பாலூட்டுவது
2:233   وَالْوَالِدٰتُ يُرْضِعْنَ اَوْلَادَهُنَّ حَوْلَيْنِ كَامِلَيْنِ‌ لِمَنْ اَرَادَ اَنْ يُّتِمَّ الرَّضَاعَةَ ‌ ؕ وَعَلَى الْمَوْلُوْدِ لَهٗ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوْفِ‌ؕ لَا تُكَلَّفُ نَفْسٌ اِلَّا وُسْعَهَا ۚ لَا تُضَآرَّ وَالِدَةٌ ۢ بِوَلَدِهَا وَلَا مَوْلُوْدٌ لَّهٗ بِوَلَدِهٖ وَعَلَى الْوَارِثِ مِثْلُ ذٰ لِكَ ۚ فَاِنْ اَرَادَا فِصَالًا عَنْ تَرَاضٍ مِّنْهُمَا وَتَشَاوُرٍ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا ‌ؕ وَاِنْ اَرَدْتُّمْ اَنْ تَسْتَرْضِعُوْٓا اَوْلَادَكُمْ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ اِذَا سَلَّمْتُمْ مَّآ اٰتَيْتُمْ بِالْمَعْرُوْفِ‌ؕ وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ‏
2:233. (தங்களுடைய குழந்தைகளுக்கு, விவாகரத்து சொல்லப்பட்ட தம்மனைவியர்களைக் கொண்டே) பாலூட்டுவதைப் பூர்த்தியாக்க (கணவர்) விரும்பினால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிறைவான இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதல் வேண்டும்; (பாலூட்டும் தாய்மார்களாகிய) அவர்களுக்கு உணவும், அவர்களுக்கு உடையும் முறைப்படி கொடுத்துவருவது குழந்தையுடைய தகப்பன் மீது கடமையாகும்; எந்த ஓர் ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் (எதுவும் செய்ய) சிரமம் கொடுக்கப்படமாட்டாது; தாய் தன் குழந்தையின் காரணமாகவோ இன்னும், தந்தை தன் குழந்தையின் காரணமாகவோ துன்புறுத்தப்பட மாட்டார்; (குழந்தையின் தந்தை இறந்துவிட்டால் அவருடைய) வாரிசின் மீதும் அதேபோன்று (கடமை) இருக்கிறது; இன்னும், (தாய், தந்தையர்) இருவரும் பரஸ்பரம் இணங்கி, ஆலோசித்து பாலூட்டலை நிறுத்த விரும்பினால், அது அவர்கள் இருவர் மீதும் குற்றமில்லை; மேலும், உங்களுடைய குழந்தைகளுக்கு (செவிலித்தாயைக் கொண்டு பாலூட்ட விரும்பினால்) நீங்கள் கொடுக்க வேண்டியதை முறைப்படி ஒப்படைத்துவிட்டால் உங்கள் மீது குற்றமாகாது; அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதைப் பார்ப்பவனாக இருக்கிறான் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
4:23   حُرِّمَتْ عَلَيْكُمْ اُمَّهٰتُكُمْ وَبَنٰتُكُمْ وَاَخَوٰتُكُمْ وَعَمّٰتُكُمْ وَخٰلٰتُكُمْ وَبَنٰتُ الْاَخِ وَبَنٰتُ الْاُخْتِ وَاُمَّهٰتُكُمُ الّٰتِىْۤ اَرْضَعْنَكُمْ وَاَخَوٰتُكُمْ مِّنَ الرَّضَاعَةِ وَ اُمَّهٰتُ نِسَآٮِٕكُمْ وَرَبَآٮِٕبُكُمُ الّٰتِىْ فِىْ حُجُوْرِكُمْ مِّنْ نِّسَآٮِٕكُمُ الّٰتِىْ دَخَلْتُمْ بِهِنَّ فَاِنْ لَّمْ تَكُوْنُوْا دَخَلْتُمْ بِهِنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ وَحَلَاۤٮِٕلُ اَبْنَآٮِٕكُمُ الَّذِيْنَ مِنْ اَصْلَابِكُمْۙ وَاَنْ تَجْمَعُوْا بَيْنَ الْاُخْتَيْنِ اِلَّا مَا قَدْ سَلَفَ‌ؕ اِنَّ اللّٰهَ كَانَ غَفُوْرًا رَّحِيْمًا ۙ‏
