இம்மை வாழ்க்கை
2:86 اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ اشْتَرَوُا الْحَيٰوةَ الدُّنْيَا بِالْاٰخِرَةِ فَلَا يُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ وَلَا هُمْ يُنْصَرُوْنَ
2:86. மறுமைக்குப் பகரமாக, இவ்வுலக வாழ்க்கையை விலைக்கு வாங்கிக்கொண்டவர்கள் இவர்கள்தாம்; ஆகவே, இவர்களுக்கு (ஒரு சிறிதளவும்) வேதனை இலேசாக்கப்படமாட்டாது; இவர்கள் உதவியும் செய்யப்படமாட்டார்கள்.
2:130 وَمَنْ يَّرْغَبُ عَنْ مِّلَّةِ اِبْرٰهٖمَ اِلَّا مَنْ سَفِهَ نَفْسَهٗ ؕ وَلَقَدِ اصْطَفَيْنٰهُ فِى الدُّنْيَا ۚ وَاِنَّهٗ فِى الْاٰخِرَةِ لَمِنَ الصّٰلِحِيْنَ
2:130. இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்? - தன்னைத்தானே மடையனாக்கிக் கொண்டவனைத் தவிர; நிச்சயமாக நாம் அவரை இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம்; நிச்சயமாக அவர் மறுமையில் நல்லவர்களில் இருப்பார்.
2:200 فَاِذَا قَضَيْتُمْ مَّنَاسِكَکُمْ فَاذْکُرُوا اللّٰهَ كَذِكْرِكُمْ اٰبَآءَکُمْ اَوْ اَشَدَّ ذِکْرًا ؕ فَمِنَ النَّاسِ مَنْ يَّقُوْلُ رَبَّنَآ اٰتِنَا فِى الدُّنْيَا وَمَا لَهٗ فِى الْاٰخِرَةِ مِنْ خَلَاقٍ
2:200. ஆகவே, உங்களுடைய (ஹஜ்) கிரியைகளை முடித்ததும், நீங்கள் (இதற்கு முன்னர்) உங்கள் முன்னோர்களை நினைவுகூர்ந்தது போல், அல்லது அதைவிட அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூருங்கள்; மனிதர்களில் சிலர், "எங்கள் இறைவனே! இவ்வுலகிலேயே (எல்லாவற்றையும்) எங்களுக்குத் தந்துவிடு" என்று கூறுகிறார்கள்; அதனால், அவருக்கு மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை.
2:201 وَمِنْهُمْ مَّنْ يَّقُوْلُ رَبَّنَآ اٰتِنَا فِى الدُّنْيَا حَسَنَةً وَّفِى الْاٰخِرَةِ حَسَنَةً وَّ قِنَا عَذَابَ النَّارِ
2:201. "எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகிலும் நன்மையை அளிப்பாயாக! மறுமையிலும் நன்மையை அளிப்பாயாக! இன்னும், எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காப்பாயாக!" எனக் கூறுவோரும் அவர்களில் உள்ளனர்.
2:204 وَمِنَ النَّاسِ مَنْ يُّعْجِبُكَ قَوْلُهٗ فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَيُشْهِدُ اللّٰهَ عَلٰى مَا فِىْ قَلْبِهٖۙ وَهُوَ اَلَدُّ الْخِصَامِ
2:204. (நபியே!) மனிதர்களில் ஒருவன் இருக்கின்றான்; உலக வாழ்க்கை பற்றிய அவன் பேச்சு உம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்; தன் இதயத்தில் உள்ளது பற்றி அல்லாஹ்வையே சாட்சியாக்குவான்; (உண்மையில்) அ(த்தகைய)வன்தான் (உம்முடைய) கொடிய பகைவனாவான்.
2:212 زُيِّنَ لِلَّذِيْنَ كَفَرُوا الْحَيٰوةُ الدُّنْيَا وَيَسْخَرُوْنَ مِنَ الَّذِيْنَ اٰمَنُوْا ۘ وَالَّذِيْنَ اتَّقَوْا فَوْقَهُمْ يَوْمَ الْقِيٰمَةِ ؕ وَاللّٰهُ يَرْزُقُ مَنْ يَّشَآءُ بِغَيْرِ حِسَابٍ
2:212. நிராகரிப்போருக்கு இவ்வுலக வாழ்க்கை அழகாக்கப்பட்டுள்ளது; இதனால், அவர்கள் நம்பிக்கை கொண்டோரை ஏளனம் செய்கிறார்கள். ஆனால், (அல்லாஹ்வை) அஞ்சியவர்கள் மறுமையில் அவர்களைவிட உயர்ந்த நிலையில் இருப்பார்கள். இன்னும், அல்லாஹ் தான் நாடுவோருக்குக் கணக்கின்றிக் கொடுப்பான்.
2:217 يَسْــٴَــلُوْنَكَ عَنِ الشَّهْرِ الْحَـرَامِ قِتَالٍ فِيْهِؕ قُلْ قِتَالٌ فِيْهِ كَبِيْرٌ ؕ وَصَدٌّ عَنْ سَبِيْلِ اللّٰهِ وَ کُفْرٌ ۢ بِهٖ وَالْمَسْجِدِ الْحَـرَامِ وَاِخْرَاجُ اَهْلِهٖ مِنْهُ اَكْبَرُ عِنْدَ اللّٰهِ ۚ وَالْفِتْنَةُ اَکْبَرُ مِنَ الْقَتْلِؕ وَلَا يَزَالُوْنَ يُقَاتِلُوْنَكُمْ حَتّٰى يَرُدُّوْكُمْ عَنْ دِيْـنِکُمْ اِنِ اسْتَطَاعُوْا ؕ وَمَنْ يَّرْتَدِدْ مِنْكُمْ عَنْ دِيْـنِهٖ فَيَمُتْ وَهُوَ کَافِرٌ فَاُولٰٓٮِٕكَ حَبِطَتْ اَعْمَالُهُمْ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ ۚ وَاُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ
2:217. (நபியே!) புனிதமான மாதங்களில் போர்புரிவது பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: அ(க்காலத்)தில் போர்செய்வது பெருங்குற்றமாகும்; ஆனால், அல்லாஹ்வின் பாதையைவிட்டு தடுப்பதும், அவனை நிராகரிப்பதும், (கஃபா எனும்) மஸ்ஜிதுல் ஹராமைவிட்டும் தடுப்பதும், அங்குள்ளவர்களை அதிலிருந்து வெளியேற்றுவதும், (ஆகியவையெல்லாம்) அல்லாஹ்விடம் பெருங்குற்றங்களாகும்; அன்றியும், குழப்பம்செய்வது கொலையைவிடக் கொடியது; அவர்களுக்கு இயன்றால் உங்கள் மார்க்கத்திலிருந்து உங்களைத் திருப்பிவிடும் வரை உங்களுடன் அவர்கள் ஓயாது போரிட்டுக் கொண்டே இருப்பார்கள்: உங்களில் எவரேனும் ஒருவர் தம்முடைய மார்க்கத்திலிருந்து திரும்பி, நிராகரிப்பவராகவே மரணித்துவிட்டால், அவர்களின் (நற்)செயல்கள் இவ்வுலகத்திலும், மறுமையிலும் (பலன் தராமல்) அழிந்துவிடும்; இன்னும், அவர்கள் நரகவாசிகள்; அதில் நிரந்தரமாகத் தங்கிவிடுவார்கள்.
3:14 زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوٰتِ مِنَ النِّسَآءِ وَالْبَـنِيْنَ وَالْقَنَاطِيْرِ الْمُقَنْطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَالْخَـيْلِ الْمُسَوَّمَةِ وَالْاَنْعَامِ وَالْحَـرْثِؕ ذٰ لِكَ مَتَاعُ الْحَيٰوةِ الدُّنْيَا ۚ وَاللّٰهُ عِنْدَهٗ حُسْنُ الْمَاٰبِ
3:14. பெண்கள், ஆண்மக்கள், பொன், வெள்ளியிலிருந்து சேகரிக்கப்பட்ட பெரும் குவியல்கள்; அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள், (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகிய (மனதுக்கு) ஆசையூட்டப்பட்டவற்றை நேசிப்பது மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது; இவை (யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப் பொருள்களாகும்; அல்லாஹ்விடத்திலோ அழகிய தங்குமிடமுண்டு.
3:22 اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ حَبِطَتْ اَعْمَالُهُمْ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ وَمَا لَهُمْ مِّنْ نّٰصِرِيْنَ
3:22. அவர்கள் எத்தகையோரென்றால் அவர்களுடைய செயல்கள் இம்மையிலும் மறுமையிலும் (பலனற்றவையாக) அழிந்துவிட்டன; இன்னும், அவர்களுக்கு உதவியாளர்கள் எவருமிலர்.
3:45 اِذْ قَالَتِ الْمَلٰٓٮِٕكَةُ يٰمَرْيَمُ اِنَّ اللّٰهَ يُبَشِّرُكِ بِكَلِمَةٍ مِّنْهُ ۖ اسْمُهُ الْمَسِيْحُ عِيْسَى ابْنُ مَرْيَمَ وَجِيْهًا فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ وَمِنَ الْمُقَرَّبِيْنَۙ
3:45. வானவர்கள் கூறினார்கள், "மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து ஒரு வார்த்தையைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயம் கூறுகின்றான்; அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும்; அவர் இவ்வுலகத்திலும், மறுமையிலும் கண்ணியமிக்கவராகவும் (இறைவனுக்கு) நெருங்கியவர்களில் ஒருவராகவும் இருப்பார்."
3:56 فَاَمَّا الَّذِيْنَ كَفَرُوْا فَاُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيْدًا فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ وَمَا لَهُمْ مِّنْ نّٰصِرِيْنَ
3:56. எனவே, நிராகரிப்போரை இவ்வுலகிலும், மறுமையிலும் கடினமான வேதனையைக் கொண்டு வேதனை செய்வேன்; அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்கமாட்டார்கள்.
3:57 وَاَمَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَيُوَفِّيْهِمْ اُجُوْرَهُمْؕ وَ اللّٰهُ لَا يُحِبُّ الظّٰلِمِيْنَ
3:57. ஆனால், எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களும் செய்கிறார்களோ, அவர்களுக்குரிய (நற்)கூலிகளை அவன் (அல்லாஹ்) முழுமையாகக் கொடுப்பான்; அல்லாஹ் அக்கிரமம் செய்வோரை நேசிக்க மாட்டான்.
3:117 مَثَلُ مَا يُنْفِقُوْنَ فِىْ هٰذِهِ الْحَيٰوةِ الدُّنْيَا كَمَثَلِ رِيْحٍ فِيْهَا صِرٌّ اَصَابَتْ حَرْثَ قَوْمٍ ظَلَمُوْۤا اَنْفُسَهُمْ فَاَهْلَكَتْهُ ؕ وَمَا ظَلَمَهُمُ اللّٰهُ وَلٰـكِنْ اَنْفُسَهُمْ يَظْلِمُوْنَ
3:117. இவ்வுலக வாழ்வில் அவர்கள் செலவழிப்பது ஒரு காற்றுக்கு ஒப்பாகும்; அது (மிகவும்) குளிர்ந்து (பனிப்புயலாக மாறி) தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட கூட்டத்தாரின் (வயல்களிலுள்ள) விளைச்சலில் பட்டு அதை அழித்துவிடுகிறது. அவர்களுக்கு அல்லாஹ் அநியாயம் செய்யவில்லை; எனினும், அவர்கள் தமக்குத்தாமே அநியாயமிழைத்துக் கொள்கிறார்கள்.
3:145 وَمَا كَانَ لِنَفْسٍ اَنْ تَمُوْتَ اِلَّا بِاِذْنِ اللّٰهِ كِتٰبًا مُّؤَجَّلًا ؕ وَ مَنْ يُّرِدْ ثَوَابَ الدُّنْيَا نُؤْتِهٖ مِنْهَا ۚ وَمَنْ يُّرِدْ ثَوَابَ الْاٰخِرَةِ نُؤْتِهٖ مِنْهَا ؕ وَسَنَجْزِى الشّٰكِرِيْنَ
3:145. மேலும், அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்த உயிரினமும் மரணிக்க முடியாது; இது நேரம் நிர்ணயிக்கப்பட்ட விதி; எவரேனும், இந்த உலகத்தின் நன்மையை (மட்டும்) விரும்பினால், நாம் அவருக்கு அதிலிருந்தே வழங்குவோம்; இன்னும், எவர் மறுமையின் நன்மையை விரும்புகிறாரோ, அவருக்கு அதிலிருந்து வழங்குவோம்; நன்றியுடையோருக்கு அதி சீக்கிரமாக (நற்) கூலி கொடுப்போம்.
