எண்ணம்
2:46 الَّذِيْنَ يَظُنُّوْنَ اَنَّهُمْ مُّلٰقُوْا رَبِّهِمْ وَاَنَّهُمْ اِلَيْهِ رٰجِعُوْنَ
2:46. அவர்கள் தங்கள் இறைவனை நிச்சயமாகத் தாங்கள் சந்திக்கக்கூடியவர்கள் என்றும், நிச்சயமாக அவனிடமே தாங்கள் திரும்பிச் செல்லக்கூடியவர்கள் என்றும் உறுதியாக நம்புகின்றனர்.
7:200 وَاِمَّا يَنْزَغَـنَّكَ مِنَ الشَّيْطٰنِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللّٰهِؕ اِنَّهٗ سَمِيْعٌ عَلِيْمٌ
7:200. ஷைத்தானிலிருந்து ஏதேனும் தீண்டுதல் உமக்குத் திண்ணமாக ஏற்படுமானால், அப்போது அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! நிச்சயமாக அவன் செவியேற்பவனாகவும், (யாவற்றையும்) நன்கு அறிபவனாகவும் இருக்கின்றான்.
7:201 اِنَّ الَّذِيْنَ اتَّقَوْا اِذَا مَسَّهُمْ طٰۤٮِٕفٌ مِّنَ الشَّيْطٰنِ تَذَكَّرُوْا فَاِذَا هُمْ مُّبْصِرُوْنَۚ
7:201. நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்சுகிறார்களோ, அவர்களுக்குள் ஷைத்தானிலிருந்து (தவறான) எண்ணம் ஊசலாடினால், அவர்கள் (அல்லாஹ்வை) நினைக்கிறார்கள்; அவர்கள் திடீரென விழிப்படைந்து கொள்வார்கள்.
8:62 وَاِنْ يُّرِيْدُوْۤا اَنْ يَّخْدَعُوْكَ فَاِنَّ حَسْبَكَ اللّٰهُؕ هُوَ الَّذِىْۤ اَيَّدَكَ بِنَصْرِهٖ وَبِالْمُؤْمِنِيْنَۙ
8:62. அவர்கள் உம்மை ஏமாற்ற எண்ணினால் நிச்சயமாக அல்லாஹ் உமக்குப் போதுமானவன்; அவன்தான் உம்மைத் தன் உதவியைக் கொண்டும், நம்பிக்கையாளர்களைக் கொண்டும் பலப்படுத்தினான்.
34:20 وَلَقَدْ صَدَّقَ عَلَيْهِمْ اِبْلِيْسُ ظَنَّهٗ فَاتَّبَعُوْهُ اِلَّا فَرِيْقًا مِّنَ الْمُؤْمِنِيْنَ
34:20. அன்றியும், (தன் வழிக்கு வருவார்கள் என்று அவர்களைப் பற்றி இப்லீஸ் எண்ணிய எண்ணத்தை) நிச்சயமாக அவன் உண்மையாக்கினான்; ஆகவே, நம்பிக்கையாளர்களிலுள்ள ஒரு கூட்டத்தார் தவிர, (மற்றவர்கள்) அவனையே பின்பற்றினார்கள்.
37:87 فَمَا ظَنُّكُمْ بِرَبِّ الْعٰلَمِيْنَ
37:87. "அவ்வாறாயின் அகிலத்தாரின் இறைவனைப் பற்றி உங்கள் எண்ணம்தான் என்ன?" (என்று கேட்டார்.)
41:23 وَذٰلِكُمْ ظَنُّكُمُ الَّذِىْ ظَنَنْتُمْ بِرَبِّكُمْ اَرْدٰٮكُمْ فَاَصْبَحْتُمْ مِّنَ الْخٰسِرِيْنَ
41:23. "ஆகவே, அதுதான் உங்கள் இறைவனைப் பற்றி நீங்கள் எண்ணிய உங்களுடைய (தவறான) இந்த எண்ணமாகும்; அது உங்களை அழித்துவிட்டது; ஆகவே, நீங்கள் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிட்டீர்கள்" (என்றும் அவை கூறும்).
