தாய்
2:233 وَالْوَالِدٰتُ يُرْضِعْنَ اَوْلَادَهُنَّ حَوْلَيْنِ كَامِلَيْنِ لِمَنْ اَرَادَ اَنْ يُّتِمَّ الرَّضَاعَةَ ؕ وَعَلَى الْمَوْلُوْدِ لَهٗ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوْفِؕ لَا تُكَلَّفُ نَفْسٌ اِلَّا وُسْعَهَا ۚ لَا تُضَآرَّ وَالِدَةٌ ۢ بِوَلَدِهَا وَلَا مَوْلُوْدٌ لَّهٗ بِوَلَدِهٖ وَعَلَى الْوَارِثِ مِثْلُ ذٰ لِكَ ۚ فَاِنْ اَرَادَا فِصَالًا عَنْ تَرَاضٍ مِّنْهُمَا وَتَشَاوُرٍ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا ؕ وَاِنْ اَرَدْتُّمْ اَنْ تَسْتَرْضِعُوْٓا اَوْلَادَكُمْ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ اِذَا سَلَّمْتُمْ مَّآ اٰتَيْتُمْ بِالْمَعْرُوْفِؕ وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ
2:233. (தங்களுடைய குழந்தைகளுக்கு, விவாகரத்து சொல்லப்பட்ட தம்மனைவியர்களைக் கொண்டே) பாலூட்டுவதைப் பூர்த்தியாக்க (கணவர்) விரும்பினால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிறைவான இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதல் வேண்டும்; (பாலூட்டும் தாய்மார்களாகிய) அவர்களுக்கு உணவும், அவர்களுக்கு உடையும் முறைப்படி கொடுத்துவருவது குழந்தையுடைய தகப்பன் மீது கடமையாகும்; எந்த ஓர் ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் (எதுவும் செய்ய) சிரமம் கொடுக்கப்படமாட்டாது; தாய் தன் குழந்தையின் காரணமாகவோ இன்னும், தந்தை தன் குழந்தையின் காரணமாகவோ துன்புறுத்தப்பட மாட்டார்; (குழந்தையின் தந்தை இறந்துவிட்டால் அவருடைய) வாரிசின் மீதும் அதேபோன்று (கடமை) இருக்கிறது; இன்னும், (தாய், தந்தையர்) இருவரும் பரஸ்பரம் இணங்கி, ஆலோசித்து பாலூட்டலை நிறுத்த விரும்பினால், அது அவர்கள் இருவர் மீதும் குற்றமில்லை; மேலும், உங்களுடைய குழந்தைகளுக்கு (செவிலித்தாயைக் கொண்டு பாலூட்ட விரும்பினால்) நீங்கள் கொடுக்க வேண்டியதை முறைப்படி ஒப்படைத்துவிட்டால் உங்கள் மீது குற்றமாகாது; அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதைப் பார்ப்பவனாக இருக்கிறான் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
2:247 وَقَالَ لَهُمْ نَبِيُّهُمْ اِنَّ اللّٰهَ قَدْ بَعَثَ لَـکُمْ طَالُوْتَ مَلِكًا ؕ قَالُوْٓا اَنّٰى يَكُوْنُ لَهُ الْمُلْكُ عَلَيْنَا وَنَحْنُ اَحَقُّ بِالْمُلْكِ مِنْهُ وَلَمْ يُؤْتَ سَعَةً مِّنَ الْمَالِؕ قَالَ اِنَّ اللّٰهَ اصْطَفٰٮهُ عَلَيْکُمْ وَزَادَهٗ بَسْطَةً فِى الْعِلْمِ وَ الْجِسْمِؕ وَاللّٰهُ يُؤْتِىْ مُلْکَهٗ مَنْ يَّشَآءُ ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ
2:247. அவர்களுடைய நபி அவர்களிடம், "நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசனாக அனுப்பியிருக்கிறான்" என்று கூறினார்; (அதற்கு) அவர்கள், "எங்கள் மீது அவருக்கு எவ்வாறு ஆட்சியுரிமை ஏற்படும்? ஆட்சிக்கு அவரைவிட நாங்கள்தாம் தகுதியுடையவர்கள்; மேலும், அவருக்குத் திரண்ட செல்வமும் கொடுக்கப்படவில்லையே!" என்று கூறினார்கள்; அதற்கவர், "நிச்சயமாக அல்லாஹ் உங்களைவிட (மேலாக) அவரையே தேர்ந்தெடுத்திருக்கின்றான்; இன்னும் அறிவிலும், உடலி(ன் வலிமையி)லும் விசாலத்தை அதிகமாக்கியுள்ளான்; அல்லாஹ் தான் நாடியோருக்குத் தன் (அரச) அதிகாரத்தையும் வழங்குவான்; இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன், (யாவற்றையும்) நன்கறிபவன்" என்று கூறினார்.
