உண்மையாளர்
2:23 وَاِنْ کُنْتُمْ فِىْ رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلٰى عَبْدِنَا فَاْتُوْا بِسُوْرَةٍ مِّنْ مِّثْلِهٖ وَادْعُوْا شُهَدَآءَكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ
2:23. இன்னும், (முஹம்மது என்னும்) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையவர்களாக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மையாளர்களாகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத் தவிர உங்கள் உதவியாளர்களை அழைத்து இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள்.
2:31 وَعَلَّمَ اٰدَمَ الْاَسْمَآءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلٰٓٮِٕكَةِ فَقَالَ اَنْۢبِـــٴُـوْنِىْ بِاَسْمَآءِ هٰٓؤُلَآءِ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ
2:31. இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்குக் கற்றுக்கொடுத்தான்; பின், அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, "நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு அறிவியுங்கள்" என்றான்.
2:94 قُلْ اِنْ كَانَتْ لَـکُمُ الدَّارُ الْاٰخِرَةُ عِنْدَ اللّٰهِ خَالِصَةً مِّنْ دُوْنِ النَّاسِ فَتَمَنَّوُا الْمَوْتَ اِنْ کُنْتُمْ صٰدِقِيْنَ
2:94. "அல்லாஹ்விடத்தில் உள்ள மறுமையின் வீடு (சுவர்க்கம்) மற்ற மனிதர்களுக்கன்றி உங்களுக்கே சொந்தமானது என்பதில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், (அதைப் பெறுவதற்காக) மரணத்தை விரும்புங்கள்" என்று (நபியே!) நீர் சொல்வீராக!
2:111 وَقَالُوْا لَنْ يَّدْخُلَ الْجَـنَّةَ اِلَّا مَنْ كَانَ هُوْدًا اَوْ نَصٰرٰىؕ تِلْكَ اَمَانِيُّهُمْؕ قُلْ هَاتُوْا بُرْهَانَکُمْ اِنْ کُنْتُمْ صٰدِقِيْنَ
2:111. "யூதர்கள், கிறிஸ்தவர்களைத் தவிர வேறு யாரும் சுவர்க்கத்தில் நுழையவே மாட்டார்கள்" என்று அவர்கள் கூறுகிறார்கள்; இது அவர்களின் வீணாசையேயாகும்: "நீங்கள் உண்மையுடையோராக இருந்தால், உங்களுடைய சான்றைச் சமர்ப்பியுங்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக!
3:17 اَلصّٰــبِرِيْنَ وَالصّٰدِقِــيْنَ وَالْقٰنِتِــيْنَ وَالْمُنْفِقِيْنَ وَالْمُسْتَغْفِرِيْنَ بِالْاَسْحَارِ
3:17. (இன்னும், அவர்கள்) பொறுமையுடையோராகவும், உண்மையாளர்களாகவும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும்) வழிப்படுவோராகவும், (இறைவன் பாதையில்) தர்மம் செய்வோராகவும், இரவின் கடைசி நேரத்தில் மன்னிப்புக் கோருவோராகவும் இருப்பர்.
3:93 كُلُّ الطَّعَامِ كَانَ حِلًّا لِّبَنِىْۤ اِسْرَآءِيْلَ اِلَّا مَا حَرَّمَ اِسْرَآءِيْلُ عَلٰى نَفْسِهٖ مِنْ قَبْلِ اَنْ تُنَزَّلَ التَّوْرٰٮةُ ؕ قُلْ فَاْتُوْا بِالتَّوْرٰٮةِ فَاتْلُوْهَاۤ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ
3:93. தவ்ராத் அருளப்படுவதற்கு முன்னால் இஸ்ராயீல் (என்ற தூதர் யஃகூப்) தன் மீது தடை செய்துகொண்டதைத் தவிர, இஸ்ராயீலின் மக்களுக்கு எல்லாவகையான உணவும் அனுமதிக்கப்பட்டிருந்தது; (நபியே!) நீர் கூறும்: "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் தவ்ராத்தைக் கொண்டு வந்து அதை ஓதிக் காண்பியுங்கள்" என்று.
