திசை
2:115   وَلِلّٰهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ‌ فَاَيْنَمَا تُوَلُّوْا فَثَمَّ وَجْهُ اللّٰهِ‌ؕ اِنَّ اللّٰهَ وَاسِعٌ عَلِيْمٌ‏
2:115. கிழக்கும், மேற்கும், அல்லாஹ்வுக்கே (சொந்தம்); நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது; நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்; எல்லாம் அறிந்தவன்.
2:148   وَلِكُلٍّ وِّجْهَةٌ هُوَ مُوَلِّيْهَا ‌ۚ فَاسْتَبِقُوا الْخَيْرٰتِؕؔ اَيْنَ مَا تَكُوْنُوْا يَاْتِ بِكُمُ اللّٰهُ جَمِيْعًا ؕ اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏
2:148. ஒவ்வொரு (கூட்டத்த)வருக்கும், (தொழுகைக்கான) ஒரு திசையுண்டு; அவர்கள் அதன் பக்கம் திரும்புபவர்களாக உள்ளனர்; நன்மைகளின்பால் நீங்கள் முந்திக்கொள்ளுங்கள்; நீங்கள் எங்கு இருப்பினும் அல்லாஹ் உங்கள் யாவரையும் கொண்டுவருவான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் ஆற்றல் மிக்கோனாக இருக்கிறான்.
14:17   يَّتَجَرَّعُهٗ وَلَا يَكَادُ يُسِيْـغُهٗ وَيَاْتِيْهِ الْمَوْتُ مِنْ كُلِّ مَكَانٍ وَّمَا هُوَ بِمَيِّتٍؕ‌ وَمِنْ وَّرَآٮِٕهٖ عَذَابٌ غَلِيْظٌ‏
14:17. அதை அவன் (சிரமத்தோடு) சிறிது சிறிதாக விழுங்குவான்; எனினும், அதை அவன் எளிதாக விழுங்கமாட்டான்: ஒவ்வொரு திசையிலிருந்தும் அவனுக்கு மரணம் வந்துகொண்டிருக்கும்; எனினும், அவன் இறந்துவிடுபவனும் அல்லன்: அன்றியும், அவன் முன்னே (மிகக்) கொடிய வேதனையுமுண்டு.
18:86   حَتّٰٓى اِذَا بَلَغَ مَغْرِبَ الشَّمْسِ وَجَدَهَا تَغْرُبُ فِىْ عَيْنٍ حَمِئَةٍ وَّوَجَدَ عِنْدَهَا قَوْمًا ؕ ‌قُلْنَا يٰذَا الْقَرْنَيْنِ اِمَّاۤ اَنْ تُعَذِّبَ وَاِمَّاۤ اَنْ تَتَّخِذَ فِيْهِمْ حُسْنًا‏
18:86. சூரியன் மறையும் (மேற்குத்) திசைவரை அவர்கள் சென்றடைந்தபோது, அது ஒரு சேறு கலந்த நீரில் (மூழ்குவது போல்) மறையக் கண்டார்; இன்னும், அவர் அவ்விடத்தில் ஒரு சமூகத்தினரையும் கண்டார்; "துல்கர்னைனே! நீர் இவர்களை(த் தண்டித்து) வேதனை செய்யலாம்; அல்லது அவர்களுக்கு அழகிய நன்மை செய்யலாம்" என்று நாம் கூறினோம்.
18:90   حَتّٰٓى اِذَابَلَغَ مَطْلِعَ الشَّمْسِ وَجَدَهَا تَطْلُعُ عَلٰى قَوْمٍ لَّمْ نَجْعَلْ لَّهُمْ مِّنْ دُوْنِهَا سِتْرًا ۙ‏
18:90. அவர் சூரியன் உதயமாகும் (கிழக்குத்) திசையை அடைந்தபோது, அது ஒரு சமூகத்தாரின் மீது உதயமாகி (அவர்கள் வெயிலில்) இருப்பதைக் கண்டார்; அதனை விட்டுக் (காத்துக் கொள்ளும்) எந்தத் தடுப்பையும் அவர்களுக்கு நாம் ஏற்படுத்தவில்லை.
