உதாரணங்கள்
6:38   وَمَا مِنْ دَآبَّةٍ فِى الْاَرْضِ وَلَا طٰۤٮِٕرٍ يَّطِيْرُ بِجَنَاحَيْهِ اِلَّاۤ اُمَمٌ اَمْثَالُـكُمْ‌ؕ مَا فَرَّطْنَا فِى الْـكِتٰبِ مِنْ شَىْءٍ‌ ثُمَّ اِلٰى رَبِّهِمْ يُحْشَرُوْنَ‏
6:38. பூமியிலுள்ள எந்த உயிரினமும், தன் இரு சிறகுகளால் பறக்கின்ற எந்தப் பறவையும் உங்களைப்போன்ற இனங்களேயன்றி வேறில்லை; (இவற்றில்) எதையும் (நம் பதிவுப்) புத்தகத்தில் நாம் குறிப்பிடாமல் விட்டுவிடவில்லை; பிறகு, தம் இறைவனின்பால் அவை ஒன்று சேர்க்கப்படும்.
6:160   مَنْ جَآءَ بِالْحَسَنَةِ فَلَهٗ عَشْرُ اَمْثَالِهَا‌ ۚ وَمَنْ جَآءَ بِالسَّيِّئَةِ فَلَا يُجْزٰٓى اِلَّا مِثْلَهَا وَهُمْ لَا يُظْلَمُوْنَ‏
6:160. எவர் ஒருவர் ஒரு நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு, அதுபோல் பத்துபங்கு நன்மை உண்டு; எவர் ஒருவர் ஒரு தீமையைச் செய்கிறாரோ அதைப்போன்ற அளவுடைய கூலியே அவர் கொடுக்கப்படுவார்; அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள்.
7:194   اِنَّ الَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ عِبَادٌ اَمْثَالُـكُمْ‌ فَادْعُوْهُمْ فَلْيَسْتَجِيْبُوْا لَـكُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏
7:194. நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே; நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் - அவர்கள் உங்களுக்குப் பதில் அளிக்கட்டும்!
13:17   اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَسَالَتْ اَوْدِيَةٌۢ بِقَدَرِهَا فَاحْتَمَلَ السَّيْلُ زَبَدًا رَّابِيًا‌ ؕ وَمِمَّا يُوْقِدُوْنَ عَلَيْهِ فِى النَّارِ ابْتِغَآءَ حِلْيَةٍ اَوْ مَتَاعٍ زَبَدٌ مِّثْلُهٗ‌ ؕ كَذٰلِكَ يَضْرِبُ اللّٰهُ الْحَـقَّ وَالْبَاطِلَ ؕ  فَاَمَّا الزَّبَدُ فَيَذْهَبُ جُفَآءً‌‌ ۚ وَاَمَّا مَا يَنْفَعُ النَّاسَ فَيَمْكُثُ فِى الْاَرْضِ‌ؕ كَذٰلِكَ يَضْرِبُ اللّٰهُ الْاَمْثَالَؕ‏
13:17. அவன் வானத்திலிருந்து தண்ணீரை இறக்கினான்; அப்பால் ஓடைகள் அவற்றின் அளவுக்குத் தக்கபடி (நீரைக்கொண்டு) ஓடுகின்றன. அவ்வெள்ளம் நுரையை மேலே சுமந்துசெல்கிறது. (இவ்வாறே) ஆபரணமோ அல்லது (வேறு) சாமான் செய்யவோ (உலோகங்களை) நெருப்பில் வைத்து அவர்கள் உருக்கும்போதும் அதைப்போல் நுரை உண்டாகின்றது. இவ்வாறு சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் அல்லாஹ் (உவமை) கூறுகிறான். எனவே, நுரை (பலனற்றதாக இருப்பதால்) அழிந்துபோய்விடுகிறது. ஆனால், மனிதர்களுக்குப் பலன் அளிக்கக்கூடியதோ, பூமியில் தங்கிவிடுகிறது. இவ்வாறே, அல்லாஹ் உவமைகளைக் கூறுகிறான்.
14:25   تُؤْتِىْۤ اُكُلَهَا كُلَّ حِيْنٍۢ بِاِذْنِ رَبِّهَا‌ؕ وَيَضْرِبُ اللّٰهُ الْاَمْثَالَ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ‏
14:25. அது, தன்னுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு ஒவ்வொரு காலத்திலும் தன்னுடைய கனியைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது; மனிதர்களுக்கு - அவர்கள் படிப்பினை பெறுவதற்காக - அல்லாஹ் (இத்தகைய) உதாரணங்களைக் கூறுகிறான்.
