சேமிப்புத்திட்டம்
7:31 يٰبَنِىْۤ اٰدَمَ خُذُوْا زِيْنَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ وَّكُلُوْا وَاشْرَبُوْا وَلَا تُسْرِفُوْا ۚ اِنَّهٗ لَا يُحِبُّ الْمُسْرِفِيْنَ
7:31. ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு தொழுமிடத்திலும் (தொழும்காலம் - ஆடை முதலியவற்றைக் கொண்டு) உங்களை அலங்கரித்துக்கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும், வீண்விரயம் செய்யாதீர்கள்; ஏனெனில், (அல்லாஹ்வாகிய) அவன் வீண்விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.
12:47 قَالَ تَزْرَعُوْنَ سَبْعَ سِنِيْنَ دَاَبًاۚ فَمَا حَصَدْتُّمْ فَذَرُوْهُ فِىْ سُنْۢبُلِهٖۤ اِلَّا قَلِيْلًا مِّمَّا تَاْكُلُوْنَ
12:47. நீங்கள் தொடர்ந்து ஏழு ஆண்டுகளுக்கு (நல்லபடியாக) விவசாயம் செய்வீர்கள்; பிறகு, நீங்கள் அறுவடை செய்வதை, நீங்கள் உண்பதற்கு வேண்டிய ஒரு சிறிய அளவைத் தவிர, அதனை அதற்குரிய கதிர்களிலேயே விட்டுவையுங்கள்" என்று கூறினார்.
12:49 ثُمَّ يَاْتِىْ مِنْۢ بَعْدِ ذٰلِكَ عَامٌ فِيْهِ يُغَاثُ النَّاسُ وَفِيْهِ يَعْصِرُوْنَ
12:49. "பின்னும், அதற்கப்பால் ஓராண்டு வரும்; அதில் மக்களுக்கு நல்ல மழை பொழிவிக்கப்பட்டு, இன்னும், அவ்வருடத்தில் (விளையும் கனிகளிலிருந்து) அவர்கள் பழரசங்களையும் பிழிந்துகொண்டுமிருப்பார்கள்" (என்றும் கூறினார்).
25:67 وَالَّذِيْنَ اِذَاۤ اَنْفَقُوْا لَمْ يُسْرِفُوْا وَلَمْ يَقْتُرُوْا وَكَانَ بَيْنَ ذٰلِكَ قَوَامًا
25:67. இன்னும், அவர்கள் செலவு செய்தால் வீண்விரயம் செய்யமாட்டார்கள்; (உலோபித்தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள்; எனினும், இரண்டிற்கும் மத்திய நிலையாக அது இருக்கும்.