3:148 فَاٰتٰٮهُمُ اللّٰهُ ثَوَابَ الدُّنْيَا وَحُسْنَ ثَوَابِ الْاٰخِرَةِ ؕ وَاللّٰهُ يُحِبُّ الْمُحْسِنِيْنَ
3:148. ஆகவே, அல்லாஹ் அவர்களுக்கு இவ்வுலக நன்மையையும், மறுமையின் அழகிய நன்மையையும் கொடுத்தான்; இன்னும், அல்லாஹ் நன்மை செய்வோரை நேசிக்கின்றான்.
3:152 وَلَقَدْ صَدَقَكُمُ اللّٰهُ وَعْدَهٗۤ اِذْ تَحُسُّوْنَهُمْ بِاِذْنِهٖۚ حَتّٰۤی اِذَا فَشِلْتُمْ وَتَـنَازَعْتُمْ فِى الْاَمْرِ وَعَصَيْتُمْ مِّنْۢ بَعْدِ مَاۤ اَرٰٮكُمْ مَّا تُحِبُّوْنَؕ مِنْكُمْ مَّنْ يُّرِيْدُ الدُّنْيَا وَمِنْكُمْ مَّنْ يُّرِيْدُ الْاٰخِرَةَ ۚ ثُمَّ صَرَفَكُمْ عَنْهُمْ لِيَبْتَلِيَكُمْۚ وَلَقَدْ عَفَا عَنْكُمْؕ وَ اللّٰهُ ذُوْ فَضْلٍ عَلَى الْمُؤْمِنِيْنَ
3:152. இன்னும், அவன் அனுமதியைக் கொண்டு (பகைவர்களாகிய) அவர்களை நீங்கள் கருவறுத்தபோது, அல்லாஹ் உங்களுக்கு அளித்த தனது வாக்குறுதியை நிறைவேற்றித் தந்தான்; முடிவாக நீங்கள் கோழையாகி (உங்களுக்கிடப்பட்ட) உத்தரவு பற்றித் தர்க்கித்துக் கொண்டுமிருந்தீர்கள்; நீங்கள் விரும்பியதை (வெற்றியை) அவன் உங்களுக்குக் காட்டிய பின்னரும் நீங்கள் மாறு செய்யலானீர்கள்: உங்களில் இவ்வுலகை விரும்புவோரும் இருக்கிறார்கள்; இன்னும், உங்களில் மறுமையை விரும்புவோரும் இருக்கிறார்கள்: பின்னர், உங்களைச் சோதிப்பதற்காக அவர்களைவிட்டு உங்களை(ப் பின்னடையுமாறு) திருப்பினான், நிச்சயமாக அவன் உங்களை மன்னித்தான்; மேலும் அல்லாஹ் நம்பிக்கையாளர்கள் மீது அருளுடையவன்.
3:185 كُلُّ نَفْسٍ ذَآٮِٕقَةُ الْمَوْتِؕ وَاِنَّمَا تُوَفَّوْنَ اُجُوْرَكُمْ يَوْمَ الْقِيٰمَةِؕ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَاُدْخِلَ الْجَـنَّةَ فَقَدْ فَازَ ؕ وَمَا الْحَيٰوةُ الدُّنْيَاۤ اِلَّا مَتَاعُ الْغُرُوْرِ
3:185. ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தேதீரும்! அன்றியும், உங்கள் செய்கைகளுக்குரிய பிரதிபலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படுவதெல்லாம் மறுமைநாளில்தான்; எனவே, எவர் (நரக) நெருப்பிலிருந்து தூரமாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் புகுத்தப்பெறுகிறாரோ, அவர் நிச்சயமாக வெற்றியடைந்துவிட்டார்; இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.
4:74 فَلْيُقَاتِلْ فِىْ سَبِيْلِ اللّٰهِ الَّذِيْنَ يَشْرُوْنَ الْحَيٰوةَ الدُّنْيَا بِالْاٰخِرَةِ ؕ وَمَنْ يُّقَاتِلْ فِىْ سَبِيْلِ اللّٰهِ فَيُقْتَلْ اَوْ يَغْلِبْ فَسَوْفَ نُـؤْتِيْهِ اَجْرًا عَظِيْمًا
4:74. எனவே, மறுமைக்காக இவ்வுலக வாழ்க்கையை விற்றுவிடுபவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடட்டும்; யார் அல்லாஹ்வின் பாதையில் போர்புரிந்து (அதில்) அவர் கொல்லப்பட்டாலும் அல்லது வெற்றியடைந்தாலும் அவருக்கு நாம் விரைவாக மகத்தான (நற்) கூலியைக் கொடுப்போம்.
4:77 اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ قِيْلَ لَهُمْ كُفُّوْۤا اَيْدِيَكُمْ وَاَقِيْمُوا الصَّلٰوةَ وَاٰ تُوا الزَّكٰوةَ ۚ فَلَمَّا كُتِبَ عَلَيْهِمُ الْقِتَالُ اِذَا فَرِيْقٌ مِّنْهُمْ يَخْشَوْنَ النَّاسَ كَخَشْيَةِ اللّٰهِ اَوْ اَشَدَّ خَشْيَةً ۚ وَقَالُوْا رَبَّنَا لِمَ كَتَبْتَ عَلَيْنَا الْقِتَالَ ۚ لَوْلَاۤ اَخَّرْتَنَاۤ اِلٰٓى اَجَلٍ قَرِيْبٍ ؕ قُلْ مَتَاعُ الدُّنْيَا قَلِيْلٌ ۚ وَالْاٰخِرَةُ خَيْرٌ لِّمَنِ اتَّقٰى وَلَا تُظْلَمُوْنَ فَتِيْلًا
4:77. "உங்களுடைய கைகளை(ப் போர் செய்வதிலிருந்தும்) தடுத்துக்கொள்ளுங்கள்; தொழுகையை நிலைநிறுத்திக்கொள்ளுங்கள்; ஜகாத்தைக் கொடுங்கள்" என்று எவர்களுக்குக் கூறப்பட்டதோ, அவர்களை (நபியே!) நீங்கள் பார்க்கவில்லையா? பின்னர், போர் செய்வது கடமையாக்கப்பட்டபோது, அவர்களில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வுக்குப் பயப்படுவதைப்போல் அல்லது, அதைவிடக் கடுமையாக மனிதர்களுக்குப் பயப்படுகின்றனர்; இன்னும், "எங்கள் இறைவனே! எங்கள் மீது ஏன் (இப்)போரை விதியாக்கினாய்? சிறிதுகாலம் எங்களுக்காக இதைப் பிற்படுத்தியிருக்கக் கூடாதா?" என்று கூறலானார்கள்; (நபியே!) நீர் கூறுவீராக: "இவ்வுலக இன்பம் அற்பமானது; மறுவுலக (இன்ப)ம் (அல்லாஹ்வை) அஞ்சியோருக்கு மேலானது; நீங்கள் எள்ளளவும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்."
4:94 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا ضَرَبْتُمْ فِىْ سَبِيْلِ اللّٰهِ فَتَبَـيَّـنُوْا وَلَا تَقُوْلُوْا لِمَنْ اَ لْقٰٓى اِلَيْكُمُ السَّلٰمَ لَسْتَ مُؤْمِنًا ۚ تَبْـتَـغُوْنَ عَرَضَ الْحَيٰوةِ الدُّنْيَا فَعِنْدَ اللّٰهِ مَغَانِمُ كَثِيْرَةٌ ؕ كَذٰلِكَ كُنْتُمْ مِّنْ قَبْلُ فَمَنَّ اللّٰهُ عَلَيْكُمْ فَتَبَـيَّـنُوْا ؕ اِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرًا
4:94. நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுடைய பாதையில் (போருக்கு) நீங்கள் சென்றால் (போர் முனையில் உங்களை எதிர்த்துச் சண்டை செய்வோர் நம்பிக்கையாளர்களா? அல்லது மற்றவர்களா? என்பதைத்) தெளிவுப்படுத்திக் கொள்ளுங்கள்; (அவர்களில், தாம் நம்பிக்கையாளர்கள் என்பதை அறிவிக்கும்பொருட்டு) உங்களுக்கு ஸலாம் (முகமன்) கூறியவரை, இவ்வுலக வாழ்க்கையின் அற்பமான (அழியக் கூடிய) பொருட்களை அடையும் பொருட்டு, 'நீ நம்பிக்கையாளனல்லன்' என்று கூறி (அவரைக் கொன்று) விடாதீர்கள்; அல்லாஹ்விடம் ஏராளமான பொருட்கள் இருக்கின்றன; இதற்கு முன்னர் நீங்களும் இவ்வாறேதான் (எதிரிகளுக்குப் பயந்துகொண்டு) இருந்தீர்கள்; அல்லாஹ் உங்களுக்கு உபகாரம் செய்தான்; எனவே, (மேலே கூறியவாறு போர்முனையில்) நீங்கள் தெளிவுப்படுத்திக் கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
4:109 هٰۤاَنْتُمْ هٰٓؤُلَۤاءِ جَادَلْـتُمْ عَنْهُمْ فِى الْحَيٰوةِ الدُّنْيَا فَمَنْ يُّجَادِلُ اللّٰهَ عَنْهُمْ يَوْمَ الْقِيٰمَةِ اَمْ مَّنْ يَّكُوْنُ عَلَيْهِمْ وَكِيْلًا
4:109. (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அவர்களுக்காக உலக வாழ்வில் வாதாடுகிறீர்கள் - மறுமைநாளில் அவர்களுக்காக அல்லாஹ்விடம் வாதாடுபவர் யார்? அல்லது, எவர் (அந்நாளில்) அவர்களுக்காகப் பொறுப்பாளியாக இருப்பார்?
4:134 مَنْ كَانَ يُرِيْدُ ثَوَابَ الدُّنْيَا فَعِنْدَ اللّٰهِ ثَوَابُ الدُّنْيَا وَالْاٰخِرَةِ ؕ وَكَانَ اللّٰهُ سَمِيْعًاۢ بَصِيْرًا
4:134. எவரேனும் இவ்வுலகின் பலனை (மட்டும் அடைய) விரும்பினால் - அல்லாஹ்விடம் இவ்வுலகப் பலனும், மறுவுலகப் பலனும் உள்ளன; அல்லாஹ் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.
5:33 اِنَّمَا جَزٰٓؤُا الَّذِيْنَ يُحَارِبُوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَيَسْعَوْنَ فِى الْاَرْضِ فَسَادًا اَنْ يُّقَتَّلُوْۤا اَوْ يُصَلَّبُوْۤا اَوْ تُقَطَّعَ اَيْدِيْهِمْ وَاَرْجُلُهُمْ مِّنْ خِلَافٍ اَوْ يُنْفَوْا مِنَ الْاَرْضِؕ ذٰ لِكَ لَهُمْ خِزْىٌ فِى الدُّنْيَا وَ لَهُمْ فِى الْاٰخِرَةِ عَذَابٌ عَظِيْمٌ ۙ
5:33. அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்துகொண்டு திரிபவர்களுக்குரிய தண்டனையாவது - அவர்கள் கொல்லப்படுதல், அல்லது சிலுவையில் அறையப்படுதல், அல்லது மாறுகைகள், மாறுகால்கள் வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல்; இது, அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும்; மறுமையில் அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையுமுண்டு.
