தண்ணீர்
11:7   وَ هُوَ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ فِىْ سِتَّةِ اَ يَّامٍ وَّكَانَ عَرْشُهٗ عَلَى الْمَآءِ لِيَبْلُوَكُمْ اَيُّكُمْ اَحْسَنُ عَمَلًا ؕ وَلَٮِٕنْ قُلْتَ اِنَّكُمْ مَّبْعُوْثُوْنَ مِنْۢ بَعْدِ الْمَوْتِ لَيَـقُوْلَنَّ الَّذِيْنَ كَفَرُوْۤا اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّبِيْنٌ‏
11:7. மேலும், அவன்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்; அவனுடைய 'அர்ஷ்' (அரியாசனம்) நீரின் மேல் இருந்தது; உங்களில் யார் செயலால் அழகானவர்? என்பதைச் சோதிக்கும் பொருட்டு (இவற்றைப் படைத்தான்; இன்னும், நபியே! அவர்களிடம்) "நிச்சயமாக நீங்கள் மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவீர்கள்" என்று நீர் கூறினால் (அதற்கு) நிராகரித்தவர்கள், "இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறில்லை" என்று நிச்சயமாகக் கூறுவார்கள்.
11:43   قَالَ سَاٰوِىْۤ اِلٰى جَبَلٍ يَّعْصِمُنِىْ مِنَ الْمَآءِ‌ؕ قَالَ لَا عَاصِمَ الْيَوْمَ مِنْ اَمْرِ اللّٰهِ اِلَّا مَنْ رَّحِمَ‌ۚ وَحَالَ بَيْنَهُمَا الْمَوْجُ فَكَانَ مِنَ الْمُغْرَقِيْنَ‏
11:43. அதற்கு அவன்: "நான் ஒரு மலையின்பால் ஒதுங்கிக்கொள்வேன்; அது என்னைத் தண்ணீரிலிருந்து காப்பாற்றும்" என்று கூறினான்; "இன்றைய தினம் அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து அவன் யாருக்கு அருள் புரிந்திருக்கிறானோ, அவரைத்தவிர காப்பாற்றுபவர் எவருமில்லை" என்று கூறினார்; (அச்சமயம்) அவ்விருவருக்குமிடையில் அலை குறுக்கிட்டது; உடனே, அவன் மூழ்கடிக்கப்பட்டவர்களில் ஒருவனாகிவிட்டான்.
11:44   وَقِيْلَ يٰۤاَرْضُ ابْلَعِىْ مَآءَكِ وَيٰسَمَآءُ اَقْلِعِىْ وَغِيْضَ الْمَآءُ وَقُضِىَ الْاَمْرُ وَاسْتَوَتْ عَلَى الْجُوْدِىِّ‌ وَقِيْلَ بُعْدًا لِّـلْقَوْمِ الظّٰلِمِيْنَ‏
11:44. பின்னர், "பூமியே! நீ உன் நீரை விழுங்கிவிடு; வானமே! (மழையை) நிறுத்திக்கொள்" என்று சொல்லப்பட்டது; நீரும் குறைக்கப்பட்டது: (இதற்குள் நிராகரித்தோர் நீரில் மூழ்கி அவர்கள்) காரியம் முடிக்கப்பட்டது; (கப்பல்) ஜூதி மலை மீது தங்கியது: "அநியாயக்காரர்களான சமுதாயத்திற்கு (இத்தகைய) அழிவுதான்" என்று கூறப்பட்டது.
