தண்ணீர் புகட்டுதல்
9:19 اَجَعَلْتُمْ سِقَايَةَ الْحَـآجِّ وَعِمَارَةَ الْمَسْجِدِ الْحَـرَامِ كَمَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَجَاهَدَ فِىْ سَبِيْلِ اللّٰهِ ؕ لَا يَسْتَوٗنَ عِنْدَ اللّٰهِ ؕ وَ اللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَۘ
9:19. (நம்பிக்கைக் கொள்ளாத நிலையில் வெறுமனே) ஹாஜிகளுக்குத் தண்ணீர் புகட்டுவதையும், (கஃபா என்னும்) மஸ்ஜிதுல்ஹராமை நிர்வாகம் செய்வதையும், அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டு அல்லாஹ்வின் பாதையில் போரிட்டவரைப் போன்று நீங்கள் ஆக்கிக்கொண்டீர்களா? அல்லாஹ்விடத்தில் இ(வ்விரு கூட்டத்த)வர்கள் சமமாக மாட்டார்கள்: அநியாயக்கார சமூகத்தாரை அல்லாஹ் நேர் வழியில் செலுத்த மாட்டான்.
28:23 وَلَمَّا وَرَدَ مَآءَ مَدْيَنَ وَجَدَ عَلَيْهِ اُمَّةً مِّنَ النَّاسِ يَسْقُوْنَ وَوَجَدَ مِنْ دُوْنِهِمُ امْرَاَتَيْنِ تَذُوْدٰنِ ۚ قَالَ مَا خَطْبُكُمَا ؕ قَالَـتَا لَا نَسْقِىْ حَتّٰى يُصْدِرَ الرِّعَآءُ ٚ وَاَبُوْنَا شَيْخٌ كَبِيْرٌ
28:23. இன்னும், அவர் மத்யன் நாட்டுத் தண்ணீர்(த்துறையின்) அருகே வந்தபோது அவ்விடத்தில் மக்களில் ஒரு கூட்டத்தினர் (தம் கால்நடைகளுக்குத்) தண்ணீர் புகட்டிக்கொண்டிருந்ததைக் கண்டார்; அவர்களைத் தவிர, பெண்கள் இருவர் (தங்கள் ஆடுகளுக்குத் தண்ணீர் புகட்டாது) தடுத்துநிறுத்தி வைத்துக் கொண்டிருப்பதைக் கண்டார்: "உங்களிருவரின் விஷயம் என்ன?" என்று (அப்பெண்களிடம்) அவர் கேட்டார்; அதற்கு, "இம்மேய்ப்பவர்கள் (தண்ணீர் புகட்டிவிட்டு) விலகும்வரை நாங்கள் (எங்கள் ஆடுகளுக்குத்) தண்ணீர் புகட்டமுடியாது; மேலும், எங்கள் தந்தை மிகவும் வயது முதிர்ந்தவர்" என்று அவ்விருவரும் கூறினார்கள்.
28:24 فَسَقٰى لَهُمَا ثُمَّ تَوَلّٰٓى اِلَى الظِّلِّ فَقَالَ رَبِّ اِنِّىْ لِمَاۤ اَنْزَلْتَ اِلَىَّ مِنْ خَيْرٍ فَقِيْرٌ
28:24. ஆகையால், அவ்விருவருக்குமாக அவர் (ஆட்டு மந்தைக்குத்) தண்ணீர் புகட்டினார்; பிறகு, அவர் (ஒரு மர) நிழலில் ஒதுங்கி: "என் இறைவா! நீ எனக்கு எந்த நன்மையை இறக்கினாலும் நிச்சயமாக நான் தேவையுள்ளவனாக இருக்கிறேன்" என்று கூறினார்.
28:25 فَجَآءَتْهُ اِحْدٰٮہُمَا تَمْشِىْ عَلَى اسْتِحْيَآءٍ قَالَتْ اِنَّ اَبِىْ يَدْعُوْكَ لِيَجْزِيَكَ اَجْرَ مَا سَقَيْتَ لَـنَا ؕ فَلَمَّا جَآءَهٗ وَقَصَّ عَلَيْهِ الْقَصَصَ ۙ قَالَ لَا تَخَفْ نَجَوْتَ مِنَ الْقَوْمِ الظّٰلِمِيْنَ
28:25. (சிறிது நேரத்திற்குப்) பிறகு அவ்விருவரில் ஒருத்தி நாணத்துடன் நடந்து அவரிடம் வந்து, "எங்களுக்காக நீங்கள் தண்ணீர் புகட்டியதற்கான கூலியை உங்களுக்கு வழங்குவதற்காக நிச்சயமாக என் தந்தை உங்களை அழைக்கிறார்" என்று கூறினாள்; இவ்வாறாக (மூஸா) அவரிடம் வந்தபோது, தம் வரலாற்றை எடுத்துச் சொன்னார்; அதற்கவர், "பயப்படாதீர்! அக்கிரமக்கார சமூகத்தாரைவிட்டும் நீர் தப்பித்துவிட்டீர்" என்று கூறினார்.
72:16 وَّاَنْ لَّوِ اسْتَقَامُوْا عَلَى الطَّرِيْقَةِ لَاَسْقَيْنٰهُمْ مَّآءً غَدَقًا ۙ
72:16. (மானிடர்களோ, ஜின்களோ) அவர்கள் (நேர்) வழியின் மீது நிலைத்து நின்றால், நிச்சயமாக நாம் அவர்களுக்கு மிக அதிகமாகத் தண்ணீர் புகட்டுவோம்.