4:23. உங்களுக்கு (மணமுடிக்க) விலக்கப்பட்டவர்கள்: உங்கள் தாய்மார்களும், உங்கள் புதல்வியரும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தந்தையின் சகோதரிகளும், உங்கள் தாயின் சகோதரிகளும், உங்கள் சகோதரனின் புதல்வியரும், உங்கள் சகோதரியின் புதல்வியரும், உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும், உங்கள் பால்குடி சகோதரிகளும், உங்கள் மனைவியரின் தாய்மார்களும் ஆவார்கள். இன்னும், நீங்கள் எவர்களுடன் உடலுறவு கொண்டீர்களோ அத்தகைய உங்கள் மனைவியரிலிருந்து (முதற்கணவனுக்குப் பிறந்து) உங்கள் மடிகளில் (பாதுகாப்பில்) இருந்துவரும் உங்களுடைய (மனைவியரின்) புதல்விகளும் (உங்களுக்கு விலக்கப்பட்டவர்கள்). ஆனால், அவர்களுடன் நீங்கள் உடலுறவு கொள்ளவில்லையானால் (அவர்களை விலக்கி முந்திய கணவனால் பிறந்த பெண்ணை விவாகம் செய்துகொள்வதில்) உங்கள் மீது குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த குமாரர்களின் மனைவியரையும் (நீங்கள் விவாகம் செய்து கொள்ளக்கூடாது). இரண்டு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்று சேர்ப்பது (விலக்கப்பட்டது) - இதற்குமுன் நடந்து விட்டவை தவிர. (அவை அறியாமையால் நடந்து விட்டமையால்), நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனுமாக இருக்கிறான்.
22:2   يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّاۤ اَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكٰرٰى وَمَا هُمْ بِسُكٰرٰى وَلٰـكِنَّ عَذَابَ اللّٰهِ شَدِيْدٌ‏
22:2. அந்நாளில், பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொருத்தியும் தான் பாலூட்டியதை (குழந்தையை) மறந்துவிடுவதையும், ஒவ்வொரு கர்ப்பிணியும் தன் சுமையை ஈன்றுவிடுவதையும் நீங்கள் காண்பீர்கள்; மேலும், நீர் மனிதர்களை மதிமயங்கியவர்களாக இருக்கக் காண்பீர்; எனினும், அவர்கள் (மதுவினால்) மதிமயங்கியவர்களல்லர்; ஆனால், அல்லாஹ்வின் வேதனை மிகக் கடுமையானதாகும்.
28:7   وَاَوْحَيْنَاۤ اِلٰٓى اُمِّ مُوْسٰٓى اَنْ اَرْضِعِيْهِ‌ۚ فَاِذَا خِفْتِ عَلَيْهِ فَاَ لْقِيْهِ فِى الْيَمِّ وَلَا تَخَافِىْ وَلَا تَحْزَنِىْۚ اِنَّا رَآدُّوْهُ اِلَيْكِ وَجٰعِلُوْهُ مِنَ الْمُرْسَلِيْنَ‏
28:7. நாம் மூஸாவின் தாயாருக்கு: "அவருக்கு (-உன் குழந்தைக்குப்) பாலூட்டுவாயாக! அவர் மீது (ஏதும் ஆபத்து வரும் என்று) நீ பயப்படுவாயானால் அவரை ஆற்றில் எறிந்துவிடு; அப்பால் (அவருக்காக) நீ பயப்படவும் வேண்டாம்; துக்கப்படவும் வேண்டாம்; நிச்சயமாக நாம் அவரை உன்னிடம் மீள வைப்போம்; இன்னும், அவரை (நம்) தூதர்களில் ஒருவராக்கி வைப்போம்" என்று அறிவித்தோம்.