகும்); ஏனெனில், நிச்சயமாக உங்களிருவரின் இதயங்களும் (இவ்விஷயத்தில் கோணிச்) சாய்ந்து விட்டன: தவிர, நீங்கள் இருவரும் அவருக்கெதிராய் ஒருவருக்கொருவர் உதவிசெய்து கொண்டால், நிச்சயமாக அல்லாஹ் - அவருடைய எஜமானன் - (அவருக்கு உதவுவான்; அன்றியும்) ஜிப்ரீலும், நம்பிக்கையாளர்களில் நல்லோரும் (உதவுவார்கள்); அதன்பின் வானவர்களும் (அவருக்கு) உதவியாளர்களாக இருப்பார்கள்.
74:31 وَمَا جَعَلْنَاۤ اَصْحٰبَ النَّارِ اِلَّا مَلٰٓٮِٕكَةً وَّمَا جَعَلْنَا عِدَّتَهُمْ اِلَّا فِتْنَةً لِّلَّذِيْنَ كَفَرُوْا ۙ لِيَسْتَيْقِنَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ وَيَزْدَادَ الَّذِيْنَ اٰمَنُوْۤا اِيْمَانًا وَّلَا يَرْتَابَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ وَالْمُؤْمِنُوْنَۙ وَلِيَقُوْلَ الَّذِيْنَ فِىْ قُلُوْبِهِمْ مَّرَضٌ وَّالْكٰفِرُوْنَ مَاذَاۤ اَرَادَ اللّٰهُ بِهٰذَا مَثَلًا ؕ كَذٰلِكَ يُضِلُّ اللّٰهُ مَنْ يَّشَآءُ وَيَهْدِىْ مَنْ يَّشَآءُ ؕ وَمَا يَعْلَمُ جُنُوْدَ رَبِّكَ اِلَّا هُوَ ؕ وَمَا هِىَ اِلَّا ذِكْرٰى لِلْبَشَرِ
74:31. அன்றியும், நரகக் காவலாளிகளை வானவர்கள் அல்லாமல் நாம் ஆக்கவில்லை; நிராகரித்தவர்களுக்கு அவர்களுடைய எண்ணிக்கையை ஒரு சோதனையாகவே ஆக்கினோம்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் உறுதிகொள்வதற்கும், நம்பிக்கைகொண்டவர்கள் நம்பிக்கையை அதிகரித்துக்கொள்வதற்கும், வேதம் கொடுக்கப்பட்டவர்களும் நம்பிக்கையாளர்களும் சந்தேகம் கொள்ளாமல் இருப்பதற்கும் (நாம் இவ்வாறு ஆக்கினோம்); எனினும், எவர்களுடைய இதயங்களில் நோய் இருக்கிறதோ அவர்களும், நிராகரிப்பாளர்களும் "அல்லாஹ் (பத்தொன்பது எனும்) இந்த (எண்ணிக்கையின்) உதாரணத்தைக் கொண்டு எ(ன்ன கருத்)தை நாடினான்?" எனக் கேட்பதற்காகவுமே (இவ்வாறு ஆக்கினோம்); இவ்வாறே அல்லாஹ், தான் நாடியவர்களை வழிகேட்டிலும் விடுகிறான்; இன்னும், தான் நாடியவர்களை நேர்வழியிலும் செலுத்துகிறான்; அன்றியும், உம்முடைய இறைவனின் படைகளை அவனைத் தவிர (மற்றெவரும்) அறியமாட்டார்கள்; அது (ஸகர் பற்றிய செய்தி) மனிதர்களுக்கு (நினைவூட்டும்) உபதேசமேயன்றி வேறில்லை.
79:8 قُلُوْبٌ يَّوْمَٮِٕذٍ وَّاجِفَةٌ ۙ
79:8. அந்நாளில் நெஞ்சங்கள் திடுக்கிட்டவையாக இருக்கும்.
83:14 كَلَّا ٚ بَلْ رَانَ عَلٰى قُلُوْبِهِمْ مَّا كَانُوْا يَكْسِبُوْنَ
83:14. அப்படியல்ல! மாறாக, அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை அவர்களுடைய இதயங்கள் மீது துருவாகப் படிந்துவிட்டன.