9:5 فَاِذَا انْسَلَخَ الْاَشْهُرُ الْحُـرُمُ فَاقْتُلُوا الْمُشْرِكِيْنَ حَيْثُ وَجَدْتُّمُوْهُمْ وَخُذُوْهُمْ وَاحْصُرُوْهُمْ وَاقْعُدُوْا لَهُمْ كُلَّ مَرْصَدٍ ۚ فَاِنْ تَابُوْا وَاَقَامُوا الصَّلٰوةَ وَ اٰتَوُا الزَّكٰوةَ فَخَلُّوْا سَبِيْلَهُمْ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ
9:5. (போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்கை மிக்க மாதங்கள் கழிந்துவிட்டால், இணைவைப்பவர்களை நீங்கள் கண்ட இடங்களில் கொல்லுங்கள்; இன்னும், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையுமிடுங்கள்; ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள்; ஆனால், அவர்கள் (மனந்திருந்தி) பாவமன்னிப்புக் கோரி தொழுகையையும் கடைப்பிடித்து, ஜகாத்தும் (முறைப்படி) கொடுத்து வருவார்களானால் அவர்களுடைய வழியை விட்டுவிடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.