3:183 اَلَّذِيْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ عَهِدَ اِلَيْنَاۤ اَلَّا نُؤْمِنَ لِرَسُوْلٍ حَتّٰى يَاْتِيَنَا بِقُرْبَانٍ تَاْكُلُهُ النَّارُؕ قُلْ قَدْ جَآءَكُمْ رُسُلٌ مِّنْ قَبْلِىْ بِالْبَيِّنٰتِ وَبِالَّذِىْ قُلْتُمْ فَلِمَ قَتَلْتُمُوْهُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ
3:183. மேலும், அவர்கள் "எந்தத் தூதராக இருந்தாலும், அவர் எங்களிடம் ஒரு காணிக்கையைக் கொண்டு வந்து, அதை நெருப்பு சாப்பிடும் (வதை நமக்குக் காண்பிக்கும்) வரை அவர் மீது நாங்கள் விசுவாசம் கொள்ள வேண்டாம் என்று அல்லாஹ் எங்களிடம் உறுதிமொழி வாங்கியுள்ளான்" என்று கூறுகிறார்கள்; (நபியே!) "எனக்கு முன்னர் உங்களிடம் வந்த தூதர்களில் பலர், தெளிவான ஆதாரங்களையும் இன்னும், நீங்கள் கேட்டுக்கொண்டதையும் திட்டமாகக் கொண்டு வந்தார்கள்; நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை நீங்கள் ஏன் கொலை செய்தீர்கள்?" என்று நீர் கேட்பீராக!
5:119 قَالَ اللّٰهُ هٰذَا يَوْمُ يَـنْفَعُ الصّٰدِقِيْنَ صِدْقُهُمْؕ لَهُمْ جَنّٰتٌ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاۤ اَبَدًا ؕ رَضِىَ اللّٰهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ ؕ ذٰ لِكَ الْـفَوْزُ الْعَظِيْمُ
5:119. அப்போது அல்லாஹ், "இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும்; அவர்களுக்கு சுவனபதிகள் உண்டு - அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; அவற்றில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள்" என்று கூறுவான்; அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான்; அல்லாஹ்வை அவர்களும் பொருந்திக்கொண்டார்கள் - இது மகத்தான (பெரும்) வெற்றியாகும்.
6:40 قُلْ اَرَءَيْتَكُمْ اِنْ اَتٰٮكُمْ عَذَابُ اللّٰهِ اَوْ اَ تَتْكُمُ السَّاعَةُ اَغَيْرَ اللّٰهِ تَدْعُوْنَۚ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ
6:40. (நபியே! அவர்களிடம்) நீர் கூறும்: "அல்லாஹ்வுடைய வேதனை உங்களிடம் வந்துவிட்டால், அல்லது மறுமைநாள் உங்களிடம் வந்துவிட்டால் (அதிலிருந்து உங்களைக் காப்பாற்ற) - நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் - அல்லாஹ் அல்லாத (இ)வைகளையா நீங்கள் (உங்கள் உதவிக்கு) அழைப்பீர்கள்? என்பதை நீங்கள் எனக்குத் தெரிவியுங்கள்."