5:41 يٰۤـاَيُّهَا الرَّسُوْلُ لَا يَحْزُنْكَ الَّذِيْنَ يُسَارِعُوْنَ فِى الْكُفْرِ مِنَ الَّذِيْنَ قَالُوْۤا اٰمَنَّا بِاَ فْوَاهِهِمْ وَلَمْ تُؤْمِنْ قُلُوْبُهُمْ ۛۚ وَمِنَ الَّذِيْنَ هَادُوْا ۛۚ سَمّٰعُوْنَ لِلْكَذِبِ سَمّٰعُوْنَ لِقَوْمٍ اٰخَرِيْنَۙ لَمْ يَاْتُوْكَؕ يُحَرِّفُوْنَ الْـكَلِمَ مِنْۢ بَعْدِ مَوَاضِعِهٖۚ يَقُوْلُوْنَ اِنْ اُوْتِيْتُمْ هٰذَا فَخُذُوْهُ وَاِنْ لَّمْ تُؤْتَوْهُ فَاحْذَرُوْا ؕ وَمَنْ يُّرِدِ اللّٰهُ فِتْنَـتَهٗ فَلَنْ تَمْلِكَ لَهٗ مِنَ اللّٰهِ شَيْــٴًـــاؕ اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ لَمْ يُرِدِ اللّٰهُ اَنْ يُّطَهِّرَ قُلُوْبَهُمْ ؕ لَهُمْ فِىْ الدُّنْيَا خِزْىٌ ۚۖ وَّلَهُمْ فِىْ الْاٰخِرَةِ عَذَابٌ عَظِيْمٌ
5:41. (நம்முடைய) தூதரே! அவர்களது இதயங்கள் நம்பிக்கை கொள்ளாதிருக்க, தங்களது வாய்களினால், 'நம்பிக்கை கொண்டோம்!' என்று கூறியோர் குறித்தும், இன்னும் யூதர்களைக் குறித்தும், யார் நிராகரிப்பின் பக்கம் விரைந்து சென்று கொண்டிருக்கிறார்களோ அவர்களைக் குறித்தும் நீர் கவலை கொள்ளவேண்டாம்; அவர்கள் பொய்யானவற்றையே மிகுதம் கேட்கின்றவர்கள்; உம்மிடம் (இதுவரை) வராத மற்றொரு கூட்டத்தினருக்(கு உம் பேச்சுகளை அறிவிப்பதற்)காகவும் கேட்கின்றவர்கள்; மேலும், அவர்கள் (வேத)வசனங்களை அவற்றுக்கு உரிய இடங்களிலிருந்து மாற்றி "இ(ன்ன)து உங்களுக்குக் கொடுக்கப்பட்டால் அதை ஏற்றுக்கொள்ளுங்கள்; அது உங்களுக்கு கொடுக்கப்படாவிட்டால் (அதை) தவிர்த்துக்கொள்ளுங்கள்" என்று கூறுகிறார்கள்; மேலும், அல்லாஹ் எவரை வழிகேட்டிலாக்க நாடுகிறானோ, அவருக்காக அல்லாஹ்விடமிருந்து (எதையும் தடுக்க) நீர் ஒருபோதும் சக்திபெறமாட்டீர்; இத்தகையோருடைய இதயங்களைப் பரிசுத்தமாக்க அல்லாஹ் விரும்பவில்லை; இவர்களுக்கு இவ்வுலகிலே இழிவும், மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு.
6:29 وَقَالُوْۤا اِنْ هِىَ اِلَّا حَيَاتُنَا الدُّنْيَا وَمَا نَحْنُ بِمَبْعُوْثِيْنَ
6:29. மேலும், "இது நம்முடைய உலக வாழ்வைத் தவிர (அப்பால் மறுமை வாழ்வு என்று) ஒன்றும் இல்லை: நாம் (மரணத்திற்குப் பின் மறுபடியும்) எழுப்பப்படமாட்டோம்" என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
6:32 وَ مَا الْحَيٰوةُ الدُّنْيَاۤ اِلَّا لَعِبٌ وَّلَهْوٌ ؕ وَلَـلدَّارُ الْاٰخِرَةُ خَيْرٌ لِّـلَّذِيْنَ يَتَّقُوْنَؕ اَفَلَا تَعْقِلُوْنَ
6:32. உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை; (இறைவனை) அஞ்சுபவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும். நீங்கள் இதைப் புரிந்துகொள்ள வேண்டாமா?
6:70 وَذَرِ الَّذِيْنَ اتَّخَذُوْا دِيْنَهُمْ لَعِبًا وَّلَهْوًا وَّغَرَّتْهُمُ الْحَيٰوةُ الدُّنْيَا وَ ذَكِّرْ بِهٖۤ اَنْ تُبْسَلَ نَفْسٌ ۢ بِمَا كَسَبَتْۖ لَـيْسَ لَهَا مِنْ دُوْنِ اللّٰهِ وَلِىٌّ وَّلَا شَفِيْعٌ ۚ وَاِنْ تَعْدِلْ كُلَّ عَدْلٍ لَّا يُؤْخَذْ مِنْهَا ؕ اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ اُبْسِلُوْا بِمَا كَسَبُوْا ۚ لَهُمْ شَرَابٌ مِّنْ حَمِيْمٍ وَّعَذَابٌ اَ لِيْمٌۢ بِمَا كَانُوْا يَكْفُرُوْنَ
6:70. (நபியே!) யார் தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும், வெறும் வேடிக்கையாகவும் எடுத்துக்கொண்டார்களோ; இன்னும், யாரை இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றிவிட்டதோ அவர்களை விட்டுவிடும்; எனினும், ஒவ்வொரு ஆத்மாவும் அது சம்பாதித்துக்கொண்ட (தீய)தின் காரணமாக (வேதனையினால்) பிடிக்கப்படாமல் இருப்பதற்காக, நீர் (குர்ஆனாகிய) இதன் மூலம் அறிவுரை கூறுவீராக! (அந்நாளில்) அதற்கு அல்லாஹ்வைத் தவிர வேறு பாதுகாவலரோ, பரிந்து பேசுபவரோ இல்லை; இன்னும், (தான் செய்த பாவத்திற்கு) ஈடாக அது (தன்னால் இயன்ற) அத்தனையும் கொடுத்தாலும், அதனிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அத்தகையோர் - அவர்கள் தாங்கள் சம்பாதித்தவைகளின் காரணமாக தண்டனையில் பிடிக்கப்பட்டுவிட்டனர். அவர்கள் நிராகரித்துக்கொண்டிருந்த காரணத்தால் அவர்களுக்குக் கொதிக்கும் பானமும், துன்புறுத்தும் வேதனையுமுண்டு.
6:130 يٰمَعْشَرَ الْجِنِّ وَالْاِنْسِ اَلَمْ يَاْتِكُمْ رُسُلٌ مِّنْكُمْ يَقُصُّوْنَ عَلَيْكُمْ اٰيٰتِىْ وَيُنْذِرُوْنَكُمْ لِقَآءَ يَوْمِكُمْ هٰذَا ؕ قَالُوْا شَهِدْنَا عَلٰٓى اَنْفُسِنَا وَغَرَّتْهُمُ الْحَيٰوةُ الدُّنْيَا وَشَهِدُوْا عَلٰٓى اَنْفُسِهِمْ اَنَّهُمْ كَانُوْا كٰفِرِيْنَ
6:130. (மறுமைநாளில் இறைவன் ஜின்களையும் மனிதர்களையும் நோக்கி): "ஜின் மற்றும் மனிதக்கூட்டத்தாரே! உங்களுக்கு என் வசனங்களை (அறிவித்து) ஓதிக்காட்டவும், இந்த நாளில் (ஏற்படப்போகும்) சந்திப்பைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்யவும், உங்களிலிருந்தே உங்களிடம் தூதர்கள் வரவில்லையா?" (என்று கேட்பான்); அதற்கு அவர்கள், "நாங்களே எங்களின் (பாவத்தின்) மீது சாட்சி கூறுகிறோம்" என்று கூறுவார்கள். உலக வாழ்க்கை அவர்களை மயக்கிவிட்டது; அவர்கள் நிராகரிப்பாளர்களாக இருந்தார்கள் என்று அவர்கள், தங்களுக்கு எதிராகவே சாட்சி கூறுவார்கள்.
7:32 قُلْ مَنْ حَرَّمَ زِيْنَةَ اللّٰهِ الَّتِىْۤ اَخْرَجَ لِعِبَادِهٖ وَالطَّيِّبٰتِ مِنَ الرِّزْقِؕ قُلْ هِىَ لِلَّذِيْنَ اٰمَنُوْا فِى الْحَيٰوةِ الدُّنْيَا خَالِصَةً يَّوْمَ الْقِيٰمَةِؕ كَذٰلِكَ نُفَصِّلُ الْاٰيٰتِ لِقَوْمٍ يَّعْلَمُوْنَ
7:32. (நபியே!) நீர் கேட்பீராக: "அல்லாஹ் தன் அடியார்களுக்காக வெளிப்படுத்தியுள்ள அலங்காரத்தையும், உணவு வகைகளில் தூய்மையானவற்றையும் தடுத்தது யார்?" இன்னும் கூறும்: "அவை இவ்வுலக வாழ்க்கையிலும், குறிப்பாக மறுமை நாளிலும் நம்பிக்கை கொண்டவர்களுக்கு உரியன. இவ்வாறு நாம் நம் வசனங்களை அறியக்கூடிய சமுதாயத்திற்கு விவரிக்கின்றோம்."
7:51 الَّذِيْنَ اتَّخَذُوْا دِيْنَهُمْ لَهْوًا وَّلَعِبًا وَّغَرَّتْهُمُ الْحَيٰوةُ الدُّنْيَا ۚ فَالْيَوْمَ نَنْسٰٮهُمْ كَمَا نَسُوْا لِقَآءَ يَوْمِهِمْ هٰذَا ۙ وَمَا كَانُوْا بِاٰيٰتِنَا يَجْحَدُوْنَ
7:51. (ஏனெனில்,) அவர்கள் தங்களுடைய மார்க்கத்தை வீணாகவும், விளையாட்டாகவும் எடுத்துக்கொண்டார்கள்; இன்னும், அவர்களை இவ்வுலக வாழ்க்கை மயக்கிவிட்டது; எனவே, அவர்களுடைய இந்த நாளின் சந்திப்பை அவர்கள் மறந்து, நம்முடைய வசனங்களையும் அவர்கள் மறுத்துக் கொண்டிருந்ததைப்போல், நாமும் இன்றையதினம் அவர்களை மறந்துவிடுவோம்.
7:152 اِنَّ الَّذِيْنَ اتَّخَذُوا الْعِجْلَ سَيَنَالُهُمْ غَضَبٌ مِّنْ رَّبِّهِمْ وَذِلَّـةٌ فِى الْحَيٰوةِ الدُّنْيَا ؕ وَكَذٰلِكَ نَجْزِىْ الْمُفْتَرِيْنَ
7:152. நிச்சயமாக எவர்கள் காளைக்கன்றை (இறைவனாக) ஆக்கிக்கொண்டார்களோ, அவர்களை அவர்கள் இறைவனிடமிருந்து கோபமும், இவ்வுலக வாழ்க்கையில் இழிவும் சீக்கிரமே வந்துசேரும்; பொய்க்கற்பனை செய்பவர்களுக்கு நாம் இவ்வாறே கூலி கொடுப்போம்.
7:156 وَاكْتُبْ لَـنَا فِىْ هٰذِهِ الدُّنْيَا حَسَنَةً وَّفِى الْاٰخِرَةِ اِنَّا هُدْنَاۤ اِلَيْكَ ؕ قَالَ عَذَابِىْۤ اُصِيْبُ بِهٖ مَنْ اَشَآءُ ۚ وَرَحْمَتِىْ وَسِعَتْ كُلَّ شَىْءٍ ؕ فَسَاَكْتُبُهَا لِلَّذِيْنَ يَتَّقُوْنَ وَيُؤْتُوْنَ الزَّكٰوةَ وَالَّذِيْنَ هُمْ بِاٰيٰتِنَا يُؤْمِنُوْنَ ۚ
7:156. இன்னும் இவ்வுலகத்திலும், மறுமையிலும் எங்களுக்கு (அழகிய) நன்மைகளையே விதிப்பாயாக! நிச்சயமாக நாங்கள் உன்பக்கமே திரும்பிவிட்டோம்!" (என்றும் பிரார்த்தித்தார்); அதற்கு அவன், "என்னுடைய வேதனையாகிறது - அதனைக் கொண்டு நான் நாடியவரை பிடிப்பேன்; ஆனால், என்னுடைய அருளானது ஒவ்வொரு பொருளையும் சூழ்ந்துள்ளது; எனினும் அதனை, (என்னை) அஞ்சி (முறையாக) ஜகாத்து கொடுப்போருக்கும், நம்முடைய வசனங்களை நம்புகிறவர்களுக்கும் நான் விதியாக்குவேன்" என்று கூறினான்.
