பலவீனம்
2:266   اَيَوَدُّ اَحَدُكُمْ اَنْ تَكُوْنَ لَهٗ جَنَّةٌ مِّنْ نَّخِيْلٍ وَّاَعْنَابٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُۙ لَهٗ فِيْهَا مِنْ كُلِّ الثَّمَرٰتِۙ وَاَصَابَهُ الْكِبَرُ وَلَهٗ ذُرِّيَّةٌ ضُعَفَآءُ ۖۚ فَاَصَابَهَاۤ اِعْصَارٌ فِيْهِ نَارٌ فَاحْتَرَقَتْ‌ؕ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمُ الْاٰيٰتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُوْنَ‏
2:266. உங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா? - அதாவது அவரிடம் பேரீச்சையும் திராட்சையும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது; அதன் கீழே நீரோடைகள் ஓடுகின்றன; அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன; (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது; அவருக்கு பலவீனமான சந்ததிகளே இருக்கின்றனர் - இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக்காற்று அ(ந்தத் தோட்டத்)தைத் தாக்கி பின்னர், எரித்து(ச் சாம்பலாக்கி)விடுகின்றது; (இதை அவர் விரும்புவாரா?) நீங்கள் சிந்தனை செய்வதற்காக அல்லாஹ் (தன்) அத்தாட்சிகளை உங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான்.
2:282   يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا تَدَايَنْتُمْ بِدَيْنٍ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى فَاكْتُبُوْهُ ؕ وَلْيَكْتُبْ بَّيْنَكُمْ كَاتِبٌۢ بِالْعَدْلِ‌ وَلَا يَاْبَ كَاتِبٌ اَنْ يَّكْتُبَ كَمَا عَلَّمَهُ اللّٰهُ‌ فَلْيَكْتُبْ ۚوَلْيُمْلِلِ الَّذِىْ عَلَيْهِ الْحَـقُّ وَلْيَتَّقِ اللّٰهَ رَبَّهٗ وَلَا يَبْخَسْ مِنْهُ شَيْئًا ؕ فَاِنْ كَانَ الَّذِىْ عَلَيْهِ الْحَـقُّ سَفِيْهًا اَوْ ضَعِيْفًا اَوْ لَا يَسْتَطِيْعُ اَنْ يُّمِلَّ هُوَ فَلْيُمْلِلْ وَلِيُّهٗ بِالْعَدْلِ‌ؕ وَاسْتَشْهِدُوْا شَهِيْدَيْنِ مِنْ رِّجَالِكُمْ‌ۚ فَاِنْ لَّمْ يَكُوْنَا رَجُلَيْنِ فَرَجُلٌ وَّامْرَاَتٰنِ مِمَّنْ تَرْضَوْنَ مِنَ الشُّهَدَآءِ اَنْ تَضِلَّ اِحْدٰٮهُمَا فَتُذَكِّرَ اِحْدٰٮهُمَا الْاُخْرٰى‌ؕ وَ لَا يَاْبَ الشُّهَدَآءُ اِذَا مَا دُعُوْا ؕ وَلَا تَسْــٴَــمُوْۤا اَنْ تَكْتُبُوْهُ صَغِيْرًا اَوْ كَبِيْرًا اِلٰٓى اَجَلِهٖ‌ؕ ذٰ لِكُمْ اَقْسَطُ عِنْدَ اللّٰهِ وَاَقْوَمُ لِلشَّهَادَةِ وَاَدْنٰۤى اَلَّا تَرْتَابُوْٓا اِلَّاۤ اَنْ تَكُوْنَ تِجَارَةً حَاضِرَةً تُدِيْرُوْنَهَا بَيْنَكُمْ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ اَلَّا تَكْتُبُوْهَا ؕ وَاَشْهِدُوْۤا اِذَا تَبَايَعْتُمْ وَلَا يُضَآرَّ كَاتِبٌ وَّلَا شَهِيْدٌ  ؕ وَاِنْ تَفْعَلُوْا فَاِنَّهٗ فُسُوْقٌ ۢ بِكُمْ ؕ وَ اتَّقُوا اللّٰهَ‌ ؕ وَيُعَلِّمُكُمُ اللّٰهُ‌ ؕ وَاللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ‏
2:282. நம்பிக்கை கொண்டோரே! ஒரு குறிப்பிட்ட தவணையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்துகொண்டால், அதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்; எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும்; எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது; (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக்கொடுத்தபடி அவன் எழுதட்டும்; இன்னும், யார் மீது (திருப்பிக் கொடுக்கவேண்டிய கடன்) பொறுப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும்; அவன் தனது இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளட்டும்; மேலும், அ(வன் வாங்கிய)தில் எதையும் குறைத்துவிடக்கூடாது; இன்னும், யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவன் அறிவு குறைந்தவனாகவோ, அல்லது பலவீனனாகவோ, அல்லது வாசகத்தைக் கூற இயலாதவனாகவோ இருப்பின் அவனுடைய பொறுப்பாளர் நீதமாக வாசகங்களைச் சொல்லட்டும்; தவிர, (நீங்கள் சாட்சியாக ஏற்கக்கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள்; ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சிகளில் நீங்கள் பொருந்தக் கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக்கொள்ளுங்கள்; (பெண்கள் இருவர்) ஏனென்றால், அவ்விருவரில் ஒருத்தி மறந்து விட்டால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்; அன்றியும், (சாட்சியம் கூற) சாட்சிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் மறுக்கலாகாது; தவிர, (கொடுக்கல், வாங்கல்) சிறிதோ, பெரிதோ அதை, அதன் காலவரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இருக்காதீர்கள்; இதுவே அல்லாஹ்விடம் மிகவும் நீதமானதாகும்; சாட்சியத்திற்கு உறுதியுண்டாக்குவதற்காகவும், இன்னும் இது உங்களுக்கு சந்தேகங்கள் ஏற்படாமல் இருக்க சிறந்த வழியாகவும் இருக்கும்; எனினும், உங்களுக்கிடையே உடனுக்குடன் நடைபெறும் வியாபாரமாக இருந்தால் தவிர அதை எழுதிக் கொள்ளாமல் இருப்பது உங்கள்மீது குற்றமில்லை; ஆனால், (அவ்வாறு) நீங்கள் வியாபாரம் செய்யும் போதும் சாட்சிகளை வைத்துக்கொள்ளுங்கள்-- அன்றியும் எழுதுபவனுக்கும், சாட்சிக்கும் (உங்களுக்கு சாதகமாக இருப்பதற்காகவோ, வேறு காரணத்திற்காகவோ) எவ்வித இடையூறும் அளிக்கப்படக்கூடாது; நீங்கள் அப்படிச் செய்வீர்களாயின் அது உங்கள்மீது நிச்சயமாக பாவமாகும்: அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்: அல்லாஹ்தான் உங்களுக்கு (நேரிய இவ்விதி முறைகளைக்) கற்றுக்கொடுக்கின்றான்; தவிர, அல்லாஹ்வே எல்லாப்பொருட்களையும் பற்றி நன்கறிபவன்.
3:146   وَكَاَيِّنْ مِّنْ نَّبِىٍّ قٰتَلَ ۙ مَعَهٗ رِبِّيُّوْنَ كَثِيْرٌ ۚ فَمَا وَهَنُوْا لِمَاۤ اَصَابَهُمْ فِىْ سَبِيْلِ اللّٰهِ وَمَا ضَعُفُوْا وَمَا اسْتَكَانُوْا ‌ؕ وَاللّٰهُ يُحِبُّ الصّٰبِرِيْنَ‏
3:146. மேலும், எத்தனையோ நபிமார்கள் - அவர்களுடன் அல்லாஹ்வின் நல்லடியார்கள் பெருமளவில் சேர்ந்து போர் செய்தனர்; எனினும், அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட (துன்பத்)திற்காக அவர்கள் தைரியம் இழந்து விடவில்லை; பலவீனம் அடைந்துவிடவுமில்லை; (எதிரிகளுக்குப்) பணிந்துவிடவுமில்லை - அல்லாஹ் (இத்தகைய) பொறுமையாளர்களையே நேசிக்கின்றான்.
4:9   وَلْيَخْشَ الَّذِيْنَ لَوْ تَرَكُوْا مِنْ خَلْفِهِمْ ذُرِّيَّةً ضِعٰفًا خَافُوْا عَلَيْهِمْ فَلْيَتَّقُوا اللّٰهَ وَلْيَقُوْلُوا قَوْلًا سَدِيْدًا‏
4:9. தங்களுக்குப் பின்னால் பலவீனமான சந்ததிகளை விட்டுச்சென்றால் அவர்களைக் குறித்து பயப்படுகிறவர்கள் (அநாதைகள், சிறுவர்கள் பங்கீடு விஷயத்தில்) பயந்து கொள்ளட்டும்; மேலும், அல்லாஹ்வை அஞ்சி இதமான சொல்லையே அவர்கள் சொல்லட்டும்.
4:28   يُرِيْدُ اللّٰهُ اَنْ يُّخَفِّفَ عَنْكُمْ‌ۚ وَخُلِقَ الْاِنْسَانُ ضَعِيْفًا‏
4:28. அன்றியும், அல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்கு இலேசாக்கவே விரும்புகிறான்; (ஏனெனில்,) மனிதன் பலவீனமானவனாகப் படைக்கப்பட்டுள்ளான்.