13:4   وَ فِى الْاَرْضِ قِطَعٌ مُّتَجٰوِرٰتٌ وَّجَنّٰتٌ مِّنْ اَعْنَابٍ وَّزَرْعٌ وَّنَخِيْلٌ صِنْوَانٌ وَّغَيْرُ صِنْوَانٍ يُّسْقٰى بِمَآءٍ وَّاحِدٍ وَنُفَضِّلُ بَعْضَهَا عَلٰى بَعْضٍ فِى الْاُكُلِ‌ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّـقَوْمٍ يَّعْقِلُوْنَ‏
13:4. இன்னும், பூமியில் அருகருகே இணைந்தாற்போல் பல பகுதிகள் உள்ளன; இன்னும் திராட்சைத் தோட்டங்களும், விளைநிலங்களும், கிளைகள் உள்ளதும், கிளைகள் இல்லாததுமான பேரீச்சையும் உள்ளன; (இவையனைத்திற்கும்) ஒரே தண்ணீர் கொண்டுதான் பாய்ச்சப்படுகிறது; (எனினும்,) அவற்றில் சிலவற்றை வேறு சிலவற்றைவிட சுவையில் நாம் மேன்மையாக்கியிருக்கின்றோம்; நிச்சயமாக இவற்றில் விளங்குகின்ற சமூகத்தாருக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
13:14   لَهٗ دَعْوَةُ الْحَـقِّ‌ؕ وَالَّذِيْنَ يَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ لَا يَسْتَجِيْبُوْنَ لَهُمْ بِشَىْءٍ اِلَّا كَبَاسِطِ كَفَّيْهِ اِلَى الْمَآءِ لِيَبْلُغَ فَاهُ وَمَا هُوَ بِبَالِـغِهٖ‌ؕ وَمَا دُعَآءُ الْكٰفِرِيْنَ اِلَّا فِىْ ضَلٰلٍ‏
13:14. உண்மையான அழைப்பு (பிரார்த்தனை) அவனுக்கே உரியதாகும்; எவர்கள் அவனை அன்றி (மற்றவர்களை) அழைக்கின்றார்களோ, அவர்கள் இவர்களுக்கு எவ்விதப் பதிலும் தரமாட்டார்கள்; (அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்திப்போரின் உதாரணம்:) தண்ணீர் தன் வாய்க்கு(த் தானாக) வந்தடைய வேண்டுமென்று, தன் இரு கைகளையும் விரித்து ஏந்திக்கொண்டு இருப்பவனைப் போல் அல்லாமல் (வேறில்லை; இவன் அள்ளாது) அது அவனை (-அவனுடைய வாயை) அடைந்துவிடாது; இன்னும், நிராகரிப்பாளர்களின் பிரார்த்தனை வழிகேட்டில் இருப்பதே தவிர வேறில்லை.
13:17   اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَسَالَتْ اَوْدِيَةٌۢ بِقَدَرِهَا فَاحْتَمَلَ السَّيْلُ زَبَدًا رَّابِيًا‌ ؕ وَمِمَّا يُوْقِدُوْنَ عَلَيْهِ فِى النَّارِ ابْتِغَآءَ حِلْيَةٍ اَوْ مَتَاعٍ زَبَدٌ مِّثْلُهٗ‌ ؕ كَذٰلِكَ يَضْرِبُ اللّٰهُ الْحَـقَّ وَالْبَاطِلَ ؕ  فَاَمَّا الزَّبَدُ فَيَذْهَبُ جُفَآءً‌‌ ۚ وَاَمَّا مَا يَنْفَعُ النَّاسَ فَيَمْكُثُ فِى الْاَرْضِ‌ؕ كَذٰلِكَ يَضْرِبُ اللّٰهُ الْاَمْثَالَؕ‏
13:17. அவன் வானத்திலிருந்து தண்ணீரை இறக்கினான்; அப்பால் ஓடைகள் அவற்றின் அளவுக்குத் தக்கபடி (நீரைக்கொண்டு) ஓடுகின்றன. அவ்வெள்ளம் நுரையை மேலே சுமந்துசெல்கிறது. (இவ்வாறே) ஆபரணமோ அல்லது (வேறு) சாமான் செய்யவோ (உலோகங்களை) நெருப்பில் வைத்து அவர்கள் உருக்கும்போதும் அதைப்போல் நுரை உண்டாகின்றது. இவ்வாறு சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் அல்லாஹ் (உவமை) கூறுகிறான். எனவே, நுரை (பலனற்றதாக இருப்பதால்) அழிந்துபோய்விடுகிறது. ஆனால், மனிதர்களுக்குப் பலன் அளிக்கக்கூடியதோ, பூமியில் தங்கிவிடுகிறது. இவ்வாறே, அல்லாஹ் உவமைகளைக் கூறுகிறான்.
14:16   مِّنْ وَّرَآٮِٕهٖ جَهَـنَّمُ وَيُسْقٰى مِنْ مَّآءٍ صَدِيْدٍۙ‏
14:16. அவனுக்கு முன்னால் நரகம் இருக்கிறது; இன்னும், அவனுக்கு (துர்நாற்றமுள்ள) சீழ்நீரே குடிக்கக் கொடுக்கப்படும்.
