பிராயசித்தம்
2:37 فَتَلَقّٰٓى اٰدَمُ مِنْ رَّبِّهٖ كَلِمٰتٍ فَتَابَ عَلَيْهِؕ اِنَّهٗ هُوَ التَّوَّابُ الرَّحِيْمُ
2:37. பின்னர், ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வார்த்தைகளைப் பெற்றுக்கொண்டார்; (இன்னும், அவற்றின் மூலமாக இறைவனிடம் மன்னிப்புக் கோரினார்;) எனவே, இறைவன் அவரை மன்னித்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும், கருணையாளனும் ஆவான்.
2:54 وَاِذْ قَالَ مُوْسٰى لِقَوْمِهٖ يٰقَوْمِ اِنَّكُمْ ظَلَمْتُمْ اَنْفُسَکُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ فَتُوْبُوْآ اِلٰى بَارِٮِٕكُمْ فَاقْتُلُوْٓا اَنْفُسَكُمْؕ ذٰلِكُمْ خَيْرٌ لَّـكُمْ عِنْدَ بَارِٮِٕكُمْؕ فَتَابَ عَلَيْكُمْؕ اِنَّهٗ هُوَ التَّوَّابُ الرَّحِيْمُ
2:54. மூஸா தம் சமூகத்தாரை நோக்கி, "என் சமூகத்தோரே! நீங்கள் காளைக்கன்றை (வணக்கத்திற்காக) எடுத்துக்கொண்டதன் மூலம் உங்களுக்கு நீங்களே அக்கிரமம் செய்து கொண்டீர்கள்; ஆகவே, உங்களைப் படைத்தவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள்; உங்களை நீங்களே மாய்த்துக்கொள்ளுங்கள்; அதுவே, உங்களைப் படைத்தவனிடம் உங்களுக்கு நன்மையாகும்" எனக் கூறினார்; (அவ்வாறே நீங்கள் செய்ததனால்) அவன் உங்களை மன்னித்தான் (என்பதையும் நினைவு கூருங்கள்); நிச்சயமாக அவன் தான் பாவமன்னிப்பை ஏற்பவனாகவும், கிருபை உடையோனாகவும் இருக்கிறான்.
2:128 رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَـكَ وَ مِنْ ذُرِّيَّتِنَآ اُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَاَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا ۚ اِنَّكَ اَنْتَ التَّوَّابُ الرَّحِيْمُ
2:128. "எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உனக்குக் கட்டுப்பட்டோராக ஆக்குவாயாக! எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உனக்குக் கட்டுப்படும் ஒரு கூட்டத்தினரை ஆக்கிவைப்பாயாக! நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவிப்பாயாக! எங்களை மன்னிப்பாயாக! நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும் அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்!"
2:160 اِلَّا الَّذِيْنَ تَابُوْا وَاَصْلَحُوْا وَبَيَّـنُوْا فَاُولٰٓٮِٕكَ اَ تُوْبُ عَلَيْهِمْۚ وَاَنَا التَّوَّابُ الرَّحِيْمُ
2:160. எவர்கள் பாவமன்னிப்புத் தேடி (தங்களை) சீர்திருத்திக்கொண்டு, அவற்றை (மனிதர்களுக்கு) தெளிவுபடுத்தினார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் சாபத்திற்குரியவர்கள்); அவர்களை நான் மன்னித்துவிடுகிறேன்; நான் மன்னிப்பவனாகவும், கிருபையுடையோனாகவும் இருக்கின்றேன்.
2:187 اُحِلَّ لَـکُمْ لَيْلَةَ الصِّيَامِ الرَّفَثُ اِلٰى نِسَآٮِٕكُمْؕ هُنَّ لِبَاسٌ لَّـكُمْ وَاَنْـتُمْ لِبَاسٌ لَّهُنَّ ؕ عَلِمَ اللّٰهُ اَنَّکُمْ كُنْتُمْ تَخْتَانُوْنَ اَنْفُسَکُمْ فَتَابَ عَلَيْكُمْ وَعَفَا عَنْكُمْۚ فَالْـــٰٔنَ بَاشِرُوْهُنَّ وَابْتَغُوْا مَا کَتَبَ اللّٰهُ لَـكُمْ وَكُلُوْا وَاشْرَبُوْا حَتّٰى يَتَبَيَّنَ لَـكُمُ الْخَـيْطُ الْاَبْيَضُ مِنَ الْخَـيْطِ الْاَسْوَدِ مِنَ الْفَجْرِؕ ثُمَّ اَتِمُّوا الصِّيَامَ اِلَى الَّيْلِۚ وَلَا تُبَاشِرُوْهُنَّ وَاَنْـتُمْ عٰكِفُوْنَ فِى الْمَسٰجِدِؕ تِلْكَ حُدُوْدُ اللّٰهِ فَلَا تَقْرَبُوْهَا ؕ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ اٰيٰتِهٖ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَّقُوْنَ
2:187. நோன்பின் இரவுகளில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது; அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்; நிச்சயமாக நீங்கள் உங்களையே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான்: அவன் உங்கள் மன்னிப்புக் கோருதலை ஏற்று, உங்களை விட்டும் (அப்பாவத்தை) மன்னித்துவிட்டான்; எனவே, இனி (நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததைத் தேடிக் கொள்ளுங்கள்; இன்னும், அதிகாலை நேரம் என்ற வெள்ளை நூல், (இரவு என்ற) கறுப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும்வரை உண்ணுங்கள், பருகுங்கள்; பின்னர், இரவுவரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்; இன்னும், நீங்கள் பள்ளிவாசலில் தங்கி (இஃதிகாஃப்) இருக்கும்போது உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள் - இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும்; அவற்றை (மீற) நெருங்காதீர்கள்; (தன்னை) அஞ்சுவதற்காக இவ்வாறே அல்லாஹ் தன்னுடைய சான்றுகளை மனிதர்களுக்குத் தெளிவாக்குகின்றான்.
2:222 وَ يَسْــٴَــلُوْنَكَ عَنِ الْمَحِيْضِۙ قُلْ هُوَ اَذًى فَاعْتَزِلُوْا النِّسَآءَ فِى الْمَحِيْضِۙ وَلَا تَقْرَبُوْهُنَّ حَتّٰى يَطْهُرْنَۚ فَاِذَا تَطَهَّرْنَ فَاْتُوْهُنَّ مِنْ حَيْثُ اَمَرَكُمُ اللّٰهُؕ اِنَّ اللّٰهَ يُحِبُّ التَّوَّابِيْنَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِيْنَ
2:222. மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்; நீர் கூறும்: "அது ஓர் உபாதையாகும்; ஆகவே, மாதவிடாயின்போது பெண்களை விட்டும் விலகியிருங்கள்; அவர்கள் சுத்தமாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள். அவர்கள் சுத்தமாகிவிட்டால் அல்லாஹ் எப்படிக் கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள். பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கின்றான்; இன்னும், தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்."
2:279 فَاِنْ لَّمْ تَفْعَلُوْا فَاْذَنُوْا بِحَرْبٍ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖۚ وَاِنْ تُبْتُمْ فَلَـكُمْ رُءُوْسُ اَمْوَالِكُمْۚ لَا تَظْلِمُوْنَ وَلَا تُظْلَمُوْنَ
2:279. இவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் போரிடுவதாகப் பிரகடனம் செய்துவிடுங்கள் - நீங்கள் (தவ்பா செய்து இப்பாவத்திலிருந்தும்) மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் மூலதனம் உங்களுக்குண்டு; (கடன் பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள் - நீங்களும் அநியாயம் செய்யப்படமாட்டீர்கள்.
