பாதிரிகள்
5:63   لَوْلَا يَنْهٰٮهُمُ الرَّبَّانِيُّوْنَ وَالْاَحْبَارُ عَنْ قَوْلِهِمُ الْاِثْمَ وَاَكْلِهِمُ السُّحْتَ‌ؕ لَبِئْسَ مَا كَانُوْا يَصْنَعُوْنَ‏
5:63. அவர்கள் பாவமானதைக் கூறுவதிலிருந்தும், விலக்கப்பட்டதை அவர்கள் உண்பதிலிருந்தும், வணக்கசாலிகளும், (அவர்களுடைய) மேதைகளும் அவர்களைத் தடுத்திருக்க வேண்டாமா? இவர்கள் செய்துகொண்டிருப்பவை மிகக் கெட்டவையாகும்.
6:138   وَقَالُوْا هٰذِهٖۤ اَنْعَامٌ وَّحَرْثٌ حِجْرٌ ‌ۖ لَّا يَطْعَمُهَاۤ اِلَّا مَنْ نَّشَآءُ بِزَعْمِهِمْ وَاَنْعَامٌ حُرِّمَتْ ظُهُوْرُهَا وَاَنْعَامٌ لَّا يَذْكُرُوْنَ اسْمَ اللّٰهِ عَلَيْهَا افْتِرَآءً عَلَيْهِ ‌ؕ سَيَجْزِيْهِمْ بِمَا كَانُوْا يَفْتَرُوْنَ‏
6:138. மேலும், (தம் தெய்வங்களுக்கென ஒதுக்கிய சிலவற்றைக் குறித்து,) "இவை (புசிப்பதற்கு) தடுக்கப்பட்டுள்ள கால்நடைகளும், விவசாயமாகும்; இவற்றை நாங்கள் விரும்புகின்றவர்களைத் தவிர (வேறு எவரும்) சாப்பிடக்கூடாது" என்று தங்கள் எண்ணப்படி அவர்கள் கூறுகின்றனர்; மேலும், சில கால்நடைகளின் முதுகுகள் (சவாரிக்காக) தடை செய்யப்பட்டுள்ளன (என்றும்) இன்னும், சில கால்நடைகள் (அவற்றை அறுக்கும்போது) அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறக்கூடாதென்றும் அவன்மீது கற்பனையாகக் கூறுகின்றனர்; அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்த காரணத்தால், அவர்களுக்கு அவன் தண்டனை வழங்குவான்.
9:31   اِتَّخَذُوْۤا اَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ اَرْبَابًا مِّنْ دُوْنِ اللّٰهِ وَالْمَسِيْحَ ابْنَ مَرْيَمَ‌ ۚ وَمَاۤ اُمِرُوْۤا اِلَّا لِيَـعْبُدُوْۤا اِلٰهًا وَّاحِدًا‌ ۚ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ‌ ؕ سُبْحٰنَهٗ عَمَّا يُشْرِكُوْنَ‏
9:31. அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிமார்களையும், தம் சந்நியாசிகளையும், மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக ஆக்கிக்கொண்டனர்; ஆனால், அவர்களோ ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக் கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள்; (வணக்கத்திற்குரியவன்) அவனன்றி வேறு கடவுள் இல்லை; அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அவன் மிகவும் பரிசுத்தமானவன்.
9:34   يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنَّ كَثِيْرًا مِّنَ الْاَحْبَارِ وَالرُّهْبَانِ لَيَاْكُلُوْنَ اَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ وَيَصُدُّوْنَ عَنْ سَبِيْلِ اللّٰهِ‌ؕ وَالَّذِيْنَ يَكْنِزُوْنَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنْفِقُوْنَهَا فِىْ سَبِيْلِ اللّٰهِۙ فَبَشِّرْهُمْ بِعَذَابٍ اَلِيْمٍۙ‏
9:34. நம்பிக்கை கொண்டவர்களே! நிச்சயமாக (அவர்களுடைய) பாதிரிமார்களிலும், சந்நியாசிகளிலும் அநேகர், மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் சாப்பிடுகிறார்கள்; மேலும், அல்லாஹ்வின் பாதையைவிட்டும் (மக்களைத்) தடுக்கிறார்கள்; இன்னும், எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக்கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ: (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!