இப்ராஹீம்
2:124 وَاِذِ ابْتَلٰٓى اِبْرٰهٖمَ رَبُّهٗ بِكَلِمٰتٍ فَاَتَمَّهُنَّ ؕ قَالَ اِنِّىْ جَاعِلُكَ لِلنَّاسِ اِمَامًا ؕ قَالَ وَمِنْ ذُرِّيَّتِىْ ؕ قَالَ لَا يَنَالُ عَهْدِى الظّٰلِمِيْنَ
2:124. (இன்னும், இதையும் எண்ணிப் பாருங்கள்;) இப்ராஹீமை அவருடைய இறைவன் சில கட்டளைகள் கொண்டு சோதித்தான்; அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார்; "நிச்சயமாக நான் உம்மை மக்களுக்குத் தலைவராக ஆக்குகிறேன்" என்று அவன் கூறினான்; அதற்கு இப்ராஹீம், "என் சந்ததியினரிலும் (தலைவர்களை ஆக்குவாயா?)" எனக் கேட்டார்; "என் வாக்குறுதி (உம் சந்ததியிலுள்ள) அநியாயக்காரர்களுக்குச் சேராது" என்று கூறினான்.
2:125 وَاِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِّلنَّاسِ وَاَمْنًا ؕ وَاتَّخِذُوْا مِنْ مَّقَامِ اِبْرٰهٖمَ مُصَلًّى ؕ وَعَهِدْنَآ اِلٰٓى اِبْرٰهٖمَ وَاِسْمٰعِيْلَ اَنْ طَهِّرَا بَيْتِىَ لِلطَّآٮِٕفِيْنَ وَالْعٰكِفِيْنَ وَالرُّکَّعِ السُّجُوْدِ
2:125. (இதையும் எண்ணிப்பாருங்கள்: "கஃபா என்னும்) அந்த ஆலயத்தை நாம் மக்கள் ஒன்று கூடும் இடமாகவும், இன்னும் பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்: இப்ராஹீம் நின்ற இடத்தை தொழும் இடமாக ஆக்கிக் கொள்ளுங்கள்" (என்றும் நாம் சொன்னோம்); இன்னும், "என் ஆலயத்தை சுற்றிவருபவர்கள், தங்கி இருப்பவர்கள், ருகூஉ செய்பவர்கள், ஸஜ்தா செய்பவர்கள் ஆகியோருக்காக நீங்களிருவரும் தூய்மையாக வைத்திருக்கவேண்டும்" என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதிமொழி வாங்கினோம்.
2:127 وَاِذْ يَرْفَعُ اِبْرٰهٖمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَاِسْمٰعِيْلُؕ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ؕ اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ
2:127. இப்ராஹீமும், இஸ்மாயீலும் இவ்வாலயத்தின் அடித்தளத்தை உயர்த்தியபோது, "எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக்கொள்வாயாக! நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்" (என்றும்).
2:130 وَمَنْ يَّرْغَبُ عَنْ مِّلَّةِ اِبْرٰهٖمَ اِلَّا مَنْ سَفِهَ نَفْسَهٗ ؕ وَلَقَدِ اصْطَفَيْنٰهُ فِى الدُّنْيَا ۚ وَاِنَّهٗ فِى الْاٰخِرَةِ لَمِنَ الصّٰلِحِيْنَ
2:130. இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்? - தன்னைத்தானே மடையனாக்கிக் கொண்டவனைத் தவிர; நிச்சயமாக நாம் அவரை இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம்; நிச்சயமாக அவர் மறுமையில் நல்லவர்களில் இருப்பார்.
2:132 وَوَصّٰى بِهَآ اِبْرٰهٖمُ بَنِيْهِ وَ يَعْقُوْبُؕ يٰبَنِىَّ اِنَّ اللّٰهَ اصْطَفٰى لَـكُمُ الدِّيْنَ فَلَا تَمُوْتُنَّ اِلَّا وَاَنْـتُمْ مُّسْلِمُوْنَؕ
2:132. இதையே இப்ராஹீம் தம் குமாரர்களுக்கு உபதேசம் செய்தார்; யஃகூபும் (இவ்வாறே செய்தார்); "என் குமாரர்களே! அல்லாஹ் உங்களுக்காக இம்மார்க்கத்தை (இஸ்லாமை) தேர்ந்தெடுத்துள்ளான்; நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள்."
2:133 اَمْ كُنْتُمْ شُهَدَآءَ اِذْ حَضَرَ يَعْقُوْبَ الْمَوْتُۙ اِذْ قَالَ لِبَنِيْهِ مَا تَعْبُدُوْنَ مِنْۢ بَعْدِىْؕ قَالُوْا نَعْبُدُ اِلٰهَكَ وَاِلٰهَ اٰبَآٮِٕكَ اِبْرٰهٖمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ اِلٰهًا وَّاحِدًا ۖۚ وَّنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ
2:133. யஃகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சிகளாக இருந்தீர்களா? அப்போது அவர் தம் குமாரர்களிடம், "எனக்குப்பின் நீங்கள் எதனை வணங்குவீர்கள்?" என்று கேட்டதற்கு, "உங்கள் இறைவனை - உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனான ஒரே இறைவனையே வணங்குவோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்களாக இருப்போம்" என்று கூறினர்.
2:135 وَقَالُوْا کُوْنُوْا هُوْدًا اَوْ نَصٰرٰى تَهْتَدُوْا ؕ قُلْ بَلْ مِلَّةَ اِبْرٰهٖمَ حَنِيْفًا ؕ وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِيْنَ
2:135. "நீங்கள் யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக மாறிவிடுங்கள் - நீங்கள் நேர்வழியை அடைவீர்கள்" என்று அவர்கள் கூறுகிறார்கள்; "அப்படியல்ல! நேரான வழியைச் சார்ந்த இப்ராஹீமின் மார்க்கத்தையே (பின்பற்றுவோம்); அவர் இணை வைப்பவர்களில் இருந்தவரல்லர்" என்று (நபியே) நீர் கூறுவீராக!