4:75   وَمَا لَـكُمْ لَا تُقَاتِلُوْنَ فِىْ سَبِيْلِ اللّٰهِ وَالْمُسْتَضْعَفِيْنَ مِنَ الرِّجَالِ وَالنِّسَآءِ وَالْوِلْدَانِ الَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَاۤ اَخْرِجْنَا مِنْ هٰذِهِ الْـقَرْيَةِ الظَّالِمِ اَهْلُهَا‌ ۚ وَاجْعَلْ لَّـنَا مِنْ لَّدُنْكَ وَلِيًّا ۙۚ وَّاجْعَلْ لَّـنَا مِنْ لَّدُنْكَ نَصِيْرًا ؕ‏
4:75. இன்னும், அல்லாஹ்வின் பாதையில், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் ஆகியோரில் பலவீனமானவர்களின் (பாதுகாப்பு) விஷயத்திலும், நீங்கள் போர் செய்யாதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? (அவர்களோ) "எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் இருக்கும் இவ்வூரைவிட்டு எங்களை நீ வெளியேற்றுவாயாக! எங்களுக்காக உன்னிடமிருந்து (தக்க) ஒரு பாதுகாவலரை ஆக்குவாயாக! இன்னும், எங்களுக்காக உன்னிடமிருந்து ஓர் உதவியாளரையும் ஏற்படுத்துவாயாக!" என்று பிரார்த்தனை செய்கிறார்கள்.
4:76   اَلَّذِيْنَ اٰمَنُوْا يُقَاتِلُوْنَ فِىْ سَبِيْلِ اللّٰهِ‌‌ ۚ وَالَّذِيْنَ كَفَرُوْا يُقَاتِلُوْنَ فِىْ سَبِيْلِ الطَّاغُوْتِ فَقَاتِلُوْۤا اَوْلِيَآءَ الشَّيْطٰنِ‌ۚ اِنَّ كَيْدَ الشَّيْطٰنِ كَانَ ضَعِيْفًا‏
4:76. நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்கிறார்கள்; நிராகரிப்பவர்கள் ஷைத்தானின் பாதையில் போர் செய்கிறார்கள்; ஆகவே, (நம்பிக்கையாளர்களாகிய) நீங்கள் ஷைத்தானின் நண்பர்களுக்கு எதிராகப் போர் புரியுங்கள்: நிச்சயமாக ஷைத்தானின் சூழ்ச்சி பலவீனமானதேயாகும்.
4:97   اِنَّ الَّذِيْنَ تَوَفّٰٮهُمُ الْمَلٰٓٮِٕكَةُ ظَالِمِىْۤ اَنْفُسِهِمْ قَالُوْا فِيْمَ كُنْتُمْ‌ؕ قَالُوْا كُنَّا مُسْتَضْعَفِيْنَ فِىْ الْاَرْضِ‌ؕ قَالُوْۤا اَلَمْ تَكُنْ اَرْضُ اللّٰهِ وَاسِعَةً فَتُهَاجِرُوْا فِيْهَا‌ؕ فَاُولٰٓٮِٕكَ مَاْوٰٮهُمْ جَهَـنَّمُ‌ؕ وَسَآءَتْ مَصِيْرًا ۙ‏
4:97. (அல்லாஹ்வின் ஆணையை நிறைவேற்றாது) எவர் தமக்குத்தாமே அநியாயம் செய்து கொண்டார்களோ, அவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும்போது, "நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்?" என்று கேட்பார்கள்; (அதற்கவர்கள்) "நாங்கள் பூமியில் (கொடுமையை எதிர்க்கமுடியாத) பலவீனர்களாக இருந்தோம்" என்று கூறுவார்கள்; "அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இல்லையா? அதில் நீங்கள் ஹிஜ்ரத் செய்திருக்கக்கூடாதா?" என அவர்கள் (வானவர்கள்) கேட்பார்கள்; எனவே, இத்தகையோர் ஒதுங்குமிடம் நரகம்தான்; சென்றடையும் இடங்களில் அது மிகக் கெட்டதாகும்.
4:98   اِلَّا الْمُسْتَضْعَفِيْنَ مِنَ الرِّجَالِ وَالنِّسَآءِ وَالْوِلْدَانِ لَا يَسْتَطِيْعُوْنَ حِيْلَةً وَّلَا يَهْتَدُوْنَ سَبِيْلًا ۙ‏
4:98. (ஆனால்) ஆண்களிலும், பெண்களிலும், சிறுவர்களிலும் பலவீனமானவர்களைத் தவிர; ஏனெனில், இவர்கள் எவ்வித தந்திரமும் செய்ய இயலாதவர்கள்; (வெளியேறிச் செல்ல) வழியும் அறியமாட்டார்கள்.
