ஓரினச் சேர்க்கை
27:55   اَٮِٕنَّكُمْ لَـتَاْتُوْنَ الرِّجَالَ شَهْوَةً مِّنْ دُوْنِ النِّسَآءِ‌ؕ بَلْ اَنْـتُمْ قَوْمٌ تَجْهَلُوْنَ‏
27:55. "நீங்கள் பெண்களை விட்டுவிட்டு, மோகங்கொண்டவர்களாக ஆண்களிடம் வருகிறீர்களா? நீங்கள் முற்றிலும் அறிவில்லாத மக்களாக இருக்கிறீர்கள்!" (என்றும் கூறினார்).
29:29   اَٮِٕنَّكُمْ لَـتَاْتُوْنَ الرِّجَالَ وَتَقْطَعُوْنَ السَّبِيْلَ ۙ وَتَاْ تُوْنَ فِىْ نَادِيْكُمُ الْمُنْكَرَ ‌ؕ فَمَا كَانَ جَوَابَ قَوْمِهٖۤ اِلَّاۤ اَنْ قَالُوا ائْتِنَا بِعَذَابِ اللّٰهِ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِيْنَ‏
29:29. "நீங்கள் ஆண்களிடம் (மோகம் கொண்டவர்களாக) வருகிறீர்களா? வழிமறி(த்துப் பயணிகளைக் கொள்ளையடி)க்கவும் செய்கின்றீர்கள்; உங்களுடைய சபையிலும் வெறுக்கத்தக்கவற்றைச் செய்கின்றீர்கள்" என்று கூறினார்; அதற்கு அவருடைய சமூகத்தாரின் பதில்: "நீர் உண்மையாளர்களில் (ஒருவராக) இருப்பின் எங்கள் மீது அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு வருவீராக!" என்பது தவிர வேறு எதுவுமில்லை.