15:22   ‌وَاَرْسَلْنَا الرِّيٰحَ لَوَاقِحَ فَاَنْزَلْنَا مِنَ السَّمَآءِ مَآءً فَاَسْقَيْنٰكُمُوْهُ‌ۚ وَمَاۤ اَنْتُمْ لَهٗ بِخٰزِنِيْنَ‏
15:22. இன்னும், காற்றுகளைச் சூல்கொண்ட மேகங்களாக நாமே அனுப்புகிறோம்; பின்னர், வானத்திலிருந்து நாம் மழைபொழிவித்து அதனை உங்களுக்கு நாம் புகட்டுகிறோம்; நீங்கள் அதனைச் சேகரித்து வைப்பவர்களும் இல்லை.
16:10   هُوَ الَّذِىْۤ اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً‌ لَّـكُمْ مِّنْهُ شَرَابٌ وَّمِنْهُ شَجَرٌ فِيْهِ تُسِيْمُوْنَ‏
16:10. அவனே வானத்திலிருந்து நீரைப் பொழியச் செய்கிறான்; அதிலிருந்து உங்களுக்கு அருந்தும் நீரும் இருக்கிறது; அதிலிருந்து (வளர்ந்த) மரங்களும் உள்ளன; அதில் (உங்கள் கால்நடைகளை) நீங்கள் மேய்க்கிறீர்கள்.
18:29   وَقُلِ الْحَـقُّ مِنْ رَّبِّكُمْ‌ فَمَنْ شَآءَ فَلْيُؤْمِنْ وَّمَنْ شَآءَ فَلْيَكْفُرْ ‌ۙاِنَّاۤ اَعْتَدْنَا لِلظّٰلِمِيْنَ نَارًا ۙ اَحَاطَ بِهِمْ سُرَادِقُهَا‌ ؕ وَاِنْ يَّسْتَغِيْثُوْا يُغَاثُوْا بِمَآءٍ كَالْمُهْلِ يَشْوِى الْوُجُوْهَ‌ؕ بِئْسَ الشَّرَابُ وَسَآءَتْ مُرْتَفَقًا‏
18:29. (நபியே!) இன்னும் நீர் கூறுவீராக! "இந்தச் சத்திய(வேத)ம் உங்கள் இறைவனிடமிருந்து (வந்து)ள்ளது; ஆகவே, விரும்புபவர் (அதனை) நம்பிக்கைகொள்ளட்டும்; விரும்புபவர் (அதனை) நிராகரிக்கட்டும்; அநியாயக்காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்; அதனுடைய சுவர்கள் அவர்களைச் சூழ்ந்துகொள்ளும்; அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள்; (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக்கருக்கிவிடும்; மிகக்கேடான பானமாகும் அது! இன்னும், இறங்கும் தலத்தில் அதுவே மிகக்கெட்டதாகும்."
18:41   اَوْ يُصْبِحَ مَآؤُهَا غَوْرًا فَلَنْ تَسْتَطِيْعَ لَهٗ طَلَبًا‏
18:41. "அல்லது, அதன் நீர் முழுவதும் உறிஞ்சப்பட்டதாகி - அதை நீ தேடிக் கண்டுபிடிக்க முடியாதபடியும் ஆகிவிடலாம்" (என்று கூறினான்).
21:30   اَوَلَمْ يَرَ الَّذِيْنَ كَفَرُوْۤا اَنَّ السَّمٰوٰتِ وَالْاَرْضَ كَانَـتَا رَتْقًا فَفَتَقْنٰهُمَا‌ ؕ وَجَعَلْنَا مِنَ الْمَآءِ كُلَّ شَىْءٍ حَىٍّ‌ ؕ اَفَلَا يُؤْمِنُوْنَ‏
21:30. நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் நிராகரிப்பாளர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லையா?
23:18   وَاَنْزَلْنَا مِنَ السَّمَآءِ مَآءًۢ بِقَدَرٍ فَاَسْكَنّٰهُ فِى الْاَرْضِ‌ۖ وَاِنَّا عَلٰى ذَهَابٍۢ بِهٖ لَقٰدِرُوْنَ‌ ۚ‏
23:18. மேலும், வானத்திலிருந்து நாம் அளவோடு (மழை) நீரை இறக்கி, அப்பால் அதனைப் பூமியில் தங்க வைக்கிறோம்; நிச்சயமாக அதனைப் போக்கிவிடவும் நாம் சக்தியுடையோம்.