4:127   وَيَسْتَفْتُوْنَكَ فِى النِّسَآءِ ‌ؕ قُلِ اللّٰهُ يُفْتِيْكُمْ فِيْهِنَّ ۙ وَمَا يُتْلٰى عَلَيْكُمْ فِى الْكِتٰبِ فِىْ يَتٰمَى النِّسَآءِ الّٰتِىْ لَا تُؤْتُوْنَهُنَّ مَا كُتِبَ لَهُنَّ وَتَرْغَبُوْنَ اَنْ تَـنْكِحُوْهُنَّ وَالْمُسْتَضْعَفِيْنَ مِنَ الْوِلْدَانِ ۙ وَاَنْ تَقُوْمُوْا لِلْيَتٰمٰى بِالْقِسْطِ‌ ؕ وَمَا تَفْعَلُوْا مِنْ خَيْرٍ فَاِنَّ اللّٰهَ كَانَ بِهٖ عَلِيْمًا‏
4:127. (நபியே! மக்கள்) உம்மிடம் பெண்கள் பற்றி மார்க்கத்தீர்ப்பு கேட்கிறார்கள்; அதற்கு நீர், "அவர்களைப் பற்றி அல்லாஹ் உங்களுக்குத் தீர்ப்புக் கூறுவான்" என்று சொல்லும்; தவிர, வேதத்தில் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்படுவது அநாதைப் பெண்கள் சம்பந்தமாக அவர்களுக்கு விதிக்கப்பட்டதை, (மஹரை) நீங்கள் அவர்களுக்குக் கொடுக்காமல் அவர்களை நீங்கள் மணந்துகொள்ள விரும்பிக்கொண்டிருந்ததைப் பற்றியும், குழந்தைகளில் பலவீனமானவர்களைப் பற்றியும், அநாதைகளுக்கு நீங்கள் நீதியை நிலைநிறுத்த வேண்டும் என்பது பற்றியுமாகும்; ஆகவே, (அவர்களுக்கு) நன்மையாக நீங்கள் எதைச் செய்தாலும், அதை அல்லாஹ் நிச்சயமாக நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.
7:75   قَالَ الْمَلَاُ الَّذِيْنَ اسْتَكْبَرُوْا مِنْ قَوْمِهٖ لِلَّذِيْنَ اسْتُضْعِفُوْا لِمَنْ اٰمَنَ مِنْهُمْ اَتَعْلَمُوْنَ اَنَّ صٰلِحًا مُّرْسَلٌ مِّنْ رَّبِّهٖ‌ؕ قَالُـوْۤا اِنَّا بِمَاۤ اُرْسِلَ بِهٖ مُؤْمِنُوْنَ‏
7:75. அவருடைய சமூகத்தாரிலிருந்து (நம்பிக்கை கொள்ளாமல்) பெருமையடித்துக் கொண்டிருந்த தலைவர்கள், பலஹீனர்களாகக் கருதப்பட்ட அவர்களில் நம்பிக்கை கொண்டவர்களை நோக்கி "நிச்சயமாக 'ஸாலிஹ்' அவருடைய இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட தூதர் என நீங்கள் உறுதியாக அறிவீர்களோ?" எனக் கேட்டார்கள். அதற்கு அவர்கள், "நிச்சயமாக நாங்கள் - எதைக்கொண்டு அவர் அனுப்பப்பட்டாரோ அ(ந்தத் தூ)தை நம்புகிறவர்களே!" என்று (பதில்) கூறினார்கள்.
