திடுக்கிடச் செய்வது
7:116   قَالَ اَلْقُوْا‌ ۚ فَلَمَّاۤ اَلْقَوْا سَحَرُوْۤا اَعْيُنَ النَّاسِ وَاسْتَرْهَبُوْهُمْ وَجَآءُوْ بِسِحْرٍ عَظِيْمٍ‏
7:116. அதற்கு (மூஸா), "நீங்கள் (முதலில்) போடுங்கள்" என்று கூறினார்; அவ்வாறே அவர்கள் போட்டபோது, மக்களின் கண்களை மருட்டி அவர்களைத் திடுக்கிடும்படியும் செய்துவிட்டனர்; இன்னும், மகத்தான சூனியத்தைக் கொண்டுவந்தனர்.
69:4   كَذَّبَتْ ثَمُوْدُ وَعَادٌۢ بِالْقَارِعَةِ‏
69:4. ஸமூது (கூட்டத்தாரு)ம் ஆது (கூட்டத்தாரு)ம் திடுக்கிடச் செய்வதை (கியாம நாளைப்) பொய்ப்பித்தனர்.
101:1   اَلْقَارِعَةُ ۙ‏
101:1. திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி.
101:2   مَا الْقَارِعَةُ‌ ۚ‏
101:2. திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி என்ன?
101:3   وَمَاۤ اَدْرٰٮكَ مَا الْقَارِعَةُ ؕ‏
101:3. திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி என்னவென்று உமக்கு எது அறிவித்தது?