உதவியாளர்
2:23 وَاِنْ کُنْتُمْ فِىْ رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلٰى عَبْدِنَا فَاْتُوْا بِسُوْرَةٍ مِّنْ مِّثْلِهٖ وَادْعُوْا شُهَدَآءَكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ
2:23. இன்னும், (முஹம்மது என்னும்) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையவர்களாக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மையாளர்களாகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத் தவிர உங்கள் உதவியாளர்களை அழைத்து இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள்.
3:22 اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ حَبِطَتْ اَعْمَالُهُمْ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ وَمَا لَهُمْ مِّنْ نّٰصِرِيْنَ
3:22. அவர்கள் எத்தகையோரென்றால் அவர்களுடைய செயல்கள் இம்மையிலும் மறுமையிலும் (பலனற்றவையாக) அழிந்துவிட்டன; இன்னும், அவர்களுக்கு உதவியாளர்கள் எவருமிலர்.
3:52 فَلَمَّاۤ اَحَسَّ عِيْسٰى مِنْهُمُ الْكُفْرَ قَالَ مَنْ اَنْصَارِىْۤ اِلَى اللّٰهِؕ قَالَ الْحَـوَارِيُّوْنَ نَحْنُ اَنْصَارُ اللّٰهِۚ اٰمَنَّا بِاللّٰهِۚ وَاشْهَدْ بِاَنَّا مُسْلِمُوْنَ
3:52. அவர்களில் (இறை) மறுப்பை ஈஸா உணர்ந்தபோது, "அல்லாஹ்வின் பாதையில் எனக்கு உதவி செய்பவர்கள் யார்?" என்று அவர் கேட்டார். (அதற்கு அவருடைய) சீடர்கள்: "நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கிறோம். நாங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். திட்டமாக நாங்கள் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக இருக்கின்றோம் என்றும் நீர் சாட்சி கூறுவீராக!" எனக் கூறினர்.
17:75 اِذًا لَّاَذَقْنٰكَ ضِعْفَ الْحَيٰوةِ وَضِعْفَ الْمَمَاتِ ثُمَّ لَا تَجِدُ لَـكَ عَلَيْنَا نَصِيْرًا
17:75. (அவ்வாறு நீர் சாய்ந்திருந்தால்) இவ்வாழ்நாளில் இருமடங்கு (வேதனையையும்), மரணத்தில் இரு மடங்கு (வேதனையையும்) நுகருமாறு நாம் செய்திருப்போம்; பின்பு, நமக்கு எதிராக உமக்கு உதவியாளர் எவரையும் நீர் காணமாட்டீர்.
18:17 وَتَرَى الشَّمْسَ اِذَا طَلَعَتْ تَّزٰوَرُ عَنْ كَهْفِهِمْ ذَاتَ الْيَمِيْنِ وَاِذَا غَرَبَتْ تَّقْرِضُهُمْ ذَاتَ الشِّمَالِ وَهُمْ فِىْ فَجْوَةٍ مِّنْهُ ؕ ذٰ لِكَ مِنْ اٰيٰتِ اللّٰهِ ؕ مَنْ يَّهْدِ اللّٰهُ فَهُوَ الْمُهْتَدِ ۚ وَمَنْ يُّضْلِلْ فَلَنْ تَجِدَ لَهٗ وَلِيًّا مُّرْشِدًا
18:17. சூரியன் உதயமாகும்போது (அவர்கள்மீது படாமல்) அது, அவர்களுடைய குகையின் வலப்புறம் சாய்வதையும், அது அஸ்தமிக்கும் போது, அது அவர்களுடைய இடப்புறம் செல்வதையும் நீர் பார்ப்பீர்; அவர்கள் அதில் விசாலமான இடத்தில் இருக்கின்றனர்: இது அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளதாகும்; எவரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகிறானோ, அவரே நேர்வழிபெற்றவராவார்: இன்னும், எவனை அவன் வழிகேட்டில் விடுகிறானோ, அவனுக்கு நேர்வழிகாட்டும் உதவியாளர் எவரையும் நீர் காணவேமாட்டீர்.
