திரை
2:7 خَتَمَ اللّٰهُ عَلَىٰ قُلُوْبِهِمْ وَعَلٰى سَمْعِهِمْؕ وَعَلٰىٓ اَبْصَارِهِمْ غِشَاوَةٌ وَّلَهُمْ عَذَابٌ عَظِيْمٌ
2:7. அல்லாஹ் அவர்களின் இதயங்களிலும், அவர்களின் செவிப்புலன்களிலும் முத்திரை வைத்துவிட்டான்; இன்னும், அவர்களின் பார்வை மீது திரை இருக்கிறது; மேலும், அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு.
4:155 فَبِمَا نَقْضِهِمْ مِّيْثَاقَهُمْ وَكُفْرِهِمْ بِاٰيٰتِ اللّٰهِ وَقَتْلِهِمُ الْاَنْۢبِيَآءَ بِغَيْرِ حَقٍّ وَّقَوْلِهِمْ قُلُوْبُنَا غُلْفٌ ؕ بَلْ طَبَعَ اللّٰهُ عَلَيْهَا بِكُفْرِهِمْ فَلَا يُؤْمِنُوْنَ اِلَّا قَلِيْلًا
4:155. அவர்களுடைய வாக்குறுதியை அவர்கள் மீறியதாலும், அல்லாஹ்வின் வசனங்களை அவர்கள் நிராகரித்துவிட்டதாலும், நியாயமின்றி அவர்கள் நபிமார்களைக் கொலை செய்ததாலும், "எங்கள் இதயங்கள் திரையிடப்பட்டுள்ளன" (எனவே, எந்த உபதேசமும் அங்கே செல்லாது) என்று அவர்கள் கூறியதாலும் (அல்லாஹ் அவர்களை சபித்துவிட்டான்); மாறாக, அவர்களுடைய நிராகரிப்பின் காரணத்தால் அல்லாஹ் அவற்றின் மீது முத்திரையிட்டுவிட்டான்; ஆகவே, அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்.
6:25 وَمِنْهُمْ مَّنْ يَّسْتَمِعُ اِلَيْكَ ۚ وَجَعَلْنَا عَلٰى قُلُوْبِهِمْ اَكِنَّةً اَنْ يَّفْقَهُوْهُ وَفِىْۤ اٰذَانِهِمْ وَقْرًا ؕ وَاِنْ يَّرَوْا كُلَّ اٰيَةٍ لَّا يُؤْمِنُوْا بِهَا ؕ حَتّٰۤى اِذَا جَآءُوْكَ يُجَادِلُوْنَكَ يَقُوْلُ الَّذِيْنَ كَفَرُوْۤا اِنْ هٰذَاۤ اِلَّاۤ اَسَاطِيْرُ الْاَوَّلِيْنَ
6:25. அவர்களில் சிலர் உம் பேச்சைக் கேட்பது போல் பாவனை செய்கின்றனர்; நாம் அவர்களுடைய உள்ளங்களில் அதை விளங்கிக் கொள்ளாது இருக்குமாறு திரைகளையும், இன்னும் அவர்கள் காதுகளில் செவிட்டுத் தன்மையையும் ஏற்படுத்தினோம்; இன்னும், அவர்கள் எல்லா அத்தாட்சிகளைப் பார்த்தாலும் அவற்றை நம்பமாட்டார்கள்; இன்னும், இவர்கள் உம்மிடம் வந்தால் உம்மோடு வாதாடுவார்கள்; "இவையெல்லாம் முன்னோர்களின் கட்டுக் கதைகளேயன்றி வேறில்லை" என்று இந்த நிராகரிப்போர் கூறுவார்கள்.
7:46 وَبَيْنَهُمَا حِجَابٌۚ وَعَلَى الْاَعْرَافِ رِجَالٌ يَّعْرِفُوْنَ كُلًّاۢ بِسِيْمٰٮهُمْ ۚ وَنَادَوْا اَصْحٰبَ الْجَـنَّةِ اَنْ سَلٰمٌ عَلَيْكُمْ لَمْ يَدْخُلُوْهَا وَهُمْ يَطْمَعُوْنَ
7:46. (நரகவாசிகள், சுவர்க்கவாசிகள் ஆகிய) இவர்களுக்கிடையே ஒரு திரை(யான மதில்) இருக்கும்; (அதன்) சிகரங்களில் சில மனிதர்கள் இருப்பார்கள்; (நரகவாசிகள், சுவர்க்கவாசிகள்) ஒவ்வொருவரையும் அவர்களுடைய அடையாளத்தைக்கொண்டு அவர்கள் அறிந்துகொள்வார்கள்; அவர்கள் சுவர்க்கவாசிகளை அழைத்து "உங்கள் மீது சாந்தி உண்டாகுக!" என்று கூறுவார்கள்; அவர்கள் இன்னும் அதில் நுழையவில்லை - அவர்கள் (அதில் நுழைய) ஆவலுடன் இருக்கின்றார்கள்.
