ஏணி
6:35   وَاِنْ كَانَ كَبُرَ عَلَيْكَ اِعْرَاضُهُمْ فَاِنِ اسْتَطَعْتَ اَنْ تَبْتَغِىَ نَفَقًا فِى الْاَرْضِ اَوْ سُلَّمًا فِى السَّمَآءِ فَتَاْتِيَهُمْ بِاٰيَةٍ‌ ؕ وَلَوْ شَآءَ اللّٰهُ لَجَمَعَهُمْ عَلَى الْهُدٰى فَلَا تَكُوْنَنَّ مِنَ الْجٰهِلِيْنَ‏
6:35. (நபியே!) அவர்களின் புறக்கணிப்பு உமக்குப் பெருங்கஷ்டமாக இருந்தால், உம்மால் முடியுமானால் பூமியில் ஒரு சுரங்கத்தை ஏற்படுத்தி அல்லது வானத்திலே ஓர் ஏணியை அமைத்து (ஏறிச்சென்று அவர்கள் விருப்பப்படி) ஓர் அத்தாட்சியை அவர்களிடம் கொண்டுவாரும் - (அப்பொழுதும், அவர்கள் உம்மை நிராகரித்துக் கொண்டுதானிருப்பார்கள்); அன்றியும், அல்லாஹ் நாடினால் அவர்களை நேர்வழியில் ஒன்று சேர்த்து விடுவான். ஆகவே, அறிவில்லாதவர்களில் ஒருவராக நீர் ஆகிவிடவேண்டாம்.
52:38   اَمْ لَهُمْ سُلَّمٌ يَّسْتَمِعُوْنَ فِيْهِ‌ ۚ فَلْيَاْتِ مُسْتَمِعُهُمْ بِسُلْطٰنٍ مُّبِيْنٍؕ‏
52:38. அல்லது, அவர்களுக்கு ஏணி இருந்து அதன் மூலம் (வானத்தின் இரகசியங்களைக்) கேட்டு வருகின்றார்களா? அவ்வாறாயின், அவர்களில் கேட்டு வந்தவர் (செவியேற்றதைத்) தெளிவான ஆதாரத்துடன் கொண்டு வரட்டும்.