2:136 قُوْلُوْٓا اٰمَنَّا بِاللّٰهِ وَمَآ اُنْزِلَ اِلَيْنَا وَمَآ اُنْزِلَ اِلٰٓى اِبْرٰهٖمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَ الْاَسْبَاطِ وَمَآ اُوْتِىَ مُوْسٰى وَعِيْسٰى وَمَآ اُوْتِىَ النَّبِيُّوْنَ مِنْ رَّبِّهِمْۚ لَا نُفَرِّقُ بَيْنَ اَحَدٍ مِّنْهُمْ وَنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ
2:136. "நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்)தையும், இப்ராஹீம், இஸ்மாயில், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும், இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம்; அவர்களில் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்டமாட்டோம்; இன்னும், நாங்கள் அவனுக்கே வழிப்படுகிறோம்" என்று (நம்பிக்கை கொண்டோரே!) நீங்களும் கூறுங்கள்.
2:140 اَمْ تَقُوْلُوْنَ اِنَّ اِبْرٰهٖمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَالْاَسْبَاطَ كَانُوْا هُوْدًا اَوْ نَصٰرٰىؕ قُلْ ءَاَنْـتُمْ اَعْلَمُ اَمِ اللّٰهُ ؕ وَمَنْ اَظْلَمُ مِمَّنْ كَتَمَ شَهَادَةً عِنْدَهٗ مِنَ اللّٰهِؕ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ
2:140. "நிச்சயமாக இப்ராஹீமும், இஸ்மாயீலும், இஸ்ஹாக்கும், யஃகூபும், இன்னும் (அவர்களுடைய) சந்ததியினர் யாவரும் யூதர்கள் அல்லது கிறிஸ்தவர்களே" என்று கூறுகின்றீர்களா? (நபியே!) நீர் கேட்பீராக: "நீங்கள் நன்கு அறிந்தவர்களா? அல்லது அல்லாஹ்வா? அல்லாஹ்விடமிருந்து தன்பால் வந்திருக்கும் சாட்சியத்தை மறைப்பவனைவிட அநியாயக்காரன் யார்? இன்னும், அல்லாஹ் நீங்கள் செய்பவைப்பற்றிப் பராமுகமானவனாக இல்லை."
2:258 اَلَمْ تَرَ اِلَى الَّذِىْ حَآجَّ اِبْرٰهٖمَ فِىْ رَبِّهٖۤ اَنْ اٰتٰٮهُ اللّٰهُ الْمُلْكَۘ اِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّىَ الَّذِىْ يُحْىٖ وَيُمِيْتُۙ قَالَ اَنَا اُحْىٖ وَاُمِيْتُؕ قَالَ اِبْرٰهٖمُ فَاِنَّ اللّٰهَ يَاْتِىْ بِالشَّمْسِ مِنَ الْمَشْرِقِ فَاْتِ بِهَا مِنَ الْمَغْرِبِ فَبُهِتَ الَّذِىْ كَفَرَؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَۚ
2:258. அல்லாஹ் தனக்கு அரசாட்சி கொடுத்ததின் காரணமாக (ஆணவங்கொண்டு), இப்ராஹீமிடத்தில் அவருடைய இறைவனைப்பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் கவனித்தீரா? இப்ராஹீம் கூறினார்: "எவன் உயிர்கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய இறைவன்" என்று; அதற்கவன், "நானும் உயிர்கொடுக்கிறேன்; மரணம் அடையும்படியும் செய்கிறேன்" என்று கூறினான்; (அப்பொழுது) இப்ராஹீம் கூறினார்: "திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்; நீ அதை மேற்குத் திசையில் உதிக்கச் செய்" என்று; (அல்லாஹ்வை) நிராகரித்த அவன், வாயடைப்பட்டுப் போனான்; தவிர, அல்லாஹ் அநியாயம் செய்யும் கூட்டத்தாருக்கு நேர்வழி காண்பிப்பதில்லை.
2:260 وَاِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّ اَرِنِىْ كَيْفَ تُحْىِ الْمَوْتٰى ؕ قَالَ اَوَلَمْ تُؤْمِنْؕ قَالَ بَلٰى وَلٰـكِنْ لِّيَطْمَٮِٕنَّ قَلْبِىْؕ قَالَ فَخُذْ اَرْبَعَةً مِّنَ الطَّيْرِ فَصُرْهُنَّ اِلَيْكَ ثُمَّ اجْعَلْ عَلٰى كُلِّ جَبَلٍ مِّنْهُنَّ جُزْءًا ثُمَّ ادْعُهُنَّ يَاْتِيْنَكَ سَعْيًا ؕ وَاعْلَمْ اَنَّ اللّٰهَ عَزِيْزٌ حَكِيْمٌ
2:260. இன்னும், இப்ராஹீம்: "என் இறைவா! இறந்தவர்களை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காண்பிப்பாயாக!" என வேண்டியபோது, அவன் "நீர் (இதை) நம்பவில்லையா?" எனக் கேட்டான்; "அவ்வாறல்ல! (நான் நம்புகிறேன்); ஆனால், என் இதயம் அமைதி பெறுவதற்காக (இவ்வாறு கேட்கிறேன்)" எனக் கூறினார்: "(அப்படியாயின்,) பறவைகளிலிருந்து நான்கைப் பிடித்து, அவற்றைத் துண்டு துண்டாக வெட்டி உம்மிடம் வைத்துக்கொள்ளும்; பின்னர், அவற்றின் ஒவ்வொரு பாகத்தையும் மலையின் மீது வைத்துவிடும்; பின், அவற்றைக் கூப்பிடும்; அவை உம்மிடம் வேகமாய் வரும்; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், ஞானம் மிக்கவன் என்பதை அறிந்து கொள்ளும்" என்று (அல்லாஹ்) கூறினான்.
3:33 اِنَّ اللّٰهَ اصْطَفٰۤى اٰدَمَ وَنُوْحًا وَّاٰلَ اِبْرٰهِيْمَ وَاٰلَ عِمْرٰنَ عَلَى الْعٰلَمِيْنَۙ
3:33. ஆதமையும், நூஹையும், இப்ராஹீமின் சந்ததியரையும், இம்ரானின் சந்ததியரையும் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரைவிட மேலாகத் தேர்ந்தெடுத்தான்.