17:45 وَاِذَا قَرَاْتَ الْقُرْاٰنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ حِجَابًا مَّسْتُوْرًا ۙ
17:45. (நபியே!) நீர் குர்ஆனை ஓதினால், உமக்கிடையிலும், மறுமையின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கிடையிலும் மறைக்கப்பட்டுள்ள ஒரு திரையை நாம் அமைத்து விடுகிறோம்.
18:57 وَمَنْ اَظْلَمُ مِمَّنْ ذُكِّرَ بِاٰيٰتِ رَبِّهٖ فَاَعْرَضَ عَنْهَا وَنَسِىَ مَا قَدَّمَتْ يَدٰهُ ؕ اِنَّا جَعَلْنَا عَلٰى قُلُوْبِهِمْ اَكِنَّةً اَنْ يَّفْقَهُوْهُ وَفِىْۤ اٰذَانِهِمْ وَقْرًا ؕ وَاِنْ تَدْعُهُمْ اِلَى الْهُدٰى فَلَنْ يَّهْتَدُوْۤا اِذًا اَبَدًا
18:57. எவன் தன் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு உபதேசிக்கப்பட்டும், அவற்றைப் புறக்கணித்துத் தன்னிரு கரங்களும் முற்படுத்திய (தீமையான)வற்றை மறந்துவிடுகிறானோ, அவனைவிடப் பெரிய அக்கிரமக்காரன் எவன் இருக்கிறான்? நிச்சயமாக நாம் அவர்களுடைய இதயங்களின் மீது, இதை விளங்கிக்கொள்ளாதவாறு திரைகளையும், அவர்களுடைய செவிகளில் செவிட்டுத்தனத்தையும் ஏற்படுத்தியிருக்கிறோம்; ஆதலால், நீர் அவர்களை நேர்வழியின்பால் அழைத்தாலும், அவர்கள் ஒருபோதும் நேர்வழி அடையமாட்டார்கள்.
18:101 اۨلَّذِيْنَ كَانَتْ اَعْيُنُهُمْ فِىْ غِطَآءٍ عَنْ ذِكْرِىْ وَكَانُوْا لَا يَسْتَطِيْعُوْنَ سَمْعًا
18:101. அவர்கள் எத்தகையோரென்றால் என் நினைவைவிட்டும் அவர்களுடைய கண்கள் திரைக்குள்ளிருந்தன; இன்னும், (நல்லுபதேசங்களைச்) செவிமடுக்கவும் அவர்கள் சக்தியற்றுப்போயினர்.
19:17 فَاتَّخَذَتْ مِنْ دُوْنِهِمْ حِجَابًا فَاَرْسَلْنَاۤ اِلَيْهَا رُوْحَنَا فَتَمَثَّلَ لَهَا بَشَرًا سَوِيًّا
19:17. அவர் (தம்மை) அவர்களிடமிருந்து (மறைத்துக் கொள்வதற்காக) ஒரு திரையை அமைத்துக் கொண்டார்; அப்போது நாம் அவரிடத்தில் நம் 'ரூஹை' (ஜிப்ரீலை) அனுப்பி வைத்தோம்; அவருக்கு நிறைவான ஒரு மனிதராக அவர் தோற்றமளித்தார்.
23:100 لَعَلِّىْۤ اَعْمَلُ صَالِحًـا فِيْمَا تَرَكْتُؕ كَلَّا ؕ اِنَّهَا كَلِمَةٌ هُوَ قَآٮِٕلُهَاؕ وَمِنْ وَّرَآٮِٕهِمْ بَرْزَخٌ اِلٰى يَوْمِ يُبْعَثُوْنَ
23:100. "நான் விட்டுவந்ததில் (இனி) நற்செயலைச் செய்வதற்காக" (என்றும் கூறுவான்); அவ்வாறில்லை! நிச்சயமாக அது - அதை(ப் பற்றி) அவன் கூறுகின்ற ஒரு (வெறும்) வார்த்தையேயாகும்; அவர்கள் எழுப்பப்படும் நாள் வரையும் அவர்கள் முன்னே ஒரு திரை இருக்கிறது.
