ஓடுவது
11:41   وَقَالَ ارْكَبُوْا فِيْهَا بِسْمِ اللّٰهِ مَجْرٖؔٮھَا وَمُرْسٰٮهَا ؕ اِنَّ رَبِّىْ لَـغَفُوْرٌ رَّحِيْمٌ ‏
11:41. "இதிலே நீங்கள் ஏறிக்கொள்ளுங்கள்; இது ஓடுவதும், இது நிற்பதும் அல்லாஹ்வின் பெயராலேயே (நிகழ்கின்றன); நிச்சயமாக என் இறைவன் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்" என்று கூறினார்.
33:13   وَاِذْ قَالَتْ طَّآٮِٕفَةٌ مِّنْهُمْ يٰۤـاَهْلَ يَثْرِبَ لَا مُقَامَ لَكُمْ فَارْجِعُوْا‌ ۚ وَيَسْتَاْذِنُ فَرِيْقٌ مِّنْهُمُ النَّبِىَّ يَقُوْلُوْنَ اِنَّ بُيُوْتَنَا عَوْرَة‌ٌ  ‌ۛؕ وَمَا هِىَ بِعَوْرَةٍ  ۛۚ اِنْ يُّرِيْدُوْنَ اِلَّا فِرَارًا‏
33:13. மேலும், அவர்களில் ஒரு கூட்டத்தார் (மதீனாவாசிகளை நோக்கி) "யஸ்ரிப் வாசிகளே! (பகைவர்களை எதிர்த்து) உங்களால் (உறுதியாக) நிற்க முடியாது; ஆதலால், நீங்கள் திரும்பிச் சென்று விடுங்கள்" என்று கூறியபோது, அவர்களில் (மற்றும்) ஒரு பிரிவினர்: "நிச்சயமாக எங்களுடைய வீடுகள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்றன" என்று - அவை பாதுகாப்பற்றதாக இல்லாத நிலையிலும் - கூறி (போர்க் களத்திலிருந்து சென்று விட) நபியிடம் அனுமதி கோரினார்கள்; இவர்கள் (போர்க் களத்திலிருந்து தப்பி) ஓடுவதைத் தவிர (வேறெதையும்) நாடவில்லை.
62:8   قُلْ اِنَّ الْمَوْتَ الَّذِىْ تَفِرُّوْنَ مِنْهُ فَاِنَّهٗ مُلٰقِيْكُمْ‌ ثُمَّ تُرَدُّوْنَ اِلٰى عٰلِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏
62:8. "நீங்கள் எதைவிட்டும் விரண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணம் நிச்சயமாக உங்களைச் சந்திக்கும்; பிறகு, மறைவானதையும் பகிரங்கமானதையும் நன்கறிந்தவனிடம் நீங்கள் மீட்டப்படுவீர்கள்; அப்பால், அவன் நீங்கள் செய்துகொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பான்" என்று (நபியே!) நீர் கூறுவீராக!