7:150   وَلَمَّا رَجَعَ مُوْسٰٓى اِلٰى قَوْمِهٖ غَضْبَانَ اَسِفًا ۙ قَالَ بِئْسَمَا خَلَفْتُمُوْنِىْ مِنْۢ بَعْدِىْ ۚ اَعَجِلْتُمْ اَمْرَ رَبِّكُمْ‌ ۚ وَاَلْقَى الْاَلْوَاحَ وَاَخَذَ بِرَاْسِ اَخِيْهِ يَجُرُّهٗۤ اِلَيْهِ‌ؕ قَالَ ابْنَ اُمَّ اِنَّ الْـقَوْمَ اسْتَضْعَفُوْنِىْ وَكَادُوْا يَقْتُلُوْنَنِىْ ‌ۖ  فَلَا تُشْمِتْ بِىَ الْاَعْدَآءَ وَ لَا تَجْعَلْنِىْ مَعَ الْقَوْمِ الظّٰلِمِيْنَ‏
7:150. (இதனையறிந்த) மூஸா தன் சமூகத்தாரிடம் கோபமுற்றவராகவும், வருத்தம் நிறைந்தவராகவும் திரும்பி வந்தபோது (அவர்களை நோக்கி) "நான் இல்லாத சமயத்தில் நீங்கள் செய்தது மிகவும் கெட்டது; உங்கள் இறைவனுடைய கட்டளை (வேதனை)யை(க் கொண்டுவர) அவசரப்படுகிறீர்களா?" என்று கூறினார்; பின்னர், பலகைகளைப் போட்டுவிட்டு, தம் சகோதரர் (ஹாரூன்) உடைய தலை(முடி)யைப் பிடித்து அவரைத் தம் பக்கம் இழுத்தார். அப்போது (ஹாரூன்) "என் தாயின் மகனே! இந்த மக்கள் என்னைப் பலவீனமாகக் கருதி என்னைக் கொலை செய்யவும் முற்பட்டனர்; ஆகவே, (என்னுடைய) பகைவர்களுக்கு என் மூலம் மகிழ்ச்சியை ஏற்படுத்திவிடாதீர்; இன்னும், என்னை அநியாயக்காரக் கூட்டத்தாருடன் சேர்த்து விடாதீர்" என்று கூறினார்.
8:26   وَاذْكُرُوْۤا اِذْ اَنْـتُمْ قَلِيْلٌ مُّسْتَضْعَفُوْنَ فِى الْاَرْضِ تَخَافُوْنَ اَنْ يَّتَخَطَّفَكُمُ النَّاسُ فَاٰوٰٮكُمْ وَاَيَّدَكُمْ بِنَصْرِهٖ وَرَزَقَكُمْ مِّنَ الطَّيِّبٰتِ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏
8:26. நீங்கள் பூமியில் (மக்காவில்) சிறு தொகையினராகவும், பலவீனமானவர்களாகவும் இருந்த நிலையில், உங்களை (எந்த நேரத்திலும்) மனிதர்கள் இறாஞ்சிக்கொண்டு சென்றுவிடுவார்கள் என்று நீங்கள் பயப்பட்டுக் கொண்டிருந்தபோது, அவன் உங்களுக்கு (மதீனாவில்) புகலிடம் அளித்துத் தன் உதவியைக்கொண்டு உங்களைப் பலப்படுத்தினான்; இன்னும், நல்லவற்றிலிருந்து உங்களுக்கு உணவளித்ததையும் நினைவு கூருங்கள்; நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்துவதற்காக.
8:66   اَلْـٰٔـنَ خَفَّفَ اللّٰهُ عَنْكُمْ وَعَلِمَ اَنَّ فِيْكُمْ ضَعْفًا‌ؕ فَاِنْ يَّكُنْ مِّنْكُمْ مِّائَةٌ صَابِرَةٌ يَّغْلِبُوْا مِائَتَيْنِ‌ۚ وَاِنْ يَّكُنْ مِّنْكُمْ اَلْفٌ يَّغْلِبُوْۤا اَلْفَيْنِ بِاِذْنِ اللّٰهِؕ وَ اللّٰهُ مَعَ الصّٰبِرِيْنَ‏
8:66. நிச்சயமாக உங்களில் பலவீனம் இருக்கின்றது என்பதை அறிந்து இப்பொழுது அல்லாஹ் (அதனை) உங்களுக்கு இலகுவாக்கிவிட்டான்; எனவே, உங்களில் பொறுமையுடைய நூறுபேர் இருந்தால், அவர்கள் இருநூறுபேர் மீது வெற்றிக் கொள்வார்கள்; உங்களில் (இத்தகையோர்) ஆயிரம் பேர் இருந்தால், அல்லாஹ்வின் உத்தரவுக் கொண்டு அவர்களில் இரண்டாயிரம் பேர் மீது அவர்கள் வெற்றி கொள்வார்கள்; மேலும், அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.
9:91   لَـيْسَ عَلَى الضُّعَفَآءِ وَلَا عَلَى الْمَرْضٰى وَلَا عَلَى الَّذِيْنَ لَا يَجِدُوْنَ مَا يُنْفِقُوْنَ حَرَجٌ اِذَا نَصَحُوْا لِلّٰهِ وَ رَسُوْلِهٖ‌ؕ مَا عَلَى الْمُحْسِنِيْنَ مِنْ سَبِيْلٍ‌ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌۙ‏
9:91. பலவீனர்கள் மீதும், நோயாளிகள் மீதும், (போருக்காக) செலவு செய்வதற்குரிய (பொருள் முதலிய) வற்றைப் பெற்றுக்கொள்ளாதவர்களின் மீதும் - அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் நலம் நாடியிருந்தார்களானால் - அவர்கள் (போருக்குச் செல்லாமலிருப்பதில்) எவ்வித குற்றமும் இல்லை; (இத்தகு) நன்மை செய்வோரின் மீது (குறைகூற) எவ்வித வழியுமில்லை; அல்லாஹ் மன்னிப்பவன்; கிருபையுள்ளவன்.