3:65 يٰۤـاَهْلَ الْكِتٰبِ لِمَ تُحَآجُّوْنَ فِىْۤ اِبْرٰهِيْمَ وَمَاۤ اُنْزِلَتِ التَّوْرٰٮةُ وَالْاِنْجِيْلُ اِلَّا مِنْۢ بَعْدِهٖؕ اَفَلَا تَعْقِلُوْنَ
3:65. வேதத்தையுடையோரே! இப்ராஹீமைப் பற்றி (அவர் யூதரா, கிறிஸ்தவரா என்று வீணாக) ஏன் தர்க்கித்துக் கொண்டிருக்கிறீர்கள்? அவருக்குப் பின்னரேயன்றி தவ்ராத்தும், இன்ஜீலும் இறக்கப்படவில்லை; (இதைக் கூட) நீங்கள் விளங்கிக்கொள்ள மாட்டீர்களா?
3:68 اِنَّ اَوْلَى النَّاسِ بِاِبْرٰهِيْمَ لَـلَّذِيْنَ اتَّبَعُوْهُ وَهٰذَا النَّبِىُّ وَالَّذِيْنَ اٰمَنُوْا ؕ وَاللّٰهُ وَلِىُّ الْمُؤْمِنِيْنَ
3:68. நிச்சயமாக மனிதர்களில் இப்ராஹீமுக்கு மிகவும் நெருங்கியவர்கள், அவரைப் பின்பற்றியோரும், இந்த நபியும் (அல்லாஹ்வின் மீதும், இந்த நபியின் மீதும்) நம்பிக்கை கொண்டோருமே ஆவர். மேலும், அல்லாஹ் நம்பிக்கையாளர்களின் பாதுகாவலனாக இருக்கின்றான்.
3:84 قُلْ اٰمَنَّا بِاللّٰهِ وَمَاۤ اُنْزِلَ عَلَيْنَا وَمَاۤ اُنْزِلَ عَلٰٓى اِبْرٰهِيْمَ وَ اِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَمَاۤ اُوْتِىَ مُوْسٰى وَ عِيْسٰى وَالنَّبِيُّوْنَ مِنْ رَّبِّهِمْ لَا نُفَرِّقُ بَيْنَ اَحَدٍ مِّنْهُمْ وَنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ
3:84. "அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், (அவர்களின்) சந்ததியர் ஆகியோர் மீது அருளப்பட்டதையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும், (மற்ற) நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நாங்கள் விசுவாசம் கொள்கிறோம்; அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்; நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள் ஆவோம்" என்று (நபியே!) நீர் கூறுவீராக!
3:95 قُلْ صَدَقَ اللّٰهُ فَاتَّبِعُوْا مِلَّةَ اِبْرٰهِيْمَ حَنِيْفًا ؕ وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِيْنَ
3:95. (நபியே) நீர் கூறும்: "அல்லாஹ் (இவை பற்றி) உண்மையையே கூறுகிறான்; ஆகவே, (நம்பிக்கையாளர்களே!) நேரான வழியைச் சார்ந்தவரான இப்ராஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுங்கள்; அவர் இணைவைத்தவர்களில் ஒருவராக இருக்கவில்லை".
3:97 فِيْهِ اٰيٰتٌ ۢ بَيِّنٰتٌ مَّقَامُ اِبْرٰهِيْمَۚ وَمَنْ دَخَلَهٗ كَانَ اٰمِنًا ؕ وَلِلّٰهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ اِلَيْهِ سَبِيْلًا ؕ وَمَنْ كَفَرَ فَاِنَّ اللّٰهَ غَنِىٌّ عَنِ الْعٰلَمِيْنَ
3:97. அதில் தெளிவான அத்தாட்சிகளும் இப்ராஹீம் நின்ற இட(மான மகாமு இப்ராஹீ)மும் இருக்கின்றன; மேலும், எவர் அதில் நுழைகிறாரோ அவர் அச்சம் தீர்ந்தவராகிவிடுகிறார்; இன்னும், எவர்கள் அங்கு யாத்திரை செல்லச் சக்திபெற்று இருக்கிறார்களோ, அத்தகைய மனிதர்கள்மீது, அல்லாஹ்வுக்காக அவ்வாலயத்தை ஹஜ் செய்வது கடமையாகும்; ஆனால், எவரேனும் (இதை) நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை; ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவனாக இருக்கின்றான்.
4:54 اَمْ يَحْسُدُوْنَ النَّاسَ عَلٰى مَاۤ اٰتٰٮهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖۚ فَقَدْ اٰتَيْنَاۤ اٰلَ اِبْرٰهِيْمَ الْـكِتٰبَ وَالْحِكْمَةَ وَاٰتَيْنٰهُمْ مُّلْكًا عَظِيْمًا
4:54. அல்லாஹ் தன் அருளினால் மனிதர்களுக்கு வழங்கியவற்றின் மீது இவர்கள் பொறாமை கொள்கின்றார்களா? இன்னும் நாம், நிச்சயமாக இப்ராஹீமின் சந்ததியினருக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்தோம்; அத்துடன் மாபெரும் அரசாங்கத்தையும் அவர்களுக்குக் கொடுத்தோம்.
4:125 وَمَنْ اَحْسَنُ دِيْنًا مِّمَّنْ اَسْلَمَ وَجْهَهٗ لِلّٰهِ وَهُوَ مُحْسِنٌ وَّاتَّبَعَ مِلَّةَ اِبْرٰهِيْمَ حَنِيْفًا ؕ وَاتَّخَذَ اللّٰهُ اِبْرٰهِيْمَ خَلِيْلًا
4:125. மேலும், எவர் தன் முகத்தை அல்லாஹ்வுக்குப் பணியச் செய்து நன்மை செய்கின்றவராக இருந்து, உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தையும் பின்பற்றுகிறாரோ அவரைவிட அழகிய மார்க்கத்தை உடையவர் யார்? இன்னும், அல்லாஹ் இப்ராஹீமை (தன்) உற்ற நண்பனாக எடுத்துக்கொண்டான்.
