தியாகம்
2:207   وَمِنَ النَّاسِ مَنْ يَّشْرِىْ نَفْسَهُ ابْتِغَآءَ مَرْضَاتِ اللّٰهِ‌ؕ وَ اللّٰهُ رَءُوْفٌ ۢ بِالْعِبَادِ‏
2:207. இன்னும், அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடித் தன்னையே தியாகம் செய்பவனும் மனிதர்களில் இருக்கின்றான்; அல்லாஹ் (இத்தகைய தன்) அடியார்கள் மீது அளவற்ற அன்புடையவனாக இருக்கின்றான்.
3:140   اِنْ يَّمْسَسْكُمْ قَرْحٌ فَقَدْ مَسَّ الْقَوْمَ قَرْحٌ مِّثْلُهٗ ‌ؕ وَتِلْكَ الْاَيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ النَّاسِۚ وَلِيَـعْلَمَ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا وَيَتَّخِذَ مِنْكُمْ شُهَدَآءَ‌ؕ وَاللّٰهُ لَا يُحِبُّ الظّٰلِمِيْنَۙ‏
3:140. (உஹுதுப் போரில்) உங்களுக்கு ஒரு காயம் ஏற்பட்டது என்றால், அதேபோன்று அக்கூட்டத்தினருக்கும் (பத்ருப் போரில்) காயம் ஏற்பட்டுள்ளது; இத்தகைய (சோதனைக்) காலங்களை மனிதர்களிடையே நாமே மாறிமாறி வரச்செய்கின்றோம்; இதற்குக் காரணம், நம்பிக்கை கொண்டோரை அல்லாஹ் அறிவதற்கும், உங்களில் உயிர்த்தியாகம் செய்வோரை உருவாக்குவதற்குமே ஆகும்; இன்னும், அல்லாஹ் அநியாயம் செய்வோரை நேசிப்பதில்லை.
8:72   اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَهَاجَرُوْا وَجَاهَدُوْا بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ فِىْ سَبِيْلِ اللّٰهِ وَالَّذِيْنَ اٰوَوْا وَّنَصَرُوْۤا اُولٰۤٮِٕكَ بَعْضُهُمْ اَوْلِيَآءُ بَعْضٍ‌ؕ وَالَّذِيْنَ اٰمَنُوْا وَلَمْ يُهَاجِرُوْا مَا لَـكُمْ مِّنْ وَّلَايَتِهِمْ مِّنْ شَىْءٍ حَتّٰى يُهَاجِرُوْا‌ ۚ وَاِنِ اسْتَـنْصَرُوْكُمْ فِى الدِّيْنِ فَعَلَيْكُمُ النَّصْرُ اِلَّا عَلٰى قَوْمٍۢ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ مِّيْثَاقٌ ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ‏
8:72. நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் செய்து, தம் செல்வங்களாலும், தங்களது உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்தார்களோ, அவர்களும்; எவர்கள் இத்தகையோருக்குப் புகலிடம் கொடுத்து உதவியும் செய்தார்களோ, அவர்களும்; அவர்களில் சிலர் சிலருக்கு உற்ற நண்பர்கள் ஆவார்கள்; எவர்கள் நம்பிக்கை கொண்டு ஹிஜ்ரத் செய்யவில்லையோ, அவர்கள் ஹிஜ்ரத் செய்யும் வரையில், நீங்கள் அவர்களுடைய எவ்விஷயத்திலும் பொறுப்பாளிகளல்ல; எனினும், அவர்கள் மார்க்க விஷயத்தில் உங்களிடம் உதவி தேடினால், உதவி புரிவது உங்கள் மீது கடமையாகும்; ஆனால், உங்களுக்கும், எவர்களுக்கும் மத்தியில் உடன்படிக்கை இருக்கிறதோ, அக்கூட்டத்தினருக்கு எதிராகத் தவிர, அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு கவனித்துக் கொண்டே இருக்கிறான்.
9:20   اَلَّذِيْنَ اٰمَنُوْا وَ هَاجَرُوْا وَجَاهَدُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْۙ اَعْظَمُ دَرَجَةً عِنْدَ اللّٰهِ‌ؕ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْفَآٮِٕزُوْنَ‏
9:20. எவர்கள் நம்பிக்கை கொண்டு ஹிஜ்ரத் செய்து, தங்களுடைய செல்வங்களாலும், தங்களுடைய உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தார்களோ, அவர்கள் அல்லாஹ்விடம் பதவியால் மகத்தானவர்கள்; மேலும், அவர்கள்தாம் வெற்றியாளர்கள்.
47:31   وَلَـنَبْلُوَنَّكُمْ حَتّٰى نَعْلَمَ الْمُجٰهِدِيْنَ مِنْكُمْ وَالصّٰبِرِيْنَ ۙ وَنَبْلُوَا۟ اَخْبَارَكُمْ‏
47:31. அன்றியும், (அல்லாஹ்வின் பாதையில்) போர் புரிவோரையும் பொறுமையாளர்களையும் நாம் அறியும் வரை, உங்களை நிச்சயமாக நாம் சோதிப்போம்; உங்கள் செய்திகளையும் நாம் சோதிப்போம்; (அவற்றின் உண்மையை வெளிப்படுத்துவதற்காக.)
49:15   اِنَّمَا الْمُؤْمِنُوْنَ الَّذِيْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ ثُمَّ لَمْ يَرْتَابُوْا وَجَاهَدُوْا بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ فِىْ سَبِيْلِ اللّٰهِ‌ ؕ اُولٰٓٮِٕكَ هُمُ الصّٰدِقُوْنَ‏
49:15. நிச்சயமாக (உண்மையான) நம்பிக்கையாளர்கள் யார் என்றால், அவர்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும் நம்பிக்கை கொண்டு, பின்னர் (அது பற்றி அவர்கள் எத்தகைய) சந்தேகமும் கொள்ளாது, தம் செல்வங்களைக் கொண்டும், தம் உயிர்களைக் கொண்டும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்வார்கள்; இத்தகையவர்கள்தாம் உண்மையாளர்கள்.