தானியம்
2:261   مَثَلُ الَّذِيْنَ يُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ فِىْ سَبِيْلِ اللّٰهِ كَمَثَلِ حَبَّةٍ اَنْۢبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِىْ كُلِّ سُنْۢبُلَةٍ مِّائَةُ حَبَّةٍ‌ؕ وَاللّٰهُ يُضٰعِفُ لِمَنْ يَّشَآءُ‌ ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ‏
2:261. அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது: ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது; அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) பன்மடங்காக்குகின்றான்; இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன், யாவற்றையும் நன்கறிபவன்.
6:141   وَهُوَ الَّذِىْۤ اَنْشَاَ جَنّٰتٍ مَّعْرُوْشٰتٍ وَّغَيْرَ مَعْرُوْشٰتٍ وَّالنَّخْلَ وَالزَّرْعَ مُخْتَلِفًا اُكُلُهٗ وَالزَّيْتُوْنَ وَالرُّمَّانَ مُتَشَابِهًا وَّغَيْرَ مُتَشَابِهٍ ‌ؕ كُلُوْا مِنْ ثَمَرِهٖۤ اِذَاۤ اَثْمَرَ وَاٰتُوْا حَقَّهٗ يَوْمَ حَصَادِهٖ‌ ‌ۖ وَلَا تُسْرِفُوْا‌ ؕ اِنَّهٗ لَا يُحِبُّ الْمُسْرِفِيْنَ‏
6:141. (பந்தல்களில்) படரவிடப்பட்டதும், படரவிடப்படாததுமான தோட்டங்களையும், பேரீச்ச மரங்களையும், மாறுபட்ட உணவான தானியங்களையும், (தோற்றத்தில்) ஒன்றுபோலவும், (சுவையில்) ஒன்றுபோல் அல்லாததுமான ஒலிவத்தையும், மாதுளையையும் அவனே படைத்தான்; ஆகவே, அவை பயனளிக்கும் போது அவற்றின் பலனிலிருந்து புசியுங்கள்; அவற்றை அறுவடை செய்யும் நாளில் அதனுடைய பாகத்தை (ஜகாத்தை ஏழைகளுக்கு)க் கொடுத்து விடுங்கள்; வீண்விரயம் செய்யாதீர்கள்! நிச்சயமாக அவன் (அல்லாஹ்) வீண்விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.
12:65   وَلَمَّا فَتَحُوْا مَتَاعَهُمْ وَجَدُوْا بِضَاعَتَهُمْ رُدَّتْ اِلَيْهِمْؕ قَالُوْا يٰۤاَبَانَا مَا نَـبْغِىْؕ هٰذِهٖ بِضَاعَتُنَا رُدَّتْ اِلَيْنَا‌ ۚ وَنَمِيْرُ اَهْلَنَا وَنَحْفَظُ اَخَانَا وَنَزْدَادُ كَيْلَ بَعِيْرٍ‌ؕ ذٰ لِكَ كَيْلٌ يَّسِيْرٌ‏
12:65. அவர்கள் தங்கள் சாமான் (மூட்டை)களை அவிழ்த்தபோது, அவர்களுடைய (கிரயப்)பொருள் (யாவும்) அவர்களிடம் திருப்பப்பட்டிருப்பதைக் கண்டார்கள்; அவர்கள், "எங்கள் தந்தையே! (இதற்குமேல்) நாம் எதைத் தேடுவோம்? இதோ நம்முடைய (கிரயப்)பொருள் நம்மிடமே திருப்பப்பட்டுவிட்டன; ஆகவே, நம் குடும்பத்திற்கு (வேண்டிய) தானியங்களை நாங்கள் வாங்கிவருவோம்; எங்கள் சகோதரரையும் நாங்கள் பாதுகாத்துக்கொள்வோம்; மேலும், (அவருக்காக) ஓர் ஒட்டகச் (சுமை) தானியத்தை அதிகமாகக் கொண்டுவருவோம்; இது சாதாரணமான அளவுதான்" என்று கூறினார்கள்.
36:33   وَاٰيَةٌ لَّهُمُ الْاَرْضُ الْمَيْتَةُ ۖۚ اَحْيَيْنٰهَا وَاَخْرَجْنَا مِنْهَا حَبًّا فَمِنْهُ يَاْكُلُوْنَ‏
36:33. அன்றியும், இறந்து (தரிசாகக்) கிடக்கும் பூமி அவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும்: (பின்னர் மழையினால்) அதனை நாமே உயிர்ப்பித்து, அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்துகின்றோம்; அதிலிருந்துதான் இவர்கள் உண்கிறார்கள்.
50:20   وَنُفِخَ فِى الصُّوْرِ ‌ؕ ذٰ لِكَ يَوْمُ الْوَعِيْدِ‏
50:20. மேலும், ஸூர் (எக்காளம்) ஊதப்படும்; அது தான் எச்சரிக்கப்பட்ட நாளாகும்.
55:12   وَالْحَبُّ ذُو الْعَصْفِ وَالرَّيْحَانُ‌ۚ‏
55:12. தோலிகள் பொதிந்த தானிய வகைகளும், வாசனையுள்ள (மலர், புற்பூண்டு ஆகிய) வகைகளும் இருக்கின்றன.
78:15   لِّـنُخْرِجَ بِهٖ حَبًّا وَّنَبَاتًا ۙ‏
78:15. அதைக் கொண்டு தானியங்களையும், தாவரங்களையும் நாம் வளர்ப்பதற்காக.