4:163 اِنَّاۤ اَوْحَيْنَاۤ اِلَيْكَ كَمَاۤ اَوْحَيْنَاۤ اِلٰى نُوْحٍ وَّالنَّبِيّٖنَ مِنْۢ بَعْدِهٖ ۚ وَاَوْحَيْنَاۤ اِلٰٓى اِبْرٰهِيْمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَعِيْسٰى وَاَيُّوْبَ وَيُوْنُسَ وَهٰرُوْنَ وَسُلَيْمٰنَ ۚ وَاٰتَيْنَا دَاوٗدَ زَبُوْرًا ۚ
4:163. (நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம்; மேலும், இப்ராஹீமுக்கும், இஸ்மாயிலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவருடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும், நாம் தாவூதுக்கு ஜபூர் (என்னும்) வேதத்தைக் கொடுத்தோம்.
6:74 وَاِذْ قَالَ اِبْرٰهِيْمُ لِاَبِيْهِ اٰزَرَ اَتَتَّخِذُ اَصْنَامًا اٰلِهَةً ۚ اِنِّىْۤ اَرٰٮكَ وَقَوْمَكَ فِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ
6:74. இப்ராஹீம், தம் தகப்பனார் ஆஜரிடம், "விக்கிரகங்களையா நீர் தெய்வங்களாக எடுத்துக் கொள்கிறீர்? நான் உம்மையும் உம் சமூகத்தாரையும் பகிரங்கமான வழிகேட்டில் இருப்பதை நிச்சயமாகப் பார்க்கிறேன்" என்று கூறியதை நினைத்துப் பாரும்.
6:75 وَكَذٰلِكَ نُرِىْۤ اِبْرٰهِيْمَ مَلَـكُوْتَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَلِيَكُوْنَ مِنَ الْمُوْقِـنِيْنَ
6:75. இவ்வாறே, வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியை இப்ராஹீமுக்கு நாம் காண்பித்தோம்; அவர் உறுதியான நம்பிக்கையாளராக ஆவதற்காகவும் (இவ்வாறு செய்தோம்).
6:83 وَتِلْكَ حُجَّتُنَاۤ اٰتَيْنٰهَاۤ اِبْرٰهِيْمَ عَلٰى قَوْمِهٖؕ نَرْفَعُ دَرَجٰتٍ مَّنْ نَّشَآءُ ؕ اِنَّ رَبَّكَ حَكِيْمٌ عَلِيْمٌ
6:83. இவை நம்முடைய ஆதாரமாகும்; நாம் இதனை இப்ராஹீமுக்கு அவருடைய கூட்டத்திற்கு எதிராகக் கொடுத்தோம்; நாம் விரும்புவோருக்குப் பதவிகளை உயர்த்துகிறோம்; நிச்சயமாக உம்முடைய இறைவன் ஞானமுள்ளவன்; நன்கறிகிறவன்.
6:161 قُلْ اِنَّنِىْ هَدٰٮنِىْ رَبِّىْۤ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍۚ دِيْنًا قِيَمًا مِّلَّةَ اِبْرٰهِيْمَ حَنِيْفًا ۚ وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِيْنَ
6:161. (நபியே!) நீர் கூறும்: "மெய்யாகவே என் இறைவன் எனக்கு நேரான பாதையின்பால் வழி காட்டினான் - அது மிக உறுதியான மார்க்கமாகும்; சத்திய வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கமுமாகும்: அவர் இணைவைப்பவர்களில் ஒருவராக இருக்கவில்லை."
9:70 اَلَمْ يَاْتِهِمْ نَبَاُ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ قَوْمِ نُوْحٍ وَّعَادٍ وَّثَمُوْدَ ۙ وَقَوْمِ اِبْرٰهِيْمَ وَاَصْحٰبِ مَدْيَنَ وَالْمُؤْتَفِكٰتِ ؕ اَتَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَيِّنٰتِ ۚ فَمَا كَانَ اللّٰهُ لِيَظْلِمَهُمْ وَلٰـكِنْ كَانُوْۤا اَنْفُسَهُمْ يَظْلِمُوْنَ
9:70. இவர்களுக்கு முன்னிருந்த நூஹுடைய சமுதாயம், ஆது, ஸமூது (சமுதாயம்), இப்ராஹீமுடைய சமுதாயம், மத்யன் நகர வாசிகள், தலைகீழாய் புரட்டப்பட்ட ஊரார் ஆகியவர்களின் செய்தி அவர்களுக்கு வரவில்லையா? அவர்களுக்கு (நாம் அனுப்பிய) அவர்களுடைய தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; (தூதர்களை நிராகரித்ததினால் அவர்கள் அழிந்தனர்) - அல்லாஹ் அவர்களுக்கு அநியாயம் செய்பவனாக இல்லை; எனினும், அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டிருந்தார்கள்.
9:114 وَمَا كَانَ اسْتِغْفَارُ اِبْرٰهِيْمَ لِاَبِيْهِ اِلَّا عَنْ مَّوْعِدَةٍ وَّعَدَهَاۤ اِيَّاهُ ۚ فَلَمَّا تَبَيَّنَ لَهٗۤ اَنَّهٗ عَدُوٌّ لِّلّٰهِ تَبَرَّاَ مِنْهُ ؕ اِنَّ اِبْرٰهِيْمَ لَاَوَّاهٌ حَلِيْمٌ
9:114. இப்ராஹீம் (நபி) தம் தந்தைக்காக மன்னிப்புக் கோரியது ஒரு வாக்குறுதிக்காகவே அன்றி வேறில்லை; அதனை அவருக்கு அவர் வாக்களித்திருந்தார். நிச்சயமாக அவர் (தந்தை) அல்லாஹ்வுக்கு விரோதி என்பது அவருக்குத் தெளிவாகியதும், அதிலிருந்து அவர் விலகிக் கொண்டார். நிச்சயமாக இப்ராஹீம் இளகிய மனம் உடையவராகவும், சகிப்புத்தன்மை உடையவராகவும் இருந்தார்.
11:69 وَلَقَدْ جَآءَتْ رُسُلُنَاۤ اِبْرٰهِيْمَ بِالْبُشْرٰى قَالُوْا سَلٰمًا ؕ قَالَ سَلٰمٌ فَمَا لَبِثَ اَنْ جَآءَ بِعِجْلٍ حَنِيْذٍ
11:69. நிச்சயமாக நம் தூதர்கள் (வானவர்கள்) இப்ராஹீமுக்கு நற்செய்தி கொண்டு வந்து "சாந்தி உண்டாவதாக!" என்று கூறினார்கள்; (அதற்கு "உங்களின் மீதும்) சாந்தி உண்டாவதாக!" என்று அவர் சொன்னார்; (அதன் பின்னர் அவர்கள் உண்பதற்காக) பொரித்த கன்றை (அதன் இறைச்சியைக்) கொண்டு வருவதில் தாமதிக்கவில்லை.