11:91   قَالُوْا يٰشُعَيْبُ مَا نَفْقَهُ كَثِيْرًا مِّمَّا تَقُوْلُ وَاِنَّا لَـنَرٰٮكَ فِيْنَا ضَعِيْفًا‌ ۚ وَلَوْلَا رَهْطُكَ لَرَجَمْنٰكَ‌ وَمَاۤ اَنْتَ عَلَيْنَا بِعَزِيْزٍ‏
11:91. (அதற்கு) அவர்கள், "ஷுஐபே! நீர் சொல்பவற்றில் பெரும்பாலானதை நாங்கள் புரிந்து கொள்ளமுடியவில்லை; நிச்சயமாக உம்மை எங்களிடையே பலவீனமானவராகவே நாங்கள் காண்கின்றோம்; உம் குலத்தார் இல்லையென்றால், உம்மை நாங்கள் கல்லால் அடித்து(க் கொன்று) இருப்போம்; நீர் எங்களில் மதிப்புக்குரியவரும் அல்லர்" என்று கூறினார்கள்.
14:21   وَبَرَزُوْا لِلّٰهِ جَمِيْعًا فَقَالَ الضُّعَفٰۤؤُا لِلَّذِيْنَ اسْتَكْبَرُوْۤا اِنَّا كُنَّا لَـكُمْ تَبَعًا فَهَلْ اَنْـتُمْ مُّغْـنُوْنَ عَنَّا مِنْ عَذَابِ اللّٰهِ مِنْ شَىْءٍ‌ؕ قَالُوْا لَوْ هَدٰٮنَا اللّٰهُ لَهَدَيْنٰكُمْ‌ؕ سَوَآءٌ عَلَيْنَاۤ اَجَزِعْنَاۤ اَمْ صَبَرْنَا مَا لَــنَا مِنْ مَّحِيْصٍ‏
14:21. அன்றியும், அனைவரும் (வெளிப்பட்டு, மறுமை நாளில்) அல்லாஹ்வுக்கு முன்னே நிற்பார்கள்; அப்போது, (இவ்வுலகில்) பலவீனமானவர்கள் (இவ்வுலகில்) பெருமை அடித்துக்கொண்டிருந்தவர்களை நோக்கி: "நிச்சயமாக நாங்கள் (உலகில்) உங்களைப் பின்தொடர்பவர்களாக இருந்தோம்; இப்போது அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து எதையேனும் எங்களைவிட்டும் நீங்கள் தடுப்பவர்களாக இருக்கிறீர்களா?" என்று கேட்பார்கள்; (அதற்கு) அவர்கள், "அல்லாஹ் எங்களுக்கு (ஏதாவது) வழியைக்காட்டினால், நாங்கள் (அவ்வழியை) உங்களுக்குக் காட்டுவோம்; (தப்பிக்க வழியேயின்றி வேதனையை அஞ்சி) நாம் பதறிக் கலங்கினாலும், அல்லது பொறுமையாக இருந்தாலும் நமக்கு ஒன்றுதான்; வேறு புகலிடமே நமக்கு இல்லையே!" என்று (கைசேதப்பட்டுக்) கூறுவார்கள்.
19:75   قُلْ مَنْ كَانَ فِى الضَّلٰلَةِ فَلْيَمْدُدْ لَهُ الرَّحْمٰنُ مَدًّا ۚ‌ حَتّٰٓى اِذَا رَاَوْا مَا يُوْعَدُوْنَ اِمَّا الْعَذَابَ وَاِمَّا السَّاعَةَ ؕ فَسَيَـعْلَمُوْنَ مَنْ هُوَ شَرٌّ مَّكَانًا وَّاَضْعَفُ جُنْدًا‏
19:75. யார் வழிகேட்டில் இருக்கிறார்களோ அவர்கள் வாக்களிக்கப்பட்ட (இவ்வுலக) வேதனையை அல்லது மறுமையைக் காணும் வரை, அளவற்ற அருளாளன் அவர்களுக்குக் கால அவகாசத்தை நீட்டிவிடுகிறான்; அப்பொழுது, இடத்தால் கெட்டவர் யார்? படையால் பலவீனமானவர் யார்? என்பதைத் திட்டமாக அவர்கள் அறிந்து கொள்வார்கள்" என்று (நபியே) நீர் கூறுவீராக!