8:67 مَا كَانَ لِنَبِىٍّ اَنْ يَّكُوْنَ لَهٗۤ اَسْرٰى حَتّٰى يُثْخِنَ فِى الْاَرْضِؕ تُرِيْدُوْنَ عَرَضَ الدُّنْيَا ۖ وَاللّٰهُ يُرِيْدُ الْاٰخِرَةَ ؕ وَاللّٰهُ عَزِيْزٌ حَكِيْمٌ
8:67. (விஷமங்கள் அடங்க) பூமியில் இரத்தத்தை ஓட்டாத வரையில் (விரோதிகளை உயிருடன்) சிறைப்பிடிப்பது எந்த நபிக்கும் தகுதியில்லை; நீங்கள் இவ்வுலகத்தின் (நிலையில்லா) பொருட்களை விரும்புகிறீர்கள்; அல்லாஹ்வோ (உங்களுக்கு நிலையான) மறுமையை நாடுகிறான்; அல்லாஹ் மிகைத்தோனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
9:38 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا مَا لَـكُمْ اِذَا قِيْلَ لَـكُمُ انْفِرُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ اثَّاقَلْـتُمْ اِلَى الْاَرْضِ ؕ اَرَضِيْتُمْ بِالْحَيٰوةِ الدُّنْيَا مِنَ الْاٰخِرَةِ ۚ فَمَا مَتَاعُ الْحَيٰوةِ الدُّنْيَا فِى الْاٰخِرَةِ اِلَّا قَلِيْلٌ
9:38. நம்பிக்கை கொண்டவர்களே! "அல்லாஹ்வின் பாதையில் (போருக்குப்) புறப்படுங்கள்" என்று உங்களுக்குக் கூறப்பட்டால், நீங்கள் பூமியின் பக்கம் சாய்ந்துவிடுகிறீர்களே; உங்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையைக் கொண்டே நீங்கள் திருப்தி அடைந்துவிட்டீர்களா? மறுமை(யின் வாழ்க்கை)க்கு முன்பு இவ்வுலக வாழ்க்கையின் இன்பம் மிகவும் அற்பமானது.
9:55 فَلَا تُعْجِبْكَ اَمْوَالُهُمْ وَلَاۤ اَوْلَادُهُمْؕ اِنَّمَا يُرِيْدُ اللّٰهُ لِيُعَذِّبَهُمْ بِهَا فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَتَزْهَقَ اَنْفُسُهُمْ وَهُمْ كٰفِرُوْنَ
9:55. அவர்களுடைய செல்வங்களும், அவர்களுடைய மக்களும் உம்மை ஆச்சரியப்படுத்த வேண்டாம்; அல்லாஹ் அவற்றைக் கொண்டு இவ்வுலக வாழ்க்கையிலேயே அவர்களை வேதனை செய்யவும், அவர்கள் நிராகரிப்பவர்களாக இருக்கிற நிலையில் அவர்களுடைய உயிர்கள் பிரிவதையும் நாடுகிறான்.
9:74 يَحْلِفُوْنَ بِاللّٰهِ مَا قَالُوْا ؕ وَلَقَدْ قَالُوْا كَلِمَةَ الْـكُفْرِ وَكَفَرُوْا بَعْدَ اِسْلَامِهِمْ وَهَمُّوْا بِمَا لَمْ يَنَالُوْا ۚ وَمَا نَقَمُوْۤا اِلَّاۤ اَنْ اَغْنٰٮهُمُ اللّٰهُ وَرَسُوْلُهٗ مِنْ فَضْلِهٖ ۚ فَاِنْ يَّتُوْبُوْا يَكُ خَيْرًا لَّهُمْ ۚ وَاِنْ يَّتَوَلَّوْا يُعَذِّبْهُمُ اللّٰهُ عَذَابًا اَلِيْمًا ۙ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ ۚ وَمَا لَهُمْ فِى الْاَرْضِ مِنْ وَّلِىٍّ وَّلَا نَصِيْرٍ
9:74. (நயவஞ்சகர்களாகிய) இவர்கள் நிச்சயமாக நிராகரிப்பின் சொல்லைச் சொல்லிவிட்டு, அதைச் சொல்லவே இல்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறார்கள்; அவர்கள் இஸ்லா(ம் மார்க்க)த்தை ஏற்றுக்கொண்ட பின் நிராகரித்தும் இருக்கின்றனர்; (அவர்கள் உங்களுக்குத் தீங்கிழைக்கக் கருதித்) தங்களால் அடைய முடியாததையும் (அடைந்துவிட) முயன்றனர்; அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அவனுடைய அருளினால் அவர்களைச் சீமான்களாக்கி வைத்ததற்காகவே தவிர (வேறெதற்கும்) அவர்கள் பழிவாங்கவில்லை; எனவே, அவர்கள் (தம் தவறிலிருந்து) மீள்வார்களானால் அவர்களுக்கு நன்மையாக இருக்கும்; ஆனால், அவர்கள் புறக்கணித்தால், அல்லாஹ் அவர்களை நோவினைமிக்க வேதனை கொண்டு இம்மையிலும், மறுமையிலும் வேதனை செய்வான்; இன்னும், அவர்களுக்குப் பாதுகாவலனோ, உதவியாளனோ இப்பூமியில் எவருமில்லை.
9:85 وَلَا تُعْجِبْكَ اَمْوَالُهُمْ وَاَوْلَادُهُمْؕ اِنَّمَا يُرِيْدُ اللّٰهُ اَنْ يُّعَذِّبَهُمْ بِهَا فِى الدُّنْيَا وَتَزْهَقَ اَنْفُسُهُمْ وَهُمْ كٰفِرُوْنَ
9:85. இன்னும், அவர்களுடைய செல்வங்களும், அவர்களுடைய பிள்ளைகளும் உம்மை ஆச்சரியப்படுத்த வேண்டாம்; நிச்சயமாக இவற்றைக் கொண்டு அவர்களை இவ்வுலகத்திலேயே வேதனை செய்யவும், அவர்கள் நிராகரிப்பாளர்களாக இருக்கும் நிலையிலேயே அவர்களின் உயிர் போவதையும் அல்லாஹ் விரும்புகிறான்.
10:7 اِنَّ الَّذِيْنَ لَا يَرْجُوْنَ لِقَآءَنَا وَرَضُوْا بِالْحَيٰوةِ الدُّنْيَا وَاطْمَاَنُّوْا بِهَا وَالَّذِيْنَ هُمْ عَنْ اٰيٰتِنَا غٰفِلُوْنَۙ
10:7. நிச்சயமாக எவர்கள் நம்மைச் சந்திப்பதை (சிறிதும்) நம்பாது, இவ்வுலக வாழ்க்கையை (மிகவும்) விரும்பி, அதில் திருப்தியடைந்து கொண்டும்; இன்னும், எவர்கள் நம் வசனங்களைப் புறக்கணித்துக் கொண்டும் இருக்கிறார்களோ-
10:23 فَلَمَّاۤ اَنْجٰٮهُمْ اِذَا هُمْ يَبْغُوْنَ فِى الْاَرْضِ بِغَيْرِ الْحَـقِّ ؕ يٰۤـاَ يُّهَا النَّاسُ اِنَّمَا بَغْيُكُمْ عَلٰٓى اَنْفُسِكُمْۙ مَّتَاعَ الْحَيٰوةِ الدُّنْيَا ثُمَّ اِلَـيْنَا مَرْجِعُكُمْ فَنُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ
10:23. அவன் அவர்களைக் காப்பாற்றிவிட்டதும் அவர்கள் பூமியின் மீது நியாயமில்லாது அழிச்சாட்டியம் செய்கிறார்கள்; மனிதர்களே! உங்கள் அழிச்சாட்டியங்கள் எல்லாம் உங்களுக்கே கேடாக முடியும்; (இது) உலக வாழ்வின் (அற்ப) சுகமேயாகும்; பின்னர், நம்மிடமே உங்கள் திரும்புதல் இருக்கிறது; அப்போது, நீங்கள் செய்து கொண்டிருந்ததை உங்களுக்கு நாம் அறிவிப்போம்.
10:24 اِنَّمَا مَثَلُ الْحَيٰوةِ الدُّنْيَا كَمَآءٍ اَنْزَلْنٰهُ مِنَ السَّمَآءِ فَاخْتَلَطَ بِهٖ نَبَاتُ الْاَرْضِ مِمَّا يَاْكُلُ النَّاسُ وَالْاَنْعَامُؕ حَتّٰۤى اِذَاۤ اَخَذَتِ الْاَرْضُ زُخْرُفَهَا وَازَّيَّنَتْ وَظَنَّ اَهْلُهَاۤ اَنَّهُمْ قٰدِرُوْنَ عَلَيْهَاۤ ۙ اَتٰٮهَاۤ اَمْرُنَا لَيْلًا اَوْ نَهَارًا فَجَعَلْنٰهَا حَصِيْدًا كَاَنْ لَّمْ تَغْنَ بِالْاَمْسِ ؕ كَذٰلِكَ نُـفَصِّلُ الْاٰيٰتِ لِقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ
10:24. இவ்வுலக வாழ்க்கைக்கு உதாரணம், நாம் வானத்திலிருந்து இறக்கிவைக்கும் மழைநீரைப் போன்றது; மனிதர்களும் கால்நடைகளும் உண்ணக்கூடியவைகளிலிருந்து பூமியின் தாவரங்கள் அதனுடன் கலந்து முடிவில் பூமி (அந்தப் பயிர்கள் மூலம்) தன் அலங்காரத்தைப் பெற்று கவர்ச்சியடைந்த பொழுது, அதன் சொந்தக்காரர்கள் (கதிரை அறுவடை செய்துகொள்ளக்கூடிய) சக்தியுடையவர்கள் என்று தங்களை எண்ணிக்கொண்டிருந்தனர்; அச்சமயம், இரவிலோ அல்லது பகலிலோ அதற்கு நம் கட்டளை வந்து (அதை நாம் அழித்துவிட்டோம்); நிச்சயமாக நேற்று அது (அவ்விடத்தில்) இல்லாதது போன்று அறுக்கப்பட்டதாக, அதை நாம் ஆக்கிவிட்டோம்; இவ்வாறே நாம் சிந்தனை செய்யும் கூட்டத்திற்கு (நம்) அத்தாட்சிகளை விவரிக்கின்றோம்.
10:70 مَتَاعٌ فِى الدُّنْيَا ثُمَّ اِلَيْنَا مَرْجِعُهُمْ ثُمَّ نُذِيْقُهُمُ الْعَذَابَ الشَّدِيْدَ بِمَا كَانُوْا يَكْفُرُوْنَ
10:70. உலகத்தில் (அவர்கள் அனுபவிப்பது) சிறு சுகமேயாகும்; பின்னர், நம்மிடமே அவர்களுடைய மீளுதல் இருக்கிறது; அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததின் காரணமாக, நாம் அவர்களைக் கடுமையான வேதனையைச் சுவைக்கச் செய்வோம்.
10:88 وَقَالَ مُوْسٰى رَبَّنَاۤ اِنَّكَ اٰتَيْتَ فِرْعَوْنَ وَمَلَاَهٗ زِيْنَةً وَّاَمْوَالًا فِى الْحَيٰوةِ الدُّنْيَا ۙ رَبَّنَا لِيُضِلُّوْا عَنْ سَبِيْلِكَۚ رَبَّنَا اطْمِسْ عَلٰٓى اَمْوَالِهِمْ وَاشْدُدْ عَلٰى قُلُوْبِهِمْ فَلَا يُؤْمِنُوْا حَتّٰى يَرَوُا الْعَذَابَ الْاَ لِيْمَ
10:88. இன்னும், "எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ ஃபிர்அவ்னுக்கும், அவனுடைய பிரமுகர்களுக்கும் இவ்வுலக வாழ்க்கையில் அலங்காரத்தையும், செல்வங்களையும் கொடுத்திருக்கிறாய்; எங்கள் இறைவனே! (அவற்றைக் கொண்டு) அவர்கள் உன் பாதையைவிட்டும் (மக்களை) வழிக்கெடுப்பதற்காகவே (சோதனையாய் நீ கொடுத்திருக்கிறாய்); எங்கள் இறைவனே! அவர்களுடைய செல்வங்களை அழித்து, அவர்களுடைய இதயங்களையும் கடினமாக்கிவிடுவாயாக! நோவினைதரும் வேதனையை அவர்கள் பார்க்காத வரையில், அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்" என்று மூஸா கூறினார்.