24:39   وَالَّذِيْنَ كَفَرُوْۤا اَعْمَالُهُمْ كَسَرَابٍۢ بِقِيْعَةٍ يَّحْسَبُهُ الظَّمْاٰنُ مَآءً ؕ حَتّٰۤى اِذَا جَآءَهٗ لَمْ يَجِدْهُ شَيْــٴًـــا وَّ وَجَدَ اللّٰهَ عِنْدَهٗ فَوَفّٰٮهُ حِسَابَهٗ‌ ؕ وَاللّٰهُ سَرِيْعُ الْحِسَابِ ۙ‏
24:39. அன்றியும், எவர்கள் நிராகரித்தார்களோ அவர்களுடைய செயல்கள் பாலைவனத்தில் (தோற்றமளிக்கும்) கானல்நீரைப் போலாகும்; தாகித்தவன் அதைத் தண்ணீரென்றே எண்ணுகிறான்; இறுதியில், அதற்கு (அருகில்) அவன் வரும்பொழுது, அதனை எந்தப் பொருளாகவும் காணமாட்டான்; (மறுமையில் இது ஓரிறை நிராகரிப்போரின் நிலையாகும்; அங்கு) அதனிடத்தில் அவன் அல்லாஹ் (அவனுக்கு விதித்திருக்கும் முடி)வை(யே) காண்கின்றான்; (அதன்படி அல்லாஹ்) அவன் கணக்கைத் தீர்க்கிறான்; மேலும், அல்லாஹ் கணக்குத் தீர்ப்பதில் துரிதமானவன்.
25:48   وَهُوَ الَّذِىْۤ اَرْسَلَ الرِّيٰحَ بُشْرًۢا بَيْنَ يَدَىْ رَحْمَتِهٖ‌ۚ وَاَنْزَلْنَا مِنَ السَّمَآءِ مَآءً طَهُوْرًا ۙ‏
25:48. இன்னும், அவன்தான் தன்னுடைய கிருபை (மழை)க்கு முன்னே காற்றுகளை நன்மாராயமாக அனுப்பிவைக்கிறான்; மேலும், (நபியே!) நாமே வானத்திலிருந்து தூய்மையான நீரையும் இறக்கிவைக்கிறோம்.
25:54   وَهُوَ الَّذِىْ خَلَقَ مِنَ الْمَآءِ بَشَرًا فَجَعَلَهٗ نَسَبًا وَّ صِهْرًا‌ ؕ وَكَانَ رَبُّكَ قَدِيْرًا‏
25:54. இன்னும், அவன்தான் மனிதனை நீரிலிருந்து படைத்து, பின்னர் அவனுக்கு வம்சத்தையும், சம்பந்தங்களையும் ஏற்படுத்துகிறான்; மேலும், உம்முடைய இறைவன் பேராற்றலுள்ளவன்.
27:60   اَمَّنْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَاَنْزَلَ لَـكُمْ مِّنَ السَّمَآءِ مَآءً‌ ۚ فَاَنْۢبَتْنَا بِهٖ حَدَآٮِٕقَ ذَاتَ بَهْجَةٍ‌ ۚ مَا كَانَ لَـكُمْ اَنْ تُـنْۢبِتُوْا شَجَرَهَا ؕ ءَاِلٰـهٌ مَّعَ اللّٰهِ‌ ؕ بَلْ هُمْ قَوْمٌ يَّعْدِلُوْنَ ؕ‏
27:60. அன்றியும், வானங்களையும் பூமியையும் படைத்து, உங்களுக்கு வானத்திலிருந்து மழையை இறக்கிவைப்பவன் யார்? பின்னர், அதைக் கொண்டு செழிப்பான தோட்டங்களை நாம் முளைக்கச் செய்கிறோம்; அதன் மரங்களை முளைக்கச் செய்வது உங்களால் முடியாது; (அவ்வாறிருக்க) அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? இல்லை! ஆயினும், அவர்கள் (தம் கற்பனைத் தெய்வங்களை அல்லாஹ்வுக்கு) சமமாக்கும் கூட்டமாகவே இருக்கிறார்கள்.
