சந்திரன்
2:189   يَسْـــٴَــلُوْنَكَ عَنِ الْاَهِلَّةِ ‌ؕ قُلْ هِىَ مَوَاقِيْتُ لِلنَّاسِ وَالْحَجِّ ؕ وَلَيْسَ الْبِرُّ بِاَنْ تَاْتُوا الْبُيُوْتَ مِنْ ظُهُوْرِهَا وَلٰـكِنَّ الْبِرَّ مَنِ اتَّقٰى‌ۚ وَاْتُوا الْبُيُوْتَ مِنْ اَبْوَابِهَا وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّکُمْ تُفْلِحُوْنَ‏‏‏
2:189. (நபியே! தேய்ந்து வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: "அவை மக்களுக்கும், ஹஜ்ஜுக்கும் காலம் காட்டுபவையாக உள்ளன." (நம்பிக்கையாளர்களே! ஹஜ்ஜை நிறைவேற்றிய பிறகு உங்கள்) வீடுகளுக்குப் பின்புறமாக வருவதில் புண்ணியம் இல்லை; ஆனால், (இறைவனுக்கு) அஞ்சுபவரே புண்ணியமுடையவராவார்; எனவே, வீடுகளுக்கு (முறையான) வாசல்கள் வழியாகவே செல்லுங்கள்; நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்.
6:77   فَلَمَّا رَاَالْقَمَرَ بَازِغًا قَالَ هٰذَا رَبِّىْ ‌ۚ فَلَمَّاۤ اَفَلَ قَالَ لَٮِٕنْ لَّمْ يَهْدِنِىْ رَبِّىْ لَاَ كُوْنَنَّ مِنَ الْقَوْمِ الضَّآ لِّيْنَ‏
6:77. பின்னர், சந்திரன் (பிரகாசத்துடன்) உதயமாவதைக் கண்டு அவர், "இதுவே என் இறைவன்" என்று கூறினார்; ஆனால், அது மறைந்தபோது அவர், "என் இறைவன் எனக்கு நேர்வழி காட்டவில்லையானால், நான் நிச்சயமாக வழிதவறிய கூட்டத்தினரில் (ஒருவனாக) ஆகிவிடுவேன்" என்று கூறினார்.
25:61   تَبٰـرَكَ الَّذِىْ جَعَلَ فِى السَّمَآءِ بُرُوْجًا وَّجَعَلَ فِيْهَا سِرٰجًا وَّقَمَرًا مُّنِيْرًا‏
25:61. வான்மண்டலத்தில் பல கிரகங்களை அமைத்து அவற்றிடையே ஒரு விளக்கை (சூரியனை)யும், ஒளிர்கின்ற சந்திரனையும் உண்டாக்கினானே அவன் பாக்கியமுள்ளவன்.
31:29   اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ يُوْلِجُ الَّيْلَ فِى النَّهَارِ وَيُوْلِجُ النَّهَارَ فِى الَّيْلِ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ كُلٌّ يَّجْرِىْۤ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى وَّاَنَّ اللّٰهَ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ‏
31:29. நிச்சயமாக அல்லாஹ் தான் இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான்; இன்னும் சூரியனையும், சந்திரனையும் வசப்படுத்தினான் என்பதை நீர் பார்க்கவில்லையா? ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட தவணைவரை செல்கின்றன; அன்றியும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவன்.
36:39   وَالْقَمَرَ قَدَّرْنٰهُ مَنَازِلَ حَتّٰى عَادَ كَالْعُرْجُوْنِ الْقَدِيْمِ‏
36:39. இன்னும், (உலர்ந்து வளைந்த) பழைய பேரீச்ச மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல தங்குமிடங்களை ஏற்படுத்தியிருக்கின்றோம்.
54:1   اِقْتَـرَبَتِ السَّاعَةُ وَانْشَقَّ الْقَمَرُ‏
54:1. மறுமைநாள் நெருங்கிவிட்டது; சந்திரனும் பிளந்துவிட்டது.
71:16   وَّجَعَلَ الْقَمَرَ فِيْهِنَّ نُوْرًا ۙ وَّجَعَلَ الشَّمْسَ سِرَاجًا‏
71:16. "இன்னும், அவற்றில் சந்திரனைப் பிரகாசமாகவும், சூரியனை ஒளிவிளக்காகவும் அவனே ஆக்கியிருக்கின்றான்."
74:32   كَلَّا وَالْقَمَرِۙ‏
74:32. (ஸகர் என்னும் நரகம் நிராகரிப்போர் கூறுவது போல்) அல்ல; இன்னும், சந்திரன்மீது சத்தியமாக!
75:8   وَخَسَفَ الْقَمَرُۙ‏
75:8. சந்திரன் ஒளியும் மங்கி,
84:18   وَالْقَمَرِ اِذَا اتَّسَقَۙ‏
84:18. சந்திரன் மீதும் - அது பூரணமாகிவிட்ட போதும் சத்தியம் செய்கிறேன்!