33:53 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَدْخُلُوْا بُيُوْتَ النَّبِىِّ اِلَّاۤ اَنْ يُّؤْذَنَ لَـكُمْ اِلٰى طَعَامٍ غَيْرَ نٰظِرِيْنَ اِنٰٮهُ وَلٰـكِنْ اِذَا دُعِيْتُمْ فَادْخُلُوْا فَاِذَا طَعِمْتُمْ فَانْتَشِرُوْا وَلَا مُسْتَاْنِسِيْنَ لِحَـدِيْثٍ ؕ اِنَّ ذٰلِكُمْ كَانَ يُؤْذِى النَّبِىَّ فَيَسْتَحْىٖ مِنْكُمْ وَاللّٰهُ لَا يَسْتَحْىٖ مِنَ الْحَـقِّ ؕ وَاِذَا سَاَ لْتُمُوْهُنَّ مَتَاعًا فَسْــٴَــــلُوْهُنَّ مِنْ وَّرَآءِ حِجَابٍ ؕ ذٰ لِكُمْ اَطْهَرُ لِقُلُوْبِكُمْ وَقُلُوْبِهِنَّ ؕ وَمَا كَانَ لَـكُمْ اَنْ تُؤْذُوْا رَسُوْلَ اللّٰهِ وَلَاۤ اَنْ تَـنْكِحُوْۤا اَزْوَاجَهٗ مِنْۢ بَعْدِهٖۤ اَبَدًا ؕ اِنَّ ذٰ لِكُمْ كَانَ عِنْدَ اللّٰهِ عَظِيْمًا
33:53. நம்பிக்கை கொண்டோரே! உணவின்பால் (அதை உண்ண) உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டாலன்றி, அது சமையலாவதை எதிர்பார்த்து (முன்னதாகவே) நபியுடைய வீடுகளில் பிரவேசிக்காதீர்கள்; ஆனால், நீங்கள் அழைக்கப்பட்டீர்களானால் (அங்கே) பிரவேசியுங்கள்; அன்றியும், நீங்கள் உணவருந்திவிட்டால் (உடனே) கலைந்து போய்விடுங்கள்; பேச்சில் மூழ்கி விடாதீர்கள்; நிச்சயமாக இது நபியை நோவினை செய்வதாக இருக்கிறது; இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுகிறார்; ஆனால், உண்மையைக் கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை; (நபியுடைய மனைவியர்களாகிய) அவர்களிடம் ஏதாவது ஒரு பொருளை (அவசியப்பட்டு)க் கேட்டால், திரைக்கு அப்பாலிருந்தே அவர்களைக் கேளுங்கள்; அதுவே, உங்களுடைய இதயங்களுக்கும், அவர்களுடைய இதயங்களுக்கும் தூய்மையானதாகும்; அல்லாஹ்வின் தூதரை நோவினை செய்வது உங்களுக்கு தகுமானதல்ல; அன்றியும், அவருடைய மனைவிகளை அவருக்குப் பின்னர் நீங்கள் மணப்பது ஒருபோதும் கூடாது; நிச்சயமாக இது அல்லாஹ்விடத்தில் (பாவத்தால்) மகத்தானதாக இருக்கிறது.
34:54 وَحِيْلَ بَيْنَهُمْ وَبَيْنَ مَا يَشْتَهُوْنَ كَمَا فُعِلَ بِاَشْيَاعِهِمْ مِّنْ قَبْلُؕ اِنَّهُمْ كَانُوْا فِىْ شَكٍّ مُّرِيْبٍ
34:54. மேலும், அவர்களுடைய கூட்டத்தாருக்கு முன்னர் செய்யப்பட்டதுபோல், அவர்களுக்கும் அவர்கள் விரும்பம் கொண்டிருந்தவற்றுக்கும் இடையே திரைபோடப்படும்; நிச்சயமாக அவர்கள் ஆழ்ந்த சந்தேகத்திலேயே இருந்தார்கள்.
