செவிடு
2:18 صُمٌّۢ بُكْمٌ عُمْىٌ فَهُمْ لَا يَرْجِعُوْنَ ۙ
2:18. (அவர்கள்) செவிடர்களாக, ஊமையர்களாக, குருடர்களாக இருக்கின்றனர்; எனவே, அவர்கள் (நேரான வழியின் பக்கம்) மீளமாட்டார்கள்.
2:171 وَمَثَلُ الَّذِيْنَ کَفَرُوْا كَمَثَلِ الَّذِىْ يَنْعِقُ بِمَا لَا يَسْمَعُ اِلَّا دُعَآءً وَّنِدَآءً ؕ صُمٌّۢ بُكْمٌ عُمْـىٌ فَهُمْ لَا يَعْقِلُوْنَ
2:171. (அந்த) நிராகரிப்பாளர்களுக்கு உதாரணம்: வெறும் கூப்பாட்டையும், கூச்சலையும் தவிர வேறெதையும் கேட்காத (கால்நடைகளைக்) கூவி அழைப்பவனின் உதாரணத்தைப் போன்றிருக்கிறது; அவர்கள் செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கின்றனர்; அவர்கள் (எதனையும்) உணர்ந்துகொள்ள மாட்டார்கள்.
5:71 وَحَسِبُوْۤا اَلَّا تَكُوْنَ فِتْنَةٌ فَعَمُوْا وَصَمُّوْا ثُمَّ تَابَ اللّٰهُ عَلَيْهِمْ ثُمَّ عَمُوْا وَصَمُّوْا كَثِيْرٌ مِّنْهُمْؕ وَاللّٰهُ بَصِيْرٌۢ بِمَا يَعْمَلُوْنَ
5:71. (இதனால் தங்களுக்கு) எந்தவிதமான வேதனையும் ஏற்படாது என்று அவர்கள் எண்ணிக்கொண்டனர்; ஆகவே, அவர்கள் (உண்மையையுணர முடியாக்) குருடர்களாகவும், செவிடர்களாகவும் ஆகிவிட்டார்கள்; பின்னர், அல்லாஹ் அவர்களுடைய பாவமன்னிப்பை ஏற்றுக்கொண்டான்; எனினும், அவர்களில் பெரும்பாலோர் குருடர்களாகவும், செவிடர்களாகவுமே ஆகிவிட்டனர்; அல்லாஹ், அவர்கள் செய்பவற்றையெல்லாம் (நன்கு) உற்று நோக்கியவனாக இருக்கின்றான்.
6:39 وَالَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا صُمٌّ وَّبُكْمٌ فِى الظُّلُمٰتِؕ مَنْ يَّشَاِ اللّٰهُ يُضْلِلْهُ ؕ وَمَنْ يَّشَاْ يَجْعَلْهُ عَلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ
6:39. இன்னும், நம்முடைய வசனங்களைப் பொய்ப்பிப்பவர்கள் இருள்களில் செவிடர்களாகவும், ஊமையர்களாகவும் இருக்கின்றனர்; அல்லாஹ் எவரை நாடுகின்றானோ, அவரைத் தவறான வழியில் செல்ல விட்டுவிடுகிறான்; எவரை நாடுகின்றானோ அவரை நேரான வழியின் மீது ஆக்குகிறான்.
8:22 اِنَّ شَرَّ الدَّوَآبِّ عِنْدَ اللّٰهِ الصُّمُّ الْبُكْمُ الَّذِيْنَ لَا يَعْقِلُوْنَ
8:22. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயிரினங்களில் மிகக் கேவலமானவர்கள் (உண்மையை) அறிந்து கொள்ளாச் செவிடர்களும், ஊமைகளும்தான்.
10:42 وَمِنْهُمْ مَّنْ يَّسْتَمِعُوْنَ اِلَيْكَؕ اَفَاَنْتَ تُسْمِعُ الصُّمَّ وَلَوْ كَانُوْا لَا يَعْقِلُوْنَ
10:42. இன்னும், உமக்குச் செவிமடுப்பவர்களும் அவர்களில் இருக்கின்றனர்; எதுவுமே விளங்கிக்கொள்ள இயலாச் செவிடர்களை நீர் கேட்கும்படிச் செய்யமுடியுமா?