3:89 اِلَّا الَّذِيْنَ تَابُوْا مِنْۢ بَعْدِ ذٰ لِكَ وَاَصْلَحُوْا فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ
3:89. எனினும், இதன் பிறகு (இவர்களில்) எவரேனும் (தம் பாவங்களை உணர்ந்து) மன்னிப்புக் கோரி தங்களைச் சீர்திருத்திக் கொள்வார்களானால், (மன்னிப்புக் கிடைக்கக்கூடும்;) நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கின்றான்.
3:90 اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا بَعْدَ اِيْمَانِهِمْ ثُمَّ ازْدَادُوْا كُفْرًا لَّنْ تُقْبَلَ تَوْبَتُهُمْۚ وَاُولٰٓٮِٕكَ هُمُ الضَّآ لُّوْنَ
3:90. நிச்சயமாக, எவர்கள் நம்பிக்கை கொண்ட பின் நிராகரித்து, மேலும் (அந்த) நிராகரிப்பை அதிகமாக்கிக் கொண்டார்களோ அவர்களுடைய (தவ்பா) மன்னிப்புக் கோரல் ஒப்புக் கொள்ளப்படவே மாட்டாது; அவர்கள்தாம் வழிகெட்டவர்கள்.
3:128 لَيْسَ لَكَ مِنَ الْاَمْرِ شَىْءٌ اَوْ يَتُوْبَ عَلَيْهِمْ اَوْ يُعَذِّبَهُمْ فَاِنَّهُمْ ظٰلِمُوْنَ
3:128. (நபியே!) உமக்கு இவ்விஷயத்தில் எவ்வித அதிகாரமும் இல்லை; அவன் அவர்களை மன்னித்துவிடலாம் அல்லது அவர்களை வேதனைப்படுத்தலாம் - ஏனெனில், நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்களாவர்.
4:16 وَالَّذٰنِ يَاْتِيٰنِهَا مِنْكُمْ فَاٰذُوْهُمَا ۚ فَاِنْ تَابَا وَاَصْلَحَا فَاَعْرِضُوْا عَنْهُمَا ؕ اِنَّ اللّٰهَ كَانَ تَوَّابًا رَّحِيْمًا
4:16. உங்களில் இருவர் அ(ம்மானக் கேடான)தைச் செய்துவிட்டால், அவ்விருவரையும் நீங்கள் நோவினை செய்யுங்கள். அவ்விருவரும் (தாம் செய்த குற்றத்தை நினைத்து வருந்தி) மன்னிப்புக் கேட்டு (தங்களைத்) திருத்திக் கொண்டால், அவ்விருவரை (துன்புறுத்தாமல்) விட்டுவிடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும் கிருபையுடையோனுமாக இருக்கிறான்.
4:17 اِنَّمَا التَّوْبَةُ عَلَى اللّٰهِ لِلَّذِيْنَ يَعْمَلُوْنَ السُّوْٓءَ بِجَهَالَةٍ ثُمَّ يَتُوْبُوْنَ مِنْ قَرِيْبٍ فَاُولٰٓٮِٕكَ يَتُوْبُ اللّٰهُ عَلَيْهِمْؕ وَكَانَ اللّٰهُ عَلِيْمًا حَكِيْمًا
4:17. எவர்கள் அறியாமையினால் தீமை செய்துவிட்டு பின்னர் விரைவில் மன்னிப்புத் தேடிக்கொள்கிறார்களோ அவர்களுக்குத்தான் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு உண்டு; அல்லாஹ் அவர்களை மன்னிப்பான்; இன்னும், அல்லாஹ் நன்கறிந்தோனும் ஞானம் உடையோனுமாக இருக்கிறான்.
4:18 وَلَيْسَتِ التَّوْبَةُ لِلَّذِيْنَ يَعْمَلُوْنَ السَّيِّاٰتِ ۚ حَتّٰۤى اِذَا حَضَرَ اَحَدَهُمُ الْمَوْتُ قَالَ اِنِّىْ تُبْتُ الْـــٰٔنَ وَلَا الَّذِيْنَ يَمُوْتُوْنَ وَهُمْ كُفَّارٌ ؕ اُولٰٓٮِٕكَ اَعْتَدْنَا لَهُمْ عَذَابًا اَ لِيْمًا
4:18. இன்னும், எவர்கள் தீவினைகளைத் (தொடர்ந்து) செய்துகொண்டேயிருந்து முடிவில் அவர்களை மரணம் வந்துவிட்ட நேரத்தில் "நிச்சயமாக இப்பொழுது நான் (பாவங்களுக்காக வருந்தி) மன்னிப்புத் தேடுகிறேன்" என்று கூறுகிறார்களோ அவர்களுக்கும், எவர்கள் நிராகரிப்பவர்களாக இருக்கும் நிலையில் மரணிக்கிறார்களோ அவர்களுக்கும் பாவமன்னிப்பு இல்லை; இத்தகையோருக்கு துன்பம் கொடுக்கும் வேதனையையே நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.
4:26 يُرِيْدُ اللّٰهُ لِيُبَيِّنَ لَـكُمْ وَيَهْدِيَكُمْ سُنَنَ الَّذِيْنَ مِنْ قَبْلِكُمْ وَيَتُوْبَ عَلَيْكُمْ ؕ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ
4:26. அல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்குத் தெளிவாக்கவும், உங்களுக்கு முன் இருந்த (நல்ல)வர்கள் சென்ற (நேரான) வழிகளில் உங்களைச் செலுத்தவும், உங்களுக்குப் பாவமன்னிப்பு அளிக்கவுமே விரும்புகிறான்; இன்னும், அல்லாஹ் நன்கு அறிந்தோனாகவும், ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.
4:27 وَاللّٰهُ يُرِيْدُ اَنْ يَّتُوْبَ عَلَيْكُمْ وَيُرِيْدُ الَّذِيْنَ يَتَّبِعُوْنَ الشَّهَوٰتِ اَنْ تَمِيْلُوْا مَيْلًا عَظِيْمًا
4:27. மேலும், அல்லாஹ் உங்களுக்குப் பாவமன்னிப்பு அளிக்க விரும்புகிறான்; ஆனால், தங்கள் மனோ இச்சைகளைப் பின்பற்றுபவர்களோ, நீங்கள் (நேரான வழியிலிருந்து) முற்றிலும் சாய்ந்துவிடுவதையே விரும்புகிறார்கள்.
4:64 وَمَاۤ اَرْسَلْنَا مِنْ رَّسُوْلٍ اِلَّا لِـيُـطَاعَ بِاِذْنِ اللّٰهِ ؕ وَلَوْ اَنَّهُمْ اِذْ ظَّلَمُوْۤا اَنْفُسَهُمْ جَآءُوْكَ فَاسْتَغْفَرُوا اللّٰهَ وَاسْتَغْفَرَ لَـهُمُ الرَّسُوْلُ لَوَجَدُوا اللّٰهَ تَوَّابًا رَّحِيْمًا
4:64. அல்லாஹ்வின் கட்டளைப்படி அவர் பின்பற்றப்படுவதற்காகவே அன்றி, (மனிதர்களிடம்) நாம் தூதர்களில் எவரையும் அனுப்பவில்லை; ஆகவே, அவர்கள் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்துகொண்ட நேரம், உம்மிடம் வந்து பின்னர், அல்லாஹ்விடம் மன்னிப்புக்கோரி, அவர்களுக்காக (அல்லாஹ்வின்) தூத(ராகிய நீ)ரும் மன்னிப்புக் கேட்டிருந்தால், அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் அவர்கள் கண்டிருப்பார்கள்.
