பழிவாங்குதல்
2:178 يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَيْكُمُ الْقِصَاصُ فِى الْقَتْلٰى ؕ الْحُرُّ بِالْحُـرِّ وَالْعَبْدُ بِالْعَبْدِ وَالْاُنْثَىٰ بِالْاُنْثٰىؕ فَمَنْ عُفِىَ لَهٗ مِنْ اَخِيْهِ شَىْءٌ فَاتِّبَاعٌۢ بِالْمَعْرُوْفِ وَاَدَآءٌ اِلَيْهِ بِاِحْسَانٍؕ ذٰلِكَ تَخْفِيْفٌ مِّنْ رَّبِّكُمْ وَرَحْمَةٌ ؕ فَمَنِ اعْتَدٰى بَعْدَ ذٰلِكَ فَلَهٗ عَذَابٌ اَلِيْمٌۚ
2:178. நம்பிக்கை கொண்டோரே! கொலைக்காகப் பழிதீர்ப்பது உங்கள்மீது விதிக்கப்பட்டுள்ளது - சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்; அடிமைக்கு அடிமை, பெண்ணுக்குப் பெண்; இருப்பினும் (கொலை செய்த) அவனுக்கு அவனது சகோதரனால் (ஆகிய கொலையுண்டவனின் வாரிசுகளால்) ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப்பெறும் நஷ்டஈட்டை) பெருந்தன்மையுடன் அவன்பால் செலுத்திவிட வேண்டும் - இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும் கிருபையுமாகும்; ஆகவே, இதன் பிறகு (உங்களில்) யார் வரம்புமீறுகிறாரோ, அவருக்குத் துன்புறுத்தும் வேதனையுண்டு.
2:179 وَ لَـكُمْ فِى الْقِصَاصِ حَيٰوةٌ يّٰٓـاُولِىْ الْاَلْبَابِ لَعَلَّکُمْ تَتَّقُوْنَ
2:179. அறிவுடையோரே! (கொலைக்குப்) பழி வாங்குவதில் உங்களுக்கு வாழ்வுண்டு; (இத்தகைய குற்றம் பெருகாமல்) நீங்கள் உங்களை(த் தீமைகளிலிருந்து) காத்துக்கொள்ளலாம்.
2:194 اَلشَّهْرُ الْحَـرَامُ بِالشَّهْرِ الْحَـرَامِ وَالْحُرُمٰتُ قِصَاصٌؕ فَمَنِ اعْتَدٰى عَلَيْكُمْ فَاعْتَدُوْا عَلَيْهِ بِمِثْلِ مَا اعْتَدٰى عَلَيْكُمْ وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ مَعَ الْمُتَّقِيْنَ
2:194. (போர் செய்வது விலக்கப்பட்டுள்ள ரஜப், துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய) புனித மாதத்திற்குப் புனித மாதமே ஈடாகும்; புனிதமாக்கப்பட்டவை (அவற்றின் கண்ணியம் எவராலும் சீர் குலைக்கப்பட்டால் அவரிடம்) பழிவாங்கப்படும்; ஆகவே, எவனாவது (அம்மாதத்தில்) உங்களுக்கு எதிராக வரம்பு மீறினால், உங்கள்மேல் அவன் எவ்வளவு வரம்பு மீறியுள்ளானோ, அதே அளவு நீங்கள் அவன் மேல் வரம்புமீறுங்கள். அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் இறையச்சமுடையோருடன் இருக்கின்றான் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
5:45 وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيْهَاۤ اَنَّ النَّفْسَ بِالنَّفْسِۙ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْاَنْفَ بِالْاَنْفِ وَالْاُذُنَ بِالْاُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّۙ وَالْجُرُوْحَ قِصَاصٌؕ فَمَنْ تَصَدَّقَ بِهٖ فَهُوَ كَفَّارَةٌ لَّهٗ ؕ وَمَنْ لَّمْ يَحْكُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ فَاُولٰٓٮِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ
5:45. அவர்களுக்கு நாம் அதில், "உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல் ஆகவும், காயங்களுக்கு(ச் சமமான காயங்களாகவும்) பழிவாங்கப்படும்" என்று விதித்திருந்தோம்; எனினும், ஒருவர் இதனை (பழி வாங்குவதை மன்னித்து) தர்மமாக விட்டுவிட்டால், அது அவரு(டைய பாவங்களு)க்குப் பரிகாரமாகும்; எவர்கள் அல்லாஹ் இறக்கிவைத்த (வேதக் கட்டளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ - நிச்சயமாக அவர்கள்தாம் அநியாயக்காரர்கள்.
16:126 وَاِنْ عَاقَبْتُمْ فَعَاقِبُوْا بِمِثْلِ مَا عُوْقِبْتُمْ بِهٖۚ وَلَٮِٕنْ صَبَرْتُمْ لَهُوَ خَيْرٌ لِّلصّٰبِرِيْنَ
16:126. (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் தண்டிப்பதாக இருந்தால், எந்த அளவிற்கு நீங்கள் தண்டிக்கப்பட்டீர்களோ, அதுபோன்ற அளவுக்கே நீங்களும் தண்டியுங்கள்; நீங்கள் பொறுத்துக்கொண்டால் நிச்சயமாக அதுவே பொறுமையாளர்களுக்கு மிக்க மேன்மையானதாகும்.