38:32 فَقَالَ اِنِّىْۤ اَحْبَبْتُ حُبَّ الْخَيْرِ عَنْ ذِكْرِ رَبِّىْۚ حَتّٰى تَوَارَتْ بِالْحِجَابِ
38:32. "நிச்சயமாக நான் (சூரியன், இரவாகிய) திரைக்குள் மறைந்துவிடும் வரை, என்னுடைய இறைவனை நினைப்பதைவிட்டும் இந்த நல்ல பொருட்களின்மேல் அதிக அன்புபாராட்டி விட்டேன்" என அவர் கூறினார்.
41:5 وَقَالُوْا قُلُوْبُنَا فِىْۤ اَكِنَّةٍ مِّمَّا تَدْعُوْنَاۤ اِلَيْهِ وَفِىْۤ اٰذَانِنَا وَقْرٌ وَّمِنْۢ بَيْنِنَا وَبَيْنِكَ حِجَابٌ فَاعْمَلْ اِنَّنَا عٰمِلُوْنَ
41:5. மேலும் அவர்கள்: "நீர் எதன் பக்கம் எங்களை அழைக்கின்றீரோ அதனைவிட்டும் எங்கள் இதயங்கள் உறையினுள் இருக்கின்றன; எங்கள் காதுகளில் மந்தம் இருக்கின்றது; எங்களுக்கிடையிலும், உமக்கிடையிலும் திரை இருக்கிறது; ஆகவே, நீர் (உம் வேலையைச்) செய்து கொண்டிரும்! நிச்சயமாக நாங்கள் (எங்கள் வேலையைச்) செய்துகொண்டிருப்பவர்கள்" என்று கூறினர்.
42:51 وَمَا كَانَ لِبَشَرٍ اَنْ يُّكَلِّمَهُ اللّٰهُ اِلَّا وَحْيًا اَوْ مِنْ وَّرَآىٴِ حِجَابٍ اَوْ يُرْسِلَ رَسُوْلًا فَيُوْحِىَ بِاِذْنِهٖ مَا يَشَآءُؕ اِنَّهٗ عَلِىٌّ حَكِيْمٌ
42:51. அல்லாஹ் எந்த மனிதரிடத்திலும் வஹீயாகவோ, அல்லது திரைக்கப்பால் இருந்தோ, அல்லது தான் விரும்பியதைத் தன் அனுமதியைக் கொண்டு வஹீ அறிவிக்கக்கூடிய ஒரு தூதரை (- வானவரை) அனுப்பியோ அன்றி (நேரடியாகப்) பேசுவதில்லை. நிச்சயமாக அவன் உயர்ந்தவன்; ஞானமுடையவன்.
45:23 اَفَرَءَيْتَ مَنِ اتَّخَذَ اِلٰهَهٗ هَوٰٮهُ وَاَضَلَّهُ اللّٰهُ عَلٰى عِلْمٍ وَّخَتَمَ عَلٰى سَمْعِهٖ وَقَلْبِهٖ وَجَعَلَ عَلٰى بَصَرِهٖ غِشٰوَةً ؕ فَمَنْ يَّهْدِيْهِ مِنْۢ بَعْدِ اللّٰهِ ؕ اَفَلَا تَذَكَّرُوْنَ
45:23. (நபியே!) எவன் தன்னுடைய மனோ இச்சையைத் தன்னுடைய தெய்வமாக ஆக்கிக்கொண்டானோ, அவனை நீர் பார்த்தீரா? மேலும், அறிந்தே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டு அவனுடைய காதுகள் மீதும், இதயத்தின் மீதும் முத்திரையிட்டு - இன்னும், அவனுடைய பார்வை மீதும் திரையை அமைத்துவிட்டான்; எனவே, அல்லாஹ்வுக்குப் பிறகு அவனுக்கு நேர்வழி காண்பிப்பவர் யார்? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?
50:33 مَنْ خَشِىَ الرَّحْمٰنَ بِالْغَيْبِ وَجَآءَ بِقَلْبٍ مُّنِيْبِۙ
50:33. எவர் மறைவிலும் அளவற்ற அருளாளனை அஞ்சி (அவனையே) முற்றிலும் நோக்கிய இதயத்துடன் வந்தாரோ (அவருக்கு இது வாக்களிக்கப்பட்டிருக்கிறது).
83:15 كَلَّاۤ اِنَّهُمْ عَنْ رَّبِّهِمْ يَوْمَٮِٕذٍ لَّمَحْجُوْبُوْنَؕ
83:15. அப்படியல்ல! (தீர்ப்புக்குரிய) அந்நாளில் அவர்கள் தங்கள் இறைவனை விட்டும் திரையிடப்பட்டவர்களாவார்கள்.