11:74 فَلَمَّا ذَهَبَ عَنْ اِبْرٰهِيْمَ الرَّوْعُ وَجَآءَتْهُ الْبُشْرٰى يُجَادِلُــنَا فِىْ قَوْمِ لُوْطٍؕ
11:74. (இது கேட்டு) இப்ராஹீமைவிட்டுப் பயம் நீங்கி, நன்மாராயம் அவருக்கு வந்ததும் லூத்துடைய சமூகத்தாரைப் பற்றி நம்மிடம் வாதிடலானார்.
11:75 اِنَّ اِبْرٰهِيْمَ لَحَـلِيْمٌ اَوَّاهٌ مُّنِيْبٌ
11:75. நிச்சயமாக இப்ராஹீம் சகிப்புத்தன்மையுடையவராகவும், இளகிய மனம் கொண்டவராகவும், (எதற்கும் நம்பால்) திரும்பக்கூடியவராகவும் இருந்தார்.
11:76 يٰۤـاِبْرٰهِيْمُ اَعْرِضْ عَنْ هٰذَا ۚ اِنَّهٗ قَدْ جَآءَ اَمْرُ رَبِّكَ ۚ وَاِنَّهُمْ اٰتِيْهِمْ عَذَابٌ غَيْرُ مَرْدُوْدٍ
11:76. "இப்ராஹீமே! (அம்மக்கள் மீது கொண்ட இரக்கத்தால் இதைப் பற்றி வாதிடாது) இ(வ்விஷயத்)தை நீர் புறக்கணியும்; ஏனெனில், உம்முடைய இறைவனின் கட்டளை நிச்சயமாக வந்துவிட்டது; அன்றியும், நிச்சயமாக அவர்கள் - தவிர்க்க முடியாத வேதனை அவர்களை வரக்கூடியதேயாகும்."
12:6 وَكَذٰلِكَ يَجْتَبِيْكَ رَبُّكَ وَيُعَلِّمُكَ مِنْ تَاْوِيْلِ الْاَحَادِيْثِ وَيُتِمُّ نِعْمَتَهٗ عَلَيْكَ وَعَلٰٓى اٰلِ يَعْقُوْبَ كَمَاۤ اَتَمَّهَا عَلٰٓى اَبَوَيْكَ مِنْ قَبْلُ اِبْرٰهِيْمَ وَاِسْحٰقَ ؕ اِنَّ رَبَّكَ عَلِيْمٌ حَكِيْمٌ
12:6. இவ்வாறே, உன் இறைவன் உன்னைத் தேர்ந்தெடுத்து, கனவுகளின் விளக்கத்தை உனக்குக் கற்றுக்கொடுத்து, தன்னுடைய அருட்கொடையை உன்மீதும், யஃகூபின் சந்ததியினர் மீதும் நிரப்பமாக்கிவைப்பான்; (இதற்கு) முன்னர் இப்ராஹீம், இஸ்ஹாக் ஆகிய உன்னுடைய இரு மூதாதையரின் மீதும் அதனை அவன் நிரப்பமாக்கி வைத்தது போல்; நிச்சயமாக உன் இறைவன் (யாவற்றையும்) நன்கறிந்தோனும், மிக்க ஞானமுடையவனுமாக இருக்கின்றான்" (என்றும் கூறினார்).
12:38 وَاتَّبَعْتُ مِلَّةَ اٰبَآءِىْۤ اِبْرٰهِيْمَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَؕ مَا كَانَ لَنَاۤ اَنْ نُّشْرِكَ بِاللّٰهِ مِنْ شَىْءٍؕ ذٰلِكَ مِنْ فَضْلِ اللّٰهِ عَلَيْنَا وَعَلَى النَّاسِ وَلٰـكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَشْكُرُوْنَ
12:38. "நான் என் மூதாதையர்களான இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரின் மார்க்கத்தைப் பின்பற்றுகிறேன்; அல்லாஹ்வுக்கு எதையும் நாங்கள் இணை வைப்பது எங்களுக்குத் தகுமானதல்ல: இது, எங்கள் மீதும் (இதர) மக்கள் மீதும் அல்லாஹ் புரிந்த அருளாகும்; எனினும், மனிதர்களில் பெரும்பாலோர் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதில்லை."
14:35 وَاِذْ قَالَ اِبْرٰهِيْمُ رَبِّ اجْعَلْ هٰذَا الْبَلَدَ اٰمِنًا وَّاجْنُبْنِىْ وَبَنِىَّ اَنْ نَّـعْبُدَ الْاَصْنَامَؕ
14:35. "என் இறைவனே! இந்த ஊரை (மக்காவை) சமாதானமுள்ளதாய், அச்சம் தீர்ந்ததாய் ஆக்குவாயாக! என்னையும், என் மக்களையும் சிலைகளை நாங்கள் வணங்குவதிலிருந்து காப்பாற்றுவாயாக!" என்று இப்ராஹீம் கூறியதை (நபியே! நீர் அவர்களுக்கு நினைவுகூரும்).
15:51 وَنَبِّئْهُمْ عَنْ ضَيْفِ اِبْرٰهِيْمَۘ
15:51. இன்னும், இப்ராஹீமின் விருந்தினர்களைப் பற்றியும் அவர்களுக்கு அறிவிப்பீராக!
16:120 اِنَّ اِبْرٰهِيْمَ كَانَ اُمَّةً قَانِتًا لِّلّٰهِ حَنِيْفًاؕ وَلَمْ يَكُ مِنَ الْمُشْرِكِيْنَۙ
16:120. நிச்சயமாக இப்ராஹீம் ஒரு தலைவராகவும், அல்லாஹ்வுக்கு அடிபணிந்தவராகவும், சத்திய வழியைச் சார்ந்தவராகவும் இருந்தார். மேலும், அவர் இணைவைப்போரில் ஒருவராக இருக்கவில்லை.