6:143 ثَمٰنِيَةَ اَزْوَاجٍ ۚ مِنَ الضَّاْنِ اثْنَيْنِ وَمِنَ الْمَعْزِ اثْنَيْنِ ؕ قُلْ ءٰٓالذَّكَرَيْنِ حَرَّمَ اَمِ الْاُنْثَيَيْنِ اَمَّا اشْتَمَلَتْ عَلَيْهِ اَرْحَامُ الْاُنْثَيَيْنِ ؕ نَـبِّـــٴُـــوْنِىْ بِعِلْمٍ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ ۙ
6:143. "(கால்நடைகளில்) எட்டு வகைகள் உள்ளன; செம்மறி ஆட்டில் (ஆண், பெண்) இரு வகை; வெள்ளாட்டில் (ஆண், பெண்) இரு வகை; இரு ஆண் இனங்களையா? அல்லது இரு பெண் இனங்களையா? அல்லது இரு பெண் இனங்களுடைய கர்ப்பக்கோளறைகள் எதனைப் பொதிந்து கொண்டிருக்கின்றனவோ அதனையா அவன் தடுத்திருக்கின்றான்? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அறிவுடன் (இதனை) எனக்கு அறிவியுங்கள்!" என்று (நபியே!) நீர் கேட்பீராக!
7:106 قَالَ اِنْ كُنْتَ جِئْتَ بِاٰيَةٍ فَاْتِ بِهَاۤ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِيْنَ
7:106. அதற்கு அவன், "நீர் அத்தாட்சியைக் கொண்டுவந்திருப்பீரானால் - (அதுபற்றி) நீர் உண்மையாளராக இருப்பின் - அதைக் கொண்டு வாரும்" என்று கூறினான்.
7:194 اِنَّ الَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ عِبَادٌ اَمْثَالُـكُمْ فَادْعُوْهُمْ فَلْيَسْتَجِيْبُوْا لَـكُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ
7:194. நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே; நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் - அவர்கள் உங்களுக்குப் பதில் அளிக்கட்டும்!
9:119 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَكُوْنُوْا مَعَ الصّٰدِقِيْنَ
9:119. நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும், உண்மையாளர்களுடன் நீங்களும் ஆகிவிடுங்கள்.
10:38 اَمْ يَقُوْلُوْنَ افْتَـرٰٮهُ ؕ قُلْ فَاْتُوْا بِسُوْرَةٍ مِّثْلِهٖ وَادْعُوْا مَنِ اسْتَطَعْتُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ
10:38. இதை (நம் தூதராகிய) அவர் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகிறார்களா? (நபியே!) நீர் கூறும்: "நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால், இதைப்போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டுவாருங்கள்! அல்லாஹ்வையன்றி உங்களால் சாத்தியமானவர்களை (உங்களுக்கு உதவிசெய்ய) அழைத்துக்கொள்ளுங்கள்!" என்று.
10:48 وَيَقُوْلُوْنَ مَتٰى هٰذَا الْوَعْدُ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ
10:48. "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (அச்சமூட்டப்படும் வேதனை பற்றிய) இந்த வாக்குறுதி எப்போது (அமலுக்கு வரும்)?" என்று அவர்கள் கேட்கிறார்கள்.
11:13 اَمْ يَقُوْلُوْنَ افْتَـرٰٮهُ ؕ قُلْ فَاْتُوْا بِعَشْرِ سُوَرٍ مِّثْلِهٖ مُفْتَرَيٰتٍ وَّ ادْعُوْا مَنِ اسْتَطَعْتُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ
11:13. அல்லது "இ(வ்வேதத்)தை அவர் (பொய்யாக) கற்பனை செய்துகொண்டார்" என்று அவர்கள் கூறுகிறார்களா? "(அப்படியானால்,) நீங்களும் இதைப்போன்ற கற்பனை செய்யப்பட்ட பத்து அத்தியாயங்களைக் கொண்டுவாருங்கள்: நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வைத் தவிர்த்து, உங்களுக்குச் சாத்தியமான எல்லோரையுமே (இதற்குத் துணைசெய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக!