2:249 فَلَمَّا فَصَلَ طَالُوْتُ بِالْجُـنُوْدِۙ قَالَ اِنَّ اللّٰهَ مُبْتَلِيْکُمْ بِنَهَرٍۚ فَمَنْ شَرِبَ مِنْهُ فَلَيْسَ مِنِّىْۚ وَمَنْ لَّمْ يَطْعَمْهُ فَاِنَّهٗ مِنِّىْٓ اِلَّا مَنِ اغْتَرَفَ غُرْفَةً ۢ بِيَدِهٖۚ فَشَرِبُوْا مِنْهُ اِلَّا قَلِيْلًا مِّنْهُمْؕ فَلَمَّا جَاوَزَهٗ هُوَ وَالَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ ۙ قَالُوْا لَا طَاقَةَ لَنَا الْيَوْمَ بِجَالُوْتَ وَجُنُوْدِهٖؕ قَالَ الَّذِيْنَ يَظُنُّوْنَ اَنَّهُمْ مُّلٰقُوا اللّٰهِۙ کَمْ مِّنْ فِئَةٍ قَلِيْلَةٍ غَلَبَتْ فِئَةً کَثِيْرَةً ۢ بِاِذْنِ اللّٰهِؕ وَاللّٰهُ مَعَ الصّٰبِرِيْنَ
2:249. பின்னர், தாலூத் படைகளுடன் புறப்பட்டபோது அவர், "நிச்சயமாக அல்லாஹ் உங்களை (வழியில்) ஓர் ஆற்றைக்கொண்டு சோதிப்பான்; யார் அதிலிருந்து (நீர்) அருந்துகின்றாரோ, அவர் என்னைச் சேர்ந்தவரல்லர்; தம் கரத்தினால் ஒரு சிறங்கை(த் தண்ணீரை) அள்ளியவரைத் தவிர; யார் அதிலிருந்து (அதிகமாக) நீர் அருந்தவில்லையோ நிச்சயமாக அவர் என்னைச் சார்ந்தவர்" என்று கூறினார்; அவர்களில் சிலரைத் தவிர (பெரும்பாலோர்) அதிலிருந்து (அதிகமாக நீர்) அருந்தினார்கள்; பின்னர், அவரும் அவருடன் நம்பிக்கை கொண்டோரும் அதனைக் கடந்ததும், (அதிகமாக நீர் அருந்தியோர்) "ஜாலூத்துடனும், அவன் படைகளுடனும் (போர் செய்வதற்கு) எங்களுக்கு வலுவில்லை" என்று கூறிவிட்டனர்; ஆனால், நாம் நிச்சயமாக அல்லாஹ்வை சந்திப்போம் என்று உறுதிகொண்டிருந்தோர், "எத்தனையோ சிறுகூட்டத்தினர், பெரும் கூட்டத்தினரை அல்லாஹ்வின் அனுமதிகொண்டு வென்றிருக்கிறார்கள்; மேலும், அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்" என்று கூறினார்கள்.
