பாதுகாவலர்கள்
8:73 وَالَّذِيْنَ كَفَرُوْا بَعْضُهُمْ اَوْلِيَآءُ بَعْضٍؕ اِلَّا تَفْعَلُوْهُ تَكُنْ فِتْنَةٌ فِى الْاَرْضِ وَفَسَادٌ كَبِيْرٌؕ
8:73. நிராகரிப்பவர்கள் - அவர்களில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்; நீங்கள் இதைச் செய்யாவிட்டால் (அதாவது ஒருவருக்கொருவர் பாதுகாவலராக இருக்காவிட்டால்) பூமியில் குழப்பமும், பெருங்கலகமும் ஏற்பட்டுவிடும்.
9:51 قُلْ لَّنْ يُّصِيْبَـنَاۤ اِلَّا مَا كَتَبَ اللّٰهُ لَـنَا ۚ هُوَ مَوْلٰٮنَا ۚ وَعَلَى اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ
9:51. "ஒருபோதும், அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது: அவன்தான் எங்களுடைய பாதுகாவலன்" என்று (நபியே!) நீர் கூறும்: நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வையே சார்ந்திருப்பார்களாக!
9:74 يَحْلِفُوْنَ بِاللّٰهِ مَا قَالُوْا ؕ وَلَقَدْ قَالُوْا كَلِمَةَ الْـكُفْرِ وَكَفَرُوْا بَعْدَ اِسْلَامِهِمْ وَهَمُّوْا بِمَا لَمْ يَنَالُوْا ۚ وَمَا نَقَمُوْۤا اِلَّاۤ اَنْ اَغْنٰٮهُمُ اللّٰهُ وَرَسُوْلُهٗ مِنْ فَضْلِهٖ ۚ فَاِنْ يَّتُوْبُوْا يَكُ خَيْرًا لَّهُمْ ۚ وَاِنْ يَّتَوَلَّوْا يُعَذِّبْهُمُ اللّٰهُ عَذَابًا اَلِيْمًا ۙ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ ۚ وَمَا لَهُمْ فِى الْاَرْضِ مِنْ وَّلِىٍّ وَّلَا نَصِيْرٍ
9:74. (நயவஞ்சகர்களாகிய) இவர்கள் நிச்சயமாக நிராகரிப்பின் சொல்லைச் சொல்லிவிட்டு, அதைச் சொல்லவே இல்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறார்கள்; அவர்கள் இஸ்லா(ம் மார்க்க)த்தை ஏற்றுக்கொண்ட பின் நிராகரித்தும் இருக்கின்றனர்; (அவர்கள் உங்களுக்குத் தீங்கிழைக்கக் கருதித்) தங்களால் அடைய முடியாததையும் (அடைந்துவிட) முயன்றனர்; அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அவனுடைய அருளினால் அவர்களைச் சீமான்களாக்கி வைத்ததற்காகவே தவிர (வேறெதற்கும்) அவர்கள் பழிவாங்கவில்லை; எனவே, அவர்கள் (தம் தவறிலிருந்து) மீள்வார்களானால் அவர்களுக்கு நன்மையாக இருக்கும்; ஆனால், அவர்கள் புறக்கணித்தால், அல்லாஹ் அவர்களை நோவினைமிக்க வேதனை கொண்டு இம்மையிலும், மறுமையிலும் வேதனை செய்வான்; இன்னும், அவர்களுக்குப் பாதுகாவலனோ, உதவியாளனோ இப்பூமியில் எவருமில்லை.
9:116 اِنَّ اللّٰهَ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِؕ يُحْىٖ وَيُمِيْتُؕ وَمَا لَـكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ وَّلِىٍّ وَّلَا نَصِيْرٍ
9:116. வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியது; (அவனே) உயிர் கொடுக்கிறான்; (அவனே) மரணிக்கும்படியும் செய்கிறான்; அல்லாஹ்வைத் தவிர உங்களுக்கு வேறு பாதுகாவலரும் இல்லை, உதவியாளரும் இல்லை.
