பாக்கியம்
3:96 اِنَّ اَوَّلَ بَيْتٍ وُّضِعَ لِلنَّاسِ لَـلَّذِىْ بِبَكَّةَ مُبٰرَكًا وَّهُدًى لِّلْعٰلَمِيْنَۚ
3:96. (அல்லாஹ்வை வணங்குவதற்கென) மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் நிச்சயமாக 'பக்கா' (எனும் மக்கா)வில் உள்ளதுதான்; அது பாக்கியம் மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது.
6:155 وَهٰذَا كِتٰبٌ اَنْزَلْنٰهُ مُبٰرَكٌ فَاتَّبِعُوْهُ وَاتَّقُوْا لَعَلَّكُمْ تُرْحَمُوْنَۙ
6:155. (மனிதர்களே!) இதுவும் வேதமாகும்; இதனை நாமே இறக்கிவைத்துள்ளோம் - (இது) மிக்க பாக்கியம் வாய்ந்தது. ஆகவே, இதனைப் பின்பற்றுங்கள்; இன்னும், (அவனை) அஞ்சி (பாவத்தைவிட்டு விலகி)க் கொள்ளுங்கள்; நீங்கள் (இறைவனால்) கிருபை செய்யப்படுவீர்கள்.
7:54 اِنَّ رَبَّكُمُ اللّٰهُ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَ الْاَرْضَ فِىْ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِ يُغْشِى الَّيْلَ النَّهَارَ يَطْلُبُهٗ حَثِيْثًا ۙ وَّالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُوْمَ مُسَخَّرٰتٍۢ بِاَمْرِهٖ ؕ اَلَا لَـهُ الْخَـلْقُ وَالْاَمْرُ ؕ تَبٰرَكَ اللّٰهُ رَبُّ الْعٰلَمِيْنَ
7:54. நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்; பின்னர், (தன் கண்ணியத்திற்குத் தக்கவாறும், மகத்துவத்திற்குரியவாறும் அர்ஷின் மீதிருப்பது அவனுக்கு எவ்வாறு தகுமோ அவ்வாறே) அர்ஷின் மீது அவன் நிலையானான்; அவன் இரவைக்கொண்டு பகலை மூடுகிறான்; அது வெகுவிரைவாக அதனைப் பின்தொடர்கின்றது; இன்னும் சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்குக் கட்டுப்பட்டவையாக(ப் படைத்தான்); அறிந்துகொள்ளுங்கள்! படைத்தலும், கட்டளையிடுதலும் அவனுக்கே சொந்தம்; அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ் மிகவும் பாக்கியமுடையவன்.
7:96 وَلَوْ اَنَّ اَهْلَ الْقُرٰٓى اٰمَنُوْا وَاتَّقَوْا لَـفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكٰتٍ مِّنَ السَّمَآءِ وَالْاَرْضِ وَلٰـكِنْ كَذَّبُوْا فَاَخَذْنٰهُمْ بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ
7:96. நிச்சயமாக அவ்வூர்வாசிகள் நம்பிக்கை கொண்டு (நம்மை) அஞ்சியிருந்தால், நாம் அவர்களுக்காக வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் பாக்கியங்களைத் திறந்து விட்டிருப்போம்; ஆனால், அவர்கள் (நபிமார்களை நம்பாது) பொய்ப்பித்தனர்; ஆகவே, அவர்கள் செய்துகொண்டிருந்த (பாவத்)தின் காரணமாக நாம் அவர்களைப் பிடித்தோம்.
7:137 وَاَوْرَثْنَا الْقَوْمَ الَّذِيْنَ كَانُوْا يُسْتَضْعَفُوْنَ مَشَارِقَ الْاَرْضِ وَمَغَارِبَهَا الَّتِىْ بٰرَكْنَا فِيْهَا ؕ وَتَمَّتْ كَلِمَتُ رَبِّكَ الْحُسْنٰى عَلٰى بَنِىْۤ اِسْرَاۤءِيْلَۙ بِمَا صَبَرُوْا ؕ وَدَمَّرْنَا مَا كَانَ يَصْنَعُ فِرْعَوْنُ وَقَوْمُهٗ وَمَا كَانُوْا يَعْرِشُوْنَ
7:137. எனவே, எவர்கள் பலவீனர்களாகக் கருதப்பட்டார்களோ அத்தகைய சமூகத்தினரை, எதில் நாம் பாக்கியம் அளித்திருந்தோமோ அத்தகைய பூமியின் கிழக்குப் பகுதிகளுக்கும், அதன் மேற்குப் பகுதிகளுக்கும் நாம் வாரிசுகளாக்கினோம்; இஸ்ராயிலின் மக்கள் பொறுமையாக இருந்த காரணத்தால், அவர்கள் மீது உம் இறைவனுடைய அழகிய வாக்குப் பரிபூரணமாகி (நிறைவேறி)விட்டது; மேலும், ஃபிர்அவ்னும் அவனுடைய சமூகத்தாரும் உற்பத்தி செய்திருந்தவற்றையும், மிக உயரமாக அவர்கள் எழுப்பியிருந்த (மாடமாளிகைகள் போன்ற)வற்றையும் நாம் தரைமட்டமாக்கிவிட்டோம்.