16:123 ثُمَّ اَوْحَيْنَاۤ اِلَيْكَ اَنِ اتَّبِعْ مِلَّةَ اِبْرٰهِيْمَ حَنِيْفًا ؕ وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِيْنَ
16:123. (நபியே!) பின்னர், "சத்திய வழியைச் சார்ந்தவரான இப்ராஹீமின் மார்க்கத்தை நீர் பின்பற்ற வேண்டும்" என்று நாம் உமக்கு 'வஹீ' அறிவித்தோம்; அவர் இணைவைப்போரில் ஒருவராக இருந்ததில்லை.
19:41 وَاذْكُرْ فِى الْكِتٰبِ اِبْرٰهِيْمَ ۙ اِنَّهٗ كَانَ صِدِّيْقًا نَّبِيًّا
19:41. (நபியே!) இவ்வேதத்தில் இப்ராஹீமைப் பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் மிக்க உண்மையாளராகவும், நபியாகவும் இருந்தார்.
19:46 قَالَ اَرَاغِبٌ اَنْتَ عَنْ اٰلِهَتِىْ يٰۤاِبْرٰهِيْمُۚ لَٮِٕنْ لَّمْ تَنْتَهِ لَاَرْجُمَنَّكَ وَاهْجُرْنِىْ مَلِيًّا
19:46. (அதற்கு அவர்) "இப்ராஹீமே! நீர் என் தெய்வங்களைப் புறக்கணிக்கிறீரா? நீர் (இதை விட்டும்) விலகிக் கொள்ளாவிட்டால் உம்மைக் கல்லால் எறிந்து கொல்வேன்; இனி, நீர் என்னைவிட்டு நெடுங்காலத்திற்கு விலகிப் போய்விடும்" என்றார்.
19:58 اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَيْهِمْ مِّنَ النَّبِيّٖنَ مِنْ ذُرِّيَّةِ اٰدَمَ وَمِمَّنْ حَمَلْنَا مَعَ نُوْحٍ وَّمِنْ ذُرِّيَّةِ اِبْرٰهِيْمَ وَاِسْرَآءِيْلَ وَمِمَّنْ هَدَيْنَا وَاجْتَبَيْنَا ؕ اِذَا تُتْلٰى عَلَيْهِمْ اٰيٰتُ الرَّحْمٰنِ خَرُّوْا سُجَّدًا وَّبُكِيًّا ۩
19:58. இவர்கள் ஆதமுடைய சந்ததியிலும், நூஹ்வுடன் (கப்பலில்) நாம் ஏற்றிக்கொண்டவர்களி(ன் சந்ததியி)லும், இப்ராஹீமுடையவும், இஸ்ராயீல் (யஃகூபின்) சந்ததியிலும், இன்னும் நாம் தேர்ந்தெடுத்து நேர்வழியில் செலுத்தியவர்களிலுமுள்ள நபிமார்களாவார்கள்; இவர்கள் மீது அல்லாஹ் அருளைப் பொழிந்தான்; அளவற்ற அருளாளனின் வசனங்கள் அவர்களின் மீது ஓதப்பட்டால், அவர்கள் அழுதவர்களாகவும், ஸுஜூது செய்தவர்களாகவும் விழுவார்கள்.
21:51 وَلَـقَدْ اٰتَيْنَاۤ اِبْرٰهِيْمَ رُشْدَهٗ مِنْ قَبْلُ وَ كُنَّا بِهٖ عٰلِمِيْنَۚ
21:51. இன்னும், நாம் இப்ராஹீமுக்கு முன்னரே (சிறு பிராயத்திலிருந்தே) அவருடைய நேர்வழியைத் திடமாகக் கொடுத்தோம்; மேலும், அவரைப் பற்றி நாம் அறிந்திருந்தோம்.
21:60 قَالُوْا سَمِعْنَا فَتًى يَّذْكُرُهُمْ يُقَالُ لَهٗۤ اِبْرٰهِيْمُ ؕ
21:60. அதற்கு (அவர்களில் சிலர்) "இளைஞர் ஒருவர் இவற்றைப் பற்றிக் (குறை) கூறிக்கொண்டிருந்ததை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம்; அவருக்கு 'இப்ராஹீம்' என்று பெயர் சொல்லப்படுகிறது" என்று கூறினார்கள்.
21:62 قَالُوْٓا ءَاَنْتَ فَعَلْتَ هٰذَا بِاٰلِهَتِنَا يٰۤاِبْرٰهِيْمُؕ
21:62. "இப்ராஹீமே! எங்கள் தெய்வங்களை இவ்வாறு செய்தவர் நீர்தாமோ?" என்று (அவர் வந்ததும்) அவர்கள் கேட்டனர்.
21:69 قُلْنَا يٰنَارُ كُوْنِىْ بَرْدًا وَّسَلٰمًا عَلٰٓى اِبْرٰهِيْمَۙ
21:69. (இப்ராஹீமை தீக்கிடங்கில் எறிந்தபோது,) "நெருப்பே! இப்ராஹீம் மீது நீ குளிர்ச்சியாகவும், சுகமளிக்கக் கூடியதாகவும் ஆகிவிடு!" என்று நாம் கூறினோம்.
22:26 وَاِذْ بَوَّاْنَا لِاِبْرٰهِيْمَ مَكَانَ الْبَيْتِ اَنْ لَّا تُشْرِكْ بِىْ شَيْـٴًـــا وَّطَهِّرْ بَيْتِىَ لِلطَّآٮِٕفِيْنَ وَالْقَآٮِٕمِيْنَ وَ الرُّكَّعِ السُّجُوْدِ
22:26. நாம் இப்ராஹீமுக்குப் புனித ஆலயத்தின் இடத்தை நிர்ணயித்து, "நீர் எனக்கு எவரையும் இணைவைக்காதீர்; என்னுடைய (இந்த) ஆலயத்தைச் சுற்றி வருவோருக்கும், அதில் நிற்போருக்கும், ருகூஉ, ஸுஜூது செய்(து தொழு)வோருக்கும் தூய்மையாக்கி வைப்பீராக!" என்று சொன்னதை (நபியே! நினைவு கூர்வீராக!).
22:43 وَقَوْمُ اِبْرٰهِيْمَ وَقَوْمُ لُوْطٍ ۙ
22:43. (இவ்வாறே) இப்ராஹீமுடைய சமூகத்தினரும் லூத்துடைய சமூகத்தினரும் (பொய்ப்பிக்கவே முற்பட்டார்கள்).