11:20 اُولٰٓٮِٕكَ لَمْ يَكُوْنُوْا مُعْجِزِيْنَ فِى الْاَرْضِ وَمَا كَانَ لَهُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ اَوْلِيَآءَ ۘ يُضٰعَفُ لَهُمُ الْعَذَابُ ؕ مَا كَانُوْا يَسْتَطِيْعُوْنَ السَّمْعَ وَمَا كَانُوْا يُبْصِرُوْنَ
11:20. இவர்கள் பூமியில் (அல்லாஹ் திட்டமிட்டிருப்பதைத்) தோற்கடித்துவிடமுடியாது; அல்லாஹ்வைத் தவிர இவர்களுக்கு வேறு பாதுகாவலர்கள் இல்லை; இவர்களுக்கு வேதனை இரட்டிப்பாக்கப்படும்; இவர்கள் (நல்லவற்றைச்) செவியேற்கச் சக்தியுடையோராக இருக்கவில்லை; இவர்கள் (நேர்வழியைக்) காணவும் மாட்டார்கள்.
12:101 رَبِّ قَدْ اٰتَيْتَنِىْ مِنَ الْمُلْكِ وَ عَلَّمْتَنِىْ مِنْ تَاْوِيْلِ الْاَحَادِيْثِ ۚ فَاطِرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ اَنْتَ وَلِىّٖ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ ۚ تَوَفَّنِىْ مُسْلِمًا وَّاَلْحِقْنِىْ بِالصّٰلِحِيْنَ
12:101. என் இறைவனே! நிச்சயமாக நீ எனக்கு ஆட்சியிலிருந்து (ஒரு பங்கைத்) தந்து, கனவுகளின் விளக்கத்தையும் எனக்குக் கற்றுத் தந்தாய்; வானங்களையும் பூமியையும் படைத்தவனே! இம்மையிலும் மறுமையிலும் நீயே என் பாதுகாவலன்; முஸ்லிமாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக இருக்கும் நிலையில்) என்னை நீ கைப்பற்றிக் கொள்வாயாக! இன்னும், நல்லவர்களுடன் என்னைச் சேர்த்திடுவாயாக! (என்று அவர் பிரார்த்தித்தார்).
13:37 وَكَذٰلِكَ اَنْزَلْنٰهُ حُكْمًا عَرَبِيًّا ؕ وَلَٮِٕنِ اتَّبَعْتَ اَهْوَآءَهُمْ بَعْدَمَا جَآءَكَ مِنَ الْعِلْمِۙ مَا لَـكَ مِنَ اللّٰهِ مِنْ وَّلِىٍّ وَّلَا وَاقٍ
13:37. (நபியே!) இவ்வாறே அரபி (மொழி)யில் சட்டத் திட்டங்களைக் கொண்டதாக, இவ்(வேதத்)தை நாம் இறக்கி வைத்திருக்கின்றோம்; எனவே, உமக்கு ஞானம் வந்த பின்னரும் அவர்களுடைய (வீணான) இச்சைகளை நீர் பின்பற்றினால் அல்லாஹ்விடமிருந்து உமக்கு உதவி செய்பவரும், காப்பவரும் (எவரும்) இல்லை.
15:9 اِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَاِنَّا لَهٗ لَحٰـفِظُوْنَ
15:9. நிச்சயமாக நாம்தான் (நினைவூட்டும்) இவ் வேதத்தை (உம்மீது) இறக்கிவைத்தோம்; நிச்சயமாக நாமே அதனைப் பாதுகாப்போம்.
17:2 وَاٰتَيْنَا مُوْسَى الْـكِتٰبَ وَ جَعَلْنٰهُ هُدًى لِّبَنِىْۤ اِسْرَآءِيْلَ اَلَّا تَتَّخِذُوْا مِنْ دُوْنِىْ وَكِيْلًا ؕ
17:2. இன்னும், நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம்; நாம் அதை இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு வழிகாட்டியாக ஆக்கி, 'என்னையன்றி வேறு எவரையும் நீங்கள் பாதுகாவலனாக ஆக்கிக்கொள்ளாதீர்கள்' (என்றும் கட்டளையிட்டோம்).
18:102 اَفَحَسِبَ الَّذِيْنَ كَفَرُوْۤا اَنْ يَّتَّخِذُوْا عِبَادِىْ مِنْ دُوْنِىْۤ اَوْلِيَآءَ ؕ اِنَّاۤ اَعْتَدْنَا جَهَـنَّمَ لِلْكٰفِرِيْنَ نُزُلًا
18:102. நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை(த் தம்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக நிராகரிப்போருக்கு நரகத்தைத் தங்குமிடமாக நாம் தயார் செய்து வைத்திருக்கிறோம்.
22:13 يَدْعُوْا لَمَنْ ضَرُّهٗۤ اَقْرَبُ مِنْ نَّـفْعِهٖؕ لَبِئْسَ الْمَوْلٰى وَلَبِئْسَ الْعَشِيْرُ
22:13. எவனது தீமை, அவனது நன்மையைவிட மிக நெருங்கியிருக்கிறதோ அவனையே அவன் பிரார்த்திக்கிறான்; திடமாக (அவன் தேடும்) பாதுகாவலனும் கெட்டவன்; (அப்பாதுகாவலனை அண்டி நிற்கும்) நண்பனும் கெட்டவனே.
22:78 وَجَاهِدُوْا فِى اللّٰهِ حَقَّ جِهَادِهٖؕ هُوَ اجْتَبٰٮكُمْ وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِى الدِّيْنِ مِنْ حَرَجٍؕ مِلَّةَ اَبِيْكُمْ اِبْرٰهِيْمَؕ هُوَ سَمّٰٮكُمُ الْمُسْلِمِيْنَ ۙ مِنْ قَبْلُ وَفِىْ هٰذَا لِيَكُوْنَ الرَّسُوْلُ شَهِيْدًا عَلَيْكُمْ وَتَكُوْنُوْا شُهَدَآءَ عَلَى النَّاسِ ۖۚ فَاَقِيْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَاعْتَصِمُوْا بِاللّٰهِؕ هُوَ مَوْلٰٮكُمْۚ فَنِعْمَ الْمَوْلٰى وَنِعْمَ النَّصِيْرُ
22:78. இன்னும், நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் அவனுக்காக போராடவேண்டிய முறைப்படி போராடுங்கள்: அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்; இந்த மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை; உங்கள் பிதாவாகிய இப்ராஹீமுடைய மார்க்கத்தை(ப் பின்பற்றுங்கள்); அவன்தான் (இதற்கு) முன்னர் உங்களுக்கு 'முஸ்லிம்கள்' எனப் பெயரிட்டான்; இ(வ்வேதத்)திலும் (அவ்வாறே கூறப்பட்டுள்ளது; இது ஏனெனில் நம்முடைய) இத்தூதர் உங்களுக்குச் சாட்சியாக இருப்பதற்காகவும், நீங்கள் (மற்ற) மனிதர்களின் மீது சாட்சியாக இருப்பதற்காகவும்; எனவே, நீங்கள் தொழுகையை நிலைநிறுத்துங்கள்; இன்னும், ஜகாத்தைக் கொடுங்கள், அல்லாஹ்வைப் பலமாகப் பிடித்துக்கொள்ளுங்கள்; அவன்தான் உங்கள் பாதுகாவலன்; இன்னும், அவனே மிகச்சிறந்த பாதுகாவலன்; இன்னும், மிகச்சிறந்த உதவியாளன்.
29:22 وَمَاۤ اَنْـتُمْ بِمُعْجِزِيْنَ فِى الْاَرْضِ وَلَا فِى السَّمَآءِ وَمَا لَـكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ وَّلِىٍّ وَّلَا نَصِيْرٍ
29:22. பூமியிலோ, வானத்திலோ நீங்கள் (அவனை) இயலாமல் ஆக்குபவர்களல்லர்; மேலும், உங்களுக்கு அல்லாஹ்வையன்றி (வேறு) பாதுகாவலனோ, உதவியாளனோ இல்லை.
29:41 مَثَلُ الَّذِيْنَ اتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ اَوْلِيَآءَ كَمَثَلِ الْعَنْكَبُوْتِ ۖۚ اِتَّخَذَتْ بَيْتًا ؕ وَ اِنَّ اَوْهَنَ الْبُيُوْتِ لَبَيْتُ الْعَنْكَبُوْتِۘ لَوْ كَانُوْا يَعْلَمُوْنَ
29:41. அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பாதுகாவலர்களாக எடுத்துக்கொண்டவர்களுக்கு உதாரணம், சிலந்திப்பூச்சியின் உதாரணம் போன்றது; அது (தனக்காக) ஒரு வீட்டைக் கட்டியது; இன்னும், நிச்சயமாக வீடுகளிலெல்லாம் மிகவும் பலவீனமானது சிலந்திப்பூச்சியின் வீடேயாகும்; இதை அவர்கள் அறிந்து கொண்டிருப்பார்களாயின் (தாங்கள் இணையாக எடுத்துக் கொண்டவற்றின் பலவீனத்தை அறிவார்கள்).
33:3 وَّتَوَكَّلْ عَلَى اللّٰهِ ؕ وَكَفٰى بِاللّٰهِ وَكِيْلًا
33:3. (நபியே!) அல்லாஹ்வையே நீர் சார்ந்திருப்பீராக! அல்லாஹ்வே (உமக்குப்) பாதுகாவலனாக இருக்கப் போதுமானவன்.
33:17 قُلْ مَنْ ذَا الَّذِىْ يَعْصِمُكُمْ مِّنَ اللّٰهِ اِنْ اَرَادَ بِكُمْ سُوْٓءًا اَوْ اَرَادَ بِكُمْ رَحْمَةً ؕ وَلَا يَجِدُوْنَ لَهُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ وَلِيًّا وَّلَا نَصِيْرًا
33:17. "அல்லாஹ் உங்களுக்குக் கெடுதியை நாடினால், அவனிடமிருந்து உங்களைப் பாதுகாப்பவர் யார்? அல்லது, அவன் உங்களுக்கு அருளை நாடினால், (அதை உங்களுக்குத் தடைசெய்பவர் யார்?): அல்லாஹ்வையன்றி தங்களுக்கு (வேறு யாரையும்) பாதுகாவலனாகவும், உதவியாளனாகவும் அவர்கள் காணமாட்டார்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக!
33:48 وَلَا تُطِعِ الْكٰفِرِيْنَ وَالْمُنٰفِقِيْنَ وَدَعْ اَذٰٮهُمْ وَتَوَكَّلْ عَلَى اللّٰهِ ؕ وَكَفٰى بِاللّٰهِ وَكِيْلًا
33:48. அன்றியும், நிராகரிப்போருக்கும் நயவஞ்சகர்களுக்கும் நீர் கீழ்ப்படியவேண்டாம்; அவர்கள் (தரும்) துன்பத்தை(ப் புறக்கணித்து) விடுவீராக! அல்லாஹ்வையே சார்ந்து இருப்பீராக! பாதுகாவலனாக இருக்க அல்லாஹ்வே போதுமானவனாக இருக்கின்றான்.
34:41 قَالُوْا سُبْحٰنَكَ اَنْتَ وَلِيُّنَا مِنْ دُوْنِهِمْۚ بَلْ كَانُوْا يَعْبُدُوْنَ الْجِنَّ ۚ اَكْثَرُهُمْ بِهِمْ مُّؤْمِنُوْنَ
34:41. (இதற்கு வானவர்கள்) "நீ மிகத் தூய்மையானவன்! நீயே எங்கள் பாதுகாவலன்; இவர்கள் அல்லர்! எனினும், இவர்கள் ஜின்களை வணங்கிக் கொண்டிருந்தார்கள்; இவர்களில் பெரும்பாலோர் அவர் (ஜின்)கள் மேல் நம்பிக்கை கொண்டிருந்தவர்கள்" என்று கூறுவார்கள்.
39:41 اِنَّاۤ اَنْزَلْنَا عَلَيْكَ الْكِتٰبَ لِلنَّاسِ بِالْحَقِّ ۚ فَمَنِ اهْتَدٰى فَلِنَفْسِهٖ ۚ وَمَنْ ضَلَّ فَاِنَّمَا يَضِلُّ عَلَيْهَا ۚ وَمَاۤ اَنْتَ عَلَيْهِمْ بِوَكِيْلٍ
39:41. நிச்சயமாக நாம் மனிதர்களுக்காக உண்மையைக் கொண்டு இந்த வேதத்தை உம்மீது இறக்கினோம்; எனவே, எவர் நேர்வழி பெறுகிறாரோ அது அவருக்கே (நல்லது) ஆகும்; எவர் வழி தவறுகிறாரோ, அவர் தனக்குப் பாதகமாகவே வழிகெட்டுப் போகிறார்: அன்றியும், நீர் அவர்கள் மீது பாதுகாவலர் அல்லர்.
39:62 اَللّٰهُ خَالِقُ كُلِّ شَىْءٍ وَّ هُوَ عَلٰى كُلِّ شَىْءٍ وَّكِيْلٌ
39:62. அல்லாஹ்தான் அனைத்துப் பொருட்களையும் படைப்பவன்; இன்னும், அவனே எல்லாப் பொருட்களின் பாதுகாவலனுமாவான்.
40:27 وَقَالَ مُوْسٰٓى اِنِّىْ عُذْتُ بِرَبِّىْ وَرَبِّكُمْ مِّنْ كُلِّ مُتَكَبِّرٍ لَّا يُؤْمِنُ بِيَوْمِ الْحِسَابِ
40:27. மூஸா கூறினார்: "கேள்வி கணக்குக் கேட்கப்படும் நாள்மீது நம்பிக்கைகொள்ளாது, பெருமையடிக்கும் ஒவ்வொருவரையும் விட்டு, என்னுடைய இறைவனாகவும், உங்களுடைய இறைவனாகவும் இருப்பவனிடம் நிச்சயமாக நான் பாதுகாவல் தேடுகிறேன்."
42:6 وَالَّذِيْنَ اتَّخَذُوْا مِنْ دُوْنِهٖۤ اَوْلِيَآءَ اللّٰهُ حَفِيْظٌ عَلَيْهِمْۖ وَمَاۤ اَنْتَ عَلَيْهِمْ بِوَكِيْلٍ
42:6. அவனையன்றி(த் தங்களுக்கு வேறு) பாதுகாவலர்களை எடுத்துக்கொண்டார்களே அவர்களை அல்லாஹ் கவனித்தவனாகவே இருக்கின்றான்; (நபியே!) அவர்கள்மீது நீர் பொறுப்பாளரும் அல்லர்.
42:8 وَلَوْ شَآءَ اللّٰهُ لَجَعَلَهُمْ اُمَّةً وَّاحِدَةً وَّلٰـكِنْ يُّدْخِلُ مَنْ يَّشَآءُ فِىْ رَحْمَتِهٖؕ وَالظّٰلِمُوْنَ مَا لَهُمْ مِّنْ وَّلِىٍّ وَّلَا نَصِيْرٍ
42:8. அல்லாஹ் நாடியிருந்தால், நிச்சயமாக அவர்களை அவன் ஒரே சமுதாயமாக ஆக்கியிருப்பான்; எனினும், அவன் தான் நாடியவர்களைத் தன்னுடைய கிருபையில் நுழைவிப்பான்; அநியாயக்காரர்களோ அவர்களுக்கு எந்தப் பாதுகாவலனும் இல்லை; எந்த உதவியாளனும் இல்லை.
42:9 اَمِ اتَّخَذُوْا مِنْ دُوْنِهٖۤ اَوْلِيَآءَۚ فَاللّٰهُ هُوَ الْوَلِىُّ وَهُوَ يُحْىِ الْمَوْتٰى وَهُوَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ
42:9. (நபியே!) அவர்கள் அல்லாஹ்வை அன்றி (வேறு) பாதுகாவலர்களை எடுத்துக்கொண்டார்களா? ஆனால், அல்லாஹ்வோ அவன்தான் பாதுகாவலனாக இருக்கின்றான்; அவனே இறந்தோரை உயிர்ப்பிக்கிறான்; அவனே எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவன்.
42:28 وَهُوَ الَّذِىْ يُنَزِّلُ الْغَيْثَ مِنْۢ بَعْدِ مَا قَنَطُوْا وَيَنْشُرُ رَحْمَتَهٗ ؕ وَهُوَ الْوَلِىُّ الْحَمِيْدُ
42:28. அவர்கள் நிராசையான பின்னர் மழையை இறக்கிவைப்பவன் அவனே; மேலும், அவன் தன் அருளைப் பரப்புகிறான்; இன்னும், அவனே புகழுக்குரிய பாதுகாவலன்.
42:31 وَمَاۤ اَنْـتُمْ بِمُعْجِزِيْنَ فِى الْاَرْضِ ۖۚ وَمَا لَـكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ وَّلِىٍّ وَّلَا نَصِيْرٍ
42:31. இன்னும், நீங்கள் பூமியில் (எங்கு தஞ்சம் புகுந்தாலும்) அவனை இயலாமல் ஆக்குபவர்கள் இல்லை; மேலும், உங்களுக்கு அல்லாஹ்வைத் தவிர பாதுகாவலனோ, உதவிபுரிபவனோ இல்லை.