19:31 وَّجَعَلَنِىْ مُبٰـرَكًا اَيْنَ مَا كُنْتُ وَاَوْصٰنِىْ بِالصَّلٰوةِ وَالزَّكٰوةِ مَا دُمْتُ حَيًّا ۖ
19:31. "இன்னும், நான் எங்கிருந்தாலும் அவன் என்னை (நற்)பாக்கியமுடையவனாக ஆக்கியிருக்கின்றான்; மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (நிறைவேற்ற) எனக்குக் கட்டளையிட்டிருக்கிறான்."
21:50 وَهٰذَا ذِكْرٌ مُّبٰرَكٌ اَنْزَلْنٰهُؕ اَفَاَنْتُمْ لَهٗ مُنْكِرُوْنَ
21:50. இன்னும் இது (குர்ஆன்) நாம் அருள் செய்த பாக்கியம் மிக்க உபதேசமாகும்; இதனையா நீங்கள் புறக்கணிக்கிறீர்கள்?
21:71 وَنَجَّيْنٰهُ وَلُوْطًا اِلَى الْاَرْضِ الَّتِىْ بٰرَكْنَا فِيْهَا لِلْعٰلَمِيْنَ
21:71. இன்னும், நாம் அவரையும் (அவருடைய சகோதரர் மகன்) லூத்தையும் அகிலத்தாருக்கெல்லாம் நாம் பாக்கியத்தை நல்கிய பூமியின் (பைத்துல் முகத்தஸின்) பால் (வரச்செய்து) ஈடேற்றம் பெறச்செய்தோம்.
23:14 ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظٰمًا فَكَسَوْنَا الْعِظٰمَ لَحْمًا ثُمَّ اَنْشَاْنٰهُ خَلْقًا اٰخَرَ ؕ فَتَبٰـرَكَ اللّٰهُ اَحْسَنُ الْخٰلِقِيْنَ ؕ
23:14. பின்னர், அந்த இந்திரியத் துளியை இரத்தக்கட்டியாகப் படைத்தோம்; பின்னர், அந்த இரத்தக் கட்டியை ஒரு சதைத்துண்டாகப் படைத்தோம்; பின்னர், அந்தச் சதைத் துண்டை எலும்புகளாகவும் ஆக்கினோம்; பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர், நாம் அதனை வேறொரு படைப்பாக (மனிதனாக)ச் செய்தோம்; எனவே, படைப்பாளர்களில் மிக்க அழகானவனான அல்லாஹ் பெரும்பாக்கியமுடையவன்.
23:29 وَقُلْ رَّبِّ اَنْزِلْنِىْ مُنْزَلًا مُّبٰـرَكًا وَّاَنْتَ خَيْرُ الْمُنْزِلِيْنَ
23:29. மேலும், "இறைவனே! நீ மிகவும் பாக்கியம் பெற்ற இறங்கும் தலத்தில் என்னை இறக்கி வைப்பாயாக! நீயே (பத்திரமாக) இறக்கிவைப்பவர்களில் மிக மேலானவன்" என்று பிரார்த்திப்பீராக! (எனவும் அறிவித்தோம்).
