பின்தங்கியோர்
4:72   وَاِنَّ مِنْكُمْ لَمَنْ لَّيُبَطِّئَنَّ‌ۚ فَاِنْ اَصَابَتْكُمْ مُّصِيْبَةٌ قَالَ قَدْ اَنْعَمَ اللّٰهُ عَلَىَّ اِذْ لَمْ اَكُنْ مَّعَهُمْ شَهِيْدًا‏
4:72. (போரிடாமல்) பின்தங்கிவிடுகிறவர்களும் உங்களில் (சிலர்) நிச்சயமாக உள்ளனர்; உங்களுக்கு ஏதாவது ஒரு துன்பம் ஏற்பட்டால், "அவர்களுடன் கலந்துகொள்ளாமல் இருந்ததினால், அல்லாஹ் என்மீது அருள் புரிந்துள்ளான்" என்று அவர்கள் கூறுகின்றனர்.
9:81   فَرِحَ الْمُخَلَّفُوْنَ بِمَقْعَدِهِمْ خِلٰفَ رَسُوْلِ اللّٰهِ وَكَرِهُوْۤا اَنْ يُّجَاهِدُوْا بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ فِىْ سَبِيْلِ اللّٰهِ وَقَالُوْا لَا تَنْفِرُوْا فِى الْحَـرِّؕ قُلْ نَارُ جَهَـنَّمَ اَشَدُّ حَرًّا‌ؕ لَوْ كَانُوْا يَفْقَهُوْنَ‏
9:81. (தபூக் போரில் கலந்துகொள்ளாமல்) பின்தங்கி விட்டவர்கள் அல்லாஹ்வின் தூதருக்கு விரோதமாக (தம் வீடுகளில்) இருந்து கொண்டதைப்பற்றி மகிழ்ச்சியடைகின்றனர்; அன்றியும் அல்லாஹ்வின் பாதையில் தங்களுடைய செல்வங்களாலும், தங்களுடைய உயிர்களாலும் போர்புரிவதையும் வெறுத்து, (மற்றவர்களை நோக்கி): "இந்த வெப்ப(கால)த்தில் நீங்கள் (போருக்குச்) செல்லாதீர்கள்!" என்றும் அவர்கள் கூறுகின்றனர். (அவர்களிடம்) "நரகநெருப்பு இன்னும் கடுமையான வெப்பமுடையது" என்று (நபியே!) நீர் கூறுவீராக! (இதை) அவர்கள் விளங்கியிருந்தால் (பின்தங்கி இருக்கமாட்டார்கள்).
15:60   اِلَّا امْرَاَتَهٗ قَدَّرْنَاۤ ۙ اِنَّهَا لَمِنَ الْغٰبِرِيْنَ‏
15:60. "ஆனால், அவர் (லூத்) உடைய மனைவியைத் தவிர; நிச்சயமாக அவள் பின்தங்கியவர்களில் உள்ளவள் என்று நாம் நிர்ணயித்துவிட்டோம்" (என்று வானவர்கள் கூறினார்கள்).
27:57   فَاَنْجَيْنٰهُ وَ اَهْلَهٗۤ اِلَّا امْرَاَتَهٗ قَدَّرْنٰهَا مِنَ الْغٰبِرِيْنَ‏
27:57. நாம் அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் பாதுகாத்துக்கொண்டோம்; அவருடைய மனைவியைத் தவிர: (நம்பிக்கை கொள்ளாமல்) பின்தங்கி (அழிந்து) விட்டவர்களில் ஒருத்தியாக அவளைத் தீர்மானித்துவிட்டோம்.
48:11   سَيَـقُوْلُ لَكَ الْمُخَلَّفُوْنَ مِنَ الْاَعْرَابِ شَغَلَـتْنَاۤ اَمْوَالُـنَا وَاَهْلُوْنَا فَاسْتَغْفِرْ لَـنَا‌ ۚ يَقُوْلُوْنَ بِاَلْسِنَتِهِمْ مَّا لَـيْسَ فِىْ قُلُوْبِهِمْ‌ؕ قُلْ فَمَنْ يَّمْلِكُ لَـكُمْ مِّنَ اللّٰهِ شَيْـٴًــــا اِنْ اَرَادَ بِكُمْ ضَرًّا اَوْ اَرَادَ بِكُمْ نَفْعًا ‌ؕ بَلْ كَانَ اللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرًا‏
48:11. (நபியே! போருக்கு உம்முடன் சேர்ந்து வராமல்) பின் தங்கிவிட்ட நாட்டுப்புறத்து அரபிகள்: "எங்களுடைய சொத்துகளும், எங்கள் குடும்பத்தார்களும் (உங்களுடன் வராது) எங்களை அலுவல்கள் உள்ளவர்களாக்கிவிட்டன; எனவே, நீர் எங்களுக்காக மன்னிப்புக்கோருவீராக!" என்று கூறுவர். அவர்கள் தங்கள் இதயங்களில் இல்லாததைத் தம் நாவுகளினால் கூறுகிறார்கள். "அல்லாஹ் உங்களுக்கு ஒரு கெடுதியை நாடினாலும், அல்லது அவன் உங்களுக்கு ஒரு நன்மையை நாடினாலும், அதில் எதையும் அவனுக்கெதிராக உங்களுக்கு (த்தடுக்கக் கூடிய) அதிகாரம் பெற்றவர் யார்? அப்படியல்ல! அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்குணர்ந்தவனாக இருக்கிறான்" எனக் கூறும்.