பாதுகாவலர்
2:257 اَللّٰهُ وَلِىُّ الَّذِيْنَ اٰمَنُوْا يُخْرِجُهُمْ مِّنَ الظُّلُمٰتِ اِلَى النُّوْرِؕ وَالَّذِيْنَ كَفَرُوْۤا اَوْلِيٰٓــــٴُـهُمُ الطَّاغُوْتُۙ يُخْرِجُوْنَهُمْ مِّنَ النُّوْرِ اِلَى الظُّلُمٰتِؕ اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ
2:257. அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன் (ஆவான்); அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகின்றான்; ஆனால், நிராகரிப்பவர்களுக்கோ - (வழி கெடுக்கும்) ஷைத்தான்கள் தாம் அவர்களின் பாதுகாவலர்கள்; அவை அவர்களை வெளிச்சத்திலிருந்து, இருள்களின் பக்கம் கொண்டு வருகின்றன; அவர்களே நரகவாசிகள்; அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பர்.
5:51 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوا الْيَهُوْدَ وَالنَّصٰرٰۤى اَوْلِيَآءَ ؔۘ بَعْضُهُمْ اَوْلِيَآءُ بَعْضٍؕ وَمَنْ يَّتَوَلَّهُمْ مِّنْكُمْ فَاِنَّهٗ مِنْهُمْؕ اِنَّ اللّٰهَ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ
5:51. நம்பிக்கையாளர்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக்கொள்ளாதீர்கள்; (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்; உங்களில் எவரேனும் அவர்களை பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர்தான்; நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.
5:57 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَـتَّخِذُوا الَّذِيْنَ اتَّخَذُوْا دِيْنَكُمْ هُزُوًا وَّلَعِبًا مِّنَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ وَالْـكُفَّارَ اَوْلِيَآءَ ۚ وَاتَّقُوا اللّٰهَ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ
5:57. நம்பிக்கையாளர்களே! உங்களுக்குமுன் வேதம் வழங்கப்பட்டவர்களிலிருந்து உங்கள் மார்க்கத்தைப் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் ஆக்கிக்கொண்டவர்களையும், நிராகரிப்பவர்களையும் நீங்கள் பாதுகாவலர்களாக ஆக்கிக்கொள்ளாதீர்கள்; நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்.
6:14 قُلْ اَغَيْرَ اللّٰهِ اَتَّخِذُ وَلِيًّا فَاطِرِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَهُوَ يُطْعِمُ وَلَا يُطْعَمُؕ قُلْ اِنِّىْۤ اُمِرْتُ اَنْ اَكُوْنَ اَوَّلَ مَنْ اَسْلَمَ وَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُشْرِكِيْنَ
6:14. வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி, வேறு எவரையும் என் பாதுகாவலனாக எடுத்துக்கொள்வேனா? அவனே (யாவருக்கும்) உணவளிக்கின்றான்; அவன் (எவராலும்) உணவளிக்கப்படுவதில்லை" என்று (நபியே!) நீர் கூறுவீராக! இன்னும், "(அல்லாஹ்வுக்கு) வழிப்படுபவர்களில் முதன்மையானவனாக இருக்கும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்" என்று கூறுவீராக! இன்னும், நீர் ஒருக்காலும் இணைவைப்போரில் ஒருவராகிவிடவேண்டாம்.
6:62 ثُمَّ رُدُّوْۤا اِلَى اللّٰهِ مَوْلٰٮهُمُ الْحَـقِّؕ اَلَا لَهُ الْحُكْمُ وَهُوَ اَسْرَعُ الْحَاسِبِيْنَ
6:62. பின்னர், அவர்கள் தங்களின் உண்மையான பாதுகாவலனான அல்லாஹ்விடம் கொண்டு வரப்படுவார்கள்; அறிந்துகொள்ளுங்கள்! (அப்போது தீர்ப்புக்கூறும்) அதிகாரம் அவனுக்கே உரியது; அவன் கணக்கு வாங்குவதில் மிகவும் விரைவானவன்.
6:70 وَذَرِ الَّذِيْنَ اتَّخَذُوْا دِيْنَهُمْ لَعِبًا وَّلَهْوًا وَّغَرَّتْهُمُ الْحَيٰوةُ الدُّنْيَا وَ ذَكِّرْ بِهٖۤ اَنْ تُبْسَلَ نَفْسٌ ۢ بِمَا كَسَبَتْۖ لَـيْسَ لَهَا مِنْ دُوْنِ اللّٰهِ وَلِىٌّ وَّلَا شَفِيْعٌ ۚ وَاِنْ تَعْدِلْ كُلَّ عَدْلٍ لَّا يُؤْخَذْ مِنْهَا ؕ اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ اُبْسِلُوْا بِمَا كَسَبُوْا ۚ لَهُمْ شَرَابٌ مِّنْ حَمِيْمٍ وَّعَذَابٌ اَ لِيْمٌۢ بِمَا كَانُوْا يَكْفُرُوْنَ
6:70. (நபியே!) யார் தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும், வெறும் வேடிக்கையாகவும் எடுத்துக்கொண்டார்களோ; இன்னும், யாரை இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றிவிட்டதோ அவர்களை விட்டுவிடும்; எனினும், ஒவ்வொரு ஆத்மாவும் அது சம்பாதித்துக்கொண்ட (தீய)தின் காரணமாக (வேதனையினால்) பிடிக்கப்படாமல் இருப்பதற்காக, நீர் (குர்ஆனாகிய) இதன் மூலம் அறிவுரை கூறுவீராக! (அந்நாளில்) அதற்கு அல்லாஹ்வைத் தவிர வேறு பாதுகாவலரோ, பரிந்து பேசுபவரோ இல்லை; இன்னும், (தான் செய்த பாவத்திற்கு) ஈடாக அது (தன்னால் இயன்ற) அத்தனையும் கொடுத்தாலும், அதனிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அத்தகையோர் - அவர்கள் தாங்கள் சம்பாதித்தவைகளின் காரணமாக தண்டனையில் பிடிக்கப்பட்டுவிட்டனர். அவர்கள் நிராகரித்துக்கொண்டிருந்த காரணத்தால் அவர்களுக்குக் கொதிக்கும் பானமும், துன்புறுத்தும் வேதனையுமுண்டு.