4:92 وَمَا كَانَ لِمُؤْمِنٍ اَنْ يَّقْتُلَ مُؤْمِنًا اِلَّا خَطَـــٴًــا ۚ وَمَنْ قَتَلَ مُؤْمِنًا خَطَـــٴًــا فَتَحْرِيْرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ وَّدِيَةٌ مُّسَلَّمَةٌ اِلٰٓى اَهْلِهٖۤ اِلَّاۤ اَنْ يَّصَّدَّقُوْا ؕ فَاِنْ كَانَ مِنْ قَوْمٍ عَدُوٍّ لَّـكُمْ وَهُوَ مُؤْمِنٌ فَتَحْرِيْرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ ؕ وَاِنْ كَانَ مِنْ قَوْمٍۢ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ مِّيْثَاقٌ فَدِيَةٌ مُّسَلَّمَةٌ اِلٰٓى اَهْلِهٖ وَ تَحْرِيْرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ ۚ فَمَنْ لَّمْ يَجِدْ فَصِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ تَوْبَةً مِّنَ اللّٰهِ ؕ وَكَانَ اللّٰهُ عَلِيْمًا حَكِيْمًا
4:92. தவறாக அன்றி, ஒரு நம்பிக்கையாளனுக்கு பிறிதொரு நம்பிக்கையாளனைக் கொலைசெய்வது ஆகுமானதல்ல: உங்களில் எவரேனும் ஒரு நம்பிக்கையாளனைத் தவறாகக் கொலை செய்துவிட்டால், அதற்குப் பரிகாரமாக நம்பிக்கை கொண்ட ஓர் அடிமையை விடுதலை செய்தலாகும்; இன்னும், அவனுடைய குடும்பத்தார்பால் நஷ்டஈடும் ஒப்படைத்தலாகும்; (அவனுடைய குடும்பத்தாராகிய) அவர்கள் (நஷ்டஈட்டுத் தொகையை மன்னித்து அதை) தர்மமாக விட்டாலொழிய; (கொல்லப்பட்ட) அவன் உங்கள் விரோதியின் சமூகத்தாரில் உள்ளவனாகவும், நம்பிக்கையாளனாகவும் இருந்தால், நம்பிக்கை கொண்ட ஓர் அடிமையை விடுதலை செய்தலாகும்; உங்களுக்கும், எவர்களுக்கும் மத்தியில் (சமாதான) உடன்படிக்கை ஏற்பட்டுள்ளதோ அந்தச் சமூகத்தாரில் உள்ளவனாக இருந்தால், அவனுடைய குடும்பத்தாரிடம் நஷ்டஈடு ஒப்படைக்கப்படுதலாகும்; இன்னும், நம்பிக்கை கொண்ட ஓர் அடிமையை விடுதலை செய்யவும் வேண்டும்; (இவ்வாறு செய்யும் வசதியை) யார் பெறவில்லையோ அவர் அல்லாஹ்விடம் மன்னிப்புப் பெறுவதற்காகத் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்புவைக்க வேண்டும்: அல்லாஹ் நன்கு அறிந்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
4:146 اِلَّا الَّذِيْنَ تَابُوْا وَاَصْلَحُوْا وَاعْتَصَمُوْا بِاللّٰهِ وَاَخْلَصُوْا دِيْنَهُمْ لِلّٰهِ فَاُولٰٓٮِٕكَ مَعَ الْمُؤْمِنِيْنَ ؕ وَسَوْفَ يُـؤْتِ اللّٰهُ الْمُؤْمِنِيْنَ اَجْرًا عَظِيْمًا
4:146. யார் மன்னிப்புக் கேட்டு, சீர்திருந்தி அல்லாஹ்வை (அவனுடைய வேதத்தை) உறுதியாகப் பிடித்து, தங்களுடைய மார்க்கத்தை (-வணக்கத்தை) அல்லாஹ்வுக்காகத் தூய்மையாக்கிக் கொள்கின்றனரோ அவர்களைத் தவிர; அவர்கள் நம்பிக்கையாளர்களுடன் இருப்பார்கள்; மேலும், அல்லாஹ் நம்பிக்கையாளர்களுக்கு மகத்தான (நற்)கூலியை அளிப்பான்.
5:34 اِلَّا الَّذِيْنَ تَابُوْا مِنْ قَبْلِ اَنْ تَقْدِرُوْا عَلَيْهِمْۚ فَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ
5:34. (எனினும்,) அவர்களின் மீது நீங்கள் அதிகாரம் செலுத்தும் முன்பே (தங்களின் தவறுக்கு) பாவமன்னிப்புத் தேடிக்கொண்டவர்களைத் தவிர, நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், கருணையுடையவனாகவும் இருக்கின்றான் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்.
5:39 فَمَنْ تَابَ مِنْۢ بَعْدِ ظُلْمِهٖ وَاَصْلَحَ فَاِنَّ اللّٰهَ يَتُوْبُ عَلَيْهِؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ
5:39. எவரேனும், தம் அநீதத்திற்குப் பின்னர் பாவமன்னிப்புத் தேடி (தம்மைச்) சீர்திருத்திக் கொண்டால், நிச்சயமாக அல்லாஹ் அவருடைய பாவ மன்னிப்புத் தேடுதலை ஏற்றுக்கொள்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.
5:71 وَحَسِبُوْۤا اَلَّا تَكُوْنَ فِتْنَةٌ فَعَمُوْا وَصَمُّوْا ثُمَّ تَابَ اللّٰهُ عَلَيْهِمْ ثُمَّ عَمُوْا وَصَمُّوْا كَثِيْرٌ مِّنْهُمْؕ وَاللّٰهُ بَصِيْرٌۢ بِمَا يَعْمَلُوْنَ
5:71. (இதனால் தங்களுக்கு) எந்தவிதமான வேதனையும் ஏற்படாது என்று அவர்கள் எண்ணிக்கொண்டனர்; ஆகவே, அவர்கள் (உண்மையையுணர முடியாக்) குருடர்களாகவும், செவிடர்களாகவும் ஆகிவிட்டார்கள்; பின்னர், அல்லாஹ் அவர்களுடைய பாவமன்னிப்பை ஏற்றுக்கொண்டான்; எனினும், அவர்களில் பெரும்பாலோர் குருடர்களாகவும், செவிடர்களாகவுமே ஆகிவிட்டனர்; அல்லாஹ், அவர்கள் செய்பவற்றையெல்லாம் (நன்கு) உற்று நோக்கியவனாக இருக்கின்றான்.
5:74 اَفَلَا يَتُوْبُوْنَ اِلَى اللّٰهِ وَيَسْتَغْفِرُوْنَهٗؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ
5:74. இவர்கள் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி அவனிடம் மன்னிப்புக் கேட்கமாட்டார்களா? அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கிறான்.
6:54 وَاِذَا جَآءَكَ الَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِاٰيٰتِنَا فَقُلْ سَلٰمٌ عَلَيْكُمْ كَتَبَ رَبُّكُمْ عَلٰى نَفْسِهِ الرَّحْمَةَ ۙ اَنَّهٗ مَنْ عَمِلَ مِنْكُمْ سُوْٓءًۢا بِجَهَالَةٍ ثُمَّ تَابَ مِنْۢ بَعْدِهٖ وَاَصْلَحَۙ فَاَنَّهٗ غَفُوْرٌ رَّحِيْمٌ
6:54. நம் வசனங்களை நம்பியவர்கள் உம்மிடம் வந்தால், "உங்கள் மீது சாந்தி உண்டாவதாக!" என்று (நபியே!) நீர் கூறும்; உங்கள் இறைவன் கிருபை செய்வதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டான்; உங்களில் எவரேனும் அறியாமையினால் (யாதொரு) தீமையைச் செய்துவிட்டு, பிறகு அதற்குப் பின், (பாவத்தை விட்டும்) வருந்தி (அதிலிருந்து விலகி) சீர்திருத்திக் கொண்டாரோ, (அவருடைய குற்றங்களை அல்லாஹ் மன்னித்து விடுவான்; ஏனென்றால்,) நிச்சயமாக அவன் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான்.
