இறைநம்பிக்கையுள்ள பெண்
2:221 وَلَا تَنْكِحُوا الْمُشْرِكٰتِ حَتّٰى يُؤْمِنَّؕ وَلَاَمَةٌ مُّؤْمِنَةٌ خَيْرٌ مِّنْ مُّشْرِكَةٍ وَّلَوْ اَعْجَبَتْكُمْۚ وَلَا تُنْكِحُوا الْمُشْرِكِيْنَ حَتّٰى يُؤْمِنُوْا ؕ وَلَعَبْدٌ مُّؤْمِنٌ خَيْرٌ مِّنْ مُّشْرِكٍ وَّلَوْ اَعْجَبَكُمْؕ اُولٰٓٮِٕكَ يَدْعُوْنَ اِلَى النَّارِ ۖۚ وَاللّٰهُ يَدْعُوْٓا اِلَى الْجَـنَّةِ وَالْمَغْفِرَةِ بِاِذْنِهٖۚ وَيُبَيِّنُ اٰيٰتِهٖ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ
2:221. (அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை - அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை - நீங்கள் திருமணம் செய்துகொள்ளாதீர்கள்; இணைவைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக் கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட நம்பிக்கையுள்ள ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்; இணைவைக்கும் ஆண்களுக்கு – அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (நம்பிக்கையுள்ள பெண்களை) நீங்கள் திருமணம் செய்துவைக்காதீர்கள்; இணைவைக்கும் ஆண் அவன் உங்களைக் கவருபவனாக இருந்தபோதிலும், நம்பிக்கையுள்ள ஓர் அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை (நரக) நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்; ஆனால், அல்லாஹ்வோ தன் கட்டளையைக்கொண்டு சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்; மனிதர்கள் படிப்பினை பெறுவதற்காக தன் வசனங்களை அவன் விளக்குகிறான்.
4:92 وَمَا كَانَ لِمُؤْمِنٍ اَنْ يَّقْتُلَ مُؤْمِنًا اِلَّا خَطَـــٴًــا ۚ وَمَنْ قَتَلَ مُؤْمِنًا خَطَـــٴًــا فَتَحْرِيْرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ وَّدِيَةٌ مُّسَلَّمَةٌ اِلٰٓى اَهْلِهٖۤ اِلَّاۤ اَنْ يَّصَّدَّقُوْا ؕ فَاِنْ كَانَ مِنْ قَوْمٍ عَدُوٍّ لَّـكُمْ وَهُوَ مُؤْمِنٌ فَتَحْرِيْرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ ؕ وَاِنْ كَانَ مِنْ قَوْمٍۢ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ مِّيْثَاقٌ فَدِيَةٌ مُّسَلَّمَةٌ اِلٰٓى اَهْلِهٖ وَ تَحْرِيْرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ ۚ فَمَنْ لَّمْ يَجِدْ فَصِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ تَوْبَةً مِّنَ اللّٰهِ ؕ وَكَانَ اللّٰهُ عَلِيْمًا حَكِيْمًا
4:92. தவறாக அன்றி, ஒரு நம்பிக்கையாளனுக்கு பிறிதொரு நம்பிக்கையாளனைக் கொலைசெய்வது ஆகுமானதல்ல: உங்களில் எவரேனும் ஒரு நம்பிக்கையாளனைத் தவறாகக் கொலை செய்துவிட்டால், அதற்குப் பரிகாரமாக நம்பிக்கை கொண்ட ஓர் அடிமையை விடுதலை செய்தலாகும்; இன்னும், அவனுடைய குடும்பத்தார்பால் நஷ்டஈடும் ஒப்படைத்தலாகும்; (அவனுடைய குடும்பத்தாராகிய) அவர்கள் (நஷ்டஈட்டுத் தொகையை மன்னித்து அதை) தர்மமாக விட்டாலொழிய; (கொல்லப்பட்ட) அவன் உங்கள் விரோதியின் சமூகத்தாரில் உள்ளவனாகவும், நம்பிக்கையாளனாகவும் இருந்தால், நம்பிக்கை கொண்ட ஓர் அடிமையை விடுதலை செய்தலாகும்; உங்களுக்கும், எவர்களுக்கும் மத்தியில் (சமாதான) உடன்படிக்கை ஏற்பட்டுள்ளதோ அந்தச் சமூகத்தாரில் உள்ளவனாக இருந்தால், அவனுடைய குடும்பத்தாரிடம் நஷ்டஈடு ஒப்படைக்கப்படுதலாகும்; இன்னும், நம்பிக்கை கொண்ட ஓர் அடிமையை விடுதலை செய்யவும் வேண்டும்; (இவ்வாறு செய்யும் வசதியை) யார் பெறவில்லையோ அவர் அல்லாஹ்விடம் மன்னிப்புப் பெறுவதற்காகத் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்புவைக்க வேண்டும்: அல்லாஹ் நன்கு அறிந்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
33:36 وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَّلَا مُؤْمِنَةٍ اِذَا قَضَى اللّٰهُ وَرَسُوْلُهٗۤ اَمْرًا اَنْ يَّكُوْنَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ اَمْرِهِمْ ؕ وَمَنْ يَّعْصِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَقَدْ ضَلَّ ضَلٰلًا مُّبِيْنًا
33:36. மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப் பற்றி முடிவெடுத்துவிட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு - நம்பிக்கை கொண்டுள்ள எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் மாறுசெய்கிறாரோ, நிச்சயமாக அவர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்.