11:32 قَالُوْا يٰـنُوْحُ قَدْ جَادَلْتَـنَا فَاَكْثَرْتَ جِدَالَـنَا فَاْتِنَا بِمَا تَعِدُنَاۤ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِيْنَ
11:32. (அதற்கு) அவர்கள், "நூஹே! நிச்சயமாக நீர் எங்களுடன் தர்க்கம் செய்தீர்; நீர் எங்களுடன் தர்க்கம் செய்ததை அதிகமாக்கியும் விட்டீர்; எனவே, நீர் உண்மையாளர்களில் உள்ளவராக இருந்தால், எங்களுக்கு நீர் வாக்களிப்பதை எங்களிடம் கொண்டு வாரும்" என்று கூறினார்கள்.
12:17 قَالُوْا يٰۤاَبَانَاۤ اِنَّا ذَهَبْنَا نَسْتَبِقُ وَتَرَكْنَا يُوْسُفَ عِنْدَ مَتَاعِنَا فَاَكَلَهُ الذِّئْبُۚ وَمَاۤ اَنْتَ بِمُؤْمِنٍ لَّنَا وَلَوْ كُنَّا صٰدِقِيْنَ
12:17. "எங்கள் தந்தையே! நாங்கள் யூஸுஃபை எங்களுடைய சாமான்களிடத்தில் விட்டுவிட்டு, போட்டியிட்டு ஓடிக்கொண்டே (வெகுதூரம்) சென்றுவிட்டோம்; அப்போது ஓநாய் அவரை(ப் பிடித்துத்) தின்றுவிட்டது. ஆனால், நாங்கள் உண்மையே சொன்னபோதிலும், நீங்கள் எங்களை நம்பவேமாட்டீர்கள்!" என்று கூறினார்கள்.
12:27 وَاِنْ كَانَ قَمِيْصُهٗ قُدَّ مِنْ دُبُرٍ فَكَذَبَتْ وَهُوَ مِنَ الصّٰدِقِيْنَ
12:27. "அன்றியும், அவருடைய சட்டை பின்புறமாகக் கிழிக்கப்பட்டிருந்தால் அவள் பொய் சொல்கிறாள்; அவர் உண்மையாளர்களில் உள்ளவர்."
15:7 لَوْ مَا تَاْتِيْنَا بِالْمَلٰۤٮِٕكَةِ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِيْنَ
15:7. "நீர் உண்மையாளர்களில் ஒருவராக இருப்பின் நீர் எங்களிடத்தில் வானவர்களைக் கொண்டு வந்திருக்க வேண்டாமா?" (என்றும் கூறுகின்றனர்.)
15:64 وَ اَتَيْنٰكَ بِالْحَـقِّ وَاِنَّا لَصٰدِقُوْنَ
15:64. (உறுதியான நிகழவிருக்கும்) உண்மையையே உம்மிடம் நாங்கள் கொண்டுவந்திருக்கின்றோம்; நிச்சயமாக நாங்கள் உண்மையாளர்களாகவே இருக்கிறோம்.
19:54 وَاذْكُرْ فِى الْـكِتٰبِ اِسْمٰعِيْلَ اِنَّهٗ كَانَ صَادِقَ الْوَعْدِ وَكَانَ رَسُوْلًا نَّبِيًّا ۚ
19:54. (நபியே) இவ்வேதத்தில் இஸ்மாயீலைப் பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் வாக்குறுதியில் உண்மையாளராக இருந்தார்; இன்னும், அவர் தூதராகவும், நபியாகவும் இருந்தார்.
21:38 وَيَقُوْلُوْنَ مَتٰى هٰذَا الْوَعْدُ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ
21:38. "நீங்கள் உண்மையாளர்களாக இருப்பின், இந்த (வேதனைக்கான) வாக்குறுதி எப்பொழுது (நிறைவேற்றப்படும்?)" என்று அவர்கள் கேட்கிறார்கள்.
26:31 قَالَ فَاْتِ بِهٖۤ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِيْنَ
26:31. "நீர் உண்மையாளராக இருப்பின் அதை நீர் கொண்டுவாரும்" என (ஃபிர்அவ்ன் ) பதில் கூறினான்.