22:78 وَجَاهِدُوْا فِى اللّٰهِ حَقَّ جِهَادِهٖؕ هُوَ اجْتَبٰٮكُمْ وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِى الدِّيْنِ مِنْ حَرَجٍؕ مِلَّةَ اَبِيْكُمْ اِبْرٰهِيْمَؕ هُوَ سَمّٰٮكُمُ الْمُسْلِمِيْنَ ۙ مِنْ قَبْلُ وَفِىْ هٰذَا لِيَكُوْنَ الرَّسُوْلُ شَهِيْدًا عَلَيْكُمْ وَتَكُوْنُوْا شُهَدَآءَ عَلَى النَّاسِ ۖۚ فَاَقِيْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَاعْتَصِمُوْا بِاللّٰهِؕ هُوَ مَوْلٰٮكُمْۚ فَنِعْمَ الْمَوْلٰى وَنِعْمَ النَّصِيْرُ
22:78. இன்னும், நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் அவனுக்காக போராடவேண்டிய முறைப்படி போராடுங்கள்: அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்; இந்த மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை; உங்கள் பிதாவாகிய இப்ராஹீமுடைய மார்க்கத்தை(ப் பின்பற்றுங்கள்); அவன்தான் (இதற்கு) முன்னர் உங்களுக்கு 'முஸ்லிம்கள்' எனப் பெயரிட்டான்; இ(வ்வேதத்)திலும் (அவ்வாறே கூறப்பட்டுள்ளது; இது ஏனெனில் நம்முடைய) இத்தூதர் உங்களுக்குச் சாட்சியாக இருப்பதற்காகவும், நீங்கள் (மற்ற) மனிதர்களின் மீது சாட்சியாக இருப்பதற்காகவும்; எனவே, நீங்கள் தொழுகையை நிலைநிறுத்துங்கள்; இன்னும், ஜகாத்தைக் கொடுங்கள், அல்லாஹ்வைப் பலமாகப் பிடித்துக்கொள்ளுங்கள்; அவன்தான் உங்கள் பாதுகாவலன்; இன்னும், அவனே மிகச்சிறந்த பாதுகாவலன்; இன்னும், மிகச்சிறந்த உதவியாளன்.
26:69 وَاتْلُ عَلَيْهِمْ نَبَاَ اِبْرٰهِيْمَۘ
26:69. இன்னும், நீர் இவர்களுக்கு இப்ராஹீமின் சரித்திரத்தையும் ஓதிக் காண்பிப்பீராக!
29:16 وَاِبْرٰهِيْمَ اِذْ قَالَ لِقَوْمِهِ اعْبُدُوا اللّٰهَ وَاتَّقُوْهُ ؕ ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ اِنْ كُنْـتُمْ تَعْلَمُوْنَ
29:16. இன்னும், இப்ராஹீமையும் (தூதராக நாம் அனுப்பினோம்); அவர் தம் சமூகத்தாரிடம்: "அல்லாஹ்வை நீங்கள் வணங்குங்கள்; அவனையே நீங்கள் அஞ்சுங்கள்; நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்கு நன்மையுடையதாக இருக்கும்" என்று கூறிய வேளையை (நபியே! நினைவூட்டுவீராக)!
29:31 وَلَمَّا جَآءَتْ رُسُلُنَاۤ اِبْرٰهِيْمَ بِالْبُشْرٰىۙ قَالُـوْۤا اِنَّا مُهْلِكُوْۤا اَهْلِ هٰذِهِ الْقَرْيَةِ ۚ اِنَّ اَهْلَهَا كَانُوْا ظٰلِمِيْنَ ۖ ۚ
29:31. நம் தூதர்கள் (மலக்குகள்) இப்ராஹீமிடம் நன்மாராயத்துடன் வந்தபோது, "நிச்சயமாக நாங்கள் இவ்வூராரை அழிக்கிறவர்கள்; ஏனெனில், நிச்சயமாக இதிலுள்ளவர்கள் அநியாயக்காரர்களாக இருக்கின்றனர்" எனக் கூறினார்கள்.
33:7 وَاِذْ اَخَذْنَا مِنَ النَّبِيّٖنَ مِيْثَاقَهُمْ وَمِنْكَ وَمِنْ نُّوْحٍ وَّاِبْرٰهِيْمَ وَمُوْسٰى وَعِيْسَى ابْنِ مَرْيَمَ وَاَخَذْنَا مِنْهُمْ مِّیْثَاقًاغَلِيْظًا ۙ
33:7. (நபியே! நம் கட்டளைகளை எடுத்துக்கூறுமாறு) நபிமார்கள் (அனைவர்களிடமும்), (சிறப்பாக) உம்மிடமும், நூஹ், இப்ராஹீம், மூஸா, மர்யமுடைய குமாரர் ஈஸா ஆகியோரிடமும் நாம் வாக்குறுதி வாங்கிய போது, மிக்க உறுதியான வாக்குறுதியையே அவர்களிடம் நாம் வாங்கினோம்.
37:83 وَاِنَّ مِنْ شِيْعَتِهٖ لَاِبْرٰهِيْمَۘ
37:83. நிச்சயமாக இப்ராஹீமும் அவருடைய வழியைப் பின்பற்றியவர்களில் ஒருவர்தான்.
37:104 وَنَادَيْنٰهُ اَنْ يّٰۤاِبْرٰهِيْمُۙ
37:104. நாம் அவரை "இப்ராஹீமே!" என்றழைத்தோம்.
37:109 سَلٰمٌ عَلٰٓى اِبْرٰهِيْمَ
37:109. இப்ராஹீம் மீது சாந்தி உண்டாவதாக!
38:45 وَاذْكُرْ عِبٰدَنَاۤ اِبْرٰهِيْمَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ اُولِى الْاَيْدِىْ وَالْاَبْصَارِ
38:45. (நபியே!) ஆற்றல் கொண்டவர்களும் அகப்பார்வையும் உடையவர்களாகவும் இருந்த நம் அடியார்களான இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரையும் நினைவுகூர்வீராக!
