திருடன்
5:38 وَالسَّارِقُ وَالسَّارِقَةُ فَاقْطَعُوْۤا اَيْدِيَهُمَا جَزَآءًۢ بِمَا كَسَبَا نَـكَالًا مِّنَ اللّٰهِ ؕ وَاللّٰهُ عَزِيْزٌ حَكِيْمٌ
5:38. திருடனும், திருடியும் - அவ்விருவரும் சம்பாதித்ததற்குக் கூலியாக அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக - அவர்களின் கரங்களைத் துண்டித்துவிடுங்கள்; அல்லாஹ் மிகைத்தவனும் ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான்.
12:70 فَلَمَّا جَهَّزَهُمْ بِجَهَازِهِمْ جَعَلَ السِّقَايَةَ فِىْ رَحْلِ اَخِيْهِ ثُمَّ اَذَّنَ مُؤَذِّنٌ اَ يَّـتُهَا الْعِيْرُ اِنَّكُمْ لَسَارِقُوْنَ
12:70. பின்னர், அவர்களுடைய பொருள்களை அவர்களுக்குச் சித்தம் செய்துகொடுத்தபோது, தம் சகோதரர் (புன்யாமீன்) உடைய சுமையில் (பானங்கள் பருகுவதற்கான ஒரு பொற்) குவளையை வைத்துவிட்டார்; பிறகு, (அவர்கள் புறப்பட்டுச் செல்லலானதும் அரசாங்க) அறிவிப்பாளர் ஒருவர், "ஒட்டகக் கூட்டத்தார்களே! நிச்சயமாக நீங்கள் திருடர்களே!" என்று கூறினார்.
12:73 قَالُوْا تَاللّٰهِ لَـقَدْ عَلِمْتُمْ مَّا جِئْنَا لِـنُفْسِدَ فِى الْاَرْضِ وَمَا كُنَّا سَارِقِيْنَ
12:73. (அதற்கு) அவர்கள், "அல்லாஹ்வின் மீது சத்தியமாக நாங்கள் (இப்) பூமியில் குழப்பம் உண்டாக்க வரவில்லை என்பதை நீங்கள் நிச்சயமாக அறிவீர்கள்; நாங்கள் திருடர்களும் அல்லர்" என்றார்கள்.