4:11 يُوْصِيْكُمُ اللّٰهُ فِىْۤ اَوْلَادِكُمْ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْاُنْثَيَيْنِ ۚ فَاِنْ كُنَّ نِسَآءً فَوْقَ اثْنَتَيْنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَ ۚ وَاِنْ كَانَتْ وَاحِدَةً فَلَهَا النِّصْفُ ؕ وَلِاَ بَوَيْهِ لِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُ مِمَّا تَرَكَ اِنْ كَانَ لَهٗ وَلَدٌ ۚ فَاِنْ لَّمْ يَكُنْ لَّهٗ وَلَدٌ وَّوَرِثَهٗۤ اَبَوٰهُ فَلِاُمِّهِ الثُّلُثُ ؕ فَاِنْ كَانَ لَهٗۤ اِخْوَةٌ فَلِاُمِّهِ السُّدُسُ مِنْۢ بَعْدِ وَصِيَّةٍ يُّوْصِىْ بِهَاۤ اَوْ دَيْنٍ ؕ اٰبَآؤُكُمْ وَاَبْنَآؤُكُمْ ۚ لَا تَدْرُوْنَ اَيُّهُمْ اَقْرَبُ لَـكُمْ نَفْعًا ؕ فَرِيْضَةً مِّنَ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلِيْمًا حَكِيْمًا
4:11. உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு, இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்குபோன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான்; அவர்கள் (இரு பெண்களாக அல்லது) இரண்டுக்கு மேற்பட்ட பெண்களாக இருந்தால் (இறந்த) அவர் விட்டுச்சென்றதிலிருந்து மூன்றில் இரண்டு (பாகம்) அவர்களுக்கு உண்டு; ஒரே பெண்ணாக இருந்தால் அவளுக்கு பாதி (சொத்து) உண்டு; (இறந்த) அவருக்கு குழந்தைகள் இருக்குமானால் விட்டுச்சென்றதில் ஆறில் ஒரு பாகம் (அவரது) பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு; ஆனால், அவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவருடைய தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (மீதி தந்தைக்கு உரியதாகும்); இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால், அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம்தான் (மீதி தந்தைக்குச் சேரும்; இவ்வாறு பிரித்துக்கொடுப்பது) அவர் செய்துள்ள மரண சாசனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான்; உங்கள் தந்தையரோ, இன்னும் உங்கள் குழந்தைகளோ இவர்களில் யார் உங்களுக்குப் பயனளிப்பதில் மிக நெருக்கமாக இருப்பவர்கள் என்று நீங்கள் அறியமாட்டீர்கள்; (ஆகையினால், இந்த பாகப்பிரிவினை) அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளையாகும்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும், மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கிறான்.
4:23 حُرِّمَتْ عَلَيْكُمْ اُمَّهٰتُكُمْ وَبَنٰتُكُمْ وَاَخَوٰتُكُمْ وَعَمّٰتُكُمْ وَخٰلٰتُكُمْ وَبَنٰتُ الْاَخِ وَبَنٰتُ الْاُخْتِ وَاُمَّهٰتُكُمُ الّٰتِىْۤ اَرْضَعْنَكُمْ وَاَخَوٰتُكُمْ مِّنَ الرَّضَاعَةِ وَ اُمَّهٰتُ نِسَآٮِٕكُمْ وَرَبَآٮِٕبُكُمُ الّٰتِىْ فِىْ حُجُوْرِكُمْ مِّنْ نِّسَآٮِٕكُمُ الّٰتِىْ دَخَلْتُمْ بِهِنَّ فَاِنْ لَّمْ تَكُوْنُوْا دَخَلْتُمْ بِهِنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ وَحَلَاۤٮِٕلُ اَبْنَآٮِٕكُمُ الَّذِيْنَ مِنْ اَصْلَابِكُمْۙ وَاَنْ تَجْمَعُوْا بَيْنَ الْاُخْتَيْنِ اِلَّا مَا قَدْ سَلَفَؕ اِنَّ اللّٰهَ كَانَ غَفُوْرًا رَّحِيْمًا ۙ
4:23. உங்களுக்கு (மணமுடிக்க) விலக்கப்பட்டவர்கள்: உங்கள் தாய்மார்களும், உங்கள் புதல்வியரும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தந்தையின் சகோதரிகளும், உங்கள் தாயின் சகோதரிகளும், உங்கள் சகோதரனின் புதல்வியரும், உங்கள் சகோதரியின் புதல்வியரும், உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும், உங்கள் பால்குடி சகோதரிகளும், உங்கள் மனைவியரின் தாய்மார்களும் ஆவார்கள். இன்னும், நீங்கள் எவர்களுடன் உடலுறவு கொண்டீர்களோ அத்தகைய உங்கள் மனைவியரிலிருந்து (முதற்கணவனுக்குப் பிறந்து) உங்கள் மடிகளில் (பாதுகாப்பில்) இருந்துவரும் உங்களுடைய (மனைவியரின்) புதல்விகளும் (உங்களுக்கு விலக்கப்பட்டவர்கள்). ஆனால், அவர்களுடன் நீங்கள் உடலுறவு கொள்ளவில்லையானால் (அவர்களை விலக்கி முந்திய கணவனால் பிறந்த பெண்ணை விவாகம் செய்துகொள்வதில்) உங்கள் மீது குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த குமாரர்களின் மனைவியரையும் (நீங்கள் விவாகம் செய்து கொள்ளக்கூடாது). இரண்டு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்று சேர்ப்பது (விலக்கப்பட்டது) - இதற்குமுன் நடந்து விட்டவை தவிர. (அவை அறியாமையால் நடந்து விட்டமையால்), நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனுமாக இருக்கிறான்.