29:25 وَقَالَ اِنَّمَا اتَّخَذْتُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اَوْثَانًا ۙ مَّوَدَّةَ بَيْنِكُمْ فِى الْحَيٰوةِ الدُّنْيَا ۚ ثُمَّ يَوْمَ الْقِيٰمَةِ يَكْفُرُ بَعْضُكُمْ بِبَعْضٍ وَّيَلْعَنُ بَعْضُكُمْ بَعْضًا وَّمَاْوٰٮكُمُ النَّارُ وَمَا لَـكُمْ مِّنْ نّٰصِرِيْنَ ۙ
29:25. மேலும் அவர் (இப்ராஹீம்) சொன்னார்: "அல்லாஹ்வையன்றி சிலைகளை (தெய்வமாக) நீங்கள் ஆக்கிக்கொண்டதெல்லாம், உலக வாழ்க்கையில் (அவர்கள் மீது) உங்களிடையேயுள்ள நேசத்தின் காரணத்தினால்தான்; பின்னர், மறுமைநாளன்று உங்களில் சிலர் சிலரை நிராகரிப்பார்கள்; உங்களில் சிலர் சிலரைச் சபித்துக்கொள்வர்; (இறுதியில்) உங்கள் ஒதுங்குமிடம் (நரக) நெருப்புதான்; (அங்கு) உங்களுக்கு உதவியாளர் எவருமில்லை."
34:22 قُلِ ادْعُوا الَّذِيْنَ زَعَمْتُمْ مِّنْ دُوْنِ اللّٰهِۚ لَا يَمْلِكُوْنَ مِثْقَالَ ذَرَّةٍ فِى السَّمٰوٰتِ وَلَا فِى الْاَرْضِ وَمَا لَهُمْ فِيْهِمَا مِنْ شِرْكٍ وَّمَا لَهٗ مِنْهُمْ مِّنْ ظَهِيْرٍ
34:22. (நபியே!) நீர் கூறுவீராக! "அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் (தெய்வங்களென) எண்ணிக் கொண்டிருக்கிறீர்களோ அவர்களை அழையுங்கள்; வானங்களிலோ, இன்னும் பூமியிலோ அவர்களுக்கு ஓர் அணுவளவும் அதிகாரமில்லை; அவற்றில் இவர்களுக்கு எத்தகைய பங்குமில்லை; இன்னும், அவனுக்கு உதவியாளரும் அவர்களில் யாருமில்லை."
35:37 وَهُمْ يَصْطَرِخُوْنَ فِيْهَا ۚ رَبَّنَاۤ اَخْرِجْنَا نَـعْمَلْ صَالِحًـا غَيْرَ الَّذِىْ كُـنَّا نَـعْمَلُؕ اَوَلَمْ نُعَمِّرْكُمْ مَّا يَتَذَكَّرُ فِيْهِ مَنْ تَذَكَّرَ وَجَآءَكُمُ النَّذِيْرُؕ فَذُوْقُوْا فَمَا لِلظّٰلِمِيْنَ مِنْ نَّصِيْرٍ
35:37. இன்னும், அந்நரகத்தில் அவர்கள்: "எங்கள் இறைவா! நீ எங்களை (இதை விட்டு) வெளியேற்றுவாயாக! நாங்கள் (வழக்கமாகச்) செய்து கொண்டிருந்ததல்லாத நற்செயலை செய்வோம்" என்று (கூறிக்) கதறுவார்கள்: (அதற்கு அல்லாஹ்) "சிந்தித்துப் பார்க்கக்கூடியவன் அதில் சிந்திக்கும் பொருட்டு, நாம் உங்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கவில்லையா? உங்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவரும் வந்திருந்தார்; ஆகவே, நீங்கள் செய்த அநியாயத்தின் பயனைச் சுவையுங்கள்! ஏனென்றால், அநியாயக்காரர்களுக்கு உதவியாளர் எவருமில்லை" (என்று கூறுவான்).