22:73   يٰۤـاَيُّهَا النَّاسُ ضُرِبَ مَثَلٌ فَاسْتَمِعُوْا لَهٗ ؕ اِنَّ الَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَنْ يَّخْلُقُوْا ذُبَابًا وَّلَوِ اجْتَمَعُوْا لَهٗ‌ ؕ وَاِنْ يَّسْلُبْهُمُ الذُّبَابُ شَيْــٴًـــا لَّا يَسْتَـنْـقِذُوْهُ مِنْهُ‌ ؕ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوْبُ‏
22:73. மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது: எனவே, அதனைச் செவிதாழ்த்திக் கேளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ அவர்கள் ஒரு ஈயைக்கூடப் படைக்க முடியாது; அதற்காக அவர்கள் ஒன்று சேர்ந்தாலும் சரியே! இன்னும், ஈ அவர்களிடமிருந்து ஒரு பொருளைப் பிடுங்கிக் கொண்டாலும், அதனை அதனிடமிருந்து அவர்கள் விடுவிக்கவும் முடியாது; தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனர்களே.
28:4   اِنَّ فِرْعَوْنَ عَلَا فِى الْاَرْضِ وَجَعَلَ اَهْلَهَا شِيَـعًا يَّسْتَضْعِفُ طَآٮِٕفَةً مِّنْهُمْ يُذَبِّحُ اَبْنَآءَهُمْ وَيَسْتَحْىٖ نِسَآءَهُمْ‌ ؕ اِنَّهٗ كَانَ مِنَ الْمُفْسِدِيْنَ‏
28:4. நிச்சயமாக ஃபிர்அவ்ன் இப்பூமியில் பெருமையடித்துக்கொண்டு, அதிலுள்ளவர்களைப் (பல) பிரிவினர்களாக்கி, அவர்களிலிருந்து ஒரு கூட்டத்தாரை பலவீனப்படுத்தினான்; அவர்களுடைய ஆண் குழந்தைகளை அறுத்து (கொலை செய்து), பெண் குழந்தைகளை உயிருடன் விட்டுவைத்தான்; நிச்சயமாக அவன் குழப்பம் செய்வோரில் ஒருவனாக இருந்தான்.
28:5   وَنُرِيْدُ اَنْ نَّمُنَّ عَلَى الَّذِيْنَ اسْتُضْعِفُوْا فِى الْاَرْضِ وَنَجْعَلَهُمْ اَٮِٕمَّةً وَّنَجْعَلَهُمُ الْوٰرِثِيْنَۙ‏
28:5. ஆயினும், (எகிப்திய) பூமியில் பலவீனப்படுத்தப்பட்டோருக்கு நாம் உபகாரம் செய்யவும், அவர்களைத் தலைவர்களாக்கிவிடவும், அவர்களை (நாட்டுக்கு) வாரிசுகளாக்கவும் நாம் நாடினோம்.
30:54   اَللّٰهُ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ ضُؔعْفٍ ثُمَّ جَعَلَ مِنْۢ بَعْدِ ضُؔعْفٍ قُوَّةً ثُمَّ جَعَلَ مِنْۢ بَعْدِ قُوَّةٍ ضُؔعْفًا وَّشَيْبَةً  ‌ؕ يَخْلُقُ مَا يَشَآءُ ‌ۚ وَهُوَ الْعَلِيْمُ الْقَدِيْرُ‏
30:54. அல்லாஹ்தான் உங்களை (ஆரம்பத்தில்) பலவீனமான நிலையில் படைத்தான்; பலவீனத்திற்குப் பின்னர், அவனே பலத்தை(யும் உங்களுக்கு) உண்டாக்கினான்; (அந்தப்) பலத்திற்குப்பின் பலவீனத்தையும், நரையையும் அவனே ஆக்கினான்; தான் நாடியதை அவன் படைக்கிறான்; அவனே எல்லாம் அறிந்தவன், பேராற்றலுடையவன்.
34:31   وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لَنْ نُّؤْمِنَ بِهٰذَا الْقُرْاٰنِ وَلَا بِالَّذِىْ بَيْنَ يَدَيْهِؕ وَلَوْ تَرٰٓى اِذِ الظّٰلِمُوْنَ مَوْقُوْفُوْنَ عِنْدَ رَبِّهِمْ ۖۚ يَرْجِعُ بَعْضُهُمْ اِلٰى بَعْضِ اۨلْقَوْلَ‌ۚ يَقُوْلُ الَّذِيْنَ اسْتُضْعِفُوْا لِلَّذِيْنَ اسْتَكْبَرُوْا لَوْلَاۤ اَنْـتُمْ لَـكُـنَّا مُؤْمِنِيْنَ‏
34:31. "இந்தக் குர்ஆனையும் இதற்கு முன்னுள்ளதையும் நிச்சயமாக நாங்கள் நம்பமாட்டோம்" என்று நிராகரித்தவர்கள் கூறுகிறார்கள்; இந்த அநியாயக்காரர்கள் தங்கள் இறைவனிடம் நிறுத்தப்படும்போது நீர் பார்ப்பீரானால், அவர்களில் சிலர் சிலர்மீது பேச்சைத் திருப்பி, பலவீனர்களாகக் கருதப்பட்டவர்கள் பெருமையைத் தேடிக் கொண்டிருந்தோரை நோக்கி, "நீங்கள் இல்லாதிருந்திருப்பின், நிச்சயமாக நாங்கள் நம்பிக்கையாளர்களாகியிருப்போம்" என்று கூறுவார்கள்.