24:35   اَللّٰهُ نُوْرُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ‌ؕ مَثَلُ نُوْرِهٖ كَمِشْكٰوةٍ فِيْهَا مِصْبَاحٌ‌ ؕ الْمِصْبَاحُ فِىْ زُجَاجَةٍ‌ ؕ اَلزُّجَاجَةُ كَاَنَّهَا كَوْكَبٌ دُرِّىٌّ يُّوْقَدُ مِنْ شَجَرَةٍ مُّبٰـرَكَةٍ زَيْتُوْنَةٍ لَّا شَرْقِيَّةٍ وَّلَا غَرْبِيَّةٍ ۙ يَّـكَادُ زَيْتُهَا يُضِىْٓءُ وَلَوْ لَمْ تَمْسَسْهُ نَارٌ‌ ؕ نُوْرٌ عَلٰى نُوْرٍ‌ ؕ يَهْدِى اللّٰهُ لِنُوْرِهٖ مَنْ يَّشَآءُ‌ ؕ وَ يَضْرِبُ اللّٰهُ الْاَمْثَالَ لِلنَّاسِ‌ؕ وَاللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ ۙ‏
24:35. அல்லாஹ் வானங்கள், பூமி ஆகியவற்றின் ஒளியாக இருக்கிறான்; அவனுடைய ஒளிக்கு உதாரணம்: ஒரு மாடத்தைப் போன்றிருக்கிறது: அதில் ஒரு விளக்கு இருக்கிறது; அவ்விளக்கு ஒரு கண்ணாடியினுள் இருக்கிறது; அக்கண்ணாடி ஒளிவீசும் நட்சத்திரத்தைப் போன்றதாகும்; அது பாக்கியம் பெற்ற ஜைத்தூன் மரத்தி(ன் எண்ணெயி)னால் எரிக்கப்படுகிறது; அது கீழ்த்திசையைச் சேர்ந்ததுமன்று: மேல்திசையைச் சேர்ந்ததுமன்று; அதனை நெருப்புத் தீண்டாவிடினும், அதன் எண்ணெய் ஒளிவீச முற்படும்; (இவை எல்லாம் சேர்ந்து) ஒளிக்கு மேல் ஒளியாகும்: அல்லாஹ் தான் நாடியவரை தன்னுடைய ஒளி (என்னும் சத்தியப்பாதை)யின்பால் நடத்திச் செல்கிறான்; மனிதர்களுக்கு (இத்தகைய) உதாரணங்களை அல்லாஹ் கூறுகிறான்; அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிபவன்.
37:5   رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَا وَرَبُّ الْمَشَارِقِ ؕ‏
37:5. வானங்களுக்கும், பூமிக்கும், இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றுக்கும் (அவனே) இறைவன்; மேலும், கீழ்த்திசைகளின் இறைவன்.
37:8   لَّا يَسَّمَّعُوْنَ اِلَى الْمَلَاِ الْاَعْلٰى وَيُقْذَفُوْنَ مِنْ كُلِّ جَانِبٍۖ ‏
37:8. (அதனால்) அவர்கள் மேலான கூட்டத்தார்பால் (பேச்சை ஒளிந்து) கேட்கமாட்டார்கள்; இன்னும், அவர்கள் ஒவ்வோர் திசையிலிருந்தும் வீசி எறியப்படுகிறார்கள்.
43:38   حَتّٰٓى اِذَا جَآءَنَا قَالَ يٰلَيْتَ بَيْنِىْ وَبَيْنَكَ بُعْدَ الْمَشْرِقَيْنِ فَبِئْسَ الْقَرِيْنُ‏
43:38. இறுதியாக நம்மிடம் வரும்போது (ஷைத்தானிடம்): "ஆ! எனக்கிடையிலும், உனக்கிடையிலும் கிழக்குத் திசைக்கும் மேற்குத் திசைக்கும் இடையேயுள்ள தூரம் இருந்திருக்க வேண்டுமே! (எங்களை வழிகெடுத்த) இந்த நண்பன் மிகவும் கெட்டவன்" என்று கூறுவான்.
55:17   رَبُّ الْمَشْرِقَيْنِ وَ رَبُّ الْمَغْرِبَيْنِ‌ۚ‏
55:17. இரு கீழ்த்திசைகளுக்கும் இறைவன் அவனே; இரு மேல்திசைகளுக்கும் இறைவன் அவனே.
70:40   فَلَاۤ اُقْسِمُ بِرَبِّ الْمَشٰرِقِ وَالْمَغٰرِبِ اِنَّا لَقٰدِرُوْنَۙ‏
70:40. எனவே, கிழக்குத் திசைகள், மேற்குத் திசைகள் ஆகியவற்றின் இறைவன் மீது சத்தியமாக! நிச்சயமாக நாம் (விரும்பியவாறு செய்ய) ஆற்றலுடையோம்.