10:98 فَلَوْلَا كَانَتْ قَرْيَةٌ اٰمَنَتْ فَنَفَعَهَاۤ اِيْمَانُهَاۤ اِلَّا قَوْمَ يُوْنُسَ ۚؕ لَمَّاۤ اٰمَنُوْا كَشَفْنَا عَنْهُمْ عَذَابَ الْخِزْىِ فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَمَتَّعْنٰهُمْ اِلٰى حِيْنٍ
10:98. எனவே (வேதனை வரும்போது) ஓர் ஊர் (மக்கள்) நம்பிக்கை கொண்டு, அதனுடைய நம்பிக்கை அதற்குப் பயனளித்ததாக இருக்கக் கூடாதா? (அவ்வாறு எந்த ஊரும் இருக்கவில்லை) யூனுஸின் சமுதாயத்தாரைத் தவிர; அவர்கள் நம்பிக்கை கொண்டபோது, இவ்வுலக வாழ்வில் இழிவுபடுத்தும் வேதனையை அவர்களைவிட்டும் நாம் அகற்றினோம்; சிறிதுகாலம் சுகம் அனுபவிக்கச் செய்தோம்.
10:101 قُلِ انْظُرُوْا مَاذَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ وَمَا تُغْنِى الْاٰيٰتُ وَالنُّذُرُ عَنْ قَوْمٍ لَّا يُؤْمِنُوْنَ
10:101. "வானங்களிலும், பூமியிலும் இருப்பவற்றைக் கவனித்துப் பாருங்கள்!" என்று (நபியே! அவர்களிடம்) கூறுவீராக! எனினும், நம்பிக்கை கொள்ளாத சமுதாயத்திற்கு (நம்) அத்தாட்சிகளும், எச்சரிக்கைகளும் பலனளிக்கமாட்டா.
11:15 مَنْ كَانَ يُرِيْدُ الْحَيٰوةَ الدُّنْيَا وَ زِيْنَتَهَا نُوَفِّ اِلَيْهِمْ اَعْمَالَهُمْ فِيْهَا وَهُمْ فِيْهَا لَا يُبْخَسُوْنَ
11:15. எவரேனும், இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) நாடுபவராக இருப்பாரானால், இதிலேயே அவர்களுடைய செயல்களுக்குரிய பலன்களை அவர்களுக்கு நாம் நிறைவாக்குவோம்; அவர்கள் அதில் குறைவு செய்யப்படமாட்டார்கள்.
11:60 وَاُتْبِعُوْا فِىْ هٰذِهِ الدُّنْيَا لَعْنَةً وَّيَوْمَ الْقِيٰمَةِؕ اَلَاۤ اِنَّ عَادًا كَفَرُوْا رَبَّهُمْؕ اَلَا بُعْدًا لِّعَادٍ قَوْمِ هُوْدٍ
11:60. எனவே, இவ்வுலகிலும், மறுமைநாளிலும் (அல்லாஹ்வின்) சாபத்தினால் அவர்கள் தொடரப்பட்டனர்; அறிந்துகொள்வீர்களாக! நிச்சயமாக ஆது கூட்டத்தார் தங்கள் இறைவனை நிராகரித்தார்கள்; அறிந்துகொள்வீர்களாக! ஹூதுடைய சமுதாயமான 'ஆது' கூட்டத்தாருக்குக் கேடுதான்.
13:2 اَللّٰهُ الَّذِىْ رَفَعَ السَّمٰوٰتِ بِغَيْرِ عَمَدٍ تَرَوْنَهَا ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَؕ كُلٌّ يَّجْرِىْ لِاَجَلٍ مُّسَمًّىؕ يُدَبِّرُ الْاَمْرَ يُفَصِّلُ الْاٰيٰتِ لَعَلَّكُمْ بِلِقَآءِ رَبِّكُمْ تُوْقِنُوْنَ
13:2. (இவ்வேதத்தை அருளிய) அல்லாஹ் எத்தகையவனென்றால், அவன் வானங்களைத் தூணின்றியே உயர்த்தியுள்ளான்; நீங்கள் அவற்றைப் பார்க்கிறீர்கள்; பின்னர், (தன் கண்ணியத்திற்குத் தக்கவாறும் மகத்துவத்திற்குரியவாறும் அர்ஷின் மீதிருப்பது அவனுக்கு எவ்வாறு தகுமோ அவ்வாறே) அவன் அர்ஷின் (அரியாசனத்தின்) மீது நிலையானான்; இன்னும், அவனே சூரியனையும் சந்திரனையும் (தன்) அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; (இவை) அனைத்தும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன; அவனே, (எல்லாக்) காரியத்தையும் நிர்வகிக்கின்றான்; நீங்கள் உங்கள் இறைவனைச் சந்திப்பதை உறுதிகொள்ளும் பொருட்டு அவன் (இவ்வாறு தன்) வசனங்களை விளக்குகின்றான்.
13:3 وَهُوَ الَّذِىْ مَدَّ الْاَرْضَ وَجَعَلَ فِيْهَا رَوَاسِىَ وَاَنْهٰرًا ؕ وَمِنْ كُلِّ الثَّمَرٰتِ جَعَلَ فِيْهَا زَوْجَيْنِ اثْنَيْنِ يُغْشِى الَّيْلَ النَّهَارَ ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّـقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ
13:3. மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து, அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான்; இன்னும், கனிகள் ஒவ்வொன்றிலிருந்தும் இரண்டிரண்டாக ஜோடிகளை அதில் உண்டாக்கினான்; அவனே இரவைப் பகலால் மூடுகிறான்; நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
13:27 وَيَقُوْلُ الَّذِيْنَ كَفَرُوْا لَوْلَاۤ اُنْزِلَ عَلَيْهِ اٰيَةٌ مِّنْ رَّبِّهٖؕ قُلْ اِنَّ اللّٰهَ يُضِلُّ مَنْ يَّشَآءُ وَيَهْدِىْۤ اِلَيْهِ مَنْ اَنَابَ ۖ ۚ
13:27. "இவருக்கு இவருடைய இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சி இறக்கிவைக்கப்படக்கூடாதா?" என்று நிராகரிப்போர் கூறுகிறார்கள். (நபியே!) நீர் கூறும்: "நிச்சயமாக அல்லாஹ்தான் நாடியவரை வழிகெடச் செய்கிறான்; தன்பால் எவர் திரும்புகிறாரோ அத்தகையவருக்கு நேர்வழி காட்டுகிறான்."
13:34 لَهُمْ عَذَابٌ فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَلَعَذَابُ الْاٰخِرَةِ اَشَقُّ ۚ وَمَا لَهُمْ مِّنَ اللّٰهِ مِنْ وَّاقٍ
13:34. அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும் வேதனையுண்டு; எனினும், மறுமையின் வேதனையோ மிகக் கடுமையானது; அல்லாஹ்விடமிருந்து அவர்களைக் காப்பாற்றுவோர் எவருமில்லை.
14:27 يُثَبِّتُ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا بِالْقَوْلِ الثَّابِتِ فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَفِى الْاٰخِرَةِ ۚ وَيُضِلُّ اللّٰهُ الظّٰلِمِيْنَ ۙ وَيَفْعَلُ اللّٰهُ مَا يَشَآءُ
14:27. எவர்கள் நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களை இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் உறுதியான சொல்லைக் கொண்டு அல்லாஹ் உறுதிப்படுத்துகின்றான்; இன்னும், அநியாயக்காரர்களை அல்லாஹ் வழிதவறச் செய்து விடுகிறான்; மேலும், அல்லாஹ் தான் நாடியதைச் செய்கிறான்.
16:30 وَقِيْلَ لِلَّذِيْنَ اتَّقَوْا مَاذَاۤ اَنْزَلَ رَبُّكُمْؕ قَالُوْا خَيْرًاؕ لِّـلَّذِيْنَ اَحْسَنُوْا فِىْ هٰذِهِ الدُّنْيَا حَسَنَةٌ ؕ وَلَدَارُ الْاٰخِرَةِ خَيْرٌ ؕ وَلَنِعْمَ دَارُ الْمُتَّقِيْنَۙ
16:30. இறையச்சமுடையவர்களிடம், "உங்களுடைய இறைவன் எதை இறக்கிவைத்தான்?" என்று (குர்ஆனைக் குறிப்பிட்டு) கேட்கப்படும்; (அப்போது) "நன்மையையே (அருளினான்)" என்று அவர்கள் (பதில்) கூறுவார்கள்; எவர்கள் அழகான நன்மை புரிந்தார்களோ, அவர்களுக்கு இவ்வுலகிலும் அழகான நன்மையுண்டு; இன்னும், மறுமைவீடானது, (அவர்களுக்கு மிக) மேலானதாகவும் இருக்கும்; இறையச்சமுடையவர்களுடைய வீடு நிச்சயமாக நேர்த்தியானது.
16:41 وَالَّذِيْنَ هَاجَرُوْا فِى اللّٰهِ مِنْۢ بَعْدِ مَا ظُلِمُوْا لَـنُبَوِّئَنَّهُمْ فِى الدُّنْيَا حَسَنَةً ؕ وَلَاَجْرُ الْاٰخِرَةِ اَكْبَرُۘ لَوْ كَانُوْا يَعْلَمُوْنَۙ
16:41. கொடுமைப்படுத்தப்பட்ட பின்னர், எவர்கள் அல்லாஹ்வுக்காக ஹிஜ்ரத் செய்தார்களோ, அவர்களுக்கு நாம் நிச்சயமாக அழகான தங்கும் இடத்தை இவ்வுலகத்தில் கொடுப்போம்; இன்னும், அவர்கள் அறிந்துகொண்டார்களேயானால், மறுமையிலுள்ள (நற்)கூலி (இதைவிட) மிகவும் பெரிது.
16:122 وَاٰتَيْنٰهُ فِى الدُّنْيَا حَسَنَةً ؕ وَاِنَّهٗ فِى الْاٰخِرَةِ لَمِنَ الصّٰلِحِيْنَؕ
16:122. மேலும், நாம் அவருக்கு இவ்வுலகத்தில் நன்மையானதையே கொடுத்தோம்; நிச்சயமாக மறுமையிலும் அவர் நல்லவர்களில் ஒருவராக இருப்பார்.
18:28 وَاصْبِرْ نَـفْسَكَ مَعَ الَّذِيْنَ يَدْعُوْنَ رَبَّهُمْ بِالْغَدٰوةِ وَالْعَشِىِّ يُرِيْدُوْنَ وَجْهَهٗ وَلَا تَعْدُ عَيْنٰكَ عَنْهُمْ ۚ تُرِيْدُ زِيْنَةَ الْحَيٰوةِ الدُّنْيَا ۚ وَ لَا تُطِعْ مَنْ اَغْفَلْنَا قَلْبَهٗ عَنْ ذِكْرِنَا وَاتَّبَعَ هَوٰٮهُ وَكَانَ اَمْرُهٗ فُرُطًا
18:28. இன்னும், (நபியே!) எவர்கள் தம் இறைவனுடைய திருப்பொருத்தத்தை நாடியவர்களாகக் காலையிலும், மாலையிலும் அவனைப் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறார்களோ, அவர்களுடன் நீரும் பொறுமையை மேற்கொண்டிருப்பீராக! இன்னும், உலக வாழ்க்கையின் அலங்காரத்தை நாடி அ(த்தகைய)வர்களை விட்டும் உம் இருகண்களையும் திருப்பிவிடாதீர்! இன்னும், எவனுடைய இதயத்தை நம்மை நினைவு கூர்வதிலிருந்து நாம் திருப்பிவிட்டோமோ அவனுக்கு நீர் கீழ்ப்படியாதீர்; ஏனெனில், அவன் தன் இச்சையைப் பின்பற்றியதனால் அவனுடைய காரியம் வரம்புமீறியதாகிவிட்டது.
18:45 وَاضْرِبْ لَهُمْ مَّثَلَ الْحَيٰوةِ الدُّنْيَا كَمَآءٍ اَنْزَلْنٰهُ مِنَ السَّمَآءِ فَاخْتَلَطَ بِهٖ نَبَاتُ الْاَرْضِ فَاَصْبَحَ هَشِيْمًا تَذْرُوْهُ الرِّيٰحُ ؕ وَكَانَ اللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ مُّقْتَدِرًا
18:45. மேலும், இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணம் - அவர்களுக்கு (நபியே!) நீர் கூறுவீராக! "அது நாம் வானத்திலிருந்து இறக்கிவைத்த நீரைப் போலிருக்கிறது; பூமியிலுள்ள தாவரங்கள் அதனுடன் கலந்(து செழி)த்தன; ஆனால், அவை காய்ந்து பதராகி அவற்றைக் காற்று அடித்துக் கொண்டுபோய்விடுகிறது; மேலும், எல்லாப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்."