26:154 مَاۤ اَنْتَ اِلَّا بَشَرٌ مِّثْلُـنَا ۖۚ فَاْتِ بِاٰيَةٍ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِيْنَ
26:154. "நீரும் எங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி (வேறு) இல்லை; எனவே, நீர் உண்மையாளர்களில் இருந்தால் ஓர் அத்தாட்சியைக் கொண்டுவாரும்" (என்றனர்).
26:187 فَاَسْقِطْ عَلَيْنَا كِسَفًا مِّنَ السَّمَآءِ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِيْنَؕ
26:187. "எனவே, நீர் உண்மையாளர்களில் உள்ளவராக இருந்தால், வானத்திலிருந்து ஒரு துண்டை எங்கள் மீது விழச் செய்யும்."
27:64 اَمَّنْ يَّبْدَؤُا الْخَـلْقَ ثُمَّ يُعِيْدُهٗ وَمَنْ يَّرْزُقُكُمْ مِّنَ السَّمَآءِ وَالْاَرْضِؕ ءَاِلٰـهٌ مَّعَ اللّٰهِؕ قُلْ هَاتُوْا بُرْهَانَكُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ
27:64. (முதன் முதலில்) படைப்பைத் துவங்குபவனும், பின்னர் அதனை மீண்டும் உண்டாக்கி வைப்பவனும் யார்? வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு ஆகாரம் அளிப்பவன் யார்? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? (நபியே!) நீர் கூறுவீராக: "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்களுடைய ஆதாரத்தைக் கொண்டுவாருங்கள்."
28:49 قُلْ فَاْتُوْا بِكِتٰبٍ مِّنْ عِنْدِ اللّٰهِ هُوَ اَهْدٰى مِنْهُمَاۤ اَتَّبِعْهُ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ
28:49. ஆகவே, "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இவ்விரண்டையும்விட அதிக நேர்வழி காட்டக்கூடிய ஒரு வேதத்தை அல்லாஹ்விடமிருந்து நீங்கள் கொண்டுவாருங்கள்; நானும் அதைப் பின்பற்றுகிறேன்" என்று (நபியே!) நீர் கூறும்.
29:29 اَٮِٕنَّكُمْ لَـتَاْتُوْنَ الرِّجَالَ وَتَقْطَعُوْنَ السَّبِيْلَ ۙ وَتَاْ تُوْنَ فِىْ نَادِيْكُمُ الْمُنْكَرَ ؕ فَمَا كَانَ جَوَابَ قَوْمِهٖۤ اِلَّاۤ اَنْ قَالُوا ائْتِنَا بِعَذَابِ اللّٰهِ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِيْنَ
29:29. "நீங்கள் ஆண்களிடம் (மோகம் கொண்டவர்களாக) வருகிறீர்களா? வழிமறி(த்துப் பயணிகளைக் கொள்ளையடி)க்கவும் செய்கின்றீர்கள்; உங்களுடைய சபையிலும் வெறுக்கத்தக்கவற்றைச் செய்கின்றீர்கள்" என்று கூறினார்; அதற்கு அவருடைய சமூகத்தாரின் பதில்: "நீர் உண்மையாளர்களில் (ஒருவராக) இருப்பின் எங்கள் மீது அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு வருவீராக!" என்பது தவிர வேறு எதுவுமில்லை.
32:28 وَيَقُوْلُوْنَ مَتٰى هٰذَا الْفَتْحُ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ
32:28. "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (வாக்களிக்கப்பட்ட) அந்த வெற்றி (தீர்ப்பு நாள்) எப்பொழுது (வரும்)?" என்று அவர்கள் கேட்கிறார்கள்.