4:33 وَلِكُلٍّ جَعَلْنَا مَوَالِىَ مِمَّا تَرَكَ الْوَالِدٰنِ وَالْاَقْرَبُوْنَ ؕ وَالَّذِيْنَ عَقَدَتْ اَيْمَانُكُمْ فَاٰ تُوْهُمْ نَصِيْبَهُمْؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلٰى كُلِّ شَىْءٍ شَهِيْدًا
4:33. இன்னும், பெற்றோரும், உறவினர்களும் விட்டுச் செல்கின்ற (செல்வத்)திலிருந்து (விகிதப்படி அதையடையும்) வாரிசுகளை, ஒவ்வொருவருக்கும், நாம் ஏற்படுத்தியுள்ளோம்; அவ்வாறே, நீங்கள் உடன்படிக்கை செய்துகொண்டோருக்கும் அவர்களுடைய பாகத்தை அவர்களுக்குக் கொடுத்துவிடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாளனாக இருக்கின்றான்.
4:36 وَاعْبُدُوا اللّٰهَ وَلَا تُشْرِكُوْا بِهٖ شَيْــٴًـــا ؕ وَّبِالْوَالِدَيْنِ اِحْسَانًا وَّبِذِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَ الْمَسٰكِيْنِ وَالْجَـارِ ذِى الْقُرْبٰى وَالْجَـارِ الْجُـنُبِ وَالصَّاحِبِ بِالْجَـنْۢبِ وَابْنِ السَّبِيْلِ ۙ وَمَا مَلَـكَتْ اَيْمَانُكُمْ ؕ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُوْرَا ۙ
4:36. மேலும், அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனுடன் எதனையும் இணையாக்காதீர்கள்; மேலும், தாய் தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டைவீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையவனாக, பெருமை உடையவனாக இருப்பவனை நேசிப்பதில்லை.
12:99 فَلَمَّا دَخَلُوْا عَلٰى يُوْسُفَ اٰوٰٓى اِلَيْهِ اَبَوَيْهِ وَقَالَ ادْخُلُوْا مِصْرَ اِنْ شَآءَ اللّٰهُ اٰمِنِيْنَؕ
12:99. (பின்னர் குடும்பத்துடன்) அவர்கள் யூஸுஃபிடம் வந்தபோது, அவர் தம் தாய், தந்தையரை (கண்ணியத்துடன் வரவேற்றுத்) தம்முடன் வைத்துக்கொண்டார்; இன்னும், "அல்லாஹ் நாடினால் நீங்கள் எகிப்துக்குள் அச்சமற்றவர்களாகப் பிரவேசியுங்கள்" என்றும் கூறினார்.
12:100 وَرَفَعَ اَبَوَيْهِ عَلَى الْعَرْشِ وَخَرُّوْا لَهٗ سُجَّدًاۚ وَقَالَ يٰۤاَبَتِ هٰذَا تَاْوِيْلُ رُءْيَاىَ مِنْ قَبْلُقَدْ جَعَلَهَا رَبِّىْ حَقًّاؕ وَقَدْ اَحْسَنَ بِىْۤ اِذْ اَخْرَجَنِىْ مِنَ السِّجْنِ وَجَآءَ بِكُمْ مِّنَ الْبَدْوِ مِنْۢ بَعْدِ اَنْ نَّزَغَ الشَّيْطٰنُ بَيْنِىْ وَبَيْنَ اِخْوَتِىْؕ اِنَّ رَبِّىْ لَطِيْفٌ لِّمَا يَشَآءُؕ اِنَّهٗ هُوَ الْعَلِيْمُ الْحَكِيْمُ
12:100. இன்னும், அவர் தம் தாய், தந்தையரைச் சிம்மாசனத்தின்மீது உயர்த்தி (அமர்த்தி)னார்; அவர்கள் (எல்லோரும் அக்காலத்திய முறைப்படி) அவருக்கு (மரியாதை செலுத்தியவர்களாகச்) சிரம்பணிந்து வீழ்ந்தனர்: அப்போது அவர் (தம் தந்தையை நோக்கி), "என் தந்தையே! இதுதான் என்னுடைய முந்தைய கனவின் விளக்கமாகும்; அதனை என் இறைவன் உண்மையாக்கிவிட்டான்: மேலும், அவன் என்னைச் சிறைச்சாலையிலிருந்து வெளியாக்கியதுடன், எனக்கும் என் சகோதரர்களுக்குமிடையில் ஷைத்தான் பிரிவினையை உண்டு பண்ணிவிட்ட பின்னர், உங்களைக் கிராமத்திலிருந்து கொண்டுவந்ததன் மூலம், அவன் நிச்சயமாக எனக்குப் பேருபகாரம் செய்துள்ளான்; நிச்சயமாக என் இறைவன், தான் நாடியவற்றை மிக நுட்பமாகச் செய்கிறவன்; நிச்சயமாக அவன் (யாவற்றையும்) நன்கறிந்தவன்; மிக்க ஞானமுள்ளவன்" என்று கூறினார்.