41:31 نَحْنُ اَوْلِيٰٓـؤُکُمْ فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَفِى الْاٰخِرَةِ ۚ وَلَـكُمْ فِيْهَا مَا تَشْتَهِىْۤ اَنْفُسُكُمْ وَلَـكُمْ فِيْهَا مَا تَدَّعُوْنَ ؕ
41:31. "நாங்கள் உலக வாழ்விலும், மறுமையிலும் உங்களுக்கு உதவியாளர்கள்; மேலும், (சுவர்க்கத்தில்) உங்கள் மனம் விரும்பியதெல்லாம் அதில் உங்களுக்கு இருக்கிறது; அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும்."
61:14 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُوْنُوْۤا اَنْصَارَ اللّٰهِ كَمَا قَالَ عِيْسَى ابْنُ مَرْيَمَ لِلْحَوٰارِيّٖنَ مَنْ اَنْصَارِىْۤ اِلَى اللّٰهِؕ قَالَ الْحَـوٰرِيُّوْنَ نَحْنُ اَنْصَارُ اللّٰهِ فَاٰمَنَتْ طَّآٮِٕفَةٌ مِّنْۢ بَنِىْۤ اِسْرَآءِيْلَ وَكَفَرَتْ طَّآٮِٕفَةٌ ۚ فَاَيَّدْنَا الَّذِيْنَ اٰمَنُوْا عَلٰى عَدُوِّهِمْ فَاَصْبَحُوْا ظٰهِرِيْنَ
61:14. நம்பிக்கை கொண்டவர்களே! மர்யமின் குமாரர் ஈஸா (அலை) சீடர்களை நோக்கி, "அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்?" எனக் கேட்க, சீடர்கள் "நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கின்றோம்" என்று கூறியது போல், நீங்களும் அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள். எனினும், இஸ்ராயீலின் மக்களில் ஒரு கூட்டம் நம்பிக்கை கொண்டது; பிறிதொரு கூட்டமோ நிராகரித்தது. ஆகவே, நம்பிக்கை கொண்டவர்களுக்கு, அவர்களுடைய பகைவர்களுக்கு எதிராக உதவியளித்தோம்; அதனால், அவர்கள் வெற்றியாளர்களாய் ஆகிவிட்டார்கள்.
66:4 اِنْ تَتُوْبَاۤ اِلَى اللّٰهِ فَقَدْ صَغَتْ قُلُوْبُكُمَاۚ وَاِنْ تَظٰهَرَا عَلَيْهِ فَاِنَّ اللّٰهَ هُوَ مَوْلٰٮهُ وَجِبْرِيْلُ وَصَالِحُ الْمُؤْمِنِيْنَۚ وَالْمَلٰٓٮِٕكَةُ بَعْدَ ذٰلِكَ ظَهِيْرٌ
66:4. நீங்கள் இருவரும் - இதற்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருவீர்களாயின் (அது உங்களுக்கு நலமாகும்); ஏனெனில், நிச்சயமாக உங்களிருவரின் இதயங்களும் (இவ்விஷயத்தில் கோணிச்) சாய்ந்து விட்டன: தவிர, நீங்கள் இருவரும் அவருக்கெதிராய் ஒருவருக்கொருவர் உதவிசெய்து கொண்டால், நிச்சயமாக அல்லாஹ் - அவருடைய எஜமானன் - (அவருக்கு உதவுவான்; அன்றியும்) ஜிப்ரீலும், நம்பிக்கையாளர்களில் நல்லோரும் (உதவுவார்கள்); அதன்பின் வானவர்களும் (அவருக்கு) உதவியாளர்களாக இருப்பார்கள்.
72:24 حَتّٰٓى اِذَا رَاَوْا مَا يُوْعَدُوْنَ فَسَيَعْلَمُوْنَ مَنْ اَضْعَفُ نَاصِرًا وَّاَقَلُّ عَدَدًا
72:24. அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை (வேதனையை) அவர்கள் பார்க்கும்போது, எவருடைய உதவியாளர் மிகப் பலவீனமானவர் என்பதையும்; (எவருடைய உதவியாளர்) எண்ணிக்கையில் மிகக் குறைந்தவர் என்பதையும் விரைவில் அறிந்துகொள்வார்கள்.