14:45   وَّسَكَنْتُمْ فِىْ مَسٰكِنِ الَّذِيْنَ ظَلَمُوْۤا اَنْفُسَهُمْ وَتَبَيَّنَ لَـكُمْ كَيْفَ فَعَلْنَا بِهِمْ وَضَرَبْنَا لَـكُمُ الْاَمْثَالَ‏
14:45. "அன்றியும், தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டார்களே அவர்கள் வாழ்விடங்களில் நீங்களும் வசித்தீர்கள்; அவர்களை நாம் எவ்வாறு (வேதனை) செய்தோம் என்பதும் உங்களுக்குத் தெளிவாகிவிட்டது; இன்னும், நாம் உங்களுக்கு(ப் பல முன்) உதாரணங்களையும் எடுத்துக்காட்டியிருக்கிறோம்" (என்றும் இறைவன் கூறுவான்).
16:74   فَلَا تَضْرِبُوْا لِلّٰهِ الْاَمْثَالَ‌ؕ اِنَّ اللّٰهَ يَعْلَمُ وَاَنْـتُمْ لَا تَعْلَمُوْنَ‏
16:74. ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு உதாரணங்களைக் கூறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ்தான் (யாவற்றையும் நன்கு) அறிபவன்; ஆனால், நீங்கள் அறியமாட்டீர்கள்.
17:48   اُنْظُرْ كَيْفَ ضَرَبُوْا لَكَ الْاَمْثَالَ فَضَلُّوْا فَلَا يَسْتَطِيْعُوْنَ سَبِيْلًا‏
17:48. (நபியே!) உமக்கு அவர்கள் எத்தகைய உவமைகளைச் சொல்கிறார்கள் என்பதைக் கவனித்துப் பாரும்; ஆகவே, அவர்கள் வழிகெட்டுவிட்டார்கள்; (நேரான) வழிக்கு அவர்கள் சக்திபெற மாட்டார்கள்.
24:35   اَللّٰهُ نُوْرُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ‌ؕ مَثَلُ نُوْرِهٖ كَمِشْكٰوةٍ فِيْهَا مِصْبَاحٌ‌ ؕ الْمِصْبَاحُ فِىْ زُجَاجَةٍ‌ ؕ اَلزُّجَاجَةُ كَاَنَّهَا كَوْكَبٌ دُرِّىٌّ يُّوْقَدُ مِنْ شَجَرَةٍ مُّبٰـرَكَةٍ زَيْتُوْنَةٍ لَّا شَرْقِيَّةٍ وَّلَا غَرْبِيَّةٍ ۙ يَّـكَادُ زَيْتُهَا يُضِىْٓءُ وَلَوْ لَمْ تَمْسَسْهُ نَارٌ‌ ؕ نُوْرٌ عَلٰى نُوْرٍ‌ ؕ يَهْدِى اللّٰهُ لِنُوْرِهٖ مَنْ يَّشَآءُ‌ ؕ وَ يَضْرِبُ اللّٰهُ الْاَمْثَالَ لِلنَّاسِ‌ؕ وَاللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ ۙ‏
24:35. அல்லாஹ் வானங்கள், பூமி ஆகியவற்றின் ஒளியாக இருக்கிறான்; அவனுடைய ஒளிக்கு உதாரணம்: ஒரு மாடத்தைப் போன்றிருக்கிறது: அதில் ஒரு விளக்கு இருக்கிறது; அவ்விளக்கு ஒரு கண்ணாடியினுள் இருக்கிறது; அக்கண்ணாடி ஒளிவீசும் நட்சத்திரத்தைப் போன்றதாகும்; அது பாக்கியம் பெற்ற ஜைத்தூன் மரத்தி(ன் எண்ணெயி)னால் எரிக்கப்படுகிறது; அது கீழ்த்திசையைச் சேர்ந்ததுமன்று: மேல்திசையைச் சேர்ந்ததுமன்று; அதனை நெருப்புத் தீண்டாவிடினும், அதன் எண்ணெய் ஒளிவீச முற்படும்; (இவை எல்லாம் சேர்ந்து) ஒளிக்கு மேல் ஒளியாகும்: அல்லாஹ் தான் நாடியவரை தன்னுடைய ஒளி (என்னும் சத்தியப்பாதை)யின்பால் நடத்திச் செல்கிறான்; மனிதர்களுக்கு (இத்தகைய) உதாரணங்களை அல்லாஹ் கூறுகிறான்; அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிபவன்.