18:80 وَاَمَّا الْغُلٰمُ فَكَانَ اَبَوٰهُ مُؤْمِنَيْنِ فَخَشِيْنَاۤ اَنْ يُّرْهِقَهُمَا طُغْيَانًا وَّكُفْرًاۚ
18:80. "(அடுத்து) அந்தச் சிறுவன் - அவனுடைய தாய், தந்தையர் இருவரும் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள்; அவன் (வாலிபனாகி) அவ்விருவரையும் வழிகேட்டிலும், நிராகரிப்பிலும் சேர்த்துவிடுவான் என்று நாம் பயந்தோம்."
24:61 لَـيْسَ عَلَى الْاَعْمٰى حَرَجٌ وَّلَا عَلَى الْاَعْرَجِ حَرَجٌ وَّلَا عَلَى الْمَرِيْضِ حَرَجٌ وَّلَا عَلٰٓى اَنْفُسِكُمْ اَنْ تَاْكُلُوْا مِنْۢ بُيُوْتِكُمْ اَوْ بُيُوْتِ اٰبَآٮِٕكُمْ اَوْ بُيُوْتِ اُمَّهٰتِكُمْ اَوْ بُيُوْتِ اِخْوَانِكُمْ اَوْ بُيُوْتِ اَخَوٰتِكُمْ اَوْ بُيُوْتِ اَعْمَامِكُمْ اَوْ بُيُوْتِ عَمّٰتِكُمْ اَوْ بُيُوْتِ اَخْوَالِكُمْ اَوْ بُيُوْتِ خٰلٰتِكُمْ اَوْ مَا مَلَكْتُمْ مَّفَاتِحَهٗۤ اَوْ صَدِيْقِكُمْؕ لَـيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ اَنْ تَاْكُلُوْا جَمِيْعًا اَوْ اَشْتَاتًا ؕ فَاِذَا دَخَلْتُمْ بُيُوْتًا فَسَلِّمُوْا عَلٰٓى اَنْفُسِكُمْ تَحِيَّةً مِّنْ عِنْدِ اللّٰهِ مُبٰرَكَةً طَيِّبَةً ؕ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمُ الْاٰيٰتِ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ
24:61. (நம்பிக்கையாளர்களே! உங்களுடன் சேர்ந்து உணவருந்துவதில்) குருடர் மீதும் குற்றமில்லை, முடவர் மீதும் குற்றமில்லை, நோயாளியின் மீதும் குற்றமில்லை; நீங்கள் உங்கள் சொந்த வீடுகளிலோ, அல்லது உங்கள் தந்தைமார் வீடுகளிலோ, அல்லது தாய்மார் வீடுகளிலோ, அல்லது சகோதரர்கள் வீடுகளிலோ, அல்லது சகோதரிகள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தந்தையின் சகோதரர்கள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தந்தையின் சகோதரிகள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தாயின் சகோதரர்கள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தாயின் சகோதரிகள் வீடுகளிலோ, அல்லது எந்த வீட்டினுடைய சாவிகள் உங்கள் வசம் இருக்கிறதோ (அதிலும்), அல்லது உங்கள் தோழரிடத்திலோ நீங்கள் உண்பது உங்கள் மீது குற்றமில்லை; நீங்கள் சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ புசிப்பது உங்கள் மீது குற்றமாகாது; ஆனால், நீங்கள் எந்த வீட்டில் பிரவேசித்தாலும் அல்லாஹ்விடமிருந்துள்ள பாக்கியமிக்க பரிசுத்தமான காணிக்கையாக (அஸ்ஸலாமு அலைக்கும் என்று) நீங்கள் உங்களுக்குள் முகமன் கூறிக்கொள்ளுங்கள்: நீங்கள் விளங்கிக்கொள்வதற்காக, இவ்வாறு அல்லாஹ் உங்களுக்கு(த் தன்) வசனங்களை விவரிக்கிறான்.