7:143 وَلَمَّا جَآءَ مُوْسٰى لِمِيْقَاتِنَا وَكَلَّمَهٗ رَبُّهٗ ۙ قَالَ رَبِّ اَرِنِىْۤ اَنْظُرْ اِلَيْكَ ؕ قَالَ لَنْ تَرٰٮنِىْ وَلٰـكِنِ انْظُرْ اِلَى الْجَـبَلِ فَاِنِ اسْتَقَرَّ مَكَانَهٗ فَسَوْفَ تَرٰٮنِىْ ۚ فَلَمَّا تَجَلّٰى رَبُّهٗ لِلْجَبَلِ جَعَلَهٗ دَكًّا وَّخَرَّ مُوْسٰى صَعِقًا ۚ فَلَمَّاۤ اَفَاقَ قَالَ سُبْحٰنَكَ تُبْتُ اِلَيْكَ وَاَنَا اَوَّلُ الْمُؤْمِنِيْنَ
7:143. நாம் குறித்த காலத்தில் (குறிப்பிட்ட இடத்தில்) மூஸா வந்தபோது, அவருடைய இறைவன் அவருடன் பேசினான்; (அப்போது) "என் இறைவனே! நீ (உன்னை) எனக்குக் காண்பிப்பாயாக! நான் உன்னைப் பார்க்க வேண்டும்;" என்று அவர் வேண்டினார்; (அதற்கு) அவன், "நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது; எனினும், நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும்; அது தன் இடத்தில் நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்!" என்று கூறினான்: ஆகவே, அவருடைய இறைவன் அம்மலை மீது வெளிப்பட்டபோது அ(வ்வாறு வெளிப்பட்ட நிலையான)து, அ(ம்மலையான)தைத் தூளாக்கி விட்டது: அப்போது, மூஸா மூர்ச்சையாகி (கீழே) விழுந்துவிட்டார்: அவர் தெளிவடைந்ததும், "(இறைவா!) நீ மிகவும் பரிசுத்தமானவன்: நான் உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன்; நம்பிக்கை கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன்" என்று கூறினார்.
7:153 وَالَّذِيْنَ عَمِلُوا السَّيِّاٰتِ ثُمَّ تَابُوْا مِنْۢ بَعْدِهَا وَاٰمَنُوْۤا اِنَّ رَبَّكَ مِنْۢ بَعْدِهَا لَغَفُوْرٌ رَّحِيْمٌ
7:153. ஆனால், எவர்கள் தீய செயல்கள் செய்து (மனந்திருந்தி) பின்னர், அதன் பிறகு (பாவங்களிலிருந்து விலகி உண்மையாக) நம்பிக்கை கொண்டனரோ, நிச்சயமாக அதன் பின் உம்முடைய இறைவன் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்.
9:5 فَاِذَا انْسَلَخَ الْاَشْهُرُ الْحُـرُمُ فَاقْتُلُوا الْمُشْرِكِيْنَ حَيْثُ وَجَدْتُّمُوْهُمْ وَخُذُوْهُمْ وَاحْصُرُوْهُمْ وَاقْعُدُوْا لَهُمْ كُلَّ مَرْصَدٍ ۚ فَاِنْ تَابُوْا وَاَقَامُوا الصَّلٰوةَ وَ اٰتَوُا الزَّكٰوةَ فَخَلُّوْا سَبِيْلَهُمْ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ
9:5. (போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்கை மிக்க மாதங்கள் கழிந்துவிட்டால், இணைவைப்பவர்களை நீங்கள் கண்ட இடங்களில் கொல்லுங்கள்; இன்னும், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையுமிடுங்கள்; ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள்; ஆனால், அவர்கள் (மனந்திருந்தி) பாவமன்னிப்புக் கோரி தொழுகையையும் கடைப்பிடித்து, ஜகாத்தும் (முறைப்படி) கொடுத்து வருவார்களானால் அவர்களுடைய வழியை விட்டுவிடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
9:11 فَاِنْ تَابُوْا وَاَقَامُوا الصَّلٰوةَ وَاٰتَوُا الزَّكٰوةَ فَاِخْوَانُكُمْ فِى الدِّيْنِؕ وَنُفَصِّلُ الْاٰيٰتِ لِقَوْمٍ يَّعْلَمُوْنَ
9:11. ஆயினும், அவர்கள் பாவமன்னிப்புக் கோரி (மனந்திருந்தி தம் தவறுகளிலிருந்து விலகி) தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தையும் கொடுப்பார்களானால், அவர்கள் மார்க்கத்தில் உங்கள் சகோதரர்கள்; நாம் அறிவுள்ள சமூகத்தினருக்கு (நம்) வசனங்களை விளக்குகிறோம்.
9:15 وَيُذْهِبْ غَيْظَ قُلُوْبِهِمْ ؕ وَ يَتُوْبُ اللّٰهُ عَلٰى مَنْ يَّشَآءُ ؕ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ
9:15. அவர்களுடைய இதயங்களின் கோபத்தைப் போக்கிவிடுவான்; தான் நாடியவரின் மன்னிப்புக் கோருதலை ஏற்றுக்கொள்கிறான்; அல்லாஹ் (எல்லாம்) அறிந்தவனாகவும், (பூரண) ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
9:27 ثُمَّ يَتُوْبُ اللّٰهُ مِنْۢ بَعْدِ ذٰ لِكَ عَلٰى مَنْ يَّشَآءُ ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ
9:27. அல்லாஹ் இதற்குப் பின்னர், தான் நாடியவருக்கு (அவர்கள் மனம் திருந்தி மன்னிப்புக் கோரினால்) மன்னிப்பளிக்கின்றான்; அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்.
9:102 وَاٰخَرُوْنَ اعْتَرَفُوْا بِذُنُوْبِهِمْ خَلَطُوْا عَمَلًا صَالِحًـا وَّاٰخَرَ سَيِّئًا ؕ عَسَى اللّٰهُ اَنْ يَّتُوْبَ عَلَيْهِمْ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ
9:102. வேறு சிலர் தம் குற்றங்களை ஒப்புக்கொள்கின்றனர்; நற்செயலையும், வேறு தீமையையும் அவர்கள் கலந்துவிட்டனர்; அல்லாஹ் அவர்களை மன்னிக்கப் போதுமானவன்; நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் பெரும் கிருபையாளனாகவும் இருக்கின்றான்.
9:104 اَلَمْ يَعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ هُوَ يَقْبَلُ التَّوْبَةَ عَنْ عِبَادِهٖ وَيَاْخُذُ الصَّدَقٰتِ وَ اَنَّ اللّٰهَ هُوَ التَّوَّابُ الرَّحِيْمُ
9:104. நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களிடமிருந்து மன்னிப்புக் கோருதலை ஒப்புக் கொள்கிறான் என்பதையும், (அவர்களுடைய) தர்மங்களை அங்கீகரிக்கிறான் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் - அவனே மன்னிப்புக் கோருதலை ஏற்றுக்கொள்கிறவன், மிகக் கிருபையுடையவன் என்பதையும் அவர்கள் அறியவில்லையா?
9:106 وَاٰخَرُوْنَ مُرْجَوْنَ لِاَمْرِ اللّٰهِ اِمَّا يُعَذِّبُهُمْ وَاِمَّا يَتُوْبُ عَلَيْهِمْؕ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ
9:106. வேறுசிலர் அல்லாஹ்வின் கட்டளைக்காகப் பிற்படுத்தப்பட்டுள்ளனர்; (அல்லாஹ்) அவர்களைத் தண்டிக்கலாம் அல்லது அவர்களை மன்னிக்கலாம்: அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.
9:112 اَلتَّاۤٮِٕبُوْنَ الْعٰبِدُوْنَ الْحٰمِدُوْنَ السّاۤٮِٕحُوْنَ الرّٰكِعُوْنَ السّٰجِدُوْنَ الْاٰمِرُوْنَ بِالْمَعْرُوْفِ وَالنَّاهُوْنَ عَنِ الْمُنْكَرِ وَالْحٰــفِظُوْنَ لِحُدُوْدِ اللّٰه ِؕ وَبَشِّرِ الْمُؤْمِنِيْنَ
9:112. மன்னிப்புக் கோரி மீண்டவர்கள், (அவனை) வணங்குபவர்கள், (அவனைப்) புகழ்பவர்கள், நோன்பு நோற்பவர்கள், ருகூஉ செய்பவர்கள், ஸஜ்தா செய்பவர்கள் (தொழுபவர்கள்), நன்மை செய்ய ஏவுபவர்கள், தீமையைவிட்டு விலக்குபவர்கள், அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணிப் பாதுகாப்பவர்கள் - இத்தகைய நம்பிக்கையாளர்களுக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக!
9:117 لَـقَدْ تَّابَ اللّٰهُ عَلَى النَّبِىِّ وَالْمُهٰجِرِيْنَ وَالْاَنْصَارِ الَّذِيْنَ اتَّبَعُوْهُ فِىْ سَاعَةِ الْعُسْرَةِ مِنْۢ بَعْدِ مَا كَادَ يَزِيْغُ قُلُوْبُ فَرِيْقٍ مِّنْهُمْ ثُمَّ تَابَ عَلَيْهِمْؕ اِنَّهٗ بِهِمْ رَءُوْفٌ رَّحِيْمٌۙ
9:117. நிச்சயமாக அல்லாஹ் நபியையும், முஹாஜிர்களையும், அன்சாரிகளையும் மன்னித்தான்; அவர்களில் ஒரு பிரிவினருடைய இதயங்கள் சறுகிவிடுவதற்கு நெருங்கிய பின்னர், கஷ்டமான காலத்தில் (நமது நபியாகிய) அவரை அவர்கள் பின்பற்றினர்; பின்னரும், அவர்களை மன்னித்(து அருள் புரிந்)தான்; நிச்சயமாக அவன் அவர்கள் மீது மிக்க கருணையும், கிருபையும் உடையவனாக இருக்கின்றான்.
9:118 وَّعَلَى الثَّلٰثَةِ الَّذِيْنَ خُلِّفُوْا ؕ حَتّٰۤى اِذَا ضَاقَتْ عَلَيْهِمُ الْاَرْضُ بِمَا رَحُبَتْ وَضَاقَتْ عَلَيْهِمْ اَنْفُسُهُمْ وَظَنُّوْۤا اَنْ لَّا مَلْجَاَ مِنَ اللّٰهِ اِلَّاۤ اِلَيْهِ ؕ ثُمَّ تَابَ عَلَيْهِمْ لِيَتُوْبُوْا ؕ اِنَّ اللّٰهَ هُوَ التَّوَّابُ الرَّحِيْمُ
9:118. (அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்து) பிற்படுத்திவைக்கப்பட்டிருந்த அந்த மூவரையும் (அல்லாஹ் மன்னித்துவிட்டான்); முடிவில் பூமி - அது விசாலமாக இருந்தும், அது அவர்களுக்கு நெருக்கடியாகி, அவர்களின் உயிர்களும் அவர்கள் மீது நெருக்கடியாகிவிட்டது; அல்லாஹ்விடமிருந்து தப்புமிடம் அவனின் பக்கமே தவிர வேறில்லை என்பதையும் அவர்கள் உறுதியாக அறிந்துகொண்டார்கள்; ஆகவே, அவர்கள் பாவத்திலிருந்து விலகிக்கொள்ளும் பொருட்டு, அவர்களை அவன் மன்னித்தான்; நிச்சயமாக அல்லாஹ்தான் மன்னிப்பை ஏற்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
9:126 اَوَلَا يَرَوْنَ اَنَّهُمْ يُفْتَـنُوْنَ فِىْ كُلِّ عَامٍ مَّرَّةً اَوْ مَرَّتَيْنِ ثُمَّ لَا يَتُوْبُوْنَ وَلَا هُمْ يَذَّكَّرُوْنَ
9:126. ஒவ்வோர் ஆண்டிலும், ஒரு முறையோ, இருமுறையோ அவர்கள் சோதிக்கப்படுகிறார்கள் என்பதை அவர்கள் காணவில்லையா? அப்படியிருந்தும், அவர்கள் பாவமன்னிப்புக் கோருவதுமில்லை; இன்னும், அவர்கள் படிப்பினை பெறுவதுமில்லை.
11:3 وَّاَنِ اسْتَغْفِرُوْا رَبَّكُمْ ثُمَّ تُوْبُوْۤا اِلَيْهِ يُمَتِّعْكُمْ مَّتَاعًا حَسَنًا اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى وَ يُؤْتِ كُلَّ ذِىْ فَضْلٍ فَضْلَهٗ ؕ وَاِنْ تَوَلَّوْا فَاِنِّىْۤ اَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ كَبِيْرٍ
11:3. "நீங்கள் உங்கள் இறைவனிடம் மன்னிப்பைத் தேடி (பாவங்களை விட்டு) அவனிடம் திரும்புங்கள்; (நீங்கள் அவ்வாறு செய்தால்) அவன் ஒரு குறிப்பிட்ட தவணைவரை உங்களுக்கு அழகிய வசதிகளை ஏற்படுத்துவான்; இன்னும், நற்செயல் உடைய ஒவ்வொருவருக்கும் (மறுமையில்) அவனுடைய வெகுமதியைக் கொடுப்பான்; ஆனால், நீங்கள் (நம்பிக்கை கொள்வதைப்) புறக்கணித்தால், மாபெரும் நாளின் வேதனை குறித்து நிச்சயமாக உங்களுக்காக நான் பயப்படுகிறேன்."
11:11 اِلَّا الَّذِيْنَ صَبَرُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِؕ اُولٰٓٮِٕكَ لَهُمْ مَّغْفِرَةٌ وَّاَجْرٌ كَبِيْرٌ
11:11. (ஆனால், துன்பங்கள் ஏற்படும் நேரத்தில்) எவர்கள் பொறுமையாய் இருந்து நற்செயல்கள் செய்கின்றார்களோ, அவர்களைத் தவிர; அத்தகையோர் - அவர்களுக்கு மன்னிப்பும், மாபெரும் (நற்) கூலியும் உண்டு.
11:52 وَيٰقَوْمِ اسْتَغْفِرُوْا رَبَّكُمْ ثُمَّ تُوْبُوْۤا اِلَيْهِ يُرْسِلِ السَّمَآءَ عَلَيْكُمْ مِّدْرَارًا وَّيَزِدْكُمْ قُوَّةً اِلٰى قُوَّتِكُمْ وَلَا تَتَوَلَّوْا مُجْرِمِيْنَ
11:52. 'என்னுடைய சமூகத்தாரே! நீங்கள் உங்களுடைய இறைவனிடம் பிழைபொறுக்கத் தேடுங்கள்; இன்னும், அவன் பக்கமே மீளுங்கள்: அவன் உங்கள் மீது வானத்திலிருந்து தொடராக மழையை அனுப்புவான்; இன்னும், உங்களுடைய வலிமையுடன் மேலும் வலிமையை உங்களுக்கு அதிகரிக்கச் செய்வான்; இன்னும், நீங்கள் குற்றவாளிகளாகி புறக்கணித்துவிடாதீர்கள்' (என்றும் எச்சரித்துக் கூறினார்).