34:33   وَقَالَ الَّذِيْنَ اسْتُضْعِفُوْا لِلَّذِيْنَ اسْتَكْبَرُوْا بَلْ مَكْرُ الَّيْلِ وَ النَّهَارِ اِذْ تَاْمُرُوْنَـنَاۤ اَنْ نَّـكْفُرَ بِاللّٰهِ وَنَجْعَلَ لَهٗۤ اَنْدَادًا ؕ وَاَسَرُّوا النَّدَامَةَ لَمَّا رَاَوُا الْعَذَابَ ؕ وَجَعَلْنَا الْاَغْلٰلَ فِىْۤ اَعْنَاقِ الَّذِيْنَ كَفَرُوْا ؕ هَلْ يُجْزَوْنَ اِلَّا مَا كَانُوْا يَعْمَلُوْنَ‏
34:33. அதற்குப் பலவீனர்களாகக் கருதப்பட்டவர்கள் பெருமை தேடிக் கொண்டவர்களிடம், "அப்படியல்ல! நாங்கள் அல்லாஹ்வை நிராகரிப்பதற்கும் அவனுக்கு இணைகளை நாங்கள் கற்பிப்பதற்கும் நீங்கள் எங்களுக்கு ஏவியபொழுது (அது) இரவிலும், பகலிலும் உள்ள (உங்களுடைய) சூழ்ச்சியாகும்" என்று கூறுவார்கள்; மேலும், அவர்கள் வேதனையைப் பார்க்கும்போது இந்தக் கைசேதத்தை (ஒருவருக்கொருவர்) மறைப்பார்கள்: இன்னும், நிராகரித்தவர்களுடைய கழுத்துகளில் நாம் விலங்குகளை மாட்டுவோம்; அவர்கள் செய்து கொண்டிருந்த (தீ)வினைகளுக்கன்றி கூலி கொடுக்கப்படுவார்களா?
40:47   وَاِذْ يَتَحَآجُّوْنَ فِى النَّارِ فَيَقُوْلُ الضُّعَفٰٓؤُا لِلَّذِيْنَ اسْتَكْبَرُوْۤا اِنَّا كُنَّا لَـكُمْ تَبَعًا فَهَلْ اَنْتُمْ مُّغْنُوْنَ عَنَّا نَصِيْبًا مِّنَ النَّارِ‏
40:47. அவர்கள் நரக நெருப்பில் தர்க்கம் செய்து கொண்டு, பலவீனர்கள் பெருமை அடித்துக் கொண்டிருந்தோரை நோக்கி, "நிச்சயமாக நாங்கள் உங்களைப் பின்பற்றுபவர்களாக இருந்தோம்; எனவே, எங்களைவிட்டும் இந்நெருப்பிலிருந்து ஒரு பகுதியையாவது நீங்கள் தடுத்துவிடுபவர்களா?" என்று அவர்கள் சொல்லும் வேளையை (நினைவூட்டுவீராக)!
55:22   يَخْرُجُ مِنْهُمَا اللُّـؤْلُـؤُ وَالْمَرْجَانُ‌ۚ‏
55:22. அவ்விரண்டிலிருந்தும் முத்தும் பவளமும் வெளியாகின்றன.
55:58   كَاَنَّهُنَّ الْيَاقُوْتُ وَالْمَرْجَانُ‌ۚ‏
55:58. அவர்கள் வெண் முத்தைப் போன்றும், பவளத்தைப் போன்றும் இருப்பார்கள்.
72:24   حَتّٰٓى اِذَا رَاَوْا مَا يُوْعَدُوْنَ فَسَيَعْلَمُوْنَ مَنْ اَضْعَفُ نَاصِرًا وَّاَقَلُّ عَدَدًا‏
72:24. அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை (வேதனையை) அவர்கள் பார்க்கும்போது, எவருடைய உதவியாளர் மிகப் பலவீனமானவர் என்பதையும்; (எவருடைய உதவியாளர்) எண்ணிக்கையில் மிகக் குறைந்தவர் என்பதையும் விரைவில் அறிந்துகொள்வார்கள்.