42:13 شَرَعَ لَـكُمْ مِّنَ الدِّيْنِ مَا وَصّٰى بِهٖ نُوْحًا وَّالَّذِىْۤ اَوْحَيْنَاۤ اِلَيْكَ وَمَا وَصَّيْنَا بِهٖۤ اِبْرٰهِيْمَ وَمُوْسٰى وَعِيْسٰٓى اَنْ اَقِيْمُوا الدِّيْنَ وَ لَا تَتَفَرَّقُوْا فِيْهِؕ كَبُـرَ عَلَى الْمُشْرِكِيْنَ مَا تَدْعُوْهُمْ اِلَيْهِ ؕ اَللّٰهُ يَجْتَبِىْۤ اِلَيْهِ مَنْ يَّشَآءُ وَيَهْدِىْۤ اِلَيْهِ مَنْ يُّنِيْبُ
42:13. நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கிறான்; ஆகவே, (நபியே!) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும் இப்ராஹீமுக்கும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால், "நீங்கள் (அனைவரும்) மார்க்கத்தை நிலைநிறுத்துங்கள்; நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்" என்பதே; இணைவைப்போருக்கு நீங்கள் எதன் பக்கம் அவர்களை அழைக்கின்றீர்களோ, அது அவர்களுக்கு பெரும் சுமையாகத் தெரிகிறது; தான் நாடியவர்களை அல்லாஹ் தன்பால் தேர்ந்தெடுத்துக்கொள்கிறான்; (அவனை) முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான்.
43:26 وَاِذْ قَالَ اِبْرٰهِيْمُ لِاَبِيْهِ وَقَوْمِهٖۤ اِنَّنِىْ بَرَآءٌ مِّمَّا تَعْبُدُوْنَۙ
43:26. அன்றியும் இப்ராஹீம் தம் தந்தையையும் தம் சமூகத்தவர்களையும் நோக்கி: "நிச்சயமாக நான், நீங்கள் வழிபடுபவற்றைவிட்டும் விலகிக்கொண்டேன்" என்று கூறியதையும்
51:14 ذُوْقُوْا فِتْنَتَكُمْؕ هٰذَا الَّذِىْ كُنْتُمْ بِهٖ تَسْتَعْجِلُوْنَ
51:14. "உங்களுடைய வேதனையைச் சுவைத்துப் பாருங்கள்; எதனை நீங்கள் அவசரப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ, அது இதுதான்."
53:37 وَاِبْرٰهِيْمَ الَّذِىْ وَفّٰىٓ ۙ
53:37. (அல்லாஹ்வின் ஆணையைப்) பூரணமாக நிறைவேற்றிய இப்ராஹீமுடைய (ஆகமங்களிலிருந்து அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?)
57:26 وَلَقَدْ اَرْسَلْنَا نُوْحًا وَّ اِبْرٰهِيْمَ وَجَعَلْنَا فِىْ ذُرِّيَّتِهِمَا النُّبُوَّةَ وَالْـكِتٰبَ فَمِنْهُمْ مُّهْتَدٍۚ وَكَثِيْرٌ مِّنْهُمْ فٰسِقُوْنَ
57:26. அன்றியும், திடமாக நாமே நூஹையும் இப்ராஹீமையும் (தூதர்களாக) அனுப்பினோம்; இன்னும், அவ்விருவரின் சந்ததியில் நபித்துவத்தையும் வேதத்தையும் ஏற்படுத்தினோம்; அவர்களில் நேர்வழி பெற்றவர்களும் உண்டு; எனினும், அவர்களில் பெரும்பாலோர் பாவிகளாக இருந்தனர்.
60:4 قَدْ كَانَتْ لَـكُمْ اُسْوَةٌ حَسَنَةٌ فِىْۤ اِبْرٰهِيْمَ وَالَّذِيْنَ مَعَهٗۚ اِذْ قَالُوْا لِقَوْمِهِمْ اِنَّا بُرَءٰٓؤُا مِنْكُمْ وَمِمَّا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ كَفَرْنَا بِكُمْ وَبَدَا بَيْنَنَا وَبَيْنَكُمُ الْعَدَاوَةُ وَالْبَغْضَآءُ اَبَدًا حَتّٰى تُؤْمِنُوْا بِاللّٰهِ وَحْدَهٗۤ اِلَّا قَوْلَ اِبْرٰهِيْمَ لِاَبِيْهِ لَاَسْتَغْفِرَنَّ لَـكَ وَمَاۤ اَمْلِكُ لَـكَ مِنَ اللّٰهِ مِنْ شَىْءٍ ؕ رَبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَاِلَيْكَ اَنَـبْنَا وَاِلَيْكَ الْمَصِيْرُ
60:4. இப்ராஹீமிடமும் அவரோடு இருந்தவர்களிடமும், நிச்சயமாக உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது; தம் சமூகத்தாரிடம் அவர்கள், "உங்களைவிட்டும், இன்னும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகிறவற்றை விட்டும், நாங்கள் நிச்சயமாக நீங்கிக்கொண்டோம்; உங்களையும் நாங்கள் நிராகரித்துவிட்டோம்; அன்றியும், (ஏகனான) அல்லாஹ் ஒருவன் மீதே நீங்கள் நம்பிக்கைகொள்ளும் வரை, நமக்கும் உங்களுக்குமிடையில் பகைமையும், வெறுப்பும் நிரந்தரமாக ஏற்பட்டுவிட்டன" என்றார்கள்; ஆனால், இப்ராஹீம் தம் தந்தையை நோக்கி: "அல்லாஹ்விடத்தில் உமக்காக (அவனுடைய வேதனையிலிருந்து) எதையும் தடுக்க எனக்குச் சக்தியில்லை; ஆயினும், உமக்காக நான் அவனிடத்தில் நிச்சயமாக மன்னிப்புத் தேடுவேன்" எனக் கூறியதைத்தவிர - (மற்ற எல்லாவற்றிலும் முன் மாதிரியிருக்கிறது; அன்றியும், அவர் கூறினார்): "எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கின்றோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்குகிறோம்; மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது."
87:19 صُحُفِ اِبْرٰهِيْمَ وَمُوْسٰى
87:19. இப்ராஹீம், மூஸாவினுடைய ஆகமங்களிலும் (இவ்வாறே அறிவிப்பு இருக்கிறது).