33:8 لِّيَسْئَلَ الصّٰدِقِيْنَ عَنْ صِدْقِهِمْۚ وَاَعَدَّ لِلْكٰفِرِيْنَ عَذَابًا اَ لِيْمًا
33:8. உண்மையாளர்களை அவர்களுடைய உண்மையைப் பற்றி அவன் விசாரிப்பதற்காக (இவ்வாறு வாக்குறுதி வாங்கினான்); மேலும், நிராகரிப்பாளர்களுக்கு நோவினைதரும் வேதனையை அவன் சித்தம் செய்திருக்கின்றான்.
33:24 لِّيَجْزِىَ اللّٰهُ الصّٰدِقِيْنَ بِصِدْقِهِمْ وَيُعَذِّبَ الْمُنٰفِقِيْنَ اِنْ شَآءَ اَوْ يَتُوْبَ عَلَيْهِمْ ؕ اِنَّ اللّٰهَ كَانَ غَفُوْرًا رَّحِيْمًا ۚ
33:24. உண்மையாளர்களுக்கு அவர்களின் உண்மைக்குரிய கூலியை அல்லாஹ் திடமாக அளிப்பான்; அவன் நாடினால் நயவஞ்சகர்களை வேதனை செய்வான்; அல்லது அவர்களை மன்னிப்பான்; நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.
33:35 اِنَّ الْمُسْلِمِيْنَ وَالْمُسْلِمٰتِ وَالْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِ وَالْقٰنِتِيْنَ وَالْقٰنِتٰتِ وَالصّٰدِقِيْنَ وَالصّٰدِقٰتِ وَالصّٰبِرِيْنَ وَالصّٰبِرٰتِ وَالْخٰشِعِيْنَ وَالْخٰشِعٰتِ وَالْمُتَصَدِّقِيْنَ وَ الْمُتَصَدِّقٰتِ وَالصَّآٮِٕمِيْنَ وَالصّٰٓٮِٕمٰتِ وَالْحٰفِظِيْنَ فُرُوْجَهُمْ وَالْحٰـفِظٰتِ وَالذّٰكِرِيْنَ اللّٰهَ كَثِيْرًا وَّ الذّٰكِرٰتِ ۙ اَعَدَّ اللّٰهُ لَهُمْ مَّغْفِرَةً وَّاَجْرًا عَظِيْمًا
33:35. நிச்சயமாக முஸ்லிமான ஆண்களும், முஸ்லிமான பெண்களும்; நம்பிக்கை கொண்ட ஆண்களும், நம்பிக்கை கொண்ட பெண்களும்; (அல்லாஹ்வுக்கு) வழிப்படும் ஆண்களும், வழிப்படும் பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், உண்மையே பேசும் பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பொறுமையுள்ள பெண்களும்; (அல்லாஹ்வுக்கு) அஞ்சிய ஆண்களும், அஞ்சிய பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், தர்மம் செய்யும் பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், நோன்பு நோற்கும் பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களைக் காத்துக்கொள்ளும் ஆண்களும், (கற்பைக்) காத்துக்கொள்ளும் பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், (அல்லாஹ்வை அதிகமதிகம்) தியானம் செய்யும் பெண்களும் ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கிறான்.
34:29 وَيَقُوْلُوْنَ مَتٰى هٰذَا الْوَعْدُ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ
34:29. இன்னும், அவர்கள் கூறுகிறார்கள்: "உண்மையாளராக நீங்கள் இருப்பின் (மறுமை பற்றிய) அந்த வாக்குறுதி எப்பொழுது (நிறைவேறும்)?" என்று.
37:157 فَاْتُوْا بِكِتٰبِكُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ
37:157. நீங்கள் உண்மையாளர்களாயிருப்பின், உங்கள் வேத (ஆதார)த்தைக் கொண்டுவாருங்கள்.