28:23   وَلَمَّا وَرَدَ مَآءَ مَدْيَنَ وَجَدَ عَلَيْهِ اُمَّةً مِّنَ النَّاسِ يَسْقُوْنَ  وَوَجَدَ مِنْ دُوْنِهِمُ امْرَاَتَيْنِ تَذُوْدٰنِ‌ ۚ قَالَ مَا خَطْبُكُمَا‌ ؕ قَالَـتَا لَا نَسْقِىْ حَتّٰى يُصْدِرَ الرِّعَآءُ‌ ٚ وَاَبُوْنَا شَيْخٌ كَبِيْرٌ‏
28:23. இன்னும், அவர் மத்யன் நாட்டுத் தண்ணீர்(த்துறையின்) அருகே வந்தபோது அவ்விடத்தில் மக்களில் ஒரு கூட்டத்தினர் (தம் கால்நடைகளுக்குத்) தண்ணீர் புகட்டிக்கொண்டிருந்ததைக் கண்டார்; அவர்களைத் தவிர, பெண்கள் இருவர் (தங்கள் ஆடுகளுக்குத் தண்ணீர் புகட்டாது) தடுத்துநிறுத்தி வைத்துக் கொண்டிருப்பதைக் கண்டார்: "உங்களிருவரின் விஷயம் என்ன?" என்று (அப்பெண்களிடம்) அவர் கேட்டார்; அதற்கு, "இம்மேய்ப்பவர்கள் (தண்ணீர் புகட்டிவிட்டு) விலகும்வரை நாங்கள் (எங்கள் ஆடுகளுக்குத்) தண்ணீர் புகட்டமுடியாது; மேலும், எங்கள் தந்தை மிகவும் வயது முதிர்ந்தவர்" என்று அவ்விருவரும் கூறினார்கள்.
29:63   وَلَٮِٕنْ سَاَلْتَهُمْ مَّنْ نَّزَّلَ مِنَ السَّمَآءِ مَآءً فَاَحْيَا بِهِ الْاَرْضَ مِنْۢ بَعْدِ مَوْتِهَا لَيَقُوْلُنَّ اللّٰهُ‌ؕ قُلِ الْحَمْدُ لِلّٰهِ‌ؕ بَلْ اَكْثَرُهُمْ لَا يَعْقِلُوْنَ‏
29:63. இன்னும் அவர்களிடம் "வானத்திலிருந்து நீரை இறக்கி, பிறகு அதனைக்கொண்டு இப்பூமியை - அது (காய்ந்து) செத்தபின் உயிர்ப்பிப்பவன் யார்?" என்று நீர் கேட்பீராகில், "அல்லாஹ்" என்றே இவர்கள் திட்டமாகக் கூறுவார்கள்; (அதற்கு) "புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது" என்று நீர் கூறுவீராக! எனினும், இவர்களில் பெரும்பாலோர் விளங்கமாட்டார்கள்.
41:39   وَمِنْ اٰيٰتِهٖۤ اَنَّكَ تَرَى الْاَرْضَ خَاشِعَةً فَاِذَاۤ اَنْزَلْنَا عَلَيْهَا الْمَآءَ اهْتَزَّتْ وَرَبَتْ‌ؕ اِنَّ الَّذِىْۤ اَحْيَاهَا لَمُحْىِ الْمَوْتٰى ؕ اِنَّهٗ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏
41:39. பூமியானது வறண்டுகிடப்பதை நீர் பார்ப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; அதன் மீது நாம் மழையைப் பொழியச் செய்தால், அது (புற்பூண்டுகள் கிளம்பிப்) பசுமையாகி வளர்கிறது; அ(ந்த வறண்ட நிலத்)தை உயிர்ப்பித்தவனே, நிச்சயமாக இறந்தவர்களையும் உயிர்ப்பிக்கிறான்; நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன்.
47:15   مَثَلُ الْجَـنَّةِ الَّتِىْ وُعِدَ الْمُتَّقُوْنَ‌ؕ فِيْهَاۤ اَنْهٰرٌ مِّنْ مَّآءٍ غَيْرِ اٰسِنٍ‌ ۚ وَاَنْهٰرٌ مِّنْ لَّبَنٍ لَّمْ يَتَغَيَّرْ طَعْمُهٗ ‌ۚ وَاَنْهٰرٌ مِّنْ خَمْرٍ لَّذَّةٍ لِّلشّٰرِبِيْنَ ۚ وَاَنْهٰرٌ مِّنْ عَسَلٍ مُّصَفًّى‌ ؕ وَلَهُمْ فِيْهَا مِنْ كُلِّ الثَّمَرٰتِ وَمَغْفِرَةٌ مِّنْ رَّبِّهِمْ‌ؕ كَمَنْ هُوَ خَالِدٌ فِى النَّارِ وَسُقُوْا مَآءً حَمِيْمًا فَقَطَّعَ اَمْعَآءَهُمْ‏
47:15. இறையச்சமுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது: அதில் மாறுபடாத (தெளிந்த) நீரைக்கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மதுரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன; இன்னும், அதில் அவர்களுக்கு எல்லாவிதமான கனிவகைகளும், தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தகையோர்) நரகத்தில் எவன் நிரந்தரமாகத் தங்கியிருந்து, அவர்கள் கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) அவர்களுடைய குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா?