18:46 اَلْمَالُ وَ الْبَـنُوْنَ زِيْنَةُ الْحَيٰوةِ الدُّنْيَا ۚ وَالْبٰقِيٰتُ الصّٰلِحٰتُ خَيْرٌ عِنْدَ رَبِّكَ ثَوَابًا وَّخَيْرٌ اَمَلًا
18:46. செல்வமும் பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும்; என்றும் நிலைத்து நிற்கக்கூடிய நற்செயல்களே உம்முடைய இறைவனிடத்தில் (மறுமையின் நற்பேறுக்கு) நன்மையால் சிறந்தவையும் ஆதரவு வைப்பதால் சிறந்தவையுமாகும்.
18:104 اَ لَّذِيْنَ ضَلَّ سَعْيُهُمْ فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُوْنَ اَنَّهُمْ يُحْسِنُوْنَ صُنْعًا
18:104. யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க, தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள்தான்.
20:72 قَالُوْا لَنْ نُّؤْثِرَكَ عَلٰى مَا جَآءَنَا مِنَ الْبَيِّنٰتِ وَالَّذِىْ فَطَرَنَا فَاقْضِ مَاۤ اَنْتَ قَاضٍ ؕ اِنَّمَا تَقْضِىْ هٰذِهِ الْحَيٰوةَ الدُّنْيَا ؕ
20:72. (மனந்திருந்திய அவர்கள் ஃபிர்அவ்னிடம்) "எங்களுக்கு வந்துள்ள தெளிவான அத்தாட்சிகளை விடவும், எங்களைப் படைத்தவனை விடவும் உன்னை (மேலானவனாக) நாங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளவே மாட்டோம்; ஆகவே, என்ன தீர்ப்புச் செய்ய நீ இருக்கிறாயோ அவ்வாறே தீர்ப்புச் செய்து கொள்: நீ தீர்ப்புச் செய்வதெல்லாம் இவ்வுலக வாழ்க்கையில்தான்" என்று கூறினர்.
20:131 وَلَا تَمُدَّنَّ عَيْنَيْكَ اِلٰى مَا مَتَّعْنَا بِهٖۤ اَزْوَاجًا مِّنْهُمْ زَهْرَةَ الْحَيٰوةِ الدُّنْيَا ۙ لِنَفْتِنَهُمْ فِيْهِ ؕ وَرِزْقُ رَبِّكَ خَيْرٌ وَّاَبْقٰى
20:131. இன்னும் அவர்களில் சில பிரிவினருக்கு உலக வாழ்க்கையின் அலங்காரமாக எதைக் கொண்டு சுகமனுபவிக்கச் செய்திருக்கிறோமோ, அதன் பக்கம் உமது இருகண்களையும் நீட்டாதீர்; (இவையெல்லாம்) அவர்களைச் சோதிப்பதற்காகவே (நாம் கொடுத்துள்ளோம்); உமது இறைவன் (மறுமையில் உமக்கு) வழங்கவிருப்பது சிறந்ததும், நிலையானதும் ஆகும்.
22:11 وَمِنَ النَّاسِ مَنْ يَّعْبُدُ اللّٰهَ عَلٰى حَرْفٍ ۚ فَاِنْ اَصَابَهٗ خَيْرٌ اۨطْمَاَنَّ بِهٖ ۚ وَاِنْ اَصَابَتْهُ فِتْنَةُ اۨنْقَلَبَ عَلٰى وَجْهِهٖۚ خَسِرَ الدُّنْيَا وَالْاٰخِرَةَ ؕ ذٰ لِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِيْنُ
22:11. இன்னும், மனிதர்களில் (ஓர் உறுதியும் இல்லாமல்) ஓரத்தில் நின்றுகொண்டு அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கிறான்; அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்தியடைந்துகொள்கிறான்; ஆனால், அவனுக்கு ஒரு சோதனை ஏற்படுமாயின் அதைக்கொண்டு அவன் தன் முகத்தின் மீது புரண்டு (திரும்பி) விடுகிறான்; இத்தகையவன் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைகிறான்; இதுதான் தெளிவான நஷ்டமாகும்.
22:15 مَنْ كَانَ يَظُنُّ اَنْ لَّنْ يَّـنْصُرَهُ اللّٰهُ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ فَلْيَمْدُدْ بِسَبَبٍ اِلَى السَّمَآءِ ثُمَّ لْيَـقْطَعْ فَلْيَنْظُرْ هَلْ يُذْهِبَنَّ كَيْدُهٗ مَا يَغِيْظُ
22:15. எவன் (நம் தூதர் மேல் பொறாமைகொண்டு) அல்லாஹ் அவருக்கு இவ்வுலகிலும் மறுமையிலும் உதவி செய்யவேமாட்டான் என்று எண்ணுகிறானோ, அவன் ஒரு கயிற்றை வானத்தின் அளவுக்கு நீட்டிப் பின்னர், (நபிக்குக் கிடைத்துவரும் இறையருளைத்) துண்டிக்க (முற்பட)ட்டுமே! இந்த சூழ்ச்சி தன்னை ஆத்திரமூட்டச் செய்ததைப் போக்குகிறதா என்று பார்க்கட்டும்!
23:37 اِنْ هِىَ اِلَّا حَيَاتُنَا الدُّنْيَا نَمُوْتُ وَنَحْيَا وَمَا نَحْنُ بِمَبْعُوْثِيْنَ ۙ
23:37. "நமது இவ்வுலக வாழ்க்கையைத் தவிர (நமக்கு) வேறு வாழ்க்கை இல்லை; நாம் இறப்போம்; (இப்போது) நாம் உயிருடன் இருக்கிறோம்: ஆனால், மீண்டும் நாம் (உயிர் கொடுக்கப்பட்டு) எழுப்பப்படப் போகிறவர்கள் அல்லர்."
24:14 وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ لَمَسَّكُمْ فِىْ مَاۤ اَفَضْتُمْ فِيْهِ عَذَابٌ عَظِيْمٌ ۖ ۚ
24:14. இன்னும், உங்கள் மீது இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் அருளும் அவனுடைய கிருபையும் இல்லாதிருந்தால், நீங்கள் எதில் மூழ்கியிருந்தீர்களோ அந்த ஒன்றில் கடினமான வேதனை நிச்சயமாக உங்களைத் தீண்டியிருக்கும்.
24:19 اِنَّ الَّذِيْنَ يُحِبُّوْنَ اَنْ تَشِيْعَ الْفَاحِشَةُ فِى الَّذِيْنَ اٰمَنُوْا لَهُمْ عَذَابٌ اَلِيْمٌۙ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِؕ وَاللّٰهُ يَعْلَمُ وَاَنْـتُمْ لَا تَعْلَمُوْنَ
24:19. எவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளோரிடையே (இத்தகைய) மானக்கேடான விஷயங்கள் பரவ வேண்டுமென பிரியப்படுகிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் நோவினைசெய்யும் வேதனையுண்டு; அல்லாஹ் (யாவற்றையும்) அறிகிறான்; நீங்கள் அறிய மாட்டீர்கள்.
24:23 اِنَّ الَّذِيْنَ يَرْمُوْنَ الْمُحْصَنٰتِ الْغٰفِلٰتِ الْمُؤْمِنٰتِ لُعِنُوْا فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ وَلَهُمْ عَذَابٌ عَظِيْمٌۙ
24:23. எவர்கள் வெகுளிகளாக, நம்பிக்கையுடைய ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுகிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் சபிக்கப்பட்டுள்ளனர்; இன்னும், அவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு.
24:33 وَلْيَسْتَعْفِفِ الَّذِيْنَ لَا يَجِدُوْنَ نِكَاحًا حَتّٰى يُغْنِيَهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖؕ وَالَّذِيْنَ يَبْتَغُوْنَ الْـكِتٰبَ مِمَّا مَلَـكَتْ اَيْمَانُكُمْ فَكَاتِبُوْهُمْ اِنْ عَلِمْتُمْ فِيْهِمْ خَيْرًا ۖ وَّاٰ تُوْهُمْ مِّنْ مَّالِ اللّٰهِ الَّذِىْۤ اٰتٰٮكُمْ ؕ وَلَا تُكْرِهُوْا فَتَيٰتِكُمْ عَلَى الْبِغَآءِ اِنْ اَرَدْنَ تَحَصُّنًا لِّـتَبْتَغُوْا عَرَضَ الْحَيٰوةِ الدُّنْيَا ؕ وَمَنْ يُّكْرِهْهُّنَّ فَاِنَّ اللّٰهَ مِنْۢ بَعْدِ اِكْرَاهِهِنَّ غَفُوْرٌ رَّحِيْمٌ
24:33. திருமணம் செய்வதற்கு (உரிய வசதிகளைப்) பெற்றுக்கொள்ளாதவர்கள் - அவர்களை அல்லாஹ் தம் அருளினால் சீமான்களாக்கும் வரை - அவர்கள் ஒழுக்கம் பேணட்டும்; இன்னும், உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக்கொண்டவர்களில் (அடிமைகளில் உரிய தொகையைக் கொடுத்தோ அல்லது முறையாக சம்பாதித்துத் தருவதாக வாக்குக் கொடுத்தோ) எவரேனும் (சுதந்திரமாவதற்கான) உரிமைப்பத்திரம் விரும்பினால் - அவர்களில் நன்மையை நீங்கள் அறிவீர்களாயின், அவர்களுக்கு (உரிமைப்பத்திரம்) எழுதிக் கொடுங்கள்; இன்னும், (அதற்கான பொருளை) அல்லாஹ் உங்களுக்குத் தந்திருக்கும் பொருளிலிருந்து அவர்களுக்குக் கொடுப்பீர்களாக! மேலும், தங்கள் கற்பைப் பேணிக்கொள்ள விரும்பும் உங்கள் அடிமைப் பெண்களை - அற்பமான உலக வாழ்க்கை வசதிகளைத் தேடியவர்களாக - விபசாரத்திற்கு (அவர்களை) நிர்ப்பந்திக்காதீர்கள்; அப்படி எவரேனும் அவர்களை நிர்ப்பந்தித்தால் அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட பின் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கிறான்.
28:42 وَاَتْبَعْنٰهُمْ فِىْ هٰذِهِ الدُّنْيَا لَـعْنَةً ۚ وَيَوْمَ الْقِيٰمَةِ هُمْ مِّنَ الْمَقْبُوْحِيْنَ
28:42. இன்னும், இவ்வுலகில் அவர்களைச் சாபம் தொடருமாறு நாம் செய்தோம்; மறுமை நாளில் அவர்கள் இகழப்பட்டவர்களாகவே இருப்பார்கள்.
28:61 اَفَمَنْ وَّعَدْنٰهُ وَعْدًا حَسَنًا فَهُوَ لَاقِيْهِ كَمَنْ مَّتَّعْنٰهُ مَتَاعَ الْحَيٰوةِ الدُّنْيَا ثُمَّ هُوَ يَوْمَ الْقِيٰمَةِ مِنَ الْمُحْضَرِيْنَ
28:61. எவனுக்கு நாம் அழகான வாக்காக வாக்குறுதியளித்து, அதை அவனும் அடையப்போகிறானோ அ(த்தகைய)வன், எவனுக்கு நாம் இவ்வுலக வாழ்க்கையின் (அற்ப) சுகங்களை மட்டும் கொடுத்துப் பின்னர், மறுமைநாளில் (தண்டனை பெறுவதற்காக நம்முன்) கொண்டுவரப்படுவானோ அவனைப் போலாவானா?
28:77 وَابْتَغِ فِيْمَاۤ اٰتٰٮكَ اللّٰهُ الدَّارَ الْاٰخِرَةَ وَلَا تَنْسَ نَصِيْبَكَ مِنَ الدُّنْيَا وَاَحْسِنْ كَمَاۤ اَحْسَنَ اللّٰهُ اِلَيْكَ وَلَا تَبْغِ الْـفَسَادَ فِى الْاَرْضِؕ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْمُفْسِدِيْنَ
28:77. மேலும், "அல்லாஹ் உனக்குக் கொடுத்த (செல்வத்)திலிருந்து மறுமை வீட்டைத் தேடிக்கொள்! எனினும், இவ்வுலகத்தில் உன் பங்கை நீ மறந்துவிடாதே! அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல் நீயும் நல்லதை செய்! இன்னும், பூமியில் குழப்பம் செய்ய விரும்பாதே! நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிப்பதில்லை" (என்றும் கூறினார்கள்).
