சேர்த்துக் கொள்வது
28:32   اُسْلُكْ يَدَكَ فِىْ جَيْبِكَ تَخْرُجْ بَيْضَآءَ مِنْ غَيْرِ سُوْٓءٍ وَّاضْمُمْ اِلَيْكَ جَنَاحَكَ مِنَ الرَّهْبِ‌ فَذٰنِكَ بُرْهَانٰنِ مِنْ رَّبِّكَ اِلٰى فِرْعَوْنَ وَمَلَا۟ٮِٕهٖؕ اِنَّهُمْ كَانُوْا قَوْمًا فٰسِقِيْنَ‏‏‏
28:32. உம் கையை உம் சட்டைக்குள் புகுத்தும்; அது எவ்வித தீங்குமின்றி (ஒளி மிக்கதாய்) வெண்மையாக வெளிவரும்; இன்னும், நீர் அச்சப்படும்காலை உம்முடைய கைகளை உம் விலாவில் சேர்த்துக்கொள்ளும்; இவ்விரண்டும் ஃபிர்அவ்ன் மற்றும் அவனுடைய பிரதானிகள் பக்கம் உம் இறைவனிடமிருந்துள்ள இரு அத்தாட்சிகளாகும்; நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் சமூகத்தாராகவே இருக்கின்றார்கள்" (என்றும் அவருக்குக் கூறப்பட்டது).
33:51   تُرْجِىْ مَنْ تَشَآءُ مِنْهُنَّ وَتُـــْٔوِىْۤ اِلَيْكَ مَنْ تَشَآءُ ؕ وَمَنِ ابْتَغَيْتَ مِمَّنْ عَزَلْتَ فَلَا جُنَاحَ عَلَيْكَ ؕ ذٰ لِكَ اَدْنٰٓى اَنْ تَقَرَّ اَعْيُنُهُنَّ وَلَا يَحْزَنَّ وَيَرْضَيْنَ بِمَاۤ اٰتَيْتَهُنَّ كُلُّهُنَّ ؕ وَاللّٰهُ يَعْلَمُ مَا فِىْ قُلُوْبِكُمْ ؕ وَكَانَ اللّٰهُ عَلِيْمًا حَلِيْمًا‏
33:51. அவர்களில் நீர் விரும்பியவரை ஒதுக்கி வைக்கலாம்; நீர் விரும்பியவரை உம்முடன் தங்க வைக்கலாம்; நீர் ஒதுக்கிவைத்தவர்களில் எவரையேனும் நீர் (மீண்டும் சேர்த்துக் கொள்ள) நாடினால் (இதில்) உம்மீது குற்றமில்லை; அவர்களுடைய கண்கள் குளிர்ச்சியடையும் பொருட்டும், அவர்கள் விசனப்படாமல் இருப்பதற்கும், அவர்கள் ஒவ்வொருவரும் நீர் அவர்களுக்குக் கொடுப்பதைக்கொண்டு திருப்தி அடைவதற்காகவும் இது சுலபமான வழியாகும்; மேலும், அல்லாஹ் உங்கள் உள்ளங்களில் இருப்பதை நன்கறிகிறான்; இன்னும், அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்; மிக்க பொறுமையாளன்.