24:35 اَللّٰهُ نُوْرُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ مَثَلُ نُوْرِهٖ كَمِشْكٰوةٍ فِيْهَا مِصْبَاحٌ ؕ الْمِصْبَاحُ فِىْ زُجَاجَةٍ ؕ اَلزُّجَاجَةُ كَاَنَّهَا كَوْكَبٌ دُرِّىٌّ يُّوْقَدُ مِنْ شَجَرَةٍ مُّبٰـرَكَةٍ زَيْتُوْنَةٍ لَّا شَرْقِيَّةٍ وَّلَا غَرْبِيَّةٍ ۙ يَّـكَادُ زَيْتُهَا يُضِىْٓءُ وَلَوْ لَمْ تَمْسَسْهُ نَارٌ ؕ نُوْرٌ عَلٰى نُوْرٍ ؕ يَهْدِى اللّٰهُ لِنُوْرِهٖ مَنْ يَّشَآءُ ؕ وَ يَضْرِبُ اللّٰهُ الْاَمْثَالَ لِلنَّاسِؕ وَاللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ ۙ
24:35. அல்லாஹ் வானங்கள், பூமி ஆகியவற்றின் ஒளியாக இருக்கிறான்; அவனுடைய ஒளிக்கு உதாரணம்: ஒரு மாடத்தைப் போன்றிருக்கிறது: அதில் ஒரு விளக்கு இருக்கிறது; அவ்விளக்கு ஒரு கண்ணாடியினுள் இருக்கிறது; அக்கண்ணாடி ஒளிவீசும் நட்சத்திரத்தைப் போன்றதாகும்; அது பாக்கியம் பெற்ற ஜைத்தூன் மரத்தி(ன் எண்ணெயி)னால் எரிக்கப்படுகிறது; அது கீழ்த்திசையைச் சேர்ந்ததுமன்று: மேல்திசையைச் சேர்ந்ததுமன்று; அதனை நெருப்புத் தீண்டாவிடினும், அதன் எண்ணெய் ஒளிவீச முற்படும்; (இவை எல்லாம் சேர்ந்து) ஒளிக்கு மேல் ஒளியாகும்: அல்லாஹ் தான் நாடியவரை தன்னுடைய ஒளி (என்னும் சத்தியப்பாதை)யின்பால் நடத்திச் செல்கிறான்; மனிதர்களுக்கு (இத்தகைய) உதாரணங்களை அல்லாஹ் கூறுகிறான்; அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிபவன்.
24:61 لَـيْسَ عَلَى الْاَعْمٰى حَرَجٌ وَّلَا عَلَى الْاَعْرَجِ حَرَجٌ وَّلَا عَلَى الْمَرِيْضِ حَرَجٌ وَّلَا عَلٰٓى اَنْفُسِكُمْ اَنْ تَاْكُلُوْا مِنْۢ بُيُوْتِكُمْ اَوْ بُيُوْتِ اٰبَآٮِٕكُمْ اَوْ بُيُوْتِ اُمَّهٰتِكُمْ اَوْ بُيُوْتِ اِخْوَانِكُمْ اَوْ بُيُوْتِ اَخَوٰتِكُمْ اَوْ بُيُوْتِ اَعْمَامِكُمْ اَوْ بُيُوْتِ عَمّٰتِكُمْ اَوْ بُيُوْتِ اَخْوَالِكُمْ اَوْ بُيُوْتِ خٰلٰتِكُمْ اَوْ مَا مَلَكْتُمْ مَّفَاتِحَهٗۤ اَوْ صَدِيْقِكُمْؕ لَـيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ اَنْ تَاْكُلُوْا جَمِيْعًا اَوْ اَشْتَاتًا ؕ فَاِذَا دَخَلْتُمْ بُيُوْتًا فَسَلِّمُوْا عَلٰٓى اَنْفُسِكُمْ تَحِيَّةً مِّنْ عِنْدِ اللّٰهِ مُبٰرَكَةً طَيِّبَةً ؕ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمُ الْاٰيٰتِ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ
24:61. (நம்பிக்கையாளர்களே! உங்களுடன் சேர்ந்து உணவருந்துவதில்) குருடர் மீதும் குற்றமில்லை, முடவர் மீதும் குற்றமில்லை, நோயாளியின் மீதும் குற்றமில்லை; நீங்கள் உங்கள் சொந்த வீடுகளிலோ, அல்லது உங்கள் தந்தைமார் வீடுகளிலோ, அல்லது தாய்மார் வீடுகளிலோ, அல்லது சகோதரர்கள் வீடுகளிலோ, அல்லது சகோதரிகள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தந்தையின் சகோதரர்கள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தந்தையின் சகோதரிகள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தாயின் சகோதரர்கள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தாயின் சகோதரிகள் வீடுகளிலோ, அல்லது எந்த வீட்டினுடைய சாவிகள் உங்கள் வசம் இருக்கிறதோ (அதிலும்), அல்லது உங்கள் தோழரிடத்திலோ நீங்கள் உண்பது உங்கள் மீது குற்றமில்லை; நீங்கள் சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ புசிப்பது உங்கள் மீது குற்றமாகாது; ஆனால், நீங்கள் எந்த வீட்டில் பிரவேசித்தாலும் அல்லாஹ்விடமிருந்துள்ள பாக்கியமிக்க பரிசுத்தமான காணிக்கையாக (அஸ்ஸலாமு அலைக்கும் என்று) நீங்கள் உங்களுக்குள் முகமன் கூறிக்கொள்ளுங்கள்: நீங்கள் விளங்கிக்கொள்வதற்காக, இவ்வாறு அல்லாஹ் உங்களுக்கு(த் தன்) வசனங்களை விவரிக்கிறான்.