28:79 فَخَرَجَ عَلٰى قَوْمِهٖ فِىْ زِيْنَتِهٖؕ قَالَ الَّذِيْنَ يُرِيْدُوْنَ الْحَيٰوةَ الدُّنْيَا يٰلَيْتَ لَـنَا مِثْلَ مَاۤ اُوْتِىَ قَارُوْنُۙ اِنَّهٗ لَذُوْ حَظٍّ عَظِيْمٍ
28:79. அப்பால், அவன் (கர்வத்துடன்) தன் அலங்காரத்தில் தன் சமூகத்தாரிடையே சென்றான்; (அப்போது) இவ்வுலக வாழ்க்கையை எவர்கள் விரும்புகிறார்களோ அவர்கள்: "ஆ! காரூனுக்குக் கொடுக்கப்பட்டதைப் போன்று நமக்கும் இருந்திருக்க வேண்டுமே! நிச்சயமாக அவன் மகத்தான பாக்கியமுடையவன்" என்று கூறினார்கள்.
29:25 وَقَالَ اِنَّمَا اتَّخَذْتُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اَوْثَانًا ۙ مَّوَدَّةَ بَيْنِكُمْ فِى الْحَيٰوةِ الدُّنْيَا ۚ ثُمَّ يَوْمَ الْقِيٰمَةِ يَكْفُرُ بَعْضُكُمْ بِبَعْضٍ وَّيَلْعَنُ بَعْضُكُمْ بَعْضًا وَّمَاْوٰٮكُمُ النَّارُ وَمَا لَـكُمْ مِّنْ نّٰصِرِيْنَ ۙ
29:25. மேலும் அவர் (இப்ராஹீம்) சொன்னார்: "அல்லாஹ்வையன்றி சிலைகளை (தெய்வமாக) நீங்கள் ஆக்கிக்கொண்டதெல்லாம், உலக வாழ்க்கையில் (அவர்கள் மீது) உங்களிடையேயுள்ள நேசத்தின் காரணத்தினால்தான்; பின்னர், மறுமைநாளன்று உங்களில் சிலர் சிலரை நிராகரிப்பார்கள்; உங்களில் சிலர் சிலரைச் சபித்துக்கொள்வர்; (இறுதியில்) உங்கள் ஒதுங்குமிடம் (நரக) நெருப்புதான்; (அங்கு) உங்களுக்கு உதவியாளர் எவருமில்லை."
29:27 وَوَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ وَيَعْقُوْبَ وَجَعَلْنَا فِىْ ذُرِّيَّتِهِ النُّبُوَّةَ وَالْكِتٰبَ وَاٰتَيْنٰهُ اَجْرَهٗ فِى الدُّنْيَا ۚ وَاِنَّهٗ فِى الْاٰخِرَةِ لَمِنَ الصّٰلِحِيْنَ
29:27. மேலும் அவருக்கு இஸ்ஹாக்கையும் யஃகூபையும் அளித்தோம்; இன்னும் அவருடைய சந்ததியிலே, நபித்துவத்தையும், வேதத்தையும் ஏற்படுத்தினோம்; அவருக்கு அவருடைய கூலியை இவ்வுலகத்திலும் கொடுத்தோம்; மறுமையில் அவர் நல்லவர்களில் ஒருவராவார்.
29:64 وَمَا هٰذِهِ الْحَيٰوةُ الدُّنْيَاۤ اِلَّا لَهْوٌ وَّلَعِبٌؕ وَاِنَّ الدَّارَ الْاٰخِرَةَ لَهِىَ الْحَـيَوَانُۘ لَوْ كَانُوْا يَعْلَمُوْنَ
29:64. இன்னும், இவ்வுலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை; இன்னும், நிச்சயமாக மறுமைக்குரிய வீடு திடமாக அதுவே (நித்தியமான) வாழ்வாகும்; இவர்கள் (இதை) அறிந்திருந்தால்.
31:14 وَوَصَّيْنَا الْاِنْسٰنَ بِوَالِدَيْهِۚ حَمَلَتْهُ اُمُّهٗ وَهْنًا عَلٰى وَهْنٍ وَّفِصٰلُهٗ فِىْ عَامَيْنِ اَنِ اشْكُرْ لِىْ وَلِـوَالِدَيْكَؕ اِلَىَّ الْمَصِيْرُ
31:14. நாம் மனிதனுக்குத் தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்யவேண்டியது) பற்றி போதித்தோம்; அவனுடைய தாய் பலவீனத்தின் மேல் பலவீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனைச் சுமந்தாள்; இன்னும், அவனுக்குப் பால்குடி மறத்தலில் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே, நீ எனக்கும் உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.
31:15 وَاِنْ جَاهَدٰكَ عَلٰٓى اَنْ تُشْرِكَ بِىْ مَا لَيْسَ لَكَ بِهٖ عِلْمٌ ۙ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِى الدُّنْيَا مَعْرُوْفًا وَّاتَّبِعْ سَبِيْلَ مَنْ اَنَابَ اِلَىَّ ۚ ثُمَّ اِلَىَّ مَرْجِعُكُمْ فَاُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ
31:15. ஆனால், எது பற்றி உனக்கு அறிவு (ஆதாரம்) இல்லையோ அதைக்கொண்டு எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால், அப்போது நீ அவ்விருவருக்கும் கட்டுப்பட வேண்டாம்; ஆனால், இவ்வுலகில் அவ்விருவருடனும் அழகிய முறையில் தோழமை வைத்துக்கொள்! (யாவற்றிலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக! பின்னர், உங்கள் (அனைவருடைய) மீளுதலும் என்னிடமே உள்ளது; அப்போது நீங்கள் செய்து கொண்டிருந்தவைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிப்பேன்.
31:33 يٰۤاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمْ وَاخْشَوْا يَوْمًا لَّا يَجْزِىْ وَالِدٌ عَنْ وَّلَدِهٖ وَلَا مَوْلُوْدٌ هُوَ جَازٍ عَنْ وَّالِدِهٖ شَيْئًا ؕ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ فَلَا تَغُرَّنَّكُمُ الْحَيٰوةُ الدُّنْيَا وَلَا يَغُرَّنَّكُمْ بِاللّٰهِ الْغَرُوْرُ
31:33. மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சிக்கொள்ளுங்கள்; இன்னும், அந்த (கியாமத்) நாளைக்குறித்துப் பயந்துகொள்ளுங்கள்; (அந்நாளில்) தந்தை தன் மகனுக்கு உதவமாட்டார்; (அதே போன்று) பிள்ளையும் தன் தந்தைக்கு எத்தகைய உதவியும் செய்கிறவனாக இல்லை; நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும்; ஆகவே, இவ்வுலக வாழ்க்கை உங்களை ஏமாற்றிவிட வேண்டாம்; ஏமாற்றுபவ(னாகிய ஷைத்தா)னும் அல்லாஹ்வைக் குறித்து உங்களை ஏமாற்றாதிருக்கட்டும்.
33:28 يٰۤـاَيُّهَا النَّبِىُّ قُلْ لِّاَزْوَاجِكَ اِنْ كُنْتُنَّ تُرِدْنَ الْحَيٰوةَ الدُّنْيَا وَزِيْنَتَهَا فَتَعَالَيْنَ اُمَتِّعْكُنَّ وَاُسَرِّحْكُنَّ سَرَاحًا جَمِيْلًا
33:28. நபியே! உம்முடைய மனைவிகளிடம் நீர் கூறுவீராக! "நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும், இதன் அலங்காரத்தையும் நாடுவீர்களானால், வாருங்கள்! நான் உங்களுக்கு வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து அழகிய முறையில் உங்களை விடுதலை செய்கிறேன்."
35:5 يٰۤـاَيُّهَا النَّاسُ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ فَلَا تَغُرَّنَّكُمُ الْحَيٰوةُ الدُّنْيَاوَلَا يَغُرَّنَّكُمْ بِاللّٰهِ الْغَرُوْرُ
35:5. மனிதர்களே! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும்; ஆகவே, இவ்வுலக வாழ்க்கை உங்களை ஒருபோதும் ஏமாற்றிவிட வேண்டாம்; இன்னும், (ஷைத்தானாகிய) ஏமாற்றுபவன் உங்களை அல்லாஹ்வை விட்டும் ஏமாற்றிவிட வேண்டாம்.
37:6 اِنَّا زَيَّنَّا السَّمَآءَ الدُّنْيَا بِزِيْنَةِ اۨلْكَوَاكِبِۙ
37:6. நிச்சயமாக நாமே (பூமிக்கு) சமீபமாக இருக்கும் வானத்தை, நட்சத்திரங்களின் அழகைக் கொண்டு அழகுபடுத்தியிருக்கிறோம்.
39:10 قُلْ يٰعِبَادِ الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوْا رَبَّكُمْ ؕ لِلَّذِيْنَ اَحْسَنُوْا فِىْ هٰذِهِ الدُّنْيَا حَسَنَةٌ ؕ وَاَرْضُ اللّٰهِ وَاسِعَةٌ ؕ اِنَّمَا يُوَفَّى الصّٰبِرُوْنَ اَجْرَهُمْ بِغَيْرِ حِسَابٍ
39:10. (நபியே!) நீர் கூறும்: "நம்பிக்கை கொண்ட என் அடியார்களே! உங்களுடைய இறைவனுக்குப் பயந்து கொள்ளுங்கள்! இவ்வுலகில் நன்மை செய்தோருக்கு நன்மையே கிடைக்கும்; அல்லாஹ்வுடைய பூமி விசாலமானது: பொறுமையுள்ளவர்கள் தங்கள் கூலியை நிச்சயமாகக் கணக்கின்றிப் பெறுவார்கள்."
39:26 فَاَذَاقَهُمُ اللّٰهُ الْخِزْىَ فِى الْحَيٰوةِ الدُّنْيَا ۚ وَلَعَذَابُ الْاٰخِرَةِ اَكْبَرُ ۘ لَوْ كَانُوْا يَعْلَمُوْنَ
39:26. இவ்வாறு இவ்வுலகில் அவர்களை இழிவை அனுபவிக்கும்படி அல்லாஹ் செய்தான்; (அவர்களுக்கு) மறுமையின் வேதனையோ மிகப் பெரிதாகும்; இதை அவர்கள் அறிந்து கொண்டிருப்பார்களாயின்.
40:39 يٰقَوْمِ اِنَّمَا هٰذِهِ الْحَيٰوةُ الدُّنْيَا مَتَاعٌ وَّاِنَّ الْاٰخِرَةَ هِىَ دَارُ الْقَرَارِ
40:39. "என்னுடைய சமூகத்தாரே! இவ்வுலக வாழ்க்கையெல்லாம் அற்பசுகம்தான்; அன்றியும், நிச்சயமாக மறுமையோ - அதுதான் (என்றென்றும் இருக்கும்) நிலையான வீடு."
40:43 لَا جَرَمَ اَنَّمَا تَدْعُوْنَنِىْۤ اِلَيْهِ لَيْسَ لَهٗ دَعْوَةٌ فِى الدُّنْيَا وَلَا فِى الْاٰخِرَةِ وَاَنَّ مَرَدَّنَاۤ اِلَى اللّٰهِ وَاَنَّ الْمُسْرِفِيْنَ هُمْ اَصْحٰبُ النَّارِ
40:43. "சந்தேகமில்லாமல் என்னை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது நிச்சயமாக இவ்வுலகிலும் மறுமையிலும் (இறைவன் என) அழைக்கப்படுவதற்கு சிறிதும் தகுதியில்லாதது; மேலும், நிச்சயமாக நம்முடைய மீளுமிடம் அல்லாஹ்வின் பக்கமேயாகும்; இன்னும், நிச்சயமாக வரம்புமீறியவர்கள் நரகவாசிகளாகவே இருக்கிறார்கள்."
40:51 اِنَّا لَنَـنْصُرُ رُسُلَنَا وَالَّذِيْنَ اٰمَنُوْا فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَيَوْمَ يَقُوْمُ الْاَشْهَادُ ۙ
40:51. நிச்சயமாக நாம் நம்முடைய தூதர்களுக்கும், நம்பிக்கை கொண்டவர்களுக்கும், இவ்வுலக வாழ்க்கையிலும், சாட்சிகள் நிலைபெறும் நாளிலும் உதவி செய்வோம்.