29:8 وَوَصَّيْنَا الْاِنْسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا ؕ وَاِنْ جَاهَدٰكَ لِتُشْرِكَ بِىْ مَا لَـيْسَ لَـكَ بِهٖ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا ؕ اِلَىَّ مَرْجِعُكُمْ فَاُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ
29:8. தன் தாய் தந்தையருக்கு நன்மை செய்யும்படியாக நாம் மனிதனுக்கு வலியுறுத்தியிருக்கின்றோம்; எனினும், (மனிதனே!) உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணையாக்கும்படி அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால், நீ அவ்விருவருக்கும் கீழ்ப்படிய வேண்டாம்; என்னிடமே உங்கள் அனைவரின் மீளுதலும் இருக்கிறது; நீங்கள் செய்துகொண்டிருந்தவை பற்றி அப்போது நான் உங்களுக்கு அறிவிப்பேன்.
31:14 وَوَصَّيْنَا الْاِنْسٰنَ بِوَالِدَيْهِۚ حَمَلَتْهُ اُمُّهٗ وَهْنًا عَلٰى وَهْنٍ وَّفِصٰلُهٗ فِىْ عَامَيْنِ اَنِ اشْكُرْ لِىْ وَلِـوَالِدَيْكَؕ اِلَىَّ الْمَصِيْرُ
31:14. நாம் மனிதனுக்குத் தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்யவேண்டியது) பற்றி போதித்தோம்; அவனுடைய தாய் பலவீனத்தின் மேல் பலவீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனைச் சுமந்தாள்; இன்னும், அவனுக்குப் பால்குடி மறத்தலில் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே, நீ எனக்கும் உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.
33:4 مَا جَعَلَ اللّٰهُ لِرَجُلٍ مِّنْ قَلْبَيْنِ فِىْ جَوْفِهٖ ۚ وَمَا جَعَلَ اَزْوَاجَكُمُ الّٰٓـئِْ تُظٰهِرُوْنَ مِنْهُنَّ اُمَّهٰتِكُمْ ۚ وَمَا جَعَلَ اَدْعِيَآءَكُمْ اَبْنَآءَكُمْ ؕ ذٰ لِكُمْ قَوْلُـكُمْ بِاَ فْوَاهِكُمْ ؕ وَاللّٰهُ يَقُوْلُ الْحَقَّ وَهُوَ يَهْدِى السَّبِيْلَ
33:4. எந்த மனிதனுடைய அகத்திலும் அல்லாஹ் இரண்டு இதயங்களை உண்டாக்கவில்லை; உங்கள் மனைவியரில் எவரையும் (தன் மனைவியைத் தன் தாய் போன்றவள் என்று கூறி) நீங்கள் உங்களுடைய தாய்மார்களுக்கு ஒப்பாகக் கூறுவதனால் - உங்களுடைய தாய்களாக அவன் ஆக்கவில்லை; (அவ்வாறே) உங்களுடைய வளர்ப்புப் பிள்ளைகளை உங்களுடைய புதல்வர்களாக ஆக்கவில்லை; இவை யாவும் உங்களுடைய வாய்களால் சொல்லும் (வெறும்) வார்த்தையாகும்; அல்லாஹ் உண்மையையே கூறுகிறான்; இன்னும், அவன் நேர்வழியையே காட்டுகிறான்.
33:6 اَلنَّبِىُّ اَوْلٰى بِالْمُؤْمِنِيْنَ مِنْ اَنْفُسِهِمْ وَاَزْوَاجُهٗۤ اُمَّهٰتُهُمْ ؕ وَاُولُوا الْاَرْحَامِ بَعْضُهُمْ اَوْلٰى بِبَعْضٍ فِىْ كِتٰبِ اللّٰهِ مِنَ الْمُؤْمِنِيْنَ وَالْمُهٰجِرِيْنَ اِلَّاۤ اَنْ تَفْعَلُوْۤا اِلٰٓى اَوْلِيٰٓٮِٕكُمْ مَّعْرُوْفًا ؕ كَانَ ذٰ لِكَ فِى الْكِتٰبِ مَسْطُوْرًا
33:6. இந்த நபி நம்பிக்கையாளர்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார்; இன்னும், அவருடைய மனைவியர் அவர்களுடைய தாய்மார்களாக இருக்கின்றனர்; (ஒரு விசுவாசியின் சொத்தை அடைவதற்கு) மற்ற நம்பிக்கையாளர்களைவிடவும், (நாடு துறந்த) முஹாஜிர்களைவிடவும் உறவினர்களே சிலரைவிட சிலர் நெருங்கிய (உரிமையுடைய) வர்களாவார்கள்; இதுதான் அல்லாஹ்வின் வேதத்தில் உள்ளது; என்றாலும், நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு நன்மை செய்ய நாடினால் தவிர (முறைப்படி செய்யலாம்); இது, வேதத்தில் எழுதப்பட்டுள்ளதாகும்.