11:24 مَثَلُ الْفَرِيْقَيْنِ كَالْاَعْمٰى وَالْاَصَمِّ وَالْبَـصِيْرِ وَالسَّمِيْعِ ؕ هَلْ يَسْتَوِيٰنِ مَثَلًا ؕ اَفَلَا تَذَكَّرُوْنَ
11:24. இவ்விரு பிரிவினர்களுக்கு உதாரணம்: (ஒரு பிரிவினர்) குருடனையும், செவிடனையும் (போலிருக்கின்றனர்; மற்றொரு பிரிவினர்) பார்வையுடையோனையும் செவியுடையோனையும் ஒத்திருக்கின்றனர்; இவ்விரு பிரிவினரும் ஒப்புவமையில் சமமாவாரா? நீங்கள் சிந்திக்கவேண்டாமா?
21:45 قُلْ اِنَّمَاۤ اُنْذِرُكُمْ بِالْوَحْىِ ۖ وَلَا يَسْمَعُ الصُّمُّ الدُّعَآءَ اِذَا مَا يُنْذَرُوْنَ
21:45. "நிச்சயமாக நான் உங்களுக்கு எச்சரிக்கை செய்வதெல்லாம் 'வஹீ' மூலம் தான்" என்று (நபியே!) நீர் கூறும்; எனினும், செவிடர்கள் அச்சமூட்டி எச்சரிக்கப்படும் போது (அவர்கள் நேர்வழி பெறும்) அந்த அழைப்பைச் செவிமடுக்கமாட்டார்கள்.
25:73 وَالَّذِيْنَ اِذَا ذُكِّرُوْا بِاٰيٰتِ رَبِّهِمْ لَمْ يَخِرُّوْا عَلَيْهَا صُمًّا وَّعُمْيَانًا
25:73. இன்னும் அவர்கள், தங்கள் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால், செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது விழமாட்டார்கள். (சிந்தனையுடன் செவிசாய்ப்பார்கள்.)
27:80 اِنَّكَ لَا تُسْمِعُ الْمَوْتٰى وَلَا تُسْمِعُ الصُّمَّ الدُّعَآءَ اِذَا وَلَّوْا مُدْبِرِيْنَ
27:80. நிச்சயமாக நீர் மரணித்தோரைச் செவியேற்கச் செய்யமுடியாது; அவ்வாறே செவிடர்களையும் - அவர்கள் புறங்காட்டித் திரும்பிவிடும்போது - (உம்) அழைப்பை நீர் செவியேற்கச் செய்யமுடியாது.
30:52 فَاِنَّكَ لَا تُسْمِعُ الْمَوْتٰى وَلَا تُسْمِعُ الصُّمَّ الدُّعَآءَ اِذَا وَلَّوْا مُدْبِرِيْنَ
30:52. ஆகவே, (நபியே!) மரணித்தவர்களையும் நிச்சயமாக நீர் கேட்கச் செய்யமுடியாது; (உம்முடைய அழைப்பைப்) புறக்கணித்துத் திரும்பி விடும் செவிடர்களையும் (உம்முடைய) அழைப்பை நிச்சயமாக நீர் கேட்கச் செய்ய முடியாது.
43:40 اَفَاَنْتَ تُسْمِعُ الصُّمَّ اَوْ تَهْدِى الْعُمْىَ وَمَنْ كَانَ فِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ
43:40. ஆகவே, (நபியே!) நீர் செவிடனைக் கேட்குமாறு செய்ய முடியுமா? அல்லது குருடனையும், பகிரங்கமான வழிகேட்டில் இருப்பவனையும் நேர்வழியில் செலுத்த முடியுமா?
47:23 اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ لَعَنَهُمُ اللّٰهُ فَاَصَمَّهُمْ وَاَعْمٰٓى اَبْصَارَهُمْ
47:23. இத்தகையோரைத் தாம் அல்லாஹ் சபித்து, இவர்களைச் செவிடாக்கி, இவர்கள் பார்வைகளையும் குருடாக்கிவிட்டான்.
80:33 فَاِذَا جَآءَتِ الصَّآخَّةُ
80:33. ஆகவே, (யுக முடிவின் போது, காதைச் செவிடாக்கும்) பெரும் சப்தம் வரும்போது,