உஜைர் நபி
2:259 اَوْ كَالَّذِىْ مَرَّ عَلٰى قَرْيَةٍ وَّ هِىَ خَاوِيَةٌ عَلٰى عُرُوْشِهَا ۚ قَالَ اَنّٰى يُحْىٖ هٰذِهِ اللّٰهُ بَعْدَ مَوْتِهَا ۚ فَاَمَاتَهُ اللّٰهُ مِائَةَ عَامٍ ثُمَّ بَعَثَهٗ ؕ قَالَ كَمْ لَبِثْتَؕ قَالَ لَبِثْتُ يَوْمًا اَوْ بَعْضَ يَوْمٍؕ قَالَ بَلْ لَّبِثْتَ مِائَةَ عَامٍ فَانْظُرْ اِلٰى طَعَامِكَ وَشَرَابِكَ لَمْ يَتَسَنَّهْۚ وَانْظُرْ اِلٰى حِمَارِكَ وَلِنَجْعَلَكَ اٰيَةً لِّلنَّاسِ وَانْظُرْ اِلَى الْعِظَامِ كَيْفَ نُـنْشِزُهَا ثُمَّ نَكْسُوْهَا لَحْمًا ؕ فَلَمَّا تَبَيَّنَ لَهٗ ۙ قَالَ اَعْلَمُ اَنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ
2:259. அல்லது, ஒரு கிராமத்தைக் கடந்து சென்றவரை (நீர் அறிவீரா?) அந்தக் கிராமமானது அடியோடு வீழ்ந்துகிடந்தது; (இதைப் பார்த்த அவர்), "இவ்வூர் (இவ்வாறு அழிந்து) மடிந்த பின் இதனை அல்லாஹ் எப்படி உயிர்ப்பிப்பான்?" என்று கூறினார்; ஆகவே, அல்லாஹ் அவரை நூறாண்டுகள் வரை மரணிக்கச் செய்தான்; பின்னர், அவரை (உயிர்கொடுத்து) எழுப்பி, "எவ்வளவு காலம் (இந்நிலையில்) இருந்தீர்?" என்று அவரைக் கேட்டான்; அதற்கவர், "ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறுபகுதியில் (இவ்வாறு) இருந்தேன்" என்று கூறினார்; "இல்லை! நீர் (இந்நிலையில்) நூறாண்டுகள் இருந்தீர்! இதோ பாரும் உம்முடைய உணவையும், உம்முடைய பானத்தையும்; (கெட்டுப் போகாமையினால்) அவை (எந்த விதத்திலும்) மாறுதலடையவில்லை; ஆனால், உம்முடைய கழுதையைப் பாரும்; உம்மை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாக்குவதற்காக (இவ்வாறு செய்தோம்); இன்னும், (அக்கழுதையின்) எலும்புகளைப் பாரும்: அவற்றை நாம் எப்படிச் சேர்க்கிறோம்; பின்னர், அவற்றின் மேல் சதையைப் போர்த்துகிறோம்" எனக் கூறினான்; (இதுவெல்லாம்) அவருக்குத் தெளிவானபோது, அவர் "நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்களின் மீதும் வல்லமையுடையவன் என்பதை நான் அறிந்து கொண்டேன்!" என்று கூறினார்.
9:30 وَقَالَتِ الْيَهُوْدُ عُزَيْرُ ۨابْنُ اللّٰهِ وَقَالَتِ النَّصٰرَى الْمَسِيْحُ ابْنُ اللّٰهِؕ ذٰ لِكَ قَوْلُهُمْ بِاَ فْوَاهِهِمْ ۚ يُضَاهِئُونَ قَوْلَ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ قَبْلُ ؕ قَاتَلَهُمُ اللّٰهُ ۚ اَنّٰى يُؤْفَكُوْنَ
9:30. யூதர்கள், (நபி) 'உஜைரை' அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள். இது, அவர்கள் தங்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும். (இவர்களுக்கு) முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள். அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! அவர்கள் எங்கே திருப்பப்படுகிறார்கள்?