33:50 يٰۤاَيُّهَا النَّبِىُّ اِنَّاۤ اَحْلَلْنَا لَـكَ اَزْوَاجَكَ الّٰتِىْۤ اٰتَيْتَ اُجُوْرَهُنَّ وَمَا مَلَـكَتْ يَمِيْنُكَ مِمَّاۤ اَفَآءَ اللّٰهُ عَلَيْكَ وَبَنٰتِ عَمِّكَ وَبَنٰتِ عَمّٰتِكَ وَبَنٰتِ خَالِكَ وَبَنٰتِ خٰلٰتِكَ الّٰتِىْ هَاجَرْنَ مَعَكَ وَامْرَاَةً مُّؤْمِنَةً اِنْ وَّهَبَتْ نَفْسَهَا لِلنَّبِىِّ اِنْ اَرَادَ النَّبِىُّ اَنْ يَّسْتَـنْكِحَهَا خَالِصَةً لَّـكَ مِنْ دُوْنِ الْمُؤْمِنِيْنَ ؕ قَدْ عَلِمْنَا مَا فَرَضْنَا عَلَيْهِمْ فِىْۤ اَزْوَاجِهِمْ وَمَا مَلَـكَتْ اَيْمَانُهُمْ لِكَيْلَا يَكُوْنَ عَلَيْكَ حَرَجٌ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا
33:50. நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரைக் கொடுத்துவிட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக்கொண்டவர்களையும், உம்முடன் ஹிஜ்ரத் செய்துவந்தார்களே அத்தகைய உம் தந்தையின் சகோதரருடைய மகள்களையும், உம் தந்தையின் சகோதரிகளின் மகள்களையும், உம் தாயின் சகோதரருடைய மகள்களையும், உம் தாயின் சகோதரிகளின் மகள்களையும் நாம் உமக்கு அனுமதித்துள்ளோம்; அன்றியும், நம்பிக்கைகொண்ட ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்துகொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்); இது, மற்ற நம்பிக்கையாளர்களுக்கன்றி உமக்கு (மட்டுமே) பிரத்தியேகமாக உள்ளதாகும்; (மற்ற நம்பிக்கையாளர்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும் அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக்கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்: உமக்கு ஏதும் சிரமம் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதிவிலக்களித்தோம்); மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க அன்புடையவன்.
39:6 خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ ثُمَّ جَعَلَ مِنْهَا زَوْجَهَا وَاَنْزَلَ لَـكُمْ مِّنَ الْاَنْعَامِ ثَمٰنِيَةَ اَزْوَاجٍ ؕ يَخْلُقُكُمْ فِىْ بُطُوْنِ اُمَّهٰتِكُمْ خَلْقًا مِّنْۢ بَعْدِ خَلْقٍ فِىْ ظُلُمٰتٍ ثَلٰثٍ ؕ ذٰ لِكُمُ اللّٰهُ رَبُّكُمْ لَهُ الْمُلْكُ ؕ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۚ فَاَ نّٰى تُصْرَفُوْنَ
39:6. அவன் உங்களை ஒரே மனிதரிலிருந்து படைத்தான்; பிறகு, அவரிலிருந்து அவருடைய மனைவியை ஆக்கினான்; அவன் உங்களுக்காக கால்நடைகளிலிருந்து எட்டு (வகைகளை) ஜோடிகளை இறக்கி இருக்கிறான்; உங்கள் தாய்மார்களின் வயிறுகளில், ஒரு படைப்புக்குப்பின் மற்றொரு படைப்பாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களைப் படைக்கிறான்; அவனே அல்லாஹ்; உங்களுடைய இறைவன்; ஆட்சி அவனுக்கே உரியது; அவனைத் தவிர வேறு தெய்வம் இல்லை; அவ்வாறிருக்க, (அவனைவிட்டும்) நீங்கள் எப்படித் திருப்பப்படுகிறீர்கள்?
