தடி
20:66   قَالَ بَلْ اَلْقُوْا‌ۚ فَاِذَا حِبَالُهُمْ وَعِصِيُّهُمْ يُخَيَّلُ اِلَيْهِ مِنْ سِحْرِهِمْ اَنَّهَا تَسْعٰى‏
20:66. அதற்கவர்: "அவ்வாறன்று! நீங்களே (முதலில்) எறியுங்கள்" என்று கூறினார்; (அவர்கள் எறியவே) அவர்களுடைய கயிறுகளும் அவர்களுடைய தடிகளும் அவர்களின் சூனியத்தால் (பாம்புகளாகி) நிச்சயமாக நெளிந்தோடுவது போல் அவருக்குத் தோன்றியது.
26:44   فَاَلْقَوْا حِبَالَهُمْ وَعِصِيَّهُمْ وَقَالُوْا بِعِزَّةِ فِرْعَوْنَ اِنَّا لَـنَحْنُ الْغٰلِبُوْنَ‏
26:44. ஆகவே, அவர்கள் தங்கள் கயிறுகளையும் தடிகளையும் எறிந்து, "ஃபிர்அவ்னுடைய கண்ணியத்தின் மீது ஆணையாக, நாமே வெற்றியடைவோம்" என்று கூறினார்கள்.
34:14   فَلَمَّا قَضَيْنَا عَلَيْهِ الْمَوْتَ مَا دَلَّهُمْ عَلٰى مَوْتِهٖۤ اِلَّا دَآ بَّةُ الْاَرْضِ تَاْ كُلُ مِنْسَاَتَهُ ۚ فَلَمَّا خَرَّ تَبَيَّنَتِ الْجِنُّ اَنْ لَّوْ كَانُوْا يَعْلَمُوْنَ الْغَيْبَ مَا لَبِثُوْا فِى الْعَذَابِ الْمُهِيْنِ ؕ‏
34:14. அவர் (ஸுலைமான்) மீது நாம் மரணத்தை விதித்தபோது, அவர் இறந்துவிட்டார் என்பதை அவர் (சாய்ந்திருந்த) தடியை அரித்துவிட்ட நிலத்தின் பூச்சியை (கரையானை)த் தவிர வேறெதுவும் அவர்களுக்கு (ஜின்களுக்கு) அறிவிக்கவில்லை; அவர் கீழே விழவே, தாங்கள் மறைவான விஷயங்களை அறிந்திருக்கக் கூடுமானால், (கடின உழைப்பாகிய) இழிவுதரும் வேதனையில் தாங்கள் நிலைபெற்றிருந்திருக்க வேண்டியதில்லை என்று ஜின்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது.