பால் குடிச் சட்டம்
31:14 وَوَصَّيْنَا الْاِنْسٰنَ بِوَالِدَيْهِۚ حَمَلَتْهُ اُمُّهٗ وَهْنًا عَلٰى وَهْنٍ وَّفِصٰلُهٗ فِىْ عَامَيْنِ اَنِ اشْكُرْ لِىْ وَلِـوَالِدَيْكَؕ اِلَىَّ الْمَصِيْرُ
31:14. நாம் மனிதனுக்குத் தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்யவேண்டியது) பற்றி போதித்தோம்; அவனுடைய தாய் பலவீனத்தின் மேல் பலவீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனைச் சுமந்தாள்; இன்னும், அவனுக்குப் பால்குடி மறத்தலில் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே, நீ எனக்கும் உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.
46:15 وَوَصَّيْنَا الْاِنْسَانَ بِوَالِدَيْهِ اِحْسَانًا ؕ حَمَلَـتْهُ اُمُّهٗ كُرْهًا وَّوَضَعَتْهُ كُرْهًا ؕ وَحَمْلُهٗ وَفِصٰلُهٗ ثَلٰـثُوْنَ شَهْرًا ؕ حَتّٰٓى اِذَا بَلَغَ اَشُدَّهٗ وَبَلَغَ اَرْبَعِيْنَ سَنَةً ۙ قَالَ رَبِّ اَوْزِعْنِىْۤ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِىْۤ اَنْعَمْتَ عَلَىَّ وَعَلٰى وَالِدَىَّ وَاَنْ اَعْمَلَ صَالِحًا تَرْضٰٮهُ وَاَصْلِحْ لِىْ فِىْ ذُرِّيَّتِىْ ؕۚ اِنِّىْ تُبْتُ اِلَيْكَ وَاِنِّىْ مِنَ الْمُسْلِمِيْنَ
46:15. மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி நாம் உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய் வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து, வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்: (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும், அவனுக்குப் பால்குடி மறக்கச் செய்வதும், (மொத்தம்) முப்பது மாதங்களாகும்; அவன் வாலிபனாகி, நாற்பது வயதை அடைந்ததும்: "இறைவனே! நீ என் மீதும் என் பெற்றோர் மீதும் புரிந்த உனது அருட்கொடைக்காக நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய நல்ல செயலைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் (நல்லது செய்பவர்களாக) சீர்ப்படுத்துவாயாக! நிச்சயமாக நான் உன் பக்கமே திரும்புகிறேன்; அன்றியும், நான் (உனக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களில் உள்ளவனாக இருக்கிறேன்" என்று கூறுவான்.