ஓதுங்கள்
17:14 اِقْرَاْ كِتٰبَك َؕ كَفٰى بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيْبًا ؕ
17:14. நீ உன் புத்தகத்தைப் படித்துப் பார்! இன்றைய தினம் உனக்கு நீயே கணக்குப் பார்ப்பவனாக இருக்கப் போகிறாய் (என்று அப்போது நாம் கூறுவோம்).
69:19 فَاَمَّا مَنْ اُوْتِىَ كِتٰبَهٗ بِيَمِيْنِهٖۙ فَيَقُوْلُ هَآؤُمُ اقْرَءُوْا كِتٰبِيَهْۚ
69:19. ஆகவே, எவர் தம்முடைய பட்டோலை அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுமோ அவர் (மகிழ்வுடன் மற்றவர்களிடம்), "வாருங்கள், என் பட்டோலையைப் படியுங்கள்" எனக் கூறுவார்.
73:20 اِنَّ رَبَّكَ يَعْلَمُ اَنَّكَ تَقُوْمُ اَدْنٰى مِنْ ثُلُثَىِ الَّيْلِ وَ نِصْفَهٗ وَثُلُثَهٗ وَطَآٮِٕفَةٌ مِّنَ الَّذِيْنَ مَعَكَؕ وَاللّٰهُ يُقَدِّرُ الَّيْلَ وَالنَّهَارَؕ عَلِمَ اَنْ لَّنْ تُحْصُوْهُ فَتَابَ عَلَيْكُمْ فَاقْرَءُوْا مَا تَيَسَّرَ مِنَ الْقُرْاٰنِؕ عَلِمَ اَنْ سَيَكُوْنُ مِنْكُمْ مَّرْضٰىۙ وَاٰخَرُوْنَ يَضْرِبُوْنَ فِى الْاَرْضِ يَبْتَغُوْنَ مِنْ فَضْلِ اللّٰهِۙ وَاٰخَرُوْنَ يُقَاتِلُوْنَ فِىْ سَبِيْلِ اللّٰهِ ۖ فَاقْرَءُوْا مَا تَيَسَّرَ مِنْهُ ۙ وَاَقِيْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَاَقْرِضُوا اللّٰهَ قَرْضًا حَسَنًا ؕ وَمَا تُقَدِّمُوْا لِاَنْفُسِكُمْ مِّنْ خَيْرٍ تَجِدُوْهُ عِنْدَ اللّٰهِ هُوَ خَيْرًا وَّاَعْظَمَ اَجْرًا ؕ وَاسْتَغْفِرُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ
73:20. நிச்சயமாக நீரும், உம்முடன் இருப்போரில் ஒரு கூட்டத்தாரும் இரவில் மூன்றில் இருபாகங்களுக்குச் சமீபமாகவோ, இன்னும் அதில் பாதியோ, இன்னும் அதில் மூன்றில் ஒரு பாகத்திலோ (வணக்கத்திற்காக) நிற்கிறீர்கள் என்பதை உம்முடைய இறைவன் நிச்சயமாக அறிவான்; அல்லாஹ்வே இரவையும் பகலையும் அளவாகக் கணக்கிடுகின்றான்; அதை நீங்கள் சரியாகக் கணக்கிட்டுக்கொள்ள மாட்டீர்கள் என்பதையும் அவன் அறிகிறான்; ஆகவே, அவன் உங்களுக்கு மன்னிப்பு அளித்துவிட்டான்; எனவே, நீங்கள் குர்ஆனிலிருந்து உங்களுக்கு இயன்றதை ஓதுங்கள், (ஏனெனில்,) நோயாளிகளும், அல்லாஹ்வின் அருளைத் தேடியவாறு பூமியில் பயணம் செய்யும் வேறு சிலரும், அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும் வேறு சிலரும், உங்களில் இருப்பார்கள் என்பதை அவன் அறிகிறான்; ஆகவே, அதிலிருந்து உங்களுக்கு இயன்றதை ஓதுங்கள்; தொழுகையை (முறையாக) நிலைநிறுத்துங்கள்; இன்னும், ஜகாத்தும் கொடுங்கள்; அன்றியும், அல்லாஹ்வுக்கு அழகான கடனாகக் கடன் கொடுங்கள். நன்மைகளில் எவற்றை நீங்கள் உங்கள் ஆத்மாக்களுக்காக (ச் செய்து மறுமைக்காக) முற்படுத்துகிறீர்களோ, அவற்றை நீங்கள் அல்லாஹ்விடம் மிகவும் மேலானதாகவும், நற்கூலியில் மகத்தானதாகவும் காண்பீர்கள்; அன்றியும், அல்லாஹ்விடமே மன்னிப்புக் கோருங்கள்; நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.
96:1 اِقْرَاْ بِاسْمِ رَبِّكَ الَّذِىْ خَلَقَۚ
96:1. (யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக!
96:3 اِقْرَاْ وَرَبُّكَ الْاَكْرَمُۙ
96:3. ஓதுவீராக! உம் இறைவன் மிக்க கண்ணியமானவன்.