46:15 وَوَصَّيْنَا الْاِنْسَانَ بِوَالِدَيْهِ اِحْسَانًا ؕ حَمَلَـتْهُ اُمُّهٗ كُرْهًا وَّوَضَعَتْهُ كُرْهًا ؕ وَحَمْلُهٗ وَفِصٰلُهٗ ثَلٰـثُوْنَ شَهْرًا ؕ حَتّٰٓى اِذَا بَلَغَ اَشُدَّهٗ وَبَلَغَ اَرْبَعِيْنَ سَنَةً ۙ قَالَ رَبِّ اَوْزِعْنِىْۤ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِىْۤ اَنْعَمْتَ عَلَىَّ وَعَلٰى وَالِدَىَّ وَاَنْ اَعْمَلَ صَالِحًا تَرْضٰٮهُ وَاَصْلِحْ لِىْ فِىْ ذُرِّيَّتِىْ ؕۚ اِنِّىْ تُبْتُ اِلَيْكَ وَاِنِّىْ مِنَ الْمُسْلِمِيْنَ
46:15. மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி நாம் உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய் வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து, வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்: (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும், அவனுக்குப் பால்குடி மறக்கச் செய்வதும், (மொத்தம்) முப்பது மாதங்களாகும்; அவன் வாலிபனாகி, நாற்பது வயதை அடைந்ததும்: "இறைவனே! நீ என் மீதும் என் பெற்றோர் மீதும் புரிந்த உனது அருட்கொடைக்காக நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய நல்ல செயலைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் (நல்லது செய்பவர்களாக) சீர்ப்படுத்துவாயாக! நிச்சயமாக நான் உன் பக்கமே திரும்புகிறேன்; அன்றியும், நான் (உனக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களில் உள்ளவனாக இருக்கிறேன்" என்று கூறுவான்.
58:2 اَلَّذِيْنَ يُظٰهِرُوْنَ مِنْكُمْ مِّنْ نِّسَآٮِٕهِمْ مَّا هُنَّ اُمَّهٰتِهِمْؕ اِنْ اُمَّهٰتُهُمْ اِلَّا الّٰٓـىِْٔ وَلَدْنَهُمْؕ وَاِنَّهُمْ لَيَقُوْلُوْنَ مُنْكَرًا مِّنَ الْقَوْلِ وَزُوْرًاؕ وَ اِنَّ اللّٰهَ لَعَفُوٌّ غَفُوْرٌ
58:2. உங்களில் சிலர் தம் மனைவியரைத் தாய்க்கு ஒப்பிட்டுக் கூறிவிடுகிறார்களே, அவர்கள் இவர்களுடைய தாய்கள் (ஆகிவிடுவது) இல்லை; இவர்களைப் பெற்றெடுத்தவர்கள்தாம் இவர்களுடைய தாய்கள் ஆவார்கள்; எனினும், நிச்சயமாக இவர்கள் சொல்லில் வெறுக்கத்தக்கதையும், பொய்யானதையுமே கூறுகிறார்கள்; ஆனால், நிச்சயமாக அல்லாஹ் மிகவும் பொறுப்பவன்; மிகவும் மன்னிப்பவன்.
58:3 وَالَّذِيْنَ يُظٰهِرُوْنَ مِنْ نِّسَآٮِٕهِمْ ثُمَّ يَعُوْدُوْنَ لِمَا قَالُوْا فَتَحْرِيْرُ رَقَبَةٍ مِّنْ قَبْلِ اَنْ يَّتَمَآسَّا ؕ ذٰ لِكُمْ تُوْعَظُوْنَ بِهٖ ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ
58:3. மேலும், எவர்கள் தம் மனைவியரைத் தாய்களெனக் கூறியபின் (வருந்தி) தாம் கூறியதைவிட்டும் திரும்பி (மீண்டும் தாம்பத்திய வாழ்வை நாடி)னால், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன்னர், ஓர் அடிமையை விடுவிக்க வேண்டும்; அதனைக்கொண்டே நீங்கள் உபதேசிக்கப்படுகிறீர்கள்; மேலும், அல்லாஹ், நீங்கள் செய்பவற்றை நன்கறிபவனாக இருக்கிறான்.