25:9   اُنْظُرْ كَيْفَ ضَرَبُوْا لَـكَ الْاَمْثَالَ فَضَلُّوْا فَلَا يَسْتَطِيْعُوْنَ سَبِيْلاً‏
25:9. (நபியே!) உமக்காக அவர்கள் எத்தகைய உவமானங்களை எடுத்துக்கூறுகிறார்கள் என்பதை நீர் பாரும்! அவர்கள் வழிகெட்டுப் போய்விட்டார்கள்; ஆகவே, அவர்கள் நேர்வழிக்கு (வர) சக்தி பெறமாட்டார்கள்.
25:39   وَكُلًّا ضَرَبْنَا لَهُ الْاَمْثَالَ‌ وَكُلًّا تَبَّـرْنَا تَـتْبِيْرًا‏
25:39. (அவர்கள்) ஒவ்வொருவருக்கும் நாம் (தெளிவான சான்றுகளையும் கொடுத்து) அவ(ரவ)ருக்குரிய பல உதாரணங்களையும் கூறினோம்; மேலும், (அவர்கள் அவைகளை நிராகரித்ததினால்) அவர்கள் அனைவரையும் முற்றாக அழித்தோம்.
29:43   وَتِلْكَ الْاَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ‌ۚ وَمَا يَعْقِلُهَاۤ اِلَّا الْعٰلِمُوْنَ‏
29:43. இவ்வுதாரணங்கள் - மனிதர்களுக்காக இவற்றை நாம் கூறுகிறோம்; ஆனால், அறிவுடையவர்களைத் தவிர வேறெவரும் இதனை விளங்கிக்கொள்ளமாட்டார்கள்.
47:10   اَفَلَمْ يَسِيْرُوْا فِى الْاَرْضِ فَيَنْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌ؕ دَمَّرَ اللّٰهُ عَلَيْهِمْ وَلِلْكٰفِرِيْنَ اَمْثَالُهَا‏
47:10. அவர்கள் பூமியில் பயணம் செய்து அவர்களுக்கு முன்னர் இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்கவில்லையா? அல்லாஹ் அவர்களை அடியோடு அழித்துவிட்டான்; நிராகரிப்பாளர்களுக்கும் இவை போன்றவைதாம் (முடிவுகள்) உண்டு.
56:23   كَاَمْثَالِ اللُّـؤْلُـوٴِالْمَكْنُوْنِ‌ۚ‏
56:23. மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் அவர்கள் இருப்பார்கள்.
56:61   عَلٰٓى اَنْ نُّبَدِّلَ اَمْثَالَـكُمْ وَنُـنْشِئَكُمْ فِىْ مَا لَا تَعْلَمُوْنَ‏
56:61. (அன்றியும், உங்களைப் போக்கிவிட்டு) உங்களைப் போன்றோரைப் பதிலாகக் கொண்டு வந்து நீங்கள் அறியாத (உருவத்)தில் உங்களை உண்டாக்கவும் (நாம் இயலாதவர்கள் அல்ல).
59:21   لَوْ اَنْزَلْنَا هٰذَا الْقُرْاٰنَ عَلٰى جَبَلٍ لَّرَاَيْتَهٗ خَاشِعًا مُّتَصَدِّعًا مِّنْ خَشْيَةِ اللّٰهِ‌ؕ وَتِلْكَ الْاَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَفَكَّرُوْنَ‏
59:21. (நபியே!) நாம் ஒரு மலையின் மீது இந்தக் குர்ஆனை இறக்கியிருந்தோமானால், அல்லாஹ்வின் பயத்தால், அது நடுங்கிப் பிளந்து போவதாகக் கண்டிருப்பீர்; மேலும், இந்த உதாரணங்கள் - அவற்றை மனிதர்களுக்காக அவர்கள் சிந்திக்கும் பொருட்டு நாம் விளக்குகிறோம்.
76:28   نَحْنُ خَلَقْنٰهُمْ وَشَدَدْنَاۤ اَسْرَهُمْ‌ۚ وَاِذَا شِئْنَا بَدَّلْنَاۤ اَمْثَالَهُمْ تَبْدِيْلًا‏
76:28. நாமே அவர்களைப் படைத்து அவர்களுடைய படைப்பின் அமைப்பையும் உறுதிப்படுத்தினோம்; அன்றியும், நாம் விரும்பினால் அவர்கள் போன்றவர்களை (அவர்களுக்குப் பதிலாக) மாற்றிக் கொண்டுவருவோம்.