50:9   وَنَزَّلْنَا مِنَ السَّمَآءِ مَآءً مُّبٰـرَكًا فَاَنْۢبَـتْـنَا بِهٖ جَنّٰتٍ وَّحَبَّ الْحَصِيْدِ ۙ‏
50:9. அன்றியும், வானத்திலிருந்து மிக்க பாக்கியமுள்ள தண்ணீரை (மழையை) நாம் இறக்கிவைத்து, அதைக்கொண்டு தோட்டங்களையும், அறுவடை செய்யப்படும் தானியங்களையும் முளைப்பிக்கிறோம்.
54:12   وَّفَجَّرْنَا الْاَرْضَ عُيُوْنًا فَالْتَقَى الْمَآءُ عَلٰٓى اَمْرٍ قَدْ قُدِرَ‌ۚ‏
54:12. மேலும், பூமியை ஊற்றுகளாகப் பொங்க வைத்தோம்; இவ்வாறாக, குறிப்பிட்ட ஓர் அளவின்படி (இரு வகை) நீரும் கலந்(து பெருக்கெடுத்)தது.
54:28   وَنَبِّئْهُمْ اَنَّ الْمَآءَ قِسْمَةٌ ۢ بَيْنَهُمْ‌ۚ كُلُّ شِرْبٍ مُّحْتَضَرٌ‏
54:28. (அவ்வூரிலுள்ள கிணற்றின்) தண்ணீர் அவர்களுக்கு(ம் அந்த ஒட்டகத்திற்கும்) இடையில் பங்கிடப்பட்டுள்ளது: "ஒவ்வொருவரும் முறைப்படி (தண்ணீர்) குடிப்பதற்கு வரலாம்" என்று அவர்களுக்கு அறிவித்துவிடும்.
56:68   اَفَرَءَيْتُمُ الْمَآءَ الَّذِىْ تَشْرَبُوْنَؕ‏
56:68. அன்றியும், நீங்கள் குடிக்கும் நீரைக் கவனித்தீர்களா?
67:30   قُلْ اَرَءَيْتُمْ اِنْ اَصْبَحَ مَآؤُكُمْ غَوْرًا فَمَنْ يَّاْتِيْكُمْ بِمَآءٍ مَّعِيْنٍ‏
67:30. (நபியே!) நீர் கூறும்: "உங்களின் தண்ணீர் பூமியினுள் (உறிஞ்சப்பட்டுப்) போய்விட்டால், அப்பொழுது ஓடும் நீரை உங்களுக்குக் கொண்டு வருபவன் யார்? என்பதைக் கவனித்தீர்களா? (என்று எனக்கு அறிவியுங்கள்)."
69:11   اِنَّا لَمَّا طَغَا الْمَآءُ حَمَلْنٰكُمْ فِى الْجَارِيَةِ ۙ‏
69:11. தண்ணீர் பொங்கியபோது நிச்சயமாக நாம் உங்களைக் கப்பலில் ஏற்றி(க் காப்பாற்றி)னோம்.
72:16   وَّاَنْ لَّوِ اسْتَقَامُوْا عَلَى الطَّرِيْقَةِ لَاَسْقَيْنٰهُمْ مَّآءً غَدَقًا ۙ‏
72:16. (மானிடர்களோ, ஜின்களோ) அவர்கள் (நேர்) வழியின் மீது நிலைத்து நின்றால், நிச்சயமாக நாம் அவர்களுக்கு மிக அதிகமாகத் தண்ணீர் புகட்டுவோம்.
77:27   وَّجَعَلْنَا فِيْهَا رَوَاسِىَ شٰمِخٰتٍ وَّ اَسْقَيْنٰكُمْ مَّآءً فُرَاتًا ؕ‏
77:27. அன்றியும், அதில் உயர்ந்த மலைகளையும் நாம் ஆக்கினோம்; இனிமையான நீரையும் நாம் உங்களுக்குப் புகட்டினோம்.
79:31   اَخْرَجَ مِنْهَا مَآءَهَا وَمَرْعٰٮهَا‏
79:31. அதிலிருந்து அதன் நீரையும், அதன் மீதுள்ள (பிராணிகளுக்கான) மேய்ச்சல் பொருள்களையும் அவனே வெளியாக்கினான்.