பணியாளர்கள்
12:62 وَقَالَ لِفِتْيٰنِهِ اجْعَلُوْا بِضَاعَتَهُمْ فِىْ رِحَالِهِمْ لَعَلَّهُمْ يَعْرِفُوْنَهَاۤ اِذَا انْقَلَبُوْۤا اِلٰٓى اَهْلِهِمْ لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ
12:62. (பின்னர் யூஸுஃப்) தம் பணியாட்களை நோக்கி, "அவர்கள் கிரயமாகக் கொடுத்த பொருளை அவர்களுடைய மூட்டைகளிலே வைத்துவிடுங்கள்; அவர்கள் தம் குடும்பத்தாரிடம் சென்ற பிறகு இதை அறிந்தால், (நம்மிடம் அதைச் சேர்ப்பிக்க) அவர்கள் திரும்பி வரக்கூடும்" என்று கூறினார்.
18:60 وَاِذْ قَالَ مُوْسٰى لِفَتٰٮهُ لَاۤ اَبْرَحُ حَتّٰۤى اَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ اَوْ اَمْضِىَ حُقُبًا
18:60. இன்னும், மூஸா தம் பணியாளிடம், "இரு கடல்களும் சேரும் இடத்தை அடையும் வரை நீங்காது நடப்பேன்; அல்லது, நீண்ட காலம் (பயணிக்க நேர்ந்தாலும்) நான் போய்க் கொண்டிருப்பேன்" என்று கூறியதை நீர் நினைவுபடுத்துவீராக!
18:62 فَلَمَّا جَاوَزَا قَالَ لِفَتٰٮهُ اٰتِنَا غَدَآءَنَا لَقَدْ لَقِيْنَا مِنْ سَفَرِنَا هٰذَا نَصَبًا
18:62. அவ்விருவரும் அப்புறம் அந்த இடத்தைக் கடந்தபோது, தம் பணியாளை நோக்கி, "நம்முடைய காலை ஆகாரத்தைக் கொண்டுவா! இந்த நம் பயணத்தில் நிச்சயமாக நாம் களைப்பைச் சந்திக்கிறோம்" என்று (மூஸா) கூறினார்.
18:63 قَالَ اَرَءَيْتَ اِذْ اَوَيْنَاۤ اِلَى الصَّخْرَةِ فَاِنِّىْ نَسِيْتُ الْحُوْتَ وَ مَاۤ اَنْسٰٮنِيْهُ اِلَّا الشَّيْطٰنُ اَنْ اَذْكُرَهٗ ۚ وَاتَّخَذَ سَبِيْلَهٗ فِىْ الْبَحْرِ ۖ عَجَبًا
18:63. அதற்கு, "அக்கற்பாறையில் நாம் தங்கிய சமயத்தில் நீங்கள் பார்த்தீர்களா? நிச்சயமாக நான் மீனை மறந்துவிட்டேன்; மேலும், அதை (உங்களிடம்) நினைவுபடுத்துவதை ஷைத்தானையன்றி (வேறு எவனும்) என்னை மறக்கடிக்கவில்லை; மேலும், அது கடலுக்குள் தன் வழியை ஆச்சரியமாக அமைத்துக்கொண்டது" என்று (பணியாள்) கூறினார்.