42:44 وَمَنْ يُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ وَّلِىٍّ مِّنْۢ بَعْدِهٖ ؕ وَتَرَى الظّٰلِمِيْنَ لَمَّا رَاَوُا الْعَذَابَ يَقُوْلُوْنَ هَلْ اِلٰى مَرَدٍّ مِّنْ سَبِيْلٍۚ
42:44. இன்னும், எவரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ அதற்குப்பின் அவனுக்குப் பாதுகாவலர் எவருமில்லை; அநியாயம் செய்தவர்கள் வேதனையைக் காணும்போது: "(இதிலிருந்து தப்பித்து) மீள்வதற்கு ஏதாகிலும் வழியுண்டா?" என்று கூறும் நிலையை நீர் காண்பீர்.
42:48 فَاِنْ اَعْرَضُوْا فَمَاۤ اَرْسَلْنٰكَ عَلَيْهِمْ حَفِيْظًاؕ اِنْ عَلَيْكَ اِلَّا الْبَلٰغُ ؕ وَاِنَّاۤ اِذَاۤ اَذَقْنَا الْاِنْسَانَ مِنَّا رَحْمَةً فَرِحَ بِهَاۚ وَاِنْ تُصِبْهُمْ سَيِّئَةٌۢ بِمَا قَدَّمَتْ اَيْدِيْهِمْ فَاِنَّ الْاِنْسَانَ كَفُوْرٌ
42:48. எனினும், (நபியே!) அவர்கள் புறக்கணித்துவிட்டால் (நீர் கவலையுறாதீர்!); நாம் உம்மை அவர்கள்மீது பாதுகாவலராக அனுப்பவில்லை; (தூதுச் செய்தியை எடுத்துக்கூறி) எத்திவைப்பதுதான் உம்மீது கடமையாகும்; இன்னும், நிச்சயமாக நம்முடைய அருளை மனிதனுக்குச் சுவைக்கும்படிச் செய்தால், அது கண்டு அவன் மகிழ்வடைகிறான்; ஆனால், அவர்களுடைய கைகள் முற்படுத்தியுள்ள (பாவத்தின் காரணத்)தால் அவர்களுக்குத் தீங்கு நேரிட்டால், நிச்சயமாக மனிதன் நன்றிகெட்டு மாறுசெய்பவனாக இருக்கின்றான்.
45:19 اِنَّهُمْ لَنْ يُّغْنُوْا عَنْكَ مِنَ اللّٰهِ شَيْــٴًـــا ؕ وَ اِنَّ الظّٰلِمِيْنَ بَعْضُهُمْ اَوْلِيَآءُ بَعْضٍ ۚ وَاللّٰهُ وَلِىُّ الْمُتَّقِيْنَ
45:19. நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு எதிராக உம்மை விட்டு எதையும் தடுத்துவிட முடியாது; இன்னும், நிச்சயமாக அநியாயக்காரர்களில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கிறார்கள்; ஆனால், இறையச்சமுடையவர்களுக்கு அல்லாஹ்வே பாதுகாவலன் ஆவான்.
47:11 ذٰ لِكَ بِاَنَّ اللّٰهَ مَوْلَى الَّذِيْنَ اٰمَنُوْا وَاَنَّ الْكٰفِرِيْنَ لَا مَوْلٰى لَهُمْ
47:11. இது ஏனெனில், அல்லாஹ் நம்பிக்கை கொண்டவர்களுக்குப் பாதுகாவலனாக இருக்கிறான்; நிராகரிப்பாளர்களுக்குப் பாதுகாவலர் எவரும் இல்லை என்பதனால்தான்.
73:9 رَبُّ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ فَاتَّخِذْهُ وَكِيْلًا
73:9. (அவனே) கிழக்கிற்கும், மேற்கிற்கும் இறைவன்; அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) வேறு தெய்வமில்லை; ஆகவே, அவனையே நீர் பாதுகாவலனாக ஆக்கிக்கொள்வீராக!
83:33 وَمَاۤ اُرْسِلُوْا عَلَيْهِمْ حٰفِظِيْنَۙ
83:33. (நம்பிக்கையாளர்களின் மீது) அவர்கள் பாதுகாவலர்களாக அனுப்பப்படவில்லையே!
86:4 اِنْ كُلُّ نَفْسٍ لَّمَّا عَلَيْهَا حَافِظٌؕ
86:4. ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அதன்மீது ஒரு பாதுகாவலர் இல்லாமலில்லை.