40:28 وَقَالَ رَجُلٌ مُّؤْمِنٌ ۖ مِّنْ اٰلِ فِرْعَوْنَ يَكْتُمُ اِيْمَانَهٗۤ اَتَقْتُلُوْنَ رَجُلًا اَنْ يَّقُوْلَ رَبِّىَ اللّٰهُ وَقَدْ جَآءَكُمْ بِالْبَيِّنٰتِ مِنْ رَّبِّكُمْ ؕ وَاِنْ يَّكُ كَاذِبًا فَعَلَيْهِ كَذِبُهٗ ؕ وَاِنْ يَّكُ صَادِقًا يُّصِبْكُمْ بَعْضُ الَّذِىْ يَعِدُكُمْ ۚ اِنَّ اللّٰهَ لَا يَهْدِىْ مَنْ هُوَ مُسْرِفٌ كَذَّابٌ
40:28. ஃபிர்அவ்னின் குடும்பத்தாரில் தம் நம்பிக்கையை மறைத்துவைத்திருந்த, நம்பிக்கை கொண்ட மனிதர் ஒருவர் கூறினார்: "என் இறைவன் அல்லாஹ்வேதான்!" என்று ஒரு மனிதர் கூறியதற்காக அவரை நீங்கள் கொன்றுவிடுவீர்களா? மேலும், அவர் மெய்யாகவே உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகளை உங்களிடம் கொண்டுவந்துள்ளார்; எனவே, அவர் பொய்யராக இருந்தால், அப்பொய் அவருக்கே (கேடு) ஆகும்; ஆனால், அவர் உண்மையாளராக இருந்தால், அவர் உங்களுக்கு வாக்களிக்கும் சில (வேதனைகள்) உங்களை வந்தடையுமே! நிச்சயமாக அல்லாஹ் வரம்புமீறிய பொய்யரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.
44:36 فَاْتُوْا بِاٰبَآٮِٕنَاۤ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ
44:36. "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், எங்கள் மூதாதையரை (திரும்பக்) கொண்டு வாருங்கள்."
45:25 وَاِذَا تُتْلٰى عَلَيْهِمْ اٰيٰتُنَا بَيِّنٰتٍ مَّا كَانَ حُجَّتَهُمْ اِلَّاۤ اَنْ قَالُوا ائْتُوْا بِاٰبَآٮِٕنَاۤ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ
45:25. அவர்களிடம் தெளிவான நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்களுடைய வாதமெல்லாம், "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் எங்களுடைய மூதாதையரை (எழுப்பிக்) கொண்டு வாருங்கள்" என்பதைத் தவிர வேறில்லை.
46:4 قُلْ اَرَءَيْتُمْ مَّا تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ اَرُوْنِىْ مَاذَا خَلَقُوْا مِنَ الْاَرْضِ اَمْ لَهُمْ شِرْكٌ فِى السَّمٰوٰتِؕ اِیْتُوْنِىْ بِكِتٰبٍ مِّنْ قَبْلِ هٰذَاۤ اَوْ اَثٰرَةٍ مِّنْ عِلْمٍ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ
46:4. நீங்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை கவனித்தீர்களா? பூமியிலுள்ள எதை அவை படைத்துள்ளன? அல்லது அவற்றுக்கு வானங்களில் ஏதாவது பங்கு உண்டா? என்பதை எனக்குக் காண்பியுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இதற்கு முன்னேயுள்ள ஒரு வேதத்தையோ அல்லது (முன்னோர்களின்) அறிவில் மிஞ்சிய ஏதேனும் பகுதியையோ (உங்கள் கூற்றுக்கு ஆதாரமாக) என்னிடம் கொண்டு வாருங்கள்!" என்று (நபியே!) நீர் கூறுவீராக!
46:22 قَالُـوْۤا اَجِئْتَـنَا لِتَاْفِكَنَا عَنْ اٰلِهَـتِنَا ۚ فَاْتِنَا بِمَا تَعِدُنَاۤ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِيْنَ
46:22. அதற்கு அவர்கள்: "எங்களுடைய தெய்வங்களை விட்டும் எங்களைத் திருப்பிவிட நீர் எங்களிடம் வந்தீரா? நீர் உண்மையாளராக இருந்தால், நீர் எதைக்கொண்டு எங்களை பயமுறுத்துகிறீரோ அ(வ் வேதனையான)தைக் கொண்டுவாரும்" என்று கூறினார்கள்.