25:1 تَبٰـرَكَ الَّذِىْ نَزَّلَ الْـفُرْقَانَ عَلٰى عَبْدِهٖ لِيَكُوْنَ لِلْعٰلَمِيْنَ نَذِيْرَا ۙ
25:1. உலகத்தார் யாவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும் அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன்.
25:10 تَبٰـرَكَ الَّذِىْۤ اِنْ شَآءَ جَعَلَ لَكَ خَيْرًا مِّنْ ذٰ لِكَ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ۙ وَيَجْعَلْ لَّكَ قُصُوْرًا
25:10. (நபியே! இந்நிராகரிப்போர் சொல்வதைவிட) மேலான சுவர்க்க(த் தோட்ட)ங்களை அவன் நாடினால் உமக்காக உண்டாக்குவானே. அவன் பாக்கியம்மிக்கவன்; அவற்றின் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும்; இன்னும், உமக்காக (அங்கு) மாளிகைகளையும் அவன் உண்டாக்குவான்.
27:8 فَلَمَّا جَآءَهَا نُوْدِىَ اَنْۢ بُوْرِكَ مَنْ فِى النَّارِ وَ مَنْ حَوْلَهَا ؕ وَسُبْحٰنَ اللّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ
27:8. அவர் அதனிடம் வந்தபோது: "நெருப்பில் இருப்பவரும், அதனைச் சூழ்ந்திருப்பவரும் பெரும் பாக்கியம் அளிக்கப்பட்டவர்கள்; மேலும், அகிலத்தாரின் இறைவனாகிய அல்லாஹ் மிகவும் பரிசுத்தமானவன்" என்று அழைக்கப்பட்டார்.
28:30 فَلَمَّاۤ اَتٰٮهَا نُوْدِىَ مِنْ شَاطِیٴِ الْوَادِ الْاَيْمَنِ فِى الْبُقْعَةِ الْمُبٰرَكَةِ مِنَ الشَّجَرَةِ اَنْ يّٰمُوْسٰٓى اِنِّىْۤ اَنَا اللّٰهُ رَبُّ الْعٰلَمِيْنَ ۙ
28:30. அவர் அதன் அருகே வந்தபோது, (அங்குள்ள) பாக்கியம் பெற்ற அப்பள்ளத்தாக்கிலுள்ள வலப்பக்கத்தில் இருக்கும் ஓடையில் உள்ள (ஒரு) மரத்திலிருந்து, "மூஸாவே! நிச்சயமாக நானே அகிலத்தாரின் இறைவனாகிய அல்லாஹ்" என்று அழைக்கப்பட்டார்.
37:113 وَبٰرَكْنَا عَلَيْهِ وَعَلٰٓى اِسْحٰقَؕ وَ مِنْ ذُرِّيَّتِهِمَا مُحْسِنٌ وَّظَالِمٌ لِّنَفْسِهٖ مُبِيْنٌ
37:113. இன்னும், நாம் அவர்மீதும், இஸ்ஹாக்மீதும் பாக்கியங்கள் பொழிந்தோம்; மேலும், அவ்விருவருடைய சந்ததியரில் நன்மை செய்பவர்களும் இருக்கின்றார்கள்; அன்றியும், தமக்குத்தாமே பகிரங்கமாக அநியாயம் செய்துகொள்வோரும் இருக்கின்றனர்.
38:29 كِتٰبٌ اَنْزَلْنٰهُ اِلَيْكَ مُبٰرَكٌ لِّيَدَّبَّرُوْۤا اٰيٰتِهٖ وَلِيَتَذَكَّرَ اُولُوا الْاَلْبَابِ
38:29. (நபியே!) பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம்; அவர்கள் இதன் வசனங்களைச் சிந்திப்பதற்காகவும், அறிவுடையோர் படிப்பினை பெறுவதற்காகவும்.