11:61 وَاِلٰى ثَمُوْدَ اَخَاهُمْ صٰلِحًاۘ قَالَ يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَـكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗ ؕ هُوَ اَنْشَاَكُمْ مِّنَ الْاَرْضِ وَاسْتَعْمَرَكُمْ فِيْهَا فَاسْتَغْفِرُوْهُ ثُمَّ تُوْبُوْۤا اِلَيْهِ ؕ اِنَّ رَبِّىْ قَرِيْبٌ مُّجِيْبٌ
11:61. இன்னும், ஸமூது (கூட்டத்தினர்) பால் அவர்கள் சகோதரர் ஸாலிஹை (நம் தூதராக அனுப்பினோம்); அவர் சொன்னார்: "என் சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; அவனைத் தவிர உங்களுக்கு வேறு கடவுள் இல்லை; அவனே உங்களைப் பூமியிலிருந்து உண்டாக்கி, அதிலேயே உங்களை வசிக்கவும் வைத்தான்; எனவே, அவனிடமே பிழை பொறுக்கத் தேடுங்கள்; இன்னும், அவன் பக்கமே மீளுங்கள்; நிச்சயமாக என் இறைவன் (உங்களுக்கு) மிக அருகில் இருக்கின்றான்; (பிரார்த்தனைகளை) ஏற்பவனாகவும் இருக்கின்றான்."
11:90 وَاسْتَغْفِرُوْا رَبَّكُمْ ثُمَّ تُوْبُوْۤا اِلَيْهِؕ اِنَّ رَبِّىْ رَحِيْمٌ وَّدُوْدٌ
11:90. "ஆகவே, உங்களுடைய இறைவனிடம் நீங்கள் மன்னிப்புக் கோரி, இன்னும் அவன் பக்கமே மீளுங்கள்; நிச்சயமாக என்னுடைய இறைவன் மிக்க கிருபையுடையவனாகவும், பிரியமுடையவனாகவும் இருக்கின்றான்" (என்று கூறினார்).
16:119 ثُمَّ اِنَّ رَبَّكَ لِلَّذِيْنَ عَمِلُوا السُّوْۤءَ بِجَهَالَةٍ ثُمَّ تَابُوْا مِنْۢ بَعْدِ ذٰ لِكَ وَاَصْلَحُوْۤا ۙ اِنَّ رَبَّكَ مِنْۢ بَعْدِهَا لَغَفُوْرٌ رَّحِيْمٌ
16:119. பிறகு, நிச்சயமாக உம் இறைவன், எவர்கள் அறியாமையினால் தீமைசெய்து, அதற்குப் பின்னர் (அவற்றிலிருந்து விலகி) பாவமன்னிப்புக்கோரி, தங்களை சீர்திருத்திக்கொள்கிறார்களோ அவர்களுக்(கு மன்னிப்பதற்)காகவே இருக்கிறான்; நிச்சயமாக அதன் பின்பும் உம் இறைவன் பிழை பொறுப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
19:60 اِلَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ صَالِحًـا فَاُولٰٓٮِٕكَ يَدْخُلُوْنَ الْجَـنَّةَ وَلَا يُظْلَمُوْنَ شَيْــٴًـــا ۙ
19:60. (எனினும்) எவர் பாவமன்னிப்புக் கோரி, நம்பிக்கை கொண்டு, நற்செயலைச் செய்தாரோ அவரைத் தவிர - அத்தகையவர்கள் சுவர்க்கத்தில் பிரவேசிப்பார்கள்; (அவர்கள் அடைய வேண்டிய நற்பயன்) எதிலும் அவர்கள் சிறிதும் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
20:82 وَاِنِّىْ لَـغَفَّارٌ لِّمَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ صَالِحًـا ثُمَّ اهْتَدٰى
20:82. "எவன் பாவமன்னிப்புத் தேடி, நம்பிக்கை கொண்டு, நற்செயல்களையும் செய்து அப்பால் நேர்வழியும் அடைகிறானோ அவனுக்கு நிச்சயமாக நான் மிகவும் மன்னிப்பவனாக இருக்கின்றேன்" (என்று கூறினோம்).
20:122 ثُمَّ اجْتَبٰهُ رَبُّهٗ فَتَابَ عَلَيْهِ وَهَدٰى
20:122. பின்னர், அவரது இறைவன் அவரைத் தேர்ந்தெடுத்து அவரை மன்னித்து நேர்வழியும் காட்டினான்.
24:5 اِلَّا الَّذِيْنَ تَابُوْا مِنْۢ بَعْدِ ذٰلِكَ وَاَصْلَحُوْاۚ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ
24:5. எனினும், (இவர்களில்) எவர் இதற்குப் பின்னர் தவ்பா செய்து (தங்களைத்) திருத்திக் கொள்கிறார்களோ - நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்.
24:10 وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ وَاَنَّ اللّٰهَ تَوَّابٌ حَكِيْمٌ
24:10. இன்னும், உங்கள் மீது அல்லாஹ்வுடைய அருளும், அவனுடைய கிருபையும் இல்லாது போயிருப்பின், (உங்களுக்கு அழிவு உண்டாகியிருக்கும்;) நிச்சயமாக அல்லாஹ் தவ்பாவை ஏற்றுக்கொள்பவனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.
24:31 وَقُلْ لِّـلْمُؤْمِنٰتِ يَغْضُضْنَ مِنْ اَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوْجَهُنَّ وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ اِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَـضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلٰى جُيُوْبِهِنَّ وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ اِلَّا لِبُعُوْلَتِهِنَّ اَوْ اٰبَآٮِٕهِنَّ اَوْ اٰبَآءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اَبْنَآٮِٕهِنَّ اَوْ اَبْنَآءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اِخْوَانِهِنَّ اَوْ بَنِىْۤ اِخْوَانِهِنَّ اَوْ بَنِىْۤ اَخَوٰتِهِنَّ اَوْ نِسَآٮِٕهِنَّ اَوْ مَا مَلَـكَتْ اَيْمَانُهُنَّ اَوِ التّٰبِعِيْنَ غَيْرِ اُولِى الْاِرْبَةِ مِنَ الرِّجَالِ اَوِ الطِّفْلِ الَّذِيْنَ لَمْ يَظْهَرُوْا عَلٰى عَوْرٰتِ النِّسَآءِ وَلَا يَضْرِبْنَ بِاَرْجُلِهِنَّ لِيُـعْلَمَ مَا يُخْفِيْنَ مِنْ زِيْنَتِهِنَّ ؕ وَتُوْبُوْۤا اِلَى اللّٰهِ جَمِيْعًا اَيُّهَ الْمُؤْمِنُوْنَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ
24:31. இன்னும், நம்பிக்கையாளர்களான பெண்களுக்கும் நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத்தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ளவேண்டும்; தங்கள் அலங்காரத்தை - அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக்காட்டலாகாது; இன்னும், தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக்கொள்ள வேண்டும்; மேலும் (நம்பிக்கையாளர்களான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள், அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள் அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் (வயோதிகத்தின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்துகொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது. மேலும், தம் அலங்காரத்திலிருந்து தாம் மறைத்து வைத்திருப்பது அறியப்படுவதற்காக தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், நம்பிக்கையாளர்களே! நீங்கள் வெற்றிபெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் பாவமன்னிப்புக்கோரி அல்லாஹ்வின் பக்கம் மீளுங்கள்.
25:70 اِلَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ عَمَلًاصَالِحًـا فَاُولٰٓٮِٕكَ يُبَدِّلُ اللّٰهُ سَيِّاٰتِهِمْ حَسَنٰتٍ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا
25:70. ஆனால், (அவர்களில்) எவர் பாவமன்னிப்புக் கோரி நம்பிக்கை கொண்டு, நற்செயலைச் செய்தாரோ அவரைத் தவிர; அத்தகையோர் - அவர்களுடைய தீமைகளை நன்மைகளாக அல்லாஹ் மாற்றிவிடுவான்; மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும் மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கிறான்.
25:71 وَمَنْ تَابَ وَعَمِلَ صَالِحًـا فَاِنَّهٗ يَتُوْبُ اِلَى اللّٰهِ مَتَابًا
25:71. இன்னும், எவர் பாவமன்னிப்புக் கோரி, நற்செயல் செய்கின்றாரோ நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் பக்கம் முற்றிலுமாகத் திரும்பிவிடுகிறார்.
28:67 فَاَمَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ صَالِحًـا فَعَسٰٓى اَنْ يَّكُوْنَ مِنَ الْمُفْلِحِيْنَ
28:67. ஆனால், எவர்கள் பாவமன்னிப்புக் கோரி நம்பிக்கை கொண்டு, நற்செயலைச் செய்தாரோ அவர் வெற்றியாளர்களில் உள்ளவராகிடலாம்.
33:24 لِّيَجْزِىَ اللّٰهُ الصّٰدِقِيْنَ بِصِدْقِهِمْ وَيُعَذِّبَ الْمُنٰفِقِيْنَ اِنْ شَآءَ اَوْ يَتُوْبَ عَلَيْهِمْ ؕ اِنَّ اللّٰهَ كَانَ غَفُوْرًا رَّحِيْمًا ۚ
33:24. உண்மையாளர்களுக்கு அவர்களின் உண்மைக்குரிய கூலியை அல்லாஹ் திடமாக அளிப்பான்; அவன் நாடினால் நயவஞ்சகர்களை வேதனை செய்வான்; அல்லது அவர்களை மன்னிப்பான்; நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.
33:73 لِّيُعَذِّبَ اللّٰهُ الْمُنٰفِقِيْنَ وَالْمُنٰفِقٰتِ وَالْمُشْرِكِيْنَ وَالْمُشْرِكٰتِ وَيَتُوْبَ اللّٰهُ عَلَى الْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا
33:73. எனவே, (இவ்வமானிதத்திற்கு மாறுசெய்யும்) நயவஞ்சகர்களான ஆண்களையும், நயவஞ்சகர்களான பெண்களையும்; இணைவைப்பவர்களான ஆண்களையும், இணைவைப்பவர்களான பெண்களையும் நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வான்; (ஆனால், இவ்வமானிதத்தை மதித்து நடக்கும்) நம்பிக்கையாளர்களான ஆண்களையும், நம்பிக்கையாளர்களான பெண்களையும் (அவர்கள் தவ்பாவை ஏற்று) மன்னிக்கின்றான்; அல்லாஹ் மிக மன்னிப்பவன், மிக்க அன்புடையவன்.
40:3 غَافِرِ الذَّنْۢبِ وَقَابِلِ التَّوْبِ شَدِيْدِ الْعِقَابِ ذِى الطَّوْلِؕ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَؕ اِلَيْهِ الْمَصِيْرُ
40:3. (அவன்) பாவத்தை மன்னிப்பவனும், மன்னிப்புக் கேட்பதை அங்கீகரிப்பவனும், தண்டிப்பதில் கடுமையானவனும், அருளுடையவனும் ஆவான்; அவனைத் தவிர வேறு தெய்வமில்லை; அவனிடமே (யாவரும்) மீள வேண்டியிருக்கிறது.
40:7 اَلَّذِيْنَ يَحْمِلُوْنَ الْعَرْشَ وَمَنْ حَوْلَهٗ يُسَبِّحُوْنَ بِحَمْدِ رَبِّهِمْ وَيُؤْمِنُوْنَ بِهٖ وَيَسْتَغْفِرُوْنَ لِلَّذِيْنَ اٰمَنُوْا ۚ رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَىْءٍ رَّحْمَةً وَّعِلْمًا فَاغْفِرْ لِلَّذِيْنَ تَابُوْا وَاتَّبَعُوْا سَبِيْلَكَ وَقِهِمْ عَذَابَ الْجَحِيْمِ
40:7. அர்ஷை (அரியாசனத்தை)ச் சுமந்து கொண்டிருப்பவர்களும், அதைச் சுற்றியுள்ளவர்களும் தங்கள் இறைவனின் புகழைக்கொண்டு அவனைத் துதி செய்துகொண்டு இருக்கிறார்கள்; அவன் மீது நம்பிக்கை வைக்கிறார்கள்; மேலும், நம்பிக்கை கொண்டவர்களுக்காக மன்னிப்புக் கோருகின்றனர்; "எங்கள் இறைவனே! நீ அருளாலும், ஞானத்தாலும் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்து இருக்கிறாய்! எனவே, பாவமீட்சி கோரி உன் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு, நீ மன்னிப்பளிப்பாயாக! இன்னும், அவர்களை நரக வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!"
42:25 وَهُوَ الَّذِىْ يَقْبَلُ التَّوْبَةَ عَنْ عِبَادِهٖ وَيَعْفُوْا عَنِ السَّيِّاٰتِ وَيَعْلَمُ مَا تَفْعَلُوْنَ ۙ
42:25. அவன்தான் தன் அடியார்களின் (தவ்பாவை-) பாவமன்னிப்புக் கோருதலை ஏற்றுக்கொள்கிறான்; (அவர்களின்) குற்றங்களை மன்னிக்கிறான்; இன்னும், நீங்கள் செய்வதை அவன் நன்கறிகிறான்.
49:12 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اجْتَنِبُوْا كَثِيْرًا مِّنَ الظَّنِّ اِنَّ بَعْضَ الظَّنِّ اِثْمٌ وَّلَا تَجَسَّسُوْا وَلَا يَغْتَبْ بَّعْضُكُمْ بَعْضًا ؕ اَ يُحِبُّ اَحَدُكُمْ اَنْ يَّاْكُلَ لَحْمَ اَخِيْهِ مَيْتًا فَكَرِهْتُمُوْهُ ؕ وَاتَّقُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ تَوَّابٌ رَّحِيْمٌ
49:12. நம்பிக்கையாளர்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக்கொள்ளுங்கள்; ஏனெனில், நிச்சயமாக எண்ணங்களில் சில பாவமாகும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப்பற்றிப் புறம் பேச வேண்டாம்; உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள்; இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்; நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக்கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன்.
58:13 ءَاَشْفَقْتُمْ اَنْ تُقَدِّمُوْا بَيْنَ يَدَىْ نَجْوٰٮكُمْ صَدَقٰتٍ ؕ فَاِذْ لَمْ تَفْعَلُوْا وَتَابَ اللّٰهُ عَلَيْكُمْ فَاَقِيْمُوا الصَّلٰوةَ وَ اٰتُوا الزَّكٰوةَ وَاَطِيْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ ؕ وَاللّٰهُ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ
58:13. நீங்கள் உங்கள் இரகசியப் பேச்சுக்கு முன்னால் தானதர்மங்கள் முற்படுத்தி வைக்கவேண்டுமே என்று அஞ்சுகிறீர்களா? அப்படி நீங்கள் செய்யமுடியாதபோது, அல்லாஹ் உங்களை மன்னிக்கிறான்; ஆகவே, தொழுகையை நிலைநிறுத்துங்கள்; இன்னும், ஜகாத்தும் கொடுங்கள்; மேலும், அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்; அன்றியும், நீங்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் நன்கு அறிகிறான்.