7:3 اِتَّبِعُوْا مَاۤ اُنْزِلَ اِلَيْكُمْ مِّنْ رَّبِّكُمْ وَلَا تَتَّبِعُوْا مِنْ دُوْنِهٖۤ اَوْلِيَآءَ ؕ قَلِيْلًا مَّا تَذَكَّرُوْنَ
7:3. (மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர்(களாக்கிக் கொண்டு அவர்)களைப் பின்பற்றாதீர்கள்: நீங்கள் குறைவாகவே உபதேசம் பெறுகிறீர்கள்.
7:30 فَرِيْقًا هَدٰى وَ فَرِيْقًا حَقَّ عَلَيْهِمُ الضَّلٰلَةُ ؕ اِنَّهُمُ اتَّخَذُوا الشَّيٰطِيْنَ اَوْلِيَآءَ مِنْ دُوْنِ اللّٰهِ وَيَحْسَبُوْنَ اَنَّهُمْ مُّهْتَدُوْنَ
7:30. ஒரு கூட்டத்தாரை அவன் நேர்வழியிலாக்கினான்; இன்னொரு கூட்டத்தாருக்கோ வழிகேடு அவர்கள்மீது உறுதியாகிவிட்டது; (ஏனெனில்,) நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வைவிட்டு ஷைத்தான்களைப் பாதுகாவலர்களாக்கிக் கொண்டார்கள்; எனினும், தாங்கள் நேர்வழி பெற்றவர்கள் என்று எண்ணுகிறார்கள்.
7:155 وَاخْتَارَ مُوْسٰى قَوْمَهٗ سَبْعِيْنَ رَجُلًا لِّمِيْقَاتِنَا ۚ فَلَمَّاۤ اَخَذَتْهُمُ الرَّجْفَةُ قَالَ رَبِّ لَوْ شِئْتَ اَهْلَـكْتَهُمْ مِّنْ قَبْلُ وَاِيَّاىَ ؕ اَ تُهْلِكُنَا بِمَا فَعَلَ السُّفَهَآءُ مِنَّا ۚ اِنْ هِىَ اِلَّا فِتْنَـتُكَ ؕ تُضِلُّ بِهَا مَنْ تَشَآءُ وَتَهْدِىْ مَنْ تَشَآءُ ؕ اَنْتَ وَلِيُّنَا فَاغْفِرْ لَـنَا وَارْحَمْنَا وَاَنْتَ خَيْرُ الْغَافِرِيْنَ
7:155. இன்னும், மூஸா நாம் குறிப்பிட்ட நேரத்திற்காக, தம் சமூகத்தாரிலிருந்து எழுபது ஆண்களைத் தேர்ந்தெடுத்தார்; அவர்களைப் பூகம்பம் பற்றிக் கொண்டபோது அவர், "என் இறைவனே! நீ நாடியிருந்தால், இதற்கு முன்னரே அவர்களையும் என்னையும் நீ அழித்திருக்கலாமே! எங்களிலுள்ள அறிவிலிகள் செய்த (குற்றத்)திற்காக, எங்கள் யாவரையும் நீ அழித்துவிடுகிறாயா? இது உன்னுடைய சோதனையேயன்றி வேறில்லை; இதைக்கொண்டு நீ நாடியவர்களை வழிதவறவிடுகிறாய்; இன்னும், நீ நாடியவர்களை நேர் வழியில் நடத்துகிறாய்; நீதான் எங்களுடைய பாதுகாவலன்; ஆகவே, எங்களுக்கு மன்னிப்பு அளிப்பாயாக! எங்களுக்குக் கிருபை செய்வாயாக! மன்னிப்பவர்களிலெல்லாம், நீதான் மிக்க மேன்மையானவன்" என்று பிரார்த்தித்தார்.
7:196 اِنَّ وَلِىَِّۧ اللّٰهُ الَّذِىْ نَزَّلَ الْـكِتٰبَ ۖ وَهُوَ يَتَوَلَّى الصّٰلِحِيْنَ
7:196. நிச்சயமாக என் பாதுகாவலன் அல்லாஹ்வே; அவனே வேதத்தை இறக்கிவைத்தான்; அவனே நல்லவர்களைப் பாதுகாக்கிறான்.
8:40 وَاِنْ تَوَلَّوْا فَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ مَوْلٰٮكُمْؕ نِعْمَ الْمَوْلٰى وَنِعْمَ النَّصِيْرُ
8:40. அவர்கள் புறக்கணித்தால், நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய பாதுகாவலன் என்பதை அறிந்துகொள்ளுங்கள்; அவன் சிறந்த பாதுகாவலன்; இன்னும், அவன் சிறந்த உதவியாளன்.