தட்டு - பாத்திரம்
34:13 يَعْمَلُوْنَ لَهٗ مَا يَشَآءُ مِنْ مَّحَارِيْبَ وَتَمَاثِيْلَ وَجِفَانٍ كَالْجَـوَابِ وَقُدُوْرٍ رّٰسِيٰتٍ ؕ اِعْمَلُوْۤا اٰلَ دَاوٗدَ شُكْرًا ؕ وَقَلِيْلٌ مِّنْ عِبَادِىَ الشَّكُوْرُ
34:13. அவை அவருக்காக அவர் விரும்பிய உயரமான மாளிகைகளையும், சிற்பங்களையும், (தடாகங்கள் போன்ற) பெருங்கொப்பரைகளையும், நகர்த்த முடியாப் பெரும்பாத்திரங்களையும் செய்து கொண்டிருந்தன; "தாவூதின் சந்ததியினரே! நன்றி செலுத்துங்கள்; மேலும், என் அடியார்களிலிருந்து நன்றி செலுத்துவோர் சொற்பமானவர்களே" (என்று கூறினோம்).
39:16 لَهُمْ مِّنْ فَوْقِهِمْ ظُلَلٌ مِّنَ النَّارِ وَمِنْ تَحْتِهِمْ ظُلَلٌ ؕ ذٰ لِكَ يُخَوِّفُ اللّٰهُ بِهٖ عِبَادَهٗ ؕ يٰعِبَادِ فَاتَّقُوْنِ
39:16. (மறுமைநாளில்) இவர்களுக்கு மேலே நெருப்பிலான தட்டுகளும், இவர்களின் கீழும் (நெருப்பிலான) தட்டுகளும் இருக்கும்; இவ்வாறு, அதைக் கொண்டு அல்லாஹ் தன் அடியார்களை அச்சமூட்டுகிறான்; என் அடியார்களே! என்னை நீங்கள் பயந்துகொள்ளுங்கள்.
43:71 يُطَافُ عَلَيْهِمْ بِصِحَافٍ مِّنْ ذَهَبٍ وَّاَكْوَابٍۚ وَفِيْهَا مَا تَشْتَهِيْهِ الْاَنْفُسُ وَتَلَذُّ الْاَعْيُنُۚ وَاَنْتُمْ فِيْهَا خٰلِدُوْنَۚ
43:71. பொன் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக்கொண்டே இருக்கும்; இன்னும், (அவர்களின்) மனங்கள் விரும்பியதும், கண்களுக்கு இன்பம் தருவதும் அதிலுள்ளன; இன்னும், "நீங்கள் இங்கு நிரந்தரமாகத் தங்கியிருப்பீர்கள்!" (என அவர்களிடம் சொல்லப்படும்.)
76:15 وَيُطَافُ عَلَيْهِمْ بِاٰنِيَةٍ مِّنْ فِضَّةٍ وَّاَكْوَابٍ كَانَتْ قَوَارِيْرَا۟ؔ ۙ
76:15. (பானங்கள் -) வெள்ளிப் பாத்திரங்களையும், பளிங்குக் கிண்ணங்களையும் அவர்களைச் சுற்றிக் கொண்டுவரப்படும்.