48:6 وَّيُعَذِّبَ الْمُنٰفِقِيْنَ وَالْمُنٰفِقٰتِ وَالْمُشْرِكِيْنَ وَ الْمُشْرِكٰتِ الظَّآنِّيْنَ بِاللّٰهِ ظَنَّ السَّوْءِؕ عَلَيْهِمْ دَآٮِٕرَةُ السَّوْءِ ۚ وَ غَضِبَ اللّٰهُ عَلَيْهِمْ وَلَعَنَهُمْ وَاَعَدَّ لَهُمْ جَهَنَّمَؕ وَسَآءَتْ مَصِيْرًا
48:6. அல்லாஹ்வைப் பற்றி கெட்ட எண்ணம் கொள்ளும் நயவஞ்சகர்களான ஆண்களையும், நயவஞ்சகர்களான பெண்களையும், இணைவைக்கும் ஆண்களையும், இணைவைக்கும் பெண்களையும் (அல்லாஹ்) வேதனை செய்வான்; (அவ்வேதனையின்) கேடு அவர்கள் மேல் சூழ்ந்துகொண்டு இருக்கிறது. இன்னும், அல்லாஹ் அவர்கள் மீது கோபம் கொண்டான்; அவர்களைச் சபித்தும் விட்டான்; அவர்களுக்காக நரகத்தையும் சித்தம் செய்திருக்கின்றான்; (அது தான்) செல்லும் இடங்களில் மிகவும் கெட்டது.
48:12 بَلْ ظَنَـنْـتُمْ اَنْ لَّنْ يَّـنْقَلِبَ الرَّسُوْلُ وَالْمُؤْمِنُوْنَ اِلٰٓى اَهْلِيْهِمْ اَبَدًا وَّزُيِّنَ ذٰ لِكَ فِىْ قُلُوْبِكُمْ وَظَنَنْتُمْ ظَنَّ السَّوْءِ ۖۚ وَكُنْـتُمْ قَوْمًا ۢ بُوْرًا
48:12. (நீங்கள் கூறுவதுபோல்) அல்ல; (அல்லாஹ்வின்) தூதரும், நம்பிக்கையாளர்களும் தங்கள் குடும்பத்தாரிடம் ஒருபோதும் திரும்பமாட்டார்கள் என்று நீங்கள் நிச்சயமாக எண்ணிக் கொண்டிருந்தீர்கள்; இதுவே, உங்கள் இதயங்களில் அழகாக்கப்பட்டது: ஆதலால், நீங்கள் ஒரு கெட்ட எண்ணத்தை எண்ணிக்கொண்டிருந்தீர்கள்; அதனால், நீங்கள் அழிந்துவிடும் சமூகத்தினராகி விட்டீர்கள்.
53:23 اِنْ هِىَ اِلَّاۤ اَسْمَآءٌ سَمَّيْتُمُوْهَاۤ اَنْتُمْ وَاٰبَآؤُكُمْ مَّاۤ اَنْزَلَ اللّٰهُ بِهَا مِنْ سُلْطٰنٍؕ اِنْ يَّتَّبِعُوْنَ اِلَّا الظَّنَّ وَمَا تَهْوَى الْاَنْفُسُۚ وَلَقَدْ جَآءَهُمْ مِّنْ رَّبِّهِمُ الْهُدٰىؕ
53:23. இவையெல்லாம் வெறும் பெயர்களேயன்றி வேறில்லை; நீங்களும் உங்கள் மூதாதையர்களும் அந்தப் பெயர்களை வைத்துக்கொண்டீர்கள்; இதற்கு அல்லாஹ் எந்த அத்தாட்சியும் இறக்கவில்லை; நிச்சயமாக அவர்கள் வீணான எண்ணத்தையும், தம் மனங்கள் விரும்புபவற்றையுமே பின்பற்றுகிறார்கள்; எனினும், நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடமிருந்து, அவர்களுக்கு நேரான வழி வந்தே இருக்கிறது.
53:28 وَمَا لَهُمْ بِهٖ مِنْ عِلْمٍؕ اِنْ يَّتَّبِعُوْنَ اِلَّا الظَّنَّۚ وَاِنَّ الظَّنَّ لَا يُغْنِىْ مِنَ الْحَـقِّ شَيْـٴًـــاۚ
53:28. எனினும், அவர்களுக்கு இதைப் பற்றி எத்தகைய அறிவும் இல்லை; அவர்கள் வீணான எண்ணத்தைத் தவிர வேறெதையும் பின்பற்றவில்லை; நிச்சயமாக வீண் எண்ணம் (எதுவும்) சத்தியத்திலிருந்து (அதற்கு எதிராக) யாதொரு பயனையும் அளிக்காது.