49:17 يَمُنُّوْنَ عَلَيْكَ اَنْ اَسْلَمُوْا ؕ قُلْ لَّا تَمُنُّوْا عَلَىَّ اِسْلَامَكُمْ ۚ بَلِ اللّٰهُ يَمُنُّ عَلَيْكُمْ اَنْ هَدٰٮكُمْ لِلْاِيْمَانِ اِنْ كُنْـتُمْ صٰدِقِيْنَ
49:17. அவர்கள் இஸ்லாம் (மார்க்கத்)தைத் தழுவியதால், உமக்கு உபகாரம் செய்துவிட்டதாகக் கருதுகிறார்கள்; "நீங்கள் இஸ்லாம் (மார்க்கத்)தைத் தழுவியதால் எனக்கு உபகாரம் செய்துவிட்டதாகக் கருதாதீர்கள்! எனினும், நீங்கள் உண்மையாளர்களாக இருப்பின் உங்களுக்கு நம்பிக்கையின்பால் வழிகாட்டியதால் அல்லாஹ்தான் உங்கள்மீது உபகாரம் செய்திருக்கிறான்" என்று (நபியே!) நீர் கூறுவீராக!
52:34 فَلْيَاْتُوْا بِحَدِيْثٍ مِّثْلِهٖۤ اِنْ كَانُوْا صٰدِقِيْنَؕ
52:34. ஆகவே, (இவ்வாறெல்லாம் கூறும்) அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால், இ(வ்வேதத்)தைப் போன்ற ஒரு செய்தியை அவர்கள் கொண்டு வரட்டும்.
56:87 تَرْجِعُوْنَهَاۤ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ
56:87. (அதில்) நீங்கள் உண்மையாளர்களாக இருப்பின், (அவ்வுயிரை) மீள வைத்திருக்கலாமே!
59:8 لِلْفُقَرَآءِ الْمُهٰجِرِيْنَ الَّذِيْنَ اُخْرِجُوْا مِنْ دِيَارِهِمْ وَاَمْوَالِهِمْ يَبْتَغُوْنَ فَضْلًا مِّنَ اللّٰهِ وَرِضْوَانًا وَّيَنْصُرُوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗؕ اُولٰٓٮِٕكَ هُمُ الصّٰدِقُوْنَۚ
59:8. எவர்கள் தம் வீடுகளையும், தம் சொத்துகளையும் விட்டு, வெளியேற்றப்பட்டனரோ, அந்த ஏழை முஹாஜிர்களுக்கும் (ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும்) அப்பொருளில் பங்குண்டு; அவர்கள் அல்லாஹ்வின் அருளையும், அவனது திருப்பொருத்தத்தையும் தேடுகின்றனர்; இன்னும், அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் உதவி செய்துகொண்டிருக்கின்றனர்; அவர்கள்தாம் உண்மையாளர்கள்.
67:25 وَيَقُوْلُوْنَ مَتٰى هٰذَا الْوَعْدُ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ
67:25. ஆயினும், "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், வாக்களிக்கப்பட்ட (மறுமையான)து எப்பொழுது (வரும்)?" என்று அவர்கள் கேட்கிறார்கள்.
68:41 اَمْ لَهُمْ شُرَكَآءُ ۛۚ فَلْيَاْتُوْا بِشُرَكَآٮِٕهِمْ اِنْ كَانُوْا صٰدِقِيْنَ
68:41. அல்லது, (பொறுப்பேற்க) அவர்களுக்கு இணைவைக்கும் கூட்டாளிகள்தாம் இருக்கின்றார்களா? அவ்வாறாயின், அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களுடைய கூட்டாளிகளைக் கொண்டு வரட்டும்.