துல்கர்னைன்
18:83   وَيَسْــٴَــلُوْنَكَ عَنْ ذِى الْقَرْنَيْنِ‌ ؕ قُلْ سَاَ تْلُوْا عَلَيْكُمْ مِّنْهُ ذِكْرًا ؕ‏
18:83. (நபியே!) அவர்கள் 'துல்கர்னைன்' பற்றி உங்களிடம் வினவுகின்றனர்; "அவரைப் பற்றிய செய்தியை உங்களுக்கு நான் ஓதிக் காண்பிக்கிறேன்" என்று நீர் கூறுவீராக!
18:98   قَالَ هٰذَا رَحْمَةٌ مِّنْ رَّبِّىْ‌ ۚ فَاِذَا جَآءَ وَعْدُ رَبِّىْ جَعَلَهٗ دَكَّآءَ‌ ۚ وَكَانَ وَعْدُ رَبِّىْ حَقًّا ؕ‏
18:98. "இது என் இறைவனிடமிருந்துள்ள ஒரு கிருபையே ஆகும்; ஆனால், என் இறைவனுடைய வாக்குறுதி நிறைவேறும்போது, அவன் இதனையும் தூள் தூளாக்கி விடுவான்; மேலும், என் இறைவனுடைய வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே" என்று கூறினார்.