66:4 اِنْ تَتُوْبَاۤ اِلَى اللّٰهِ فَقَدْ صَغَتْ قُلُوْبُكُمَاۚ وَاِنْ تَظٰهَرَا عَلَيْهِ فَاِنَّ اللّٰهَ هُوَ مَوْلٰٮهُ وَجِبْرِيْلُ وَصَالِحُ الْمُؤْمِنِيْنَۚ وَالْمَلٰٓٮِٕكَةُ بَعْدَ ذٰلِكَ ظَهِيْرٌ
66:4. நீங்கள் இருவரும் - இதற்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருவீர்களாயின் (அது உங்களுக்கு நலமாகும்); ஏனெனில், நிச்சயமாக உங்களிருவரின் இதயங்களும் (இவ்விஷயத்தில் கோணிச்) சாய்ந்து விட்டன: தவிர, நீங்கள் இருவரும் அவருக்கெதிராய் ஒருவருக்கொருவர் உதவிசெய்து கொண்டால், நிச்சயமாக அல்லாஹ் - அவருடைய எஜமானன் - (அவருக்கு உதவுவான்; அன்றியும்) ஜிப்ரீலும், நம்பிக்கையாளர்களில் நல்லோரும் (உதவுவார்கள்); அதன்பின் வானவர்களும் (அவருக்கு) உதவியாளர்களாக இருப்பார்கள்.
66:8 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا تُوْبُوْۤا اِلَى اللّٰهِ تَوْبَةً نَّصُوْحًا ؕ عَسٰى رَبُّكُمْ اَنْ يُّكَفِّرَ عَنْكُمْ سَيِّاٰتِكُمْ وَيُدْخِلَـكُمْ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ۙ يَوْمَ لَا يُخْزِى اللّٰهُ النَّبِىَّ وَالَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ ۚ نُوْرُهُمْ يَسْعٰى بَيْنَ اَيْدِيْهِمْ وَبِاَيْمَانِهِمْ يَقُوْلُوْنَ رَبَّنَاۤ اَ تْمِمْ لَـنَا نُوْرَنَا وَاغْفِرْ لَـنَا ۚ اِنَّكَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ
66:8. நம்பிக்கை கொண்டவர்களே! கலப்பற்ற முறையில் நீங்கள் அல்லாஹ்விடம் (தவ்பா செய்து) பாவமன்னிப்புப் பெறுங்கள்; உங்கள் இறைவன் உங்கள் பாவங்களை உங்களை விட்டுப் போக்கி, உங்களைச் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் (சதா) ஓடிக் கொண்டே இருக்கும்; (தன்) நபியையும் அவருடன் நம்பிக்கை கொண்டார்களே அவர்களையும் அந்நாளில் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான்; (அன்று ஈடேற்றம் பெற்ற) அவர்களுடைய பிரகாசம் அவர்களுக்கு முன்னும், அவர்களுடைய வலப்புறத்திலும் விரைந்துகொண்டிருக்கும்; அவர்கள் "எங்கள் இறைவா! எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்" என்று கூறி(ப் பிரார்த்தனை செய்து)கொண்டு இருப்பார்கள்.
73:20 اِنَّ رَبَّكَ يَعْلَمُ اَنَّكَ تَقُوْمُ اَدْنٰى مِنْ ثُلُثَىِ الَّيْلِ وَ نِصْفَهٗ وَثُلُثَهٗ وَطَآٮِٕفَةٌ مِّنَ الَّذِيْنَ مَعَكَؕ وَاللّٰهُ يُقَدِّرُ الَّيْلَ وَالنَّهَارَؕ عَلِمَ اَنْ لَّنْ تُحْصُوْهُ فَتَابَ عَلَيْكُمْ فَاقْرَءُوْا مَا تَيَسَّرَ مِنَ الْقُرْاٰنِؕ عَلِمَ اَنْ سَيَكُوْنُ مِنْكُمْ مَّرْضٰىۙ وَاٰخَرُوْنَ يَضْرِبُوْنَ فِى الْاَرْضِ يَبْتَغُوْنَ مِنْ فَضْلِ اللّٰهِۙ وَاٰخَرُوْنَ يُقَاتِلُوْنَ فِىْ سَبِيْلِ اللّٰهِ ۖ فَاقْرَءُوْا مَا تَيَسَّرَ مِنْهُ ۙ وَاَقِيْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَاَقْرِضُوا اللّٰهَ قَرْضًا حَسَنًا ؕ وَمَا تُقَدِّمُوْا لِاَنْفُسِكُمْ مِّنْ خَيْرٍ تَجِدُوْهُ عِنْدَ اللّٰهِ هُوَ خَيْرًا وَّاَعْظَمَ اَجْرًا ؕ وَاسْتَغْفِرُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ
73:20. நிச்சயமாக நீரும், உம்முடன் இருப்போரில் ஒரு கூட்டத்தாரும் இரவில் மூன்றில் இருபாகங்களுக்குச் சமீபமாகவோ, இன்னும் அதில் பாதியோ, இன்னும் அதில் மூன்றில் ஒரு பாகத்திலோ (வணக்கத்திற்காக) நிற்கிறீர்கள் என்பதை உம்முடைய இறைவன் நிச்சயமாக அறிவான்; அல்லாஹ்வே இரவையும் பகலையும் அளவாகக் கணக்கிடுகின்றான்; அதை நீங்கள் சரியாகக் கணக்கிட்டுக்கொள்ள மாட்டீர்கள் என்பதையும் அவன் அறிகிறான்; ஆகவே, அவன் உங்களுக்கு மன்னிப்பு அளித்துவிட்டான்; எனவே, நீங்கள் குர்ஆனிலிருந்து உங்களுக்கு இயன்றதை ஓதுங்கள், (ஏனெனில்,) நோயாளிகளும், அல்லாஹ்வின் அருளைத் தேடியவாறு பூமியில் பயணம் செய்யும் வேறு சிலரும், அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும் வேறு சிலரும், உங்களில் இருப்பார்கள் என்பதை அவன் அறிகிறான்; ஆகவே, அதிலிருந்து உங்களுக்கு இயன்றதை ஓதுங்கள்; தொழுகையை (முறையாக) நிலைநிறுத்துங்கள்; இன்னும், ஜகாத்தும் கொடுங்கள்; அன்றியும், அல்லாஹ்வுக்கு அழகான கடனாகக் கடன் கொடுங்கள். நன்மைகளில் எவற்றை நீங்கள் உங்கள் ஆத்மாக்களுக்காக (ச் செய்து மறுமைக்காக) முற்படுத்துகிறீர்களோ, அவற்றை நீங்கள் அல்லாஹ்விடம் மிகவும் மேலானதாகவும், நற்கூலியில் மகத்தானதாகவும் காண்பீர்கள்; அன்றியும், அல்லாஹ்விடமே மன்னிப்புக் கோருங்கள்; நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.
85:10 اِنَّ الَّذِيْنَ فَتَـنُوا الْمُؤْمِنِيْنَ وَ الْمُؤْمِنٰتِ ثُمَّ لَمْ يَتُوْبُوْا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيْقِؕ
85:10. நிச்சயமாக எவர்கள் நம்பிக்கையாளர்களான ஆண்களையும், நம்பிக்கையாளர்களான பெண்களையும் துன்புறுத்திப் பின்னர், பாவமன்னிப்புக் கோரவில்லையோ அவர்களுக்கு நரக வேதனை உண்டு; மேலும், கரி(த்துப் பொசுங்)கும் வேதனையும் அவர்களுக்கு உண்டு.
110:3 فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ ؔؕ اِنَّهٗ كَانَ تَوَّابًا
110:3. உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு தஸ்பீஹ் (துதி) செய்வீராக! மேலும், அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக! நிச்சயமாக அவன் "தவ்பாவை" (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக்கொள்பவனாக இருக்கின்றான்.