41:12 فَقَضٰٮهُنَّ سَبْعَ سَمٰوَاتٍ فِىْ يَوْمَيْنِ وَاَوْحٰى فِىْ كُلِّ سَمَآءٍ اَمْرَهَا ؕ وَزَ يَّـنَّـا السَّمَآءَ الدُّنْيَا بِمَصَابِيْحَ ۖ وَحِفْظًا ؕ ذٰ لِكَ تَقْدِيْرُ الْعَزِيْزِ الْعَلِيْمِ
41:12. ஆகவே, இரண்டு நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான்; ஒவ்வொரு வானத்திலும் அதற்குரிய காரியத்தை அறிவித்தான்: இன்னும், (உலகத்திற்கு) சமீபமான வானத்தை நாம் விளக்குகளைக் கொண்டு அலங்கரித்தோம்; இன்னும், அதனைப் பாதுகாப்பாகவும் (ஆக்கினோம்); இது யாவரையும் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாகிய இறைவனுடைய ஏற்பாடேயாகும்.
42:20 مَنْ كَانَ يُرِيْدُ حَرْثَ الْاٰخِرَةِ نَزِدْ لَهٗ فِىْ حَرْثِهٖۚ وَمَنْ كَانَ يُرِيْدُ حَرْثَ الدُّنْيَا نُؤْتِهٖ مِنْهَا وَمَا لَهٗ فِى الْاٰخِرَةِ مِنْ نَّصِيْبٍ
42:20. எவர் மறுமையின் விளைச்சலை விரும்புகிறாரோ அவருடைய விளைச்சலை நாம் அவருக்காக அதிகப்படுத்துவோம்; எவர் இவ்வுலகின் விளைச்சலை (மட்டும்) விரும்புகிறாரோ, அவருக்கு நாம் அதிலிருந்து (ஓரளவு) கொடுக்கிறோம்; எனினும், அவருக்கு மறுமையில் யாதொரு பங்கும் இல்லை.
42:36 فَمَاۤ اُوْتِيْتُمْ مِّنْ شَىْءٍ فَمَتَاعُ الْحَيٰوةِ الدُّنْيَاۚ وَمَا عِنْدَ اللّٰهِ خَيْرٌ وَّاَبْقٰى لِلَّذِيْنَ اٰمَنُوْا وَعَلٰى رَبِّهِمْ يَتَوَكَّلُوْنَۚ
42:36. ஆகவே, நீங்கள் கொடுக்கப்பட்டிருப்பதெல்லாம் இவ்வுலக வாழ்க்கையின் (அற்ப) சுகங்களேயாகும்; நம்பிக்கை கொண்டு, தங்கள் இறைவனையே (முற்றிலும்) சார்ந்திருப்பவர்களுக்கு, அல்லாஹ்விடம் இருப்பது மிகவும் மேலானதும், நிலையானதுமாகும்.
43:32 اَهُمْ يَقْسِمُوْنَ رَحْمَتَ رَبِّكَ ؕ نَحْنُ قَسَمْنَا بَيْنَهُمْ مَّعِيْشَتَهُمْ فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَرَفَعْنَا بَعْضَهُمْ فَوْقَ بَعْضٍ دَرَجٰتٍ لِّيَـتَّخِذَ بَعْضُهُمْ بَعْضًا سُخْرِيًّا ؕ وَرَحْمَتُ رَبِّكَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُوْنَ
43:32. உமது இறைவனின் அருளை இவர்களா பங்கிடுகிறார்கள்? இவ்வுலக வாழ்வில் இவர்களுடைய வாழ்க்கை(த் தேவை)யை இவர்களிடையே நாமே பங்கிட்டு இருக்கிறோம்; இவர்களில் சிலர், சிலரை ஊழியத்திற்கு வைத்துக்கொள்ளும் பொருட்டு, இவர்களில் சிலரை, சிலரைவிட தரங்களில் நாம் உயர்த்தி இருக்கிறோம்; உம்முடைய இறைவனின் அருள் அவர்கள் சேகரித்து வைத்துக் கொண்டிருப்பதைவிட மேலானதாகும்.
43:35 وَزُخْرُفًا ؕ وَاِنْ كُلُّ ذٰ لِكَ لَمَّا مَتَاعُ الْحَيٰوةِ الدُّنْيَا ؕ وَالْاٰخِرَةُ عِنْدَ رَبِّكَ لِلْمُتَّقِيْنَ
43:35. தங்கத்தாலும் (அவற்றை ஆக்கிக் கொடுத்திருப்போம்; ஆனால்,) இவையெல்லாம் இவ்வுலக வாழ்க்கையிலுள்ள (நிலையில்லா அற்ப) சுகங்களேயன்றி வேறில்லை; மேலும், மறுமை(யின் நித்திய வாழ்வு) உம் இறைவனிடம் (அவனை) அஞ்சுபவர்களுக்குத்தான்.
45:24 وَقَالُوْا مَا هِىَ اِلَّا حَيَاتُنَا الدُّنْيَا نَمُوْتُ وَنَحْيَا وَمَا يُهْلِكُنَاۤ اِلَّا الدَّهْرُؕ وَمَا لَهُمْ بِذٰلِكَ مِنْ عِلْمٍ ۚ اِنْ هُمْ اِلَّا يَظُنُّوْنَ
45:24. மேலும் (மறுமையை நம்பாத) அவர்கள்: "இது நமது உலக வாழ்க்கையைத் தவிர வேறு (வாழ்க்கை) கிடையாது; நாம் இறக்கிறோம்; இன்னும், வாழ்கிறோம்; காலம் தவிர வேறெதுவும் நம்மை அழிப்பதில்லை" என்று கூறுகிறார்கள்; அவர்களுக்கு அது பற்றிய அறிவு கிடையாது; அவர்கள் (இது பற்றிக் கற்பனையாக) எண்ணுவதைத் தவிர வேறில்லை.
45:35 ذٰلِكُمْ بِاَنَّكُمُ اتَّخَذْتُمْ اٰيٰتِ اللّٰهِ هُزُوًا وَّغَرَّتْكُمُ الْحَيٰوةُ الدُّنْيَا ۚ فَالْيَوْمَ لَا يُخْرَجُوْنَ مِنْهَا وَلَا هُمْ يُسْتَعْتَبُوْنَ
45:35. நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை ஏளனமாக எடுத்துக்கொண்டதனாலும், இவ்வுலக வாழ்க்கை உங்களை மயக்கி ஏமாற்றிவிட்டதினாலுமே இந்த நிலை; இன்றைய தினத்தில் அதிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படவும் மாட்டார்கள்; மன்னிக்கப்படவும் மாட்டார்கள்.
46:20 وَيَوْمَ يُعْرَضُ الَّذِيْنَ كَفَرُوْا عَلَى النَّارِ ؕ اَذْهَبْتُمْ طَيِّبٰـتِكُمْ فِىْ حَيَاتِكُمُ الدُّنْيَا وَاسْتَمْتَعْتُمْ بِهَا ۚ فَالْيَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُوْنِ بِمَا كُنْـتُمْ تَسْتَكْبِرُوْنَ فِى الْاَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَبِمَا كُنْتُمْ تَفْسُقُوْنَ
46:20. அன்றியும், (நரக) நெருப்பின் முன் நிராகரிப்பவர்கள் கொண்டுவரப்படும் நாளில், "உங்களுடைய நல்லவைகளை உங்களுடைய உலக வாழ்க்கையிலேயே நீங்கள் போக்கிவிட்டீர்கள்; இன்னும், அவற்றைக்கொண்டு சுகம் அனுபவித்தீர்கள்; ஆகவே, நீங்கள் பூமியில் அநியாயமாகப் பெருமையடித்துக்கொண்டும், பாவம் செய்துகொண்டும் இருந்த காரணத்தால், இழிவுதரும் வேதனையை இன்று நீங்கள் கூலியாகக் கொடுக்கப்படுகிறீர்கள்" (என்று அவர்களுக்குக் கூறப்படும்).
47:36 اِنَّمَا الْحَيٰوةُ الدُّنْيَا لَعِبٌ وَّلَهْوٌ ؕ وَاِنْ تُؤْمِنُوْا وَتَتَّقُوْا يُؤْتِكُمْ اُجُوْرَكُمْ وَلَا يَسْـٴَـــلْكُمْ اَمْوَالَكُمْ
47:36. திடமாக இவ்வுலக வாழ்க்கை வீண் விளையாட்டாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது; ஆனால், நீங்கள் நம்பிக்கை கொண்டு (அல்லாஹ்வுக்கு) அஞ்சினால், அவன் உங்களுடைய கூலிகளை உங்களுக்கு அளிப்பான்; அன்றியும், உங்களிடம் உங்களுடைய செல்வங்களை அவன் கேட்கமாட்டான்.
53:29 فَاَعْرِضْ عَنْ مَّنْ تَوَلّٰى ۙ عَنْ ذِكْرِنَا وَلَمْ يُرِدْ اِلَّا الْحَيٰوةَ الدُّنْيَا ؕ
53:29. ஆகவே, எவன் நம்மைத் தியானிப்பதை விட்டும் பின்வாங்கிக் கொண்டானோ, இவ்வுலக வாழ்வையன்றி வேறெதையும் நாடவில்லையோ, அவனை (நபியே!) நீர் புறக்கணித்துவிடும்.
57:20 اِعْلَمُوْۤا اَنَّمَا الْحَيٰوةُ الدُّنْيَا لَعِبٌ وَّلَهْوٌ وَّزِيْنَةٌ وَّتَفَاخُرٌۢ بَيْنَكُمْ وَتَكَاثُرٌ فِى الْاَمْوَالِ وَالْاَوْلَادِؕ كَمَثَلِ غَيْثٍ اَعْجَبَ الْكُفَّارَ نَبَاتُهٗ ثُمَّ يَهِيْجُ فَتَرٰٮهُ مُصْفَرًّا ثُمَّ يَكُوْنُ حُطٰمًاؕ وَفِى الْاٰخِرَةِ عَذَابٌ شَدِيْدٌ ۙ وَّمَغْفِرَةٌ مِّنَ اللّٰهِ وَرِضْوَانٌؕ وَمَا الْحَيٰوةُ الدُّنْيَاۤ اِلَّا مَتَاعُ الْغُرُوْرِ
57:20. அறிந்துகொள்ளுங்கள்! நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்; மேலும், (அது) உங்களிடையே பெருமையடித்துக்கொள்வதும், பொருட்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும். (இது) மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும்; (அதாவது) அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப்படுத்துகிறது. ஆனால், சீக்கிரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கின்றீர்; பின்னர், அது கூளமாகிவிடுகிறது. (உலகவாழ்வும் இத்தகையதே; எனவே, உலக வாழ்வில் மயங்கியோருக்கு) மறுமையில் கடுமையான வேதனையுண்டு; (நம்பிக்கையாளர்களுக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு. ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் (சொற்ப) சுகமே தவிர (வேறு) இல்லை.
59:3 وَلَوْلَاۤ اَنْ كَتَبَ اللّٰهُ عَلَيْهِمُ الْجَـلَاۤءَ لَعَذَّبَهُمْ فِى الدُّنْيَاؕ وَلَهُمْ فِى الْاٰخِرَةِ عَذَابُ النَّارِ
59:3. தவிரவும், அவர்கள் மீது வெளியேறுகையை அல்லாஹ் விதிக்காதிருந்தால், இவ்வுலகிலேயே அவர்களைக் (கடினமான) வேதனை செய்திருப்பான்; இன்னும், அவர்களுக்கு மறுமையிலும் (நரக) நெருப்பின் வேதனையுண்டு.
67:5 وَلَـقَدْ زَيَّـنَّا السَّمَآءَ الدُّنْيَا بِمَصَابِيْحَ وَجَعَلْنٰهَا رُجُوْمًا لِّلشَّيٰطِيْنِ وَاَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيْرِ
67:5. அன்றியும், திட்டமாக நாமே (பூமிக்குச்) சமீபமாக இருக்கும் வானத்தை (நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்கரித்திருக்கிறோம்; இன்னும், அவற்றை ஷைத்தான்களுக்கு எறியப்படுபவையாகவும் நாம் ஆக்கினோம்; அன்றியும், அவர்களுக்காக கொழுந்துவிட்டெரியும் (நரக) நெருப்பின் வேதனையைச் சித்தம் செய்திருக்கின்றோம்.
79:37 فَاَمَّا مَنْ طَغٰىۙ
79:37. எனவே, எவன் வரம்பை மீறினானோ-
79:38 وَاٰثَرَ الْحَيٰوةَ الدُّنْيَا ۙ
79:38. இந்த உலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தானோ?
87:16 بَلْ تُؤْثِرُوْنَ الْحَيٰوةَ الدُّنْيَا ۖ
87:16. எனினும், நீங்களோ, (மறுமையை விட்டுவிட்டு) இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்.