40:64 اَللّٰهُ الَّذِىْ جَعَلَ لَـكُمُ الْاَرْضَ قَرَارًا وَّالسَّمَآءَ بِنَآءً وَّصَوَّرَكُمْ فَاَحْسَنَ صُوَرَكُمْ وَرَزَقَكُمْ مِّنَ الطَّيِّبٰتِ ؕ ذٰ لِكُمُ اللّٰهُ رَبُّكُمْ ۖۚ فَتَبٰـرَكَ اللّٰهُ رَبُّ الْعٰلَمِيْنَ
40:64. அல்லாஹ்தான் உங்களுக்கு இப்பூமியைத் தங்குமிடமாகவும், வானத்தை ஒரு விதானமாகவும் உண்டாக்கியிருக்கிறான்; மேலும், அவன்தான் உங்களை உருவாக்கி, உங்கள் உருவங்களை அழகாக்கி, நல்லவற்றிலிருந்து உங்களுக்கு உணவும் அளித்தான்; அவன்தான் அல்லாஹ்; உங்களுடைய இறைவன்; அகிலத்தாருக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் மிகப் பாக்கியமுடையவன்.
41:10 وَجَعَلَ فِيْهَا رَوَاسِىَ مِنْ فَوْقِهَا وَبٰرَكَ فِيْهَا وَقَدَّرَ فِيْهَاۤ اَقْوَاتَهَا فِىْۤ اَرْبَعَةِ اَيَّامٍؕ سَوَآءً لِّلسَّآٮِٕلِيْنَ
41:10. அவனே, அதன் மேலிருந்து உயரமான மலைகளை அமைத்தான்; அதன் மீது (சகல விதமான) பாக்கியங்களையும் பொழிந்தான்; இன்னும், அதில் அவற்றின் உணவுகளை நான்கு நாட்களில் (சீராக) நிர்ணயித்தான்; (இதைப் பற்றி) கேட்கக்கூடியவர்களுக்கு இதுவே விளக்கமாகும்.
41:37 وَمِنْ اٰيٰتِهِ الَّيْلُ وَالنَّهَارُ وَالشَّمْسُ وَالْقَمَرُؕ لَا تَسْجُدُوْا لِلشَّمْسِ وَلَا لِلْقَمَرِ وَاسْجُدُوْا لِلّٰهِ الَّذِىْ خَلَقَهُنَّ اِنْ كُنْتُمْ اِيَّاهُ تَعْبُدُوْنَ
41:37. இரவும் பகலும், சூரியனும் சந்திரனும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைதாம்; ஆகவே, நீங்கள் சூரியனுக்கும் சந்திரனுக்கும் ஸுஜூது செய்யாதீர்கள்; இவற்றைப் படைத்தவனாகிய அல்லாஹ்வுக்கே - அவனையே நீங்கள் வணங்குபவர்களாக இருந்தால் - ஸுஜூது செய்யுங்கள்.
43:85 وَتَبٰـرَكَ الَّذِىْ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَا ۚ وَعِنْدَهٗ عِلْمُ السَّاعَةِ ۚ وَاِلَيْهِ تُرْجَعُوْنَ
43:85. மேலும் வானங்கள், பூமி இவை இரண்டிற்குமிடையே உள்ளவை ஆகியவற்றின் ஆட்சி எவனுக்குரியதோ அத்தகையவன் பெரும் பாக்கியமுடையவன்; அவனிடம்தான் மறுமை நாளின் ஞானமும் இருக்கிறது; மேலும், அவனிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.
50:29 مَا يُبَدَّلُ الْقَوْلُ لَدَىَّ وَمَاۤ اَنَا بِظَلَّامٍ لِّلْعَبِيْدِ
50:29. (எனவே, என்னுடைய) "அச்சொல் என்னிடத்தில் மாற்றப்படுவதில்லை; நான் அடியார்களுக்கு அநியாயம் செய்பவனல்லன்" (என்றும் அல்லாஹ் கூறுவான்).
55:78 تَبٰـرَكَ اسْمُ رَبِّكَ ذِى الْجَـلٰلِ وَالْاِكْرَامِ
55:78. மிக்க சிறப்பும், கண்ணியமுமுள்ள உம்முடைய இறைவனின் திருப்பெயர் மிகவும் பாக்கியமுடையது.
67:1 تَبٰرَكَ الَّذِىْ بِيَدِهِ الْمُلْكُ وَهُوَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرُۙ
67:1. எவனுடைய கையில் ஆட்சி இருக்கின்றதோ அவன் பாக்கியவான்; மேலும், அவன் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.